12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 17/01/2020
12ஆம் வகுப்பு Physics / இயற்பியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Physics / இயற்பியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Physics Test1.
எலக்ட்ரானின் அலை இயல்பினை விவரிக்கும் டேவிசன் – ஜெர்மர் சோதனையை சுருக்கமாக விவரி.
2.
பொது உமிழ்ப்பான் டிரான்சிஸ்டரின் நிலை சிறப்பியல்புகளை வரைந்து உள்ளீடு மற்றும் வெளியீடு சிறப்பியல்புகளின் முக்கியமான கருத்துகளைத் தருக.
3.
பின்வரும் லாஜிக் கேட்டுகளில் மின்சுற்று குறியீடு, லாஜிக் செயல்பாடு, உண்மை அட்டவணை மற்றும் பூலியன் சமன்பாடுகளை தருக.
i) AND கேட்டு
ii) OR கேட்டு
iii) NOT கேட்டு
iv) NAND கேட்டு
v) NOR கேட்டு மற்றும்
vi) EX-OR கேட்டு.
4.
இணைத்தட்டு மின்தேக்கி ஒன்று மின்னேற்றம் அடையும் பொழுது ஆம்பியர் சுற்று விதியின் இடப்பெயர்ச்சி மின்னூட்டம் விதியில் சேருவதற்கான வழிமுறையை எழுதுக
5.
மின்காந்த அலைகளின் மூலங்களைப் பற்றி விளக்கவும்.
6.
காந்தத்திருப்புத்திறன் \(\vec { { p }_{ m } } \) கொண்ட சட்ட காந்தமொன்று நான்கு துண்டுகளாக வெட்டப்படுகிறது. அதாவது முதலில் காந்தத்தின் அச்சைப்பொறுத்து இரண்டு துண்டுகளாகவும் பின்பு ஒவ்வொரு துண்டும், மேலும் இரண்டு துண்டுகளாகவும் வெட்டப்படுகின்றன. ஒவ்வொரு துண்டின் காந்தத்திருப்புத்திறனையும் காண்க.
7.
ஆம்பியரின் சுற்றுவிதியைக் கொண்டு, மின்னோட்டம் பாயும் நீண்ட நேரான கடத்தியினால் ஏற்படும் காந்தப்புலத்தைக் காண்க.
8.
சீரான மின்புலத்தில் வைக்கப்படும் மின் இருமுனை மீது செயல்படும் திருப்பு விசையின் கோவையைப் பெறுக.
9.
ஹைட்ரஜன் அணுவின் 5வது சுற்றுப்பாதையின் (i) கோண உந்தம் மற்றும் (ii) அதிலுள்ள எலக்ட்ரானின் திசைவேகம் ஆகியவற்றைக் கணக்கிடுக.
(h = 6.6 × 10–34 Js, m = 9.1 × 10–31 kg)
10.
(அ) ஹைட்ரஜன் அணு ஒன்று அலைநீளம் 97.5 nm கொண்ட கதிர்வீச்சால் கிளர்வுற செய்யப்படுகிறது. அக்கிளர்வு நிலையின் முதன்மை குவாண்டம் எண்ணைக் கணக்கிடுக.
(ஆ) வெளிவிடு நிறமாலையில் வரிகளின் மொத்த எண்ணிக்கை \(\frac { n(n-1) }{ 2 } \) என்று காட்டுக. மேலும் கேள்வி (அ)-வில் கொடுக்கப்பட்டுள்ள கிளர்வு நிலையிலிருந்து கிடைக்கும். வெளிவிடு நிறமாலையில் சாத்தியமாகும் வரிகளின் எண்ணிக்கையைக் கணக்கிடுக.
11.
ஒரு பரப்பும் விண்ணலைக்கம்பியின் உயரம் 40m மற்றும் ஏற்கும் விண்ணலைக்கம்பி 30m உயரம் உள்ளது. அவற்றிற்கிடையே நேர்க்கோட்டு பார்வை தகவல்தொடர்பிற்கான பெருந்தொலைவு யாது? புவியின் ஆரம் 6.4 × 106 m.
12.
சோடிய ஆவி விளக்கிலிருந்து வெளிவரும் ஒளியின் அலைநீளம் வெற்றிடத்தில் 5893Å. இந்த ஒளி 1.33 ஒளிவிலகல் எண் கொண்ட நீரின் வழியே செல்லும்போது பின்வருவனவற்றைக் காண்க.
(அ) அலைநீளம்,
(ஆ) திசைவேகம் மற்றும்
(இ) அதிர்வெண்
13.
தரப்பட்டுள்ள மின்சுற்றில் இரண்டு நல்லியல்பு டையோடுகள் படத்தில் காட்டியுள்ளவாறு இணைக்கப்பட்டுள்ளன. மின்தடை R1 வழியே பாயும் மின்னோட்டத்தைக் கணக்கிடுக.

14.
ஒரு மின் அனுப்பீட்டில் 2300v உள்ளீடு திறன் இறக்கு மின்மாற்றியைக் கொண்டு பெறப்படுகிறது. அதன் முதன்மை சுற்றுகள் 4000 சுற்றுகள் எனில் வெளியீடு திறன் 230v க்கு துணைச்சுருள் சுற்றுகள் என்ன?
15.
மின் மற்றும் இயந்திர அளவுகளுக்கிடையேயான ஒப்புமைகளைக் கூறு.
16.
படத்தில் உள்ள வீட்ஸ்டோன் சமனச்சுற்றை சமநிலைப்படுத்த வேண்டும். 15ᘯ உடன் இணைக்க வேண்டிய கூடுதல் மின்தடையை தீர்மானி
17.
ஏன் கடத்திகளுக்கான மின்தடை வெப்பநிலை எண் ∝ நேர்க்குறியுடையது?
18.
பின்வரும் மின்சுற்றில்,

(i) இணைப்பு தொகுப்பின் தொகுபயன் மின்னியக்கு விசை
(ii) இணைப்பு தொகுப்பின் தொகுபயன் அகமின்தடை
(iii) மொத்த மின்னோட்டம்
(iv) புறமின்தடையாக்கியின் குறுக்கே மின்னழுத்த வேறுபாடு
(v) ஒவ்வொரு மின்கலத்தின் குறுக்கே உள்ள மின்னழுத்த வேறுபாடு ஆகியவற்றை கண்டுபிடி.
19.
காற்றில், ஒளியின் திசைவேகம் மற்றும் அலைநீளம் முறையே Va மற்றும் λa. இதே போன்று தண்ணீரில் Vw மற்றும் λw எனில், தண்ணீரின் ஒளிவிலகல் எண் என்ன?
\(\frac { { V }_{ w } }{ { V }_{ a } } \)
\(\frac { V_{ a } }{ { V }_{ w } } \)
\(\frac { { \lambda }_{ w } }{ { \lambda }_{ a } } \)
\(\frac { { V }_{ a }{ \lambda }_{ a } }{ { V }_{ w }{ \lambda }_{ w } } \)
20.
520 nm அலைநீளம் கொண்ட ஒரு ஒளி மூலம் ஒரு வினாடிக்கு 1.04 × 1015 ஃபோட்டான்களை வெளிவிடுகிறது. 460 nm அலைநீளம் கொண்ட இரண்டாவது ஒளி மூலம் ஒரு வினாடிக்கு 1.38 × 1015 ஃபோட்டான்களை வெளிவிடுகிறது. இரண்டாவது மூலத்தின் திறனுக்கும் முதல் மூலத்தின் திறனுக்கும் இடையே உள்ள விகிதம் _______
1.00
1.02
1.5
0.98
21.
ஈர்ப்பு அலைகளை கருத்தியலாக முன்மொழிந்தவர் ______.
கான்ராட் ரோன்ட்ஜென்
மேரி கியூரி
ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்
எட்வார்டு பர்செல்
22.
ஒரு தகவல்தொடர்பு அமைப்பில், சைகையானது இரைச்சலால் பாதிக்கப்படுவது____
பரப்பியல்
பண்பேற்றியல்
வழித்தடத்தில்
ஏற்பியல்
23.
ஹைட்ரஜன் அணுவின் முதல் மூன்று சுற்றுப்பாதைகளின் ஆரங்களின் விகிதம்________.
1:2:3
2:4:6
1:4:9
1:3:5
24.
சூரிய மின்கலன் இந்தத் தத்துவத்தின் அடிப்படையில் செயல்படுகிறது.
விரவல்
மறு இணைப்பு
ஒளி வோல்டா செயல்பாடு
ஊர்தியின் பாய்வு
25.
குறைந்த அதிர்வெண் கொண்ட மின்காந்த அலை________
UV கதிர்
x - கதிர்
γ - கதிர்
அகச்சிவப்பு
26.
ஒரு மின்மாற்றியின் சுருளிச்சுற்று (Armature) ன் சுழற்சி கோண திசைவேகம் இரண்டு மடங்கானால் தூண்டப்படும் மின்னியக்கு விசை ______ ஆகும்.
இருமடங்கு
நான்கு மடங்கு
மாறாது
பாதியாகும்
27.
வான்-டி-கிராப் மின்னியற்றியின் மின்காப்பு முறிவு காற்றில்_____
2 x 108 Vm-1
3 x 108 Vm-1
2 x 108 Vm-1
2 x 104 Vm-1
28.
பக்க இணைப்பில் உள்ள மின்தடையாக்கிகளில் ஒன்று நீக்கப்பட்டால் அதன் மொத்த மின்தடையானது __________
இரு மடங்காதல்
குறைதல்
அதிகரித்தல்
மாறாமல்
29.
ஒரு 20 mH மின்தூண்டி, 50 μF மின்தேக்கி மற்றும் 40 Ω மின்தடை ஆகியவை ஒரு மின்னியக்கு விசை υ = 10 sin 340 t கொண்ட மூலத்துடன் தொடராக இணைக்கப்பட்டுள்ளன. AC சுற்றில் திறன் இழப்பு_____ .
0.76 W
0.89 W
0.46 W
0.67 W
30.




31.
\(\vec v = v\vec i\)என்ற திசைவேகத்துடன் மின்காந்த அலை ஒரு ஊடகத்தில் பரவுகின்றது. இவ்வலையின் மாறுதிசை மின்புலம் +y-அச்சின் திசையில் இருந்தால், அதன் மாறுதிசை காந்தப்புலம் _________ இருக்கும்.
–y திசையில்
–x திசையில்
+z திசையில்
–z திசையில்
32.
\(\vec { { p }_{ m } } =\left(-0.5\hat { i } +0.4\hat { j } \right) \) Am2 என்ற வெக்டர் மதிப்புடைய காந்த இருமுனையானது, \(\vec B\) = \(0.2\ \hat {i} T\) என்ற சீரான காந்தப்புலத்தில் வைக்கப்பட்டால் அதன் நிலையாற்றல் மதிப்பு _____.
-0.1 J
-0.8 J
0.1 J
0.8 J
33.
மின்கல அடுக்கிலிருந்து வெளிவரும் மின்னோட்டத்தின் மதிப்பு என்ன?

1A
2A
3A
4A
34.
எந்திரனியலின் ஏதேனும் இரு நன்மைகள் மற்றும் தீமைகளைக் குறிப்பிடுக.
35.
நானோ அறிவியல் மற்றும் நானோ தொழில்நுட்பம் வேறுபடுத்துக.
36.
ஐசோடோப்பு என்றால் என்ன? எடுத்துக்காட்டு ஒன்று தருக.
37.
பரப்புகை இழப்புகளுக்குப் பொறுப்பான காரணிகளைக் கூறுக.
38.
விடுதிறன் மற்றும் ஒப்புமை விடுதிறன் என்றால் என்ன? அவை எவ்வாறு தொடர்புபடுத்தப்பட்டுள்ளன ?
39.
மின் சுற்றில் உருவாக்கப்படும் வெப்பத்தை பாதிக்கும் காரணிகள் எவை?
40.
வட்ட வரிச்சுருள் என்றால் என்ன?
41.
பரப்பி ஒன்றின் LC சுற்றில் உள்ள மின்தூண்டியின் மதிப்பு 1 µH மற்றும் மின்தேக்கியின் மதிப்பு 1 µF என்க. இப்பரப்பியில் தோற்றுவிக்கப்படும் மின்காந்த அலையின் அலைநீளம் என்ன?
42.
சீரமைக்கப்பட்ட ஆம்பியரின் சுற்று விதியின் தொகையீட்டு வடிவத்தை எழுதுக.
43.
ஓம் விதிக்கு உட்படும் மற்றும் ஓம் விதிக்கு உட்படாத சாதனங்கள் யாவை?
1.
படிகமாக உள்ள திண்மங்களின் எலக்ட்ரான் கற்றைகள் விளிம்பு விளைவு அடைவதை சோதனை விளக்குகிறது.
அமைப்பு
1. குறைந்த மின்னழுத்த அடுக்கு மூலம் சூடேற்றப்படும் மின்னிழையிலிருந்து வெப்ப அயனி உமிழ்வு மூலம் எலக்ட்ரான்கள் உமிழப்படுகின்றன.
2. உயர் மின்னழுத்த அடுக்கு மூலம் கொடுக்கப்படும் மின்னழுத்த வேறுபாட்டினால், முடுக்கப்படுகின்றன.
3. இரு மெல்லிய அலுமினியத் தகடுகள் வழியே செல்லும் போது இணைக் கற்றையாக மாறி நிக்கல் படிகத்தின் மீது விழுகிறது.
2.

BJT யின் நிலைச் சிறப்பியல்புகள்:
(i) உள்ளீடு சிறப்பியல்பு
(ii) வெளியீடு சிறப்பியல்பு
(iii) பரிமாற்றுச் சிறப்பியல்பு ஆகியவை ஆகும்.
உள்ளீடு சிறப்பியல்பு:
உள்ளீடு சிறப்பியல்பு வரைகோடுகள், ஏற்பான் - உமிழ்ப்பான் மின்னழுத்த வேறுபாடு மாறிலியாக உள்ளபோது அடிவாய் மின்னோட்டம் (IB) மற்றும் அடிவாய் - உமிழ்ப்பான் மின்னழுத்த வேறுபாடு (VBE) ஆகியவற்றிற்கு இடையே உள்ள தொடர்பினைத் (VCE) தருகிறது. இது படத்தில் காட்டப்பட்டுள்ளது.

முதலில் ஏற்பான் - உமிழ்ப்பான் மின்னழுத்த வேறுபாடு (VCE) குறிப்பிட்ட ஒரு மதிப்பில் இருக்குமாறு செய்யப்படுகிறது. (சந்தியைப் பின்னோக்கு சார்பில் வைக்க, இது 0.7 V க்கு அதிகமாக இருத்தல் வேண்டும்). பின்பு அடிவாய் - உமிழ்ப்பான் மின்னழுத்த வேறுபாடு (VBE) தகுந்த படிகளாக அதிகரிக்கப்பட்டு அவற்றிற்குரிய அடிவாய் மின்னோட்டம் (IB) பதிவு செய்யப்படுகிறது. (VBE) ஐ X-அச்சிலும் (IB) ஐ, Y-அச்சிலும் வைத்து வரைபடம் வரையப்படுகிறது. இச்செயல்முறை VCE யின் பல்வேறு மதிப்புகளுக்குத் திரும்பச் செய்யப்படுகிறது.
வரைபடத்திலிருந்து பின்வரும் முடிவுகள் பெறப்படுகின்றன.
பயன் தொடக்க மின்னழுத்தம் அல்லது வளைவுப் பகுதி மின்னழுத்தம் (VKnee) என்னும் மின்னழுத்திற்குக் கீழே அடிவாய் மின்னோட்டம் மிகச் சிறிய அளவில் அமையும். இம்மின்னழுத்த மதிப்பு சிலிக்கான் டிரான்சிஸ்டருக்கு 0.7 V எனவும் ஜெர்மானியம் டிரான்சிஸ்டருக்கு 0.3 V எனவும் அமையும். பயன்தொடக்க மின்னழுத்திற்கு அதிகமான மின்னழுத்தத்தைப் பொருத்து அடிவாய் மின்னோட்டமும் அதிகரிக்கும்.
ஏற்பான் - உமிழ்ப்பான் மின்னழுத்த வேறுபாடு அதிகரிக்கும்போது, அடிவாய் மின்னோட்டம் குறைவதைக் கவனிக்க வேண்டும். இது வளைகோட்டை வெளிப்புறத்தை நோக்கி நகர்த்தும். இதற்குக் காரணம் ஏற்பான் - உமிழ்ப்பான் மின்னழுத்த வேறுபாடு அதிகரித்தால் இயக்கமில்லாப் பகுதியின் அகலம் அதிகரித்து, அதன் மூலம் அடிவாயின் அகலம் குறைவதால் அடிவாய் மின்னோட்டமும் குறையும்.
உள்ளீடு மின்னெதிர்ப்பு:
ஏற்பான் - உமிழ்ப்பான் மின்னழுத்த வேறுபாடு (VCE) மாறிலியாக உள்ளபோது, அடிவாய் - உமிழ்ப்பான் மின்னழுத்த வேறுபாட்டில் (\(\Delta\)VBE) ஏற்பட்ட மாறுபாட்டிற்கும் அடிவாய் மின்னோட்டத்தில் (\(\Delta\)IB) ஏற்பட்ட மாறுபாட்டிற்கும் இடைப்பட்ட விகிதம் உள்ளீடு மின்னெதிர்ப்பு (ri) எனப்படும்.
உள்ளீடு மின்னெதிர்ப்பானது வளைகோட்டின் அடிப்பகுதியில் மாறிலியாக அமையாது.
\(r_1=\left(\frac{\Delta V_{B E}}{\Delta I_B}\right)_{v_{\mathrm{CE}}}\)
பொது உமிழ்ப்பான் நிலை அமைப்பில் உள்ள ஒரு டிரான்சிஸ்டருக்கு உள்ளீடு மின்னெதிர்ப்பு அதிகமாக இருக்கும்.
வெளியீடு சிறப்பியல்புகள்:
மாறாக உள்ளீடு மின்னோட்டத்தில் (IB) ஏற்பான் மின்னோட்டம் (IC) அதற்குரிய ஏற்பான் - உமிழ்ப்பான் மாறுபாட்டிற்கும் (\(\Delta\)VCE) உள்ள தொடர்பினை வெளியீடு சிறப்பியல்பு அளிக்கிறது.

முதலில் அடிவாய் மின்னோட்டம் (IB) குறிப்பிட்ட ஒரு மதிப்பில் வைக்கப்படுகிறது. பின்பு, உரியபடிகளில் ஏற்பான் - உமிழ்ப்பான் மின்னழுத்த வேறுபாடு அதிகரிக்கப்பட்டு அதற்குரிய ஏற்பான் மின்னோட்டம் பதிவு செய்யப்படுகிறது. (VCE) ஐ x - அச்சிலும் (Ic) ஐ y - அச்சிலும் கொண்டு வரைபடம் ஒன்று வரையப்படுகிறது. இச்செயல்முறை வெவ்வேறு IB மதிப்புகளுக்குச் செய்யப்படுகிறது.
சிறப்பு வளைகோட்டில் உள்ள நான்கு முக்கிய பகுதிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது:
(i) தெவிட்டிய பகுதி
(ii) வெட்டுப்பகுதி
(iii) செயல்படும் பகுதி
(iv) முறிவுப் பகுதி
வெளியீடு மின்னெதிர்ப்பு:
• அடிவாய் மின்னோட்டம் (IB) மாறாதபோது, ஏற்பான் - உமிழ்ப்பான் மின்னழுத்த வேறுபாட்டில் ஏற்படும் மாறுபாட்டிற்கும் (\(\Delta\)VCE) அதற்குரிய ஏற்பான் மின்னோட்டத்தில் (\(\Delta\)Ic) ஏற்பட்ட மாறுபாட்டிற்கும் இடையே உள்ள விகிதம் வெளியீடு மின்னெதிர்ப்பு (ro) எனப்படும்.
\(\mathrm{r}_{\mathrm{o}}=\left(\frac{\Delta \mathrm{V}_{\mathrm{BE}}}{\Delta \mathrm{I}_{\mathrm{C}}}\right)_{\mathrm{I}_{\mathrm{B}}}\)
பொது உமிழ்ப்பான் நிலையிலுள்ள டிரான்சிஸ்டரின் வெளியீடு மின்னெதிர்ப்பு மிகக் குறைவு ஆகும்.
3.
i) AND கேட்:
அ) சுற்றுக்குறியீடு:
இரு உள்ளீடுகள் கொண்ட ஒரு AND கேட்டின் சுற்றுக்குறியீடு படத்தில் காட்டப்பட்டுள்ளது. A மற்றும் B ஆகியவை உள்ளீடுகள் மற்றும் Y வெளியீடு ஆகும். இது ஒரு லாஜிக்கேட். எனவே, A, B மற்றும் Y ஆகியவை 1 அல்லது 0 என்ற மதிப்பைக் கொண்டிருக்கலாம்.

| உள்ளீடுகள் | வெளியீடு | |
| A | B | Y = A.B |
| 0 | 0 | 0 |
| 0 | 1 | 0 |
| 1 | 0 | 0 |
| 1 | 1 | 1 |
உண்மை அட்டவணை
ஆ) பூலியன் சமன்பாடு:
Y = A . B
இது லாஜிக் பெருக்கலை மேற்கொள்கிறது மற்றும் எண்கணித பெருக்கலில் இருந்து மாறுபட்டது.
இ) லாஜிக் செயல்பாடு:
அனைத்து உள்ளீடுகளும் உயர்நிலையில் (1) இருந்தால் மட்டுமே, AND கேட்டின் வெளியீடு உயர்நிலையில் (1) இருக்கும். பிறநேர்வுகளில் வெளியீடு தாழ்நிலையில் இருக்கும். அது உண்மை அட்டவணையில் காட்டப்பட்டுள்ளது.
ii) OR கேட்:
அ) சுற்றுக்குறியீடு;
இரு உள்ளீடுகள் கொண்ட ஒரு OR கேட்டின் சுற்றுக்குறியீடு படத்தில் காட்டப்பட்டுள்ளது. A மற்றும் B ஆகியவை உள்ளீடுகள் மற்றும் Y வெளியீடு ஆகும்.

| உள்ளீடுகள் | வெளியீடு | |
| A | B | Y = A+B |
| 0 | 0 | 0 |
| 0 | 1 | 1 |
| 1 | 0 | 1 |
| 1 | 1 | 1 |
உண்மை அட்டவணை
ஆ) பூலியன் சமன்பாடு:
Y=A + B
இது லாஜிக்கூட்டலை மேற்கொள்கிறது மற்றும் எண் கணித கூட்டலில் இருந்து மாறுபட்டது.
இ) லாஜிக் செயல்பாடு:
உள்ளீடுகளில் ஏதேனும் ஒன்று அல்லது இரண்டுமே உயர்நிலையில் இருந்தால், OR கேட்டின் வெளியீடு உயர்நிலையில் (லாஜிக் நிலை 1) இருக்கும். OR கேட்டின் உண்மை அட்டவணையில் காட்டப்பட்டுள்ளது.
iii) NOT கேட்:
அ) சுற்றுக்குறியீடு:
NOT கேட்டின் சுற்றுக் குறியீடு படத்தில் காட்டப்பட்டுள்ளது. A ஆனது உள்ளீடு மற்றும் Y வெளியீடு ஆகும்.

| உள்ளீடுகள் | வெளியீடு |
| A | Y = \(\bar{A}\) |
| 0 | 1 |
| 1 | 0 |
உண்மை அட்டவணை
ஆ) பூலியன் சமன்பாடு:
Y = \(\bar{A}\)
இ) லாஜிக் செயல்பாடு:
வெளியீடானது உள்ளீட்டின் நிரப்பி ஆகும். இது ஒரு மேற்கோட்டால் குறிப்பிடப்படுகிறது. இது புரட்டி (inverter) என்றும் அழைக்கப்படுகிறது. உள்ளீடு A ஆனது 0 எனில், வெளியீடு Y ஆனது 1. அதாவது மறுதலையாக இருப்பதை உண்மை அட்டவணை உணர்த்துகிறது. NOT கேட்டின் உண்மை அட்டவணையில் காட்டப்பட்டுள்ளது.
iv) NAND கேட்:
அ) சுற்றுக்குறியீடு:
NAND கேட்டின் சுற்றுக்குறியீடு படத்தில் காட்டப்பட்டுள்ளது. A மற்றும் B ஆனது உள்ளீடுகள் மற்றும் Y வெளியீடு ஆகும்.

| உள்ளீடுகள் | வெளியீடு (AND) | வெளியீடு(NAND) | |
| A | B | Z=A.B | Y=\(\overline{A.B}\) |
| 0 | 0 | 0 | 1 |
| 0 | 1 | 0 | 1 |
| 1 | 0 | 0 | 1 |
| 1 | 1 | 1 | 0 |
உண்மை அட்டவணை
ஆ) பூலியன் சமன்பாடு:
Y=\(\overline{A.B}\)
இ) லாஜிக் செயல்பாடு:
வெளியீடு Y ஆனது AND செயல்பாட்டின் நிரப்பியாக உள்ளது. சுற்றானது ஒரு AND கேட் மற்றும் அதனைத் தொடர்ந்து ஒரு NOT கேட்டைக் கொண்டுள்ளது. எனவே, அது NAND என குறிப்பிடப்படுகிறது. அனைத்து உள்ளீடுகளும் உயர்நிலையில் இருந்தால் மட்டுமே, வெளியீடு லாஜிக் நிலை 0 வில் இருக்கும். பிறநேர்வுகளில் வெளியீடு உயர்நிலையில் (லாஜிக் நிலை 1) இருக்கும். NAND கேட்டின் உண்மை அட்டவணை படத்தில் காட்டப்பட்டுள்ளது.
v) NOR கேட்:
அ) சுற்றுக்குறியீடு
NOR கேட்டின் சுற்றுக்குறியீடு படத்தில் காட்டப்பட்டுள்ளது. A மற்றும் B ஆனது உள்ளீடுகள் மற்றும் Y வெளியீடு ஆகும்.

| உள்ளீடுகள் | வெளியீடு (OR) | வெளியீடு(NOR) | |
| A | B | Z=A+B | Y=\(\overline{A+B}\) |
| 0 | 0 | 0 | 1 |
| 0 | 1 | 1 | 0 |
| 1 | 0 | 1 | 0 |
| 1 | 1 | 1 | 0 |
உண்மை அட்டவணை
ஆ) பூலியன் சமன்பாடு:
Y = \(\overline{A+B}\)
இ) லாஜிக் செயல்பாடு:
வெளியீடு Y ஆனது OR செயல்பாட்டின் நிரப்பி (A OR B) ஆகும். சுற்றானது ஒரு OR கேட் மற்றும் அதனைத் தொடர்ந்து ஒரு NOT கேட்டைக் கொண்டுள்ளது. இது NOR எனக் குறிப்பிடப்படுகிறது. அனைத்து உள்ளீடுகளும் தாழ் நிலையில் இருந்தால், வெளியீடு உயர்நிலையில் உள்ளது. உள்ளீடுகளின் பிற சேர்க்கைகளுக்கு, வெளியீடு தாழ் நிலையில் உள்ளது. NOR கேட்டின் உண்மை அட்டவணை படத்தில் காட்டப்பட்டுள்ளது.
vi) Ex-OR கேட்:
அ) சுற்றுக்குறியீடு:
EX-OR கேட்டின் சுற்றுக்குறியீடு படத்தில் (அ) இல் காட்டப்பட்டுள்ளது. A மற்றும் B ஆனவை உள்ளீடுகள் மற்றும் Y வெளியீடு ஆகும். EX-OR செயல்பாடு \(\bigoplus\) என குறிக்கப்படுகிறது.
ஆ) பூலியன் சமன்பாடு:
Y=A.\(\bar{B}\)+\(\bar{A}\).B
Y=A\(\bigoplus\)B
இ) லாஜிக் செயல்பாடு:
இரு உள்ளீடுகளில் ஏதேனும் ஒன்று உயர்நிலையில் இருந்தால், வெளியீடு உயர்நிலையில் உள்ளது. இரு உள்ளீடுகளுக்குமேல் கொண்ட EX-OR கேட்டில் ஒற்றைப்படை எண்ணிக்கையிலான உள்ளீடுகள் உயர்நிலையில் உள்ளபோது, வெளியீடு உயர்நிலையில் இருக்கும். EX-OR கேட்டின் உண்மை அட்டவணை படத்தில் காட்டப்பட்டுள்ளது.

| உள்ளீடுகள் | வெளியீடு (Ex-OR) | |
| A | B | Y = A\(\bigoplus\)B |
| 0 | 0 | 0 |
| 0 | 1 | 1 |
| 1 | 0 | 1 |
| 1 | 1 | 0 |
உண்மை அட்டவணை
குறிப்பு:
NAND மற்றும் NOR லாஜிக்கேட்டுகள் பொது கேட்டுகள் என்று அழைக்கப்படுகின்றன. ஏனெனில், பிற லாஜிக்கேட்டுகளை NAND அல்லது NOR கேட்டுகளிலிருந்து உருவாக்க முடியும்.
4.
ஆம்பியர் சுற்று விதியின் படி,
\(\oint _{ C }^{ }{ \vec { B } .\vec { dl } } ={ \mu }_{ o }I\) ...(1)
இதில் I என்பது மூடப்பட்ட பரப்பின் C1 வழியே பாயும் மின்னோட்டம்
\(\oint _{ { c }_{ 1 } }^{ }{ \vec { B } .\vec { dl } } ={ \mu }_{ o }\)I ...(2)
ஆனால் C2 சுற்றும் பகுதியினுள் மின்னோட்டம் சுழி ஆகும்
\(\oint _{ { c }_{ 2 } }^{ }{ \vec { B } .\vec { dl } } =0\) ...(3)
மொத்த மின்னூட்டமானது
C1 மற்றும் C2 பரப்பு மிக அருகில் உள்ளதாக கருதினால்
\(\oint _{ { c }_{ 1 } }^{ }{ \vec { B } .\vec { dl } } =\oint _{ { c }_{ 2 } }^{ }{ \vec { B } .\vec { dl } } \)
சமன்பாடு 4 ஆனது 3 மற்றும் 4 ஆகிய சமன்பாடுகளில் உள்ள தொடர்பினை மாற்றுகிறது. இவற்றை சரிசெய்ய, மெக்ஸ்வெல் மற்றும் மின்புலம் (மின்னேற்றத்தின் போது) இருதட்டுகளின் காந்தப்புலம் உருவாக்க வழிவகுக்கும் என்றார்.
அவை சுற்றில் பாயும் மின்னோட்டத்தினையும் தொடர்பு படுத்தினார்
\({ I }_{ D }={ \varepsilon }_{ 0 }\frac { d{ \phi }_{ E } }{ dt } \)
I = Iconduction + Idisplaceme = IC + \({ \varepsilon }_{ 0 }\frac { d{ \phi }_{ E } }{ dt } \)
பொதுவான ஆம்பியரின் சுற்று விதி
\(\oint _{ c }^{ }{ \vec { B } .\vec { dA } } ={ \mu }_{ o }\left[ { I }_{ c }+{ \varepsilon }_{ 0 }\frac { d{ \phi }_{ E } }{ dt } \right] \) ஆகும்
5.
விளக்கம்:
ஓய்வில் உள்ள எந்த ஒரு மின்துகளும், மின்புலத்தை மட்டுமே உருவாக்கும்.ஆனால் அம்மின்துகள் சீரான திசைவேகத்தில் இயங்கும்போது மாறாத மின்னோட்டத்தை கடத்தியில் உருவாக்கி, மின்துகள் பாயும் கடத்தியைச் சுற்றிலும் காந்தப்புலத்தை உருவாக்குகிறது (இக்காந்தப்புலம் நேரத்தைச் சார்ந்தல்ல, வெளியைச் சார்ந்தது). மின்னூட்டப்பட்டத் துகள்கள் முடுக்கமடையும் போது, மின்புலத்துடன் கூடுதலாக காந்தப்புலத்தையும் உருவாக்குகிறது. மின்புலம் மற்றும் காந்தப்புலம் இவ்விரண்டு புலங்களும் நேரத்தைப்பொறுத்து மாற்றமடையும் புலங்களாகும். மின்காந்த அலைகள் குறுக்கலைகளாகும். எனவே மின்புலம் மற்றும் காந்தப்புலம் உள்ள தளங்களுக்கு செங்குத்தாக உள்ள திசையில் மின்காந்த அலை பரவும்.
எந்த ஒரு அலைவு இயக்கமும், முடுக்கப்பட்ட இயக்கமாகும். எனவே, ஒரு மின்துகளானது மையப்புள்ளியைப் பொறுத்து அலைவுறும்போது, (அல்லது மூலக்கூறு இருமுனை அலைவுறும்போது) மின்காந்த அலைகளைத் தோற்றுவிக்கும். வெற்றிடத்தில் மின்காந்த அலை பரவும் திசை z-அச்சு எனவும், அதன் மின்புல வெக்டரின் திசை x-அச்சு எனவும் கொண்டால் காந்தப்புல வெக்டரின் திசை, அலை பரவும் திசை மற்றும் மின்புல வெக்டரின் திசை இவ்விரண்டு திசைகளுக்கும் செங்குத்தான திசையில் செயல்படும். அதாவது
\({ E }_{ y }={ E }_{ 0 }sin(kz-\omega t),{ B }_{ x }={ B }_{ 0 }sin(kz-\omega t)\)
இங்கு E0 மற்றும் B0 என்பவை முறையே அலைவுறும் மின்புலம் மற்றும் காந்தப்புலங்களின் வீச்சுக்கள் (amplitude) ஆகும். k என்பது அலை எண், ω என்பது அலையின் கோண அதிர்வெண் மற்றும் \(\hat {k }\) (ஓரலகு வெக்டர். இதற்கு பரவு வெக்டர் என்று பெயர்) மின்காந்த அலை பரவும் திசையினைக் காட்டுகிறது.
மின்புலம் மற்றும் காந்தப்புலம் இரண்டும் ஒரு குறிப்பிட்ட அதிர்வெண்ணில் (மின்காந்த அலையின் அதிர்வெண்) அதிர்வுறுகின்றன. அந்த அதிர்வெண் மின்காந்த அலையின் மூலத்தின் (source of EM wave) அதிர்வெண்ணுக்குச் சமமாகும். (இங்கு அலைவுறும் மின்துகள் மின்காந்த அலைகளைத் தோற்றுவிக்கும் மூலமாகச் செயல்படுகிறது). வெற்றிடத்தில் E0 மற்றும் B0 இன் விகிதம் மின்காந்த அலையின் வேகத்திற்குச் சமமாகும். அதாவது ஒளியின் வேகத்திற்கு (c) சமமாகும்.
\(V=\frac { { E }_{ 0 } }{ { B }_{ 0 } } \)
எந்த ஒரு ஊடகத்திலும் E0 மற்றும் B0 இன் விகிதம் அந்த ஊடகத்தில் பரவும் மின்காந்த அலையின் வேகத்திற்கு (v) சமமாகும். எனவே, \(V=\frac { { E }_{ 0 } }{ { B }_{ 0 } } < c\)
மேலும் மின்காந்த அலையின் ஆற்றல், அலைவுறும் மின்துகள்களின் இயக்க ஆற்றலிலிருந்து கிடைக்கிறது.
6.
சட்டக் காந்தத்தின் திருப்புத்திறன் = \({ \vec { { p } } }_{ m }\)
.jpg)
காந்தத்தின் அச்சைப் பொறுத்து இரண்டு துண்டுகளாகப் பிரிக்கப்பட்ட பின்பு, முனை வலிமை
\(q_{m}^{{\prime}}=\frac{q_{m}}{4}\)
காந்தத்தின் நீளம் = 2l.
ஒவ்வொரு துண்டின் காந்தத் திருப்புத்திறன்
\(\vec { { p }_{ m } } \)புதிய \(=q'_{m} \times2 l \)
\(=\frac{q_{m}}{2} \times 2 l \)
\(=\frac{1}{2}\left(q_{m} \times 2 l\right) \)
\(\vec { { p }_{ m } } \)புதிய \( =\frac{1}{2} (\vec{p_{m})} \) \((\because{p}_{m} =(q_{\mathrm{m}} \times 2 l) )\)
மேலும் நான்கு துண்டுகளாக வெட்டப்பட்ட பின்பு
சட்ட காந்தம் ஒன்றை 'l' நீளத்தில் வெட்டும் போது,
\(\vec{p_m}_{\text {new }} =q'_{m} \times2 l \)
\(=\frac{q_{m}}{4} \times 2 l \)
\(=\frac{1}{4}\left(q_{m} \times 2 l\right) \)
\(\because \overrightarrow{\mathbf{p}}_{\mathrm{m}_{\text {new }}} =\frac{1}{4} (\vec{p_{m})} \) \((\because{p}_{m} =(q_{\mathrm{m}} \times 2 l) )\)
7.
ஒரு மூடிய சுற்று வளைவின் மீதுள்ள காந்தப்புலத்தின் கோட்டு வழித் தொகையீட்டு மதிப்பு (Value of line integral) சுற்று வளைவினால் மூடப்பட்ட நிகர மின்னோட்டத்தின் \(\mu\)o மடங்கிற்கு சமம்.
\(\oint_C \vec{B} \cdot \overrightarrow{d l}=\mu_o I\)மூடப்பட்ட
இங்கு Iமூடப்பட்ட என்பது மூடப்பட்ட சுற்றின் வழியாகச் செல்லும் நிகர மின்னோட்டமாகும். கோட்டு வழித்தொகையீடு பாதையின் வடிவத்தையோ அல்லது காந்தப்புலத்துடன் உள்ள கடத்திய நிலையையோ சார்ந்ததில்லை என்பதை கவனிக்கவும்.
மின்னோட்டம் பாயும் நேரான கடத்தியின் ஆம்பியர் வளையம் முடிவிலா நீளம் கொண்ட I மின்னோட்டம் பாயும் நேரான கடத்தி ஒன்றைக் கருதுக. படத்தில் காட்டியுள்ளவாறு காந்தப்புலக் கோடுகளின் திசை உள்ளது. நுண்ணளவில் பார்க்கும்போது கம்பி உருளை வடிவிலும், அச்சினைப் பொறுத்து சமச்சீராகவும் உள்ளது. எனவே படத்தில் காட்டியுள்ளவாறு கடத்தியின் மையத்திலிருந்து r தொலைவில் வட்ட வடிவிலான ஆம்பியரின் வளையத்தை உருவாக்கலாம்.
\(\oint_C \vec{B} \cdot \overrightarrow{d l}=\mu_o I\)
இங்கு \(\overrightarrow{dl}\) என்பது ஆம்பியரின் வளையம் வழியேச் செல்லும் வரிக்கூறாகும் (line element) (வட்ட வளையத்தின் தொடுகோடு). எனவே, காந்தப்புல வெக்டருக்கும் வரிக்கூறுக்கும் இடையே உள்ள கோணம் சுழியாகும். ஆகையால்
\(\oint_C B \cdot \overrightarrow{d l}=\mu_o I\)
இங்கு I என்பது, ஆம்பியரின் வளையத்தால் சூழப்பட்ட மின்னோட்டத்தைக் குறிக்கும். சமச்சீரின் விளைவாக ஆம்பியரின் வளையம் முழுவதும் காந்தப்புலத்தின் எண்மதிப்பு மாறாமலிருக்கும். எனவே தொகையீட்டிலிருந்து B ஐ வெளியே எடுத்துவிடலாம்.
\(B \oint_C d l=\mu_o I\)
ஆம்பியர் வளையத்தின் சுற்றளவு 2\(\pi\)r. இதிலிருந்து
\(B \int_0^{2 \pi r} d l=\mu_o I\)
\(\vec{B} 2 \pi r=\mu_o I\)
\(\mathrm{B}=\frac{\mu_o I}{2 \pi r}\)
வெக்டர் வடிவில் காந்தப்புலம்
\(\vec{B}=\frac{\mu_o I}{2 \pi r} \hat{n}\)
இங்கு \(\hat{n}\) என்பது படத்தில் காட்டியுள்ளவாறு தொடுகோட்டின் வழியே ஆம்பியரின் வளையத்திற்குச் செல்லும் ஓரலகு வெக்டராகும். சமன்பாட்டில் காட்டப்பட்டுள்ள பயோட்-சாவர்ட் விதியிலிருந்து பெறப்பட்ட முடிவுடன் இது முழுதும் ஒத்துள்ளது.
8.
சீரான மின்புலத்தில் வைக்கப்பட்டுள்ள மின் இருமுனை மீது செயல்படும் விசை
(i) சம இடைவெளியில் ஒரே திசையிலமைந்த மின்புலக் கோடுகளினால் குறிக்கப்படும் சீரான மின்புலம் \(\vec { E } \) ஒன்றில் வைக்கப்பட்டுள்ள இருமுனை திருப்புத்திறன் \(\vec { p } \) கொண்ட மின் இருமுனை ஒன்றைக் கருதுவோம்.
(ii) +q மின்துகளானது மின்புலத்தின் திசையில் q \(\vec { E } \) என்ற விசையும் -q மின்துகளானது புலத்திற்கு எதிர்த்திசையில் -q. \(\vec { E } \) என்ற விசையையும் உணர்கின்றன.
(iii) புற மின்புலம் மொத்த விசை சுழியாகும்.
(iv) இவ்விரண்டு விசைகளும் வெவ்வேறு புள்ளிகளில் செயல்படுவதால் இரட்டை உருவாகிறது.
(v) அதனால் ஏற்படும் திருப்பு விசை மின் இருமுனையின் மீது செயல்பட்டு அதை சுழலச் செய்கிறது.
(vi) புள்ளி O வைப் பொருத்து மின் இருமுனையின் மீது செயல்படும் திருப்புவிசை
\(\vec { \tau } =\bar { OA } (-q\vec { E } )+\bar { OB } \times q\vec { E } \)
(vii) மொத்த திருப்புவிசையின் எண்மதிப்பு
\(\vec { \tau } =\left| \vec { O } \vec { A } \right| (-q\vec { E } )\left| \sin\theta +\left| \vec { O } \vec { B } \right| \right| qE\left| \sin\theta \right| \)
\(\tau =qE.2a \sin\theta \)
(viii) இங்கு θ என்பது \(\vec { p } \) மற்றும் \(\vec { E } \) க்கு இடைப்பட்ட கோணம்.
\(\vec { \tau } =\vec { \rho } \times \vec { E } \)
(x) இத்திருப்புவிசையின் எண்மதிப்பு ፒ = pE; θ=90o ஆகும் போது, அது பெரும மதிப்பை அடையும்.
(xi) இந்த திருப்பு விசையானது மின் இருமுனையை சுழலச் செய்து மின்புலத்தின் (\(\vec { E } \)) திசையில் அதை ஒருங்கமையச் செய்கிறது. மின்புலத்துடன் (\(\vec { E } \)) திருப்புத்திறன் (\(\vec { p } \)) ஒருங்கமைந்த பின், இருமுனையின் மீது செயல்படும் மொத்த திருப்புவிசை சுழியாகும்.
(xii) மின்புலம் சீரற்றதாக இருந்தால் +q ன் மீதான விசையும் -q மீதான விசையும் வெவ்வேறாக இருக்கும் இந்நிலையில் திருப்பு விசையுடன் நிகர விசை ஒன்றும் இருமுனையின் மீது செயல்படும்.
9.
(i) கோண உந்தம்
l = nħ = \(\frac { nh }{ 2\pi } \)
= \(\frac { 5\times 6.6\times { 10 }^{ -34 } }{ 2\times 3.14 } \) = 5.25 x 10-34 kgm2s-1
(ii) திசைவேகம்
\(\nu =\frac { l }{ mr } \)
v = 4.4 × 105ms−1
10.
கொடுக்கப்பட்டுள்ளது
படும் கதிர்வீச்சின் அலைநீளம் - 97.5 nm = 97.5 x 10-9 m
ஹைட்ரஜன் அணுவின் அடிநிலை ஆற்றல் = -13.6 eV
(i) முதன்மை குவாண்டம் எண் n = ?
(ii) சாத்தியமாகும் வரிகளின் எண்ணிக்கை மற்றும் வெளிவிடு நிறமாலையில் வரிகளின் மொத்த எண்ணிக்கை = ?
அ) (i) ஹைட்ரஜன் உட்கவர்ந்த ஆற்றல்
\(\begin{equation} \mathrm{E}=\frac{\mathrm{hc}}{\lambda}=\frac{6.6 \times 10^{-34} \times 3 \times 10^{8}}{97.5 \times 10^{-9}} \mathrm{~J} \end{equation}\)
\(\begin{matrix} { E }=\frac { { hc } }{ \lambda } =\frac { 6.6\times 10^{ -34 }\times 3\times 10^{ 8 } }{ 97.5\times 10^{ -9 }\times 1.6\times 10^{ -19 } } { eV } \end{matrix}\)
E = 12.74eV
ஹைட்ரஜன் அடிநிலை ஆற்றல் -13.6eV
En = -13.6 + 12.74 = -0.8562 eV
\({ E }_{ n }=-\cfrac { 13.6 }{ { n }^{ 2 } } -0.8562=-\cfrac { 13.6 }{ { n }^{ 2 } } \)
n2 = 15.88
n \(\cong\) 4
(ii) சாத்தியமாகும் நிலை மாற்றங்கள் மற்றும் வெளிவிடு நிறமாலையில் வரிகளின் மொத்த எண்ணிக்கை = \(\frac{n(n-1)}{2}=\frac{4(4-1)}{2}=\frac{4(3)}{2}=6\)
11.
பரப்பும் மற்றும் ஏற்கும் விண்ணலைக்கம்பிகளுக்கு இடையே உள்ள மொத்த தொலைவு d ஆனது தனித்தனி பரப்புகை நிகழும் தொலைவுகளின் கூடுதலுக்கு சமமாகும்.
d = d1 + d2
\(=\sqrt { 2{ Rh }_{ 1 } } +\sqrt { 2R{ h }_{ 2 } } \)
\(=\sqrt { 2R } (\sqrt { { h }_{ 1 } } +\sqrt { { h }_{ 2 } } )\)
\(=\sqrt { 2\times 6.4\times { 10 }^{ 6 } } \times (\sqrt { 40 } +\sqrt { 30 } )\)
\(=16\times { 10 }^{ 2 }\sqrt { 5 } \times (6.32+5.48)\)
= 42217 m = 42.217 km
12.
வெற்றிடத்தின் ஒளிவிலகல் எண், n1 = 1
வெற்றிடத்தில் சோடிய ஒளியின் அலை நீளம், λ1 = 5893 Å
வெற்றிடத்தில் ஒளியின் திசைவேகம், c = 3 × 108 m s–1
தண்ணீரின் ஒளிவிலகல் எண், n2 = 1.33
தண்ணீரில் சோடிய ஒளியின் அலைநீளம், λ2 மற்றும்
தண்ணீரில் சோடிய ஒளியின் திசைவேகம், v2 என்க.
(அ) அலைநீளத்தையும் ஒளிவிலகல் எண்ணையும் தொடர்புபடுத்தும் சமன்பாடு,
\(\frac { { \lambda }_{ 1 } }{ { { \lambda } }_{ 2 } } =\frac { { n }_{ 2 } }{ { n }_{ 1 } } \)
எனவே, λ2 = \(\frac { { n }_{ 1 } }{ { n }_{ 2 } } \) x λ1
கொடுக்கப்பட்ட மதிப்புகளைப் பிரதியிடும்போது,
λ2 = \(\frac { 1 }{ 1.33 } \) x 5893 Å = 4431 Å
λ2 = 4431 Å
(ஆ) திசை வேகத்தையும், ஒளிவிலகல் எண்ணையும் தொடர்புபடுத்தும் சமன்பாடு,
\(\frac { { v }_{ 1 } }{ { v }_{ 2 } } =\frac { { n }_{ 2 } }{ { n }_{ 1 } } \)
எனவே, v2 = \(\frac { { n }_{ 1 } }{ { n }_{ 2 } } \) x v1
கொடுக்கப்பட்ட மதிப்புகளைப் பிரதியிடும்போது,
v2 = \(\frac { 1 }{ 1.33 } \) x 3 x 108 = 2.256 × 108
v2 = 2.256 x 108ms -1
(இ) வெற்றிடத்தில் சோடிய ஒளியின் அதிர்வெண் v1 = \(\frac { c }{ { \lambda }_{ 1 } } \)
மதிப்புகளைப் பிரதியிடும் போது,
v1 = \(\frac { 3\times { 10 }^{ 8 } }{ 5893\times { 10 }^{ -10 } } \) = 5.091 x 1014 Hz
தண்ணீரில் சோடிய ஒளியின் அதிர்வெண், v2 = \(\frac { v }{ { \lambda }_{ 2 } } \)
மதிப்புகளைப் பிரதியிடும்போது,
v2 = \(\frac { 2.256\times { 10 }^{ 8 } }{ 4431\times { 10 }^{ -10 } } \) = 5.091 x 1014 Hz
ஊடகத்தைப் பொறுத்து அதிர்வெண்மாறாது என்பதை மேற்கண்ட முடிவுகள் உணர்த்துகின்றன.
13.
V = 10 V, R1 = 2 \(\Omega\), R3 = 2 \(\Omega\)
டையோடு D1 பின்னோக்கு சார்பு அதனால் மின்னோட்டம் கடத்த இயலாது. டையோடு DL பின்னோக்கு சார்பு அதனால் மின்னோட்டம் கடத்த முடியும்.
R = R1 + R3 = 2 + 2 = 4 \(\Omega\)
\(I=\frac{V}{R}=\frac{10}{4}=2.5 A\)
14.
உள்ளீடு மின்னழுத்தம்
Vp = 2300V
முதன்மை சுருளில் சுற்றுகளின் எண்ணிக்கை
NP = 4000
வெளியீடு மின்னழுத்தம்
துணைச் சுருளில் சுற்றுகளின் எண்ணிக்கை NS = ?
\(\frac { { V }_{ P } }{ { V }_{ S } } =\frac { { N }_{ P } }{ { N }_{ S } } \)
\(\frac { 2300 }{ 230 } =\frac { { 4000 } }{ { N }_{ s } } \)
\({ N }_{ s }=\frac { 4000\times 230 }{ 2300 } =400\)
NS = 400 சுற்றுகள்
15.
| மின் அமைப்பு | இயந்திர அமைப்பு | |
|---|---|---|
| 1 | மின்னூட்டம் q | இடப்பெயர்ச்சி x |
| 2 | மின்னூட்டம் \(i=\frac { dq }{ dt } \) | திசைவேகம் \(v=\frac { dx }{ dt } \) |
| 3 | மின்தூண்டல் எண் L | நிறை m |
| 4 | மின்தேக்குத்திறனின் தலைகீழி \(\frac { 1 }{ c } \) | விசை மாறிலி k |
| 5 | மின் ஆற்றல் = 1/2 \(\left( \frac { 1 }{ c } \right) { q }^{ 2 }\) | நிலை ஆற்றல் = 1/2 kx2 |
| 6 | காந்த ஆற்றல் = 1/2 Li2 | இயக்க ஆற்றல் = 1/2 mv2 |
| 7 | மின் காந்த ஆற்றல் U = 1/2 \(\left( \frac { 1 }{ c } \right) { q }^{ 2 }\) + 1/2 Li2 | இயந்திர ஆற்றல் E = 1/2 kx2 + 1/2 mv2 |
16.
P = 4.2ᘯ, Q = 3ᘯ, R = 2ᘯ, S = 15ᘯ
\(\frac { P }{ Q } =\frac { R }{ S } \)
\(\frac { P }{ Q } =\frac { 4.2 }{ 3 } =1.4\)
\(\frac { R }{ S } =\frac { 2 }{ 15 } =0.13\)
1. வீட்ஸ்டோன் சமனச்சுற்று சமநிலையில் இல்லை.
\(\frac { P }{ Q } =\frac { R }{ S' } \)
\(S'=\left( \frac { Q }{ P } \right) R=\left( \frac { 3 }{ 4.2 } \right) 2=\frac { 6 }{ 4.2 } =1.429\)
2. 15ᘯ உடன் இணைப்பில் இணைக்க வேண்டிய கூடுதல் மின்தடை காண்க.
\(\frac { 1 }{ S' } =\frac { 1 }{ S } +\frac { 1 }{ x } \)
\(\frac { 1 }{ x } =\frac { 1 }{ S' } -\frac { 1 }{ S } =\frac { 4.2 }{ 6 } -\frac { 1 }{ 15 } =\frac { 21 }{ 30 } -\frac { 2 }{ 30 } \)
\(\frac { 1 }{ x } =\frac { 19 }{ 30 } \Omega \)
\(x=\frac { 30 }{ 19 } \Omega \)
எனவே
\(\frac { 1 }{ S' } =\frac { 1 }{ S } +\frac { 1 }{ x } \)
\(\frac { 1 }{ S' } =\frac { 1 }{ 15 } +\frac { 19 }{ 30 } \)
\(\frac { 1 }{ S' } =\frac { 2+19 }{ 30 } =\frac { 21 }{ 30 } \)
\(S'=\frac { 30 }{ 21 } =\frac { 6 }{ 4.2 } =1.429\)
3. எனவே வீட்ஸ்டோன் சமனச்சுற்று சமநிலையில் இருக்க S = 15ᘯ உடன் x = \(\frac {30}{19}\) யை பக்க இணைப்பில் இணைக்க வேண்டும்.
4. இப்பொழுது மாற்றப்பட்ட வீட்ஸ்டோன்
P = 4.2ᘯ, Q = 3ᘯ
P = 2ᘯ , S = 1.429 ᘯ
\(\frac { P }{ Q } =\frac { 4.2 }{ 3 } =1.4\)
\(\frac { R }{ S } =\frac { 2 }{ 1.429 } =1.4\)
17.
1. கடத்திகளுக்கு ∝ நேர்க்குறியுடையது.
2. கடத்திகள் வெப்பநிலை அதிகரிக்கும்போது, கடத்தியில் உள்ள எலக்ட்ரான்களின் சராசரி இயக்க ஆற்றல் அதிகரிக்கும்.
3. இதன் விளைவாக மோதல்களின் எண்ணிக்கை அதிகரித்து மின்தடை எண்ணும் அதிகரிக்கும்.
18.
i) இணைப்பின் தொகுபயன் மின்னியக்கு விசை εeq = nε = 4 × 9 = 36 V
ii) தொகுபயன் அகமின்தடை req = nr = 4 × 0.1 = 0.4 Ω
iii) மொத்த மின்னோட்டம் I = \(\frac { nε }{ R+nr } \)
= \(\frac { 4\times 9 }{ 10+(4\times 0.1) } \quad \)
= \(\frac { 4\times 9 }{ 10+0.4 } =\frac { 36 }{ 10.4 } \)
I = 3.46A
iv) புற மின்தடையாக்கி குறுக்கே மின்னழுத்த வேறுபாடு V = IR = 3.46 x 10 = 34.6 V. மீதமுள்ள 1.4 V ஆனது மின்கலங்களின் அகமின்தடைக்கு குறுக்கே உருவாக்கப்படுகிறது.
v) ஒவ்வொரு மின்கலத்தின் குறுக்கே ஏற்படும் மின்னழுத்த வேறுபாடு \(\frac { V }{ n } =\frac { 34.6 }{ 4 } \) = 8.65V
19.

20.
\(P = \frac{E}{t}=\frac{nhv}{t}=\frac{nhc}{\lambda t}\\ \frac{P_1}{P_2}= \frac{1.04\times10^15\times1240}{520} \times \frac{460}{1.38 \times10^15\times1240}\)
= 1.5
21.
ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் 1915 ஆம் ஆண்டில் ஈர்ப்பு அலைகள் இருப்பதை கருத்தியலாக முன்மொழிந்தார்.
22.
(c)
வழித்தடத்தில்
23.
rn \(\propto\) n2
r1 : r2 : r3 = 1 : 4 : 9
24.
(c)
ஒளி வோல்டா செயல்பாடு
25.
(c)
γ - கதிர்
26.
(a)
இருமடங்கு
27.
(b)
3 x 108 Vm-1
28.
(c)
அதிகரித்தல்
29.
L = 20 x 10-3H. C = 50 x 10-6 F, R= 40Ω
என V = 10 sin 340 t
\(\therefore V_0=10 \mathrm{~V}, \omega=340 \)
\(X_1=1 \omega^{\prime}=20 \times 10^3 \times 340 \)
\(=6800 \times 10^{-1}=6.8 \Omega \)
\(X_C=\frac{1}{C .} \)
\(=\frac{1}{50 \times 10^{-\alpha} \times 340}=\frac{10^{\circ}}{17000}=\frac{10^{\prime}}{17}=58.823 \Omega \)
\(Z=\sqrt{R^2+\left(X_6-X_1\right)^2} \)
\(=\sqrt{(40)^2+(58.82-6.8)^2} \)
\(=\sqrt{(40)^2+(52.02)^2} \)
\(=65.62 \Omega\)
சுற்றில் உச்ச மின்னோட்டம்
\(I_0=\frac{V_0}{Z}=\frac{10}{65.62} \)
\(\cos 0=\frac{R}{Z}=\frac{40}{65.62} \)
A.C சுற்றில் திறன்
\(=V_{r m} 1_{r \rightarrow \infty} \cos \phi \)
\(=\frac{1}{2} V_{\mathrm{o}} I_{\mathrm{c}} \cos \phi \)
\(=\frac{1}{2} \times 10 \times \frac{10}{65.62} \times \frac{40}{65.62}\)
\(\frac{2000}{4305.98}\)
= 0.46 W
30.
(b)

31.
(c)
+z திசையில்
32.
U =\(\vec{p_m}.\vec {B}\)
U = -(0.5\(\hat{i}\) + 0.4\(\hat{j}\)).(0.2\(\hat{j}\))
U = 0.1 J
33.
\(\frac{1}{R_p}=\frac{1}{15}+\frac{1}{15}+\frac{1}{15}.\)
\(=\frac{1+1+1}{15}=\frac{3}{15}=\frac{1}{5}\)
∴ Rp = 5 Ω
\(\therefore I=\frac{V}{R_p}=\frac{5}{5}=1A\)
34.
நன்மைகள்:
i) ரோபோக்கள் மிகவும் துல்லியமானவை மற்றும் பணியை மேற்கொள்வதில் குறைபாடு அற்றவை.
ii) ரோபோக்கள் மனிதர்களைப் போல எப்போதும் சோர்வடையாது. அவை 24 x 7 மணி நேரமும் வேலைசெய்யும். எனவே பணி இடத்தில் வருகை தராமை குறைக்கப்படுகிறது.
தீமைகள் :
i) வேலை வாய்ப்பின்மை பிரச்சனை அதிகரிக்கும்.
ii) ரோபோக்கள் வரையறுக்கப்பட்ட வேலையை மட்டுமே செய்ய இயலும் மற்றும் எதிர்பாரா சூழல்களை கையாள இயலாது.
35.
நானோ அறிவியல் என்பது 1- 100 nm (1nm = 10-9 m) அளவுகள், வரை கொண்ட பொருள்களின் அறிவியல் ஆகும். பருப்பொருளானது நானோ பொருள்களாக பிரிக்கப்பட்டால் அவற்றின் இயற்பியல் பண்புகளில் மாற்றம் ஏற்படுகிறதா என்பதை அறிவது ஆகும்.
நானோ தொழில்நுட்பம் என்பது நானோ அளவில் கட்டமைக்கப்பட்ட பொருள்களின் வடிவமைப்பு, உற்பத்தி, பண்புக்கூறுகள் மற்றும் பயன்பாடுகள் உள்ளடக்கியது ஆகும்.
36.
சமமான அணுஎண் Z மற்றும் வேறுபட்ட நிறை எண் A கொண்ட ஒரே தனிமத்தின் அணுக்கள் ஐசோடோப்புகள் எனப்படும்.
\(_{ I }^{ I }{ H },_{ 1 }^{ 2 }{ H },_{ 1 }^{ 3 }{ H }\)
37.
1. தொலைவைப் பொருத்து, சைகையில் வலுவிழப்பு ஏற்படுதல்.
2. புவியினால் ஆற்றல் உறிஞ்சப்படுதல்.
3. புவியின் வளைபரப்பின் காரணமாக அலை சாயத் தொடங்கி மின்புல வலிமை குறைகிறது.
38.
ஊடகத்தின் விடுதிறன் = வெற்றிடத்தின் விடுதிறன் x ஊடகத்தின் ஒப்புமை விடுதிறன், \({ \varepsilon }={ \varepsilon }_{ o }{ \varepsilon }_{r }\) இதன் அலகு C2N-1m-2
39.
உருவாகும் வெப்ப ஆற்றல் H = I2Rt
மின்னோட்டத்தின் விளைவு
மின்சுற்றில் உருவாக்கப்படும் வெப்பமானது. மின்னோட்டத்தின் இருமடிக்கு நேர்தகவில் இருக்கும்.
மின்தடையின் விளைவு
மின்சுற்றில் உருவாக்கப்படும் வெப்பமானது மின்சுற்றின் மின்தடைக்கு நேர்தகவில் இருக்கும்.
நேரத்தின் விளைவு
மின்சுற்றில் உருவாக்கப்படும் வெப்பமானது. மின்னோட்டம் பாயும் நேரத்திற்கு நேர்தகவில் இருக்கும்.
40.
வரிச்சுருள் இரண்டு முனைகளும் ஒன்றுடன் ஒன்று தொடும் வகையில் வளைக்கப்பட்ட வட்ட அமைப்பே வட்ட வரிச்சுருளாகும்.
41.
மின்நிலைமம் L = 1μH = 1\(\times\)10-6 H
மின்தேக்குத்திறன் C = 1μF = 1 \(\times\)10-6 F
∴ அதிர்வெண் \(f =\frac{1}{2 \pi \sqrt{L C}} \)
\(f =\frac{1}{2 \pi \sqrt{1 \times 10^{-6} \times 1 \times 10^{-6}}} \) \(=\frac{1}{2 \pi \times 10^{-6}} Hz\)
மின்காந்த அலையின் திசைவேகம், C = 3 x 108 m/s
மின்காந்த அலையின் அலைநீளம்
\( \lambda = \frac {C}{f}\)
\(\lambda =\frac { 3 \times 10^ 8 }{1/2\pi \times 10^{-6} }\)
\(= 3 \times 2\pi \times 10^ {8+6} = 6\pi \times 10^{14} =6\times 3.14\times { 10 }^{ 14 }=18.84\times { 10 }^{ 14 }m\)
அலைநீளம் = 18.84 x 1014 m
42.
\(\oint \vec{B} \cdot \overrightarrow{d l}=\mu_o I_{\text {}}\)மூடப்பட்ட + \( +\mu_o \varepsilon_o \frac{d}{d t} \int \vec{E} \cdot \overrightarrow{d A}\)
43.
1. ஒரு பொருளின் மீது செல்லும் மின்னோட்டம் மற்றும் அப்பொருளின் குறுக்கே உள்ள மின்னழுத்த வேறுபாடு ஆகிய இரண்டிற்குமான வரைபடம் நேர்க்கோடாக அமைந்தால், அப்பொருட்கள் ஓம் விதிக்கு உட்படும் பொருட்கள் ஆகும்
2. மின்னோட்டம் மற்றும் மின்னழுத்த வேறுபாட்டிற்கான வரைபடம் நேர்கோடாக அமையாமல் சிக்கலான வடிவில் இருந்தால் இவ்வகை பொருட்கள் அல்லது கருவிகள் ஓம் விதிக்கு உட்படுவதில்லை.
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards