12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 18/09/2019
காந்தவியல் மற்றும் மின்னோட்டத்தின் காந்த விளைவுகள்
12ஆம் வகுப்பு Physics / இயற்பியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Physics / இயற்பியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Physics Test1.
இயற்கை காந்தம் மற்றும் செயற்கை காந்தம் வேறுபடுத்துக.
2.
டேஞ்சன்ட் கால்வனோ மீட்டர் மற்றும் இயங்கு சுருள் கால்வனோ மீட்டர் வேறுபடுத்துக.
3.
மெய்சனர் விளைவு என்றால் என்ன?
4.
கூலூம் விசை மற்றும் லாரன்ஸ் விசை வேறுபடுத்துக.
5.
வட்ட வரிச்சுருள் என்றால் என்ன?
6.
வரிச்சுருள் என்றால் என்ன?
7.
காந்தமாகும் செறிவு என்றால் என்ன?
8.
ஒப்புமை உட்புகுதிறன் - வரையறு
9.
காந்தத் தயக்கம் என்றால் என்ன ?
10.
காந்த உட்புகுதிறன் என்றால் என்ன?
11.
காந்த இருமுனை திருப்புத்திறனை வரையறு
12.
காந்தப்பாயத்தை வரையறு.
13.
ஆம்பியர்-வரையறு?
14.
டயா, பாரா மற்றும் ஃபெர்ரோ காந்தவியலை ஒப்பிடு?
15.
பயட் –சாவர்ட் விதியைக் கூறு
1.
| இயற்கை காந்தம் | செயற்கை காந்தம் |
| 1. இயற்கையாக உருவாகிறது. | மனிதனால் உருவாக்கப்படுகிறது. |
| 2. சீரற்ற உருவம் மற்றும் வடிவத்தை கொண்டுள்ளது. | சீரான உருவம் மற்றும் வடிவத்தை உருவாக்கலாம். |
| 3. எ.கா: மேக்னடைட் (அல்லது) காந்தக்கல் | எ.கா. சட்டக்காந்தம் |
2.
| டேஞ்சன்ட் கால்வனோ மீட்டர் | இயங்கு சுருள் கால்வனோ மீட்டர் |
| 1. டேஞ்சன்ட் விதி தத்துவப்படி செயல்படும். | மின்னோட்டம் பாயும் வளையம் ஒன்றை சீரான காந்தப்புலத்தில் வைக்கும், தத்துவப்படி செயல்படும். |
| 2. காந்தத் தன்மையற்ற வட்டவடிவ சட்டம் பெற்றிருக்கும். | மெல்லிய காப்பிடப்பட்ட தாமிரக் கம்பியால் சுற்றப்பட்ட செவ்வக வடிவ கம்பிச் சுருள் பெற்றிருக்கும். |
| 3. காந்தப் புலத்தை அளக்க பயன்படுகிறது. | மின்னோட்டம் கண்டறிய பயன்படுகிறது. |
3.
டயா காந்தப்பொருட்கள் மீக்கடத்திகளாக மாறும் போது மீக்கடத்தியிலிருந்து காந்தப்பாயம் விலக்கித் தள்ளப்படும் நிகழ்வு.
4.
| கூலூம் விசை | லாரன்ஸ் விசை |
| 1. ஒரு குறிப்பிட்ட தொலைவில் இரு மின்துகளுக்கிடையே ஏற்படும் விசை | சீரான காந்தப் புலத்தில் ஒரு மின்னோட்டம் பாயும் கம்பியின் வழியே ஏற்படும் விசை. |
| 2. தொலைவு அதிகரிக்க விசை குறையும். | மாறாமல் இருக்கும். |
| 3. ஊடகத்தைச் சார்ந்தது. | ஊடகத்தைச் சார்ந்ததல்ல. |
5.
வரிச்சுருள் இரண்டு முனைகளும் ஒன்றுடன் ஒன்று தொடும் வகையில் வளைக்கப்பட்ட வட்ட அமைப்பே வட்ட வரிச்சுருளாகும்.
6.
வரிச்சுருள் என்பது சுருள் வடிவில் நெருக்கமாகச் சுற்றப்பட்ட நீண்ட கம்பிச் சுருளாகும்.
7.
1. ஓரலகு பருமனுக்கான பொருளின் தொகுபயன் காந்தத் திருப்புத் திறன்.
2. அலகு Am-1
8.
ஒரு ஊடகத்தின் உட்புகுதிறனுக்கும் (\(\mu\)) மற்றும் வெற்றிடத்தில் உட்புகுதிறனுக்கும் (\(\mu\)o) உள்ள தகவு ஆகும்.
\(\mu_r=\frac{\mu}{\mu_o}\)
9.
காந்தப்புலம், காந்தமாக்கும் புலத்திற்குப் பின்தங்கும் நிகழ்ச்சிக்கு காந்தத் தயக்கம் என்று பொருள்.
10.
காந்தப் பொருள் தன்வழியே காந்தப் புலத்தை உட்புக அனுமதிக்கும் அளவு காந்த உட்புகுதிறன் ஆகும்.
11.
காந்த இருமுனையின் முனைவலிமை மற்றும் இடைவெளி தொலைவின் பெருக்கற்பலனே காந்த இருமுனைத் திருப்புத்திறன் ஆகும்.
\(\overrightarrow{p_m}=q_m \vec{d}\)
12.
ஓரலகு பரப்பின் வழியே கடந்து செல்லும் காந்தப்புலக் கோடுகளின் எண்ணிக்கைக்கு காந்தப் பாயம் என்று பெயர்.
13.
வெற்றிடத்தில் ஒரு மீட்டர் இடைவெளியில் பிரித்து வைக்கப்பட்டுள்ள முடிவிலா நீளம் கொண்ட இரு இணைகடத்திகள் ஒவ்வொன்றின் வழியாகவும் பாயும் மின்னோட்டத்தினால், ஒவ்வொரு கடத்தியும் ஓரலகு நீளத்திற்கு 2 x 10-7 N விசையை உணர்ந்தால், ஒவ்வொரு கடத்தியின் வழியாகவும் பாயும் மின்னோட்டத்தின் அளவு ஒரு ஆம்பியராகும்.
14.
| வரிசை எண் | டயாக்காந்தம் | பாராகாந்தம் | ஃபெர்ரோகாந்தம் |
| 1. | ஒவ்வொரு எலக்ட்ரானும் ஒரு குறிப்பிட்ட அளவு சுற்றுப்பாதை காந்த இருமுனை திருப்புத்திறனை பெற்றிருக்கும். | ஒவ்வொரு அணுவும் அல்லது மூலக்கூறும் நிகர காந்த இருமுனை திருப்புத்திறன்களைப் பெற்றுள்ளன. | ஒரு அணு அல்லது மூலக்கூறு நிகர காந்த இருமுனை திருப்புத்திறன்களைப் பெற்றுள்ளன. |
| 2. | சுற்றுப்பாதை தளங்கள் தற்போக்காக ஒழுங்கற்ற முறையில் எல்லா திசைகளிலும் அமைந்துள்ளது. | காந்த இருமுனை திருப்புத்திறன்களின் வெக்டர் ஒழுங்கற்ற முறையில் எல்லா திசைகளிலும் அமைந்துள்ளது. | பெருங்கூறின் உள்ளே உள்ள காந்தத்திருப்புத் திறன்களும் ஒரு குறிப்பிட்ட திசையில் ஒருங்கமைந்துள்ளன. |
| 3. | நிகர காந்த இருமுனை திருப்புத் திறன்களின் வெக்டர் கூடுதல் சுழியாகும். | எந்தவொரு அணுவும் தொகுபயன் காந்த இருமுனை திருப்புத்திறனை பெற்றிருக்காது. | பொருளின் நிகர காந்தமாக்கல் சுழியாகும் |
15.
மின்னோட்டம் பாயும் கடத்தியின் நீளத்தின் சிறு கூறிலிருந்து r தொலைவில் உள்ள P புள்ளியில் உருவாகும் காந்தப்புலம் \(\overset { \rightarrow }{ dB } \) இன் எண்மதிப்பை பயோட் மற்றும் சாவர்ட் சோதனையின் அடிப்படையில் கண்டறிந்தனர். இதன் அடிப்படையில் காந்தப்புலம் \(\overrightarrow{dB}\) இன் எண்மதிப்பு.
1. மின்னோட்டத்தின் (I) வலிமைக்கு நேர்த்தகவிலும்
2. நீளக் கூறின் \(\overset { \rightarrow }{ dl } \) எண்மதிப்புக்கு நேர்த்தகவிலும்
3. \(\overset { \rightarrow }{ dl } \) மற்றும் \(\hat { r } \) க்கு இடையே உள்ள கோணத்தின் θ சைன் மதிப்புக்கு நேர்த்தகவிலும்
4. புள்ளி P மற்றும் நீளக்கூறு \(\overset { \rightarrow }{ dl } \) இவற்றுக்கு இடையே உள்ள தொலைவின் இருமடிக்கு எதிர்த்தகவிலும் இருக்கும். இதனை பின்வருமாறு எழுதலாம்.
\(d B \propto \frac{I d l}{r^2} \sin \theta\)
\(\mathrm{dB}=k \frac{I d l}{r^2} \sin \theta\)
இங்கு \(\mathrm{k}=\frac{\mu_o}{4 \pi}\) (SI அலகில்) மேலும் k = 1 (CGS அலகில்)
வெக்டர் குறியீட்டின்படி,
\(d \vec{B}=\frac{\mu_o}{4 \pi} \frac{I \overrightarrow{d l} \times \hat{r}}{r^2}\)
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards