12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 06/12/2019
தனிநிலைக் கணிதம்
12ஆம் வகுப்பு Maths / கணிதவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Maths / கணிதவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Maths Test1.
மெய்மை அட்டவணையைப் பயன்படுத்தாமல் p → (q → r) ≡ ( p Λ q) → r என நிரூபிக்க.
2.
மெய்மை அட்டவணையைப் பயன்படுத்தி ¬( p V q) V (¬p ∧ q) மற்றும் ¬p என்ற கூற்றுகள் தர்க்க சமானமானவை எனச் சோதிக்க.
3.
\(\neg (p\wedge q)\equiv \neg p\vee \neg q\) எனக் காட்டுக.
4.
கொடுக்கப்பட்ட கணத்தின்மீது பின்வரும் செயலியானது (i) அடைவுப் பண்பு (ii) பரிமாற்றுப் பண்பு மற்றும் (iii) சேர்ப்புப் பண்பு ஆகியவைகளைக் கொண்டுள்ளதா எனச் சரிபார்க்க.
(a*b) = ab;∀a,b∈ℕ (அடுக்குக்குறி பண்பு)
5.
ℤ0 = அனைத்து ஒற்றை முழு எண்களின் கணம் எனில் ℤo -ன் மீது இயற்கணித செயலி + ஆனது (i) அடைவு பண்பு (ii) பரிமாற்றுப் பண்பு (iii) சேர்ப்புப் பண்பு (iv) சமனிப் பண்பு மற்றும் (v) எதிர்மறைப் பண்பு ஆகியவற்றைப் பெற்றுள்ளதா எனச் சரிபார்க்க.
6.
பின்வரும் கூற்றுகளுக்கு மெய்மதிப்பை தீர்மானிக்க.
11 ஒரு பகா எண் மற்றும் ஒரு செவ்வகத்தின் எல்லா பக்கங்களும் சமம்.
7.
கீழே கொடுக்கப்பட்டிருக்கும் இரண்டு கூற்றுகள் p மற்றும் q -க்கு பின்வருபவைகளை எழுதுக.
(i) நிபந்தனைக் கூற்று
(ii) மறுதலைக் கூற்று
(iii) எதிர்மறைக் கூற்று
(iv) நேர்மாறுக் கூற்று p : பகா எண்களின் எண்ணிக்கை முடிவில்லாதது
q: ஊட்டி கேரளாவில் உள்ளது.
8.
இன்று திங்கள் எனில், பிறகு 4 + 4 = 8, என்பதனை p→q -ஆகக் கருதுக,
9.
கீழே கொடுக்கப்பட்டுள்ள கணங்களின் மீது வரையறுக்கப்பட்டிருக்கும் ∗ ஓர் ஈருறுப்புச் செயலியா எனத் தீர்மானிக்க.
R -ன் மீது (a * b) = a\(\sqrt { b } \)
10.
பின்வரும் வாக்கியங்களில் எது கூற்று?
(i) 4 + 7 =12
(ii) நீ என்ன செய்து கொண்டிருக்கிறாய்?
(iii) 3n ≤ 81, n \(\in\) N
(iv) மயில் நமது தேசிய பறவை
(v) இந்த மலை எவ்வளவு உயரம் !
11.
சமானமானவை பண்புகளைப் பயன்படுத்தி p ↔️ q ≡ ( p ∧ q) v (ㄱp ∧ ㄱq) எனக் காட்டுக.
12.
இரு நிபந்தனைக் கூற்றை நிபந்தனைக் கூற்றுடன் இணைத்து p ↔️ q ≡ (p ➝ q) ∧ (q⟶ p) என்ற சமானமானவை பண்பை நிரூபிக்க.
13.
Let \(A=\left( \begin{matrix} 1 \\ 0 \\ 1 \end{matrix}\begin{matrix} 0 \\ 1 \\ 0 \end{matrix}\begin{matrix} 1 \\ 0 \\ 0 \end{matrix}\begin{matrix} 0 \\ 1 \\ 1 \end{matrix} \right) ,\quad B=\left( \begin{matrix} 0 \\ 1 \\ 1 \end{matrix}\begin{matrix} 1 \\ 0 \\ 0 \end{matrix}\begin{matrix} 0 \\ 1 \\ 0 \end{matrix}\begin{matrix} 1 \\ 0 \\ 1 \end{matrix} \right) ,\quad C=\left( \begin{matrix} 1 \\ 0 \\ 1 \end{matrix}\begin{matrix} 1 \\ 1 \\ 1 \end{matrix}\begin{matrix} 0 \\ 1 \\ 1 \end{matrix}\begin{matrix} 1 \\ 0 \\ 1 \end{matrix} \right) \)என்பவைகள் ஒரே மாதிரியான வகையினை உடைய ஏதேனும் மூன்று பூலியன் அணிகள் எனில் (A ∧ B) ∨ C ஆகியவைகளைக் காண்க.
14.
Let \( A=\left( \begin{matrix} 1 \\ 0 \\ 1 \end{matrix}\begin{matrix} 0 \\ 1 \\ 0 \end{matrix}\begin{matrix} 1 \\ 0 \\ 0 \end{matrix}\begin{matrix} 0 \\ 1 \\ 1 \end{matrix} \right) ,\quad B=\left( \begin{matrix} 0 \\ 1 \\ 1 \end{matrix}\begin{matrix} 1 \\ 0 \\ 0 \end{matrix}\begin{matrix} 0 \\ 1 \\ 0 \end{matrix}\begin{matrix} 1 \\ 0 \\ 1 \end{matrix} \right) ,\quad C=\left( \begin{matrix} 1 \\ 0 \\ 1 \end{matrix}\begin{matrix} 1 \\ 1 \\ 1 \end{matrix}\begin{matrix} 0 \\ 1 \\ 1 \end{matrix}\begin{matrix} 1 \\ 0 \\ 1 \end{matrix} \right) \) என்பவைகள் ஒரே மாதிரியான வகையினை உடைய ஏதேனும் மூன்று பூலியன் அணிகள் எனில் A ∨ B ஆகியவைகளைக் காண்க.
15.
பின்வருபவைகளில் எது உண்மையல்ல?
ஒரு கூற்றின் மறுப்பின் மறுப்பு அக்கூற்றேயாகும்.
ஒரு மெய்மை அட்டவணையில் இறுதி நிரல் முழுவதும் T எனில் அது ஒரு மெய்மமாகும்.
ஒரு மெய்மை அட்டவணையில் இறுதி நிரல் முழுவதும் F எனில் அது ஒரு முரண்பாடாகும்.
p மற்றும் q ஏதேனும் இரு கூற்றுகள் எனில் p ↔ q என்பது ஒரு மெய்மமாகும்.
16.
¬( p V q) V [ p V ( p Λ ¬r)] -ன் இருமம் _______.
¬( p Λ q) Λ [ p V ( p Λ ¬r)]
( p Λ q) Λ [ p Λ ( p V ¬r)]
¬( p Λ q) Λ [ p Λ ( p Λ r)]
¬( p Λ q) Λ [ p Λ ( p V ¬r)]
17.
| p | q | (p Λ q) ⟶ ¬q |
| T | T | (a) |
| T | F | (b) |
| F | T | (c) |
| F | F | (d) |
\((p \wedge q) \rightarrow \neg p\) -ன் மெய்மை அட்டவணைக்கு பின்வருபவைகளில் எது சரி?
| (a) | (b) | (c) | (d) |
| T | T | T | T |
| (a) | (b) | (c) | (d) |
| F | T | T | T |
| (a) | (b) | (c) | (d) |
| F | F | T | T |
| (a) | (b) | (c) | (d) |
| T | T | F | F |
18.
ㄱ( p V ㄱq) -ன் மெய்மை அட்டவணையில் கடைசி நிரலில் வரும் மெய் மதிப்பு 'F' விளைவுகளின் எண்ணிக்கை_______.
1
2
3
4
19.
\((\mathbf{p} \wedge \mathbf{q}) \vee \neg \mathbf{q}\) -ன் மெய்மை அட்டவணை கீழே தரப்பட்டுள்ளது.
| p | q | (p Λ q) ∨ \((\neg \mathbf{q})\) |
| T | T | (a) |
| T | F | (b) |
| F | T | (c) |
| F | F | (d) |
பின்வருபவைகளில் எது உண்மை?
| (a) | (b) | (c) | (d) |
| T | T | T | T |
| (a) | (b) | (c) | (d) |
| T | F | T | T |
| (a) | (b) | (c) | (d) |
| T | T | F | T |
| (a) | (b) | (c) | (d) |
| T | F | F | F |
1.
\(\begin{aligned}
p & \rightarrow(q \rightarrow r)
\end{aligned}\)
\(\begin{aligned}
\equiv p \rightarrow(\neg q \vee r)
\end{aligned}\) [\(\because\) உட்கோள் விதி]
\(\begin{aligned}
\equiv \neg p \vee(\neg q \vee r)
\end{aligned}\) [\(\because\) உட்கோள் விதி]
\(\begin{aligned}
\equiv(\neg p \vee \neg q) \vee r
\end{aligned}\) [\(\because\) சேர்ப்பு விதி]
\(\begin{aligned}
\equiv \neg(p \wedge q) \vee r
\end{aligned}\) [\(\because\) டிமார்கன் விதி]
\(\begin{aligned}
\equiv(p \wedge q) \rightarrow r
\end{aligned}\) [\(\because\) உட்கோள் விதி]
எனவே நிறுவப்பட்டது.
2.
| p | q | \(\neg p\) | \(p\vee q\) | \(\neg \left( p\vee q \right) \) | \(\neg p\wedge q\) | \(\neg \left( p\vee q \right) \vee \left( \neg p\wedge q \right) \) |
| T | T | F | T | F | F | F |
| T | F | F | T | F | F | F |
| F | T | T | T | F | T | T |
| F | F | T | F | T | F | T |
மெய்மை அட்டவணையிலிருந்து
\(\neg p\) மற்றும் \(\neg \left( p\vee q \right) \vee \left( \neg p\wedge q \right) \) என்பன தர்க்க சமமானவை என்பது தெளிவு.
அதாவது \(\neg (p\vee q)\vee \left( \neg p\wedge q \right) =\neg p\)
3.
| p | q | \(p\wedge q\) | \(\neg \left( p\wedge q \right) \) | \(\neg p\) | \(\neg q\) | \(\neg p\vee \neg q\) |
| T | T | T | F | F | F | F |
| T | F | F | T | F | T | T |
| F | T | F | T | T | F | T |
| F | F | F | T | T | T | T |
மெய்மை அட்டவணையில் \(\neg \left( p\wedge q \right) \) மற்றும் \(\neg p\vee \neg q\) ஆகியவற்றிற்கான நிரல்கள் ஒரே மாதிரியாக உள்ளன.எனவே அவை தர்க்க சமமானவை.
4.
(i) (a*b) = ab ∈ℕ,∀a,b∈ℕ என்பது உண்மை. எனவே ℕ ஆனது ∗ –ன் கீழ் அடைவு பெற்றுள்ளது.
(ii) a = 2 , b = 3 ஆகிய மதிப்புகளை a*b=ab மற்றும் b*a=ba ஆகியவைகளில் பிரதியிட,
a*b=23 = 8 ஆனால் b*a=32=9 ⇒ a*b≠b*a
எனவே ∗ ஆனது பரிமாற்றுப் பண்பை நிறைவு செய்யாது.
(iii) a*(b*c) = a*(bc) \({ a }^{ ({ b }^{ c }) }\) எனக் கொள்க.
இதில் a=2,b=3 மற்றும் c = 4 எனப் பிரதியிடக் கிடைப்பது
a*(b*c)=2*(3*4)=\({ 2 }^{ ({3 }^{ 4 }) }\)=281
ஆனால் (a*b)*c=(ab)*c=(ab)c=c=a(bc)=abc=212
a*(b*c)≠(a*b)*c
எனவே, ∗ ஆனது சேர்ப்புப் பண்பை நிறைவு செய்யாது.
குறிப்பு
இந்த ஈருறுப்பு செயலிக்கு சமனியும் எதிர்மறையும் இல்லை. (காரணத்துடன் விளக்குக)
5.
ℤo = {2k + 1:k ∈ ℤ} = {...,−5,−3,−1,1,3,5,...} என்ற அனைத்து ஒற்றை முழுக்களைக் கொண்ட கணத்தைக் கருதுக. கூட்டல் + ஆனது ℤo -இன் மீது ஓர் ஈருறுப்புச் செயல் ஆகாது. ஏனெனில், x = 2m + 1,y = 2n + 1 எனும்பொழுது x + y = 2(m + n)+2 என்பது அனைத்து m,n-க்கும் இரட்டை எண்ணாகவே அமையும். எடுத்துக்காட்டாக, 3, 7 ∈ ℤo என்ற இரு ஒற்றை எண்களைக் கருதுக. அவைகளின் கூடுதல் 3 + 7 = 10 என்பது ஓர் இரட்டை எண்ணாகும். பொதுவாக, x, y∈ ℤ0 எனில், (x+y)∉ℤ0 ஆகும். + ஆனது ℤo ன் மீது ஓர் ஈருறுப்புச் செயல் அல்லாததால் ஏனையப் பண்புகளைச் சரிபார்க்க வேண்டிய அவசியமில்லை.
6.
11 ஒரு பகா எண் மற்றும் ஒரு செவ்வகத்தின் எல்லா பக்கங்களும் சமம்.
p:11 ஒரு பகா எண் (T)
q: ஒரு செவ்வகத்தின் எல்லா பக்கங்களும் சமம் (F)
\(\therefore p\wedge q\) என்பதன் மெய்மதிப்பு F.
7.
p மற்றும் q சம்பந்தப்பட்ட நான்கு விதமான நிபந்தனைக் கூற்றுகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன
(i). p → q: (நிபந்தனைக் கூற்று) “பகா எண்களின் எண்ணிக்கை முடிவில்லாதது எனில் பின்னர் ஊட்டி கேரளாவில் உள்ளது”.
(ii). q → p: (மறுதலைக் கூற்று) “ஊட்டி கேரளாவில் உள்ளது எனில், பகா எண்களின் எண்ணிக்கை முடிவில்லாதது”
(iii). ¬ p → ¬q (எதிர்மறைக் கூற்று) “பகா எண்களின் எண்ணிக்கை முடிவில்லாதது அல்ல எனில், ஊட்டி கேரளாவில் இல்லை”.
(iv). ¬ q → ¬p (நேர்மாறுக் கூற்று) “ஊட்டி கேரளாவில் இல்லை எனில், பின்னர் பகா எண்களின் எண்ணிக்கை முடிவில்லாதது அல்ல”.
8.
இங்கு உள்கூற்றுகள் p மற்றும் q பின்வருமாறு கொடுக்கப்படுகிறது.
p: இன்று திங்கள் கிழமை; q: 4 + 4 = 8.
q –ன் முடிவானது T என்பதால் p → q -ன் மெய்மதிப்பு T ஆகிறது.
ஒரு முக்கியமான கருத்து என்னவென்றால் p மற்றும் q-ன் வாக்கியங்களின் அர்த்தங்களை கருத்தில் கொண்டு p → q ஐ செயல்படுத்தக்கூடாது. மேலும் p என்பது q வுடன் தொடர்புடையதாக இருக்கவேண்டிய அவசியமில்லை.
விளைவுகள் :
p → q என்ற நிபந்தனைக் கூற்றிலிருந்து மேலும் மூன்று நிபந்தனைக் கூற்றுகள் வருவிக்கப்படுகின்றன. அவைகள் கீழே பட்டியலிடப்படுகிறது.
(i) மறுதலைக் கூற்று (Converse statement) q → p .
(ii) எதிர்மறைக் கூற்று (Inverse statement) \(\neg p \rightarrow \neg q .\)
(iii) நேர்மாறுக் கூற்று (Contrapositive statement) \(\neg q \rightarrow \neg p\)
9.
R ன் மீது \(a * b=a \sqrt{b}\)
\(\mathrm{b} \in \mathbb{R} \text {, }\)ஆனால் \(\sqrt{b}\) ஆனது Rல் வரையறுக்க இயலாது.
மீது a, b \(\in\) R- க்கு \(a \sqrt{b}\) ஆனது R-ல் வரையறுக்க இயலாது.
எனவே * என்பது Rல் ஓர் ஈருறுப்புச் செயலி அல்ல.
10.
(i) 4 + 7 = 12
இதன் மெய்மதிப்பு F என்பதால் இது ஒரு கூற்று ஆகும்.
(ii) இது ஒரு வினாவைக் குறிக்கிறது மற்றும் இது ஒரு கூற்று அல்ல.
(iii) \(3^{\mathrm{n}} \leq 81, n \in \mathbb{N}\)
n=1,2,3,4 எனும்போது இது மெய்யாவதால் இது ஒரு கூற்று ஆகும்.
(iv) இதன் மெய்மதிப்பு T என்பதால் இது ஒரு கூற்று ஆகும்.
(v) இது ஒரு வியப்பு வாக்கியம் ஆகும். எனவே இது கூற்று அல்ல.
11.
இக்கொள்கையை எடுத்துக்காட்டுகள் 12.17 மற்றும் 12.18ஐப் பயன்படுத்தி தருவிக்க முடியும்.
p ↔ q ≡ (ㄱp ν q) ∧ (ㄱq ∨ p) ... (1)
≡ (¬p ν q)( p ∨ ¬q) (பரிமாற்றுப் பண்பின்படி) ... (2)
≡ (ㄱp ∧ ( p ∨ ㄱq)) ∨ (q ∧ ( p ∨ㄱq)) (பங்கீட்டுப் பண்பின்படி)
≡ (ㄱp ∧ p)∨ (ㄱp ∧ㄱq)∨ (q ∧ p) ∨ (q ∧ㄱq) (பங்கீட்டுப் பண்பின்படி)
இறுதியாக, p ↔ q ≡ (p ∧ q) ∨ (ㄱp ∧ㄱq).
12.
| p | q | p ➝ q | q⟶ p | p ↔️ q | (p ➝ q) ∧ (q⟶ p) |
| T | T | T | T | T | T |
| T | F | F | T | F | F |
| F | T | T | F | F | F |
| F | F | T | T | T | T |
மெய்மை அட்டவணையில் p ↔ q மற்றும் ( p ⟶ q) ∧ (q ⟶ p) ஆகியவற்றிற்கான நிரல்கள் முழுவதும் ஒரே மாதிரியாக உள்ளன. எனவே அவை சமானமானவை.
13.
\(\left( A\wedge B \right) \vee C=\left( \begin{matrix} 0 & 0 & 0 & 0 \\ 0 & 0 & 0 & 0 \\ 1 & 0 & 0 & 1 \end{matrix} \right) \vee \left( \begin{matrix} 1 & 1 & 0 & 1 \\ 0 & 1 & 1 & 0 \\ 1 & 1 & 1 & 1 \end{matrix} \right) \)
\(=\left( \begin{matrix} 0\vee 1 & 0\vee 1 & 0\vee 0 & 0\vee 1 \\ 0\vee 0 & 0\vee 1 & 0\vee 1 & 0\vee 0 \\ 1\vee 1 & 0\vee 1 & 0\vee 1 & 1\vee 1 \end{matrix} \right) \)
\(=\left(\begin{array}{llll}
1 & 1 & 0 & 1 \\
0 & 1 & 1 & 0 \\
1 & 1 & 1 & 1
\end{array}\right)\)
14.
கொடுக்கப்பட்ட பூலியன் அணிகள்
\( A=\left( \begin{matrix} 1 \\ 0 \\ 1 \end{matrix}\begin{matrix} 0 \\ 1 \\ 0 \end{matrix}\begin{matrix} 1 \\ 0 \\ 0 \end{matrix}\begin{matrix} 0 \\ 1 \\ 1 \end{matrix} \right) ,\quad B=\left( \begin{matrix} 0 \\ 1 \\ 1 \end{matrix}\begin{matrix} 1 \\ 0 \\ 0 \end{matrix}\begin{matrix} 0 \\ 1 \\ 0 \end{matrix}\begin{matrix} 1 \\ 0 \\ 1 \end{matrix} \right) ,\quad C=\left( \begin{matrix} 1 \\ 0 \\ 1 \end{matrix}\begin{matrix} 1 \\ 1 \\ 1 \end{matrix}\begin{matrix} 0 \\ 1 \\ 1 \end{matrix}\begin{matrix} 1 \\ 0 \\ 1 \end{matrix} \right) \)
\(A\vee B=\left( \begin{matrix} 1 \\ 0 \\ 1 \end{matrix}\begin{matrix} 0 \\ 1 \\ 0 \end{matrix}\begin{matrix} 1 \\ 0 \\ 0 \end{matrix}\begin{matrix} 0 \\ 1 \\ 1 \end{matrix} \right) \vee \left( \begin{matrix} 0 \\ 1 \\ 1 \end{matrix}\begin{matrix} 1 \\ 0 \\ 0 \end{matrix}\begin{matrix} 0 \\ 1 \\ 0 \end{matrix}\begin{matrix} 1 \\ 0 \\ 1 \end{matrix} \right) \)
= \(\left( \begin{matrix} 1\vee 0 & 0\vee 1 \\ 0\vee 1 & 1\vee 0 \\ 1\vee 1 & 0 \vee0\end{matrix}\begin{matrix} 1\vee 0 & 0\vee 1 \\ 0\vee 1 & 1\vee 0 \\ 0\vee0 & 1\vee 1 \end{matrix} \right) \)
\(A\vee B=\left| \begin{matrix} 1 \\ 1 \\ 1 \end{matrix}\begin{matrix} 1 \\ 1 \\ 0 \end{matrix}\begin{matrix} 1 \\ 1 \\ 0 \end{matrix}\begin{matrix} 1 \\ 1 \\ 1 \end{matrix} \right| \)
15.
p மற்றும் q என்பன ஏதேனும் இரு கூற்றுகள் எனில்
p ↔ q என்பது ஒரு மெய்மம் ஆகும்.
p ↔q என்பது ஒரு நிச்சயமின்மை.
16.
இரட்டைத் தன்மை என்பது Λ, V ஆகியவற்றுக்கு முறையே V, Λ களை பதிலிடுவதன் மூலம் பெறப்படுகிறது.
17.
| p | q | \(\mathbf{p} \wedge \mathbf{q}\) | \(\neg \mathbf{p}\) | \((\mathbf{p} \wedge \mathbf{q}) \rightarrow \neg \mathbf{q}\) |
| T | T | T | F | F(a) |
| T | F | F | F | T(b) |
| F | T | F | T | T(c) |
| F | F | F | T | T(d) |
18.
| p | q | \(\neg \mathbf{q}\) | \(\mathbf{p} \vee(\neg \mathbf{q})\) | \(\neg(\mathbf{p} \vee(\neg \mathbf{q}))\) |
| T | T | F | T | F |
| T | F | T | T | F |
| F | T | F | F | T |
| F | F | T | T | F |
கடைசி நிரலில் உள்ள 'F' களின் எண்ணிக்கை 3
19.
| p | q | pΛ q | \(\neg \mathbf{q}\) | (p Λ q) ∨ \((\neg \mathbf{q})\) |
| T | T | T | F | T(a) |
| T | F | F | T | T(b) |
| F | T | F | F | F(c) |
| F | F | F | T | T(d) |
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards