12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 06/12/2019
மின்காந்தத்தூண்டலும் மாறுதிசை மின்னோட்டமும் - Electromagnetic Induction And Alternating Current
12ஆம் வகுப்பு Physics / இயற்பியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Physics / இயற்பியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Physics Test1.
ஒரு சட்ட காந்தத்தை கம்பிச்சுருளுக்கு அருகே (a) வேகமாக (b) மெதுவாக கொண்டு வரும் போது தூண்டப்பட்ட மின்னியக்கு விசை ______
(a) ல் அதிகம்
(a) ல் குறைவு
(a) மற்றும் (b) ல் சமம்
ஆரத்தை பொருத்து
2.
பாயம் மாற்றம் 2 x 10-2Wb மற்றும் மின்னோட்டம் 0.01 A எனும் போது சுருள்களின் உருவாகும் பரிமாற்று மின்தூண்டல் எண் M = _______
2H
3H
1/2H
0
3.
ஒரு LCR சுற்றில் C = 10μF மற்றும் ω = 1000 S-1 எனில் மின்னோட்டம் பெருமமாக உள்ள போது மின்தூண்டல் எண்ணின் L பெரும மதிப்பு _____
1 mH
10 mH
கணக்கிடமுடியாது
100 mH
4.
AC சுற்றில் 30 Vrms ஆனது 10 Ω மின்தடை வழியே பாய்ந்தால் திறன் இழப்பு _______
90 \(\sqrt { 2 } \) w
90 W
45 \(\sqrt { 2 } \) W
45 W
5.
மின்னியக்கு விசை என்றால் என்ன?
விசை
மின்னழுத்தம்
மின்னோட்டம்
பாயம்
6.
அருகருகே உள்ள இரு சுருள்களின் பரிமாற்று மின்தூண்டல் எண் 1.5H ஒரு சுருளில் மின்னோட்டம் 0 லிருந்து 20A க்கு 0.55 வினாடியில் மாறினால் மற்றொரு சுருளில் ஏற்படும் பாய மாற்றம் எவ்வளவு?
7.
ஒரு அமைப்பின் மின்காந்த அலைகள் தணிவுறு அலைவுகளை கொடுக்கக் காரணம் என்ன?
8.
மாறுதிசை மின்னழுத்த வேறுபாடு என்றால் என்ன?
9.
மின்மாற்றியின் பயனுறு திறன் - வரையறு.
10.
பரிமாற்று மின்தூண்டல் எண்ணின் அலகை வரையறு?
11.
மின்னியக்கு விசையைப் பொறுத்து தன்மின்தூண்டல் எண்ணின் அலகை வரையறு.
12.
ஒரு நீண்ட வரிச்சுருள் 15 சுற்றுகள் / செ.மீ2 பரப்புள்ள சுற்று (loop) உள்ளது. வரிச்சுருளில் 0.1 வினாடியில் மின்னோட்டம் 2.0 A லிருந்து 4.0 A க்கு மாறினால், மின்னோட்டம் மாறும் போது தூண்டப்பட்ட மின்னியக்கு விசை எவ்வளவு?
13.
R = 20 ᘯ, L = 1.5H மற்றும் c = 35μF தொடராக இணைக்கப்பட RLC சுற்றுடன் மாறுபடும் அதிர்வெண் 200 V AC மூலத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. கொடுக்கப்படும் அதிர்வெண் சுற்றின் அதிர்வெண்ணுக்குச் சமமாகும் போது ஒரு முழுச்சுற்றில் மின்சுற்று மாற்றப்படும் சராசரி திறன் என்ன?
14.
மின் மற்றும் இயந்திர அளவுகளுக்கிடையேயான ஒப்புமைகளைக் கூறு.
15.
திறன் காரணிகளுக்கான எடுத்துக்காட்டுகளை கூறு.
16.
மாறுதிசை மின்னோட்டத்தின் சராசரி மதிப்பிற்கான கோவையை பெறுக.
17.
சமஅளவு மற்றும் நிறை கொண்ட கோள வடிவ கல் மற்றும் இரும்பு குண்டை ஒரே நேரத்தில் விழச் செய்தால் எது முதலில் புவியை வந்தடையும்? காரணம் கூறு.
18.
மின்காந்த தூண்டலின் முக்கியத்துவத்தைக் கூறு.
19.
மின்தேக்கி மட்டும் உள்ள AC சுற்றில் மின்னோட்டத்திற்கான கோவையைப் பெறுக. மின்தேக்கியின் மின்மறுப்புக்கான கோவையை பெறுக.
1.
(a)
(a) ல் அதிகம்
2.
(a)
2H
3.
(d)
100 mH
4.
(b)
90 W
5.
(b)
மின்னழுத்தம்
6.
M = 1.5H
di = 20 - 0 = 20A
dt = 0.5S
தூண்டப்பட்ட மின்னியக்கு விசை \(e=\frac { d\phi }{ dt } \) .........(1)
\(e=M\frac { dI }{ dt } \) .........(2)
(1) மற்றும் (2) லிருந்து \(\frac { d\phi }{ dt } =M\frac { dI }{ dt } \)
dΦ = 1.5 x 20
dΦ = 30 wb
7.
நடைமுறையில் ஜூல் வெப்பமாதல் மற்றும் மின்காந்த அலைகளின் கதிர்வீச்சு ஆகியவை ஆற்றலை குறைப்பதால் தணிவுறு அலைவுகளாகின்றன.
8.
சீரான கால இடைவெளியில் முனைவுத் தன்மை மாறுகின்ற மின்னழுத்த வேறுபாடு மாறுதிசை மின்னழுத்த வேறுபாடு ஆகும்.
9.
(i) வெளியீடு திறனுக்கும் உள்ளீடு திறனுக்கும் உள்ள தகவு மின்மாற்றியின் பயனுறு திறன் எனப்படும்.
(ii) பயனுறு திறன் வரம்பு 96-99%
10.
1A மின்னோட்டம் ஒரு கம்பிச்சுருளில் பாயும் போது மற்றொரு கம்பிச்சுருளில் ஓரலகு பாயத் தொடர்பை உருவாக்கினால் கம்பிச்சுருள்களுக்கிடையேயான பரிமாற்ற மின்தூண்டல் எண் ஒரு ஹென்றி ஆகும்.
11.
கம்பிச்சுருளில் மின்னோட்டம் மாறும் வீதம் 1 As-1 எனும் போது கம்பிச்சுருளில் தூண்டப்படும் எதிர்மின்னியக்கு விசை 1V எனில் அக்கம்பிச்சுருளின் தன்மின்தூண்டல் எண் ஒரு ஹென்றி ஆகும்.
12.
N = 15 சுற்றுகள்/செ.மீ = 1500 சுற்று /மீ
∴ n = 1500
சிறு சுற்றின் (loop) பரப்பு A = 2.0 cm2
= 2 x 10-4m2
di = 4 - 2 = 2A
dt = 0.1s
தூண்டப்பட்ட மின்னியக்கு விசை \(\\ \\ \varepsilon =\frac { d\phi }{ dt } \)
\(\varepsilon =\frac { d }{ dt } (BA)\)
\(=A{ \mu }_{ o }n\frac { di }{ dt } \)
\(=2\times { 10 }^{ -4 }\times { 4\pi }\times { 10 }^{ -7 }\times 1500\times \frac { 2 }{ 0.1 }\ \)
= 7.54 x 10-6v
ε = -7.54 x 10-6v
13.
R = 20ᘯ L = 1.5H
C = 35μ F = 35 x 10-6 F, V = 200V
மின்மறுப்பு \(Z=\sqrt { { R }^{ 2 }{ +({ X }_{ L }-{ X }_{ C }) }^{ 2 } } \)
ஒத்திசைவில் \({ X }_{ L }-{ X }_{ C }\)
Z = R = 20ᘯ
\(I=\frac { V }{ Z } =\frac { 200 }{ 20 } =10A\)
சராசரித் திறன் Pav = I2R
Pav = 10 x 10 x 20 = 2000 W
14.
| மின் அமைப்பு | இயந்திர அமைப்பு | |
|---|---|---|
| 1 | மின்னூட்டம் q | இடப்பெயர்ச்சி x |
| 2 | மின்னூட்டம் \(i=\frac { dq }{ dt } \) | திசைவேகம் \(v=\frac { dx }{ dt } \) |
| 3 | மின்தூண்டல் எண் L | நிறை m |
| 4 | மின்தேக்குத்திறனின் தலைகீழி \(\frac { 1 }{ c } \) | விசை மாறிலி k |
| 5 | மின் ஆற்றல் = 1/2 \(\left( \frac { 1 }{ c } \right) { q }^{ 2 }\) | நிலை ஆற்றல் = 1/2 kx2 |
| 6 | காந்த ஆற்றல் = 1/2 Li2 | இயக்க ஆற்றல் = 1/2 mv2 |
| 7 | மின் காந்த ஆற்றல் U = 1/2 \(\left( \frac { 1 }{ c } \right) { q }^{ 2 }\) + 1/2 Li2 | இயந்திர ஆற்றல் E = 1/2 kx2 + 1/2 mv2 |
15.
(i) மின்தடை பண்புள்ள ஒரு சுற்றுக்கு திறன் காரணி = cos 0o = 1 V அல்லது i க்கு இடையே கட்ட கோணம் சுழி.
(ii) மின்தூண்டல் அல்லது மின்தேக்கி பண்புள்ள சுற்றுக்கு திறன் காரணி = cos (I π/2) =0 V அல்லது i க்கு கட்ட கோணம் I π / 2
(iii) R, L மற்றும் C ஐ மாறுபட்ட விகிதங்களில் கொண்டுள்ள ஒரு சுற்றுக்கு திறன் காரணி 0 முதல் 1 வரை இருக்கும்.
16.
மாறுதிசை மின்னோட்டத்தின் சராசரி மதிப்பு என்பது ஒரு நேர் அரைச்சுற்று (அ) எதிர் அரைச் சுற்றில் உள்ள மின்னோட்டத்தின் அனைத்து மதிப்புகளின் சராசரி ஆகும்.
i = Im sin ωt = Im sin θ
சிறுபட்டையின் பரப்பு = i d θ
நேர் அரைச்சுற்றின் பரப்பு = \(\int _{ o }^{ \pi }{ id\theta } =\int _{ o }^{ \pi }{ { I }_{ m } } sin\theta d\theta \)
\(={ I }_{ m }{ \left[ -cos\theta \right] }_{ o }^{ \pi }=-{ I }_{ m }[cos\pi -cos\theta ]\)
= 2 Im
மாறுதிசை மின்னோட்ட சராசரி மதிப்பு Iav = \(\frac { 2{ I }_{ m } }{ \pi } \)
Iav = -0.637 Im
17.
(i) உலோக குண்டை விட கல் முன்னதாக புவிப்பரப்பை வந்தடையும்.
(ii) புவிகாந்தப் புலத்தின் வழியே உலோக குண்டு விழும் போது சுழல் மின்னோட்டம் உருவாகி அதன் இயக்கத்தை எதிர்க்கும்.
(iii) கல்லில் சுழல் மின்னோட்டம் உருவாகாது. எனவே கல் முதலில் புவிப்பரப்பை அடையும்.
18.
(i) இன்றைய வாழ்வில் எல்லா இடங்களிலும் மின்காந்த தூண்டல் பயன்படுகிறது.
(ii) வீட்டு உபயோக சாதனம் முதல் பெரிய தொழிற்சாலை சாதனம் வரை செயல்பட மின்சாரம் தேவை.
(iii) கைபேசி முதல் கணினி, இணையம் வரை, மின்சார கிடார் முதல் செயற்கைக் கோள் தகவல் தொடர்பு வரை மின்காந்தத் தூண்டல் உதவுகிறது.
(iv) மின்காந்தத் தூண்டல் படி மின்னியற்றிகள் மற்றும் மின்மாற்றிகள் மூலம் மின்திறனுக்கான தேவை நிறைவு செய்யப்படுகிறது.
19.
1. c மின்தேக்கு திறன் கொண்ட மின்தேக்கி மாறுதிசை மின்னழுத்த மூலத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
V = VM sin ωt -----(1)
2. மின்தேக்கியின் மின்னியக்கு விசை q/c
3. கிர்க்காஃப் விதிப்படி V = \(\frac{q}{c}\) = 0
= cVM sin ωt
4. மின்னோட்டத்தின் மதிப்பு
\(i=\frac { dq }{ dt } =\frac { d }{ dt } ({ CV }_{ m }sin\omega t)\)
\(={ cV }_{ M }\frac { d }{ dt } (sin\quad \omega t)\)
\(={ cV }_{ M }\omega \ cos\ \omega t\)
\(i=\frac { { V }_{ M } }{ 1/c\omega } sin(\omega t+\frac { \pi }{ 2 } )\)
\(i={ I }_{ M }sin(\omega t+\frac { \pi }{ 2 } )\) ---(2)
மின்னோட்டத்தின் பெருமை மதிப்பு \({ I }_{ m }=\frac { { V }_{ M } }{ 1/\omega c } \)
மின்தேக்கி சுற்றில் மின்னோட்டம் மின்னழுத்த வேறுபாட்டை விட π/2 கட்டம் முன்னோக்கி உள்ளது.
மின்தேக்கியின் மின்மறுப்பு \({ X }_{ C }\ \ { I }_{ m }=\frac { { V }_{ M } }{ 1/\omega c } =\frac { { V }_{ M } }{ R } \)
மின்தேக்கி அளிக்கும் இந்த மின்தடை மின்தேக்கியின் மின்மறுப்பு (XC) ஆகும். அலகு ஓம்.
f = 0 எனில் \(=\frac { 1 }{ \omega c } =\frac { 1 }{ 2\pi fc } =\frac { 1 }{ 0 } =\infty \)
மின்தேக்கி நேர்த்திசை மின்னோட்டத்திற்கு முடிவிலா மின்மறுப்பை அளிக்கும்
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards