12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 03/01/2020
ஒளியியல் 12th Physics - Optics Model Question Paper
12ஆம் வகுப்பு Physics / இயற்பியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Physics / இயற்பியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Physics Test1.
ஈறிலாத் தொலைவில் பிம்பம் தோன்றும் கூட்டு நுண்ணோக்கியின் உருப்பெருக்கத்திறன் 100. பொருளருகு லென்சின் குவியத்தூரம் 0.5 cm மற்றும் குழலின் நீளம் 6.5 cm என இருந்தால், கண்ணருகு லென்சின் குவியத்தூரத்தின் மதிப்பு என்ன?
2.
கோளக ஆடி ஒன்றிற்கான கார்ட்டீசியன் குறியீடு மரபுகளைக் கூறுக.
3.
கொடுக்கப்பட்டுள்ள இரண்டு நேர்வுகளில் புள்ளிப்பொருள் O வின் பிம்பம் எங்கு தோன்றும் எனக் கண்டுபிடிக்க. பரப்பின் வளைவு ஆரம் R = 15 cm, n1 = 1 மற்றும் n2 = 2 எனக் கொள்க.
நேர்வு i) பரப்பிற்கு இடமாக 10 cm தொலைவில் O உள்ளபோது.
நேர்வு ii) பரப்பிற்கு இடமாக 30 cm தொலைவில் O உள்ளபோது.

4.
15.0 cm குவியத்தூரம் கொண்ட குழிஆடியின் முன்னே 20.0 cm தொலைவில் பொருளொன்று வைக்கப்பட்டுள்ளது.
அ) தெளிவான பிம்பத்தினைப் பெற, குழி ஆடியிலிருந்து திரையை எவ்வளவு தொலைவில் வைக்க வேண்டும்?
ஆ) பிம்பத்தின் தன்மை என்ன?
5.
நிறமாலைமானியைக் கொண்டு, முப்பட்டகப் பொருளின் ஒளிவிலகல் எண்ணைக் காணும் சோதனையை விவரி.
6.
யங் இரட்டைப் பிளவு ஆய்வு அமைப்பை விளக்கி, பாதை வேறுபாட்டிற்கான கோவையைப் பெறுக.
7.
லென்ஸ் உருவாக்குபவரின் சமன்பாட்டை வருவித்து, அதன் முக்கியத்துவத்தை எழுதுக.
8.
5000 Å அலை நீளமுடைய ஒற்றை நிற ஒளி, ஒற்றைப்பிளவின் வழியே சென்று விளிம்பு விளைவடைந்து படத்தில் காட்டியுள்ளவாறு மையப்பெருமத்தை ஏற்படுத்துகிறது. விளிம்பு விளைவை ஏற்படுத்தும் பிளவின் தடிமனைக் காண்க.

9.
யங் இரட்டைப்பிளவு ஆய்வில், இரண்டு பிளவுகள் 0.15 mm தொலைவில் பிரித்துவைக்கப்பட்டுள்ளன, அப்பிளவுகளிலிருந்து 2 m தொலைவில் திரை அமைந்துள்ளது. பயன்படுத்தப்படும் ஒளியின் அலை நீளம் 450 nm எனில், பின்வருவனவற்றைக் கண்டுபிடி
(i) மையப் பொலிவுப்பட்டையிலிருந்து, இரண்டாவது பொலிவுப்பட்டையின் தொலைவு மற்றும் மூன்றாவது கரும்பட்டையின் தொலைவு ஆகியவற்றைக் காண்க.
(ii) பட்டை அகலத்தைக் காண்க
(iii) பிளவுகளை விட்டு, திரையைத் தூரமாக நகர்த்தும் போது குறுக்கீட்டுப் பட்டை அமைப்பில் என்ன மாற்றம் நிகழும்?
(iv) இம்முழு அமைப்பையும் 4/3 ஒளிவிலகல்எண் கொண்ட நீரில் மூழ்கவைக்கும் போது, பட்டை அகலத்தில் ஏற்படும் மாற்றம் என்ன?
10.
படத்தில் காட்டப்பட்டுள்ள யங் இரட்டைப் பிளவு ஆய்வில் ஒரு துளை கண்ணாடி ஒன்றினால் மூடப்படுகிறது எனில், மையப் பெருமம் எங்கு அமையும்?
கீழ்நோக்கி இடம்பெயரும்
மேல்நோக்கி இடம்பெயரும்
அங்கேயே தொடர்ந்து இருக்கும்
கொடுக்கப்பட்ட விவரங்கள் போதுமானதல்ல
11.
பல்வேறு வண்ணங்களில் எழுதப்பட்ட எழுத்துகளின் மீது (ஊதா, பச்சை, மஞ்சள், மற்றும் சிவப்பு) சமதளக் கண்ணாடி ஒன்று வைக்கப்பட்டுள்ளது. எந்த வண்ணத்தில் எழுதப்பட்ட எழுத்து அதிக உயரத்தில் தெரியும்?
சிவப்பு
மஞ்சள்
பச்சை
ஊதா
12.
அடர்மிகு ஊடகம் ஒன்றில் பட்டு ஒளி எதிரொளிப்பு அடையும் போது, அதன் கட்டத்தில் எவ்வகையான மாற்றங்கள் ஏற்படும்?
13.
ஒளிச்செறிவு (அல்லது) வீச்சுப் பகுப்பு என்றால் என்ன?
14.
கானல் நீர் மற்றும் குளிர் மாயத்தோற்றம் (looming) என்றால் என்ன?
1.
ஈறில்லா தொலைவில் பிம்பம் தோன்றும் போது,
\({ m }_{ 0 }=\cfrac { \left( { L }_{ \alpha }-{ f }_{ 0 }-{ f }_{ e } \right) D }{ { f }_{ 0 }{ f }_{ e } } \)
\({ m }_{ \alpha }=100;{ f }_{ 0 }=0.5cm;{ f }_{ e }=?\)
\({ L }_{ \alpha }=6.5cm,D=25cm\)
\(100=\left( \cfrac { 6.5-0.5.{ f }_{ e } }{ 0.5\times { f }_{ e } } \right) \times 25\)
\(=\left( \cfrac { 6-{ f }_{ e } }{ 0.5f } \right) \times 25\)
\(100\times 0.5{ f }_{ e }=150-25{ f }_{ e }\)
\(50{ f }_{ e }=150-25{ f }_{ e }\)
\(75{ f }_{ e }=150\)
\({ f }_{ e }=150/75=2cm\)
கண்ணருகு லென்சின் குவியத்தூரம் \({ f }_{ e }=2cm\)
2.
1. படும் ஒளியினை, இடப்பக்கத்திலிருந்து வலப்பக்கம் வருவது போன்று எடுக்க வேண்டும்.
(அதாவது பொருள் ஆடிக்கு இடப்பக்கமாக இருக்க வேண்டும்)
2. அனைத்துத் தொலைவுகளும் ஆடிமுனையிலிருந்து தான் அளக்கப்பட வேண்டும்.
(ஆடிமுனையினைத் தொடக்கப் புள்ளியாகக் கருதவேண்டும்)
3. ஆடிமுனைக்கு வலப்புறமாக, முதன்மை அச்சுக்கு இணையாக அளக்கப்படும் தூரத்தை நேர்குறி தூரமாகக் கருத வேண்டும்.
4. ஆடிமுனைக்கு இடப்புறமாக, முதன்மை அச்சுக்கு இணையாக அளக்கப்படும் தூரத்தை எதிர்குறி தூரமாகக் கருத வேண்டும்.
5. முதன்மை அச்சுக்குச் செங்குத்தாக, மேல்நோக்கிய உயரங்களை நேர்குறி உயரங்களாகக் கருத வேண்டும்.
6. முதன்மை அச்சுக்குச் செங்குத்தாக, கீழ்நோக்கிய உயரங்களை எதிர்குறி உயரங்களாகக் கருத வேண்டும்.
3.
நேர்வு i) \(\cfrac { { n }_{ 2 } }{ v } -\cfrac { { n }_{ 1 } }{ u } =\cfrac { \left( { n }_{ 2 }-{ n }_{ 1 } \right) }{ R } \)
குறியீட்டு மரபுகளைப் பயன்படுத்தும்போது, u = –10 cm, R = 15 cm
\(\cfrac { 2 }{ v } -\cfrac { 1 }{ -10 } =\cfrac { \left( 2-1 \right) }{ 15 } ;\cfrac { 2 }{ v } +\cfrac { 1 }{ 15 } =\cfrac { \left( 1 \right) }{ 10 } \)
∴ = − 60 cm
[பரப்பிற்கு இடமாக 60 cm தொலைவில் ஒரு மாயப்பிம்பம் உருவாகும்]
நேர்வு ii) \(\cfrac { { n }_{ 2 } }{ v } -\cfrac { { n }_{ 1 } }{ u } =\cfrac { \left( { n }_{ 2 }-{ n }_{ 1 } \right) }{ R } \)
குறியீட்டு மரபுகளைப் பயன்படுத்தும்போது, u = –30 cm, R = 15 cm
\(\cfrac { 2 }{ v } -\cfrac { 1 }{ -30 } =\cfrac { \left( 2-1 \right) }{ 15 } ;\cfrac { 2 }{ v } +\cfrac { 1 }{ 30 } =\cfrac { \left( 1 \right) }{ 15 } \)
∴ = 60 cm
[பரப்பிற்கு வலமாக 60 cm தொலைவில் ஒரு மெய்ப்பிம்பம் உருவாகும்]
4.
f = -15cm, u = –20 cm
(அ) ஆடிச்சமன்பாட்டிலிருந்து \(\frac { 1 }{ v } +\frac { 1 }{ u } =\frac { 1 }{ f } \)
v யினைக் கண்டறிய பின்வருமாறு மாற்றி அமைக்கவும் \(\frac { 1 }{ v } =\frac { 1 }{ f } -\frac { 1 }{ u } \)
f மற்றும் u வின் மதிப்புகளைப் பிரதியிடு, \(\frac { 1 }{ v } =\frac { 1 }{ -15 } -\frac { 1 }{ -20 } \)
\(\frac { 1 }{ v } =\frac { \left( -20 \right) -\left( -15 \right) }{ 300 } =\frac { -5 }{ 300 } =\frac { -1 }{ 60 } \)
v = −60.0 cm
குழிஆடியின் இடப்புறத்தில் 60.0 cm தொலைவில் பிம்பம் தோன்றும்.
(ஆ) உருப்பெருக்கம், m \(\frac { h' }{ h } =\frac { v }{ u } \)
m = \(\frac { h' }{ h } =\frac { (-60) }{ (-20) } =-3\)
உருப்பெருக்கம் எதிர்குறியில் உள்ளதால், தலைகீழான பிம்பம் கிடைக்கும்.
உருப்பெருக்கத்தின் எண்மதிப்பு 3. எனவே, பிம்பம் மூன்று மடங்கு பெரியதாகக் காணப்படும்.
குழிஆடியின் இடப்புறமாக பிம்பம் தோன்றுவதால் பிம்பம் மெய்ப்பிம்பமாகும்.
5.
நிறமாலைமானியின் தொலைநோக்கி, இணையாக்கி மற்றும் முப்பட்டக மேடை போன்றவற்றின் தொடக்கச் சீரமைப்புகளைச் செய்ய வேண்டும். முப்பட்டகக் கோணம் மற்றும் சிறும திசைமாற்றக் கோணம் ஆகியவற்றைச் கண்டறிந்து முப்பட்டகப் பொருளின் ஒளிவிலகல் எண்ணைக் கணக்கிடலாம்.
(i) முப்பட்டகக் கோணம் (A)
முப்பட்டகத்தின் ஒளிவிலகுப் பக்கங்கள் சந்திக்கும் மூலைகள், இணையாக்கியைப் பார்க்கும் வகையில் முப்பட்டக மேடை மீது முப்பட்டகம் வைக்கப்படுகிறது. இவை படத்தில் காட்டப்பட்டுள்ளது. இணையாக்கியின் பிளவு சோடியம் ஆவி விளக்கினைக் கொண்டு ஒளியூட்டப்படுகிறது. இணையாக்கியிலிருந்து வரும் இணைக்கதிர்கள் முப்பட்டகத்தின் AB மற்றும் AC பக்கங்களில் விழும்படி முப்பட்டகம் சரிசெய்யப்படுகிறது. AB பக்கத்தில் பட்டு எதிரொளித்த பிளவின் பிம்பம், தொலைநோக்கியின் குறுக்குக்கம்பியுடன் பொருந்தும் வகையில் தொலைநோக்கியைச் சுழற்றி T1. நிலையில் பொருத்தி வெர்னியர் அளவீடுகளை குறித்துக் கொள்ள. மீண்டும் தொலைநோக்கியைக் கழற்றி, முப்பட்டகத்தின் AC பக்கத்தில் பட்டு எதிரொளித்த பிளவின் பிம்பம் தொலைநோக்கியின் குறுக்குக் கம்பியுடன் பொருந்தும் வகையில் T2, நிலையில் நிலைநிறுத்த வேண்டும். இதற்கான வெர்னியர் அளவீடுகளைக் குறித்துக் கொள்ள வேண்டும்.
இவ்விரண்டு அளவீடுகளின் வேறுபாடு, தொலைநோக்கி சுழற்றப்பட்டக் கோணத்தைக் கொடுக்கும். இக்கோணம் முப்பட்டகக் கோணத்தின் இரண்டு மடங்கிற்குச் சமமாகும். இம்மதிப்பில் பாதி முப்பட்டகக் கோணத்தைக் (A) கொடுக்கும்
(ii) சிறுமதிசைமாற்றக்கோணம் (D) இணையாக்கியிலிருந்து வரும் ஒளி முப்பட்டகத்தின் ஓர் ஒளிவிலகு பக்கத்தின் மீது விழுந்து, மறுபக்கத்தின் வழியே ஒளிவிலகல் அடைந்த ஒளியைத் தொலைநோக்கியின் வழியே பார்க்கும் வகையில் படத்தில் காட்டியுள்ளவாறு முப்பட்டகத்தை மேடை மீது பொருத்த வேண்டும். தற்போது திசைமாற்றக் கோணத்தின் மதிப்பு குறையும் வகையில் முப்பட்டக மேடையைச் சுழற்ற வேண்டும். ஒரு கட்டத்தில் தொலைநோக்கியின் வழியே பார்க்கும் பிம்பம் ஓர் இடத்தில் நின்று, முப்பட்டக மேடையை ஏற்கனவே சுழற்றிய திசையிலேயே தொடர்ந்து சுழற்றும்போது பின்வாங்க ஆரம்பிக்கும். இதன் காரணமாகத் திசைமாற்றக் கோணத்தின் மதிப்பு அதிகரிக்கும். பிம்பம் எந்த இடத்தில் பின்வாங்க ஆரம்பிக்கிறதோ, அந்த இடத்தில் தொலைநோக்கியின் செங்குத்துக் குறுக்குக் கம்பி பொருந்தும்படி தொலைநோக்கியை நிலைநிறுத்த வேண்டும். இது சிறுமதிசைமாற்ற நிலையைக் கொடுக்கும். இந்நிலைக்கான வெர்னியர் அளவீடுகளைக் குறித்து கொள்ள வேண்டும்.)
தற்போது முப்பட்டகத்தை நீக்கிவிட்டு, இணையாக்கியிலிருந்து வரும் பிம்பத்தை நேரடியாக தொலைநோக்கியின் வழியே பார்க்கும் வகையில் தொலைநோக்கியைச் சுழற்ற வேண்டும். நேரடி பிம்பத்துடன் செங்குத்துக் குறுக்குக்கம்பி பொருந்தும் வகையில் அமைத்து அதற்கான வெர்னியர் அளவீடுகளைக் குறித்துக் கொள்ள வேண்டும். இவ்விரண்டு அளவீடுகளின் வேறுபாடு சிறுமதிசைமாற்றக் கோணத்தைக் (D) கொடுக்கும். முப்பட்டகத்தால் செய்யப்பட்ட பொருளின் ஒளிவிலகல் எண்ணைப் பின்வரும் சமன்பாட்டினைப் பயன்படுத்திக் கணக்கிடலாம்.
\(n=\cfrac { sin\left( \frac { A+D }{ 2 } \right) }{ sinA/2 } \)
வெற்றிட முப்பட்டகம் ஒன்றினுள் திரவத்தை நிரப்பி, மேற்கூறப்பட்ட அதே முறையில் சோதனைகளை நிகழ்த்தி திரவத்தின் ஒளிவிலகல் எண்ணைக் காணலாம்.
6.

ஒளிபுகாத் திரையில் S1 மற்றும் S2 என்ற இரண்டு துளைகள் 0.3 மி.மீ இடைவெளியில் அமைக்கப்பட்டு S என்ற ஒளிமூலத்திலிருந்து சமதொலைவில் இருக்கும்படி அமைக்கப்பட்டது. ஒவ்வொரு துளையின் அகலமும் 0.03 மி.மீ. S1 மற்றும் S2 ஓரியல் மூலங்களாகும்.
பிளவுகள் S1, மற்றும் S2 விலிருந்து வரும் அலைமுகப்புகள் இரட்டைப் பிளவின் வலப்பக்கமாக 1மீ தொலைவில் XY என்ற திரை வைக்கப்பட்டபோது, அத்திரையில் சம அகலமுடைய பொலிவு மற்றும் கரும்பட்டைகள் அடுத்தடுத்து தோன்றுகின்றன.
S1, S2 விலிருந்து திரையின் மையப்புள்ளி O வை அடையும் ஒளி அலைகள், சமதொலைவைக் கடந்து வந்துள்ளதால் அவை படத்தில் காட்டியுள்ளவாறு ஒத்தகட்டத்தில் இருக்கும். இவ்விரண்டு அலைகளும் ஆக்கக்குறுக்கீட்டு விளைவை ஏற்படுத்தி, மையப்புள்ளியில் பொலிவுப்பட்டையை உருவாக்கும். இதற்கு மையப் பொலிவுப்பட்டை என்று பெயர். ஏதேனும் ஒரு பிளவை மூடிவிட்டால் குறுக்கீட்டுப்பட்டைகள் மறைந்து திரை சீராக ஒளியூட்டப்பட்டிருக்கும். இதிலிருந்து, திரையில் தோன்றும் பொலிவு மற்றும் கரும் பட்டைகள் ஒளியின் குறுக்கீட்டு விளைவினால் ஏற்பட்டவை என்பதை அறியலாம்.
பாதை வேறுபாட்டிற்கான சமன்பாடு:

ஓரியல் மூலங்களாகச் செயல்படும் S1 மற்றும் S2. பிளவுகளுக்கிடையே உள்ள தொலைவு d என்க. இவை \(\lambda \) அலைநீளமுடைய ஒளியால் ஒளியூட்டப்படுகிறது. இரட்டைப் பிளவுகளுக்கு இணையாக D தொலைவில் திரை ஒன்று வைக்கப்பட்டுள்ளது. திரையின் மையப்புள்ளி. இது S1, மற்றும் S2 விலிருந்து சமதொலைவில் உள்ளது. எனவே ஒளிப்பாதையின் வேறுபாடு சுழி.
0 விலிருந்து y தொலைவில் உள்ள புள்ளி P ஐக் கருதுக. புள்ளி P யில் பாதை வேறுபாடு \(\delta =\frac { yd }{ D } \) ஆகும்.
.P யில் பொலிவுப்பட்டை தோன்ற நிபந்தனை பாதை வேறுபாடு \(\delta =n\lambda \) என இருக்க வேண்டும்.
n = 0, 1, 2, 3, ....
எனவே \(\cfrac { dy }{ D } =n\lambda \)
\({ y }_{ n }=n\cfrac { \lambda D }{ d } \)
இதே போன்று முதல் கருமைப்பட்டை தோன்ற நிபந்தனை, பாதைவேறுபாடு\(\delta =\left( 2n-1 \right) \lambda /2\) என இருக்க வேண்டும். n = 1, 2, 3,...
எனவே \(\cfrac { dy }{ D } =\left( 2n-1 \right) \lambda /2\)
\({ y }_{ n }=\cfrac { \left( 2n-1 \right) \lambda D }{ 2d } \)
இரண்டு அடுத்தடுத்த பொலிவுபட்டை அல்லது கரும்பட்டைகளுக்கு இடையே உள்ள தொலைவு பட்டை அகலம் எனப்படும். எனவே, மையப்புள்ளி O விலிருந்து n -வது பொலிவுப்பட்டையின் தொலைவு \({ y }_{ n }=n\cfrac { \lambda D }{ d } \)
(n+1) வது பொலிவுப்பட்டையின் தொலைவு = \({ y }_{ (n+1) }=\cfrac { \left( n+1 \right) \lambda D }{ d } \)
பட்டை அகலம் \(\beta ={ y }_{ (n+1) }-{ y }_{ n }=\left( \left( n+1 \right) \cfrac { \lambda D }{ d } \right) -\left( n\cfrac { \lambda D }{ d } \right) \)
\(\beta =\cfrac { \lambda D }{ d } \) ..(4)
இவ்வாறே மையப்புள்ளி O விலிருந்து (n+1) வது கருமைப்பட்டைக்கும் n-வது கருமைப்பட்டைக்கும் இடையே உள்ள தொலைவு பட்டை அகலத்தை கொடுக்கும்.
\(\beta ={ y }_{ \left( n+1 \right) }{ y }_{ n }=\left( \cfrac { \left( 2(n+1)-1 \right) }{ 2 } \cfrac { \lambda D }{ d } \right) -\left( \cfrac { \left( 2n-1 \right) }{ 2 } \cfrac { \lambda D }{ d } \right) \)
\(\beta =\cfrac { \lambda D }{ d } \)...(5)
7.
ஒளிவிலகல் எண் n2 கொண்ட பொருளினால் செய்யப்பட்ட மெல்லிய குவிலென்ஸ் ஒன்றைக் கருதுக. இது ஒளிவிலகல் எண் n1, கொண்ட ஊடகத்தில் வைக்கப்பட்டுள்ளது. R1, மற்றும் R2 என்பவை இரண்டு கோளகப்பரப்புகள் முறையே (1) மற்றும் (2) இன் வளைவு ஆரங்கள் என்க. மேலும் P என்பது லென்ஸ் முனையாகும். முதன்மை அச்சில் உள்ள O என்ற புள்ளிப்பொருளைக் கருதுக. அப்பொருளிலிருந்து புறப்படும் ஒளிக்கதிர் கோளகப்பரப்பு (1) இல் பட்டு விலகலடைந்து I' என்ற பிம்பத்தைத் தோற்றுவிக்கவேண்டும். ஆனால் இது நடைபெறுவதற்கு முன்பு ஒளிக்கதிர் கோளகப்பரப்பு (2) ஆல் விலகல் அடைந்து விடுகிறது. எனவே இறுதி பிம்பம் 1 படத்தில் காட்டியுள்ளவாறு கிடைக்கிறது.
கோளாக பரப்பினால் ஏற்படும் ஒளிவிலகலுக்கான பொதுவான சமன்பாட்டின்படி
\(\cfrac { { n }_{ 2 } }{ v } -\cfrac { { n }_{ 1 } }{ u } =\cfrac { \left( { n }_{ 2 }-{ n }_{ 1 } \right) }{ R } \)
ஒளிவிலகு பரப்பு (1) இல், ஒளிக்கதிர் n1 இலிருந்து n2 க்கு செல்கிறது.
\(\cfrac { { n }_{ 2 } }{ v } -\cfrac { { n }_{ 1 } }{ u } =\cfrac { \left( { n }_{ 2 }-{ n }_{ 1 } \right) }{ { R }_{ 1 } } \)
ஒளிவிலகு பரப்பு (2) இல் ஒளிக்கதிர் n2 ஊடகத்தில் இருந்து n1 ஊடகத்திற்கு செல்கிறது.
\(\cfrac { { n }_{ 1 } }{ v } -\cfrac { { n }_{ 2 } }{ v' } =\cfrac { \left( { n }_{ 1 }-{ n }_{ 2 } \right) }{ { R }_{ 2 } } \)
சமன்பாடு (1) மற்றும் (2) இரண்டையும் கூட்டும்போது
\(\cfrac { { n }_{ 1 } }{ v } -\cfrac { { n }_{ 1 } }{ u } =\left( { n }_{ 2 }-{ n }_{ 1 } \right) \left[ \cfrac { 1 }{ { R }_{ 1 } } -\cfrac { 1 }{ { R }_{ 2 } } \right] \)
மேலும் சமன்பாட்டினைச் சுருக்கி, மாற்றி அமைக்கும்போது
\(\cfrac { 1 }{ v } -\cfrac { 1 }{ u } =\left[ \cfrac { { n }_{ 2 }-{ n }_{ 1 } }{ { n }_{ 1 } } \right] \left[ \cfrac { 1 }{ { R }_{ 1 } } -\cfrac { 1 }{ { R }_{ 2 } } \right] \\\)
\( \cfrac { 1 }{ v } -\cfrac { 1 }{ u } =\left[ \cfrac { { n }_{ 2 } }{ { n }_{ 1 } } -1 \right] \left[ \cfrac { 1 }{ { R }_{ 1 } } -\cfrac { 1 }{ { R }_{ 2 } } \right] \)
பொருள் ஈறில்லாத தொலைவில் இருந்தால்,பிம்பம் லென்ஸின் குவியத்தில் அமையும் போது அதாவது \(u=\infty ,v=f\) என்ற சமன்பாடு பின்வருமாறு மாற்றமடையும்.
\(\cfrac { 1 }{ f } -\cfrac { 1 }{ \infty } =\left[ \cfrac { { n }_{ 2 } }{ { n }_{ 1 } } -1 \right] \left[ \cfrac { 1 }{ { R }_{ 1 } } -\cfrac { 1 }{ { R }_{ 2 } } \right] \)
\(\cfrac { 1 }{ f } =\left( n-1 \right) \left[ \cfrac { 1 }{ { R }_{ 1 } } -\cfrac { 1 }{ { R }_{ 2 } } \right] \)
லென்ஸின் ஒளிவிலகல் எண் n2 மேலும்,லென்ஸ் காற்று ஊடகத்தில் வைக்கப்பட்டுள்ளது.
அதாவது,
\(\cfrac { 1 }{ f } =\left( n-1 \right) \left[ \cfrac { 1 }{ { R }_{ 1 } } -\cfrac { 1 }{ { R }_{ 2 } } \right] \)
மேற்கண்ட சமன்பாட்டிற்கு லென்ஸ் உருவாக்குபவரின் சமன்பாடு என்று பெயர். ஏனெனில், இச்சமன்பாட்டினை அடிப்படையாகக் கொண்டு நாம் விரும்பும் குவியத்தூரத்திற்கு எவ்வளவு வளைவு ஆரம் கொண்ட கோளகப்பரப்பு தேவை என்பதையும், எந்தக் குறிப்பிட்ட ஒளிவிலகல் எண் கொண்ட பொருளைப் பயன்படுத்தவேண்டும் என்பதையும் இச்சமன்பாட்டிலிருந்து லென்ஸ் உருவாக்குபவர் அறிந்துக்கொள்கிறார்.
8.
λ = 5000 Å = 5000 x 10-10 m; sin 30o = 0.5; n = 1; a = ?
விளிம்பு விளைவு சிறுமத்திற்கான சமன்பாடு, a sin θ = nλ
மையப்பெருமம், முதல் சிறுமம் வரை பரவிக் காணப்படும் எனவே, n = 1
சமன்பாட்டை மாற்றியமைக்கும் போது, a = \(\frac { \lambda }{ sin\theta } \)
மதிப்புகளைப் பிரதியிடும் போது, a = \(\frac { 5000\times { 10 }^{ -10 } }{ 0.5 } \)
a = 1 x 10-6 m = 0.001 x 10-3 m = 0.001 mm
9.
d = 0.15 mm = 0.15 x 10-3 m; D = 2 m; λ = 450 nm = 450 x 10-9 m; n = 4/3
(i) n வது பொலிவுப்பட்டைக்கான சமன்பாடு
yn = \(n\frac { \lambda D }{ d } \)
இரண்டாவது பொலிவுப்பட்டையின் தொலைவு
y2 = 2 x \(\frac { 450\times { 10 }^{ -9 }\times 2 }{ 0.15\times { 10 }^{ -3 } } \)
n வது கரும்பட்டைக்கான சமன்பாடு,
yn = \(\frac { \left( 2n-1 \right) \lambda }{ 2 } \frac { \lambda D }{ d } \)
மூன்றாவது கரும்பட்டையின் தொலைவு,
y3 = \(\frac { 5 }{ 2 } \times \frac { 450\times { 10 }^{ -9 }\times 2 }{ 0.15\times { 10 }^{ -3 } } \)
y2 = 15 x 10-3 m = 15mm
(ii) பட்டை அகலத்திற்கான சமன்பாடு, \(\beta \) = \(\frac { \lambda D }{ d } \) மதிப்புகளைப் பிரதியிடும்போது,
\(\beta \) = \(\frac { 450\times { 10 }^{ -9 }\times 2 }{ 0.15\times { 10 }^{ -3 } } \)
\(\beta \) = 6 x 10-3 m = 6mm
(iii) பிளவுகளுக்கும், திரைக்கும் இடையே உள்ள தொலைவை (D) அதிகரிக்கும் போது, பட்டை அகலமும் அதிகரிக்கும்,
\(\beta =\frac { \lambda D }{ d } \) அல்லது \(\beta \) ∝ D
(iv) 4/3 ஒளிவிலகல் எண் கொண்ட நீரில், முழு அமைப்பையும் மூழ்கவைக்கும் போது பட்டை அகலம் குறையும்.
\(\beta =\frac { \lambda D }{ d } \) அல்லது \(\beta \) ∝ λ
அலை நீளமானது ஒளிவிலகல் எண்ணின் n மடங்குக்கு குறையும். எனவே ,
\(\beta \) ∝ λ மற்றும் \(\beta' \) ∝ λ'
நாம் அறிந்த படி, λ' =\(\frac { \lambda }{ n } \)
\(\frac { \beta ' }{ \beta } =\frac { \lambda ' }{ \lambda } =\frac { \lambda /n }{ \lambda } =\frac { 1 }{ n } \) அல்லது \(\beta' \)= \(\frac { \beta }{ n } =\frac { 6\times { 10 }^{ -3 } }{ 4/3 } \)
\(\beta' \) = −4.5 x 10-3m = 4.5 mm
10.
(b)
மேல்நோக்கி இடம்பெயரும்
11.
ஊதா வண்ணத்திற்கான ஒளிவிலகல் எண் அதிகம். எனவே மற்ற வண்ணங்களை விட ஊதா வண்ணத்திற்கான தோற்ற ஆழம் குறைவு. எனவே அதிகமாக உயர்த்தப்பட்டிருக்கும்
12.
அடர்மிகு ஊடகம் ஒன்றில் பட்டு ஒளி எதிரொளிப்பு அடையும் போது அதன் கட்டத்தில் 180° கட்ட வேறுபாடு ஏற்படும்.
13.
பகுதி வெள்ளி பூசப்பட்ட கண்ணாடி வழியே ஒளியைச் செலுத்தும்போது, ஒரே நேரத்தில் ஒளி எதிரொளிப்பு மற்றும் ஒளிவிலகல் இரண்டும் ஏற்படும். ஒரே ஒளி மூலத்திலிருந்து இரண்டு ஒளிக்கற்றைகளைப் பெறுவதால், பிரிக்கப்பட்ட இவ்விரு ஒளிக்கற்றைகளும் ஓரியல் மூலங்களாக செயல்படும்.
(எ.கா) மைக்கல்சன் குறுக்கீட்டுமானி.
14.
வெப்பமான காலநிலைகளில் பாலைவனங்களில் நீர்த்தடாகம் போன்று தோற்றமளிக்கும். இது வளியில் ஒளிவிலகல் மற்றும் முழு அக எதிரொளிப்பால் தோன்றும் ஒரு மாயத் தோற்றம் ஆகும். தரையிலுள்ள பொருள்களிலிருந்து வரும், ஒளிக்கதிர் உயரம் செல்லச் செல்ல தொடர்ந்து விலகலடையும். ஒரு நிலையில், படுகோணம் மதிப்பு மாறுநிலைக் கோணத்தைவிட அதிகமாகும்போது முழு அக எதிரொளிப்பு அடைந்து கானல்நீரின் எதிரிடையான விளைவு ஏற்படும். இந்நிகழ்வுக்கு குளிர் மாயத்தோற்றம் என்று பெயர்.
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards