12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th English Poem - 6 - Incident of the French Camp Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Prose - 6 - On the Rule of the Road Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Prose - 5 - The Chair Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Supplementary - 4 - The Midnight Visitor Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Poem - 4 - Ulysses Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Prose - 4 - The Summit Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 17/01/2020
12ஆம் வகுப்பு Physics / இயற்பியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Physics / இயற்பியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Physics Test1.
போர் அணு மாதிரியில், நிலை மாற்றங்களின் அதிர்வெண் பின்வரும் சமன்பாட்டினால் அறியப்படுகிறது. \(v=Rc\left( \frac { 1 }{ { n }^{ 2 } } -\frac { 1 }{ { m }^{ 2 } } \right) \), இங்கு n < m பின்வரும் நிலைமாற்றங்களைக் கருதுக.
| நிலை மாற்றங்கள் | m⟶n |
| 1 | 3⟶2 |
| 2 | 2⟶1 |
| 3 | 3⟶1 |
இந்நிலை மாற்றங்களின் அதிர்வெண் கூட்டல் விதிக்கு (ரிட்ஸ் சேர்க்கை தத்துவம்) உட்படும் என்பதை நிறுவுக.
2.
சோடிய ஆவி விளக்கிலிருந்து வெளிவரும் ஒளியின் அலைநீளம் வெற்றிடத்தில் 5893Å. இந்த ஒளி 1.33 ஒளிவிலகல் எண் கொண்ட நீரின் வழியே செல்லும்போது பின்வருவனவற்றைக் காண்க.
(அ) அலைநீளம்,
(ஆ) திசைவேகம் மற்றும்
(இ) அதிர்வெண்
3.
படத்தில் காட்டப்பட்டுள்ள பொது உமிழ்ப்பான் டிரான்சிஸ்டர் மின்சுற்றில் மின்னோட்டம் பெருக்கம் 120 எனில் DC பளுகோட்டை வரைந்து அதில் Q புள்ளியைக் குறிக்க (VBE யின் மதிப்பு புறக்கணிக்கப்படுகிறது)

4.
சமஅளவு மற்றும் நிறை கொண்ட கோள வடிவ கல் மற்றும் இரும்பு குண்டை ஒரே நேரத்தில் விழச் செய்தால் எது முதலில் புவியை வந்தடையும்? காரணம் கூறு.
5.
மீட்டர் சமனச்சுற்றில் இடது பக்க இடைவெளியில் 10ᘯ மின்தடை உள்ள போது சமன்செய் நீளம் 51.8 cm. ஆக உள்ளது 108 cm நீளமும் 0.2 mm ஆரமும் உடைய கம்பியின் மின்தடையையும் தன்மின் தடை எண்ணையும் கணக்கிடுக.
6.
ஏன் கடத்திகளுக்கான மின்தடை வெப்பநிலை எண் ∝ நேர்க்குறியுடையது?
7.
மின்காந்த அலையின் செறிவு என்ற கருத்தை விவரி.
8.
ஊடகம் ஒன்றின் ஒப்புமை காந்த உட்புகுதிறன் 2.5 மற்றும் ஒப்புமை மின் விடுதிறன் 2.25 எனில் அவ்ஊடகத்தின் ஒளிவிலகல் எண்ணைக் காண்க.
9.
20 W – 220V மற்றும் 100W – 220V என குறிப்பிடப்பட்டுள்ள இரு மின்பல்புகள் தொடரிணைப்பில் 440 V மின்னழுத்த வேறுபாட்டு (Power supply) மூலத்துடன் இணைக்கப்பட்டுள்ளன. எந்த மின்பல்பின் மின் இழை துண்டிக்கப்படும் (Fused)?
10.
உராய்வற்ற, மின்காப்பிடப்பட்ட சாய்தளம் ஒன்றின் மீது m நிறையும் q நேர் மின்னூட்ட மதிப்பும் கொண்ட பொருள் ஒன்று வைக்கப்பட்டுள்ளது. அதை நிலையாக வைப்பதற்கு, சாய்தளத்திற்கு இணையான திசையில் மின்புலம் E அளிக்கப்படுகிறது. மின்புலத்தின் (E) எண்மதிப்பைக் காண்க

11.
ஒரு குறிப்பிட்ட இடத்தில் புவிகாந்தப்புலத்தின் கிடைத்தளக்கூறு மற்றும் செங்குத்துக் கூறுகள் முறையே 0.15 G மற்றும் 0.26 G எனில், அந்த இடத்தின் காந்த சரிவுக் கோணம் மற்றும் தொகுபயன் காந்தப்புலம் ஆகியவற்றைக் கணக்கிடுக
(இங்கு G-gauss. CGS முறையில் காந்தபுலத்தின் அலகு காஸ் ஆகும். 1G = 104 T)
12.
பின்வருவனவற்றுள் விண்மீன்கள் மின்னுவதற்கான சரியான காரணம் எது?
ஒளி எதிரொளிப்பு
முழு அக எதிரொளிப்பு
ஒளி விலகல்
தளவிளைவு
13.
சூரிய ஒளியின் சராசரி அலைநீளம் 550 nm மற்றும் அதன் சராசரி திறன் 3.8 × 1026 W எனில், சூரியனில் இருந்து ஒரு வினாடி நேரத்தில் உமிழப்படும் ஃபோட்டான்களின் தோராயமான எண்ணிக்கையானது ____.
1045
1042
1054
1051
14.
ரோபோக்களில் தசைக்கம்பிகள் உருவாக்க பயன்படும் உலோகக்கலவைகள் _______.
வடிவ நினைவு உலோகக்கலவைகள்
தங்கம் தாமிர உலோகக்கலவைகள்
தங்கம் வெள்ளி உலோகக்கலவைகள்
இரு பரிமாண உலோகக்கலவைகள்
15.
அணுக்கரு கிட்டத்தட்ட கோள வடிவம் கொண்டது எனில் நிறை எண் A கொண்ட அணுக்கரு ஒன்றின் பரப்பு ஆற்றல் எவ்வாறு மாறுபடும்?
\(\mathrm{A}^{\frac{2}{3}}\)
\(\mathrm{A}^{\frac{4}{3}}\)
\(\mathrm{A}^{\frac{1}{3}}\)
\(\mathrm{A}^{\frac{5}{3}}\)
16.
ஒளி உமிழ்வு டையோடில் ஒளி உமிழப்படக் காரணம் _______.
மின்னூட்ட ஊர்திகளின் மறுஇணைப்பு
லென்சுகளின் செயல்பாட்டால் ஏற்படும் ஒளி எதிரொளிப்பு
சந்தியின்மீது படும் ஒளியின் பெருக்கம்
மிகப்பெரிய மின்னோட்ட கடத்தும் திறன்.
17.
மாறா வீச்சு கொண்ட ரேடியோ அலைகளை உருவாக்குவது____
திருத்தி
வடிகட்டி
F.E.T
அலையியற்றி
18.
மின்மாற்றியில் மாறாதது எது?
மின்னழுத்தம்
அதிர்வெண்
மின்னோட்டம்
ஏதுமில்லை
19.
மாறாத மின்னழுத்தம் உள்ள பகுதி_______
சீரான மின்புலப்பகுதி
மின்புலம் சுழியாகும் பகுதி
மின்னூட்டம் வெளியில் அமைந்து மின்புலம் மாறும் பகுதி
ஏதுமில்லை
20.
மின்தடையானது பொருள்களின் _______ எதிர்ப்பை அளவிடும்.
மின்னழுத்த வேறுபாடு
மின்னோட்டம்
மின் விசை
இயக்கத்தில் உள்ள புரோட்டான்கள்
21.
4 cm2 குறுக்குவெட்டுப் பரப்பு கொண்ட ஒரு வட்ட கம்பிச்சுருள் 10 சுற்றுகளைக் கொண்டுள்ளது. அது சென்டிமீட்டருக்கு 15 சுற்றுகள் மற்றும் 10 cm2 குறுக்கு–வெட்டுப்பரப்பு கொண்ட ஒரு 1 m நீண்ட வரிச்சுருளின் மையத்தில் வைக்கப்பட்டுள்ளது. கம்பிச்சுருளின் அச்சானது வரிச்சுருளின் அச்சுடன் பொருந்துகிறது. அவற்றின் பரிமாற்று மின்தூண்டல் எண் யாது?
7.54 μH
8.54 μH
9.54 μH
10.54 μH
22.
மின்புலம் மற்றும் காந்தப்புலத்தோடு இணைந்த மின்காந்த அலையொன்று எதிர்க்குறி x அச்சுத்திசையில் பரவுகிறது. பின்வருவனவற்றுள் எச்சமன்பாட்டைப் பயன்படுத்தி அந்த மின்காந்த அலையினை குறிப்பிடலாம்
\(\vec { E } ={ E }_{ 0 }\hat { j } \) மற்றும் \(\vec { B } ={ B }_{ 0 }\hat { k } \)
\(\vec { E } ={ E }_{ 0 }\hat { k } \) மற்றும் \(\vec { B } ={ B }_{ 0 }\hat { j } \)
\(\vec { E } ={ E }_{ 0 }\hat { j } \) மற்றும் \(\vec { B } ={ B }_{ 0 }\hat { j } \)
\(\vec { E } ={ E }_{ 0 }\hat { j } \) மற்றும் \(\vec { B } ={ B }_{ 0 }\hat { i } \)
23.
பின்வரும் மின்துகள் நிலையமைப்புகளில் எது சீரான மின்புலத்தை உருவாக்கும்?
புள்ளி மின்துகள்
சீரான மின்னூட்டம் பெற்ற முடிவிலாக் கம்பி
சீரான மின்னூட்டம் பெற்ற முடிவிலா சமதளம்
சீரான மின்னூட்டம் பெற்ற கோளகக் கூடு
24.
சீரான மின்னூட்ட அடர்த்தி σ கொண்ட மின்னூட்டப்பட்ட இணைத்தட்டு மின்தேக்கியின் இரண்டு தட்டுகளுக்கு நடுவே எலக்ட்ரான் ஒன்று நேர்கோட்டுப் பாதையில் செல்கிறது. சீரான காந்தப்புலத்திற்கு (\(\vec { B } \)) நடுவே இந்த அமைப்பு உள்ளபோது, எலக்ட்ரான் தகடுகளைக் கடக்க எடுத்துக்கொள்ளும் நேரம்_____.
ε\(_{ \circ }\frac { elB }{ \sigma } \)
ε\(_{ \circ }\frac { lB }{ \sigma l } \)
ε\(_{ \circ }\frac { lB }{ e\sigma } \)
ε\(_{ \circ }\frac { lB }{ \sigma } \)
25.
ஒரு மீட்டர் நீளத்திற்கு 2Ω மின்தடை கொண்ட கம்பியானது 1m ஆரமுள்ள வட்ட வடிவமாக மாற்றப்படுகிறது. வட்டத்தின் வழியே எதிரெதிராக படத்தில் உள்ள A மற்றும் B புள்ளிகளுக்கிடையே தொகுபயன் மின்தடையின் மதிப்பு காண்க.

π Ω
\(\frac{\pi}{2} \Omega\)
2πΩ
\(\frac { \pi }{ 4 } \)Ω
26.
ரோபோக்கள் உருவாக்க ஏன் எஃகு தேர்வு செய்யப்படுகிறது?
27.
நானோ பொருட்கள் மற்றும் பேரளவு பொருட்கள் இடையே உள்ள வேறுபாடு யாது?
28.
கதிரியக்கச் செயல்பாடு (அல்லது) சிதைவு வீதம் என்றால் என்ன? அதன் அலகு என்ன?
29.
இணையத்தின் வழியே பொருட்களைப் பயன்படுத்துதல் (Internet of Things, IoT) என்றால் என்ன?
30.
ஒரு குறைக்கடத்தி பொருளில் எலக்ட்ரான் துளை இணை எவ்வாறு உருவாக்கப்படுகிறது?
31.
ஒரு மின்மாற்றியில் முதன்மை மற்றும் துணைச் சுருளில் சுற்றுகளின் எண்ணிக்கை முறையே 500 மற்றும் 5000, உள்ளீடு மின்னழுத்தம் 220 V எனில் வெளியீடு மின்னழுத்தம் என்ன?
32.
நிலை மின்னியல் என்றால் என்ன?
33.
காரில் முகப்பு விளக்கு எரியும் நிலையில் என்ஜினை இயக்கும்போது, முகப்பு விளக்கின் பொலிவு சிறிது குறையும் ஏன்?
34.
நிறை நிறமாலைமானியின் பயன்களை தருக.
35.
ஊடகம் ஒன்றின் ஒப்புமை உட்புகுதிறன் மற்றும் ஒப்புமை விடுதிறன்கள் முறையே 1.0 மற்றும் 2.25 எனில், அவ்ஊடகத்தின் வழியே பரவும் மின்காந்த அலையின் வேகத்தைக் காண்க.
36.
ஓம் விதிக்கு உட்படும் மற்றும் ஓம் விதிக்கு உட்படாத சாதனங்கள் யாவை?
37.
ஒளிமின்னோட்டத்தின் மீதான மின்னழுத்த வேறுபாட்டின் விளைவை விளக்குக.
38.
படத்தின் உதவியுடன் அணுக்கரு உலை வேலை செய்யும் விதத்தை விளக்கவும்.
39.
GPS பற்றி நீ அறிந்து கொண்டது யாது? GPS இன் சில பயன்பாடுகளை எழுதுக.
40.
ஒரு முழு அலைத் திருத்தியின் அமைப்பு மற்றும் செயல்படும் விதத்தினை விளக்குக.
41.
மின்னேற்றம் அடையும் இணைத்தட்டு மின்தேக்கியானது தட்டு ஒன்றின் மாறும் மின்னூட்டம் அவற்றின் மின்புலப்பாய மாற்றத்தின் ε0 மதிப்பிற்கு சமம் என்பதை நிரூபி. சமன்பாட்டில் \({ \varepsilon }_{ 0 }\frac { d{ \phi }_{ E } }{ dt } \) என்பதன் பெயர் யாது?
42.
நீள் அடர்த்தி 0.2 g m-1 கொண்ட கடத்தி ஒன்று படத்தில் காட்டியுள்ளவாறு இரண்டு நெகிழ்ச்சித்தன்மை கொண்ட கம்பிகளினால் தொங்கவிடப்பட்டுள்ளது. தாளுக்கு உள்ளே செல்லும் திசையில் 1 T வலிமை கொண்ட காந்தப்புலத்திற்குள் இவ்வமைப்பு வைக்கப்படும்போது, கடத்தி தொங்க விடப்பட்டுள்ள கம்பிகளின் இழுவிசை சுழியாகிறது எனில், கடத்தியின் வழியே பாயும் மின்னோட்டம் மற்றும் மின்னோட்டம் பாயும் திசை ஆகியவற்றைக் காண்க. g = 10 m s-2 எனக் கருதுக.
1.
\(v_{3 \rightarrow 2}=\operatorname{RC}\left(\frac{1}{4}-\frac{1}{9}\right)=\frac{5}{36} \mathrm{RC}\)
\(v_{2 \rightarrow 1}=\operatorname{RC}\left(\frac{1}{1}-\frac{1}{4}\right)=\frac{3}{4} \mathrm{RC}\)
\(\mathrm{v}_{3 \rightarrow 1}=\operatorname{RC}\left(\frac{1}{1}-\frac{1}{9}\right)=\frac{8}{9} \mathrm{RC}\)
\(v_{3 \rightarrow 2}+v_{2 \rightarrow 1}=\frac{5}{36} R C+\frac{3}{4} R C=\operatorname{RC}\left(\frac{5}{36}+\frac{3}{4}\right)=\operatorname{RC}\left(\frac{5+27}{36}\right)\)
\(=\begin{equation} \operatorname{RC}\left(\frac{32}{36}\right)=\frac{8}{9} \mathrm{RC}=\mathrm{v}_{3 \rightarrow 1} \end{equation}\)
\(\begin{equation} n_{3 \rightarrow 2}+n_{2 \rightarrow 1}=n_{3 \rightarrow 1} \end{equation}\)
2.
வெற்றிடத்தின் ஒளிவிலகல் எண், n1 = 1
வெற்றிடத்தில் சோடிய ஒளியின் அலை நீளம், λ1 = 5893 Å
வெற்றிடத்தில் ஒளியின் திசைவேகம், c = 3 × 108 m s–1
தண்ணீரின் ஒளிவிலகல் எண், n2 = 1.33
தண்ணீரில் சோடிய ஒளியின் அலைநீளம், λ2 மற்றும்
தண்ணீரில் சோடிய ஒளியின் திசைவேகம், v2 என்க.
(அ) அலைநீளத்தையும் ஒளிவிலகல் எண்ணையும் தொடர்புபடுத்தும் சமன்பாடு,
\(\frac { { \lambda }_{ 1 } }{ { { \lambda } }_{ 2 } } =\frac { { n }_{ 2 } }{ { n }_{ 1 } } \)
எனவே, λ2 = \(\frac { { n }_{ 1 } }{ { n }_{ 2 } } \) x λ1
கொடுக்கப்பட்ட மதிப்புகளைப் பிரதியிடும்போது,
λ2 = \(\frac { 1 }{ 1.33 } \) x 5893 Å = 4431 Å
λ2 = 4431 Å
(ஆ) திசை வேகத்தையும், ஒளிவிலகல் எண்ணையும் தொடர்புபடுத்தும் சமன்பாடு,
\(\frac { { v }_{ 1 } }{ { v }_{ 2 } } =\frac { { n }_{ 2 } }{ { n }_{ 1 } } \)
எனவே, v2 = \(\frac { { n }_{ 1 } }{ { n }_{ 2 } } \) x v1
கொடுக்கப்பட்ட மதிப்புகளைப் பிரதியிடும்போது,
v2 = \(\frac { 1 }{ 1.33 } \) x 3 x 108 = 2.256 × 108
v2 = 2.256 x 108ms -1
(இ) வெற்றிடத்தில் சோடிய ஒளியின் அதிர்வெண் v1 = \(\frac { c }{ { \lambda }_{ 1 } } \)
மதிப்புகளைப் பிரதியிடும் போது,
v1 = \(\frac { 3\times { 10 }^{ 8 } }{ 5893\times { 10 }^{ -10 } } \) = 5.091 x 1014 Hz
தண்ணீரில் சோடிய ஒளியின் அதிர்வெண், v2 = \(\frac { v }{ { \lambda }_{ 2 } } \)
மதிப்புகளைப் பிரதியிடும்போது,
v2 = \(\frac { 2.256\times { 10 }^{ 8 } }{ 4431\times { 10 }^{ -10 } } \) = 5.091 x 1014 Hz
ஊடகத்தைப் பொறுத்து அதிர்வெண்மாறாது என்பதை மேற்கண்ட முடிவுகள் உணர்த்துகின்றன.
3.
β = 120
அடிவாய் மின்னோட்டம்
\({ I }_{ B }=\frac { 25V }{ 1M\Omega } =\frac { 25 }{ { 1\times 10 }^{ 6 } } =25\mu A\)
\(\beta =\frac { I_{ C } }{ I_{ B } } \) (அல்லது)
\({ I }_{ C }=\beta I_{ B }\)
\({ I }_{ C }=120\times 25\mu A\)
= 3000 μA = 3 mA
\({ V }_{ CE }={ V }_{ CC }-I_{ C }{ R }_{ C }\)
\({ V }_{ CE }=25-3mA\times 5k\) = 10V
\({ V }_{ CE }=10V\)
.png)
4.
(i) உலோக குண்டை விட கல் முன்னதாக புவிப்பரப்பை வந்தடையும்.
(ii) புவிகாந்தப் புலத்தின் வழியே உலோக குண்டு விழும் போது சுழல் மின்னோட்டம் உருவாகி அதன் இயக்கத்தை எதிர்க்கும்.
(iii) கல்லில் சுழல் மின்னோட்டம் உருவாகாது. எனவே கல் முதலில் புவிப்பரப்பை அடையும்.
5.
P = 10ᘯ, l1 = 51.8 cm, Q = ?
∴ l2 = (100 - l1) = (100 - 51.8)
l2 = 48.2 cm
r = 0.2mm = 0.2 x 10-3 m,
L = 108 cm =108 x 10-2 m = 1.08 m
ρ = ?
\(\frac { P }{ Q } =\frac { { l }_{ 1 } }{ { l }_{ 2 } } \)
\(\therefore \frac { 10 }{ Q } =\frac { 51.8 }{ 48.2 } \)
தெரியாத மின்தடை Q = 9.305 ᘯ
மின்தடை எண், \(\rho =\frac { \pi { r }^{ 2 }Q }{ L } \)
\(\rho =\frac { 3.14\times 0.2\times { 10 }^{ -3 }\times 0.2\times { 10 }^{ -3 }\times 9.035 }{ 1.08 } \)
\(\rho =1.082\times { 1.082\times 10 }^{ -6 }\Omega m\)
6.
1. கடத்திகளுக்கு ∝ நேர்க்குறியுடையது.
2. கடத்திகள் வெப்பநிலை அதிகரிக்கும்போது, கடத்தியில் உள்ள எலக்ட்ரான்களின் சராசரி இயக்க ஆற்றல் அதிகரிக்கும்.
3. இதன் விளைவாக மோதல்களின் எண்ணிக்கை அதிகரித்து மின்தடை எண்ணும் அதிகரிக்கும்.
7.
மின்காந்த அலை பரவும் திசைக்கு செங்குத்தாக ஓரலகு நேரத்தில் ஓரலகு பரப்பு வழியே கடந்து செல்லும் ஆற்றலே மின்காந்த அலையின் செறிவு எனப்படும்.
I = ( u ) c
8.
ஊடகத்தின் மின்காப்பு மாறிலி (ஒப்புமை விடுதிறன்) εr = 2.25
காந்த உட்புகுதிறன் μr = 2.5
ஊடகத்தின் ஒளிவிலகல் எண்,
n =\(\sqrt { { \varepsilon }_{ r }{ \mu }_{ r } } =\sqrt { 2.25\times 2.5 } \) = 2.37
9.
எந்த மின்பல்பின் மின் இழை துண்டிக்கப்படும் என்பதைக் கண்டறிய, இரு மின்பல்புகளின் குறுக்கே உள்ள மின்னழுத்த வேறுபாட்டை கணக்கிட வேண்டும்.
மின்பல்பின் மின்தடை, R = \(\frac { { V }^{ 2 } }{ P } \)

20W – 220 V மின்பல்பின் மின்தடை
R1 = \(\frac { (220)^{ 2 } }{ 20 } \)Ω = 2420Ω
100W – 220 V மின்பல்பின் மின்தடை,
R2 = \(\frac { (220)^{ 2 } }{ 20 } \)Ω = 484Ω
இரு மின்பல்புகளும் தொடரிணைப்பில் இணைக்கப்பட்டுள்ளன. எனவே இவற்றில் பாயும் மின்னோட்டம் சமமாக அமையும். இம்மின்சுற்றில் பாயும் மின்னோட்டம், I = \(\frac { V }{ { R }_{ tot } } \).
Rtot = (R1 + R2)
Rtot = (484 + 2420)Ω = 2904Ω
I = \(\frac { 440V }{ 2904Ω } \) ≈ 0.151 A
20W மின்பல்பின் குறுக்கே மின்னழுத்த வேறுபாடு
V1 = IR1 = \(\frac { 440 }{ 2904 } \) x 2420 ≈ 366.6V
100 W மின் பல்பின் குறுக்கே மின்னழுத்த வேறுபாடு
V2 = IR2 = \(\frac { 440 }{ 2904 } \) x 484 ≈ 73.3V
20 W மின்பல்பின் மின் இழை துண்டிக்கப்படும் (Fused). ஏனெனில் அதன் குறிப்பிடப்பட்ட மின்னழுத்த வேறுபாடு 220 V மட்டுமே. ஆனால் அதன் குறுக்கே 366.6 V மின்னழுத்த வேறுபாடு ஏற்பட்டுள்ளது.
10.
நிறை m ன் மீது செயல்படும் மூன்று விசைகள்:
(i) கீழ்நோக்கிய திசையில் புவியினால் செலுத்தப்படும் ஈர்ப்பு விசை (mg)
(ii) சாய்தளத்தின் பரப்பினால் அளிக்கப்படும் செங்குத்து விசை (N)
(iii) சீரான மின்புலத்தினால் அளிக்கப்படும் கூலூம் விசை (qE)
நிறை m ன் தனித்த பொருள் விசைப்படம் இங்கே தரப்பட்டுள்ளது.

இதற்கான தகுந்த நிலைம ஆய அமைப்பானது (inertial coordinate system) சாய்தளத்தில் இடம் பெற்றுள்ளதைப் படத்தில் காணலாம். x மற்றும் y – அச்சு ஆகிய இரண்டு திசைகளிலும் நிறை m ன் முடுக்கம் சுழி.
x – திசையில் நியூட்டனின் இரண்டாம் விதியைப் பயன்படுத்த
\(mg \sin\theta\hat { i } -qE\hat { i } \) =0
\(mg \sin\theta -qE=0\)
அல்லது \(E=\frac { mg \sin\theta }{ q } \)
மின்புலத்தின் எண்மதிப்பானது, நிறைக்கு (m) நேர்த்தகவிலும் மின்னூட்ட மதிப்பு q விற்கு எதிர்த்தகவிலும் உள்ளதைக் கவனிக்கவும். அதாவது, மின்னூட்டத்தை மாற்றாமல் நிறையை மட்டும் கூட்டினால் அப்பொருள் நகராமல் இருக்க மேலும் வலிமையான மின்புலம் தேவைப்படும். மாறாக, நிறையை மாற்றாமல் மின்னூட்டத்தை மட்டும் கூட்டினால், பொருள் நகர்வதைத் தடுக்க வலிமை குறைந்த மின்புலமே போதுமானது. சாய்தளத்தின் உயரம் (h), நீளம் (L) ஆகியவற்றின் அடிப்படையிலும் மின்புலத்தை எழுதலாம்.
\(E=\frac { mgh }{ qL } \)
11.
BH = 0.15 G மற்றும் BV = 0.26 G
\(\tan I=\frac { 0.26 }{ 0.15 } \) ⇒ tan-1(1.732) = 600
புவியின் தொகுபயன் காந்தப்புலம்
\(B = \sqrt { { { B }^{ 2 } }_{ H }+{ { B }^{ 2 } }_{ V } } =0.3G\)
12.
(c)
ஒளி விலகல்
13.
\(p = \frac{n}{t} = \frac{hc}{\lambda}\\ \frac{n}{t} = \frac{P\lambda}{hc} = \frac{3.8\times10^26\times 550\times10^{-9}}{6.6 \times 10{-34}\times 3 \times 10^{8}}\\ = 1 \times10^{45}\)
14.
ரோபோக்களில் தசைக் கம்பிகள் வடிவ நினைவு உலோகக் கலவையால் உருவாக்கப்படுகிறது. அவற்றின் வழியே மின்னோட்டம் செலுத்தப்பட்டால் 5% அளவுக்கு சுருங்கும்.
15.
\(r \propto A^{\frac{1}{3}}\)
புறப்பரப்பளவு = 4\(\pi\)r2
எனவே புறப்பரப்பளவு \(\propto A^{\frac{2}{3}}\)
16.
(a)
மின்னூட்ட ஊர்திகளின் மறுஇணைப்பு
17.
(d)
அலையியற்றி
18.
(b)
அதிர்வெண்
19.
(b)
மின்புலம் சுழியாகும் பகுதி
20.
(b)
மின்னோட்டம்
21.
\(A_1 =4 \times 10^{-4} \mathrm{~m}^2 \)
\(N_1 =10 \) சுற்றுகள்
\(A_2 =4 \times 10^{-4} \mathrm{~m}^2 \)
\(N_2 =15 \times 10^{-}=1500 \mathrm{turn} / \mathrm{m} \)
\(\phi =B_2 A_2=\left(\mu_0 \mathrm{n}_2 I_2\right) \mathrm{A}_1 \)
\( \mathrm{n}_2=\frac{\mathrm{N}_2}{l}=1500 \) சுற்று/m
பரிமாற்று மின்தூண்டல் எண்
\(M =\frac{N_1 \phi _{12}}{I_2}=\mu_0 n_2 N_1 A_1 \)
\(=4 x \times 10^{-7} \times 1500 \times 10 \times 4 \times 10^{-4} \)
\(=7.54 \times 10^{-6} \mathrm{H}=7.54 \mu \mathrm{H}\)
22.
\( { E } ={ E }_{ 0 }\hat { k } \) மற்றும் \({ B } ={ B }_{ 0 }\hat { j } \)
23.
சீரான மின்னூட்டம் பெற்ற முடிவிலா சமதளம்
24.
தகடுகளுக்கு இடையே மின்புலம் \(= \frac{σ}{ε_0}\)
எலக்ட்ரான் மீதான மின்விசை \(= e\frac{σ}{ε_0}\)
எலக்ட்ரான் மீதான காந்தவிசை , F = BIl
ஆனால் , \(I= \frac{e}{t}\)
∵எலக்ட்ரான் நேர்கோட்டுப் பாதையில் செல்வதால்
மின்விசை = காந்தவிசை
EF = MF
\(e\frac{σ}{ε_0}=B(\frac{e}{t})l\)
\(\therefore t = ε_0\frac{lB}{σ}\)
25.
வட்டத்தின் சுற்றளவு = 2πr = 2π x 1 = 2π
மின்தடை = 2 x 2π
மின்தடை = 4π/2 = π/2 Ω
∴ தொகுபயன் மின்தடை = \(\frac {2π \times 2π}{2π + 2π} = \frac {4π^2}{4π} \)= exe π Ω
26.
ரோபோக்கள் சக்கரம், புயங்கள், விரல்கள் போன்ற கடினமான பாகங்கள் கொண்ட ஒரு தானியங்கு இயந்திரம் ஆகும். எனவே வலிமையான எஃகு பயன்படுத்தப்படுகிறது.
27.
i) 1 - 100nm அளவுகள் வரை கொண்ட பொருட்கள் நானோ பொருட்கள் எனப்படும். 100nm அளவிற்கு மேல் உள்ள பொருட்கள் பேரளவு பொருட்கள் எனப்படும்.
ii) இரு பொருட்களின் வேதிப் பண்புகள் ஒன்று போல் உள்ளது. ஆனால் பருப்பொருளானது நானோ பொருட்களாக பிரிக்கப்பட்டால் இயந்திரவியல், மின்னியல், ஒளியியல், காந்தவியல் மற்றும் பிற பண்புகள் மாறுபடுகிறது.
28.
ஒரு வினாடியில் சிதைவடையும் அணுக்கருக்களின் எண்ணிக்கை கதிரியக்கச் செயல்பாடு (அ) சிதைவு வீதம் எனப்படும்.
\(R=\left| \cfrac { dN }{ dt } \right| \)
கதிரியக்க செயல்பாட்டின் அலகு பெக்கரல்
ஒரு பெக்கரல் - 1 சிதைவு / 1 விநாடி
29.
ஒரு சாதனத்தின் மூலம் பல்வேறு சாதனங்களை இணையத்தின் வழியே கட்டுப்படுத்துவது Internet of Things (IoT) எனப்படும். எ.கா, செல்பேசியைப் பயன்படுத்தி வீட்டு உபயோகப் பொருட்கள் மோட்டார், TV, குளிர்சாதனப் பெட்டி போன்ற அனைத்தையும் இயக்க முடியும்.
30.
டையோடு முன்னோக்கு சார்பில் அமையும் போது இயக்கமில்லா பகுதி குறைந்து டையோடு மின்னோட்டத்தைக் கடத்தும். டையோடு பின்னோக்கு சார்பில் அமையும் போது இயக்கமில்லா பகுதி அதிகரித்து டையோடு மின்னோட்டத்தைக் கடத்தாது. எனவே டையோடு 'ஒரு திசைக்கருவி" என்றழைக்கப்படுகிறது,
31.
NP = 500
NS = 5000
VP = 220V
VS = ?
\(\frac { { V }_{ S } }{ { N }_{ S } } =\frac { { V }_{ P } }{ { N }_{ P } } \)
\(\frac { { V }_{ S } }{ 5000 } =\frac { 220 }{ 50 } \)
\(\frac { { V }_{ S } }{ 5000 } =0.44\)
VS = 0.44 x 5000
Vs = 2200 Volt.
32.
நிலையாக உள்ள மின்துகளை பற்றி அறிய உதவும் பிரிவு
33.
காரில் முகப்பு விளக்கு எரியும் நிலையில் என்ஜினை இயக்கும்போது, முகப்பு விளக்கின் பொலிவு சிறிது குறையும். இதற்கு காரணம் காரில் உள்ள மின்கலத்தின் அகமின்தடை ஆகும்.
34.
1. நிறை நிறமாலைமானி பல்வேறு பகுதிகளில் பயன்படுகிறது. அவை.
2. அறிவியலில் குறிப்பாக மருத்துவம், விண்வெளி அறிவியல், மண்ணியல் போன்றவற்றில் பயன்படுகிறது.
3. மருத்துவத்தில் கழிவாயுக்களின் அளவை அளந்தறிய பயன்படுகிறது.
4. உயிரியலில் ஒளிச்சேர்க்கை நிகழ்ச்சியில் ஏற்படும் எதிர்வினை இயக்கத்தைக் கண்டறிய பயன்படுகிறது.
35.
ஒப்புமை விடுதிறன் εr = 2.25
ஒப்புமை உட்புகுதிறன் μr = 1.0
மின்காந்த அலையின் வேகம் C காற்று \(=\frac { 1 }{ \sqrt { { \varepsilon }_{ r }{ \mu }_{ r } } } \)
Cகாற்று \(=\frac { 1 }{ \sqrt { 1\times 2.25 } } =\frac {1}{ 1.5 } \)
ஊடகத்தின் மின்காந்த அலையின் வேகம்
\(V_{m}=\frac{c}{n}=\frac{3 \times 10^{8}}{1.5}\)
Vm = 2 x 108 m/s
36.
1. ஒரு பொருளின் மீது செல்லும் மின்னோட்டம் மற்றும் அப்பொருளின் குறுக்கே உள்ள மின்னழுத்த வேறுபாடு ஆகிய இரண்டிற்குமான வரைபடம் நேர்க்கோடாக அமைந்தால், அப்பொருட்கள் ஓம் விதிக்கு உட்படும் பொருட்கள் ஆகும்
2. மின்னோட்டம் மற்றும் மின்னழுத்த வேறுபாட்டிற்கான வரைபடம் நேர்கோடாக அமையாமல் சிக்கலான வடிவில் இருந்தால் இவ்வகை பொருட்கள் அல்லது கருவிகள் ஓம் விதிக்கு உட்படுவதில்லை.
37.
1. படுகதிரின் அதிர்வெண் மற்றும் செறிவு மாறிலி.
2. ஆனோடை நேர் மின்னழுத்தத்தில் வைத்து கேத்தோடிலிருந்து வெளிப்படும் எலக்ட்ரான் மூலம் ஒளி மின்னோட்டம் குறிக்கப்படுகிறது.
3. ஆனோடின் நேர் மின்னழுத்தம் அதிகரித்தால் ஒளி மின்னோட்டமும் அதிகரிக்கும்.
4. ஒரு குறிப்பிட்ட நிலையில் ஒளி மின்னோட்டம் தெவிட்டிய நிலையை அடைகிறது.
5. ஆனோடிற்கு எதிர்மின்னழுத்தம் அளிக்கும் போது உடனடியாக ஒளிமின்னோட்டம் சுழியாவதில்லை.
6. ஒரு குறிப்பிட்ட எதிர் மின்னழுத்தத்தில் ஒளி மின்னோட்டம் கழி ஆகிறது.
7. பெரும இயக்க ஆற்றலை கொண்ட ஒளி எலக்ட்ரான்கள் நிறுத்தி ஒளி மின்னோட்டத்தை சுழியாக்க ஆனோடிற்கு அழிக்கும் எதிர் மின்னழுத்தம் நிறுத்து மின்னழுத்தம் ஆகும்.
38.
அணுக்கரு உலை என்பது தன்னிச்சையான மற்றும் கட்டுப்பாடுகள் இருக்கும் வகையில் அணுக்கரு பிளவு நடைபெறும் அமைப்பாகும்.
அணுக்கரு உலையின் முக்கிய பாகங்கள்:
(a) எரிபொருள்
(b) தணிப்பான்
(c) கட்டுப்படுத்தும் தண்டுகள்
(d) தடுப்பு அமைப்பு
(e) குளிர்விக்கும் அமைப்பு

எரிபொருள்:
1. எரிபொருள் என்பது அணுக்கரு பிளவுக்கு உட்படும் பொருள் (பொதுவாக யுரேனியம், புளூட்டோனியம்)
2. இயற்கையில் கிடைக்கும் யுரேனியத்தில் 0.7% \(_{92}^{235}\textrm{U}\) மற்றும் 99.3% of \(_{92}^{238}\textrm{U}\).
3. எனவே எரிபொருள் செறிவூட்டப்பட்டு 2-4% of \(_{92}^{235}\textrm{U}\) இருக்குமாறு செய்யப்படுகிறது.
நியூட்ரான் மூலம்:
1. தொடர்வினையை துவக்குவதற்கு நியூட்ரான் மூலம்: தேவைப்படுகிறது.
2. புளூட்டோனியம் அல்லது பொலோனியத்துடன் பெரிலியம் கலந்த கலவை நியூட்ரான் மூலமாக செயல்படுகிறது.
தணிப்பான்கள்:
1. வேக நியூட்ரான்களை மீட்சியற்ற மோதலின் மூலமாக குறைவேக நியூட்ரான்களாக மாற்றும் அமைப்பு தணிப்பான்கள் ஆகும்.
2. தணிப்பான்கள் நியூட்ரான்களை உட்கவராது.
3. எ.கா: நீர், கனநீர், கிராபைட்
கட்டுப்படுத்தும் தண்டுகள்:
1. அணுக்கரு பிளவு வினையின் வேகத்தை, நியூட்ரான்களை உட்கவருவதன் மூலமாக கட்டுப்படுத்தும் அமைப்பு கட்டுப்படுத்தும் தண்டுகள்.
2. அணுக்கரு பிளவு வினையில் 25 நியூட்ரான்கள் வெளிப்படும். ஆனால் ஒரே ஒரு நியூட்ரான் மட்டும் அடுத்த பிளவை ஏற்படுத்துமாறு செய்யப்படுகிறது.
3. எ.கா. போரான், காட்மியம்
4. இத்தண்டுகள் யுரேனியம் அடுக்குகளில் செருகி வைக்கப்பட்டுள்ளன.
5. யுரேனியத்தில் கட்டுப்படுத்தும் தண்டுகள் செருகப்படும் ஆழத்தைப்பொருத்து ஒரு பிளவில் உருவாகும் சராசரி நியூட்ரான்களின் எண்ணிக்கை ஒன்று அல்லது அதற்கு மேலாக வைக்க இயலும்.
6. சராசரி நியூட்ரான்களின் எண்ணிக்கை = 1 எனில் அணுக்கரு உலை செயல்பாட்டு நிலையில் உள்ளது.
7. சராசரி நியூட்ரான்களின் எண்ணிக்கை > 1 எனில் அணுக்கரு உலை மீச்செயல்பாட்டு நிலையை எட்டும். விரைவில் அது வெடித்து மிகப்பெரிய அழிவை ஏற்படுத்தும்,
தடுப்பு அமைப்பு:
தீமை ஏற்படுத்தும் கதிர்வீச்சுகளிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள 2 முதல் 2.5 மீட்டர் தடிமனுள்ள கற்காரையினால் ஆன சுவரானது அணுக்கரு உலையைச் சுற்றி அமைக்கப்படுகிறது.
குளிர்விக்கும் அமைப்பு:
1. அணுக்கரு உலையின் உள்ளகத்தில் உருவாகும் வெப்பத்தை நீக்கும் அமைப்பாகும்.
2. எ.கா: அதிக அழுத்தத்தில் அதிக கொதிநிலையையும் கொண்டுள்ள நீர், கனநீர் அல்லது திரவ சோடியம்
3. இது எரிபொருள் அடுக்கின் வழியே சென்று உட்கவர்ந்த வெப்பத்தை நீராவி இயற்றிக்குக் கடத்துகின்றது. நீராவியினால் சுழலிகள் இயக்கப்பட்டு மின்சார உற்பத்தி உலைகளில் மின்னாற்றல் உற்பத்தி செய்யப்படுகிறது,
39.
GPS என்பது Global Positioning System உலகளாவிய நிலையறியும் அமைப்பும் - என்பதன் சுருக்கமாகும். இது வழி நடத்தும் செயற்கைக் கோள்களின் உலகளாவிய அமைப்பு ஆகும். இதன் மூலம் பூமிக்கு அருகிலோ அல்லது வேறு எந்த இடத்திலோ இருக்கும் GPS ஏற்பிக்கு, புவிசார் அமைவிடம் மற்றும் காலம் தொடர்பான தகவல்களை வழங்குகிறது.
பல்வேறு செயற்கைக்கோள்களின் வலையமைப்பு உதவியுடன் GPS செயல்படுகிறது. இந்த செயற்கைக்கோள்கள் ஒவ்வொன்றும் ரேடியோ அலைகள் போன்ற ஒரு துல்லிய சைகையை ஒலிபரப்புகிறது. இருப்பிடம் குறித்த தரவை அளிக்கும் இந்த சைகைகள் விண்ணலைக் கம்பியினால் பெறப்பட்டு, பிறகு GPS மென்பொருளால் தகவல்களாக மாற்றம் செய்யப்படுகிறது. மென்பொருளானது குறிப்பிட்ட செயற்கைக்கோளை கண்டுணர்ந்து, அதன் இருப்பிடம் மற்றும் ஒவ்வொரு செயற்கைக்கோளில் இருந்தும் சைகைகள் பயணம் செய்ய எடுத்துக்கொள்ளும் நேரம் ஆகியவற்றைக் கண்டறிகிறது. பிறகு, மென்பொருள் ஆனது ஒவ்வொரு செயற்கைக்கோளில் இருந்தும் பெறும் தரவுகளை செயல்முறைப்படுத்தி, ஏற்பியின் இருப்பிடத்தைக் கணிக்கிறது.
பயன்பாடுகள்: -
உலகளாவிய நிலையறியும் அமைப்பு பல துறைகளில் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. அவையாவன: இயங்கும் வாகன நிர்வாகம் (கார்கள், சரக்கு வாகனங்கள் மற்றும் பேருந்துகள் ஆகியவற்றின் தடம் பின்பற்றல்) வனவிலங்கு நிர்வாகம் (ஆபத்தான வன விலங்குகளைக் கணக்கிடல் மற்றும் பொறியியல் துறை (சுரங்கப்பாதைகள், பாலங்கள் ஆகியவற்றை உருவாக்குதல்) ஆகியவை ஆகும்.
40.
உள்ளீடு AC சைகையின் நேர் மற்றும் எதிர் அரைச்சுற்றுகள் இவ்வகை அலைதிருத்தி வழியாக செலுத்தப்படுவதால், இவை முழு அலை திருத்தி என அழைக்கப்படுகின்றன.

அமைப்பு:
மையச் சாவி மின்மாற்றி, இரண்டு p-n சந்தி டையோடுகள் ஒரு பளு மின்தடை உள்ளன. முனை பொதுவாக தரை இணைப்பு புள்ளியாக கருதப்படுகிறது.
| உள்ளீடு சைகையின் நேர் அரை அலை | உள்ளீடு சைகையின் எதிர் அரை அலை |
| M நேர்முனை C சுழி மின்னழுத்தம் N ஆனது எதிர்மின் முனையாக அமையும் டையோடு D1 முன்னோக்கு சார்பு D2 பின்னோக்கு சார்பு டையோடு D1 மின்னோட்டத்தை MD, ABC பாதை வழியே கடத்துகிறது. | N நேர்மின்முனை C சுழி மின்னழுத்தம் M ஆனது எதிர்மின் முனையாக அமையும் டையோடு D2 முன்னோக்கு சார்பு D1 பின்னோக்கு சார்பு டையோடு D2 மின்னோட்டத்தை ND2ABC பாதை வழியே கடத்துகிறது. |
நேர் மற்றும் எதிர் அரைசுற்றின் போது பளு மின்தடை வழியே மின்னோட்டம் ஒரே திசையில் பாய்கிறது. வெளியீடு மின்னழுத்தம் துடிப்பு மின்னழுத்தம் எனப்படும் அலையாக அமையும். பயனுறு திறன் 81.2%.

41.
A என்பது தட்டின் பரப்பு
q என்பது மின்னூட்டம்
பின்பு மின்புலம் \(E=\frac { \sigma }{ { \varepsilon }_{ 0 } } =\frac { q }{ { \varepsilon }_{ 0 }A } \) (அல்லது) \(EA=\frac { q }{ { \varepsilon }_{ 0 } } \)
ஆனால் \(EA={ \phi }_{ E }\) மின்புலப்பாயம்
\(\therefore { \phi }_{ E }=\frac { q }{ { \varepsilon }_{ 0 } } \) (அல்லது) \(q={ \varepsilon }_{ 0 }{ \phi }_{ E }\)
\(\frac { dq }{ dt } =\frac { d }{ dt } ({ \varepsilon }_{ 0 }{ \phi }_{ E })={ \varepsilon }_{ 0 }\frac { { d\phi }_{ E } }{ dt } \)
மின்னூட்ட மாறும் வீதம் \({ \varepsilon }_{ 0 }\) மடங்கு மின்புலப்பாய மாற்றத்திற்கு சமம்
\({ \varepsilon }_{ 0 }\)\(\frac { { d\phi }_{ E } }{ dt } \) என்பது இடப்பெயர்ச்சி மின்னோட்டம்
42.
கடத்தியின் நீள் அடர்த்தி = 0.2 g/m
ஓரலகு நீளத்திற்குரிய நிறை \(\frac{M}{l}=0.2 \times 10^{-3} \mathrm{~kg} / \mathrm{m}\)
காந்தப்புலம் B = 1T.
g = 10 ms-2
விசை \(=\frac{m}{l} \times g\)
= 0.2 x 10-3 x 10 = 0.2 x 10-2
விசை F = 2 x 10-3 N ....(1)
காந்தப்புலத்திற்கு, செயற்படும் விசை
F= BIl
BIl = 2 x 10-3
∴ 1 x L x I = 2 x 10-3
∴ I = 2 x 10-3 A [∴ l = 1m]
∴ I = 2mA
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th English Supplementary - 3 - The Hour of Truth (Play) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Poem - 3 - All the World’s a Stage Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Prose - 3 - In Celebration of Being Alive Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Supplementary - 2 - Life of Pi Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards