12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 14/11/2019
அரையாண்டு
12ஆம் வகுப்பு Maths / கணிதவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Maths / கணிதவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Maths Test1.
p மற்றும் q என்ற கூற்று மாறிகளைக் கொண்டு பின்வரும் ஒவ்வொரு வாக்கியத்தையும் குறியீட்டு அமைப்பில் எழுதுக.
19 ஒரு பகா எண் அல்லது ஒரு முக்கோணத்தின் அனைத்து கோணங்களும் சமமல்ல.
2.
பின்வரும் கூற்றின் வாய்ப்பாடுகளுக்கு எத்தனை நிரைகள் தேவைப்படும்?
\(((p\wedge q)\vee (\neg r\vee \neg s))\wedge (\neg t\wedge v)\)
3.
ஆதிப்புள்ளியை மையமாகவும் செல்லும், y -அச்சின் மீது குவியங்களையும் கொண்ட நீள்வட்டத் தொகுதியின் வகைக்கெழுச் சமன்பாட்டைக் காண்க.
4.
மதிப்பிடுக : \(\int ^{\log 2}_{-\log 2} e ^{-|x|}\) dx.
5.
கோடு y = 3x + 1, பரவளையம் y2 = 4ax, ஐ தொட்டுச் சென்றால், நெட்டச்சின் நீளம் காண்க.
6.
சமன்பாடு x2-(a-2)x-a-1 = 0 இன் வர்க்கத்தின் கூடுதல் மிக குறைவான மதிப்பை கொண்டிருக்குமெனில் a ன் மதிப்பை காண்க.
7.
நிரூபிக்க. 2 tan-1 \(\left( \frac { 2 }{ 3 } \right) \) = tan-1 \(\left( \frac { 12 }{ 5 } \right) \)
8.
தீர்க்க: 2x-y=3, 5x+y=4 அணிகளை பயன்படுத்தி.
9.
கீழ்காணும் கலப்பெண்களின் துருவ வடிவினைக் காண்க.
-2 - i2
10.
x3+2x2+3x+4=0 எனும் முப்படி சமன்பாட்டின் மூலங்கள் α,β மற்றும் \(\gamma \) எனில் கீழ்க்காணும் மூலங்களைக் கொண்டு முப்படி சமன்பாடுகளை உருவாக்குக.
2α,2β மற்றும் 2\(\gamma \).
11.
d-ஐ பொது வித்தியாசமாகக் கொண்டு a1, a2, a3, ... an ஒரு கூட்டுத் தொடர் எனில், \(\tan \left[ \tan^{ -1 }\left( \frac { d }{ 1+{ a }_{ 1 }{ a }_{ 2 } } \right) +\tan^{ -1 }\left( \frac { d }{ 1+{ a }_{ 2 }{ a }_{ 3 } } \right) +....\tan^{ -1 }\left( \frac { d }{ 1+{ a }_{ n }{ a }_{ n-1 } } \right) \right] =\frac { { a }_{ n }-{ a }_{ 1 } }{ 1+{ a }_{ 1 }{ a }_{ n } } \) என நிறுவுக.
12.
ㄱ( p V ㄱq) -ன் மெய்மை அட்டவணையில் கடைசி நிரலில் வரும் மெய் மதிப்பு 'F' விளைவுகளின் எண்ணிக்கை_______.
1
2
3
4
13.
14.
\(\int _{ 0 }^{ x }{ { \sin }^{ 4 }x \ dx } \) இன் மதிப்பு _______.
\(\frac { 3\pi }{ 10 } \)
\(\frac { 3\pi }{ 8 } \)
\(\frac { 3\pi }{ 4 } \)
\(\frac { 3\pi }{ 2 } \)
15.
. t எனும் நேரத்திற்குப் பிறகு மீதமுள்ள ஒரு பொருளின் அளவு P ஆகும். பொருள் ஆவியாகும் வீதமானது அந்நேரத்தில் மீதமிருக்கும் பொருளின் அளவிற்கு விகிதமாக அமைந்துள்ளது எனில், பின்னர் _______.
P = Cekt
P = Ce-kt
P = Ckt
Pt = C
16.
v (x,y) = log(ex + ey), எனில் \(\frac { \partial v }{ \partial x } +\frac { \partial v }{ \partial y } \) -ன் மதிப்பு _______.
ex + ey
\(\frac { 1 }{ { e }^{ x }+{ e }^{ y } } \)
2
1
17.
ஒரு நிகழ்தகவு மாறியின் நிகழ்தகவு சார்பு கீழ்க்காணுமாறு வரையறுக்கப்படுகிறது:
| x | −2 | −1 | 0 | 1 | 2 |
| f(x) | k | 2k | 3k | 4k | 5k |
எனில், E(X)-க்கு சமமான மதிப்பு _______.
\(\frac{1}{15}\)
\(\frac{1}{10}\)
\(\frac{1}{3}\)
\(\frac{2}{3}\)
18.
குவியங்களுக்கு இடைப்பட்ட தூரம் 2 மற்றும் 5, எனில் நீள்வட்டத்தின் சமன்பாடு
6x2 + 10y2 = 5
6x2 + 10y2 = 15
x2 + 3y2 = 10
இவற்றுள் ஏதுமில்லை
19.
\(\vec { a } =3\hat { i } +\hat { j } -2\hat { k } \) மற்றும் \(\vec { b } =\hat { i } -3\hat { j } +4\hat { k } \) என்ற மூலைவிட்டங்கள் கொண்ட இணைகரத்தின் பரப்பு ______
4
2\(\sqrt 3\)
4\(\sqrt 3\)
5\(\sqrt 3\)
20.
9x3-7x+6 = 0 என்பது ∝, β, ૪ என்பதன் மூலங்கள் எனில் ∝ β ૪ = _________
\(\frac{-7}{9}\)
\(\frac{7}{9}\)
0
\(\frac{-2}{3}\)
21.
tan- 1 \(\left( \frac { x+1 }{ x-1 } \right) \) + tan-1 \(\left( \frac { x-1 }{ x } \right) \) = tan-1 (-7), எனில் x =
0
-2
1
2
22.
cos-1 \(\left( \frac { cos5\pi }{ 3 } \right) \) + sin-1 \(\left( \frac { sin5\pi }{ 3 } \right) \) இன் மதிப்பு
\(\frac { \pi }{ 2 } \)
\(\frac { 5\pi }{ 3 } \)
\(\frac { 10\pi }{ 3 } \)
0
23.
(1 + i)4 + (1 - i)4 ன் மதிப்பு
8
4
-8
-4
24.
A =\(\begin{pmatrix} cosx & sinx \\ -sinx & cosx \end{pmatrix}\)மற்றும் \(\quad A(adj\quad A)=\lambda \quad \begin{pmatrix} 1 & 0 \\ 0 & 1 \end{pmatrix}\)எனில் \(\lambda \) ஆனது
sinx cosx
1
3
எதுவுமில்லை
25.
\(\vec { a } ,\vec { b } \) என்பன \(\left[ \vec { a } ,\vec { b } ,\vec { a } \times \vec { b } \right] =\frac { 1}{ 4 } \)எனுமாறுள்ள ஓரலகு வெக்டர்கள் எனில் \(\vec { a } \) மற்றும் \(\vec { b } \) ஆகியவற்றுக்கு இடைப்பட்ட கோணம் _______.
\(\cfrac { \pi }{ 6 } \)
\(\cfrac { \pi }{ 4 } \)
\(\cfrac { \pi }{ 3 } \)
\(\cfrac { \pi }{ 2 } \)
26.
\(\overset { n }{ \underset { r=0 }{ \Sigma } } \)nCr(-1)rxr எனும் பல்லுறுப்புக்கோவையின் மிகையெண் பூச்சியமாக்கிகளின் எண்ணிக்கை _______.
0
n
< n
r
27.
x-ல் n படியுள்ள ஒரு பல்லுறுப்புக்கோவைச் சமன்பாடு பெற்றுள்ள மூலங்கள் _______.
n வெவ்வேறு மூலங்கள்
n மெய்யெண் மூலங்கள்
n கலப்பெண் மூலங்கள்
அதிகபட்சம் ஒரு மூலம்
28.
z எனும் பூஜ்ஜியமற்ற கலப்பெண்ணிற்கு 2i z2 = \(\bar { z } \) எனில், |z| –ன் மதிப்பு _______.
\(\frac { 1 }{ 2 } \)
1
2
3
29.
x + y = k என்ற நேர்க்கோடு பரவளையம் y2 = 12x -இன் செங்கோட்டுச் சமன்பாடாக உள்ளது எனில் k-ன் மதிப்பு _______.
3
-1
1
9
30.
A=\(\left[ \begin{matrix} 3 & -3 & 4 \\ 2 & -3 & 4 \\ 0 & -1 & 1 \end{matrix} \right] \)எனில் adj(adj A) -ன் மதிப்பு ______.
\(\left[ \begin{matrix} 3 & -3 & 4 \\ 2 & -3 & 4 \\ 0 & -1 & 1 \end{matrix} \right] \)
\(\left[ \begin{matrix} 6 & -6 & 8 \\ 4 & -6 & 8 \\ 0 & -2 & 2 \end{matrix} \right] \)
\(\left[ \begin{matrix} -3 & 3 & -4 \\ -2 & 3 & -4 \\ 0 & -2 & 2 \end{matrix} \right] \)
\(\left[ \begin{matrix} 3 & -3 & 4 \\ 0 & -1 & 1 \\ 2 & -3 & 4 \end{matrix} \right] \)
31.
|x|\(\le\)1, எனில், 2tan-1 x-sin-1 \(\frac{2x}{1+x^2}\) என்பதற்கு சமம் _______.
tan-1x
sin-1x
0
\(\pi\)
32.
y2 = 4ax என்ற பரவளையத்திற்கும் அதன் செவ்வகலத்திற்கும் அடைபடும் அரங்கத்தின் பரப்பைக் காண்க.
33.
8 வெள்ளை மற்றும் 4 கருப்பு பந்துகள் கொண்ட ஒரு கூடையிலிருந்து இரு பந்துகள் சமவாய்ப்பு முறையில் தேர்ந்தெடுக்கப்படுகின்றன. தேர்ந்தெடுக்கப்படும் ஒவ்வொரு கருப்பு பந்துக்கும் ரூ.20 வெல்லும் தொகையாகவும் தேர்ந்தெடுக்கப்படும் ஒவ்வொரு வெள்ளை பந்துக்கும் ரூ.10 தோற்கும் தொகையாகவும் கருதுக. எதிர்பார்க்கப்படும் வெல்லும் தொகை மற்றும் பரவற்படி காண்க.
34.
y = x2 மற்றும் y=(x-3)2 என்ற வளைவரைகளுக்கு இடைப்பட்ட கோணத்தைக் காண்க.
35.
சீரான இரு பகடைகள் உருட்டப்படுவதாகக் கொள்வோம். X என்பது இரு பகடையில் கிடைக்கும் எண்களின் மொத்தக் கூட்டுத் தொகை எனில், (i) கூறுவெளி (ii) X எனும் சமவாய்ப்பு மாறி எடுக்கும் மதிப்புகள், (iii) 10-இன் நேர்மாறு பிம்பம், மற்றும் (iv) X-ன் நேர்மாறு பிம்பத்தில் உள்ள உறுப்புகளின் எண்ணிக்கை ஆகியவற்றைக் காண்க.
36.
இங்கு a,b,c,d மற்றும் p வெவ்வேறான பூச்சியமற்ற மெய்யெண்கள் எனில் (a2+b2+c2)P2-2(ab+bc+cd)p+(b2+c2+d2)≤0. நிரூபிக்க a,b,c,d பெருக்கத் தொடரில் உள்ளன மற்றும் ad=bc.
37.
புள்ளிகள் A, B, C யின் நிலை வெக்டர்கள் முறையே \(2\hat { i } -\hat { j } +\hat { k } \), \(\hat { i } -3\hat { j } -5\hat { k } \) மற்றும் \(3\hat { i } -4\hat { j } +4\hat { k } \) எனில் வெக்டர்கள் செங்கோணம் முக்கோணத்தை அமைக்கும் எனக் காட்டுக. முக்கோணத்தின் பிற கோணங்களை காண்க.
38.
பின்வரும் சார்புகளின் சார்பகம் காண்க.
f (x) = sin-1 (2x - 3)
39.
1, ω, ω2 ஒன்றின் முப்படி மூலங்கள் எனில் (1+ 5ω2 + ω4) (1 + 5ω + ω2) (1 + 5ω + ω2) (5 + ω + ω5) = 64 எனக் காட்டுக
40.
மூன்று எண்களின் கூடுதல் 20. மூன்றாவது எண்ணை 2 ஆல் பெருக்கி முதல் எண்ணுடன் கூட்ட கிடைப்பது 23. இரண்டு மற்றும் மூன்றாவது எண்ணை முதல் எண்ணின் மூன்று மடக்குடன் கூட்ட கிடைப்பது 46. கிராமரின் விதியை பயன்படுத்தி எண்களை காண்க.
41.
பின்வருவனவற்றிற்கான முனை, குவியம், இயக்குவரையின் சமன்பாடு மற்றும் செவ்வகல நீளம் காண்க:
y2-4y-8x+12 = 0
42.
\(\sqrt [ 4 ]{ -1 } \) - ன் மதிப்புகள் 土 \(\frac { 1 }{ \sqrt { 2 } } \) (1 土 i) என நிறுவுக.
43.
பின்வரும் ஒவ்வொன்றிற்கும் பரவளையத்தின் சமன்பாடு காண்க:
(i) குவியம் (4, 0) மற்றும் இயக்குவரை x = −4.
(ii) y-அச்சுக்கு சமச்சீரானது மற்றும் (2, -3) வழிச்செல்வது.
(iii) முனை (1, - 2) மற்றும் குவியம் (4, -2).
(iv) செவ்வகலத்தின் முனைகள் (4, -8) மற்றும் (4, 8).
44.
ஆதிப்புள்ளியில் இருந்து 7 அலகுகள் தொலைவில் உள்ளதும், செங்குத்தின் திசை விகிதங்கள் 3,-4,5, கொண்டதுமான தளத்தின் வெக்டர் சமன்பாடு காண்க.
45.
u=sin-1 \(\left( \frac { x+y }{ \sqrt { x } +\sqrt { y } } \right) \), எனில் \(x\frac { \partial u }{ \partial x } +y\frac { \partial u }{ \partial y } =\frac { 1 }{ 2 } \tan u\) என நிறுவுக.
46.
தீர்க்க: (x2 - 3y2) dx + 2xydy = 0.
47.
y(1) = 2 எனும் நிபந்தனையை நிறைவு செய்யும் (1 + x3)dy - x3 ydx = 0 எனும் வகைக்கெழுச் சமன்பாட்டின் குறிப்பிட்டத் தீர்வு காண்க.
48.
f , g : (a,b)→R என்பன வகையிடத்தக்க சார்புகள் எனில் d( fg) = fdg + gdf என நிறுவுக.
49.
பனிக்கட்டியிலான ஒரு கோளத்தின் ஆரம் 10 செமீ. அதன் ஆரம் 10 செமீலிருந்து 9.8 செமீ-ஆக குறைகின்றது. பின்வருவனவற்றின் தோராய மதிப்பினைக் காண்க:
(ii) வளைபரப்பில் ஏற்படும் மாற்றம்
50.
\(x^{4}-6x^{3}-11x^{2}+24x+28\) என்ற பல்லுறுப்புக் கோவையின் பூச்சியமாக்கிகள் 2 மற்றும் 7 எனில், \(2x^{3}-9x^{2}-11x+12\) என்ற பல்லுறுப்புக் கோவையின் ஒரு பூச்சியம் (2,7) என்ற இடைவெளியில் அமையும் என நிறுவுக.
51.
x2 = -36y என்ற பரவளையத்தின் முனையை செவ்வகலத்தின் முனைகளோடு கோடுகளாக இணைக்க கிடைக்கும் முக்கோணத்தின் பரப்பைக் காண்க.
52.
\(\vec { a } +\vec { b } +\vec { c } =0\) எனில் \(\vec { a } \times \vec { b } =\vec { b } \times \vec { c } =\vec { c } \times \vec { a } \) எனக் காட்டுக
53.
மதிப்பு காண்க
\(\tan\left[ \frac { 1 }{ 2 } { \sin }^{ -1 }\left( \frac { 2a }{ 1+{ a }^{ 2 } } \right) +\frac { 1 }{ 2 } { \cos }^{ -1 }\left( \frac { 1-{ a }^{ 2 } }{ 1+{ a }^{ 2 } } \right) \right] \)
54.
(x1 + iy1)(x2 + iy2) (x3 + iy3) ... (xn + iyn) = a + ib எனில்,
i) (x12 + y12)(x22 + y22)(x32 + y32).........(xn2 + yn2) = a2 + b2.
ii) \(\sum _{ r=1 }^{ n }{ { \tan }^{ -1 } } \left( \frac { { y }_{ r } }{ { x }_{ r } } \right) { \tan }^{ -1 }\left( \frac { b }{ a } \right) \)+ 2k\(\pi\), k ∈ Z எனக்காட்டுக.
1.
19 ஒரு பகா எண் அல்லது ஒரு முக்கோணத்தின் அனைத்து கோணங்களும் சமமல்ல.\(\Rightarrow p\vee \neg q\)
2.
\(((p\wedge q)\vee (\neg r\vee \neg s))\wedge (\neg t\wedge v)\) என்ற கூற்றில் p, q, r, s,t, v என்ற 6 மாறிகள் இடம் பெறுவதால் அதன் மெய்மை அட்டவணையில் 26 = 64 நிரைகள் இடம்பெறும்.
3.
ஆதியை மையமாகவும் செல்லும்,y அச்சின் மீதும் கொண்ட நீள்வட்டத் தொகுதியின் சமன்பாடு \(\cfrac { { x }^{ 2 } }{ { a }^{ 2 } } +\cfrac { { y }^{ 2 } }{ { b }^{ 2 } } =1\)
இங்கு \(b>a\) மற்றும் a,b என்பது தனித்த மாறிலிகள் (துணையலகுகள்).
இங்கு இரண்டு மாறிலிகள் உள்ளதால்,சமன்பாடு (1) ஐ இருமுறை வகைப்படுத்த,நாம் பெறுவது
\(\cfrac { 2x }{ { a }^{ 2 } } +\cfrac { 2y }{ { b }^{ 2 } } \cfrac { dy }{ dx } =0\)
\(2\left( \cfrac { x }{ { a }^{ 2 } } +\cfrac { y }{ { b }^{ 2 } } \cfrac { dy }{ dx } \right) =0\)
\(\cfrac { x }{ { a }^{ 2 } } +\cfrac { y }{ { b }^{ 2 } } \cfrac { dy }{ dx } =0\) ...(2)
சமன்பாடு (2)ஐ மீண்டும் xஐப் பொறுத்து வகைப்படுத்த,
\(\cfrac { 1 }{ { a }^{ 2 } } +\cfrac { y }{ { b }^{ 2 } } \cfrac { { d }^{ 2 }y }{ { dx }^{ 2 } } +\cfrac { dy }{ dx } \cfrac { dy }{ dx{ b }^{ 2 } } =0\)
\(\cfrac { 1 }{ { a }^{ 2 } } +\cfrac { y }{ { b }^{ 2 } } \cfrac { { d }^{ 2 }y }{ { dx }^{ 2 } } +\left( \cfrac { dy }{ dx } \right) ^{ 2 }\cfrac { 1 }{ { b }^{ 2 } } =0\)
x ஆல் பெருக்க
\(\cfrac { x }{ { a }^{ 2 } } +\cfrac { xy }{ { b }^{ 2 } } \left( \cfrac { { d }^{ 2 }y }{ { dx }^{ 2 } } \right) +\left( \cfrac { dy }{ dx } \right) ^{ 2 }\cfrac { x }{ { b }^{ 2 } } =0\)
சமன்பாடு (3)-(2),நாம் பெறுவது
\(\cfrac { x }{ { a }^{ 2 } } +\cfrac { xy }{ { b }^{ 2 } } \left( \cfrac { { d }^{ 2 }y }{ { dx }^{ 2 } } \right) +\left( \cfrac { dy }{ dx } \right) ^{ 2 }\left( \cfrac { x }{ { b }^{ 2 } } \right) -\left( \cfrac { x }{ { a }^{ 2 } } +\cfrac { y }{ { b }^{ 2 } } +\cfrac { dy }{ dx } \right) =0\)
\(\cfrac { xy }{ { b }^{ 2 } } \left( \cfrac { { d }^{ 2 }y }{ { dx }^{ 2 } } \right) +\left( \cfrac { dy }{ dx } \right) ^{ 2 }\cfrac { x }{ { b }^{ 2 } } -\cfrac { y }{ { b }^{ 2 } } \cfrac { dy }{ dx } =0\)
\(\cfrac { 1 }{ { b }^{ 2 } } \) ஐ வெளியே,எடுக்க,நாம் பெறுவது
\(\cfrac { 1 }{ { b }^{ 2 } } \left[ xy\cfrac { { d }^{ 2 }y }{ { dx }^{ 2 } } +x\left( \cfrac { dy }{ dx } \right) ^{ 2 }-y\cfrac { dy }{ dx } \right] =0\)
\(xy\cfrac { { d }^{ 2 }y }{ { dx }^{ 2 } } +x\left( \cfrac { dy }{ dx } \right) ^{ 2 }-y\cfrac { dy }{ dx } =0\)
என்பது தேவையான வகைக்கெழுச் சமன்பாடாகும்.
4.
f(x) = \(e ^{-|x|}\) என்க. f(-x) = \(e ^{-|-x|}\) = \(e ^{-|x|}\) = f (x)
எனவே f (x) என்பது ஓர் இரட்டைப் படைச் சார்பாகும்.
ஆகவே \(\int ^{\log 2}_{-\log 2} e ^{-|x|}\) dx = 2\(\int ^{\log 2}_{0} e ^{-|x|}\) dx = 2\(\int ^{\log 2}_{0} e ^{-x}\) dx
= 2(-e-x)\(^{\log2}_{0}\) = 2 (-e-log2 + e0) = 2 \((-e ^{\log \frac{1}{2}} + 1)\)
= 2 \((-\frac {1}{2}+1)=1\).
5.
கொடுக்கப்பட்ட தொடு கோட்டின்
y = 3x + 1
y = 3x + c என்ற கோடு y2 = 4ax க்கு தொடுகோடாக இருக்க நிபந்தனை \(c=\cfrac { a }{ m } \)
\(1=\cfrac { a }{ m } \Rightarrow 1=\cfrac { a }{ m } \Rightarrow a=3\)
செவ்வகத்தின் நீளம் 4 = 4(3) = 12 அலகுகள்.
6.
∝, β என்பது சமன்பாட்டின் மூலங்கள் எனில்
மூலங்களின் பெருக்கற் பலன் \(=\alpha +\beta =\frac { -b }{ a } \)
\(=\frac { [-(a-2)] }{ 1 } =a-2\)
மூலங்களின் பெருக்கல் \(=\alpha \beta =\frac { c }{ a } \)
\(=\frac { -(a+1) }{ 1 } =(a+1)\)
நம்மிடம் ∝2β2 = -2∝β
= (a-2)2+2(a+1)
= a2 -4a+4+2a+2
= (a-1)2+5
ஆகையால் ∝2+β2 குறைந்த மதிப்புடைய எனில் a = 1
7.
L.H.S = 2tan-1 \(\left( \frac { 2 }{ 3 } \right) \)
= tan-1 \(\left( \frac { 2 }{ 3 } \right) \) + tan-1 \(\left( \frac { 2 }{ 3 } \right) \)
\(={ tan }^{ -1 }\left( \frac { \frac { 2 }{ 3 } +\frac { 2 }{ 3 } }{ 1-\left( \frac { 2 }{ 3 } \right) \left( \frac { 2 }{ 3 } \right) } \right) ={ tan }^{ -1 }\left( \frac { \frac { 4 }{ 3 } }{ \frac { 9-2 }{ 9 } } \right) \)
\(={ tan }^{ -1 }\left( \frac { 4 }{ 3 } \times \frac { 9 }{ 7 } \right) ={ tan }^{ -1 }\left( \frac { 12 }{ 7 } \right) =RHS\)
எனவே நிரூபிக்கப்பட்டது.
8.
சமன்பாடுகளை அணி வடிவத்தில் பின்வருமாறு எழுதலாம்.
\(\left( \begin{matrix} 2 & -1 \\ 5 & 1 \end{matrix} \right) \left( \begin{matrix} x \\ y \end{matrix} \right) =\left( \frac { 3 }{ 4 } \right) \Rightarrow AX=B\) இங்கு
\(A=\left( \begin{matrix} 2 & -1 \\ 5 & 1 \end{matrix} \right) ,X=\left( \begin{matrix} x \\ y \end{matrix} \right) ,B=\left( \begin{matrix} 3 \\ 4 \end{matrix} \right) \)
∴ X=A-1 B
\(|A|=\begin{vmatrix} 2 & -1 \\ 5 & 1 \end{vmatrix}=2+5=7\neq 0\)
\(\therefore { A }^{ -1 }=\frac { 1 }{ |A| } adj\quad A=\frac { 1 }{ 7 } \begin{bmatrix} 1 & 1 \\ -5 & 2 \end{bmatrix}\)
\(\therefore X=\frac { 1 }{ 7 } \begin{bmatrix} 1 & 1 \\ -5 & 2 \end{bmatrix}\left[ \begin{matrix} 3 \\ 4 \end{matrix} \right] =\frac { 1 }{ 7 } \begin{bmatrix} 3 & +4 \\ -15 & +8 \end{bmatrix}\)
\(\\ =\frac { 1 }{ 7 } \left[ \begin{matrix} 7 \\ -7 \end{matrix} \right] =\left[ \begin{matrix} 1 \\ -1 \end{matrix} \right] \)
∴ தீர்வு கணம் {1, -1}
9.
\(x+iy=2-i2=r(cos\theta +isin\theta )\) என்க.
r = எண் மதிப்பு = \(r=\sqrt { { x }^{ 2 }+{ y }^{ 2 } } =\sqrt { 2^{ 2 }+(2{ ) }^{ 2 } } =\sqrt { 4+4 } \)
\(=\sqrt { 8 } =2\sqrt { 2 } \)
\(\alpha ={ tan }^{ -1 }\left| \frac { y }{ x } \right| ={ tan }^{ -1 }\left| \frac { -2 }{ -2 } \right| ={ tan }^{ -2 }(1)=\frac { \pi }{ 4 } \)
-2-2i என்ற கலப்பெண் மூன்றாம் காலப்பகுதியின் அமைவதால் [x குறை y குறை]
அதன் துருவ வடிவம்
\(-2-2i=2\sqrt { 2 } \)
\(2\sqrt { 2 } \left( cos\left( 2k\pi +\frac { 3\pi }{ 4 } \right) +isin\left( 2k\pi +\frac { 3\pi }{ 4 } \right) \right) \), k ∈ Z
10.
x3+2x2+3x+4=0 மூலங்கள் α,β,\(\gamma \)
∴ α+β+\(\gamma \)=-x2-ன் கெழு =-2 ........(1)
αβ+β\(\gamma \)+\(\gamma \)α=x-ன் கெழு =3 ......(2)
-α β \(\gamma \) =+4 ⇒ α β \(\gamma \)=-4 ........(3)
2α,2β,2\(\gamma \) வை மூலங்களாக உடைய முப்படி சமன்பாட்டை உருவாக்குக
2α+2β+2\(\gamma \)=2(α,β,\(\gamma \))=2(-2)=-4 [(1) லிருந்து]
4αβ+4β\(\gamma \)+4\(\gamma \)α=4(αβ+β\(\gamma \)+\(\gamma \)α)=4(3)=12 [(2) லிருந்து]
(2α) (2β) (2\(\gamma \)) =8(αβ\(\gamma \)) =8(-4)=-32 [(3) லிருந்து]
∴ தேவையான முப்படி சமன்பாடு
x3-(2α+2β+2\(\gamma \))x2+(2αβ+2β\(\gamma \)+2\(\gamma \)α)x-(2α) (2β) (2\(\gamma \))=0
⇒ x3-(4)x2+12x+32=0
⇒ x3+4x2+12x+32=0
11.
\(\tan^{ -1 }\left( \frac { d }{ 1+{ a }_{ 1 }{ a }_{ 2 } } \right) =\tan^{ -1 }(\frac { { a }_{ 2 }-{ a }_{ 1 } }{ 1+{ a }_{ 1 }{ a }_{ 2 } } )=\tan^{ -1 }{ a }_{ 2 }-\tan^{ -1 }{ a }_{ 1 }\)
இதே போன்று \(\tan ^{-1}\left(\frac{d}{1+a_2 a_3}\right)=\tan ^{-1}\left(\frac{a_3-a_2}{1+a_2 a_3}\right)=\tan ^{-1} a_3-\tan ^{-1} a_2\)
தொடர்ந்து உய்த்தறிதல் மூலம்
\(\tan ^{-1}\left(\frac{d}{1+a_n a_{n-1}}\right)=\tan ^{-1}\left(\frac{a_n-a_{n-1}}{1+a_{n-1} a_n}\right)=\tan ^{-1} a_n-\tan ^{-1} a_{n-1}\) என கிடைக்கிறது.
செங்குத்தாக கூட்டும்போது.
\(\tan ^{-1}\left(\frac{d}{1+a_1 a_2}\right)+\tan ^{-1}\left(\frac{d}{1+a_2 a_3}\right)+\ldots+\tan ^{-1}\left(\frac{d}{1+a_n a_{n-1}}\right)=\tan ^{-1} a_n-\tan ^{-1} a_1\) என நமக்கு கிடைக்கிறது.
\(\tan \left[\tan ^{-1}\left(\frac{d}{1+a_1 a_2}\right)+\tan ^{-1}\left(\frac{d}{1+a_2 a_3}\right)+\ldots+\tan ^{-1}\left(\frac{d}{1+a_n a_{n-1}}\right)\right]=\tan \left[\tan ^{-1} a_n-\tan ^{-1} a_1\right]\)
\(=\tan \left[\tan ^{-1}\left(\frac{a_n-a_1}{1+a_1 a_n}\right)\right]=\frac{a_n-a_1}{1+a_1 a_n} .\)
12.
| p | q | \(\neg \mathbf{q}\) | \(\mathbf{p} \vee(\neg \mathbf{q})\) | \(\neg(\mathbf{p} \vee(\neg \mathbf{q}))\) |
| T | T | F | T | F |
| T | F | T | T | F |
| F | T | F | F | T |
| F | F | T | T | F |
கடைசி நிரலில் உள்ள 'F' களின் எண்ணிக்கை 3
13.
(c)
14.
(b)
\(\frac { 3\pi }{ 8 } \)
15.
(b)
P = Ce-kt
16.
\(\mathrm{v}(x, \mathrm{y}) =\log \left(\mathrm{e}^x+\mathrm{e}^y\right) \)
\(\frac{\partial \mathrm{v}}{\partial x} =\frac{e^x}{e^x+e^y}, \frac{\partial \mathrm{v}}{\partial y}=\frac{e^y}{e^x+e^y} \)
\(\frac{\partial \mathrm{v}}{\partial x}+\frac{\partial \mathrm{v}}{\partial y} =\frac{e^x+e^y}{e^x+e^y}=1\)
17.
(d)
\(\frac{2}{3}\)
18.
(b)
6x2 + 10y2 = 15
19.
(d)
5\(\sqrt 3\)
20.
(d)
\(\frac{-2}{3}\)
21.
(d)
2
22.
(d)
0
23.
(c)
-8
24.
(b)
1
25.
\( {[\vec{a}, \vec{b}, \vec{a} \times \vec{b}] } = (\vec{a} \times \vec{b}) \cdot(\vec{a} \times \vec{b})= \frac{1}{4} \\ |\vec{a} \times \vec{b}|^2 =\frac{1}{4} \\ |\vec{a}|^2|\vec{b}|^2 \sin ^2 \theta =\frac{1}{4} \)
\(\sin ^2 \theta =\frac{1}{4} \quad(\because \vec{a}, \vec{b} \) என்பன அலகு வெக்டர்கள்)
\(\\ \sin \theta =\frac{1}{2} \Rightarrow \theta=\frac{\pi}{6} \)
26.
\(\sum_{r=0}^n{ }^n C_r(-1)^r \dot{x}^r=1-{ }^n C_1 x+{ }^n C_2 x^2-{ }^n C_3 x^3+\ldots(-1)^n x^n\)
P(x) என்பது 'n' மாற்றங்களைக் கொண்டுள்ளது.எனவே, இது 'n' மிகை மூலங்களைக் கொண்டிருக்கும்.
P(-x)ல் குறிமாற்றங்கள் இல்லை, எனவே குறையெண் மூலங்கள் கிடையாது.
27.
(c)
n கலப்பெண் மூலங்கள்
28.
\(2 \mathrm{i} z^2=\bar{z} \text {. } \)
\(\therefore \quad\left|2 i z^2\right|=|\bar{z}| \)
\(ie \ |2| \cdot|i| \cdot|z|^2=|z| \Rightarrow 2 \times 1 \times|z|^2=|z|\)
\(\frac{|z|^2}{|z|}=\frac{1}{2} \Rightarrow|z|=\frac{1}{2}\)
29.
\( y^2=12 x \quad \Rightarrow 4 a =12 \Rightarrow a=3 \\ x+y =k \Rightarrow y=-x+k \\ \therefore m =-1, c=k \\ c=-2 a m-a m^2 \Rightarrow k =-2 a(-1)-a(-1)^3 \\ k =-6(-1)-3(-1)=6+3=9 \)
30.
adj (adj A) = |A|n - 2 A
|A|3-2 = A = |A| A
IA| = 3(-3 + 4) + 3(2) + 4(-2)
= 3 + 6 - 8 = 1
adj (adj A) = 1 A = A
31.
\( \sin ^{-1} \frac{2 x}{1+x^2} =2 \tan ^{-1} x \\ \therefore 2 \tan ^{-1} x-2 \tan ^{-1} x =0 \)
32.
செவ்வகலத்தின் சமன்பாடு x = a ஆகும். இச்செவ்வகலம் பரவளையத்தை L(a,2a) மற்றும் L1(a,-2a) என்ற புள்ளிகளில் வெட்டுகிறது. தேவையான பரப்பு படம் ல் நிழலிடப்பட்டுள்ளது.
பரவளையம் சமச்சீராக இருப்பதால் தேவையான பரப்பு A ஆனது y = 2 \(\sqrt a \sqrt x\) என்ற பரவளையத்தின் பகுதி x - அச்சு, x = 0 மற்றும் x = a ஆகியவற்றால் அடைபடும் பரப்பைப் போல் இரு மடங்காகும்.
எனவே செங்குத்தான பட்டைகளைப் பயன்படுத்தி பரப்பு காண நமக்குக் கிடைப்பது
A = 2 \(\int ^{a}_{0} y dx = 2 \int ^{a}_{0} 2\sqrt {a} \sqrt{ x} dx \) = \(4\sqrt {a} [\frac {2}{3} x ^ {\frac {3}{2}}]^{a}_{0}\)
= 4 \(\sqrt{a} \times \frac {2}{3} a^{\frac {3}{2}} = \frac {8a^2}{3}\) .
33.
X என்பது வெல்லும் தொகை என்க. சாத்தியமான தேர்வுகளாவன (i) இரு பந்துகளுமே கருப்பு, அல்லது (ii) ஒரு வெள்ளை மற்றும் ஒரு கருப்பு (iii) இரண்டுமே வெள்ளை . எனவே X எனும் சமவாய்ப்பு மாறி கீழ்க்காணுமாறு வரையறுக்கப்படுகிறது:
X (இரண்டுமே கருப்பு பந்துகள்) = ரூ. 2(20) = ரூ .40
X (ஒரு கருப்பு பந்து மற்றும் ஒரு வெள்ளைப் பந்து) = ரூ . 20 − ரூ .10 = ரூ .10
X (இரண்டுமே வெள்ளைப் பந்துகள்) = ரூ. (-20) = - ரூ 20
எனவே X கொள்ளும் மதிப்புகள் 40,10 மற்றும் −20 ஆகும்.
மொத்த பந்துகள் n = 12
2 பந்துகள் தேர்ந்தெடுக்க மொத்த வழிகள் = \(\left( \begin{matrix} 12 \\ 2 \end{matrix} \right )=\frac{12\times11}{1\times2}=66\)
2 கருப்பு பந்துகள் தேர்ந்தெடுக்க வழிகள் = \(\left( \begin{matrix} 4 \\ 2 \end{matrix} \right )=6\)
ஒரு கருப்பு பந்து மற்றும் ஒரு வெள்ளை பந்து தேர்ந்தெடுக்க = \(\left( \begin{matrix} 8 \\ 1 \end{matrix} \right )\left( \begin{matrix} 4 \\ 1 \end{matrix} \right )=32\)
2 வெள்ளை பந்துகள் தேர்ந்தெடுக்க வழிகள் = \(\left( \begin{matrix} 8 \\ 2 \end{matrix} \right )=28\)
| சமவாய்ப்பு மாறியின் மதிப்புகள் | 40 | 10 | -20 | மொத்தம் |
| நேர்மாறு பிம்பங்களில் உறுப்புகளின் எண்ணிக்கை | 6 | 32 | 28 | 66 |
நிகழ்தகவு நிறை சார்பானது
| x | 40 | 10 | -20 | மொத்தம் |
| f(x) | \(\frac{6}{66} \) | \(\frac{32}{66} \) | \(\frac{28}{66} \) | 1 |
சராசரி : \(E(X) = \sum{xf(x)}=40.(\frac{6}{66})+10.(\frac{32}{66})+(-20).(\frac{28}{66})=0\)
அதாவது எதிர்பார்க்கப்படும் வெல்லும் தொகை 0 .
பரவற்படி : \(E(X^2)=\sum{x^2f(x)=40^2.(\frac{6}{66})+10^2.(\frac{32}{66})+({-20^2}).(\frac{28}{66})}=\frac{4000}{11}\)
(E(X))2 = 02 = 0
இதன்படி \(V(X) = E(X^2)-(E(X))^2=\frac{4000}{11}-0=\frac{4000}{11}\)
எனவே \(E(X)=0\) மற்றும் \(Var(X)=\frac{4000}{11}\)
34.
இப்பொழுது நாம் வெட்டும் புள்ளியைக் காண்போம். சமப்படுத்த x2 = (x - 3)2 ⇒ x = 3/2 எனப்பெறலாம். எனவே , வெட்டும் புள்ளி (3/2,9/4) ஆகும். θ என்பது இவ்விரு வளைவரைகளுக்கு இடைப்பட்ட கோணம் என்க . வெட்டும் புள்ளியிடத்து வளைவரையின் சாய்வுகள் பின்வருமாறு கணக்கிடப்படுகின்றன :

y = x2 என்ற வளைவரைக்கு,
\(\frac{dy}{dx}=2x\) ஆகும்.
\(m_{1}=(\frac{dy}{dx})_{(\frac{3}{2},\frac{9}{4})}=3\).
y=(x-3)2 என்ற வளைவரைக்கு,
\(\frac{dy}{dx}=2(x-3)\) ஆகும்.
\(m_{1}=(\frac{dy}{dx})_{(\frac{3}{2},\frac{9}{4})}= -3\)
(3)-லிருந்து,
\(\tan \theta=|\frac{3-(-3)}{1-9}|=\frac{3}{4}\) ஆகும்.
ஆகவே , \(\theta\) = \(\tan^{-1}(\frac{3}{4})\).
35.
(i) கூறுவெளி
S = {1, 2, 3, 4, 5,6}×{1,2, 3, 4, 5, 6}, 36 வரிசைப்படுத்தப்பட்ட சோடிகள் (α, β)-இல்
உள்ளன. இங்கு α மற்றும் β ஆகியவை 1 முதல் 6 வரை படத்திலிருப்பது போல் எந்தவொரு முழு எண் மதிப்பையும் பெறும். ஒவ்வொரு புள்ளி (α, β) என்பதற்கும் X என்பது பகடையின் மேலுள்ள எண்களின் கூடுதல் என ஒதுக்கீடு செய்யப்படுகிறது. அதாவது X (α, β) = α + β ஆகும்.
\(S\quad =\quad \begin{Bmatrix} \begin{matrix} (1,1) & (1,2) & (1,3), \\ (2,1) & (2,2) & (2,3), \\ (3,1) & (3,2) & (3,3), \end{matrix} & \begin{matrix} (1,4) & (1,5) & (1,6) \\ (2,4) & (2,5) & (2,6) \\ (3,4) & (3,5) & (3,6) \end{matrix} \\ \begin{matrix} (4,1) & (4,2) & (4,3), \\ (5,1) & (5,2) & (5,3), \\ (6,1) & (6,2) & (6,3), \end{matrix} & \begin{matrix} (4,4) & (4,5) & (4,6) \\ (5,4) & (5,5) & (5,6) \\ (6,4) & (6,5) & (6,6) \end{matrix} \end{Bmatrix}\)
எனவே
X(1,1) = 1 + 1 = 2
X(1,2) = X(2,1) = 3
X(1,3) = X(2,2) = X(3,1) = 4
X(1,4) = X(2,3) = X(3,2) = X(4,1) = 5
X(1,5) = X(2,4) = X(3,3) = X(4,2) = X(5,1) = 6
X(1,6) = X(2,5) = X(3,4) = X(4,3) = X(5,2) = X(6,1) = 7
X(2,6) = X(3,5) = X(4,4) = X(5,3) = X(6,2) = 8
X(3,6) = X(4,5) = X(5,4) = X(6,3) = 9
X(4,6) = X(5,5) = X(6,4) = 10
X(5,6) = X(6,5) = 11
X(6,6) = 12.
(ii) எனவே X எனும் சமவாய்ப்பு மாறி 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 ஆகிய மதிப்புகளைப் பெறுகிறது.
(iii) 10-இன் நேர்மாறு பிம்பம் {(4, 6),(5, 5),(6, 4)} ஆகும்.
(iv) நேர்மாறு பிம்பங்களில் எண்ணிக்கை கீழே பட்டியலிடப்பட்டுள்ளது.
| சமவாய்ப்பு மாறியின் மதிப்புகள் | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | மொத்தம் |
| நேர்மாறு பிம்பங்களில் உறுப்புகளின் எண்ணிக்கை |
1 | 2 | 3 | 4 | 5 | 6 | 5 | 4 | 3 | 2 | 1 | 36 |
36.
கொடுக்கப்பட்ட சமன்பாடு (a2+b2+c2)P2-2(ab+bc+cd)p+(b2+c2+d2)≤0 ...(1)
(1) ஐ மாற்றி எழுதலாம்
(a2p2-2abp+b2)+(b2p2-2cp+c2)+(c2p2-2cdp+d2)≤0
(ap-b)2+(bp-c)2+(cp-d)2≤0 .....(2)
a,b,c,d, p∈ R எனில்
(ap-b)2≥0, (bp-c)2≥0 மற்றும் (cp-d)2≥0
∴ (2) நிறைவு செய்யப்பட வேண்டுமெனில்
ap-b=0, bp-c=0, cp-d=0
\(\frac { b }{ a } =\frac { c }{ b } =\frac { d }{ c } =p\)
⇒ a,b, c,d பெருக்குத் தொடரில் உள்ளன. மற்றும் ad=bc
37.
கொடுக்கப்பட்ட \(\bar { OA } =2\hat { i } -\hat { j } +\hat { k } \), \(\bar { OB } =\hat { i } -3\hat { j } -5\hat { k } \) மற்றும் \(\bar { OB } =\hat { i } -3\hat { j } -5\hat { k } \)
∴ \(\bar { AB } =\bar { OB } -\bar { OA } =-\hat { i } -2\hat { j } -6\hat { k } \)
\(\bar { BC } =\bar { OC } -\bar { OB } =2\hat { i } -\hat { j } +\hat { k } \)
\(\bar { CA } =\bar { OA } -\bar { OC } =-\hat { i } +3\hat { j } +5\hat { k } \)
\(\bar { CA } =\bar { OA } -\bar { OC } =\vec { 0 } \)
மேலும் \(\vec { BC } .\vec { CA } =(2\hat { i } -\hat { j } +\hat { k } ).(-\hat { i } +3\hat { j } +5\hat { k } )\)
= -2 - 3 + 5 = 0
\(\Rightarrow \vec { BC } \pm \vec { CA } \)
எனவே, ABC ஒரு செங்கோண முக்கோணமாகும்.
\(cosA=\frac { \vec { AB } .\vec { AC } }{ \left| \vec { AB } \right| \left| \vec { AC } \right| } =\frac { (-\hat { i } -2\hat { j } -6\hat { k } ).(-\hat { i } +3\hat { j } +5\hat { k } ) }{ \sqrt { 1+4+36 } .\sqrt { 1+9+25 } } \)
\(=\frac { 35 }{ \sqrt { 41 } .\sqrt { 35 } } =\sqrt { \frac { 35 }{ 41 } } =A={ Cos }^{ -1 }\left( \sqrt { \frac { 35 }{ 41 } } \right) \)
\(cosB=\frac { \vec { BA } .\vec { BC } }{ \left| \vec { BA } \right| \left| \vec { BC } \right| } =\frac { (\hat { i } +2\hat { j } +6\hat { k } ).(2\hat { i } -\hat { j } +\hat { k } ) }{ \sqrt { 1+4+36 } .\sqrt { 4+1+1 } } \)
\(=\sqrt { \frac { 9 }{ 41 } } \Rightarrow N={ Cos }^{ -1 }\left( \sqrt { \frac { 6 }{ 41 } } \right) \)
38.
sin-1 x ன் சார்பகம் [-1, 1]
∴ f (x) = sin-1 (2x - 3) ஒவ்வொரு x க்கும் வரையறுக்கப்பட்டது.
-1 ≤ 2x - 3 ≤ 1
⇒ 3 - 1 ≤ 2x ≤ 1 + 3
⇒ 2 ≤ 2x ≤ 4 ⇒ 1 ≤ x ≤ 2 ⇒ x ∈ [1, 2]
∴ f (x) = sin-1 (2x - 3) ன் சார்பகம் [1, 2]
39.
LHS = (1+ 5ω2 + ω4) (1 + 5ω + ω2) (1 + 5ω + ω2) (5 + ω + ω5)
= (1+ 5ω2 + ω4) (1 + 5ω + ω2) (1 + 5ω + ω2) (5 + ω + ω5) [∵ ω4 = ω3 . ω1 = ω]
= (1 + ω + 5ω2) (1 + ω2 + 5ω) (5 + ω + ω2)
= (-ω2 + 5ω2) (-ω + 5ω) (5 - 1)
= (4ω2) (4ω)(4) = 64(1) = 64 [∵ ω3 = 1]
= RHS எனவே நிரூபிக்கப்பட்டது
40.
தேவையான எண்களை x,y மற்றும் z என்க.
கொடுக்கப்பட்ட தரவின் படி,
x+y+z=20 .....(1)
2z+x=23⇒x+2z=23 ....(2)
y+z+3x=46⇒3x+y+z=46 ...(3)
\(\Delta =\left| \begin{matrix} 1 & 1 & 1 \\ 1 & 0 & 2 \\ 3 & 1 & 1 \end{matrix} \right| =1\begin{vmatrix} 0 & 2 \\ 0 & 1 \end{vmatrix}-1\begin{vmatrix} 1 & 2 \\ 1 & 1 \end{vmatrix}+1\begin{vmatrix} 1 & 0 \\ 3 & 1 \end{vmatrix}\)
=-2+5+1=4
\({ \Delta }_{ 1 }=\left| \begin{matrix} 20 & 1 & 1 \\ 23 & 0 & 2 \\ 46 & 1 & 1 \end{matrix} \right| =20\begin{vmatrix} 0 & 2 \\ 1 & 1 \end{vmatrix}-1\begin{vmatrix} 23 & 2 \\ 46 & 1 \end{vmatrix}+1\begin{vmatrix} 23 & 0 \\ 46 & 1 \end{vmatrix}\)
=-40+69+23=52
\({ \Delta }_{ 2 }=\left| \begin{matrix} 1 & 20 & 1 \\ 1 & 23 & 2 \\ 3 & 46 & 1 \end{matrix} \right| \)
\(=1\begin{vmatrix} 23 & 2 \\ 46 & 1 \end{vmatrix}-20\begin{vmatrix} 1 & 2 \\ 3 & 1 \end{vmatrix}+1\begin{vmatrix} 1 & 23 \\ 3 & 46 \end{vmatrix}\)
=-69+100-23=8
\({ \Delta }_{ 3 }=\left| \begin{matrix} 1 & 1 & 20 \\ 1 & 0 & 23 \\ 3 & 1 & 46 \end{matrix} \right| \)
\(=1\begin{vmatrix} 0 & 23 \\ 1 & 46 \end{vmatrix}-1\begin{vmatrix} 1 & 23 \\ 3 & 46 \end{vmatrix}+20\begin{vmatrix} 1 & 0 \\ 3 & 1 \end{vmatrix}\)
=-23+23+20=20
\(\therefore x=\frac { { \Delta }_{ 1 } }{ \Delta } =\frac { 52 }{ 4 } =13\)
\(y=\frac { { \Delta }_{ 2 } }{ \Delta } =\frac { 8 }{ 4 } =2\) மற்றும் \(z=\frac { { \Delta }_{ 3 } }{ \Delta } =\frac { 20 }{ 4 } =5\)
41.
y2 - 4y - 8x + 12 = 0
y2-4y = 8x-12
இருபுறமும் 4ஐ கூட்ட கிடைப்பது
y - 4y + 4 = 8x - 12 + 4 = 8x - 8
⇒ (y - 2)2 = 8(x - 1)
இது கீழ்நோக்கி திறப்புடைய பரவளையம்,
செவ்வகலம் 4a = 8 ⇒ a = 2.
(a) முனை (1, 2) ⇒ h = 1, k = 2
(b) குவியம் (h + a, 0 + k)
⇒ (1 + 2, 0 + 2)
⇒ (3, 2)
(c) இயக்குவரையின் சமன்பாடு x = h - a
⇒ x = 1-2
⇒ x = -1
(d) செவ்வகலத்தின் நீளம் 4a = 8 அலகுகள்.
முனை (1, 2)
குவியம் (3, 2)
இயக்குவரையின் சமன்பாடு x = -1
செவ்வகலத்தின் நீளம் = 8
42.
\(z={ (-1) }^{ \frac { 1 }{ 4 } }\) என்க.
\(z={ (cos\pi +isin\pi ) }^{ \frac { 1 }{ 4 } }\)
[∵ cosπ = -1 மற்றும் sin π = 0]
\(\Rightarrow z=cos\frac { 1 }{ 4 } (2k\pi +\pi )+isin\frac { 1 }{ 4 } (2k\pi +\pi )\)
k = 0, 1, 2, 3
k = 0 எனில்
\(z=cos\frac { \pi }{ 4 } +isin\frac { \pi }{ 4 } =\frac { 1 }{ \sqrt { 2 } } +\frac { i }{ \sqrt { 2 } } =\frac { 1 }{ \sqrt { 2 } } (1+i)\)
k = 1 எனில்
\(z=cos\frac { 3\pi }{ 4 } +isin\frac { 3\pi }{ 4 } =cos\left( \pi -\frac { \pi }{ 4 } \right) +isin\left( \pi -\frac { \pi }{ 4 } \right) \)
\(=-cos\frac { \pi }{ 4 } +isin\frac { \pi }{ 4 } \)
[∵ \(\left( \pi -\frac { \pi }{ 4 } \right) \) II -ம் கால்பகுதியில் அமைகிறது cos θ குறை மற்றும் sin θ மிகை]
\(=-\frac { 1 }{ \sqrt { 2 } } +\frac { i }{ \sqrt { 2 } } =\frac { 1 }{ \sqrt { 2 } } (-1+i)\)
k = 2 எனில்
\(z=cos5\frac { \pi }{ 4 } +isin5\frac { \pi }{ 4 } \)
\(=cos\left( \pi -\frac { \pi }{ 4 } \right) +isin\left( \pi -\frac { \pi }{ 4 } \right) \)
= -\(cos\frac { \pi }{ 4 } -isin\frac { \pi }{ 4 } \)
[∵ \(\left( \pi -\frac { \pi }{ 4 } \right) \) III - கால்பகுதியில் அமைகிறது இங்கு cos θ மற்றும் sin θ குறை]
= - \(\frac { 1 }{ \sqrt { 2 } } -\frac { i }{ \sqrt { 2 } } =\frac { 1 }{ \sqrt { 2 } } (-1-i)\)
k = 3 எனில்
\(z=cos7\frac { \pi }{ 4 } +isin7\frac { \pi }{ 4 } \)
\(=cos\left( 2\pi -\frac { \pi }{ 4 } \right) -isin2\left( \pi -\frac { \pi }{ 4 } \right) \)
= \(cos\frac { \pi }{ 4 } -isin\frac { \pi }{ 4 } \)
[∵\(\left( 2\pi -\frac { \pi }{ 4 } \right) \) IV -ம் கால்பகுதியில் அமைகிறது இங்கு cos θ மிகை மற்றும் sin θ குறை]
\(\frac { 1 }{ \sqrt { 2 } } -\frac { i }{ \sqrt { 2 } } =\frac { 1 }{ \sqrt { 2 } } (1-i)\)
எனவே நான்கு மூலங்கள்
\(\frac { 1 }{ \sqrt { 2 } } (1+i),\frac { 1 }{ \sqrt { 2 } } (-1+i),\frac { 1 }{ \sqrt { 2 } } (-1-i),\frac { 1 }{ \sqrt { 2 } } (1-i)\)
∵ மூலங்கள் \(\pm \frac { 1 }{ \sqrt { 2 } } (1\pm i)\)
43.
(i) கொடுக்கப்பட்ட குவியம் (4, 0) மற்றும் இயக்குவரை x = -4 (4, 0) குவியம் மற்றும் இயக்குநரை இயக்குவரை x = -4, ஆதலால் பரவளையத்தின் வடிவம் y2 = 4ax

மேலும் a = 4
\(\therefore\) பரவளையத்தின் சமன்பாடு y2 = 4(4)x
\(\therefore\) y2 = 16x
(ii) பரவளையம் (2, -3) வழி செல்கிறது மற்றும் சமச்சீர் அச்சு y-அச்சு ஆகும்.

பரவளையம் (2, -3) வழிச் செல்வதன் காரணமாக அது கீழ்நோக்கி திறப்புடையது.
\(\therefore\) அதனுடைய சமன்பாடு x2 = -4ay
(2,-3) என்ற புள்ளியை பிரதியிட கிடைப்பது
22= -4z(-3)
\(\Rightarrow\) 4 = -12a

(1) லிருந்து
\(\therefore { x }^{ 2 }=-4\left( \cfrac { 1 }{ 3 } \right) y\)
\(\Rightarrow\) 3x2 = -4y
(iii) முனை (1, -2) மற்றும் குவியம் (4, -2) பரவளையம் வலது புறம் திறப்புடையது.

a =(1, -2) மற்றும் (4, 2) க்கு இடைப்பட்ட தூரம்
\(a=\sqrt { \left( 1-4 \right) ^{ 2 }+\left( -2+2 \right) ^{ 2 } } \)
\(\Rightarrow a=\sqrt { \left( -3 \right) ^{ 2 }+\left( -2+2 \right) ^{ 2 } } \)
பரவளையத்தின் சமன்பாடு
(y-k)2 = 4a(x-h)
(y+2)2 = 4(3)(x-1)
[\(\therefore\) (h, k)(1, -2)]
\(\therefore\) (y+2)2 = 12(x-1)
(iv) செவ்வகலத்தின் முனை புள்ளிகள் (4, -8) மற்றும் (4, 8)
குவியம்(4, -8) மற்றும் (4, 8)ன் மையப்புள்ளி

\(\therefore\) குவியம் = \(\left( \cfrac { 4+4 }{ 2 } ,\cfrac { -8+8 }{ 2 } \right) =(4,0)\)
\(\therefore\) a = 4 மற்றும் உச்சிப்புள்ளி (0, 0)
பரவளையத்தின் சமன்பாடு y2 = 4ax
\(\therefore\) y2 = 4(4)x
\(\therefore\) y2 = 16x
44.
கொடுக்கப்பட்ட p=7
\(=\cfrac { 3\hat { i } -4\hat { j } +5\hat { k } }{ \sqrt { { 3 }^{ 1 }+\left( -4 \right) +{ 5 }^{ 2 } } } =\cfrac { 3\hat { i } -4\hat { j } +5\hat { k } }{ \sqrt { 9+16+25 } } \)
= \(\cfrac { 3\hat { i } -4\hat { j } +5\hat { k } }{ \sqrt { 50 } } =\cfrac { 3\hat { i } +4\hat { j } +5\hat { k } }{ 5\sqrt { 2 } } \)
[\(\because\) 3,-4,5 திசை விகிதங்கள் ஆதிபுள்ளியிலிருந்து தளத்திற்கு உள்ள தூரம் P மற்றும் தளத்திற்குச் செங்குத்தான ஓரலகு வெக்டர் \(\hat { d } \) எனில் தளத்திற்கு சமன்பாடு.
\(\vec { r } .\hat { d } =p\)
தேவையான தளத்தின் சமன்பாடு
\(r.\left( \cfrac { 3\hat { i } -4\hat { j } +5\hat { k } }{ 5\sqrt { 2 } } \right) =7\)
45.
இங்கு கொடுக்கப்பட்ட சார்பு u சமபடித்தானது அல்ல. எனவே ஆய்லரின் தேற்றம் சார்பு u -க்கு பயன்படுத்த முடியாது. இருப்பினும் f (x,y) = \(\left( \frac { x+y }{ \sqrt { x } +\sqrt { y } } \right) \)=sin u என்பது சமபடித்தானது. ஏனெனில்
f(tx,ty) = \(\frac { tx+ty }{ \sqrt { tx } +\sqrt { ty } } \) = t1/2 f(x,y), \(\forall \) x,y,t\(\ge \)0
இங்கு f படி \(\frac { 1 }{ 2 } \) உடைய சமபடித்தான சார்பாகும். எனவே, ஆய்லரின் தேற்றப்படி
\(x\frac { \partial f }{ \partial x } +y\frac { \partial f }{ \partial y } =\frac { 1 }{ 2 } f(x,y)\).
தற்போது f = sin u எனப் பிரதியிட,
\(x\frac { \partial (sinu) }{ \partial x } +y\frac { \partial (sinu) }{ \partial y } =\frac { 1 }{ 2 } \sin\ u\)
\(x\ \cos u\frac { \partial u }{ \partial x } +y\ \cos u\frac { \partial u }{ \partial x } =\frac { 1 }{ 2 } \sin\ u\)
இருபுறமும் cos u ஆல் வகுக்க
\(x\frac { \partial u }{ \partial x } +y\frac { \partial u }{ \partial y } =\frac { 1 }{ 2 } \tan\ u\)
46.
கொடுக்கப்பட்ட சமன்பாடு சமபடித்தான சமன்பாடாகும் என்பது நமக்குத் தெரியும். ஆகவே, கொடுக்கப்பட்ட சமன்பாட்டை \(\frac { dy }{ dx } =\frac { 3y }{ 2x } -\frac { x }{ 2y } \) என எழுதலாம்.
y = vx எனில், v + x \(\frac { dv }{ dx } =\frac { 3v }{ 2 } -\frac { 1 }{ 2v } \) அல்லது x \(\frac { dv }{ dx } =\frac { { v }^{ 2 }-1 }{ 2v } \).
மாறிகளைப் பிரித்து எழுத \(\frac { 2vdv }{ { v }^{ 2 }-1 } =\frac { dx }{ x } \) எனப் பெறுகிறோம்.
இருபுறமும் தொகையிட log, \(\left| { v }^{ 2 }-1 \right| =log\left| x \right| +log\left| c \right| ,\)
எனவே, \(\left| { v }^{ 2 }-1 \right| =\left| Cx \right| \) இங்கு C என்பது எதேச்சை மாறிலி v க்குப் பதிலாக \(\frac { y }{ x } \) எனப் பிரதியிட, நமக்குக் கிடைப்பது
\(\left| \frac { { y }^{ 2 } }{ { x }^{ 2 } } -1 \right| =\left| Cx \right| .\)
எனவே, \(\left| { y }^{ 2 }-{ x }^{ 2 } \right| =\left| C{ x }^{ 3 } \right| \)
ஆகவே, \({ y }^{ 2 }-{ x }^{ 2 }=\pm C{ x }^{ 3 }\) (அல்லது) y2 - x2 = kx3
இதுவே கொடுக்கப்பட்ட வகைக்கெழுச் சமன்பாட்டின் பொதுத் தீர்வாகும்.
47.
கொடுக்கப்பட்ட சமன்பாடு (1 + x3)dy - x3 ydx = 0.
இச்சமன்பாட்டை \(\frac { d }{ y } -\frac { { x }^{ 2 } }{ { 1+x }^{ 3 } } dx=0\) என எழுதலாம்.
இருபுறமும் தொகையிடக் கிடைப்பது log y \(-\frac { 1 }{ 3 } log(1+{ x }^{ 3 })={ c }_{ 1 }\)
⇒ 3 log y - log (1 + x3) = log C.
3 log y = log (1 + x3) + log C,
அதாவது, log y3 = logC(1 + x3).
எனவே, கொடுக்கப்பட்ட வகைக்கெழுச் சமன்பாட்டின் பொதுத் தீர்வு y3 = C(1 + x3).
x = 1 y = 2 , எனும்போது, 23 = C(1 + 1) ⇒ C = 4
எனவே, கொடுக்கப்பட்ட வகைக்கெழுச் சமன்பாட்டின் குறிப்பிட்ட தீர்வு y3 = 4(1 + x3).
48.
f , g : (a,b)→R என்பன வகையிடத்தக்க சார்புகள் என்பதுடன் h(x) = f (x)g(x) என்க. h என்பது வகையிடத்தக்க சார்புகளின் பெருக்கல் என்பதால் (a,b)இல் h -ம் வகையிடத்தக்கது. எனவே வரையறைப்படி dh = h'(x)dx .
தற்போது பெருக்கல் விதியைப் பயன்படுத்தி h'(x) = f (x)g'(x) + f '(x)g(x) .
இதனால் dh = h'(x)dx = ( f (x)g'(x) + f '(x)g(x))dx = f (x)g'(x)dx + f '(x)g(x)dx
= f (x)dg + g(x)df = fdg + gdf
49.
மேற்பரப்பானது 16\(\pi \) செ.மீ2 குறைகிறது 6.1%
50.
P(x) = \(x^{4}-6x^{3}-11x^{2}+24x+28\) என்ற பல்லுறுப்புக் கோவைக்கு \(\alpha\) = 2, \(\beta\) = 7 எனக்கொண்டு
எடுத்துக்காட்டு -ன் முடிவைப் பயன்படுத்த வேண்டும்.
இப்பொழுது, \(\frac{P'(x)}{2}=2x^{3}-9x^{2}-11x+12=Qx\), (என்க).
இதிலிருந்து Q(x) என்ற பல்லுறுப்புக் கோவையின் ஒரு பூச்சியம் (2,7) என்ற இடைவெளியில் அமையும் என நிறுவலாம்.
சரிபார்த்தல் ,
Q(2) = 16 - 36 - 22 + 12 = 28 - 58 = -30 < 0
Q(7) = 686 - 441 - 77 +12 = 698 - 518 = 180 > 0
இதிலிருந்து Q(x) என்ற பல்லுறுப்புக் கோவையின் ஒரு பூச்சியம் (2,7) என்ற இடைவெளியில் அமையும் என்கிறோம்.
51.
கொடுக்கப்பட்ட சமன்பாடு என்பது x2 = -36y ...(1)
குவியம் (0, -9) = (0, -9)மற்றும் செவ்வகலம் என்பது (1)ல் y = -9

நமக்கு கிடைப்பது
\({ x }^{ 2 }=-36(-9)\Rightarrow \sqrt { 36(9) } =6(3)=18\)
\(\Delta AOB\) ன் பரப்பு 2(\(\Delta OSB\) ன் பரப்பு )
= \(2\left( \cfrac { 1 }{ 2 } \times b\times h \right) =2\left( \cfrac { 1 }{ 2 } \times 18\times 9 \right) \)
[\(\therefore\) b = SB = 18, h = OS = 9]
52.
கொடுக்கப்பட்ட \(\vec { a } +\vec { b } +\vec { c } =0\)
\(\vec { a } +\vec { b } =-\vec { c } \)
\(\vec { a } \) வைக் கொண்டு இருபுறமும் வெக்டர் பெருக்கல் எடுக்க கிடைப்பது.
\(\vec { a } \times (\vec { b } +\vec { c } )=-(\vec { a } \times \vec { b } )\)
\(\vec { a } \times \vec { a } +\vec { a } \times \vec { b } =\vec { c } \times \vec { a } \)
\([\because (-\vec { a } \times \vec { c } )=\vec { c } \times \vec { a } ]\)
⇒ \(\vec { a } \times \vec { b } =\vec { c } \times \vec { a } \)\((\because \vec { a } \times \vec { a } =\vec { 0 } )\) ...(2)
\(\vec { b } \) மையக் கொண்டு இருபுறமும் வெக்டர் பெருக்கல் எடுக்க கிடைப்பது.
\(\vec { b } \times (\vec { a } \times \vec { c } )=\vec { b } \times (-\vec { c } )\)
\(\vec { b } \times \vec { a } +\vec { b } \times \vec { b } =-\vec { b } \times \vec { c } -\vec { a } \times \vec { b } =-\vec { a } \times \vec { b } =-\vec { b } \times \vec { c } \)
\(\vec { a } \times \vec { b } =\vec { b } \times \vec { c } \) ...(3)
(2) மற்றும் (3) லிருந்து கிடைப்பது
\(\vec { a } \times \vec { b } =\vec { b } \times \vec { c } =\vec { c } \times \vec { a } \)
53.
\(\tan\left[ \frac { 1 }{ 2 } { \sin }^{ -1 }\left( \frac { 2a }{ 1+{ a }^{ 2 } } \right) +\frac { 1 }{ 2 } { \cos }^{ -1 }\left( \frac { 1-{ a }^{ 2 } }{ 1+{ a }^{ 2 } } \right) \right] \)
a=tan\(\theta\) என்க.
இனி \(\tan\left[ \frac { 1 }{ 2 } { \sin }^{ -1 }\left( \frac { 2a }{ 1+{ a }^{ 2 } } \right) +\frac { 1 }{ 2 } { \cos }^{ -1 }\left( \frac { 1-{ a }^{ 2 } }{ 1+{ a }^{ 2 } } \right) \right] =\tan\left[ \frac { 1 }{ 2 } { \sin }^{ -1 }\left( \frac { 2\tan\theta }{ 1+{ \tan }^{ 2 }\theta } \right) +\frac { 1 }{ 2 } { \cos }^{ -1 }\left( \frac { 1-{ \tan }^{ 2 }\theta }{ 1+{ \tan }^{ 2 }\theta } \right) \right] \)
\(=\tan\left[ \frac { 1 }{ 2 } { \sin }^{ -1 }(\sin2\theta )+\frac { 1 }{ 2 } { \cos }^{ 1 }(\cos 2\theta ) \right] =\tan[2\theta ]=\frac { 2\tan\theta }{ 1-{ \tan }^{ 2 }\theta } =\frac { 2a }{ 1-{ a }^{ 2 } } \)
54.
i) (x12 + y12)(x22 + y22)(x32 + y32).........(xn2 + yn2) = a2 + b2.
இருபுறமும் மட்டு மதிப்பு காண கிடைப்பது
⇒ l(x1 + iy1) (x2 + iy2) (xn + iyn)| = |a + ib|
⇒ lx1 + iy1| |x2 + iy2| ... |xn + iyn| = |a + ib|
\(\Rightarrow \sqrt { { { x }_{ 1 } }^{ 2 }+{ { y }_{ 1 } }^{ 2 } } \sqrt { { { x }_{ 2 } }^{ 2 }+{ { y }_{ 2 } }^{ 2 } } ...\sqrt { { { x }_{ n } }^{ 2 }+{ { y }_{ n } }^{ 2 } } \)
\(\Rightarrow \sqrt { { a }^{ 2 }+{ b }^{ 2 } } \)
இருபுறமும் வர்க்கப்படுத்த கிடைப்பது.
(x12 + y12)(x22 + y22)(x32 + y32).........(xn2 + yn2) = a2 + b2.
எனவே நிரூபிக்கப்பட்டது.
ii) (x1+ iy1) (x2 + iy2) ... (xn + iyn) = a + ib
arg ((x1+ iy1) (x2 + iy2) ... (xn + iyn)) = arg(a + ib)
⇒ arg (x1+ iy1) + arg (x2 + iy2) + ... + arg (xn + iyn)) = arg(a + ib)
(∵ arg (z1z2...z3) = arg z1 + arg z2 + ... + arg zn)
\(\Rightarrow { tan }^{ -1 }\left( \frac { { y }_{ 1 } }{ { x }_{ 2 } } \right) +{ tan }^{ -1 }\left( \frac { { y }_{ 2 } }{ { x }_{ 2 } } \right) +...+{ tan }^{ -1 }\left( \frac { { y }_{ n } }{ { x }_{ n } } \right) \)
\(={ tan }^{ -1 }\left( \frac { { b } }{ a } \right) +2k\pi \)
\(\Rightarrow \sum _{ r=1 }^{ n }{ tan\left( \frac { { y }_{ r } }{ { x }_{ r } } \right) } ={ tan }^{ -1 }\left( \frac { b }{ a } \right) +2k\pi, k\epsilon Z\)
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards