12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 06/12/2019
இயற்பியலின் அண்மைக்கால வளர்ச்சிகள் Recent Developments in Physics
12ஆம் வகுப்பு Physics / இயற்பியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Physics / இயற்பியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Physics Test1.
ஈர்ப்பு அலைகளை கருத்தியலாக முன்மொழிந்தவர் ______.
கான்ராட் ரோன்ட்ஜென்
மேரி கியூரி
ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்
எட்வார்டு பர்செல்
2.
புரோட்டான்கள் மற்றும் நியூட்ரான்களுக்கு நிறையை அளிக்கும் துகள்_______.
ஹிக்ஸ் துகள்
ஐன்ஸ்டீன் துகள்
நானோ துகள்
பேரளவு துகள்
3.
மூளையானது வலியைச் செயலாக்குவதை நிறுத்த பயன்படுத்தப்படும் தொழில்நுட்பம் ______.
துல்லிய மருத்துவம்
கம்பியில்லா மூளை உணர்வி
மெய்நிகர் உண்மை
கதிரியக்கவியல்
4.
ரோபோக்களில் தசைக்கம்பிகள் உருவாக்க பயன்படும் உலோகக்கலவைகள் _______.
வடிவ நினைவு உலோகக்கலவைகள்
தங்கம் தாமிர உலோகக்கலவைகள்
தங்கம் வெள்ளி உலோகக்கலவைகள்
இரு பரிமாண உலோகக்கலவைகள்
5.
அணுக்களை ஒன்றுதிரட்டி நானோபொருளை உருவாக்கும் முறை அழைக்கப்படுவது _______.
மேலிருந்து –கீழ் அணுகுமுறை
கீழிலிருந்து –மேல் அணுகுமுறை
குறுக்கு கீழ் அணுகுமுறை
மூலை விட்ட அணுகுமுறை
6.
மிகவும் நிலைத்த தன்மை கொண்ட செயற்கைப் பொருள் உருவாக்குவதற்கான திட்ட வரையறை எதனைப் பின்பற்றியது.
தாமரை இலை
மார்ஃபோ பட்டாம்பூச்சி
கிளிமீன்
மயிலிறகு
7.
ZnO பொருளின் துகள் அளவு 30 nm. இந்த பரிமாணத்தின் அடிப்படையில் அது இவ்வாறு வகைப்படுத்தப்படுகிறது.
பேரளவு பொருள்
நானோ பொருள்
மென்மையான பொருள்
காந்தப்பொருள்
8.
துணை அணுத்துகள்கள் என்பவை யாவை?
9.
கருந்துளைகள் என்றால் என்ன?
10.
ரோபோக்கள் உருவாக்க ஏன் எஃகு தேர்வு செய்யப்படுகிறது?
11.
எந்திரனியலின் ஏதேனும் இரு நன்மைகள் மற்றும் தீமைகளைக் குறிப்பிடுக.
12.
இயற்கையில் உள்ள ‘நானோ’ பொருட்களுக்கு ஏதேனும் இரண்டு எடுத்துக்காட்டுகள் தருக.
13.
நானோ பொருட்கள் மற்றும் பேரளவு பொருட்கள் இடையே உள்ள வேறுபாடு யாது?
14.
நானோ அறிவியல் மற்றும் நானோ தொழில்நுட்பம் வேறுபடுத்துக.
15.
மருத்துவ நோயறிதல் மற்றும் சிகிச்சையின் சமீபத்திய வளர்ச்சியைப் பற்றிய கருத்தைக் கூறுக.
16.
ஏதேனும் இரு வகையான ரோபோக்களை பொருத்தமான எடுத்துக்காட்டுகளுடன் விரிவாக விளக்குக.
17.
ரோபோக்களின் முக்கிய பாகங்களின் செயல்பாடுகளை விவரி.
18.
நானோ பயன்படுத்துவதால் ஏற்படக்கூடிய தீய விளைவுகள் யாவை? ஏன்?
19.
பல்வேறு துறைகளில் நானோ பொருள்களின் பயன்பாடுகளை விவரி.
1.
ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் 1915 ஆம் ஆண்டில் ஈர்ப்பு அலைகள் இருப்பதை கருத்தியலாக முன்மொழிந்தார்.
2.
புரோட்டான்கள் மற்றும் நியூட்ரான்கள் குவார்க்குகளால் உருவாக்கப்பட்டவை. புரோட்டான், நியூட்ரான் போன்ற துகள்களுக்கு 'ஹிக்ஸ் துகள்கள்' அல்லது 'கடவுள் துகள்கள்' நிறையைக் கொடுக்கின்றன.
3.
மருத்துவ மெய்நிகர் உண்மையானது மூளைவலியை செயலாக்குவதை நிறுத்தவும் நோயாளிகளின் வேதனையைக் குறைக்கவும் திறம்பட பயன்படுத்தப்படுகிறது.
4.
ரோபோக்களில் தசைக் கம்பிகள் வடிவ நினைவு உலோகக் கலவையால் உருவாக்கப்படுகிறது. அவற்றின் வழியே மின்னோட்டம் செலுத்தப்பட்டால் 5% அளவுக்கு சுருங்கும்.
5.
நானோ துகள்கள் இருவழிகளில் உருவாக்கப்படுகின்றன.
1.கீழிருந்து மேல் - அணுக்களை சேகரித்தல்.
2. மேலிருந்து கீழ் பேரளவு திண்மங்களை உடைத்தல்.
6.
கிளிமீனின் சக்திவாய்ந்த கடி \(\rightarrow\) இயந்திர பாகங்களின் தேய்மானத்தை குறைக்கும் பொருள்.
ஓரிழை DNA \(\rightarrow\) துகள்களின் அளவை மாற்றி பல நிறங்களை தோற்றுவித்தல்
மார்ஃபோ பட்டாம்பூச்சியின் இறக்கையில் உள்ள செதில் \(\rightarrow\) ஒளி அலைகள் ஒன்றுடன் ஒன்று இடைவினை புரிந்து பல வண்ணங்களை ஏற்படுத்துதல்.
மயில் இறகுகள் \(\rightarrow\) பல்வேறு நிறங்களில் ஓரின நானோ கட்டமைப்புகளை உருவாக்குதல்.
7.
1-100 nm அளவுள்ள துகள்கள் நானோ துகள்கள்.
100 nm அளவிற்கு அதிகமான துகள்கள் பேரளவு திண்மம்.
8.
பருப்பொருளின் அடிப்படை ஆதாரம் எனக்கருதப்பட்ட அணு உருவாவதற்கு காரணமான எலக்ட்ரான், புரோட்டான் மற்றும் நியூட்ரான் ஆகியவை துணை அணுத்துகள்கள் எனப்படும். மேலும் புரோட்டான் மற்றும் நியூட்ரான்கள் குவார்க்குகளால் ஆனது. சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட ஹிக்ஸ் துகள்கள் அல்லது கடவுள் துகள்கள் புரோட்டான், நியூட்ரான் போன்ற துகள்களுக்கு நிறையைத் தருகின்றன.
9.
சூரியனைப்போல் 20 மடங்கிலிருந்து 1 மில்லியன் மடங்கு வரை நிறை கொண்ட விண்மீன்களின் இறுதி நிலை கருந்துளையாகும். இது பெருத்த அடர்த்தியும் எந்த ஒரு துகளும் அல்லது ஒளியும் கூட அதிலிருந்து தப்பிச் செல்லாதவாறு மிக வலிமையான ஈர்ப்பு விசையை கொண்டுள்ளது. இதனால் அவை மனித கண்களுக்கு புலப்படாது. ஒவ்வொரு விண்மீன் திரளும் அதன் மையத்தில் கருந்துளையைக் கொண்டுள்ளது.
10.
ரோபோக்கள் சக்கரம், புயங்கள், விரல்கள் போன்ற கடினமான பாகங்கள் கொண்ட ஒரு தானியங்கு இயந்திரம் ஆகும். எனவே வலிமையான எஃகு பயன்படுத்தப்படுகிறது.
11.
நன்மைகள்:
i) ரோபோக்கள் மிகவும் துல்லியமானவை மற்றும் பணியை மேற்கொள்வதில் குறைபாடு அற்றவை.
ii) ரோபோக்கள் மனிதர்களைப் போல எப்போதும் சோர்வடையாது. அவை 24 x 7 மணி நேரமும் வேலைசெய்யும். எனவே பணி இடத்தில் வருகை தராமை குறைக்கப்படுகிறது.
தீமைகள் :
i) வேலை வாய்ப்பின்மை பிரச்சனை அதிகரிக்கும்.
ii) ரோபோக்கள் வரையறுக்கப்பட்ட வேலையை மட்டுமே செய்ய இயலும் மற்றும் எதிர்பாரா சூழல்களை கையாள இயலாது.
12.
i) மார்ஃபோ பட்டாம் பூச்சியின் இறக்கையில் உள்ள செதில்கள்.
ii) மயில் இறகுகள் சில பத்து நானோமீட்டர் தடிமன் கொண்டவை.
13.
i) 1 - 100nm அளவுகள் வரை கொண்ட பொருட்கள் நானோ பொருட்கள் எனப்படும். 100nm அளவிற்கு மேல் உள்ள பொருட்கள் பேரளவு பொருட்கள் எனப்படும்.
ii) இரு பொருட்களின் வேதிப் பண்புகள் ஒன்று போல் உள்ளது. ஆனால் பருப்பொருளானது நானோ பொருட்களாக பிரிக்கப்பட்டால் இயந்திரவியல், மின்னியல், ஒளியியல், காந்தவியல் மற்றும் பிற பண்புகள் மாறுபடுகிறது.
14.
நானோ அறிவியல் என்பது 1- 100 nm (1nm = 10-9 m) அளவுகள், வரை கொண்ட பொருள்களின் அறிவியல் ஆகும். பருப்பொருளானது நானோ பொருள்களாக பிரிக்கப்பட்டால் அவற்றின் இயற்பியல் பண்புகளில் மாற்றம் ஏற்படுகிறதா என்பதை அறிவது ஆகும்.
நானோ தொழில்நுட்பம் என்பது நானோ அளவில் கட்டமைக்கப்பட்ட பொருள்களின் வடிவமைப்பு, உற்பத்தி, பண்புக்கூறுகள் மற்றும் பயன்பாடுகள் உள்ளடக்கியது ஆகும்.
15.
தொழில்நுட்பத்தையும் அடிப்படை இயற்பியலையும் ஒருங்கிணைத்ததால் மருத்துவ நோயறிதலில் புதுமையும் சிகிச்சையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அவற்றுள் சில:
மெய்நிகர் உண்மை:
மருத்துவ மெய்நிகர் உண்மை மூலம் மூளை, வலியை செயலாக்குவதை நிறுத்த முடியும். நோயாளிகளின் 3D மாதிரி படங்களை பயன்படுத்தி அறுவை சிகிச்சையை திட்டமிடவும், அறுவை சிகிச்சைகளை மேம்படுத்தவும் முடியும். மன இறுக்கம், நினைவு இழப்பு மற்றும் மன நோயை குணப்படுத்த உதவுகிறது.
துல்லிய மருத்துவம் அல்லது தனிப்பயன் மருத்துவம்
மரபணு மாறுபாடுகள், சுற்றுச்சூழல் மற்றும் ஒவ்வொரு நபரின் வாழ்க்கை முறை ஆகியவற்றை கணக்கில் கொண்டு ஒவ்வொருவருக்குமான மருத்துவம் என்பதே துல்லிய மருத்துவம் ஆகும். இதன்மூலம் ஒரே நோய்க்கு தனிநபர் சார்ந்து வெவ்வேறு மருத்துவ முடிவுகள், சிகிச்சைகள், ஏற்றகருவிகள் ஆகியவற்றை பயன்படுத்தி மருத்துவ சேவையை தனிப்பயன் ஆக்க இயலும்.
சுகாதார அணிகலன்கள்:
இது ஒரு கருவி. இதனை பொருத்தியிருப்பவரின் அல்லது அணிந்திருப்பவரின் நோய் அறிகுறிகள் அல்லது சுகாதாரம் மற்றும் உடல்தகுதி தொடர்பான தரவு ஆகியவற்றை கண்காணிக்க இயலும். செயற்கை நுண்ணறிவு மற்றும் பெரும் தரவுடன் கூடிய அணிகலன்கள் நோயறிதல், சிகிச்சை, நோயாளி கண்காணிப்பு மற்றும் நோய்த்தடுப்பு ஆகியவற்றில் ஒரு கூட்டப்பட்ட மதிப்பை அளிக்கும்.
செயற்கை உறுப்புகள்:
மனிதனுக்குள் பொருத்தப்பட்ட அல்லது ஒருங்கிணைக்கப்பட்ட ஒரு வடிவமைக்கப்பட்ட கருவி அல்லது திசு செயற்கை உறுப்பு ஆகும். இது மனித உறுப்புகளின் செயல்பாட்டை அதிகப்படுத்தி நோயாளியை இயல்பு வாழ்க்கைக்கு திரும்பும் வகையில் செயல்படுகிறது.
முப்பரிமாண 3D அச்சு
காது மருத்துவம், பல் மருத்துவம், எலும்பு மருத்துவம் போன்ற மருத்துவ துறைகளில் மருத்துவர்களின் பல்வேறு செயல்பாடுகளுக்கு நவீன 3D அச்சு அமைப்புகள் உதவுகின்றன.
கம்பியில்லா மூளை உணர்விகள்
இவை மண்டை ஓட்டினுள் உள்ள அழுத்தம் மற்றும் வெப்பநிலையை கண்காணிக்கின்றன. இவற்றின் பணி முடிந்ததும் இவை உடலினால் உறிஞ்சிக் கொள்ளப்படுகின்றன. எனவே இவற்றை நீக்க அறுவை சிகிச்சை தேவையில்லை.
ரோபோட்டிக் அறுவை சிகிச்சை:
இது ரோபோட்களால் செய்யப்படும் ஒருவகை அறுவை சிகிச்சை செயல்முறையாகும். இது குறைந்த அளவு துளையிட்டு செய்யப்படும் அறுவை சிகிச்சையின் வரம்புகளை கடக்கவும், திறந்த நிலை அறுவை சிகிச்சை செய்யும் நிபுணர்களின் திறன்களை மேம்படுத்தவும் உதவுகின்றன.
மீத்திறன் உள் இழுப்பான்கள்:
ஆஸ்துமாவிற்கு முக்கிய சிகிச்சை 'வாய் உள் இழுப்பான்கள்' ஆகும். நோயாளிகளை மனதில் கொண்டு நோயாளிகளுக்குத் தக்கதாக மீத்திறன் இழுப்பான்கள் வடிவமைக்கப்படுகின்றன. புளூடூத் தொழில்நுட்பம் இதில் பயன்படுத்தப்படுவதால் நோயாளிகள் மருந்து எடுத்துக்கொள்ளும் நேரத்தை நினைவூட்டுகிறது. மேலும் தொடர் கவனிப்புகளுக்கு உதவ தரவுகளை சேகரிக்கிறது.
16.
1. மனித ரோபோ
2. தொழிற்சாலை ரோபோ
1. மனித ரோபோ
தோற்றத்தில் மனிதர்களைப் போலவும் நடத்தல், தூக்குதல் உணர்தல் போன்ற மனித செயல்பாடுகளை அவ்வாறே செய்கின்ற ரோபோ மனித ரோபோ எனப்படும்.
மனித ரோபோவின் முக்கிய பாகங்கள்:
திறன் மாற்றும் அலகு:
மின்கலன்கள், சூரிய ஒளி மின்திறன் மற்றும் நீர்மவியல் அமைப்புகளிலிருந்து மின்திறனைப் பெறுகின்றன.
இயக்கிகள் :
ஆற்றலை இயக்கமாக மாற்றுகின்றன. இயக்கிகள் சுழல் இயக்கம் அல்லது நேர்கோட்டு இயக்கத்தை உருவாக்குகின்றன.
மின் மோட்டார்கள்:
பல்வேறு வகையான மோட்டார்கள் பயன்படுத்தப்படுகின்றன. அவற்றில் அதிகமாக பயன்படுத்தப்படுபவை AC மோட்டார், புருசு உள்ள மோட்டார்கள், புருசுகளற்ற DC மோட்டார், கியர் மோட்டார் என்பன. இவை சக்கரங்கள், புயங்கள், விரல்கள், கால்கள், காமிரா முதலியவற்றை இயக்குகின்றன.
காற்றழுத்த தசைகள்:
காற்று உள்ளே செலுத்தப்பட்டால் சுருங்கவும், விரிவடையவும் கூடிய கருவிகள் ஆகும். அவற்றின் உள்ளே காற்று உறிஞ்சப்பட்டால் ஏறத்தாழ 40% அளவுக்கு சுருங்கும்.
தசைக்கம்பிகள்:
இவை வடிவ நினைவு உலோகக் கலவைகளால் உருவாக்கப்பட்டவை. இவற்றின் வழியே மின்னோட்டம் செலுத்தப்பட்டால் இவை 5% அளவுக்கு சுருங்கும்.
பீசோ மோட்டார்கள் மற்றும் மீயொலி மோட்டார்கள் :
தொழிற்சாலை ரோபோக்களில் இவை பயன்படுத்தப்படுகின்றன.
உணர்விகள்:
அறிவுசார் தகவல்களை அளிக்கின்றன.
ரோபோ இடம் பெயரும் அமைப்பு:
ரோபோக்களுக்கு இயக்கத்தை இவை அளிக்கும். இதில் பலவகை உள்ளது. (அ) கார் உள்ளது (ஆ) சக்கரம் உள்ளது .(இ) கார் மற்றும் சக்கரம் சேர்ந்து உள்ள அமைப்பு (ஈ) கட்டுப்படுத்தப்பட்ட நழுவுதல்/சறுக்குதல்.
செயற்கை நுண்ணறிவு புகுத்தப்பட்ட மனித ரோபோக்களின் பணிகள்:
i) முகம் அடையாளம் காணல்
ii) கணினி விளையாட்டுகளில் விளையாடுபவரின் செயல்பாடுகளுக்கு பதில் அளித்தல்
iii) முடிவுகளை எடுத்தல்
iv) போக்குவரத்தை ஒழுங்குப்படுத்துதல்
v) மொழிப் பெயர்ப்பு செய்தல்
2. தொழிற்சாலை ரோபோக்கள் :
இதில் ஆறு வகைகள் உள்ளன. அவை
i) கார்ட்டீஷியன்
ii) Selective Compliance Assembly Robot Arm (SCARA)
iii) டெல்டா
iv) உருளைவடிவம்
v) துருவவகை
vi) செங்குத்தாக கருதப்படுபவை
ஆறு-அச்சு ரோபோக்களின் பணி:
i) மின்வில் பற்றவைப்பு
ii) குறிப்பிட்ட இட பற்றவைப்பு
iii) பொருள்களை கையாளுதல்
vi) இயந்திர பராமரிப்பு
v) பிற பயன்பாடுகள்
இவை, சோர்வடையாமல் 24 x 7 மணிநேரமும் வேலை செய்யக்கூடியவை மற்றும் மனிதர்களை விட வேகமானவை இருப்பினும் இவை மனிதர்களுக்கு மாற்றாக இருக்க முடியாது.
17.
பெரும்பாலான ரோபோக்கள் மூன்று முக்கிய பாகங்களால் ஆனது :
கட்டுப்பாட்டாளர்:
இது மூளை என்றும் அழைக்கப்படுகிறது. இது கணினி நிரலினால் இயங்குகிறது. இது இயங்கும் பாகங்களுக்கு கட்டளைகளை வழங்குகிறது.
இயந்திரவியல் பாகங்கள்:
மோட்டார்கள், பிஸ்டன்கள், பிடிப்பான்கள், சக்கரங்கள் மற்றும் கியர்கள் ஆகியவை ரோபோவை இயங்க, படிக்க, திரும்ப மற்றும் தூக்கச் செய்கின்றன.
உணர்விகள்:
ரோபோட்டின் சுற்றுப்புறத்தைப் பற்றி, சுற்றுப்புறத்திலுள்ள பொருள்களின் அளவுகள் மற்றும் வடிவங்களையும், பொருள்களிடையே உள்ள தொலைவு மற்றும் திசைகளையும் ரோபோட்டிடம் கூற இது உதவுகிறது.
முக்கியக் கூறுகள் செயல்படும் விதம்:

18.
i) நானோ துகள்கள் புரோட்டீன் போன்ற உயிரிமூலக்கூறுகளுக்கு சமமான பரிமாணங்களைக் கொண்டுள்ளதால் உயிரினங்களின் மேற்பரப்பினுள் உறிஞ்சப்படலாம்.
ii) உடலின் திசுக்கள் மற்றும் நீர்மங்களில் நுழையக் கூடும்.
iii) நானோ துகள்கள் செல் சவ்வுகளையும் கடக்கும்.
iv) உள்ளிழுக்கப்பட்ட நானோ துகள்கள் இரத்தம், ஈரல், இதயம் அல்லது இரத்த செல்கள் ஆகிய உறுப்புகளை சென்றடைந்து அவற்றின் செயல்களைக் குலைக்கும்.
v) உயிரினங்களின் மேற்பரப்பினுள் எளிதாக உறிஞ்சப்படலாம். ஏனெனில் அவை புரோட்டீன் போன்ற உயிரி மூலக்கூறுகளுக்கு சமமான பரிமாணங்களைக் கொண்டுள்ளன.
vi) உயிர்வாழ் அமைப்புகளுடன் ஏற்படும் இடைவினையையும் நானோ துகளின் பரிமாணங்கள் பாதிக்கின்றன.
vii) செல் சவ்வுகளையும் கடந்து இரத்தத்தை சென்றடையும்.
viii) ஈரல் இதயம் அல்லது இரத்த செல்கள் ஆகிய உறுப்புகளையும் அடையும் வாய்ப்பு உள்ளது.
19.
1-100 nm அளவுள்ள நானோ துகள்கள் பேரளவு திண்மத்திலிருந்து பல பண்புகளில் மாறுபடுவதால் அதன் பயன்பாடு பல்வேறு துறைகளில் உள்ளன.
வாகன தொழிற்சாலை
i) எடை குறைந்த தகடுகளை பயன்படுத்தி வாகனங்கள் தயாரிக்கப்படுவதால் எரிபொருள் சிக்கனம் உண்டாகும்.
ii) செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி வாகனத்தின் திறனை அதிகரிக்க முடியும்.
iii) இயந்திரங்களின் பாகங்களை கடினத்தன்மையுடையதாய் மாற்றமுடியும்.
வேதித் தொழிற்சாலை
i) வர்ணத்தொழிற் சாலைகளில் புதுமை புகுத்த முடியும்.
ii) நீரை எதிர்க்கும் நானோ வண்ணங்கள் தயாரிக்க முடியும்.
iii) வண்ணங்கள் பயன்படும் காலத்தை கூட்ட முடியும்.
பொறியியல்
i) கருவிகள் மற்றும் இயந்திரங்களுக்கு தேய்மான பாதுகாப்பு அளிக்க முடியும்.
ii) உயவு எண்ணெய் இல்லா பேரிங்குகள் உருவாக்க முடியும்.
iii) நெகிழிப் பாகங்களில் தடுப்பு எதிர்ப்புப் பூச்சுகள் பூசப்பட்டு நெகிழியை பளபளப்பாக வைத்திருக்க முடியும்.
மின்னணுவியல் தொழிற்சாலை
i) தரவு நினைவகத்தை அதிகரித்து, காட்சிப்படுத்திகளின் தூரத்தை உயர்த்த முடியும்.
ii) கண்ணாடி இழைகள், ஒளியியல் சுவிட்சுகள், வடிப்பான்கள் ஆகியவற்றை உருவாக்க முடியும்.
கட்டுமானம்:
i) வெப்பக்காப்பு, தீத்தடுப்பான் ஆகியனவற்றை கட்டடங்களில் பயன்படுத்த முடியும்.
ii) கட்டிட முகப்புகள், கூரைகள், கூரை ஓடுகள் ஆகியவற்றின் மேற்பரப்பு சார்ந்த கட்டுமானப் பொருள்கள் தயாரிக்க முடியும்.
மருத்துவம்:
i) மருந்து விநியோக அமைப்புகளை மாற்றி அமைக்க முடியும்.
ii) செயற்கை உறுப்புகள் பொருத்துதல் எளிமையாக்கப்படும்.
iii) மருத்துவ சோதனைகள் விரைந்து செய்யப்பட முடியும்.
ஜவுளி:
i) ஸ்மார்ட் ஆடைகள் தயாரிக்க உதவுகின்றன.
ii) மேற்பரப்பு பதப்படுத்தப்பட்ட ஜவுளிகள் தயாரிக்கப்படுகின்றன.
ஆற்றல்:
i) சூரிய மின்கலன்களின் பரிமாணங்கள் குறைக்கப்பட்டுள்ளன.
ii) வலிமையான எரிபொருள் கலன்கள் உருவாக்கப்படுகின்றன.
அழகு சாதனப் பொருட்கள்:
i) நவீன உதட்டுச்சாயங்கள், மென்மையான உடற்பூச்சுகள் மற்றும் பற்பசை தயாரிப்பில் உதவுகின்றன.
உணவு மற்றும் பானங்கள்:
i) சேமிப்பு வாழ் உணர்விகளாக பயன்படுகிறது.
ii) பழ ரசங்களை தெளிவுப்படுத்தலில் பயன்படுகிறது.
வீட்டு உபயோகம்:
i) இரும்பின் மீதான பீங்கான் பூச்சுகள்
ii) தரை, சன்னல்கள் ஆகியவற்றின் சுத்தப்படுத்தியாக பயன்படுகிறது.
விளையாட்டு/வெளிப்புறம்
i) ஸ்கி மெழுகு
ii) வலுப்படுத்தப்பட்ட டென்னிஸ் மட்டைகள் மற்றும் பந்துகள் தயாரிப்பில் பயன்படுகின்றன.
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards