12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 06/12/2019
கதிர்வீச்சு மற்றும் பருப்பொருளின் இருமைப்பண்பு - Dual Nature of Radiation and Matter
12ஆம் வகுப்பு Physics / இயற்பியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Physics / இயற்பியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Physics Test1.
A, B மற்றும் C என்னும் உலோகங்களின் வெளியேற்று ஆற்றல்கள் முறையே 1.92 eV, 2.0 eV மற்றும் 5.0 eV ஆகும். 4100 Å அலைநீளம் கொண்ட ஒளி படும் போது, ஒளிஎலக்ட்ரான்களை உமிழும் உலோகம் / உலோகங்கள் ______.
A மட்டும்
A மற்றும் B
அனைத்து உமிழும்
ஏதுமில்லை
2.
சூரிய ஒளியின் சராசரி அலைநீளம் 550 nm மற்றும் அதன் சராசரி திறன் 3.8 × 1026 W எனில், சூரியனில் இருந்து ஒரு வினாடி நேரத்தில் உமிழப்படும் ஃபோட்டான்களின் தோராயமான எண்ணிக்கையானது ____.
1045
1042
1054
1051
3.
520 nm அலைநீளம் கொண்ட ஒரு ஒளி மூலம் ஒரு வினாடிக்கு 1.04 × 1015 ஃபோட்டான்களை வெளிவிடுகிறது. 460 nm அலைநீளம் கொண்ட இரண்டாவது ஒளி மூலம் ஒரு வினாடிக்கு 1.38 × 1015 ஃபோட்டான்களை வெளிவிடுகிறது. இரண்டாவது மூலத்தின் திறனுக்கும் முதல் மூலத்தின் திறனுக்கும் இடையே உள்ள விகிதம் _______
1.00
1.02
1.5
0.98
4.
330 nm அலைநீளம் கொண்ட ஒளியானது 3.55 eV வெளியேற்று ஆற்றல் கொண்ட உலோகத்தின் மீது படும் போது, உமிழப்படும் எலக்ட்ரானுடன் தொடர்புடைய அலையின் அலைநீளமானது (h = 6.6 × 10–34 Js எனக் கொள்க)
< 2.75 × 10-9 m
≥ 2.75 × 10-9 m
≤ 2.75 × 10-12 m
< 2.75 × 10-10 m
5.
λ அலைநீளமுள்ள கதிர்வீச்சினால் ஒரு உலோகப் பரப்பு ஒளியூட்டப்படும் போது, அதன் நிறுத்து மின்னழுத்தம் V ஆகும். 2λ அலைநீளமுள்ள ஒளியினால் அதே பரப்பு ஒளியூட்டப்பட்டால், நிறுத்து மின்னழுத்தம் \(\frac {V}{4}\) ஆகும் . எனில் அந்த உலோகப்பரப்பிற்கான பயன்தொடக்க அலைநீளம் ________.
4λ
5λ
\(\frac{5}{2}\) λ
3 λ
6.
பயன் தொடக்க அதிர்வெண் என்பதை எவ்வாறு வரையறுப்பாய்?
7.
படுகதிரின் ஒளிச்செறிவைப் பொருத்து ஒளிமின்னோட்டம் எவ்வாறு மாறுபடுகிறது?
8.
ஒளிமின் விளைவு என்றால் என்ன?
9.
ஒரு உலோகத்தின் ஒளிமின் வெளியேற்று ஆற்றல் என்பதை வரையறு. அதன் அலகைத் தருக.
10.
உலோகங்களில் கட்டுறா எலக்ட்ரான்கள் ஏன் அதிக எண்ணிக்கையில் உள்ளன?
11.
எலக்ட்ரான் மற்றும் ஆல்ஃபா துகள் ஆகிய இரண்டும் சமமான இயக்க ஆற்றலைப் பெற்றுள்ளன எனில், அவற்றுடன் தொடர்புடைய டி ப்ராய் அலைநீளங்கள் எவ்வாறு தொடர்பு படுத்தப்படுகின்றன?
12.
எலக்ட்ரான் அலை இயல்பை விளக்கும் சோதனை ஒன்றினைக் குறிப்பிடுக. எலக்ட்ரான் கற்றை பயன்படுத்தும் இச்சோதனையில் எந்த நிகழ்வு உற்று நோக்கப்படுகிறது?
13.
டி ப்ராய் கருதுகோளினைக் கூறுக.
14.
ஒளி மின்கலம் என்றால் என்ன? ஒளி மின்கலத்தின் பல்வேறு வகைகளைக் குறிப்பிடுக.
15.
எலக்ட்ரானின் அலை இயல்பினை விவரிக்கும் டேவிசன் – ஜெர்மர் சோதனையை சுருக்கமாக விவரி.
16.
எலக்ட்ரான் நுண்ணோக்கியின் தத்துவம் மற்றும் வேலை செய்யும் விதத்தை சுருக்கமாக விளக்குக.
17.
எலக்ட்ரானின் டி ப்ராய் அலைநீளத்திற்கான சமன்பாட்டினைப் பெறுக.
18.
1.
\(E = \frac{12400}{4100} = 3.02eV\)
2.
\(p = \frac{n}{t} = \frac{hc}{\lambda}\\ \frac{n}{t} = \frac{P\lambda}{hc} = \frac{3.8\times10^26\times 550\times10^{-9}}{6.6 \times 10{-34}\times 3 \times 10^{8}}\\ = 1 \times10^{45}\)
3.
\(P = \frac{E}{t}=\frac{nhv}{t}=\frac{nhc}{\lambda t}\\ \frac{P_1}{P_2}= \frac{1.04\times10^15\times1240}{520} \times \frac{460}{1.38 \times10^15\times1240}\)
= 1.5
4.
\(E = hv = \frac{hc}{\lambda}=\frac{12400}{3300 }\\ = 3.75 eV\\ K.E = 3.75 - 3.55\\ = 0.2ev\\ \lambda = \frac{12.27}{\sqrt V}\\ = \frac{12.27}{\sqrt 0.2} \\ \frac{12.27}{0.44}\\ 27.88 \\ = 2.778 \times 10^-9m\)
5.
\(\frac{hc}{\lambda} = \pi + V\\ \frac{hc}{2\lambda} = \pi+\frac{V}{4}\\ \times 4\\ \frac{2hc}{\lambda} = 4\pi +V\\ 3 \Rightarrow (-)1\\ \frac{hc}{\lambda} = 3\pi\\ \pi = \frac{hc}{3\lambda}\\ \frac{hc}{\lambda_0} = \frac {hc}{3\lambda}\\ \lambda_0 = 3 \lambda\)
6.
கொடுக்கப்படும் உலோகப்பரப்பிற்கு, படுகதிரின் அதிர்வெண் ஒரு குறிப்பிட்ட அதிர்வெண்ணை விட அதிகமாக இருந்தால் மட்டுமே ஒளி எலக்ட்ரான் உமிழ்வு ஏற்படும். இந்தச் சிறும அதிர்வெண், பயன் தொடக்க அதிர்வெண் எனப்படும்.
7.
ஒளிமின்னோட்டமானது, அதாவது ஒரு வினாடியில் உமிழப்படும் எலக்ட்ரான்களின் எண்ணிக்கை படுகதிரின் செறிவிற்கு நேர்த்தகவில் அமையும்.
8.
உலோகத்தட்டு ஒன்றின் மீது ஒளி அல்லது தகுந்த அலைநீளம் (அல்லது அதிர்வெண்) கொண்ட மின்காந்த கதிர்வீச்சு படும் போது, அதிலிருந்து எலக்ட்ரான்கள் உமிழப்படுகின்றன. இதுவே ஒளிமின் விளைவு எனப்படும்.
9.
உலோகத்தின் பரப்பிலிருந்து எலக்ட்ரானை வெளியேற்றத் தேவைப்படும் சிறும ஆற்றல் உலோகத்தின் வெளியேற்று ஆற்றல் எனப்படும். இதன் அலகு எலக்ட்ரான் வோல்ட் (eV ஆகும்)
10.
உலோகங்களில், ஒரு அணுவில் வெளிமட்டத்திலுள்ள எலக்ட்ரான்கள் அணுக்கருக்களோடு தளர்வாக பிணைக்கப்பட்டுள்ளது. அறை வெப்பநிலைகளில் அதிக அளவிலான கட்டுறா எலக்ட்ரான்கள் உலோகத்தின் உள்ளே அதன் பரப்பை விட்டு வெளியேறாமல் வெவ்வேறு திசைகளில் இயங்கிக் கொண்டிருப்பதால் உலோகங்களில் கட்டுறா எலக்ட்ரான்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளன.
11.
இயக்க ஆற்றல் k உடன் தொடர்புடைய டி ப்ராய் அலைநீளம் \(\lambda =\frac { h }{ \sqrt { 2mk } } \) என நாம் அறிவோம், இதில் m என்பது துகளின் நிறை மற்றும் h என்பது ப்ளாங்க் மாறிலி. me மற்றும் ma என்பது முறையே எலக்ட்ரான் மற்றும் ஆல்ஃபா துகள்களின் நிறை எனில்,
\({ \lambda }_{ e }=\cfrac { h }{ \sqrt { { 2m }_{ e }{ k }_{ e } } } \)
\({ \lambda }_{ \alpha }=\cfrac { h }{ \sqrt { 2m_{ \alpha }{ k }_{ \alpha } } } .{ k }_{ e }={ k }_{ \alpha }\) என்பதால்
\(\cfrac { { \lambda }_{ e } }{ { \lambda }_{ \alpha } } =\sqrt { \cfrac { { m }_{ \alpha } }{ { m }_{ e } } } \)
\({ m }_{ \alpha }>{ m }_{ e }\) என்பதால் \( { \lambda }_{ e }>{ \lambda }_{ \alpha }\) ஆகும்.
12.
டேவிசன் - ஜெர்மர் சோதனை :
படிகமாக உள்ள திண்மங்கள் மீது படும் எலக்ட்ரான் கற்றைகள் விளிம்பு விளைவு அடையும் நிகழ்வு உற்று நோக்கப்படுகிறது. பருப்பொருள் அலைகளுக்கு திண்மப்படிகம் முப்பரிமாண விளிம்பு விளைவு கீற்றணியாக செயல்படுவதால், எலக்ட்ரான் கற்றைகள் விளிம்பு விளைவு அடைந்து குறிப்பிட்ட திசையில் செல்கின்றன.
13.
இயக்கத்தில் உள்ள அனைத்து பருப்பொருள் துகள்களும் அதாவது, எலக்ட்ரான், புரோட்டான்கள் மற்றும் நியூட்ரான்கள் ஒளி போன்ற கதிர்வீச்சு சில நேரங்களில் துகள்களாகச் செயல்படுகிறது. எனில் சில நேரங்களில் அலைகள் போன்று செயல்படும். இந்த அலைகள் டி ப்ராய் அலைகள் அல்லது பருப்பொருள் அலைகள் எனப்படும்.
14.
ஒளி ஆற்றலை மின் ஆற்றலாக மாற்றும் சாதனம் ஒளிமின்கலம் ஆகும். இது ஒளி மின் விளைவு தத்துவத்தின்படி செயல்படுகிறது
வகைகள்:
1. ஒளி உமிழ்வு மின்கலம்
2. ஒளி போல்டா மின்கலம்
3. ஒளி கடத்தும் மின்கலம்
15.
படிகமாக உள்ள திண்மங்களின் எலக்ட்ரான் கற்றைகள் விளிம்பு விளைவு அடைவதை சோதனை விளக்குகிறது.
அமைப்பு
1. குறைந்த மின்னழுத்த அடுக்கு மூலம் சூடேற்றப்படும் மின்னிழையிலிருந்து வெப்ப அயனி உமிழ்வு மூலம் எலக்ட்ரான்கள் உமிழப்படுகின்றன.
2. உயர் மின்னழுத்த அடுக்கு மூலம் கொடுக்கப்படும் மின்னழுத்த வேறுபாட்டினால், முடுக்கப்படுகின்றன.
3. இரு மெல்லிய அலுமினியத் தகடுகள் வழியே செல்லும் போது இணைக் கற்றையாக மாறி நிக்கல் படிகத்தின் மீது விழுகிறது.
16.
தத்துவம்:
துகள்களது அலை இயல்பின் நேரடி பயன்பாடாக இது அமைகிறது. எலக்ட்ரானின் அலை இயல்பினைப் பயன்படுத்தி, நுண்ணோக்கி ஒன்று வடிவமைக்கப்படுகிறது. இந்த நுண்ணோக்கி எலக்ட்ரான் நுண்ணோக்கி எனப்படும். ஒரு நுண்ணோக்கியின் பகுதிறன் ஆனது உருப்பெருக்க வேண்டிய பொருளின் மீது படும் ஒளியின் அலைநீளத்திற்கு எதிர்தகவில் அமையும். எனவே குறைந்த அலைநீளம் கொண்ட அலைகளைப் பயன்படுத்தும்போது அதிக பகுதிறனும் அதிக உருப்பெருக்கமும் கிடைக்கின்றன. எலக்ட்ரானின் டி ப்ராய் அலைநீளம் ஆனது ஒளியியல் நுண்ணோக்கியில் பயன்படும் கண்ணுறு ஒளியின் அலைநீளத்தை விட மிகக் குறைவு (சில ஆயிரங்கள் குறைவு) ஆகும். இதன் விளைவாக, எலக்ட்ரான்களின் டி ப்ராய் அலைகளைப் பயன்படுத்தும் நுண்ணோக்கிகளின் பகுதிறன் ஆனது ஒளியியல் நுண்ணோக்கிகளை விட மிக அதிகமாகும். 2,00,000 மடங்கு உருப்பெருக்கத்தை அளிக்கும் எலக்ட்ரான் நுண்ணோக்கிகள், ஆராய்ச்சிக்கூடங்களில் பொதுவாகப் பயன்படுத்தப்படுகின்றன.
வேலை செய்யும் விதம்:
ஒளியியல் நுண்ணோக்கி மற்றும் எலக்ட்ரான் நுண்ணோக்கி ஆகியவற்றின் அமைப்பு மற்றும் வேலை செய்யும் விதம் ஒரே மாதிரியாக அமையும். ஆனால் சிறு வேறுபாடு: எலக்ட்ரான் கற்றையைக் குவிப்பதற்கு நிலைமின்புல அல்லது காந்தப்புல லென்சுகள் பயன்படுத்தப்படுகின்றன. தகுந்த வகையில் அமைக்கப்பட்ட மின்புலம் அல்லது காந்தப்புலம் வழியாகச் செல்லும் எலக்ட்ரான் கற்றையை விரிதலுக்கோ குறுகுதலுக்கோ உட்படுத்த முடியும். இதன் மூலம், எலக்ட்ரான் கற்றையைக் குவிப்பது செய்யப்படுகிறது. எலக்ட்ரான் மூலத்திலிருந்து உமிழப்படும் எலக்ட்ரான்கள் உயர் மின்னழுத்த வேறுபாட்டினால் முடுக்கப்படுகின்றன. காந்தப்புல குவிக்கும் லென்சு (magnetic condenser lens) மூலம் எலக்ட்ரான் கற்றை இணைக் கற்றையாக மாற்றப்படுகிறது. இந்தக் கற்றை உருப்பெருக்கம் செய்ய வேண்டிய பொருள் வழியாகச் செல்லும்போது, அதன் பிம்பத்தைத் தாங்கிச் செல்கிறது.
காந்தப்புல பொருளருகு லென்சு (magnetic objective lens) மற்றும் காந்தப்புல வீழ்த்தும் லென்சு (magnetic projector lens) அமைப்புகளின் உதவியுடன் உருப்பெருக்கப்பட்ட பிம்பம் திரையில் தோற்றுவிக்கப்படுகிறது. எலக்ட்ரான் நுண்ணோக்கியானது பெரும்பாலும் அனைத்து அறிவியல் துறைகளிலும் பயன்படுகிறது.
17.
தத்துவம்:
m நிறை கொண்ட எலக்ட்ரான் ஆனது V வோல்ட் மின்னழுத்த வேறுபாட்டினால் முடுக்கப்படுகிறது. எலக்ட்ரான் பெறுகின்ற இயக்க ஆற்றல்,
\(\frac { 1 }{ 2 } { mv }^{ 2 }=ev\)
இதில் என்பது எலக்ட்ரானின் திசைவேகம், \(v=\sqrt { \frac { 2eV }{ m } } \)
எலக்ட்ரானின் டி ப்ராய் அலைநீளம், \(\lambda =\frac { h }{ mV } =\frac { h }{ \sqrt { 2meV } } \)
தெரிந்த மதிப்புகளைப் பிரதியிட,
\(\lambda =\cfrac { 6.626\times { 10 }^{ -34 } }{ \sqrt { 2V\times 1.6\times { 10 }^{ -19 }\times 9.11\times { 10 }^{ -31 } } } =\cfrac { 12.27\times { 10 }^{ -10 } }{ \sqrt { V } } ,\lambda =\cfrac { 12.27 }{ \sqrt { V } } \mathring { A } \)
eV = K, என்பது எலக்ட்ரானின் இயக்க ஆற்றல் என்பதால் எலக்ட்ரானின் அலைநீளம் \(\lambda =\frac { h }{ \sqrt { 2mK } }\) எனவும் எழுதலாம்.
18.
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards