12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 24/10/2019
ஒளியியல்
12ஆம் வகுப்பு Physics / இயற்பியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Physics / இயற்பியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Physics Test1.
589 nm அலை நீளமுடைய ஒளியை, நன்கு எதிரொளிப்பு அடையச் செய்யும், ஒளிவிலகல் எண் 1.25 கொண்ட மெல்லியதின் குறைந்தபட்ச தடிமனைக் காண்க. மேலும், ஒளி எதிரொளிப்பு அடையாமல் இருப்பதற்குத் தேவையான குறைந்தபட்ச தடிமனையும் கணக்கிடுக.
2.
5 அலகு மற்றும் 3 அலகு வீச்சுகள் கொண்ட இரண்டு ஒளிமூலங்கள் ஒன்றுடன் ஒன்று மேற்பொருந்துகின்றன. அவற்றின் பெரும மற்றும் சிறும ஒளிச்செறிவுகளுக்கு இடையேயான விகிதத்தைக் காண்க.
3.
சமபக்க முப்பட்டகம் ஒன்றின் சிறும திசைமாற்றக் கோணம் 37o எனில், முப்பட்டகப் பொருளின் ஒளிவிலகல் எண்ணைக் கணக்கிடுக.
4.
சமபக்க முப்பட்டகம் ஒன்றின்மீது, ஒற்றை நிற ஒளிக்கதிரொன்று 30o கோணத்தில் விழுந்து 75o கோணத்தில் வெளியேறுகிறது எனில், முப்பட்டகம் ஏற்படுத்திய திசைமாற்றக் கோணத்தைக் காண்க.
5.
150 cm குவியத்தூரம் கொண்ட கண்ணாடியால் செய்யப்பட்ட லென்ஸின் திறனைக் காண்க
6.
0.25 m தடிமன் கொண்ட கண்ணாடிப்பட்டகத்தின் ஒளிவிலகல் எண் 1.5 ஆகும். ஒளிக்கதிர் ஒன்று கண்ணாடிப்பட்டகத்தின் ஒரு பக்கத்தின் மீது 60o கோணத்தில் விழுந்து அடுத்த பக்கம் வழியாக வெளிவருகிறது எனில், ஒளி அடைந்த பக்கவாட்டு இடப்பெயர்ச்சி என்ன?
7.
நீச்சல் குளத்தில் 10 மீட்டர் ஆழத்திலிருந்து மேலே பார்க்கும்போது தெரியும் ஒளியூட்டத்தின் ஆரம் என்ன? பார்வைக் கூம்பின் மொத்தக் கோணமும் என்ன? (கொடுக்கப்பட்டவை, தண்ணீரின் ஒளிவிலகல் எண் 4/3)
8.
தொட்டி ஒன்றினுள் ஒன்றுடன் ஒன்று கலக்காத மற்றும் ஒளிவிலகல் எண்கள் முறையே 1.3, 1.4 மற்றும் 1.5 கொண்ட மூன்று திரவங்கள் 30 cm, 16 cm மற்றும் 20 cm உயரத்திற்கு நிரப்பி வைக்கப்பட்டுள்ளன. அத்தொட்டியின் அடிப்பரப்பில் நாணயம் ஒன்று உள்ளது. வெளியில் உள்ள காற்று ஊடகத்திலிருந்து நாணயத்தைப் பார்க்கும் போது, எந்தத் தோற்ற ஆழத்தில் நாணயம் தெரியும்? எந்த ஊடகத்தில் நாணயம் இருப்பது போன்று தோன்றும்?
9.
ஒளிபுகும் எண்ணெய்யின் வழியாகச் செல்லும் ஒளிக்கதிர், ஒளிவிலகல் எண் 1.5 கொண்ட கண்ணாடியினுள் நுழைகிறது. எண்ணெய்யைப் பொருத்துக் கண்ணாடியின் ஒளிவிலகல் எண் 1.25 எனில், எண்ணெய்யின் ஒளிவிலகல் எண் என்ன?
10.
ஒளிவிலகல் எண் 1.5 கொண்ட கண்ணாடி வழியே செல்லும் ஒளியின் வேகத்தைக் காண்க.
11.
ஒருவர், தம் முழு உருவத்தையும் கண்ணாடியில் பார்க்க வேண்டுமென்றால், கண்ணாடியின் உயரம் எவ்வளவு இருக்க வேண்டும்?
12.
ஒளி எதிரொளிக்கும் பரப்பினை θ கோணம் சாய்க்கும் போது எதிரொளிக்கும் கதிர் 2θ கோணம் சாயும் என்பதை நிரூபி.
1.
கொடுக்கப்பட்டவை λ = 589 nm = 589 × 10−9m நன்கு எதிரொளிப்பு அடையும் மெல்லேட்டிற்கு, எதிரொளிப்பு அடையும் ஒளி அலைகள் ஆக்கக் குறுக்கீட்டு விளைவை அடையவேண்டும். மெல்லேட்டிற்கான குறைந்த பட்ச பாதை வேறுபாடு λ/2 ஆகும். மெல்லேட்டினால் எதிரொளிப்பு அடைந்த ஒளி அலைகளுக்கான ஒளியியல் பாதை வேறுபாடு 2μd ஆகும். எனவே , நன்கு எதிரொளிப்பு அடைய 2μd = λ/2 ( சமன்பாடு 6.145 ன்படி, இங்கு n = 1)
மாற்றி அமை க்கும் போது, d = \(\frac { \lambda }{ 4\mu } \)
மதிப்புகளைப் பிரதியிடும்போது,
d = \(\frac { 589\times { 10 }^{ 9 } }{ 4\times 1.25 } \) = 117.8 x 10-9
d = 117.8 x 10-9 = 117.8 nm
மெல்லேட்டினால் எதிரொளிப்பு நடைபெறாமல்இருக்க வேண்டுமெனில், எதிரொளிப்பு அடைந்த ஒளி அலைகள் அழிவுக் குறுக்கீட்டு விளைவை அடையவேண்டும். மெல்லேட் மெல்லேட்டிற்கான குறைந்த பட்ச பாதைவேறுபாடு λ ஆகும் மெல்லேட்டினால் எதிரொளிப்பு அடைந்த ஒளி அலைகளுக்கான ஒளியியல் பாதை வேறுபாடு 2μd ஆகும். நன்கு எதிரொளிப்பு அடை ய 2μd = λ [சமன்பாடு 6.146 ன்படி, இங்கு n = 1]
மாற்றி அமைக்கும் போது, d = \(\frac { \lambda }{ 2\mu } \)
மதிப்புகளைப் பிரதியிடும்போது
d = \(\frac { 589\times { 10 }^{ 9 } }{ 2\times 1.25 } \) = 235.6 x 10-9
d = 235.6 x 10-9 = 235.6 nm
2.
வீச்சுகள் a1 = 5, a2 = 3
தொகுபயன் வீச்சு,
A = \(\sqrt { { a }_{ 1 }^{ 2 }+{ a }_{ 2 }^{ 2 }+{ 2a }_{ 1 }{ a }_{ 2 }cos\emptyset } \)
பின்வரும் நிபந்தனையில் தொகுபயன் வீச்சு பெருமமாகும்,
Ø = 0, cos0 = 1, Amax =\(\sqrt { { a }_{ 1 }^{ 2 }+{ a }_{ 2 }^{ 2 }+{ 2a }_{ 1 }{ a }_{ 2 } } \)
Amax =\(\sqrt { { \left( { a }_{ 1 }+{ a }_{ 2 } \right) }^{ 2 } } =\sqrt { { \left( 5+3 \right) }^{ 2 } } =\sqrt { { \left( 8 \right) }^{ 2 } } \)
= 8 அலகுகள்
பின்வரும் நிபந்தனையில் தொகுபயன் வீச்சு சிறுமமாகும்
Ø = \(\pi \), cos\(\pi \) = -1, Amin = \(\sqrt { { a }_{ 1 }^{ 2 }+{ a }_{ 2 }^{ 2 }-{ 2a }_{ 1 }{ a }_{ 2 } } \)
Amin =\(\sqrt { { \left( { a }_{ 1 }{ -a }_{ 2 } \right) }^{ 2 } } =\sqrt { { \left( 5-3 \right) }^{ 2 } } =\sqrt { { \left( 2 \right) }^{ 2 } } \)
= 2 அலகுகள்
I ∝ A2
\(\frac { { I }_{ max } }{ { I }_{ min } } =\frac { { \left( { A }_{ max } \right) }^{ 2 } }{ { \left( { A }_{ min } \right) }^{ 2 } } \)
மதிப்புகளைப் பிரதியிடும்போது,
\(\frac { { I }_{ max } }{ { I }_{ min } } =\frac { { \left( 8 \right) }^{ 2 } }{ { \left( 2 \right) }^{ 2 } } =\frac { 64 }{ 4 } \) = 16(அல்லது)
Imax : Imin = 16 : 1
3.
A = 60°; D = 37°
ஒளிவிலகல் எண் சமன்பாட்டின்படி,
n = \(\frac { \sin\left( \frac { A+D }{ 2 } \right) }{ \sin\left( \frac { A }{ 2 } \right) } \)
மதிப்புகளைப் பிரதியிடும் போது
\(\frac { \sin\left( \frac { { 60 }^{ 0 }+{ 37 }^{ 0 } }{ 2 } \right) }{ \sin\left( \frac { { 60 }^{ 0 } }{ 2 } \right) } =\frac { \sin(48.{ 5 }^{ 0 }) }{ \sin\left( { 30 }^{ 0 } \right) } =\frac { 0.75 }{ 0.5 } =1.5\)
முப்பட்டகப் பொருளின் ஒளிவிலகல் எண், n = 1.5
4.
கொடுக்கப்பட்ட முப்பட்டகம் ஒரு சமபக்க முப்பட்டகம்
எனவே, A = 60o ; i1 = 30o ; i2 = 75o
திசை மாற்றக்கோணச் சமன்பாட்டின்படி d = i1 + i2 – A
மதிப்புகளைப் பிரதியிடும் போது, d = 30° + 75°– 60° = 45°
முப்பட்டகம் ஏற்படுத்திய திசைமாற்றக்கோணம், d = 45o
5.
குவியத்தூரம் f = 150 cm (அல்லது) f = 1.5 m
லென்ஸின் திறன் சமன்பாடு, P = \(\frac { 1 }{ f } \)
கொடுக்கப்பட்ட மதிப்புகளைப் பிரதியிட்டால்
p = \(\frac { 1 }{ 1.5 } \) = 0.67 D(டையாப்டர்)
திறன் நேர்க்குறியில் உள்ளதால், இது ஒரு குவிக்கும் லென்ஸ் ஆகும்.
6.
கண்ணாடிப்பட்டகத்தின் தடிமன் t = 0.25 m, ஒளிவிலகல் எண் n = 1.5. படுகோணம் i = 60o.
ஸ்னெல் விதியைப் பயன்படுத்தும்போது, 1 × sin i = n sin r
sin r = \(\frac { \sin i }{ n } =\frac { \sin60 }{ 1.5 } \) = 0.58
r = −sin-1 0.58 = 35.25o
பக்கவாட்டு இடப்பெயர்ச்சி, L = t\(\left( \frac { \sin(i-r) }{ \cos(r) } \right) \)
L = (0.25) x \(\left( \frac { \sin(60-35.25 }{ \cos(35.25) } \right) \) = 0.1281 m
பக்கவாட்டு இடப்பெயர்ச்சி, L = 12.81 cm
7.
n = 4/3, d = 10m.
ஒளியூட்டத்தின் ஆரம், R = \(\frac { d }{ \sqrt { { n }^{ 2 }-1 } } \)
\(R=\frac { 10 }{ \sqrt { { \left( { 4 }/{ 3 } \right) }^{ 2 }-1 } } =\frac { 10\times 3 }{ \sqrt { 16-6 } } \)
R = \(\frac { 30 }{ \sqrt { 7 } } \) = 11.32 m
பார்வை கூம்பின் கோணத்தைக் காணல்,
ic = sin-1 \(\left( \frac { 1 }{ n } \right) \)
ic = sin-1 \(\left( \frac { 1 }{ { 4 }/{ 3 } } \right) \) = sin-1 \(\left( \frac { 3 }{ 4 } \right) \) = 48.6o
பார்வைக்கூம்பின் மொத்தக் கோணம்,
2ic = 2 x 48.6o = 97.2o
8.
மேலே இருந்து பார்க்கும்போது (காற்று ஊடகம்), நாணயம் அடிப்பரப்பிலேயே தொடர்ந்து தெரியும். மேலும், ஒவ்வோர் ஊடகமும் வெளியில் உள்ள காற்று ஊடகத்தைப் பொருத்துச் சுருங்கித் தெரியும். இதுகீழே உள்ள படத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஒவ்வோர் ஊடகத்திற்குமான தோற்ற ஆழச் சமன்பாடுகள்,
\({ d }_{ 1 }^{ ' }=\frac { { d }_{ 1 } }{ { n }_{ 1 } } ;{ d }_{ 2 }^{ ' }=\frac { { { d }_{ 2 } } }{ { n }_{ 2 } } ;{ d }_{ 3 }^{ ' }=\frac { { d }_{ 3 } }{ { n }_{ 3 } } \)
\({ d }^{ ' }={ d }_{ 1 }^{ ' }+{ d }_{ 2 }^{ ' }+{ d }_{ 3 }^{ ' }=\frac { { d }_{ 1 } }{ { n }_{ 1 } } +\frac { { { d }_{ 2 } } }{ { n }_{ 2 } } +\frac { { d }_{ 3 } }{ { n }_{ 3 } } \)
\({ d }^{ ' }=\frac { 30 }{ 1.3 } +\frac { 16 }{ 1.4 } +\frac { 30 }{ 1.5 } \) = 23.1 + 11.4 + 13.3
d' = 47.8 cm
9.
ngo = 1.25 மற்றும் ng = 1.5
எண்ணெய்யைப் பொருத்து கண்ணாடியின் ஒளிவிலகல் எண்
\({ n }_{ go }=\frac { { n }_{ g } }{ { n }_{ o } } \)
சமன்பாட்டினைச் சீரமைக்கும் போது
\({ n }_{ o }=\frac { { n }_{ g } }{ { n }_{ go } } =\frac { 1.5 }{ 1.25 } =1.2\)
எனவே எண்ணெய்யின் ஒளிவிலகல் எண் no = 1.2 ஆகும்.
10.

கொடுக்கப்பட்ட கண்ணாடி வழியே 2 x 108 m s-1 வேகத்தில் ஒளி செல்லும்.
11.
h உயரம் கொண்ட மனிதர் ஒருவர் செங்குத்தாக உள்ள கண்ணாடியின் முன்னே நிற்கிறார் எனக் கருதுக. அவரின் தலை மற்றும் பாதத்திலிருந்து செல்லும் ஒளிக்கதிர்கள் கண்ணாடியில் பட்டு எதிரொளித்து, அவரின் கண்கள் அடைந்தவுடன் அவர், தமது தலை மற்றும் பாதங்களைக் காண்கிறார்.

அவரின் தலை (H) மற்றும் கண் (E) இரண்டிற்கும் இடைப்பட்ட தொலைவை h1 எனவும், அவரின் பாதம் (F) மற்றும் கண் (E) இரண்டிற்கும் இடைப்பட்ட தொலைவை h2 எனவும் கொள்க. எனவே, மனிதனின் மொத்த உயரம் h = h1 + h2 ஆகும்.
எதிரொளிப்பு விதியின்படி, இரண்டு கடைக்கோடி புள்ளிகளில் ஏற்படும் எதிரொளிப்புகளிலும் (extreme reflections) படுகோணமும் எதிரொளிப்புக் கோணமும் ஒன்றுக்கொன்று சமமாகும். மேலும், இவ்விரண்டு எதிரொளிப்புகளிலும் படுகதிர் மற்றும் எதிரொளிப்புக் கதிர்களுக்கு இடையே உள்ள கோணத்தின் இருசமவெட்டியே, செங்குத்துக் கோடாகும். வடிவியலின்படி மனிதரின் முழு உருவத்தையும் காண, கண்ணாடி, அவரின் உயரத்தில் பாதி அளவு இருந்தால் போதுமானதாகும். \(\frac { { h }_{ 1 }+{ h }_{ 2 } }{ 2 } =\frac { h }{ 2 } \)
கண்ணாடியின் உயரம், மனிதருக்கும் கண்ணாடிக்கும் இடையே உள்ள தூரத்தைச் சார்ந்ததா?
12.
எதிரொளிக்கும் பரப்பு ABக்கு, படுகதிர் IO மற்றும் எதிரொளிப்புக்கதிர் OR1 ஆகும். இங்கு, எதிரொளிக்கும் பரப்புக்குச் செங்குத்தைப் பொருத்து (குத்துக்கோடு N) i என்பது படுகோணமாகும். இது எதிரொளிப்புக் கோணத்திற்குச் சமமாகும். இது படத்தில் காட்டப்பட்டுள்ளது. எதிரொளிக்கும் பரப்பு AB ஐ θ கோணம் சாய்த்து A'B' நிலைக்குக் கொண்டுவரும் போது, குத்துக்கோடும், N நிலையிலிருந்து N' நிலைக்கு θ கோணம் சாயும். இங்கு படுகதிர் IO மாறாமல் ஒரே நிலையில் இருப்பதை நினைவில் கொள்ளவேண்டும். சாய்க்கப்பட்ட நிலையில் படுகோணம் i + θ. எனவே , எதிரொளிப்புக்கோணமும் i + θ ஆகும். ஆனால் சாய்க்கப்பட்ட நிலையில் எதிரொளிப்புக்கதிர் OR2. எனவே, OR2 மற்றும் OR1 க்கு இடையே ஏற்பட்டக் கோணம்.

12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards