12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 21/01/2020
12ஆம் வகுப்பு Maths / கணிதவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Maths / கணிதவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Maths Test1.
பின்வரும் கூற்றுகளுக்கு மெய்மை அட்டவணைகளை அமைக்க.
\((p \vee q) \vee \neg q\)
2.
\(\frac { dy }{ dx } \) = - \(\frac { x }{ y } \) எனும் வகைக்கெழுச் சமன்பாட்டின் தீர்வு x2 + y2 = r2 என நிறுவுக. இங்கு r என்பது மாறிலியாகும்
3.
பின்வரும் வகைக்கெழுச் சமன்பாடுகள் ஒவ்வொன்றின் வரிசை மற்றும் படி (இருக்குமானால்) ஆகியவற்றைத் தீர்மானிக்க.
\({ { \left( \frac { { d }^{ 3 }y }{ d{ x }^{ 3 } } \right) }^{ \frac { 2 }{ 3 } } }-3\frac { { d }^{ 2 }y }{ d{ x }^{ 2 } } +5\frac { { d }y }{ { d }x } +4=0\)
4.
மதிப்பிடுக : \(\int^\frac{\pi}{2}_0 \) \(\begin{vmatrix} { \cos }^{ 4 }x & 7 \\ { \sin }^{ 5 }x & 3 \end{vmatrix}\) dx.
5.
\(s(t)=\frac{t^{3}}{3}-t^{2}+3\) எனும் விதிப்படி ஒரு துகள் நகரும் தூரம் அமைகின்றது. எந்தெந்த நேரங்களில் அதன் திசைவேகமும் முடுக்கமும் பூச்சிய மதிப்பை அடையும்?
6.
x2 + 3y2 = a2 என்ற நீள்வட்டத்திலிருந்து, குற்றச்சு மற்றும் நெட்டச்சின் நீளத்தை காண்க.
7.
x + y + z - 6 = 0 மற்றும் 2x + 3y + 4z + 5 = 0 என்ற தளங்கள் வெட்டுக் கோடு வழிச் செல்லும் புள்ளி (1, 1, 1)ஐ கொண்டிருக்கும் தளத்தின் சமன்பாட்டைக் காண்க.
8.
\(\overset { \rightarrow }{ a } =\overset { \wedge }{ i } +2\overset { \wedge }{ j } +3\overset { \wedge }{ k } ,\overset { \rightarrow }{ b } =-\overset { \wedge }{ i } +2\overset { \wedge }{ j } +\overset { \wedge }{ k } \) மற்றும் \(\overset { \rightarrow }{ c } =3\overset { \wedge }{ i } +\overset { \wedge }{ j } \) எனில் \(\overset { \rightarrow }{ a } +\lambda \overset { \rightarrow }{ b } \) ஆனது \(\overset { \rightarrow }{ a } \) க்கு செங்குத்து எனுமாறு λ ன் மதிப்பை காண்க.
9.
sin-1 \(\left( \frac { 1 }{ 2 } \right) \) = tan-1 x எனில், xன் மதிப்பு காண்க.
10.
கொடுக்கப்பட்ட மூலங்களைக் கொண்டு முப்படி சமன்பாடுகளை உருவாக்குக.
\(2, \frac{1}{2} \) மற்றும் 1
11.
பின்வரும் வட்டங்களுக்கு மையத்தையும் ஆரத்தையும் காண்க
x2+y2-x+2y-3 = 0
12.
கீழ்க்காண்பவைகளின் மதிப்புகளைக் காண்க.
\(\left| \bar { (1+i) } (2+3i)(4i-3) \right| \)
13.
மதிப்பு உள்ளது எனில் பின்வருவனவற்றிற்கு மதிப்பு காண்க. மதிப்பு இல்லையெனில் அதற்கான காரணம் தருக.
\({ \tan }^{ -1 }\left( \sin\left( -\frac { 5\pi }{ 2 } \right) \right) \)
14.
2i+3-ஐ மூலமாகக் கொண்ட குறைந்தபட்ச படியுடன் விகிதமுறு கெழுக்களுடைய ஓர் பல்லுறுப்புக்கோவைச் சமன்பாட்டைக் காண்க.
15.
பின்வரும் கலப்பெண்களுக்கு மட்டு மற்றும் முதன்மை வீச்சு ஆகியவற்றைக் காண்க.
\(\sqrt3\) + i
16.
பின்வரும் சமன்பாடுகளில் z = x + iy ன் நியமப்பாதையை கார்ட்டீசியன் வடிவில் காண்க
[Re(iz)]2 = 3
17.
cot-1 \(\left( \frac { 1 }{ 7 } \right) =\theta \), எனில், cos \(\theta \) மதிப்பு காண்க.
18.
பின்வருவனவற்றை சுருக்குக.
i1948 - i1869
19.
A என்பது ஒற்றை வரிசையுடைய பூச்சியமற்றக் கோவை அணி எனில் |adj A| என்பது மிகை என நிறுவுக.
20.
ஒரு கூடையில் 5 மாங்கனிகள் மற்றும் 4 ஆப்பிள்கள் உள்ளன. அதிலிருந்து மூன்று பழங்கள் சமவாய்ப்பு முறையில் தேர்ந்தெடுக்கப்படுகின்றன. அவ்வாறு தேர்ந்தெடுக்கும் பழங்கள் ஆப்பிள்கள் எனில், சமவாய்ப்பு மாறியான X–இன் மதிப்புகளையும் அதன் நேர்மாறு பிம்பங்களில் உள்ள புள்ளிகளின் எண்ணிக்கையையும் காண்க.
21.
பின்வரும் அணிகளுக்கு நேர்மாறு (காண முடியுமெனில்) நேர்மாறு காண்க:
(i) \(\left[ \begin{matrix} -2 & 4 \\ 1 & -3 \end{matrix} \right] \)
(ii) \(\left[ \begin{matrix} 5 & 1 & 1 \\ 1 & 5 & 1 \\ 1 & 1 & 5 \end{matrix} \right] \)
(iii) \(\left[ \begin{matrix} 2 & 3 & 1 \\ 3 & 4 & 1 \\ 3 & 7 & 2 \end{matrix} \right] \)
22.
\(p \rightarrow q \equiv \neg p \vee q\) -க்கு சமானமானவை பண்பை நிறுவுக.
23.
f(x) = x2 + 3x என்ற சார்பிற்கு df காண்க மற்றும் (i) x = 2 , dx = 0.1 (ii) x = 3 மற்றும் dx = 0.02 எனும் போது df -ஐ மதிப்பிடுக.
24.
கொடுக்கப்பட்ட சார்புகளுக்கு கொடுக்கப்பட்ட இடைவெளியில் ரோலின் தேற்றம் ஏன் பயன்படுத்த முடியாது என்பதை விளக்குக.
\(f(x)=\tan x,x \in [0, \pi]\)
25.
\({ \left( \frac { 1+i }{ 1-i } \right) }^{ 3 }-{ \left( \frac { 1-i }{ 1+i } \right) }^{ 3 }\) - ஐ செவ்வக வடிவில் சுருக்குக
1.
| p | q | ¬q | (p V q) | (p V q) V ¬q |
| T | T | F | T | T |
| T | F | T | T | T |
| F | T | F | T | T |
| F | F | T | F | T |
2.
கொடுக்கப்பட்ட சமன்பாடு x2 + y2 = r2, r ∈ R
இச்சமன்பாடு ஒரேயொரு மாறிலியை மட்டும் பெற்றுள்ளது.
ஆகவே, கொடுக்கப்பட்ட சமன்பாட்டிற்கு ஒருமுறை மட்டும் வகைக்கெழு காண்போம். சமன்பாடு (1)ஐ x ஐப் பொருத்து வகையிட, நாம் பெறுவது
\(2x+2y\frac { dy }{ dx } =0\Rightarrow \frac { dy }{ dx } =-\frac { x }{ y } \)
ஆகவே, x2 + y2 = r2 என்பது \(\frac { dy }{ dx } =-\frac { x }{ y } \) எனும் வகைக்கெழுச் சமன்பாட்டை நிறைவு செய்கிறது.
எனவே, x2 + y2 = r2 என்பது \(\frac { dy }{ dx } =-\frac { x }{ y } \) எனும் வகைக்கெழுச் சமன்பாட்டின் தீர்வாகும்.
3.
இருபுறமும் அடுக்கை 3 ஆல் பெருக்கக் கிடைப்பது
\(\left( \frac { { d }^{ 3 }y }{ { dx }^{ 3 } } \right) ^{ 2 }=\left( 3\frac { { d }^{ 2 }y }{ { dx }^{ 2 } } -5\frac { dy }{ dx } \right) ^{ 3 }\)
சமன்பாட்டில் உயர்ந்த வரிசை வகைக்கெழு \(\frac { { d }^{ 3 }y }{ { dx }^{ 3 } } \) இதன் அடுக்கு 2
ஃ வரிசை = 3 & படி=2.
4.
I = \(\int ^\frac{\pi}{2} _0\) (3 cos 4 x - 7 sin5 x ) dx = 3 \(\int ^\frac{\pi}{2} _0\) cos4 x dx - 7 \(\int ^\frac{\pi}{2} _0\) sin5 x dx
= 3 × \(\frac {3}{4}\) × \(\frac {1}{2}\) × \(\frac {\pi}{2}\) - 7 × \(\frac {4}{3}\) × \(\frac {2}{3}\)= \(\frac {9\pi}{16}\) - \(\frac {56}{15}\).
குறைப்புச் சூத்திரம் III - ஐ திரும்பத் திரும்ப பயன்படுத்தி பின்வரும் முடிவுகளை (நிரூபணமின்றி) நாம் பெறலாம் :
(i) n இரட்டை எண் மற்றும் m இரட்டை எண் எனில்
\(\int ^\frac{\pi}{2}_{0}\) sin m x cos n x dx = \(\frac {(n-1)}{m+n}\) \(\frac {(n-3)}{m+n-2}\) \(\frac {(n-5)}{m+n-4}\) ......\(\frac {1}{m+2}\) \(\frac {m-1}{m}\) \(\frac {m-3}{m-2}\)\(\frac {m-5}{m-4}\) ... \(\frac {1}{2}\)\(\frac {\pi}{2}\)
(ii) n ஒற்றை எண் மற்றும் m மிகை முழுக்கள் (இரட்டை எண் அல்லது ஒற்றை எண்), எனில்
\(\int ^\frac{\pi}{2}_{0}\) sin m x cos n x dx = \(\frac {(n-1)}{m+n}\) \(\frac {(n-1)}{m+n-2}\) \(\frac {(n-5)}{m+n-4}\) ... \(\frac {2}{m+3}\)\(\frac {2}{m+1}\)
குறிப்பு
m மற்றும் n ஏதாவது ஒன்று ஒற்றை எண் எனில் cos x சார்பின் பின் அடுக்கினை ஒற்றை எண் ஆக
மாற்ற வேண்டும். எடுத்துக்காட்டாக m ஒற்றை எண் மற்றும் n இரட்டை எண் எனில்
\(\int ^\frac{\pi}{2}_{0}\) sin m x cos n x dx = \(\int ^\frac{\pi}{2}_{0}\) sin n x cos m x dx = \(\frac {(m-1)}{n+m}\) \(\frac {(m-3)}{(n+m-2)}\) \(\frac {(m-5)}{(n+m-4)}\) ... \(\frac {2}{(n+3)}\)\(\frac {1}{(n+3)}\).
5.
't ' நேரத்தில் இடப்பெயர்ச்சி s = \(\frac{t^{3}}{3}-t^{2}+3\) ஆகும்.
't ' நேரத்தில் திசைவேகம் v = \(\frac{ds}{dt}=t^{2}-2t\) ஆகும்.
't ' நேரத்தில் முடுக்கம் a = \(\frac{dV}{dt}=\frac{dV}{dt}=2t-2\) ஆகும்.
t2-2t=0 அதாவது, t = 0,2 எனும் போது திசைவேகம் பூச்சிய மதிப்பை அடையும். 2t-2=0
அதாவது, t =1 எனும்போது முடுக்கம் பூச்சிய மதிப்பை அடையும்.
6.
கொடுக்கப்பட்ட சமன்பாடு x2 + 3y2 = a2
\(\div { a }^{ 2 }\) கிடைப்பது, \(\cfrac { { x }^{ 2 } }{ { a }^{ 2 } } +\cfrac { { y }^{ 2 } }{ \frac { { a }^{ 2 } }{ 3 } } =1\)
இங்கு a2 = a2 மற்றும் \({ b }^{ 2 }=\cfrac { { a }^{ 2 } }{ 3 } \Rightarrow b=\cfrac { a }{ \sqrt { 3 } } \)
நெட்டச்சின் நீளம் 2a மற்றும்
குற்றச்சின் நீளம் \(2b=\cfrac { 2a }{ \sqrt { 3 } } \times \cfrac { \sqrt { 3 } }{ \sqrt { 3 } } =\cfrac { 2a\sqrt { 3 } }{ 3 } \)
7.
கொடுக்கப்பட்ட தளங்களின் வெட்டுக்கோடு வழி செல்லும் தளம்
(x + y + z - 6) + λ(2x + 3y + 4z + 5) = 0 ....(1)
இது வழி செல்லும் (1, 1, 1)
∴ (1 + 1 + 1 - 6) + λ(2 + 3 + 4 + 5) = 0
⇒ -3 + 14λ = 0 ⇒ λ = \(\frac {3}{14}\)
பிரதியிட λ = \(\frac {3}{14}\) என (1) கிடைப்பது
(x + y + z - 6) + = \(\frac {3}{14}\) (2x + 3y + 4z + 5) = 0
⇒ 14(x + y + z - 6) + 3(2x + 3y + 4z + 5) = 0
⇒ 20x + 23y + 26z - 69 =0
8.
\(\overset { \rightarrow }{ a } =\overset { \wedge }{ i } +2\overset { \wedge }{ j } +3\overset { \wedge }{ k } \) , \(\overset { \rightarrow }{ b } =-\overset { \wedge }{ i } +2\overset { \wedge }{ j } +\overset { \wedge }{ k } \) மற்றும் \(\overset { \rightarrow }{ c } =3\overset { \wedge }{ i } +\overset { \wedge }{ j } \)
\(\overset { \rightarrow }{ a } +\lambda \overset { \rightarrow }{ b } \),\(\overset { \rightarrow }{ c } \) க்கு செங்குத்து ஆதலால் \(\left( \overset { \rightarrow }{ a } +\lambda \overset { \rightarrow }{ b } \right) .\overset { \rightarrow }{ c } \) = 0
⇒ [\(\overset { \wedge }{ i } +2\overset { \wedge }{ j } +3\overset { \wedge }{ k } \) + λ \((-\overset { \wedge }{ i } +2\overset { \wedge }{ j } +\overset { \wedge }{ k }) \) ].\(\left( 3\overset { \wedge }{ i } +\overset { \wedge }{ j } \right) \)
⇒ \(\left[ (1-\lambda )\overset { \wedge }{ i } +(2+2\lambda )\overset { \wedge }{ j } +(3+\lambda )\overset { \wedge }{ k } \right] .\left( 3\overset { \wedge }{ i } +\overset { \wedge }{ j } \right) =0\)
\(\Rightarrow 3(1-\lambda )+2(2+2\lambda )=0\Rightarrow 3-3\lambda +2+2\lambda =0\)
\(\Rightarrow 5-\lambda =0\Rightarrow \lambda =5\)
9.
கொடுக்கப்பட்ட tan-1 x = sin-1 \(\left( \frac { 1 }{ 2 } \right) \) = sin-1 \(\left( sin\frac { \pi }{ 6 } \right) \)
\(\Rightarrow { tan }^{ -1 }x=\frac { \pi }{ 6 } \)
\(\Rightarrow x=tan\frac { \pi }{ 6 } =\frac { 1 }{ \sqrt { 3 } } \)
\(\therefore x=\frac { 1 }{ \sqrt { 3 } } \)
10.
x3 – x2 (α + β + γ) + x (αβ + βγ + γα) – αβγ = 0
\( x^{3}-x^{2}\left(2+\frac{1}{2}+1\right)+x\left(1+\frac{1}{2}+2\right)-(2)\left(\frac{1}{2}\right)(1)=0\)
\(x^{3}-x^{2}\left(\frac{4+1+2}{2}\right)+x\left(\frac{2+1+4}{2}\right)-1=0 \)
\(x^{3}-x^{2}\left(\frac{7}{2}\right)+x\left(\frac{7}{2}\right)-1=0\)
2x3 – 7x2 + 7x – 2 = 0
11.
வட்டத்தின் சமன்பாடு x2+y2+x+2y-3 = 0
இங்கு\(2g=-1\Rightarrow g=\cfrac { -1 }{ 2 } \)
2f = 2
\(\Rightarrow\) f = 1 மற்றும் c = -3
மையம் \((-g,-f)=\left( \cfrac { 1 }{ 2 } ,-1 \right) \)
மற்றும் \(r=\sqrt { { g }^{ 2 }+{ f }^{ 2 }-c } \)
= \(\sqrt { \cfrac { 1 }{ 4 } +1+3 } \)
= \(\sqrt { \cfrac { 1 }{ 4 } +4 } =\sqrt { \cfrac { 1+16 }{ 2 } } \)
\(r=\sqrt { \cfrac { 17 }{ 2 } } \) அலகுகள்
12.
\(\left| \bar { (1+i) } (2+3i)(4i-3) \right| =\left| \bar { (1+i) } \right| \left| (2+3i) \right| \left| (4i-3) \right| \) \(\left( \because \left| { z }_{ 1 }{ z }_{ 2 }{ z }_{ 3 } \right| =\left| { z }_{ 1 } \right| \left| { z }_{ 2 } \right| \left| { z }_{ 3 } \right| \right) \)
= \(\left| (1+i) \right| \left| (2+3i) \right| \left| (4i-3) \right| \) \(\left( \because \left| { z }_{ 1 } \right| =\left| { z } \right| \right) \)
= \(\left( \sqrt { { 1 }^{ 2 }+{ 1 }^{ 2 } } \right) \left( \sqrt { { 2 }^{ 2 }+{ 3 }^{ 2 } } \right) \left( \sqrt { { (-3) }^{ 2 }+4^{ 2 } } \right) \)
= \(\left( \sqrt { 2 } \right) \left( \sqrt { 13 } \right) \left( \sqrt { 25 } \right) =5\sqrt { 26 } \)
13.
\({ \tan }^{ -1 }\left( \sin\left( -\frac { 5\pi }{ 2 } \right) \right) \)
tan-1 \(\left( \sin\left( \frac { -5\pi }{ 2 } \right) \right) \) = x என்க.
⇒ tan-1 (-1) = x
⇒ -1 = tan x
⇒ tan x = -1 = -tan \(\frac { \pi }{ 4 } \)
⇒ tan x = tan \(\left( \frac { -\pi }{ 4 } \right) \)
⇒ x = \(-\frac { \pi }{ 4 } \)
[∵ \(-\frac { \pi }{ 4 } \) ∈ \(\left[ \frac { -\pi }{ 2 } ,\frac { \pi }{ 2 } \right] \)]
∴ tan \(\left( \sin\left( \frac { -5\pi }{ 2 } \right) \right) \) = \(-\frac { \pi }{ 4 } \)
| ∵ sin \(\left( \frac { -5\pi }{ 2 } \right) \) = -sin \(\frac { 5\pi }{ 2 } \) = -sin \(\left( 2\pi +\frac { \pi }{ 2 } \right) \) = -sin \(\frac { \pi }{ 2 } \) = -1 |
14.
கொடுக்கப்பட்ட 2i+3 என்பது ஒரு மூலம்.
∴ அதனுடைய இணை 3-2i பல்லுறுப்புக்கோவையின் ஒரு மூலமாகும்.
மூலங்களின் பெருக்கற்பலன்
=(3+2i)(3-2i)
=32+22=9+4=13
∴ எனவே குறைந்தபட்ச படியுடன் விகிதமுறு கெழுக்களையுடைய பல்லுறுப்புக்கோவைச் சமன்பாடு
x2-x (மூலங்களின் கூடுதல்) + மூலங்களின் பெருக்கல் பலன் =0
⇒ x2-x(6)+13=0
⇒ x2-6x+13=0
15.
\(\sqrt3\) + i
மட்டு = \(\sqrt { { x }^{ 2 }+{ y }^{ 2 } } =\sqrt { { (\sqrt { 3 } ) }^{ 2 }+{ 1 }^{ 2 } } =\sqrt { 3+1 } \) = 2
\(\alpha ={ \tan }^{ -1 }\left| \frac { y }{ x } \right| { =\tan }^{ -1 }\frac { 1 }{ \sqrt { 3 } } =\frac { \pi }{ 6 } \)
\(\sqrt3\) + i என்ற கலப்பெண்ணானது முதல் கால் பகுதியில் அமைவதால் முதன்மை வீச்சு
θ = α = \(\frac { \pi }{ 6 } \)
ஆகவே \(\sqrt3\) + i ன் மட்டு மற்றும் முதன்மை வீச்சு முறையே 2 மற்றும் \(\frac { \pi }{ 6 } \) ஆகும்.
16.
கொடுக்கப்பட்டது: z = x + iy
iz = i (x + iy)
= ix - y = -y + ix
கொடுக்கப்பட்டது: [Re(iz)]2 = 3
(-y)2 = 3 \(\Rightarrow\) y2 = 3
17.

வரையறைப்படி cot-1−x ∈(0,π).
எனவே, cot-1\(\left( \frac { 1 }{ 7 } \right) =\theta \) என்பதிலிருந்து \(\theta \in (0,\pi )\) ஆகும்.
ஆனால் \({ \cot }^{ -1 }\left( \frac { 1 }{ 7 } \right) =\theta \) என்பது \(\cot \theta =\frac { 1 }{ 7 } \) ஆகும்.
எனவே tan \(\theta \) = 7 மற்றும் \(\theta \) ஒரு குறுங்கோணம் ஆகும்.
tan \(\theta \) = \(\frac{7}{1}\) என்பதை பயன்படுத்தி, செங்கோண முக்கோணம் ஒன்றை உருவாக்குக. பின்னர் cos \(\theta \) = \(\frac { 1 }{ 5\sqrt { 2 } } \) என நமக்கு கிடைக்கிறது.
18.
= (i4)487 _ [i-1868 . i-1]
= i1487 - \([{ (i }^{ 4 }).\frac { 1 }{ i } ][{ i }^{ 4 }=1]\)
= 1-[1.(-i) [∵ i-1 = \(\frac { 1 }{ i } \) = -i] [1 -ன் அடுக்கும் 1 ஆகும்]
= 1 + i
19.
A என்பது 2m+1 வரிசையுடைய பூச்சியமற்றக் கோவை அணி என்க. இங்கு m = 0,1,2, .... எனவே |A| ≠ 0 மற்றும் தேற்றம் |adj A| = |A|n - 1இன் படி கிடைப்பது |adj A| = |A|(2m+1)-1 = |A|2m
|A|2m என்பது எப்பொழுதும் மிகை, எனவே |adj A| ஆனது மிகை.
20.
X என்பது சமவாய்ப்பு மாறி,ஆப்பிள்களின் எண்ணிக்கையைக் குறிக்கிறது என்க.
கொடுக்கப்பட்டது: கூடையில் 5 மாம்பழங்கள் மற்றும் 4 ஆப்பிள்கள் உள்ளன.
\(\therefore X=\{ 0,1,2,3\} \)
கூறுவெளி S=9C3=84
x=0, X(2 மாம்பழங்கள்)=5C3 \(\times\)4C0=10
X=1,X(2 மாம்பழங்கள் மற்றும் 1 ஆப்பிள்) = 5C2\(\times\)4C1=40
X=2, X(1 மாம்பழங்கள் மற்றும் 2 ஆப்பிள்கள்) = 5C1\(\times\)4C2=30
X=3, X(3 ஆப்பிள்கள்)=5C0\(\times\)4C3=4
| சமவாய்ப்பு மாறி X-ன் மதிப்புகள் | 0 | 1 | 2 | 3 | மொத்தம் |
| நேர்மாறு பிம்பங்களில் உறுப்புகளின் எண்ணிக்கை | 10 | 40 | 30 | 4 | 84 |
21.
(i) A= \(\left[ \begin{matrix} -2 & 4 \\ 1 & -3 \end{matrix} \right] \) என்க
\(|A|=\left| \begin{matrix} -2 & 4 \\ 1 & -3 \end{matrix} \right| =6-4=2\neq 0\)
A பூச்சியமற்றக் கோவை அணி ஆதலால் A-1 காணலாம்.
\({ A }^{ -1 }=\frac { 1 }{ |A| } adjA\)
இங்கு \(adj\quad A=\frac { 1 }{ 2 } \left[ \begin{matrix} -3 & -4 \\ -1 & -2 \end{matrix} \right] \)
[முதன்மை மூலைவிட்ட உறுப்புகளை இடமாற்றம் மற்றும் மூலைவிட்டத்தில் இல்லாத உறுப்புகளின் குறியை மாற்றுக]
\(\therefore { A }^{ -1 }=\frac { 1 }{ 2 } \left[ \begin{matrix} -3 & -4 \\ -1 & -2 \end{matrix} \right] \)
(ii) A = \(\left[ \begin{matrix} 5 & 1 & 1 \\ 1 & 5 & 1 \\ 1 & 1 & 5 \end{matrix} \right] \)என்க
= 5(25-1)-1(5-1)+1(1-5)
= 5(24)-1(4)+1(-4)
= 120-4-4 = 120 - 8 = 112 ≠ 0
R1 மூலம் விரிவுபடுத்த,
\(|A|=5\left| \begin{matrix} 5 & 1 \\ 1 & 5 \end{matrix} \right| -3\left| \begin{matrix} 1 & 1 \\ 1 & 5 \end{matrix} \right| +1\left| \begin{matrix} 1 & 5 \\ 1 & 1 \end{matrix} \right| \)
A ஒரு பூச்சியமற்ற கோவை எனில் A-1 சாத்தியம்
\(adj\quad A={ \left[ \begin{matrix} +\left| \begin{matrix} 5 & 1 \\ 1 & 5 \end{matrix} \right| \\ -\left| \begin{matrix} 1 & 1 \\ 1 & 5 \end{matrix} \right| \\ +\left| \begin{matrix} 1 & 1 \\ 5 & 1 \end{matrix} \right| \end{matrix}\begin{matrix} -\left| \begin{matrix} 1 & 1 \\ 1 & 5 \end{matrix} \right| \\ +\left| \begin{matrix} 5 & 1 \\ 1 & 5 \end{matrix} \right| \\ -\left| \begin{matrix} 5 & 1 \\ 1 & 1 \end{matrix} \right| \end{matrix}\begin{matrix} +\left| \begin{matrix} 1 & 5 \\ 1 & 1 \end{matrix} \right| \\ -\left| \begin{matrix} 5 & 1 \\ 1 & 1 \end{matrix} \right| \\ +\left| \begin{matrix} 5 & 1 \\ 1 & 5 \end{matrix} \right| \end{matrix} \right] }^{ T }\)
\(={ \left[ \begin{matrix} +(25-1) \\ -(5-1) \\ +(1-5) \end{matrix}\begin{matrix} -(5-1) \\ +(25-1) \\ +(5-1) \end{matrix}\begin{matrix} +(1-5) \\ -(5-1) \\ +(25-1) \end{matrix} \right] }^{ T }\)
\(={ \left[ \begin{matrix} 24 \\ -4 \\ -4 \end{matrix}\begin{matrix} -4 \\ 24 \\ -4 \end{matrix}\begin{matrix} -4 \\ -4 \\ 24 \end{matrix} \right] }^{ T }={ \left[ \begin{matrix} 24 \\ -4 \\ -4 \end{matrix}\begin{matrix} -4 \\ 24 \\ -4 \end{matrix}\begin{matrix} -4 \\ -4 \\ 24 \end{matrix} \right] }\)
ஒவ்வொரு உறுப்பிலிருந்து 4 ஐ பொதுவில் எடுக்க,
\(\therefore { A }^{ -1 }=\frac { 1 }{ |A| } adj\ A=\frac { 1 }{ 112 } ={ \left[ \begin{matrix} 24 \\ -4 \\ -4 \end{matrix}\begin{matrix} -4 \\ 24 \\ -4 \end{matrix}\begin{matrix} -4 \\ -4 \\ 24 \end{matrix} \right] }\)
\(=\frac { 1 }{ 28 } \left[ \begin{matrix} 6 \\ -1 \\ -1 \end{matrix}\begin{matrix} -1 \\ 6 \\ -1 \end{matrix}\begin{matrix} -1 \\ -1 \\ 6 \end{matrix} \right] \)
(iii) A =\(\left[ \begin{matrix} 2 & 3 & 1 \\ 3 & 4 & 1 \\ 3 & 7 & 2 \end{matrix} \right] \)என்க
= 2(8-7)-3(6-3)+1(21-12)
= 2(1)-3(3)+1(9)
R1 மூலம் விரிவுபடுத்த கிடைப்பது,
\(|A|=2\left| \begin{matrix} 4 & 1 \\ 7 & 2 \end{matrix} \right| -3\left| \begin{matrix} 3 & 1 \\ 3 & 2 \end{matrix} \right| +1\left| \begin{matrix} 3 & 4 \\ 3 & 7 \end{matrix} \right| \)
A ஒரு பூச்சியமற்றக் கோவை அணி ஆதலால் A-1 சாத்தியம்
\(adj\quad A={ \left[ \begin{matrix} +\left| \begin{matrix} 4 & 1 \\ 7 & 2 \end{matrix} \right| \\ -\left| \begin{matrix} 3 & 1 \\ 7 & 2 \end{matrix} \right| \\ +\left| \begin{matrix} 3 & 1 \\ 4 & 1 \end{matrix} \right| \end{matrix}\begin{matrix} -\left| \begin{matrix} 3 & 1 \\ 3 & 2 \end{matrix} \right| \\ +\left| \begin{matrix} 2 & 1 \\ 3 & 2 \end{matrix} \right| \\ -\left| \begin{matrix} 2 & 1 \\ 3 & 1 \end{matrix} \right| \end{matrix}\begin{matrix} +\left| \begin{matrix} 3 & 4 \\ 3 & 7 \end{matrix} \right| \\ -\left| \begin{matrix} 2 & 3 \\ 3 & 7 \end{matrix} \right| \\ +\left| \begin{matrix} 2 & 3 \\ 3 & 4 \end{matrix} \right| \end{matrix} \right] }^{ T }\)
\(={ \left[ \begin{matrix} +(8-7) \\ -(6-7) \\ +(3-4) \end{matrix}\begin{matrix} -(6-3) \\ +(4-3) \\ +(2-3) \end{matrix}\begin{matrix} +(21-12) \\ +(14-9) \\ +(8-9) \end{matrix} \right] }^{ T }\)
\(={ \left[ \begin{matrix} 1 \\ 1 \\ -1 \end{matrix}\begin{matrix} -3 \\ 1 \\ 1 \end{matrix}\begin{matrix} 9 \\ -5 \\ -1 \end{matrix} \right] }^{ T }\)
\(adj\quad A=\left[ \begin{matrix} 1 \\ -3 \\ 9 \end{matrix}\begin{matrix} 1 \\ 1 \\ -5 \end{matrix}\begin{matrix} -1 \\ 1 \\ -1 \end{matrix} \right] \)
இங்கு, \({ A }^{ -1 }=\frac { 1 }{ |A| } adj\quad A\)
\(\Rightarrow { A }^{ -1 }=\frac { 1 }{ 2 } \left[ \begin{matrix} 1 \\ -3 \\ 9 \end{matrix}\begin{matrix} 1 \\ 1 \\ -5 \end{matrix}\begin{matrix} -1 \\ 1 \\ -1 \end{matrix} \right] \)
22.
| p | q | ㄱp | p ➝ q | ㄱp ν q |
| T | T | F | T | T |
| T | F | F | F | F |
| F | T | T | T | T |
| F | F | T | T | T |
மெய்மை அட்டவணையில் p → q மற்றும் ㄱp ν q ஆகியவற்றிற்கான நிரல்கள் முழுவதும் ஒரே மாதிரியாக உள்ளது. எனவே அவை சமானமானவை ஆகும்.
23.
\(f(x)={ x }^{ 2 }+3x\)
\(df=\left( 2x+3 \right) dx\)
= \(\left( 2+2+3 \right) \times 0.1\)
= \(7\times 0.1\)
= 0.7
ii) x = 3 மற்றும் dx = 0.02
இங்கு x = 3 மற்றும் dx = 0.02,
df = (6 + 3) (0.02)
= 9(0.02) = 0.18
24.
\(f(x)=\tan x,x \in [0, \pi]\)
tanx என்ற சார்பு \(\left[ 0,\pi \right] \) என்ற இடைவெளியில் தொடர்ச்சியானது அல்ல. ஏனெனில் \(\cfrac { \pi }{ 2 } \) ல் இது வரையறுக்கப்படவில்லை. சார்பு \(\left( 0,\pi \right) \) ல் வகையிட இயலாது.ஏனெனில் \(\cfrac { \pi }{ 2 } \) ல் இது தொடர்ச்சியானது அல்ல.
மற்றும் \(f(0)=\tan\left( 0 \right) =0\)
\(f(\pi )=\tan\pi =0\)
\(f(0)=f(\pi )=0\)
'tanx' எனும் சார்பு \(\left[ 0,\pi \right] \) ல் வகையிட முடியாததாகவும் உள்ளதால், ரோலின் தேற்றத்தைப் பயன்படுத்த இயலாது.
25.
\(\frac { 1+i }{ 1-i } =\frac { \left( 1+i \right) \left( 1+i \right) }{ \left( 1-i \right) \left( 1+i \right) } =\frac { 1-2i-1 }{ 1+1 } =\frac { 2i }{ 2 } =i\)
மேலும் \(\frac { 1-i }{ 1+i } ={ \left( \frac { 1+1 }{ 1-i } \right) }^{ -1 }=\frac { 1 }{ i } =-i\)
எனவே, \({ \left( \frac { 1+i }{ 1-i } \right) }^{ 3 }-{ \left( \frac { 1-i }{ 1+i } \right) }^{ 3 }\) = \({ i }^{ 3 }-{ (-i) }^{ 3 }\) = -i - i =- 2i
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards