12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 21/01/2020
12ஆம் வகுப்பு Physics / இயற்பியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Physics / இயற்பியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Physics Test1.
உலோகங்களில் கட்டுறா எலக்ட்ரான்கள் ஏன் அதிக எண்ணிக்கையில் உள்ளன?
2.
கதிரியக்கம் என்றால் என்ன?
3.
அயனியாக்க ஆற்றல் மற்றும் அயனியாக்க மின்னழுத்தம் வரையறுக்கவும்.
4.
ஒரு குறைக்கடத்தி பொருளில் எலக்ட்ரான் துளை இணை எவ்வாறு உருவாக்கப்படுகிறது?
5.
மைக்ரோ அலைகள் எவ்வாறு உருவாக்கப்படுகிறது?
6.
மைக்ரோ அலையின் பயன்கள் யாவை?
7.
மின்காந்த அலை ஒன்றின் மின்புலச் சமன்பாடு \({ E }_{ y }=30sin[2\times { 10 }^{ 11 }t+300\pi x]{ Vm }^{ -1 }\)
(a) அலைநீளம்
(b) காந்தப்புலச் சமன்பாடு ஆகியவற்றை கூறு
8.
மாறுதிசை மின்னழுத்த வேறுபாடு என்றால் என்ன?
9.
ஒரு மின் இருமுனையின் மின்னூட்டங்கள் 2 x 10-6 C மற்றும் -2 x 10-6 C இரண்டும் 1cm. தொலைவில் பிரித்து வைக்கப்பட்டுள்ளன. மின் இருமுனையால்
அ) அச்சுக்கோட்டில் அதன் மையத்திலிருந்து 1m தொலைவில் உள்ள புள்ளி
ஆ) நடுவரைக் கோட்டில் மையத்திலிருந்து 1m தொலைவில் உள்ள புள்ளி ஆகியவற்றில் ஏற்படும் மின்புலத்தைக் கணக்கிடுக.
10.
மின்னழுத்த வேறுபாட்டின் அலகினை வரையறு (அ) வோல்ட் வரையறு
11.
விடுதிறன் மற்றும் ஒப்புமை விடுதிறன் என்றால் என்ன? அவை எவ்வாறு தொடர்புபடுத்தப்பட்டுள்ளன ?
12.
வெப்ப தடையகம் [Thermistor] என்றால் என்ன?
13.
டேஞ்சன்ட் கால்வனோ மீட்டரில் 2 சுற்றுகள், 5 சுற்றுகள் மற்றும் 50 சுற்றுகள் கொண்ட வெவ்வேறு தடிமனுடைய கம்பிகள் எதற்காக பயன்படுகின்றன?
14.
காந்தமாக்கு புலம் என்றால் என்ன?
15.
மின்பாயம் – வரையறு.
16.
மின்புலம் – வரையறு.
17.
கூலூம் விதியின் வெக்டர் வடிவத்தை எழுதி அதிலுள்ள ஒவ்வொரு குறியீடும் எதைச் சுட்டுகின்றது என்பதைக் கூறுக.
18.
மின்னூட்டத்தின் குவாண்டமாக்கல் என்றால் என்ன?
19.
தளவிளைவுக் கோணம் என்றால் என்ன? தளவிளைவுக் கோணத்திற்கான சமன்பாட்டைப் பெறுக.
20.
ஒளிமூலமும் அதன் பிம்பமும் எவ்வாறு ஓரியல் மூலங்களாகச் செயல்படுகின்றன என்பதைச் சுருக்கமாக விவரி.
21.
கம்பிவழி மற்றும் கம்பியில்லா தகவல்தொடர்பை வேறுபடுத்துக. அவற்றில் பயன்படுத்தப்படும் மின்காந்த அலைகளின் நெடுக்கத்தைக் குறிப்பிடுக.
22.
பிளெமிங் வலக்கை விதியைக் கூறுக
23.
மின்காந்த அலையின் செறிவு என்ற கருத்தை விவரி.
24.
கிர்க்காஃப்பின் மின்னழுத்த வேறுபாட்டு விதியைக் கூறு.
25.
யங் இரட்டைப்பிளவு ஆய்வில் நிற ஒளி மூலங்கள் ஓரியல் மூலங்களாகாது ஏன்?
1.
உலோகங்களில், ஒரு அணுவில் வெளிமட்டத்திலுள்ள எலக்ட்ரான்கள் அணுக்கருக்களோடு தளர்வாக பிணைக்கப்பட்டுள்ளது. அறை வெப்பநிலைகளில் அதிக அளவிலான கட்டுறா எலக்ட்ரான்கள் உலோகத்தின் உள்ளே அதன் பரப்பை விட்டு வெளியேறாமல் வெவ்வேறு திசைகளில் இயங்கிக் கொண்டிருப்பதால் உலோகங்களில் கட்டுறா எலக்ட்ரான்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளன.
2.
ஒரு தனிமத்திலிருந்து அதிக ஊடுருவு திறன் கொண்ட கதிர்வீச்சுகளான. \(\alpha ,\beta \) மற்றும் \(\gamma \) கதிர்களை தன்னிச்சையாக வெளிவிடும் நிகழ்வு கதிரியக்கம் எனப்படும். கதிர்வீச்சுக்களை வெளியிடும் தனிமங்கள் கதிரியக்கத் தனிமங்கள் எனப்படும்.
3.
அடிநிலையிலுள்ள அணு ஒன்றிலிருந்து எலக்ட்ரானை வெளியேற்ற தேவையான சிறும ஆற்றல் பிணைப்பு ஆற்றல் அல்லது அயனியாக்க ஆற்றல் எனப்படும்.
Eஅயனியாக்கம் = \(\frac{13.6}{n^2}\)Z2 eV
ஓரலகு மின்னூட்டத்திற்கான அயனியாக்க ஆற்றல் அயனியாக்க மின்னழுத்தம் எனப்படும்.
அயனியாக்க மின்னழுத்தம்

4.
டையோடு முன்னோக்கு சார்பில் அமையும் போது இயக்கமில்லா பகுதி குறைந்து டையோடு மின்னோட்டத்தைக் கடத்தும். டையோடு பின்னோக்கு சார்பில் அமையும் போது இயக்கமில்லா பகுதி அதிகரித்து டையோடு மின்னோட்டத்தைக் கடத்தாது. எனவே டையோடு 'ஒரு திசைக்கருவி" என்றழைக்கப்படுகிறது,
5.
கிளைஸ்ட்ரான் போன்ற வெற்றிட குழாய்களில் அலைவுறும் மின்னூட்டங்களால் மைக்ரோ அலைகள் உருவாக்கப்படுகிறது
6.
(i) ரேடார் கருவிகளில் விமானங்களை வழிநடத்த
(ii) சமையல் கலனில்
(iii) நீண்ட தூர கம்பியில்லா செய்தி தொடர்பில்
7.
(i) \(\lambda =\frac { 2\pi }{ 300\pi } =\frac { 1 }{ 150 } m=0.67cm\)
\((ii){ B }_{ o }=\frac { { E }_{ o } }{ c } =\frac { 30 }{ 3\times { 10 }^{ 8 } } ={ 10 }^{ -7 }T\)
\((iii){ B }_{ z }={ 10 }^{ -7 }sin\)\([2\times { 10 }^{ 11 }t+300\pi x]T \)
8.
சீரான கால இடைவெளியில் முனைவுத் தன்மை மாறுகின்ற மின்னழுத்த வேறுபாடு மாறுதிசை மின்னழுத்த வேறுபாடு ஆகும்.
9.
+q = 2 x 10-6 C மற்றும் -2 x 10-6 C
2d = 1cm = 1.01cm
மின் இருமுனையின் திருப்பு திறன் = P = q x 2s
= 2 x 10-6 x 0.01 = 2 x 10-8 Cm
அ) அச்சுக்கோட்டில் மையத்திலிருந்து 1m தொலைவில் மின்புலம் r > > d எனில்
\(E=\frac { 1 }{ 4\pi { \varepsilon }_{ o } } \frac { 2P }{ { r }^{ 3 } } =\frac { 9\times { 10 }^{ 9 }\times 2\times 2\times { 10 }^{ -8 } }{ { 1 }^{ 3 } } =360{ NC }^{ -1 }\)
ஆ) நடுவரைக்கோட்டின் மையத்திலிருந்து 1m தொலைவில் மின்புலம்
\(E=\frac { 1 }{ 4\pi { \varepsilon }_{ o } } \frac { 2P }{ { r }^{ 3 } } =\frac { 9\times { 10 }^{ 9 }\times 2\times 2\times { 10 }^{ -8 } }{ { 1 }^{ 3 } } =180{ NC }^{ -1 }\)
10.
மின்னழுத்த வேறுபாட்டின் அலகு வோல்ட் ஆகும். ஒரு புள்ளியிலிருந்து மற்றொரு புள்ளிக்கு ஒரு கூலும் நேர் மின்னோட்டத்தை மின்விசைக்கெதிராக எடுத்துச் செல்லச் செய்யப்படும் வேலை ஒரு ஜூல் எனில் அப்புள்ளிகளுக்கிடையே உள்ள மின்னழுத்த வேறுபாடு ஒரு வோல்ட் ஆகும்
11.
ஊடகத்தின் விடுதிறன் = வெற்றிடத்தின் விடுதிறன் x ஊடகத்தின் ஒப்புமை விடுதிறன், \({ \varepsilon }={ \varepsilon }_{ o }{ \varepsilon }_{r }\) இதன் அலகு C2N-1m-2
12.
எதிர்க்குறி வெப்பநிலை தொகுப்பானது மின்தடை எண் உடைய குறைக்கடத்தியானது வெப்ப தடையகம் எனப்படும்.
13.
2 சுற்றுகள், 5 சுற்றுகள் மற்றும் 50 சுற்றுகள் கொண்ட வெவ்வேறு தடிமனுடைய கம்பிச் சுருள் வெவ்வேறு வலிமை கொண்ட மின்னோட்டங்களை, அளவிட பயன்படுத்தப்படுகின்றன.
14.
1. பொருள் ஒன்றினை காந்தமாக்குவதற்குப் பயன்படும் காந்தப்புலம்.
2. வெக்டர் அளவாகும். \(\overrightarrow { H } \) எனக் குறிப்பிடுவர்.
அலகு: Am-1
15.
மின்புலக் கோடுகளுக்குக் குறுக்கே அமைந்த குறிப்பிட்ட பரப்பின் வழியே பாயும் மின்புலக் கோடுகளின் எண்ணிக்கை மின்பாயம் ஆகும்.
16.
q என்ற புள்ளி மின்துகளிலிருந்து r தொலைவில் உள்ள புள்ளி p யில் வைக்கப்படும் ஓரலகு மின்னூட்டம் கொண்ட மின்துகளினால் உணரப்படும் விசையே அப்புள்ளி p யில் உள்ள மின்புலத்தின் மதிப்பாகும்.
\(\vec{E}=\frac{\vec{F}}{q_0}=\frac{k q}{r^2} \hat{r}=\frac{1}{4 \pi \varepsilon_0} \frac{q}{r^2} \hat{r}\)
இங்கு \( \hat{r}\) என்பது q விலிருந்து நாம் எடுத்துக்கொண்ட புள்ளி p க்கு வரையப்படும் ஓரலகு வெக்டராகும்.
17.
கூலூம் விதி \(\vec { { F }_{ 21 } } =\frac { k{ q }_{ 1 }{ q }_{ 2 } }{ { r }^{ 2 } } \hat { { r }_{ 12 } } \)
இங்கு q1, q2 - மின்னூட்டங்கள்
\(\hat { { r }_{ 12 } } \) - \({ q }_{ 1 }\) லிருந்து \({ q }_{ 2}\) ஐ நோக்கி வரையப்படும் ஓரலகு வெக்டர்.
K = தகவு மாறிலி.
18.
எந்தவொரு பொருளில் உள்ள மின்னூட்டத்தின் மதிப்பும், அடிப்படை மதிப்பு e ன் முழு மடங்காகவே இருக்கும். இதுவே மின்னூட்டத்தின் குவாண்டமாக்கல் எனப்படும்.
q = ne இங்கு n என்பது ஒரு முழு எண்
n = 0, \(\pm\)1, \(\pm\)2, \(\pm\)3, \(\pm\)4, ...
இதுவே மின்னூட்டத்தின் குவாண்டமாக்கல் எனப்படும்.
19.
எந்த ஒரு குறிப்பிட்ட படுகோண மதிப்பிற்கு, தளவிளைவு அடையாத ஒளிக்கற்றை, ஒளிபுகும் பரப்பில் பட்டு எதிரொளிப்பு அடைந்து முழுவதும் தளவிளைவு அடைந்த ஒளியாக மாறுகிறதோ, அந்தப் படுகோணமே தளவிளைவுக் கோணம் அல்லது புரூஸ்டர் கோணம் (ip) ஆகும். மேலும் பிரிட்டிஷ் அறிஞர் சர் டேவிட் புரூஸ்டர் தளவிளைவுக் கோணத்தில் எதிரொளிப்பு அடைந்த மற்றும் ஒளிவிலகல் அடைந்த ஒளிக்கதிர்கள் ஒன்றுக்கொன்று செங்குத்து எனக் கண்டறிந்தார். (ip) என்பது தளவிளைவுப் படுகோணம் (ip) என்பது இதற்கான ஒளிவிலகு கோணம் எனவும் கருதினால் படத்திலிருந்து,
\({ i }_{ p }+90^{ o }+{ r }_{ p }={ 180 }^{ 0 }\)
\( { r }_{ p }={ 90 }^{ o }-{ i }_{ p }\)
ஸ்நெல் விதியிலிருந்து ஒளிபுகும் ஊடகத்தின் ஒளிவிலகல் எண்
\(\cfrac { { sini }_{ p } }{ { sinr }_{ p } } =n\)
இங்கு n என்பது ஒளிவிலகல் எண்ணாகும்.சமன்பாடு (2) லிருந்து rp யின் மதிப்பைக் பிரதியிடும் போது பின்வரும் சமன்பாடு கிடைக்கும்.
\(\cfrac { sini }{ sin\left( { 90 }^{ o }-{ i }_{ p } \right) } =\cfrac { { sini }_{ p } }{ { cosi }_{ p } } =n\)
20.
லாயிடின் ஆடி முறையில் ஒளிமூலமும் அதன் பிம்பமும் ஓரியல் ஒளிமூலத் தொகுப்பாகச் செயல்படுகின்றன. ஏனெனில், ஒளி மூலமும் அதன் பிம்பமும் ஒத்த கட்டத்தில் உள்ள அல்லது ஒரே கட்டவேறுபாட்டையுடைய ஒளி அலைகளைக் தோற்றுவிக்கும். இரட்டை முப்பட்டகத்தில் இரண்டு மாயஒளி மூலங்கள் ஓரியல் மூலங்களாகச் செயல்படுகின்றன.
21.
|
கம்பிவழி தகவல் தொடர்பு |
கம்பியில்லா தகவல் தொடர்பு |
| 1) தொலை தூர தகவல் தொடர்புக்கு பயன்படுத்த முடியாது. | 1) தொலை தூர தகவல் தொடர்புக்கு பயன்படுத்த முடியும். |
| 2) இரைச்சல் - குறைவு வெளிப்புற இடையூறுகளை தவிர்க்க முடியும். | 2) வெளிப்புற இடையூறுகளை தவிர்க்க முடியாது. |
| 3) சைகை எளிதாக வலுவிழக்கும் |
3) மிகக்குறைவான வலுவிழப்புடன் அதிக தூரம் பரப்ப முடியும். |
| 4) விண்ணலைக் கம்பி தேவையில்லை. | 4) விண்ணலைக் கம்பி அவசியம். |
| 5) ஒளி இழை தகவல் தொடர்பில் பயன்படுத்தப்படும். அதிர்வெண் நெடுக்கம் 400THz-790THz . | 5) செயற்கைக்கோள் தகவல் தொடர்பில் மேலிணைப்பு 6GHz கீழிணைப்பு 4GHZ. |
22.
வலது கையின் பெருவிரல், சுட்டுவிரல் மற்றும் நடுவிரல் ஆகியவை ஒன்றுக்கொன்று செங்குத்தான திசைகளில் நீட்டப்படுகின்றன. காந்தப்புலத்தின் திசையை சுட்டுவிரலும், கடத்தி இயங்கும் திசையை பெருவிரலும் குறித்தால், தூண்டப்பட்ட மின்னோட்டத்தின் திசையை நடுவிரல் குறிக்கும். பிளமிங் வலக்கை விதியை மின்னியற்றி விதி எனவும் அழைக்கலாம்.
23.
மின்காந்த அலை பரவும் திசைக்கு செங்குத்தாக ஓரலகு நேரத்தில் ஓரலகு பரப்பு வழியே கடந்து செல்லும் ஆற்றலே மின்காந்த அலையின் செறிவு எனப்படும்.
I = ( u ) c
24.
இவ்விதியின்படி எந்தவொரு மூடிய சுற்றின் ஒவ்வொரு பகுதியிலும் உள்ள மின்னோட்டம் மற்றும் மின்தடை ஆகியவற்றின் பெருக்கற்பலன்களின் குறியியல் கூட்டுத்தொகையானது, அந்த மின்சுற்றில் உள்ள மின்னியக்கு விசைகளின் குறியியல் கூட்டுத்தொகைக்குச் சமம்.
25.
ஒளிபுகாத் திரையில் S1 மற்றும் S2 என்ற இரண்டு துளைகள் 0.3 mm இடைவெளியில் அமைக்கப்பட்டு S என்ற ஒளிமூலத்திலிருந்து சமதொலைவில் இருக்கும்படி அமைக்கப்பட்டது. ஒவ்வொரு துளையின் அகலமும் 0.3 mm S1 மற்றும் S2 ஒளியியல் மூலங்களாகும்.
பிளவுகள் S1 மற்றும் S2 விலிருந்து வரும் அலைமுகப்புகள் இரட்டைப் பிளவின் வலப்பக்கமாக 1 மீ தொலைவில் XY என்ற திரை வைக்கப்பட்டபோது அத்திரையில் சம அகலமுடைய பொலிவு மற்றும் கரும்பட்டைகள் அடுத்தடுத்து தோன்றுகின்றன.
S1, S2 விலிருந்து திரையின் மையப்புள்ளி O வை அடையும் ஒளி அலைகள், சமதொலைவைக் கடந்து வந்துள்ளதால் அவை படத்தில் காட்டியுள்ளவாறு ஒத்த கட்டத்தில் இருக்கும் இவ்விரண்டு அலைகளும் ஆக்கக்குறுக்கீட்டு விளைவை ஏற்படுத்தி, மையப்புள்ளி O வில் பொலிவுப்பட்டையை உருவாக்கும். இதற்கு மையப் பொலிவுப்பட்டை என்று பெயர், ஏதேனும் ஒரு பிளவை மூடிவிட்டால் குறுக்கீட்டுப்பட்டைகள் மறைந்து திரை சீராக ஒளியூட்டப்பட்டிருக்கும். இதிலிருந்து, திரையில் தோன்றும் பொலிவு மற்றும் கரும் பட்டைகள் ஒளியின் குறுக்கீட்டு விளைவினால் ஏற்பட்டவை என்பதை அறியலாம்.
பாதை வேறுபாட்டிற்கான சமன்பாடு
ஓரியல் மூலங்களாகச் செயல்படும் S1 மற்றும் S2 பிளவுகளுக்கிடையே உள்ள தொலைவு d என்க, இவை 1\(\lambda \) அலைநீளமுடைய ஒளி அலைகளை உருவாக்கும். இரட்டைப்பிளவுகளுக்கு இணையாக D தொலைவில் திரை ஒன்று வைக்கப்பட்டுள்ளது. S1 மற்றும் S2 க்கு நடுவே உள்ள புள்ளியை C என்க, மேலும், திரையின் மையப்புள்ளி O. S1 மற்றும் S2 விலிருந்து சமதொலைவில் உள்ளது. திரையில் மையப்புள்ளி O விலிருந்து Y தொலைவில் உள்ள ஏதேனும் ஒரு புள்ளியை P என்க. S1, S2 விலிருந்து P புள்ளியை அடையும் ஒளி அலைகள், அவற்றிற்கு இடையே உள்ள பாதை வேறுபாட்டைப் பொருத்து, ஒத்த கட்டத்திலோ அல்லது வேறுபட்ட கட்டத்திலோ இருக்கும்.
S1 மற்றும் S2 விலிருந்து P புள்ளியை அடையும் ஒளி அலைகளுக்கு இடையேயுள்ள பாதை வேறுபாட்டை \(\delta \) என்க, \(\delta ={ S }_{ 2 }P-{ S }_{ 1 }P\) S1இல் இருந்து SP கோட்டிலுள்ள M புள்ளிக்கு வரையப்பட்ட செங்குத்துக் கோட்டிலிருந்து பாதை வேறுபாட்டைத் துல்லியமாக கணக்கிடலாம்.
\(\delta ={ S }_{ 2 }P-MP={ S }_{ 2 }M\)
C புள்ளியிலிருந்து P புள்ளி அமைந்துள்ள கோணநிலையை θ என்க. \(\angle OCP=\theta \) வடிவியல் விதிகளின் படி,
கோணங்கள் \(\angle OCP\) மற்றும் \(\angle { S }_{ 2 }{ S }_{ 1 }M\)ஆகியவை சமம்.
\(\angle OCP=\angle { S }_{ 2 }{ S }_{ 1 }M=\theta \)
செங்கோண முக்கோணம்\(\Delta { S }_{ 1 }{ S }_{ 2 }M\) இல் \({ S }_{ 2 }M=dsin\theta \) ...(2)
கோணம் \(\theta \) சிறியது. எனவே \(sin\theta \approx tan\theta =\theta \)
செங்கோண முக்கோணம் \(\Delta OCP.tan\theta =\cfrac { y }{ D } \)
பாதை வேறுபாடு, \(\delta =\cfrac { dy }{ D } \)
பாதை வேறுபாட்டின் நிபந்தனையைப் பொருத்து, புள்ளி P யில் பொலிவுப்பட்டையோ அல்லது கரும்பட்டையோ தோன்றும்.
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards