12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 18/09/2019
மின்காந்த அலைகள்
12ஆம் வகுப்பு Physics / இயற்பியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Physics / இயற்பியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Physics Test1.
பிரான்ஹோபர் வரிகள் என்றால் என்ன? சூரியனிலுள்ள தனிமங்களைக் கண்டறிவதில் அவை எவ்வாறு உதவுகின்றன?
2.
மின்காந்த அலையின் செறிவு என்ற கருத்தை விவரி.
3.
மின்காந்த அலைகள் என்றால் என்ன?
4.
இடப்பெயர்ச்சி மின்னோட்டம் என்றால் என்ன?
5.
மின்காந்த அலை நிறமாலை என்றால் என்ன?
6.
ஓசோன் படலத்தின் பயன்கள் யாது?
7.
ரேடியோ அலைகள் எவ்வாறு உருவாகிறது?
8.
மைக்ரோ அலையின் பயன்கள் யாவை?
9.
வெற்றிடத்தில் உருவாகும் சமசீர் மின்காந்த அலை ஒன்றின் பெரும காந்தப்புல வீச்சு \(B_{ o }=510nT\) எனில் அவற்றின் பெரும மின்புல வீச்சின் மதிப்பு யாது?
10.
மின்காந்த அலை ஒன்றின் மின்புலச் சமன்பாடு \({ E }_{ y }=30sin[2\times { 10 }^{ 11 }t+300\pi x]{ Vm }^{ -1 }\)
(a) அலைநீளம்
(b) காந்தப்புலச் சமன்பாடு ஆகியவற்றை கூறு
11.
அலையுறும் காந்தப்புல சமதள மின்காந்த அலையினை \({ B }_{ y }=(8\times { 10 }^{ -6 })sin[2\times { 10 }^{ 11 }t+300\pi x]T\)
(i) மின்காந்த அலையின் அலைநீளம்
(ii) அலையுறும் மின்புல சமன்பாட்டை தருவி
12.
UV கதிரின் பயன்கள் யாவை?
13.
UV - கதிரின் பயன்கள் யாவை?
14.
மின்காந்த அலையின் செறிவு யாது?
15.
சீரமைக்கப்பட்ட ஆம்பியரின் சுற்று விதியின் தொகையீட்டு வடிவத்தை எழுதுக.
1.
சூரியனிடமிருந்து கிடைக்கும் நிறமாலையில், அதிக எண்ணிக்கையில் கருங்கோடுகள் (வரி உட்கவர் நிறமாலை) காணப்படும். சூரிய நிறமாலையில் காணப்படும் இக்கருங்கோடுகளுக்கு பிரான்ஹோபர் வரிகள் என்று பெயர்.
பல்வேறு பொருட்களின் உட்கவர் நிறமாலைகளை சூரியன் நிறமாலையில் உள்ள பிரான்ஹோபர் வரிகளுடன் ஒப்பிட்டு சூரிய வளிமண்டலத்தில் காணப்படும் தனிமங்களைக் கண்டறியலாம்.
2.
மின்காந்த அலை பரவும் திசைக்கு செங்குத்தாக ஓரலகு நேரத்தில் ஓரலகு பரப்பு வழியே கடந்து செல்லும் ஆற்றலே மின்காந்த அலையின் செறிவு எனப்படும்.
I = ( u ) c
3.
மின்காந்த அலைகள் முடுக்குவிடப்பட்ட மின்துகள்களால் உருவாகும். இவை குறுக்கலைகள் ஆகும். இவை வெற்றிடத்தில் ஒளியின் வேகத்தில் செல்கின்றன.
4.
குறிப்பிட்ட ஒரு பகுதியில் நேரத்தைப் பொறுத்து மின்புலம் (அல்லது மின்பாயம்) மாற்றமடையும்போது, அதனால் உருவாகும் மின்னோட்டமே இடப்பெயர்ச்சி மின்னோட்டம் என வரையறுக்கப்படுகிறது.
எப்பொழுதெல்லாம் மின்புலத்தில் மாற்றம் ஏற்படுகின்றதோ, அப்பகுதிகள் இடம் பெறக் கூடிய மின்னோட்டமே, இடப்பெயர்ச்சி மின்னோட்டம் ஆகும்.
5.
அலைநீளம் அல்லது அதிர்வெண்ணின் அடிப்படையில் வரிசைக்கிரமமாக அமைக்கப்பட்ட மின்காந்த அலைகளின் தொகுப்பே மின்காந்த நிறமாலை
6.
சூரியனிலிருந்து வரும் புற ஊதாக் கதிர்களை புவி மீது படாமல் பாதுகாக்கும் படலமாக ஓசோன் படலம் விளங்குகிறது
7.
முடுக்கிவிடப்பட்ட எலக்ட்ரான்கள் கடத்தும் கம்பிகளில் அல்லது அலைவூட்டிகளினால் ரேடியோ அலைகளை உருவாகும்
8.
(i) ரேடார் கருவிகளில் விமானங்களை வழிநடத்த
(ii) சமையல் கலனில்
(iii) நீண்ட தூர கம்பியில்லா செய்தி தொடர்பில்
9.
\({ E }_{ 0 }=B_{ o };=3\times { 10 }^{ 8 }\times 510\times { 10 }^{ -9 }153N{ C }^{ -1 }\)
10.
(i) \(\lambda =\frac { 2\pi }{ 300\pi } =\frac { 1 }{ 150 } m=0.67cm\)
\((ii){ B }_{ o }=\frac { { E }_{ o } }{ c } =\frac { 30 }{ 3\times { 10 }^{ 8 } } ={ 10 }^{ -7 }T\)
\((iii){ B }_{ z }={ 10 }^{ -7 }sin\)\([2\times { 10 }^{ 11 }t+300\pi x]T \)
11.
\(B_{ y }=B_{ o }sin\left[ 2\pi \left( \frac { x }{ \lambda } +\frac { t }{ T } \right) \right] \)
கொடுக்கப்பட்ட சமன்பாடு \({ B }_{ y }=(8\times { 10 }^{ -6 })sin[2\times { 10 }^{ 11 }t+300\pi x]T\)
ஒப்பிடும் பொழுது,
\(\frac { 2\pi }{ \lambda } =300\pi ;{ B }_{ o }=8\times { 10 }^{ -6 }T\)
(i) \(\lambda =\frac { 2\pi }{ 300\pi } =\frac { 1 }{ 150 } m=0.67cm\)
\((ii){ E }_{ 0 }=c{ B }_{ o }=3\times { 10 }^{ 8 }\times 8\times { 10 }^{ -6 }=2400V{ m }^{ -1 }\)
மின்புலம் அலைபரவும்
x - அச்சுக்கு செங்குத்தாகவும், காந்தப்புலம் (y - அச்சில்) அமையும்
\({ E }_{ z }=2400sin[2\times { 10 }^{ 11 }t+300\pi x]{ Vm }^{ -1 }\)
12.
(i) பாக்டீரியாக்களை கொல்வதற்கும்
(ii) திருடர் அறிவிப்பு மணியில்
(iii) மறைந்துள்ள எழுத்துக்களை கண்டுணரவும்
(iv) அறுவை சிகிச்சை கருவிகளிலிருந்து நோய்க்கிருமிகளை நீக்குகிறது
(v) மூலக்கூறு அமைப்பை அறிய
(vi) விரல் ரேகையை கண்டறியவும்
13.
(i) சூரிய மின் கலன் வடிவில் செயற்கைக் கோளுக்கு ஆற்றல் அளிக்கிறது
(ii) உலர் பலஸ்களை உருகாக்க
(iii) பசுமை இல்லங்களில் வெப்பக் காப்பானாக
(iv) தசையில் ஏற்படும் வலியினை சரிசெய்ய
(v) தொலைக்காட்சி பெட்டியின் தொலைக்கட்டுப்பாட்டு உணர்வியலில்
(vi) இரவு நேரங்களில் புகைப்படம் எடுக்க
14.
மின்காந்த அலை பரவும் திசைக்கு செங்குத்தாக ஓரலகு பரப்பு வழியே கடந்து செல்லும் ஆற்றலே மின்காந்த அலையின் செறிவு என வரையறுக்கப்படுகிறது.
15.
\(\oint \vec{B} \cdot \overrightarrow{d l}=\mu_o I_{\text {}}\)மூடப்பட்ட + \( +\mu_o \varepsilon_o \frac{d}{d t} \int \vec{E} \cdot \overrightarrow{d A}\)
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards