12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 06/12/2019
காந்தவியல் மற்றும் மின்னோட்டத்தின் காந்த விளைவுகள் Magnetism And Magnetic Effects Of Electric Current
12ஆம் வகுப்பு Physics / இயற்பியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Physics / இயற்பியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Physics Test1.
ஒரு ஆல்பா துகளானது 0.45m ஆரம் கொண்ட ஒரு வட்டப் பாதையில் B = 1.2Wb/m2 காந்தப் புலத்தில், 2.6 x 107 m/s வேகத்தில் சுற்றி வருகிறது. அப்படியெனில் ஆல்பாதுகள் சுற்றும் நேரம் எவ்வளவு?
1.1 x 10-5s
1.09 x 10-6s
1.08 x 10-7s
1.1 x 10-8s
2.
ஒரு மின்துகளானது சீரான காந்தப்புலத்திற்கு செங்குத்தாக செல்லுமாயின் அத்துகள் செல்லும் பாதை ________
நேர்பாதை
வட்டப்பாதை
நீள்வட்டப்பாதை
பரவளையப்பாதை
3.
காந்த மிதப்பு இரயில் வண்டியில் _________ ஜோடி காந்தங்களால் உருவாக்கப்பட்டுள்ளது.
ஒன்று
மூன்று
இரண்டு
நான்கு
4.
லாரன்ஸ் விசையின் எண்மதிப்பு மற்றும் திசை __________
\(\overrightarrow { F } =q(\overrightarrow { B } \times \overrightarrow { V } )\)
\(\ { F } =q(\overrightarrow { V } \times \overrightarrow { B } )\)
\(\overrightarrow { F } =q(\overrightarrow { B } \times \overrightarrow { E } )\)
\(\\ \overrightarrow { F } =q(\overrightarrow { V } .\overrightarrow { B } )\)
5.
ஒரு காந்தத்தைச் சுற்றியுள்ள பகுதி அல்லது வெளியில், அக்காந்தத்தின் தாக்கம் வேறொரு காந்தத்தை வைக்கும் போது உணரப்பட்டால், அக்காந்தத்தைச் சுற்றியுள்ள பகுதி அல்லது வெளி _________ எனப்படும்.
காந்ததூண்டல்
காந்த துருவத்தளம்
மின்புலம்
காந்தப்புலம்
6.
ஒரு புரோட்டான் மற்றும் ∝- துகள் சீரான காந்தப் புலத்தில் செங்குத்தாக ஒரே வேகத்தில் செல்கிறது. புரோட்டான் 5 சுழற்சிகளை 25μ விநாடிகளில் சுற்றுகிறது. ∝- துகளின் அலைவு நேரத்தைக் கணக்கிடு.
7.
இயற்கை காந்தம் மற்றும் செயற்கை காந்தம் வேறுபடுத்துக.
8.
புவி ஒரு சீரற்ற காந்தப்புலத்தைப் பெற்றிருந்தாலும், உங்கள் ஆய்வுக் கூடத்தில் தடையின்றி தொங்கவிடப்பட்டுள்ள சட்டகாந்தம் இடப்பெயர்ச்சி இயக்கத்தை மேற்கொள்ளாமல், சுழற்சி இயக்கத்தை மட்டுமே மேற்கொள்கிறது. ஏன்?
9.
எதனால் பாஸ்பர் வெண்கல இழை கம்பிச்சுருளை தொங்கவிடப் பயன்படுத்தப்படுகிறது?
10.
நிறை நிறமாலைமானியின் பயன்களை தருக.
11.
வலதுகை பெருவிரல் விதியை தருக.
12.
சுற்றுகளின் எண்ணிக்கை 2:3:5 என்ற விகிதத்தில் உள்ள மூன்று டேன்ஜன்ட் கால்வனோமீட்டர்கள் தொடரிணைப்பில் இணைக்கப்பட்டு மின்னோட்டம் செலுத்தப்படும் போது முறையே 30o, 45o, 60o விலகல்கள் ஏற்படுகின்றன. கம்பிச் சுருள்களின் ஆரங்களின் விகிதத்தைக் கணக்கிடு.
13.
ஒரு தனித்த செம்புக் கம்பிச் சுருளை கால்வனோ மீட்டருடன் இணைக்கவும். ஒரு சட்டக் காந்தத்தை செம்புக் கம்பிச் சுருளையுடன் அழுத்தும் போது என்ன மாறுதல் ஏற்படும்?
14.
ஒரு கடத்தியை காந்தப்புலத்தில் வைக்கும் போது அதில் உருவாகும் விசையின் திசை என்ன காரணிகளைக் கொண்டு அமையும்?
15.
வோல்ட் மீட்டரின் மின்தடை அதிகமாக இருக்க வேண்டும் ஏன்?
16.
வரிச்சுருளின் வெளிப்பகுதியில் காந்தப்புலம் சுழியாகும் ஏன்?
17.
கால்வனோ மீட்டரின் மின்னோட்ட உணர்திறனை எவ்வாறு அதிகரிக்கலாம்?
18.
நீண்ட நிலையான மின்னோட்டம் பாயும் இரு இணை கடத்திகளுக்கிடையே ஏற்படும் விசையின் மதிப்பிற்கான கோவையைப் பெறுக.
19.
காந்தப்புலத்தில் வைக்கப்பட்டுள்ள மின்னோட்டம் பாயும் கடத்தியின் மீது செயல்படும் விசைக்கான கோவையை வருவி.
1.
(c)
1.08 x 10-7s
2.
(b)
வட்டப்பாதை
3.
(c)
இரண்டு
4.
(a)
\(\overrightarrow { F } =q(\overrightarrow { B } \times \overrightarrow { V } )\)
5.
(d)
காந்தப்புலம்
6.
புரோட்டானின் அலைவு நேரம்
\({ T }_{ P }=\frac { 25 }{ 5 } =5\mu \)விநாடிகள்
\(T=\frac { 2\pi m }{ qB } \)
\(\frac { { T }_{ \alpha } }{ { T }_{ P } } =\frac { { m }_{ \alpha } }{ { m }_{ P } } \times \frac { { q }_{ p } }{ q_{ -\alpha } } \)
\(\frac { { 4m }_{ \alpha } }{ { m }_{ P } } \times \frac { { q }_{ p } }{ 2q_{ p } } \)
\(\frac { { T }_{ \alpha } }{ { T }_{ P } } =\frac { 4 }{ 2 } \)
\(\\ { T }_{ \alpha }=2{ T }_{ p }\)
\(=2\times 5\)
\({ T }_{ \alpha }=10\mu \)விநாடிகள்
7.
| இயற்கை காந்தம் | செயற்கை காந்தம் |
| 1. இயற்கையாக உருவாகிறது. | மனிதனால் உருவாக்கப்படுகிறது. |
| 2. சீரற்ற உருவம் மற்றும் வடிவத்தை கொண்டுள்ளது. | சீரான உருவம் மற்றும் வடிவத்தை உருவாக்கலாம். |
| 3. எ.கா: மேக்னடைட் (அல்லது) காந்தக்கல் | எ.கா. சட்டக்காந்தம் |
8.
1. ஆய்வுக் கூடத்திற்கான புவியின் காந்தப்புலம் சீரானது.
2. எனவே சுழற்சி இயக்கத்தை மட்டுமே மேற்கொள்கிறது. இடப்பெயர்ச்சி இயக்கத்தை மேற்கொள்ளவில்லை.
9.
1. பாஸ்பர் வெண்கல இழையில் ஓரலகு முறுக்கத்திற்கான இரட்டையின் மதிப்பு மிகக் குறைவானதாகும்.
2. குறைவான ஓரலகு முறுக்கத்திற்கான இரட்டை மின்னோட்ட உணர்திறனை அதிகரிக்கும்.
10.
1. நிறை நிறமாலைமானி பல்வேறு பகுதிகளில் பயன்படுகிறது. அவை.
2. அறிவியலில் குறிப்பாக மருத்துவம், விண்வெளி அறிவியல், மண்ணியல் போன்றவற்றில் பயன்படுகிறது.
3. மருத்துவத்தில் கழிவாயுக்களின் அளவை அளந்தறிய பயன்படுகிறது.
4. உயிரியலில் ஒளிச்சேர்க்கை நிகழ்ச்சியில் ஏற்படும் எதிர்வினை இயக்கத்தைக் கண்டறிய பயன்படுகிறது.
11.
பெருவிரல் மின்னோட்டம் பாயும் திசையைக் காட்டும் வகையில், மின்னோட்டம் பாயும் கடத்தியை வலதுகையினால் பிடிக்கும் போது, கடத்தியைச் சுற்றி பற்றியுள்ள மற்ற விரல்கள் காந்தப்புலக்கோடுகளின் திசையைக் காட்டும்.
12.
\(I=\frac { 2R{ B }_{ H }tan\theta }{ { \mu }_{ o }N } =\) மாறிலி
\(\frac { { R }_{ 1 }{ tan\quad \theta }_{ 1 } }{ { N }_{ 1 } } =\frac { { R }_{ 2 }{ tan\quad \theta }_{ 2 } }{ { N }_{ 2 } } =\frac { { R }_{ 3 }{ tan\quad \theta }_{ 3 } }{ { N }_{ 3 } } \)
\({ R }_{ 1 }:{ R }_{ 2 }:{ R }_{ 3 }=\frac { { N }_{ 1 } }{ { tan\quad \theta }_{ 1 } } :\frac { { N }_{ 2 } }{ { tan\quad \theta }_{ 2 } } :\frac { { N }_{ 3 } }{ tan\quad { \theta }_{ 3 } } \)
\(=\frac { 2 }{ { tan\quad 30 }^{ o } } :\frac { 3 }{ { tan\quad 45 }^{ o } } :\frac { 5 }{ { tan\quad 60 }^{ o } } \)
\(=\frac { 2 }{ 1/\sqrt { 3 } } :\frac { 3 }{ 1 } :\frac { 5 }{ \sqrt { 3 } } \)
\(\\ =2\sqrt { 3 } \times \sqrt { 3 } :3\sqrt { 3 } :5\sqrt { 3 } /\sqrt { 3 } \)
\({ R }_{ 1 }:{ R }_{ 2 }:{ R }_{ 3 }=6:3\sqrt { 3 } :5\)
13.
1. செம்புக் கம்பிச் சுருளின் உள்ளே இருக்கும் காந்தப் புலக் கோடுகள் மாறுதலடையும்.
2. மின்னோட்டம் தூண்டுதல் அடையும்.
3. இதன் மூலம் கால்வனோ மீட்டருடன் உள்ள ஊசியானது ஒரு திசையில் விலக்கமடையும்.
14.
ஒரு கடத்தியை காந்தப்புலத்தில் வைக்கும் போது அதன் விசையின் திசை கீழ்கண்ட காரணிகளைக் கொண்டு அமையும்.
i) மின்னோட்டத்தின் திசை
ii) காந்தப்புலத்தின் திசை
15.
1. மின்னழுத்தம் அளக்க வேண்டிய புள்ளிகளுக்கிடையே உள்ள மின்தடையினைக் காட்டிலும் வோல்ட் மீட்டரின் மின்தடை மிக அதிகமாக இருக்க வேண்டும்.
2. இல்லையெனில், மின்னோட்ட மதிப்பை குறைத்துக் காட்டுவதுடன் மின்னழுத்த வேறுபாடு மதிப்பையும் குறைவாகவே காட்டும்.
3. வோல்ட் மீட்டர் அதிக மின்தடை கொண்டதாக இருந்தால் மட்டும் இந்தப் பிழையினைத் தவிர்க்கலாம்.
4. மின்தடை ஈறிலா மதிப்பாக இருப்பின், அக்கருவி ஒரு சிறந்த வோல்ட் மீட்டராகும்.
16.
1. வரிச்சுருளின் ஒவ்வொரு சுருளிலும் ஏற்படும் காந்தப்புலம் ஒருமைய வட்டங்களாக அமைந்து, சுருள்களுக்கிடைப்பட்ட பகுதியில் ஒன்றையொன்று இல்லாமல் செய்து விடும்.
2. சுருள் மையத்தில் வரிச்சுருளின் அச்சின் வழியே வலிமையான காந்தப்புலம் ஏற்படும்.
3. காந்தப்புலம் கீழ்ப்பகுதியில் உள்ள சுற்றுகளால் ஏற்படும் காந்தப்புலத்திற்கு எதிராக செயல்பட்டு அழியும். எனவே வரிச்சுருளின் வெளிப்பகுதியில் காந்தப்புலம் சுழியாகும்.
17.
i) பின்வருவனவற்றை அதிகரிப்பதன் மூலம் மின்னோட்ட உணர்திறனை அதிகரிக்கலாம்.
1. சுற்றுகளின் எண்ணிக்கை
2. காந்தப்புலம்
3. கம்பிச்சுருளின் பரப்பு
ii) கம்பிச் சுருளைத் தொங்கவிடப் பயன்படும் கம்பியின் ஓரலகு முறுக்கத்திற்கான இரட்டையைக் குறைப்பதன் மூலம் மின்னோட்ட உணர்திறனை அதிகரிக்கலாம்.
NiAB = kθ
⇒ θ/i = NAB/k
18.
1. நீண்ட இணையான மின்னோட்டம் பாயும் இரண்டு கடத்திகள் r இடைவெளியில் காற்றில் பிரித்து வைக்கப்பட்டுள்ளன.
2. I1 மற்றும் பாயும் I2-A மற்றும் B கடத்தி வழியே செல்லும் மின்னோட்டங்கள்
3. A கடத்தியில் I1 மின்னோட்டத்தினால் r தொலைவில் ஏற்படும் நிகர காந்தப்புலம்.
\(\overrightarrow { { B }_{ 1 } } =\frac { { \mu }_{ o }{ I }_{ 1 } }{ 2\pi r } (-\hat { i } )\)
\(\overrightarrow { { B }_{ 1 } } =-\frac { { \mu }_{ o }{ I }_{ 1 } }{ 2\pi r } (\hat { i } )\)
4. காந்தப்புலத்தின் திசை தாளின் தளத்திற்கு செங்குத்தாக உள்நோக்கிச் செல்கிறது.
5. B கடத்தியின் dl நீளமுள்ள சிறு கூறின் மீது செயல்படும் லாரன்ஸ் விசை
\(\overrightarrow { dF } =({ I }_{ 2 }\overrightarrow { dl } \times \overrightarrow { { B }_{ 1 } } )\)
\(=-{ I }_{ 2 }dl\frac { { \mu }_{ o }I }{ 2\pi r } (\hat { k } \times \hat { i } )\)
\(\overrightarrow { dF } =\frac { -{ \mu }_{ o }{ I }_{ 1 }{ I }_{ 2 }dl }{ 2\pi r } \hat { j } \)
6. A கடத்தியினால், B கடத்தியின் ஓரலகு நீளத்தில் செயல்படும் விசை
\(\frac { \overrightarrow { F } }{ 1 } =\frac { -{ \mu }_{ o }{ I }_{ 1 }{ I }_{ 2 }dl }{ 2\pi r } \hat { j } \)
7. I2 மின்னோட்டம் பாயும் B கடத்தியினால் r தொலைவிலுள்ள A கடத்தியின் dl நீளமுள்ள சிறு கூற்றினால் ஏற்படும் காந்தப்புலம்,
\(\overrightarrow { { B }_{ 2 } } =\frac { { \mu }_{ o }{ I }_{ 2 } }{ 2\pi r } \hat { j } \)
8. காந்தப்புலத்தின் திசை தாளின் தளத்திற்கு செங்குத்தாகவும் வெளிநோக்கியும் செயல்படுகிறது.
9. கடத்தி A யில் உள்ள dl நீள சிறு கூறின் மீது செயல்படும் காந்தவிசை
\(\overrightarrow { dF } =({ I }_{ 1 }\overrightarrow { dl } \times { B }_{ 2 })\)
\(={ I }_{ 1 }dl\frac { { \mu }_{ o }{ I }_{ 2 } }{ 2\pi r } (\hat { k } \times \hat { i } )\)
\(\overrightarrow { { B }_{ 2 } } =\frac { { \mu }_{ o }{ I }_{ 1 }{ I }_{ 2 }dl }{ 2\pi r } \hat { j } \)
10. A கடத்தியின் ஓரலகு நீளத்தில் செயல்படும் விசை
\(\frac { \overrightarrow { F } }{ 1 } =\frac { { \mu }_{ o }{ I }_{ 1 }{ I }_{ 2 }dl }{ 2\pi r } \hat { j } \)
11. ஈர்ப்பு விசை -ஒரே திசையில் மின்னோட்டம் பாயும்
12. விலக்கு விசை - எதிரெதிர் திசைகளில் மின்னோட்டம் பாயும்.
19.
மின்னோட்டம் பாயும் கடத்தி ஒன்றை காந்தப்புலத்தில் வைக்கும்போது, கடத்தி உணரும் விசை, அக்கடத்தியில் உள்ள ஒவ்வொரு மின்துகளின் மீதும் செயல்படும் லாரன்ஸ் விசையின் கூடுதலுக்குச் சமமாகும். படம் 3.51 இல் காட்டியுள்ளவாறு, I மின்னோட்டம் பாயும் A குறுக்குவெட்டுப்பரப்பு கொண்ட dl நீளமுள்ள கம்பியின் (கடத்தியின்) சிறுபகுதி ஒன்றைக் கருதுக. மின்னோட்டம் பாயும் கம்பியிலுள்ள கட்டுறா எலக்ட்ரான்கள் மின்னோட்டத்தின் (I) திசைக்கு எதிராக நகர்கின்றன. எனவே மின்னோட்டம் I மற்றும் இழுப்பு திசைவேகம் vd யின் எண்மதிப்பு இவற்றுக்கான தொடர்பு பின்வருமாறு
I = neAvd
மின்னோட்டம் பாயும் இந்த கடத்தியை காந்தப்புலத்தினுள் \(\overset \rightarrow {B}\) வைக்கும்போது, கடத்தியிலுள்ள மின்துகள் உணரும் சராசரி விசை (இங்கு எலக்ட்ரான்)
\(\overrightarrow { F } =-e(\overrightarrow { { V }_{ d } } \times \overrightarrow { B } )\)
n என்பதை ஓரலகு பருமனுக்கான கட்டுறா எலக்ட்ரான்களின் எண்ணிக்கை எனக் கொண்டால்
\(n=\frac { N }{ V }\)
இங்கு N என்பது V = Adlபருமனுள்ள கடத்தியின் சிறுபகுதியில் உள்ள கட்டுறா எலக்ட்ரான்களின் மொத்த எண்ணிக்கையாகும்.
v = Adl
எனவே dl நீளமுள்ள கடத்தியின் சிறுபகுதியின் மீது செயல்படும் லாரன்ஸ் விசையானது அப்பகுதியில் உள்ள எலக்ட்ரான்களின் எண்ணிக்கையையும் (N = nAdl), ஒரு எலக்ட்ரானின் மீது செயல்படும் லாரன்ஸ் விசையையும் பெருக்கினால் கிடைப்பதாகும்.
\(\overrightarrow { f }=nAdl\left[ -e(\overrightarrow { Vd } \times \overrightarrow { B } ) \right] \)
\(d\overrightarrow { F } =-enAdl(\overrightarrow { { v }_{ d } } \times \overrightarrow { B } )\)
மின்னோட்டக்கூறு: \(\overrightarrow { Idl } =-enA\overrightarrow { { v }_{ d } } dl\)
\(\therefore dF=(I\overrightarrow { dl } \times \overrightarrow { B } )\)
சீரான காந்தப்புலத்தில் உள்ள l நீளமுள்ள I மின்னோட்டம் பாயும் நேர்க்கடத்தி உணரும் விசை
\(\overrightarrow { F } =(I\overrightarrow { l } \times \overrightarrow { B } )\)
எண்மதிப்பில்,
\(F=BIlsin\theta \)
சிறப்பு நேர்வுகள்
(அ) காந்தப்புலத்தின் திசைக்கு இணையாக மின்னோட்டம் பாயும் கடத்தியை வைக்கும்போது, இவற்றுக்கிடையேயான கோணம் θ = 0˚. எனவே மின்னோட்டம் பாயும் கடத்தி உணரும் விசை சுழியாகும்.
(ஆ)காந்தப்புலத்தின் திசைக்கு செங்குத்தாக மின்னோட்டம் பாயும் கடத்தியை வைக்கும்போது, இவற்றுக்கிடையேயான கோணம் θ = 90˚. எனவே, மின்னோட்டம் பாயும் கடத்தி பெரும விசையை உணரும் Fமொத்தம் = BIl.
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards