12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 14/09/2019
12ஆம் வகுப்பு Physics / இயற்பியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Physics / இயற்பியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Physics Test1.
எவையேனும் நான்கு மின்காந்த பண்புகளை தொகுத்து எழுதுக
2.
60 cm பக்கங்கள் கொண்ட ஒரு சமபக்க முக்கோணத்தின் உச்சிகளில் +1 μC, +3μC மற்றும் -5 μC மின்னூட்டங்கள் வைக்கப்பட்டுள்ளன. இம்மின்னூட்டங்களின் அமைப்பில் மின்னழுத்த ஆற்றலைக் கணக்கிடுக. = +1 x 10 C, qB = +3 x 10 C
3.
கடத்திக்கு வெளியே மின்புலமானது அதன் பரப்புக்கு செங்குத்தாகவும் \(\frac { \sigma }{ { \varepsilon }_{ o } } \) எண் மதிப்பு கொண்டதாகவும் இருக்கும். இங்கு σ என்பது கடத்தியின் குறிப்பிட்ட பகுதியில் உள்ள மின்னூட்டப் பரப்படர்த்தி ஆகும்.
4.
மின்னழுத்த வேறுபாட்டு உணர்திறன் வரையறு.
5.
ஒத்ததிர்வு அதிர்வெண் என்றால் என்ன?
6.
2 T என்ற ஒரு காந்தப்புலத்தில் 40 சுற்றுகள் மற்றும் 200 cm2 பரப்பு கொண்ட மூடிய சுருள் ஒன்று சுழற்றப்படுகிறது. அது 0.2 விநாடி நேரத்தில் அதன் தளம் புலத்திற்கு 30° கோணத்தில் இருக்கும் நிலையில் இருந்து, புலத்திற்கு செங்குத்தாக இருக்கும் நிலைக்கு சுழலுகிறது. அதன் சுழற்சியின் காரணமாக சுருளில் தூண்டப்படும் மின்னியக்கு விசையைக் காண்க.
7.
வெப்பநிலை மின்தடை எண் வரையறு.
8.
காற்றின் மின்காப்பு வலிமை 3 × 106 V m-1. வான் டி கிராப் இயற்றியின் கோளகக் கூட்டின் ஆரம் R = 0.5 m எனில் வான் டி கிராப் இயற்றியால் உருவாக்கப்படும் பெரும (maximum) மின்னழுத்த வேறுபாட்டைக் கணக்கிடுக.
9.
டயா, பாரா மற்றும் ஃபெர்ரோ காந்தவியலை ஒப்பிடு?
10.
படத்தில் காட்டியுள்ளவாறு பக்கம் a கொண்ட சதுரம் PQRS ன் மூலைகளில் நான்கு மின்துகள்கள் வைக்கப்பட்டுள்ளன.
(அ) இந்த நிலையமைப்பில் அம்மின்துகள்களை வைப்பதற்கு தேவைப்படும் வேலையைக் கணக்கிடு.
(ஆ) இந்நான்கு மின்துகள்களும் அதே மூலைகளில் இருக்கும் போது, இன்னொரு மின்துகளை (qʹ) சதுரத்தின் மையத்திற்குக் கொண்டு செல்ல எவ்வளவு அதிகப்படியான வேலை செய்யப்பட வேண்டும்?

11.
ஒவ்வொன்றும் 1g நிறையுடைய சிறிய உருவளவு கொண்ட, இரு ஒரே மாதிரியான கோளங்கள் சமநிலையில் உள்ளவாறு, படத்தில் காட்டப்பட்டுள்ளன. நூலின் நீளம் 10 cm மற்றும் செங்குத்துத் திசையுடன் நூல் உருவாக்கும் கோணம் 30o எனில் கோளம் ஒவ்வொன்றிலும் உள்ள மின்னூட்டத்தைக் கணக்கிடுக.(g = 10ms-2 என எடுத்துக் கொள்க)

12.
மின்னழுத்தம் மற்றும் மின்புலத்திற்கான தொடர்பைக் கூறு
13.
மின்னோட்டத்தின் வெப்ப விளைவு பயன்பாடுகள் என்ன?
14.
நிலை மின்னழுத்தம் – வரையறு.
15.
இரு இணையான தட்டுகளுடையே மின்தேக்கி ஒன்றின் பரப்பு A மற்றும் இடைதொலைவு d எனில் அவற்றினை ac மூலம் மின்னேற்றம் செய்யும் பொழுது இடப்பெயர்ச்சி மின்னூட்டம் மின்தேக்கியில் உள்ள மின்னோட்டத்திற்கு சமம் என நிரூபி
16.
மென் மற்றும் வன் ஃபெர்ரோ காந்தப் பொருள்களின் பண்புகளை ஒப்பிடுக.
17.
மின்காப்பை விளக்கி எவ்வாறு மின்காப்பினுள் மின்புலம் தூண்டப்படுகிறது என்பதையும் விளக்கவும்.
18.
பசுமை இல்ல விளைவு உருவாக காரணம்?
புறஊதா கதிர்
புறஊதா கதிர்
X - கதிர்
ரேடியோ அலை
19.
மின்காந்த அலையின் திசைவேகம் சமமாக இருப்பது ______
ஒற்றைப்படை அதிர்வெண்
இரட்டைப்படை அதிர்வெண்
அனைத்து அதிர்வெண்ணிற்கும்
அனைத்து செறிவிற்கும்
20.
மின்காந்த அலை______
ஒலியின் திசைவேகத்தில் பயணிக்கும்
சமதிசைவேகத்தில் அனைத்து ஊடகத்திலும் பரவும்
வெற்றிடத்தில் ஒளியின் திசைவேகத்தில் பரவும்
ஊடகத்தில் பரவாது
21.
ஆம்பியர் சுற்று விதியோடு தொடர்புடையது______
கடத்து மின்னோட்டம்
இடப்பெயர்ச்சி மின்னோட்டம்
(a) மற்றும் (b)
இவற்றில் ஏதுமில்லை
22.
மின்காந்த அலை_____
குறுக்கலையும் அல்ல நெட்டலையும் அல்ல
நெட்டலை
குறுக்கலை
(b) மற்றும் (c)
23.
ஒரு சட்ட காந்தத்தை கம்பிச்சுருளுக்கு அருகே (a) வேகமாக (b) மெதுவாக கொண்டு வரும் போது தூண்டப்பட்ட மின்னியக்கு விசை ______
(a) ல் அதிகம்
(a) ல் குறைவு
(a) மற்றும் (b) ல் சமம்
ஆரத்தை பொருத்து
24.
AC மின்னாக்கியில் தூண்டப்படும் மின்னியக்குவிசை எதைப் பொறுத்தது?
சுற்றுகளின் எண்ணிக்கை
காந்தப்புலம்
சுழற்சியின் அதிர்வெண்
அனைத்தும்
25.
0.2m நீளமுள்ள கடத்தி 5T காந்தப்புலத்தில் 0.3 m/s வேகத்தில் இயங்கினால் தூண்டப்பட்ட மின்னியக்கு விசை _____
0.3 V
0.03 V
30 V
3 V
26.
E = Ar என்ற எண்மதிப்பு கொண்ட மின்புலம் வெளிப்புறமாக செயல்படும் ஆரம் 'r' கொண்ட ஒன்றின் மையத்தில் உள்ள மின்னூட்ட மதிப்பு ______
\(\frac { 1 }{ 4\pi { \varepsilon }_{ o } } { Ar }^{ 3 }\)
\(4\pi { \varepsilon }_{ o }\)Ar3
\(\frac { 1 }{ 4\pi { \varepsilon }_{ o } } \)\(\frac { A }{ { r }^{ 3 } } \)
\(\frac { 4{ \pi \varepsilon }_{ o } }{ { r }^{ 3 } } \)
27.
ஒரு இணையான கம்பிகளில் 10A மின்னோட்டம் ஒரே திசையில் செல்கிறது. இதில் ஏற்படும் ஈர்ப்பு விசையின் மதிப்பு 1 x 10-3 N ஆகும். இரு கம்பிகளின் மின்னோட்டத்தையும் இரட்டிப்பாக்கினால், அதன் ஈர்ப்பு விசையை மதிப்பிடுக.
1 x 10-3N
2 x 10-3N
4 x 10-3N
0.25 x 10-3N
28.
\(\oint { \overrightarrow { B } .\overrightarrow { dl } = } \) _________
μIo
μoIo
\(\frac { { \mu }_{ o } }{ { I }_{ o } } \)
\(\frac { { I }_{ o } }{ { \mu }_{ o } } \)
29.
லாரன்ஸ் விசையின் எண்மதிப்பு மற்றும் திசை __________
\(\overrightarrow { F } =q(\overrightarrow { B } \times \overrightarrow { V } )\)
\(\ { F } =q(\overrightarrow { V } \times \overrightarrow { B } )\)
\(\overrightarrow { F } =q(\overrightarrow { B } \times \overrightarrow { E } )\)
\(\\ \overrightarrow { F } =q(\overrightarrow { V } .\overrightarrow { B } )\)
30.
ஒரு மின்தேக்கிக்கு அளிக்கப்படும் மின்னழுத்த வேறுபாடு V லிருந்து 2V ஆக அதிகரிக்கப்படுகிறது எனில், பின்வருவனவற்றுள் சரியான முடிவினைத் தேர்ந்தெடுக்க.
Q மாறாமலிருக்கும், C இரு மடங்காகும்
Q இரு மடங்காகும், C இரு மடங்காகும்
C மாறாமலிருக்கும், Q இரு மடங்காகும்
Q மற்றும் C இரண்டுமே மாறாமலிருக்கும்
31.
32.
–q மின்னூட்ட மதிப்புள்ள இரு புள்ளி மின்துகள்கள் படத்தில் உள்ளவாறு வைக்கப்பட்டுள்ளன. இவற்றுக்கு நடுவில் P என்ற புள்ளியில் +q மதிப்புள்ள மூன்றாவது மின்துகள் வைக்கப்படுகிறது. P லிருந்து அம்புக்குறியிட்டு காட்டப்பட்டுள்ள திசைகளில் சிறிய தொலைவுகளுக்கு +q மின்துகள் நகர்த்தப்பட்டால் எந்தத் திசை அல்லது திசைகளில், இடம்பெயர்ச்சியைப் பொருத்து, +q ஆனது சமநிலையில் இருக்கும்?

A1 மற்றும் A2
B1 மற்றும் B2
இரு திசைகளிலும்
சமநிலையில் இருக்காது
1.
(i) மின்காந்த அலைகள் முடுக்குவிடப்பட்ட மின்னூட்டங்களால் உருவாக்கப்படுகிறது. அலை பரவ ஊடகங்கள் தேவையில்லை
(ii) அலை குறுக்கலைப் பண்புடையவை
(iii) வெற்றிடத்தில் என்ற திசைவேகத்தில் பயணிக்கும் \(c=\frac { 1 }{ \sqrt { { \mu }_{ o }{ \varepsilon }_{ o } } } 3\times { 10 }^{ 8 }m{ s }^{ -1 }\)
(iv) மின்புல மற்றும் காந்தபுல வெக்டர்கள் ஒரே கட்டத்தில் அலைவுறும் \(\vec { E } \) மற்றும் \(\vec { B } \)
(v) மின்காந்த அலைகளின் மின்புல மற்றும் காந்தபுல வீச்சுகளின் விகிதம் \(\frac { { E }_{ o } }{ { B }_{ o } } =c=\frac { 1 }{ \sqrt { { \mu }_{ o }{ \varepsilon }_{ o } } } \)
2.
qA = +1 x 10-6C, qB = +3 x 10-6 C
qc = -5 x 10-6 C r = 60cm = 0.6 m
\(U=\frac { 1 }{ 4\pi { \varepsilon }_{ o } } \)\(\left[ \frac { { q }_{ A }{ q }_{ B } }{ AB } +\frac { { q }_{ B }{ q }_{ C } }{ BC } +\frac { { q }_{ c }{ q }_{ A } }{ CA } \right] \)
= \(\frac { 9\times { 10 }^{ 9 } }{ 0.6 } \)[(1 x 3 x 10-12)+(-5 x 3 x 10-12)+(1 x -5 x 10-12)]
= 9 x 109 x 10-12 (3 - 15 - 5)
\(=\frac { 9\times { 10 }^{ 9 }\times { 10 }^{ 12 }\times 17 }{ 0.6 } =0.255j\)
3.
(i) கடத்தியின் பரப்பிற்கு இணையான திசைகளில் மின்புலத்தின் கூறுகள் இருந்தால் பரப்பிலுள்ள கட்டுறா எலக்ட்ரான்கள் முடுக்கப்படும்.
(ii) அதாவது, கடத்தி சமநிலையில் இல்லை என்றாகும். எனவே, நிலைமின் சமநிலையில், கடத்தியின் பரப்புக்கு செங்குத்தான திசையில் மட்டுமே மின்புலம் அமையும்.
(iii) கடத்தியின் பரப்புக்கு சற்று வெளியே மின்புலத்தின் எண்மதிப்பு \(\frac { \sigma }{ { \varepsilon }_{ o } } \) என்பதே நிறுவுவோம்.
(iv) சிறிய உருளை வடிவ காஸியன் பரப்பைக் கருதுவோம். இவ்வுருளையின் ஒரு பாதி கடத்தியின் உட்புறமாகப் பதிந்துள்ளது.
(v) கடத்தியின் பரப்புக்கு செங்குத்தாக மின்புலத்தின் திசை இருக்கும் என்பதால், உருளையின் வளைபரப்பினைக் கடக்கும் மின்பாயம் சுழி. மேலும் கடத்தியின் உட்புறம் மின்புலம் சுழியாவதால் காஸியன் பரப்பின் அடிப்பகுதிக்கு மின்பாயம் சுழி.
(vi) சிறிய உருளை வடிவ காஸியன் பரப்பைக் கருதுவோம். இவ்வுருளையின் ஒரு பாதி கடத்தியின் உட்புறமாகப் பதிந்துள்ளது
(vii) கடத்தியின் பரப்புக்கு செங்குத்தாக மின்புலத்தின் திசை இருக்கும் என்பதால், உருளையின் வளைப்பரப்பினைக் கடக்கும் மின்பாயம் சுழி. மேலும் கடத்தியின் உட்புறம் மின்புலம் சுழியாவதால் காஸியன் பரப்பின் அடிப்பகுதிக்கு மின்பாயம் சுழி. மேலும் கடத்தியின் உட்புறம் மின்புலம் சுழியாவதால் காஸியன் பரப்பின் அடிப்பகுதிக்கு மின்பாயம் சுழி
(viii) எனவே மேல்பக்க தட்டைப் பரப்பு மட்டுமே மின்பாயத்தைக் கொடுக்கும். இதில் மின்புலத்தின் திசையானது பரப்பு (\(\vec { A } \)) வெக்டரின் திசையிலேயே இருக்கும்.
(x) மேலும் (மேற்பாதி உருளை) பரப்பிற்கு உட்புறம் உள்ள மின்துகள்களின் மொத்த மின்னூட்ட மடிப்பு σA. காஸ் விதியைப் பயன்படுத்த,
\(EA=\frac { \sigma A }{ { \varepsilon }_{ o } } \)
வெக்டரின் வடிவில், \(\vec { E } =\frac { \sigma }{ { \varepsilon }_{ o } } \hat { n } \)
இங்கு \(\hat { n } \) என்பது கடத்தியின் பரப்புக்கு செங்குத்தான, வெளி நோக்கிய திசையிலுள்ள ஓரழகு வெக்டர் σ > 0, எனில், மின்புலமானது பரப்புக்கு செங்குத்தாக, உள்நோக்கிய திசையில் இருக்கும்.
4.
கால்வனோ மீட்டரின் முனைகளுக்கிடையே அளிக்கப்படும் ஓரலகு மின்னழுத்த வேறுபாடிற்கான விலகலே, அதன் மின்னழுத்த வேறுபாட்டு உணர்திறன் எனப்படும்.
\(\frac { \theta }{ V } =\frac { \theta }{ { IR }_{ g } } =\frac { NBA }{ { KR }_{ g } } \)
Rg கால்வனோ மீட்டர் மின்தடை
5.
ஒத்ததிர்வு ஏற்படும் மின்மூலத்தின் அதிர்வெண் ஒத்ததிர்வு அதிர்வெண் எனப்படும்.
\(\frac { 1 }{ R } \sqrt { \frac { L }{ C } } \)
\({ \omega }_{ r }L=\frac { 1 }{ { \omega }_{ r }C } \) (அல்லது) XL = XC
6.
N = 40 சுற்றுகள்; B = 2 Wb m–2
A = 200 cm2 = 200 x 10–4 m2;
தொடக்க பாயம், Φi = BA cos θ
= 2 x 200 x 10-4 x cos 600
ஏனெனில் θ = 900 - 300 = 600
Φi = 2 x 10-2 Wb
இறுதி பாயம், Φf = BA cos θ
= 2 x 200 x 10-4 x cos 600
ஏனெனில் θ = 0°
Φf = 4 x 10-2Wb
தூண்டப்பட்ட மின்னியக்கு விசையின் எண்மதிப்பு
ε = N\(\frac {dΦ_B }{dt } \)
\(=\frac{40\times(4\times 10^{-2}-2\times10^{-2})}{0.2}\) = 4V
7.
ஒரு பொருளின் ஒரு டிகிரி வெப்பநிலை உயர்வில் ஏற்படும் மின்தடை எண் உயர்விற்கும், To வெப்பநிலையில் உள்ள மின்தடை எண்ணுக்கும் இடையே உள்ள விகிதம் வெப்பநிலை மின்தடை எண் ஆகும்.
\(\alpha=\frac{\rho_T-\rho_0}{\rho_0\left(T-T_0\right)} = \frac{\triangle \rho}{\rho_{0} \triangle T}\)
8.
காஸ் விதிப்படி, கோளத்தின் பரப்பில் மின்புலம்
\(E=\cfrac { 1 }{ 4\pi { \varepsilon }_{ 0 } } \cfrac { Q }{ { R }^{ 2 } } \)
கோளகக் கூட்டின் பரப்பில் மின்னழுத்தம் V = ER
\(V=\cfrac { 1 }{ 4\pi { \varepsilon }_{ 0 } } \cfrac { Q }{ { R } } =ER\)
இங்கு \({ V }_{ max }={ E }_{ max }R\)
Emax = 3 × 106 Vm-1 எனவே உருவாக்கப்படும் பெரும மின்னழுத்த வேறுபாடு
Vmax = 3 x 106 x 0.5 = 1.5 x 106V (அல்லது) 1.5 மில்லியன் வோல்ட்
9.
| வரிசை எண் | டயாக்காந்தம் | பாராகாந்தம் | ஃபெர்ரோகாந்தம் |
| 1. | ஒவ்வொரு எலக்ட்ரானும் ஒரு குறிப்பிட்ட அளவு சுற்றுப்பாதை காந்த இருமுனை திருப்புத்திறனை பெற்றிருக்கும். | ஒவ்வொரு அணுவும் அல்லது மூலக்கூறும் நிகர காந்த இருமுனை திருப்புத்திறன்களைப் பெற்றுள்ளன. | ஒரு அணு அல்லது மூலக்கூறு நிகர காந்த இருமுனை திருப்புத்திறன்களைப் பெற்றுள்ளன. |
| 2. | சுற்றுப்பாதை தளங்கள் தற்போக்காக ஒழுங்கற்ற முறையில் எல்லா திசைகளிலும் அமைந்துள்ளது. | காந்த இருமுனை திருப்புத்திறன்களின் வெக்டர் ஒழுங்கற்ற முறையில் எல்லா திசைகளிலும் அமைந்துள்ளது. | பெருங்கூறின் உள்ளே உள்ள காந்தத்திருப்புத் திறன்களும் ஒரு குறிப்பிட்ட திசையில் ஒருங்கமைந்துள்ளன. |
| 3. | நிகர காந்த இருமுனை திருப்புத் திறன்களின் வெக்டர் கூடுதல் சுழியாகும். | எந்தவொரு அணுவும் தொகுபயன் காந்த இருமுனை திருப்புத்திறனை பெற்றிருக்காது. | பொருளின் நிகர காந்தமாக்கல் சுழியாகும் |
10.
(அ) சதுரத்தின் மூலைகளில் மின் துகள்களை வைக்கத் தேவைப்படும் வேலையானது அவை எந்த வரிசையில் வைக்கப்படுகின்றன என்பதைச் சார்ந்ததல்ல. எனவே, நாம் எந்த வரிசையையும் பயன்படுத்தலாம்.
(i) முதலில் +q மின்னூட்டம் கொண்ட மின்துகளை ஒரு மூலைக்கு (P) கொண்டு வருவோம். பிற மின்துகள்கள் ஏதும் அங்கு இல்லாததால், இதற்கு தேவைப்படும் வேலை சுழி, WP = 0
(ii) -q மதிப்புடைய மின்துகளை மூலை Q க்கு கொண்டு வர செய்யப்படும் வேலை = (-q) × (புள்ளி P ல் வைக்கப்பட்டுள்ள +q மதிப்புடைய மின்துகளினால் புள்ளி Q வில் ஏற்படும் மின்னழுத்தம்).
\({ W }_{ Q }=-q\times \cfrac { 1 }{ 4\pi { \varepsilon }_{ 0 } } \cfrac { q }{ a } =-\cfrac { 1 }{ 4\pi { \varepsilon }_{ 0 } } \cfrac { { q }^{ 2 } }{ a } \)
(iii) +q மதிப்புடைய மின்துகளை மூலை R க்கு கொண்டு வர செய்யப்படும் வேலை = q × (புள்ளி P மற்றும் Q வில் வைக்கப்பட்டுள்ள மின்துகள்களால் புள்ளி R ல் ஏற்படும் மின்னழுத்தம்).
\({ W }_{ R }=q\times \cfrac { 1 }{ 4\pi { \varepsilon }_{ 0 } } \left( -\cfrac { q }{ a } +\cfrac { q }{ \sqrt { 2 } } \right) \)
= \(\cfrac { 1 }{ 4\pi { \varepsilon }_{ 0 } } \cfrac { { q }^{ 2 } }{ a } \left( -1+\cfrac { 1 }{ \sqrt { 2 } } \right) \)
(iv) நான்காவது மின்துகள் -q ஐ மூலை S க்கு கொண்டு வர செய்யப்படும் வேலை = -q × (புள்ளிகள் P, Q மற்றும் R ல் வைக்கப்பட்டுள்ள மூன்று மின்துகள்களாலும் புள்ளி S ல் ஏற்படும் மின்னழுத்தம்)
\({ W }_{ S }=-q\times \cfrac { 1 }{ 4\pi { \varepsilon }_{ 0 } } \left( \cfrac { q }{ a } +\cfrac { q }{ a } -\cfrac { a }{ \sqrt { 2a } } \right) \)
\({ W }_{ S }=-q\times \cfrac { 1 }{ 4\pi { \varepsilon }_{ 0 } } \left( 2-\cfrac { 1 }{ \sqrt { 2 } } \right) \)
(ஆ) சதுரத்தின் மையத்திற்கு qʹ மின்துகளைக் கொண்டு வர செய்யப்படும் வேலை = qʹ × (நான்கு மூலைகளில் உள்ள மின்துகள்களாலும் மையப்புள்ளி O வில் உருவாகும் மின்னழுத்தம்)
+q மின்னூட்டம் பெற்ற இரு மின்துகள்களால் ஏற்படும் மின்னழுத்தமானது –q மின்னூட்டம் பெற்ற மற்ற இரு மின்துகள்களால் ஏற்படும் மின்னழுத்தத்தால் சமன் செய்யப்படும். எனவே, அனைத்து மூலைகளிலும் உள்ள மின்துகள்களால் மையப்புள்ளி O யில் ஏற்படும் மொத்த மின்னழுத்தம் சுழியாகும். எனவே, எந்த மின்துகள்களையும் புள்ளி O விற்குக் கொண்டு வர செய்யப்படும் வேலை சுழி. அதாவது, ஏதேனும் ஒரு மின்துகளை (qʹ) புள்ளி O க்கு அருகில் கொண்டு வந்த பின்னர், புற விசை ஏதுமின்றி, தானாகவே அது புள்ளி O க்கு நகரும் என்பதையே இது உணர்த்துகிறது.
11.
கோளங்கள் இரண்டும், மின்னூட்டம் அற்றவையாக இருந்தால், அவை தொங்கவிடப்படும் போது அவற்றுக்கு இடையே உருவாகும் கோணம் 0o ஆக இருக்கும். ஆனால் அவை நேர்மின்னூட்டம் பெற்ற கோளங்கள் ஆதலால், அவற்றுக்கிடையே விலக்கு விசை செயல்பட்டு, செங்குத்து திசைக்கு 30˚ கோணத்தில் அவை சமநிலைக்கு வருகின்றன. சமநிலையில் ஒவ்வொரு கோளமும் உணரும் நிகர விசை சுழியாகும். அவற்றுள் ஏதேனும் ஒரு கோளத்திற்கான தனித்த பொருள் விசைப்படத்தை நாம் வரைந்து, செங்குத்து மற்றும் கிடைமட்டத் திசைகளில் நியூட்டனின் இரண்டாம் விதியைப் பயன்படுத்துவோம்.

நேர்க்குறி x – திசையில் கோளத்தின் நிகர முடுக்கம் சுழி.
நியூட்டனின் இரண்டாம் விதிப்படி \(({ \vec { F } }_{ tot }=m\vec { a } ),\)
\(T \sin\theta \hat { i } -{ F }_{ e }\hat { i } =0\)
\(T \sin\theta ={ F }_{ e }\) (1)
இங்கு T என்பது நூலினால் கோளத்தின் மீது செலுத்தப்படும் இழுவிசை மற்றும் Fe என்பது இரு கோளங்களுக்கு இடையிலான நிலைமின் விசை
y – திசையிலும் கூட, கோளத்தின் நிகர முடுக்கம் சுழி. எனவே
\(T \cos\theta \hat { j } -mg\hat { j } =0\)
எனவே, \(T \cos\theta =mg\) (2)
சமன்பாடு (1) ஐ (2) ஆல் வகுக்க.
\(\tan\theta =\frac { { F }_{ e } }{ mg } \) (3)
இரு கோளங்களும் சம மின்னூட்டம் பெற்றுள்ளதால், நிலைமின் விசையின் எண்மதிப்பு
\({ F }_{ e }=k\frac { { q }^{ 2 } }{ { r }^{ 2 } } \quad k=\frac { 1 }{ 4\pi { \varepsilon }_{ 0 } } \)
மேலும் r = 2a = 2L sin \(\theta \) , சமன்பாடு (3) ல் பிரதியிட
\(\tan\theta =k\frac { { q }^{ 2 } }{ mg\left( 2L\sin\theta \right) ^{ 2 } } \) (4)
சமன்பாடு (4) ஐ மாற்றியமைக்க.
\(q=2L \sin\theta \sqrt { \frac { mg \tan\theta }{ k } } \)
\(=2\times 0.1\times { \sin 30 }^{ o }\times \sqrt { \frac { { 10 }^{ -3 }\times 10\times {\tan30 }^{ o } }{ 9\times { 10 }^{ 9 } } } \)
q = 8.01 x 10-8C = 80.1 nC
12.
dw = dv (அல்லது) dv = -E.dx
மின்புலமானது எதிராக குறிப்பிடப்பட்ட மின்னழுத்தச் சரிவுக்கு சமம்
\(\vec { E } =-\left( \frac { dv }{ dx } \hat { i } +\frac { 2V }{ 2y } \hat { j } +\frac { dv }{ dz } \hat { k } \right) \)
13.
மின்னிறக்க விளக்குகள் [Discharge lamp] மின் பற்றவைத்தல் (வெல்டிங்), மின்வில் போன்றவை மின்னோட்டத்தின் வெப்பவிளைவை பயன்படுத்துகின்றன.
14.
ஒரு புள்ளியில் (P) மின்னழுத்தம் என்பது புற மின்புலம் ( \(\vec{E}.\)) செயல்படும் பகுதியில் முடிவிலாத் தொலைவிலிருந்து அப்புள்ளிக்கு(P) ஓரலகு நேர் மின்னூட்டம் கொண்ட மின்துகளை சீரான திசைவேகத்துடன் கொண்டு வர புற விசை ஒன்றினால் செய்யப்படும் வேலைக்கு சமமாகும்.
\(V=\frac{1}{4\piε_0}\frac{q}{r}\)
15.
தட்டுகளுக்கிடையே மின்புலம்
\(E=\frac { \sigma }{ { \varepsilon }_{ 0 } } =\frac { q }{ { \varepsilon }_{ 0 }A } \)
q என்பது தட்டுகளின் மின்துகள் மின்பய தட்டில்
\({ \phi }=EA=\frac { q }{ { \varepsilon }_{ 0 }A } .A\frac { q }{ { \varepsilon }_{ 0 } } \)
இடப்பெயர்ச்சி மின்னோட்டம்
\({ I }_{ D }=\frac { d\phi }{ dt } ={ \varepsilon }_{ 0 }\frac { d }{ dt } \left[ \frac { q }{ { \varepsilon }_{ 0 } } \right] =\frac { dq }{ dt } \)
ஆனால் \(\frac { d }{ dt } \) = என்பது மின்னூட்டம் மாறும் வீதம் ID = IC
இடப்பெயர்ச்சி மின்னோட்டம் = கடத்தி மின்னோட்டம்
16.
| எண் | பண்புகள் | மென் ஃபெர்ரோ காந்தப்பொருட்கள் | வன் ஃபெர்ரோ காந்தப்பொருட்கள் |
| 1. | புற காந்தப்புலத்தை நீக்கும் போது | காந்தத்தன்மை மறைந்து விடும் | காந்தத்தன்மை மறையாது |
| 2. | தயக்கக்கண்ணினியின் பரப்பு | சிறியது | பெரியது |
| 3. | காந்த தேக்குத்திறன் | குறைவு | அதிகம் |
| 4. | காந்த நீக்குத்திறன் | குறைவு | அதிகம் |
| 5. | காந்த ஏற்புத்திறன் மற்றும் காந்த உட்புகுத்திறன் | அதிகம் | குறைவு |
| 6. | தயக்க இழப்பு | குறைவு | அதிகம் |
| 7. | பயன்கள் | வரிச்சுருள் உள்ளகம், மின்மாற்றி உள்ளகம் மற்றும் மின்காந்தங்கள் செய்ய பயன்படுகிறது. | நிலையான காந்தங்கள் செய்ய பயன்படுகிறது. |
| 8. | எடுத்துக்காட்டுகள் | தேனிரும்பு, மியூமெட்டல் ஸ்டெல்லாய் மற்றும் சில பொருட்கள் | எஃகு, ஆல்நிக்கோ, காந்தக்கல் மற்றும் சில பொருட்கள். |
17.
(i) கடத்தியொன்றைப் புற மின்புலத்தில் வைக்கும்போது, அதிலுள்ள மின்துகள்கள் ஒருங்கமைக்கப்பட்டு, அதனால் உருவாகும் மின்புலமானது புற மின்புலத்தை சமன் செய்யும். ஆனால் மின்காப்பைப் பொறுத்தவரை, அதில் கட்டுறா எலெக்ட்ரான்கள் இல்லாததால், புற மின்புலமானது அதிலுள்ள மின்துகள்களை ஒருங்கமைக்கச் செய்தாலும் அதனால் உருவாகும் அக மின்புலம் புற மின்புலத்தை விடக் குறைவாக இருக்கும்.
(ii) எனவே, மின்காப்பின் உட்புறம் நிகர மின்புலம் சுழியாவதில்லை, மேலும் புற மின்புலத்தின் திசையிலேயே நிகர மின்புலம் இருக்கிறது. ஆனால் அதன் எண்மதிப்பு புற மின்புலத்தைவிடக் குறைவாகவே இருக்கும்.
(iii) மின்தேக்கி ஒன்றின் எதிரெதிர் மின்னூட்டம் பெற்ற இரு தட்டுகளுக்கு இடையே ஒரு செவ்வக வடிவ மின்காப்புப் பாலம் வைக்கப்படுகிறது.
(iv) தட்டுகளுக்கு இடையே நிலவும் சீரான மின்புலம் மின்காப்பிற்கு ஒரு புற மின்புலமாக (\(\vec { { E }_{ ext } } \)) செயல்பட்டு அதனை முனைவாக்கம் செய்கிறது.
(v) அதன் ஒரு பக்கத்தில் நேர்மின்துகளும் மற்றொறு பக்கம் எதிர் மின்துகளும் தூண்டப்படுகின்றன. ஆனால் மின்கம்பின் உட்புறத்திலோ ஒரு சிறு பருமனில் கூட நிகர மின்னூட்ட பரப்படர்த்தி +σb மற்றும் -σb கொண்ட, எதிரெதிர் மின்னூட்டம் பெற்ற இரு தட்டுகளுக்கு ஒப்பாகும்.
(vi) இம்மின்துகள்கள் கட்டுண்ட மின்துகள்கள் (Bound charges) எனப்படும். இவை கடத்தியிலுள்ள கட்டுறா எலக்ட்ரான்களைப் போல் இவை தடையற்ற இயக்கத்தைப் பெற முடியாது.
18.
(a)
புறஊதா கதிர்
19.
(d)
அனைத்து செறிவிற்கும்
20.
(c)
வெற்றிடத்தில் ஒளியின் திசைவேகத்தில் பரவும்
21.
(c)
(a) மற்றும் (b)
22.
(c)
குறுக்கலை
23.
(a)
(a) ல் அதிகம்
24.
(d)
அனைத்தும்
25.
(a)
0.3 V
26.
(b)
\(4\pi { \varepsilon }_{ o }\)Ar3
27.
(c)
4 x 10-3N
28.
(b)
μoIo
29.
(a)
\(\overrightarrow { F } =q(\overrightarrow { B } \times \overrightarrow { V } )\)
30.
V லிருந்து 2 V க்கு மின்னழுத்தம் அதிகரித்தால்
பிறகு Q1 = CV
Q2 = C(2 V) = 2 CV
∴ Q ம் இருமடங்காகும் C மாறாமலிருக்கும்
31.
(b)
32.
B1 மற்றும் B2 களுக்கு இடையில் இடப்பெயர்ச்சியைச் சார்ந்து சமநிலையில் இருக்கும்.
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards