12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th English Poem - 6 - Incident of the French Camp Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Prose - 6 - On the Rule of the Road Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Prose - 5 - The Chair Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Supplementary - 4 - The Midnight Visitor Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Poem - 4 - Ulysses Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Prose - 4 - The Summit Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 31/10/2019
ஒளியியல்
12ஆம் வகுப்பு Physics / இயற்பியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Physics / இயற்பியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Physics Test1.
ஒரு சென்டிமீட்டரில் 4000 ஒளிபுகும் பிளவுகள் கொண்ட விளிம்பு விளைவுக் கீற்றணி ஒன்று ஒற்றை நிற ஒளியினால் ஒளியூட்டப்படுகிறது. இவ்வமைப்பினால் 30o க்கோணத்தில் இரண்டாம் வரிசை விளிம்பு விளைவு தோன்றுகிறது எனில், பயன்படுத்தப்படும் ஒற்றை நிற ஒளியின் அலைநிலத்தைக் காண்க.
2.
ஓர் இருபுறகுவிலென்ஸின் வளைவு ஆரங்கள் முறையே 20 cm மற்றும் 15 cm. லென்ஸ் செய்யப்பட்ட பொருளின் ஒளிவிலகல் எண் 1.5 எனில்,
(அ) அந்த லென்ஸின் குவியத் தூரம் என்ன?
(ஆ) லென்ஸின் முன்பக்கத்தைப் பின்பக்கமாகத் திருப்பிவைத்துப் பயன்படுத்தினால் அதன் குவியத்தூரம் மாறுமா?
3.
0.25 m தடிமன் கொண்ட கண்ணாடிப்பட்டகத்தின் ஒளிவிலகல் எண் 1.5 ஆகும். ஒளிக்கதிர் ஒன்று கண்ணாடிப்பட்டகத்தின் ஒரு பக்கத்தின் மீது 60o கோணத்தில் விழுந்து அடுத்த பக்கம் வழியாக வெளிவருகிறது எனில், ஒளி அடைந்த பக்கவாட்டு இடப்பெயர்ச்சி என்ன?
4.
ஒளி இழை ஒன்றின் உள்ளகத்தின் ஒளிவிலகல் எண் 1.68 மற்றும் அதன் உறைப்பூச்சின் ஒளிவிலகல் எண் 1.44. இந்த ஒளி இழை காற்று ஊடகத்தில் உள்ளபோது அதன் ஏற்புக் கோணம் என்ன? மேலும் வெளிப்பூச்சு இல்லாத நிலையில் அதன் ஏற்புக் கோணத்தை கணக்கிடுக.
5.
f / 3 நீளம் கொண்ட மெல்லிய தண்டு ஒன்று, f குவியத்தூரம் கொண்ட குழிஆடியின் முதன்மை அச்சின் மீது அத்தண்டின் நீட்டப்பட்ட மெய்பிம்பத்தைத் தொடும்படி வைக்கப்பட்டுள்ளது. எனில், குழிஆடியின் நெடுக்கு உருப்பெருக்கத்தைக் காண்க.
6.
ஒருவர், தம் முழு உருவத்தையும் கண்ணாடியில் பார்க்க வேண்டுமென்றால், கண்ணாடியின் உயரம் எவ்வளவு இருக்க வேண்டும்?
7.
500 nm அலை நீளமுடைய ஒளி 5 mm அகலமுடைய துளையின் வழியேச் செல்லும்போது விளிம்பு விளைவு அடைகிறது. இந்நிகழ்வில் கதிர் ஒளியியலைப் பயன்படுத்தும் தொலைவினைக் காண்க
8.
450 nm அலைநீளமுடைய ஒளி ஒன்றின் பாதை வேறுபாடு 3 mm எனில், அதற்குச் சமமான கட்ட வேறுபாட்டைக் காண்க.
9.
யங் இரட்டைப்பிளவு ஆய்வில் 560 nm மற்றும் 420 nm அலைநீளங்களையுடைய இரண்டு ஒளி அலைகள் பயன்படுத்தப்படுகின்றன. மையப் பொலிவுப் பட்டையிலிருந்து இரண்டு அலைநீளங்களின் பொலிவுப் பட்டைகளும் ஒன்றினையும் சிறுமத்த தொலைவைக் காண்க. கொடுக்கப்பட்டவை, D = 1 m மற்றும் d = 3 mm.
10.
யங் இரட்டைப்பிளவு ஆய்வில், இரண்டு பிளவுகள் 0.15 mm தொலைவில் பிரித்துவைக்கப்பட்டுள்ளன, அப்பிளவுகளிலிருந்து 2 m தொலைவில் திரை அமைந்துள்ளது. பயன்படுத்தப்படும் ஒளியின் அலை நீளம் 450 nm எனில், பின்வருவனவற்றைக் கண்டுபிடி
(i) மையப் பொலிவுப்பட்டையிலிருந்து, இரண்டாவது பொலிவுப்பட்டையின் தொலைவு மற்றும் மூன்றாவது கரும்பட்டையின் தொலைவு ஆகியவற்றைக் காண்க.
(ii) பட்டை அகலத்தைக் காண்க
(iii) பிளவுகளை விட்டு, திரையைத் தூரமாக நகர்த்தும் போது குறுக்கீட்டுப் பட்டை அமைப்பில் என்ன மாற்றம் நிகழும்?
(iv) இம்முழு அமைப்பையும் 4/3 ஒளிவிலகல்எண் கொண்ட நீரில் மூழ்கவைக்கும் போது, பட்டை அகலத்தில் ஏற்படும் மாற்றம் என்ன?
1.
1 cm நீளத்திற்கு வரையப்பட்ட கோடுகளின் எண்ணிக்கை 4000; விளிம்பு விளைவு வரிசை m = 2 ; விளிம்பு விளைவுக்கோணம், θ = 30°;
ஒளியின் அலைநீளம் λ = ?
ஓரலகு நீளத்திற்கு வரையப்பட்ட கோடுகளின் எண்ணிக்கை,
N = \(\frac { 4000 }{ 1\times { 10 }^{ -2 } } \) = 4 x 105
விளிம்பு விளைவுப் பெருமத்திற்கான சமன்பாடு, λ = \(\frac { sin\theta }{ Nm } \) மதிப்புகளைப் பிரதியிட்டால்,
λ = \(\frac { sin{ 30 }^{ o } }{ 4\times { 10 }^{ 5 }\times 2 } =\frac { 0.5 }{ 4\times { 10 }^{ 5 }\times 2 } \)
= \(\frac { 1 }{ 2\times 4\times { 10 }^{ 5 }\times 2 } =\frac { 1 }{ 16\times { 10 }^{ 5 } } \)
λ = 625 x 10-10 m = 6250 Å
2.
இரு புறகுவிலென்ஸைப் பொருத்த வரை முதல் பரப்பின் வளைவு ஆரம் நேர்குறியாகவும், இரண்டாம் பரப்பின் வளைவு ஆரம் எதிர்குறியாகவும் இருக்கும். இது படத்தில் காட்டப்பட்டுள்ளது.

n = 1.5, R1= 20 cm மற்றும் R2= –15 cm
லென்ஸ் உருவாக்குபவரின் சமன்பாட்டிலிருந்து,
\(\frac { 1 }{ f } =(n-1)\left( \frac { 1 }{ { R }_{ 1 } } -\frac { 1 }{ { R }_{ 2 } } \right) \)
கொடுக்கப்பட்ட மதிப்புகளைப் பிரதியிடும்போது
\(\frac { 1 }{ f } \) = (1.5 -1) \(\left( \frac { 1 }{ 20 } -\frac { 1 }{ -15 } \right) \) = (1.5 -1)\(\left( \frac { 1 }{ 20 } +\frac { 1 }{ 15 } \right) \)
\(\frac { 1 }{ f } \) = (0.5)\(\left( \frac { 1 }{ 20 } +\frac { 1 }{ 15 } \right) \) = (0.5) \(\left( \frac { 3+4 }{ 60 } \right) =\left( \frac { 1 }{ 2 } \times \frac { 7 }{ 60 } \right) =\frac { 7 }{ 120 } \)
f = \(\frac { 120 }{ 7 } \) = 17.14cm
குவியத்தூரம் நேர்குறியில் உள்ளதால் இது ஒரு குவிக்கும் லென்ஸ் ஆகும்.
(ஆ) லென்ஸின் முன்பக்கத்தைப் பின்பக்கமாக மாற்றி வைக்கும் போது
.png)
தற்போது, R1 = 15 cm மற்றும் R2 = –20 cm, n = 1.5 மதிப்புகளைப் பிரதியிடும்போது
\(\frac { 1 }{ f } =(1.5-1)\left( \frac { 1 }{ 15 } -\frac { 1 }{ -20 } \right) \)
\(\frac { 1 }{ f } =(1.5-1)\left( \frac { 1 }{ 15 } +\frac { 1 }{ 20 } \right) \)
இதன் குவியத்தூரம், f = 17.14 cm
எனவே, லென்ஸின் முன்பக்கத்தைப் பின்பக்கமாக மாற்றிவைத்துப் பயன்படுத்தும் போதும் அதன் குவியத்தூரம் மாறாது. இஃது அனைத்து லென்ஸ்களுக்கும் பொருந்தும். மாணவர்கள் லென்ஸ்களை வைத்து இதனைச் சரிபார்க்கலாம்.
3.
கண்ணாடிப்பட்டகத்தின் தடிமன் t = 0.25 m, ஒளிவிலகல் எண் n = 1.5. படுகோணம் i = 60o.
ஸ்னெல் விதியைப் பயன்படுத்தும்போது, 1 × sin i = n sin r
sin r = \(\frac { \sin i }{ n } =\frac { \sin60 }{ 1.5 } \) = 0.58
r = −sin-1 0.58 = 35.25o
பக்கவாட்டு இடப்பெயர்ச்சி, L = t\(\left( \frac { \sin(i-r) }{ \cos(r) } \right) \)
L = (0.25) x \(\left( \frac { \sin(60-35.25 }{ \cos(35.25) } \right) \) = 0.1281 m
பக்கவாட்டு இடப்பெயர்ச்சி, L = 12.81 cm
4.
n1 = 1.68, n2 = 1.44, n1 = 1
ஏற்புக்கோணம், ia = sin -1 \(\left( \sqrt { { n }_{ 1 }^{ 2 }-{ n }_{ 2 }^{ 2 } } \right) \)
ia = sin-1 \(\left( \sqrt { (1.68)^{ 2 }-(1.44)^{ 2 } } \right) \) = sin-1(0.865)
ia ≈ 60o
வெளிப்பூச்சு ஏதும் இல்லாத நிலையில், n2 = 1 ஏற்புக்கோணம், ia = sin-1 \(\left( \sqrt { { n }_{ 1 }^{ 2 }-{1}} \right) \)
ia = sin-1 \(\left( \sqrt { (1.68)^{ 2 }-1 } \right) \) = sin-1(1.35)
sin-1(ஒன்றைவிடப் பெரிய எண்) சாத்தியமற்ற ஒன்றாகும். ஆனால், இது 0° விலிருந்து 90o என்ற எல்லைக்குள் வருகிறது. எனவே, அனைத்துக் கதிர்களும் சமதளப் பரப்பிலிருந்து உள்ளகத்திற்குள் நுழைந்து முழு அக எதிரொளிப்பு அடையும்.
குறிப்பு: உறைப்பூச்சு இல்லை எனில், உள்ளகத்தின் ஒளிவிலகல் எண்(n1 )க்கான நிபந்தனை
ia = sin -1 \(\left( \sqrt { { n }_{ 1 }^{ 2 }-{ n }_{ 2 }^{ 2 } } \right) \)
இங்கு, கணிதவியல் விதியின்படி,(n21 - 1) ≤ 1
அல்லது (n21 ≤ 2 அல்லது n1 ≤ \( \sqrt{2}\)
எனவே, காற்றில் (உறைப்பூச்சு இல்லாத நிலையில்) உள்ளகத்தின் ஒளிவிலகல் எண் n1 ன் மதிப்பு n1 ≤ 1.414
5.

பொருளின் நீளம் l = \(\frac { f }{ 3 } \)
கொடுக்கப்பட்டுள்ள நிபந்தனையின்படி தோன்றும் பிம்பம் படத்தில் காட்டப்பட்டுள்ளது
.png)
l என்பது பிம்பத்தின் நீளம் எனில்,
m1 = \(\frac { l' }{ l } =\frac { l' }{ f/3 } \) அல்லது l' = \(\frac { mf }{ 3 } \)
பிம்பத்தின் ஒரு முனை பொருளொடு பொருந்தி உள்ளது. எனவே, பொருந்தியுள்ள முனை கண்டிப்பாக வளைவு மையமாக இருக்க வேண்டும்.
uB = uA - \(\frac { f }{ 3 } \) = 2f -\(\frac { f }{ 3 } \) = \(\frac { 5f }{ 3 } \)
vB = uB + l + l'
\(v _ B =\frac { 5f }{ 3 } +\frac { f }{ 3 } +\frac { mf }{ 3 } =\frac { f(6+m) }{ 3 } \)
ஆடிச்சமன்பாடு \(\frac { 1 }{ v } +\frac { 1 }{ u } =\frac { 1 }{ f } \)
\(\frac { 1 }{ -\left( \frac { f(6+m) }{ 3 } \right) } +\frac { 1 }{ -\left( \frac { 5f }{ 3 } \right) } =\frac { 1 }{ -f } \)
சுருக்கப்பட்ட பின்பு,
\(\frac { 3 }{ f(6+m) } +\frac { 3 }{ 5f } =\frac { 1 }{ f } :\frac { 3 }{ (6+m) } =\frac { 2 }{ 5 } \)
6 + ml = \(\frac { 15 }{ 2 } \) ; ml = \(\frac { 15 }{ 2 } \) - 6
ml = \(\frac { 3 }{ 2 } \) = 1.5
6.
h உயரம் கொண்ட மனிதர் ஒருவர் செங்குத்தாக உள்ள கண்ணாடியின் முன்னே நிற்கிறார் எனக் கருதுக. அவரின் தலை மற்றும் பாதத்திலிருந்து செல்லும் ஒளிக்கதிர்கள் கண்ணாடியில் பட்டு எதிரொளித்து, அவரின் கண்கள் அடைந்தவுடன் அவர், தமது தலை மற்றும் பாதங்களைக் காண்கிறார்.

அவரின் தலை (H) மற்றும் கண் (E) இரண்டிற்கும் இடைப்பட்ட தொலைவை h1 எனவும், அவரின் பாதம் (F) மற்றும் கண் (E) இரண்டிற்கும் இடைப்பட்ட தொலைவை h2 எனவும் கொள்க. எனவே, மனிதனின் மொத்த உயரம் h = h1 + h2 ஆகும்.
எதிரொளிப்பு விதியின்படி, இரண்டு கடைக்கோடி புள்ளிகளில் ஏற்படும் எதிரொளிப்புகளிலும் (extreme reflections) படுகோணமும் எதிரொளிப்புக் கோணமும் ஒன்றுக்கொன்று சமமாகும். மேலும், இவ்விரண்டு எதிரொளிப்புகளிலும் படுகதிர் மற்றும் எதிரொளிப்புக் கதிர்களுக்கு இடையே உள்ள கோணத்தின் இருசமவெட்டியே, செங்குத்துக் கோடாகும். வடிவியலின்படி மனிதரின் முழு உருவத்தையும் காண, கண்ணாடி, அவரின் உயரத்தில் பாதி அளவு இருந்தால் போதுமானதாகும். \(\frac { { h }_{ 1 }+{ h }_{ 2 } }{ 2 } =\frac { h }{ 2 } \)
கண்ணாடியின் உயரம், மனிதருக்கும் கண்ணாடிக்கும் இடையே உள்ள தூரத்தைச் சார்ந்ததா?
7.
a = 5 mm = 5 x 10-3 m;
λ = 500nm = 500 x 10-9m; z = ?
ப்ரனெல் தொலைவு, z = \(\frac { { a }^{ 2 } }{ 2\lambda } \) மதிப்புகளைப் பிரதியிடும்போது,
z = \(\frac { { \left( 5\times { 10 }^{ -3 } \right) }^{ 2 } }{ 2\times 500\times { 10 }^{ -9 } } =\frac { 25\times { 10 }^{ -6 } }{ 1\times { 10 }^{ -6 } } \\ \) = 25 m
z = 25 m
8.
அலை நீளம், λ = 450 nm = 450 x 10-9m
பாதை வேறுபாடு, \(\delta \) = 3 mm = 3 x 10-3m
கட்டவேறுபாட்டிற்கும், பாதைவேறுபாட்டிற்கும் உள்ள தொடர்பு, ø = \(\frac { 2\pi }{ \lambda } \times \delta \)
மதிப்புகளை பிரதியிடும் போது,
ø =\(\frac { 2\pi }{ 450\times { 10 }^{ 6 } } \) x 3 x10-3 = \(\frac { \pi }{ 75 } \) x 106
ø = \(\frac { \pi }{ 75 } \) x 106 rad
9.
λ1 = 560 nm = 560 x 10-9 m;
λ2 = 420 nm = 420 x 10-9 m;
D = 1 m ; d = 3mm = 3 x 10-3 m
கொடுக்கப்பட்ட y மதிப்பிற்கு, n மற்றும் λ ஆகியவை ஒன்றுக்கொன்று எதிர்த்தகவாகும்.
λ1 இன், n வது பொலிவுப்பட்டை, λ2 வின் (n+1) வது பொலிவுப்பட்டையுடன் ஒன்றிணைக்கிறது என்க
n வது பொலிவுப்பட்டைக்கான சமன்பாடு, yn = \(n\frac { \lambda D }{ d } \)
இங்கு, \(n\frac { { \lambda }_{ 1 }D }{ d } =(n+1)\frac { { \lambda }_{ 2 }D }{ d } \) (λ1 > λ2)
nλ1 = (n + 1)λ2 அல்லது \(\frac { { \lambda }_{ 1 } }{ { \lambda }_{ 2 } } =\frac { (n+1) }{ n } \)
1+\(\frac { 1 }{ n } \) =\(\frac { 560\times { 10 }^{ -9 } }{ 420\times { 10 }^{ -9 } } \) அல்லது 1+\(\frac { 1 }{ n } =\frac { 4 }{ 3 } \)
\(\frac { 1 }{ n } =\frac { 4 }{ 3 } \) அல்லது n = 3
எனவே, λ1 னின் 3 வது பொலிவுப்பட்டை, λ2 வின் 4 வது பொலிவுப்பட்டையுடன் மையப்பட்டையிலிருந்து y தொலைவில் ஒன்றிணைகிறது.
மையப்பட்டையிலிருந்து, இரண்டு பொலிவுப் பட்டைகளும் ஒன்றிணையும் சிறுமத் தொலைவு,
yn = \(n\frac { \lambda D }{ d } \)
yn = 3 x \(\frac { 560\times { 10 }^{ -9 }\times 1 }{ 3\times { 10 }^{ -3 } } \) = 560 x 10-6 m
yn = 0.560 x 10-3 m = 0.56 mm
10.
d = 0.15 mm = 0.15 x 10-3 m; D = 2 m; λ = 450 nm = 450 x 10-9 m; n = 4/3
(i) n வது பொலிவுப்பட்டைக்கான சமன்பாடு
yn = \(n\frac { \lambda D }{ d } \)
இரண்டாவது பொலிவுப்பட்டையின் தொலைவு
y2 = 2 x \(\frac { 450\times { 10 }^{ -9 }\times 2 }{ 0.15\times { 10 }^{ -3 } } \)
n வது கரும்பட்டைக்கான சமன்பாடு,
yn = \(\frac { \left( 2n-1 \right) \lambda }{ 2 } \frac { \lambda D }{ d } \)
மூன்றாவது கரும்பட்டையின் தொலைவு,
y3 = \(\frac { 5 }{ 2 } \times \frac { 450\times { 10 }^{ -9 }\times 2 }{ 0.15\times { 10 }^{ -3 } } \)
y2 = 15 x 10-3 m = 15mm
(ii) பட்டை அகலத்திற்கான சமன்பாடு, \(\beta \) = \(\frac { \lambda D }{ d } \) மதிப்புகளைப் பிரதியிடும்போது,
\(\beta \) = \(\frac { 450\times { 10 }^{ -9 }\times 2 }{ 0.15\times { 10 }^{ -3 } } \)
\(\beta \) = 6 x 10-3 m = 6mm
(iii) பிளவுகளுக்கும், திரைக்கும் இடையே உள்ள தொலைவை (D) அதிகரிக்கும் போது, பட்டை அகலமும் அதிகரிக்கும்,
\(\beta =\frac { \lambda D }{ d } \) அல்லது \(\beta \) ∝ D
(iv) 4/3 ஒளிவிலகல் எண் கொண்ட நீரில், முழு அமைப்பையும் மூழ்கவைக்கும் போது பட்டை அகலம் குறையும்.
\(\beta =\frac { \lambda D }{ d } \) அல்லது \(\beta \) ∝ λ
அலை நீளமானது ஒளிவிலகல் எண்ணின் n மடங்குக்கு குறையும். எனவே ,
\(\beta \) ∝ λ மற்றும் \(\beta' \) ∝ λ'
நாம் அறிந்த படி, λ' =\(\frac { \lambda }{ n } \)
\(\frac { \beta ' }{ \beta } =\frac { \lambda ' }{ \lambda } =\frac { \lambda /n }{ \lambda } =\frac { 1 }{ n } \) அல்லது \(\beta' \)= \(\frac { \beta }{ n } =\frac { 6\times { 10 }^{ -3 } }{ 4/3 } \)
\(\beta' \) = −4.5 x 10-3m = 4.5 mm
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th English Supplementary - 3 - The Hour of Truth (Play) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Poem - 3 - All the World’s a Stage Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Prose - 3 - In Celebration of Being Alive Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Supplementary - 2 - Life of Pi Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards