12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 06/12/2019
குறைகடத்தி எலக்ட்ரானியல் Semiconductor Electronics
12ஆம் வகுப்பு Physics / இயற்பியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Physics / இயற்பியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Physics Test1.
பின்வரும் படத்தில் காட்டப்பட்ட மின்சுற்றில் உள்ள இருமுனை சந்தி டிரான்சிஸ்டரின் மின்னோட்ட பெருக்கம் β = 50 என்க. VEB = 600 mV என்ற உமிழ்ப்பான்- அடிவாய் மின்னழுத்த வேறுபாட்டிற்கு ஏற்ற, உமிழ்ப்பான்-ஏற்பான் மின்னழுத்த வேறுபாட்டினை VEC வோல்ட்டில் கணக்கிடுக.

2.
ஒரு டிரான்சிஸ்டரின் α = 0.99 மற்றும் VBE = 0.7V என பின்வரும் மின்சுற்றில் தரப்பட்டுள்ளது. எனில், ஏற்பான் மின்னோட்டத்தின் மதிப்பைக் காண்க.

3.
பின்வரும் பூலியன் கூற்றை நிரூபிக்கவும் AC + ABC = AC. அதன் சுற்று விளக்கப்படம் தருக.
4.
படத்தில் காட்டப்பட்டுள்ள மின்சுற்றில் உள்ளீடு மின்னழுத்தம் Vi = 20 V, VBE = 0 V மற்றும் VCE = 0 V எனில் IB,IC மற்றும் β வின் மதிப்புகள் யாவை?

5.
பளு மின்தடை 2 kΩ ஆக இருக்கும்போது செனார் டையோடு வழியாக பாயும் மின்னோட்டத்தைக் கணக்கிடுக (இங்கு டையோடு நல்லியல்பு கொண்டது எனக் கருத வேண்டும்).

6.
சிலிக்கான் டையோடு ஒன்று 1kΩ மின்தடையாக்கியுடன் படத்தில் உள்ளவாறு இணைக்கப்பட்டுள்ளது. இங்கு AB வழியாகப் பாயும் மின்னோட்டத்தின் மதிப்பைக் காண்க.
7.
பின்வரும் மின்சுற்றின் வெளியீடு 1 ஆக இருக்கும்போது, உள்ளீடு ABC ஆனது

101
100
110
010
8.
பின்வருவனவற்றில் எது முன்னோக்குச் சார்பில் உள்ள டையோடினைக் குறிக்கும்.




9.
ஒரு NOT கேட்டின் உள்ளீடு A= 1011 எனில், அதன் வெளியீடானது, _____
0100
1000
1100
0011
10.
ஓர் அலை இயற்றியல் தொடர்ச்சியான அளவுகள் ஏற்பட _______.
நேர்பின்னூட்டம் இருக்க வேண்டும்.
பின்னூட்ட மாறிலி ஒன்றாக இருக்க வேண்டும்.
கட்டமாற்றம் சுழி அல்லது 2\(\pi \) யாக இருக்க வேண்டும்.
மேற்கூறிய அனைத்தும்.
11.
ஒளி உமிழ்வு டையோடில் ஒளி உமிழப்படக் காரணம் _______.
மின்னூட்ட ஊர்திகளின் மறுஇணைப்பு
லென்சுகளின் செயல்பாட்டால் ஏற்படும் ஒளி எதிரொளிப்பு
சந்தியின்மீது படும் ஒளியின் பெருக்கம்
மிகப்பெரிய மின்னோட்ட கடத்தும் திறன்.
12.
டீ மார்கனின் முதல் மற்றும் இரண்டாவது தேற்றங்களைக் கூறுக
13.
ஒரு பொது உமிழ்ப்பான் பெருக்கியில் உள்ளீடு மற்றும் வெளியீடு AC மின்னழுத்தங்களுக்கு இடைப்பட்ட கட்டத்தொடர்பு என்ன? கட்ட புரட்டுகளுக்கான காரணம் என்ன?
14.
ஒரு முழு அலைதிருத்தியின் உள்ளீட்டு மற்றும் வெளியீட்டு அலை வடிவங்களை வரைக.
15.
ஒரு டையோடில் கசிவு மின்னோட்டம் என்பதன் பொருள் என்ன?
16.
17.
சூரிய மின்கலம் வேலை செய்யும் தத்துவத்தை விவரி. அதன் பயன்பாடுகளைக் குறிப்பிடுக.
18.
ஒளி டையோடு என்பதனைப் பற்றிக் குறிப்பெழுதுக.
19.
ஒளி உமிழ் டையோடு என்றால் என்ன? செயல்படும் தத்துவத்தைப் படத்துடன் தருக.
1.
\(\beta =50\)
\( { V }_{ BE }=600mV=0.6V\)
\( { V }_{ B }={ V }_{ E }-{ V }_{ EB }\)
\( { V }_{ B }=3-0.6=2.4V\)
\(\mathrm{I}_{\mathrm{B}}=\frac{\mathrm{V}_{\mathrm{B}}}{\mathrm{R}_{\mathrm{B}}}=\frac{2.4}{60 \times 10^3}=40 \mu \mathrm{A}\)
\({ I }_{ C }={ \beta I }_{ B }=50\times 40\mu A=2mA\)
VC = REIC = 500 \(\times\) 2 \(\times\) 10-3 = 1 V
VEC = VE - VC
VEC = 3 - 1 = 2 V
2.
VBE = 0.7V
\(\alpha \). = 0.99
\(\beta =\cfrac { \alpha }{ 1-\alpha } \)
\(\beta =\cfrac { 0.99 }{ 1-0.99 }\)
\( \beta =99\)
கிர்ச்சாஃப்பின் மின்னழுத்த விதிப்படி
12 - 1K (lB'+ Ie>- 10K IB - VBE- lK (IB + Ie> = 0
12 - 2K Ie- 12K IB - 0.7 = 0
\({ I }_{ B }=\cfrac { { I }_{ C } }{ \beta } \)
\(2K{ I }_{ C }+12K\times \cfrac { { I }_{ c } }{ \beta } =11.3\)
\(2K{ i }_{ C }+12K\cfrac { { I }_{ C } }{ 99 } =11.3\)
\(2K{ I }_{ c }+0.12K{ I }_{ C }=11.3\)
\(2.12\times { 10 }^{ 3 }{ I }_{ C }=11.3\)
\({ I }_{ C }=\cfrac { 11.3 }{ 2.12\times { 10 }^{ 3 } } \)
Ic = 5.33 mA
3.
படி 1: AC (1 + B) = AC.1 (OR விதி -2)
படி 2: AC. 1 = AC (AND விதி – 2 )
எனவே, AC + ABC = AC
சுற்று விளக்கம்

ஆகவே கொடுக்கப்பட்ட பூலியன் கூற்று நிரூபிக்கப்பட்டது.
4.
\({ I }_{ B }=\frac { { V }_{ i } }{ { R }_{ B } } =\frac { 20V }{ 500k\Omega } =40\mu \quad \left[ \because { V }_{ BE }=0V \right] \)
\({ I }_{ C }=\frac { { V }_{ CC } }{ { R }_{ C } } =\frac { 20V }{ 4k\Omega } =5mA\quad \left[ \because { V }_{ CE }=0V \right] \)
\(\beta =\frac { I_{ C } }{ I_{ B } } =\frac { 5mA }{ 40\mu \Omega } =125\)
5.
AB யின் குறுக்கே மின்னழுத்தம் VZ = 9V
RS ன் குறுக்கே மின்னழுத்த இறக்கம் = 15 – 9 = 6V
எனவே RS ன் வழியே பாயும் மின்னோட்டம்
\(I=\frac { 6 }{ 1{ \times 10 }^{ 3 } } =6mA\)
பளு மின்தடைக்குக் குறுக்கே மின்னழுத்தம்
VAB = 9V
பளு மின்தடை வழியே பாயும் மின்னோட்டம்
\(I=\frac { { V }_{ AB } }{ { R }_{ L } } =\frac { 9 }{ 2{ \times 10 }^{ 3 } } =4.5mA\)
செனார் டையோடு வழியே பாயும் மின்னோட்டம்
IZ = I - IL = 6 mA - 4.5 mA = 1.5 mA
6.
A மற்றும் B க்கு இடையேயுள்ள மின்னழுத்த வேறுபாடு பின்வருமாறு தரப்படுகிறது.
V = [VA–VB]–Vb (Si)
= [3.3 – (–7.4)] – 0.7
= 10.7 – 0.7 = 10 V
AB வழியாக பாயும் மின்னோட்டத்தை ஓம் விதியை பயன்படுத்திப் பெறலாம்.
\(I=\frac { V }{ R } =\frac { 10 }{ 1{ \times 10 }^{ 3 } } ={ 10 }^{ -2 }A=10mA\)
7.
A = 1, B = 0, C = 1
y = A + B, y = (A + B).C
y = (1 + 0).1
y = 1
8.
(a)

9.
\(y=\overline{A}=\overline{1011}=0100\)
10.
(d)
மேற்கூறிய அனைத்தும்.
11.
(a)
மின்னூட்ட ஊர்திகளின் மறுஇணைப்பு
12.
1. மார்கனின் முதல் தேற்றத்தின்படி, இரு லாஜிக் உள்ளீடுகளின் கூடுதலின் நிரப்பியானது அவற்றின் நிரப்பிகளின் பெருக்கல் பலனுக்கு சமமாகும்.
2. மார்கனின் இரண்டாவது தேற்றத்தின்படி, இரு உள்ளீடுகளின் பெருக்கல்பலனின் நிரப்பியானது அதன் நிரப்பிகளின் கூடுதலுக்கு சமம்.
13.
உள்ளீடு சைகையின் நேர் அரை அலையின்போது உமிழ்ப்பான் அடிவாய்க்குக் குறுக்கே முன்னோக்கு மின்னழுத்தம் உள்ளீடு சைகையினால் அதிகரிக்கப்படும். இதன் விளைவாக அடிவாய் மின்னோட்டம் (IB) அதிகரிக்கும். இதனால் ஏற்பான் மின்னோட்டம் (Ic) யானது மடங்கு அதிகரிக்கும். இது RC யின் குறுக்கே மின்னழுத்த இறக்கத்தை (ICRC) அதிகரித்து ஏற்பான் உமிழ்ப்பான் மின்னழுத்த வேறுபாட்டை (vCE.) குறைக்கும். எனவே, நேர்மறை உள்ளீடு சைகை, வெளியீட்டில் பெருக்கப்பட்ட எதிர்மறை சைகையாக உருவாகிறது. இதனால் வெளியீட்டு சைகை 180o திருப்பப்படுகிறது
14.

15.
பின்னோக்குச் சார்பினால் சந்தியின் குறுக்கே \(\mu\)A அளவிற்கு மிகச் சிறிய மின்னோட்டம் பாயும். இது சிறுபான்மை ஊர்திகளின் இயக்கத்தினால் ஏற்படுகிறது. இது, கசிவு மின்னோட்டம் அல்லது பின்னோக்குத் தெவிட்டிய மின்னோட்டம் என அழைக்கப்படுகிறது.
16.
வ.எண் உள்ளார்ந்த குறைக்கடத்திகள்
புறவியலான குறைக்கடத்திகள்
1. மாசுக்கள் எவையும் கலக்காத தூய்மையான குறைக்கடத்தி உள்ளார்ந்த குறைக்கடத்திகளில் மாசு அணுக்களை சேர்ப்பது.
2. கடத்துப் பட்டையிலுள்ள எலக்ட்ரான் எண்ணிக்கையும் இணைதிறன் பட்டையிலுள்ள துளைகளின் எண்ணிக்கையும் சமமாக அமையும்.
துளைகளின் எண்ணிக்கையும் கட்டுறா எலக்ட்ரான்களின் எண்ணிக்கையும் சமமாக இருக்காது.
3. இணைதிறன் பட்டையிலிருந்து எலக்ட்ரானை கடத்து பட்டைக்கு மாற்ற தேவைப்படும் ஆற்றல் முறையே 0.7 ev மற்றும் 1.1ev ஆகும். கொடையாளி எலக்ட்ரானைக் கட்டுறா நிலைக்கு கொண்டு செல்ல தேவைப்படும் ஆற்றல் 0.01 eV மற்றும் 0.05 eV. ஆகும்.
17.
தத்துவம்: ஒளி வோல்டா விளைவு
சூரிய மின்கலம் அல்லது ஒளி வோல்டா மின்கலமானது, ஒளி வோல்டா விளைவு எனும் தத்துவத்தின் அடிப்படையில் செயல்படுகிறது. அதன்படி, சூரிய மின்கலத்தில் p-n சந்தி மீது சூரிய ஒளிபடும் போது அதற்கேற்ப மின்னியக்கு விசையை உருவாக்குகிறது.
சூரிய மின்கலனில் எலக்ட்ரான் துளை இணையானது சந்திக்கு அருகில் உட்கவரப்படும் ஒளியினால் உருவாக்கப்படுகின்றன.

இயக்கமில்லாப் பகுதியில் மின்புலத்தின் காரணமாக மின்னூட்ட ஊர்திகள் பிரிக்கப்படுகின்றன.
எலக்ட்ரான்கள் n வகை சிலிக்கானை நோக்கியும், துளைகள் p வகை சிலிக்கான் படலத்தை நோக்கியும் நகர்கின்றன.
n-பகுதியை அடையும் எலக்ட்ரான்களை முன்புற மின் இணைப்பு மின்வாயும், p -பகுதியை அடையும் துளைகளை பின்புற மின் இணைப்பு மின்வாயும் சேகரிப்பதால் மின்கலத்தின் குறுக்கே மின்னழுத்த வேறுபாடு உருவாகும்.
சூரிய மின்கலத்துடன் வெளிப்புற பளு இணைக்கப்படும்போது அதன் வழியாக, ஒளி மின்னோட்டம் பாயும்.
பயன்பாடுகள்:
கணிப்பான்கள், கடிகாரங்கள், பொம்மைகள் ஆகியவற்றில் சூரிய மின்கலன்கள் அதிகளவும் பயன்படுத்தப்படுகின்றன. சூரிய மின்கலன்கள் இயங்கக்கூடிய மின் வழங்கிகளில் பயன்படுகிறது.
செயற்கைக்கோள் மற்றும் விண்வெளி பயன்பாடுகளில் பயன்படுகிறது.
சூரிய பலகைகள் மின்னோட்டத்தை உருவாக்க பயன்படுகின்றன.
18.
1) மின் சைகைகளை ஒளியியல் சைகைகளாக மாற்றும் P-n சந்தி டையோடு ஒளி டையோடு எனப்படும். எனவே ஒளி டையோடின் செயல்பாடு LED-இன் செயல்பாட்டுக்கு நேர் எதிரானது ஆகும். ஒளி டையோடு பின்னோக்குச் சார்பில் செயல்படும். இதன் மின்சுற்றுக் குறியீடு படம் (அ) காட்டப்பட்டுள்ளது. அதிலுள்ள அம்புக்குறிகள் ஒளி அதன் மீது படுவதைக் குறிக்கின்றன.
2) இக்கருவியில் ஒளி உணர்வு உள்ள குறைக்கடத்தி பொருளாலான p-n சந்தியானது பாதுகாப்பாக ஒரு நெகிழிப் பெட்டியில் படம் (ஆ) இல் உள்ளவாறு வைக்கப்பட்டுள்ளது. இதில் p-n சந்தி மீது ஒளி விழ ஏதுவாக ஒளி ஊடுருவும் ஒரு சிறிய சன்னல் உள்ளது. ஒளி டையோடின் P-n சந்தி மீது ஒளிபட்டவுடன் பின்னோக்கு மின்னோட்டத்தை உற்பத்தி செய்வதால் அவை ஒளி உணர்விகள் எனப்படுகின்றன.
3) போதுமான ஆற்றல் கொண்ட ஃபோட்டான் hv ஆனது, டையோடின் இயக்கமில்லாப் பகுதி மீது படும்போது, இணைதிறன் பட்டையிலுள்ள சில எலக்ட்ரான்கள் கடத்து பட்டைக்கு செல்கின்றன. இதனால், இணைதிறன் பட்டையில் துளைகள் உருவாகின்றன. இது எலக்ட்ரான்-துளை இணையை உருவாக்கும் எலக்ட்ரான் துளை இணையின் எண்ணிக்கை p-n சந்தி மீது படும் ஒளியின் செறிவினைப் பொருத்து அமையும். இங்கு இந்த எலக்ட்ரான்கள் மற்றும் துளைகள் மறு இணைப்பு ஏற்படுவதற்கு முன்பே, பின்னோக்குச் சார்பு மின்னழுத்தம் கொண்டு மின்புலத்தினால் உருவாக்கப்பட்ட சந்தியின் குறுக்கே எதிரெதிராக விரட்டப்படுகின்றன. அதாவது, துளைகள் n-பகுதிக்கும், எலக்ட்ரான்கள் p-பகுதிக்கும் செல்கின்றன.
4) இதனை புற மின்சுற்றில் இணைக்கும்போது எலக்ட்ரான்கள் புறமின் சுற்றில் பாய்ந்து ஒளி மின்னோட்டத்தை ஏற்படுத்தும்.
5) படும் ஒளியின் செறிவு சுழியாக இருக்கும் போதும், புறக்கணிக்கத் தக்க அளவு பின்னோக்கு மின்னோட்டம் இருக்கும். படும் ஒளி இல்லாத நிலையில் ஏற்படும் இந்த பின்னோக்கு மின்னோட்டம் இருள் மின்னோட்டம் எனப்படும். இது வெப்பத்தினால் உருவாக்கப்பட்ட சிறுபான்மை ஊர்திகளால் ஏற்படுகிறது..
பயன்பாடுகள்:
1. எச்சரிக்கை மணி அமைப்பு,
2. கிடைநிலை இயக்கத்திலுள்ள இயங்குபட்டையில் எண்ணிக்கைக் கருவியாக பயன்படுதல்.
3. ஒளி கடத்திகள்.
4. குறுந்தகடு இயக்கிகள், புகை கண்டுணர்விகள்.
5. மருத்துவத் துறையில் X - கதிர்கள் மூலம் உடல் உறுப்புகளைக் கண்டுணர்ந்து கணினி மூலம் வரைபடமாக அளித்தல்.
19.
LED என்பது முன்னோக்குச் சார்பில் செயல்படும்போது கட்புலனாகும் மற்றும் கட்புலனாகாத ஒளியை உமிழும் p-n சந்தி டையோடு ஆகும். இந்நிகழ்வில் மின்னாற்றலானது ஒளி ஆற்றலாக மாறுவதால் இது மின் ஒளிர்வு எனவும் அழைக்கப்படும்.

இதில் p-பகுதி, n-பகுதி மற்றும் அடிப்பரப்பு ஆகியவை உள்ளன. குறிப்பிட்ட ஒரு திசையில் ஒளியைச் செலுத்துவதற்கு ஒளி ஊடுருவும் சன்னல் ஒன்று உள்ளது. LED வழியாக பாயும் முன்னோக்கு மின்னோட்டத்தைக் கட்டுப்படுத்த சார்புபடுத்தும் மூலத்துடன் தொடரிணைப்பில் ஒரு புற மின்தடை இணைக்கப்பட்டுள்ளது. மேலும், இதில் ஆனோடு மற்றும் கேத்தோடு எனும் இரு முனைகள் உள்ளன.
p-n சந்தியானது முன்னோக்குச் சார்பில் அமைக்கப்பட்டால், n-பகுதியில் உள்ள கடத்து பட்டை எலக்ட்ரான்கள் மற்றும் p-பகுதியில் உள்ள இணைதிறன் பட்டை துளைகள் சந்தியின் குறுக்கே விரவுகின்றன. அவை, சந்தியைக் கடந்த பிறகு, அதிகப்படியான சிறுபான்மை ஊர்திகளாகின்றன. (p-பகுதிக்குச் சென்ற எலக்ட்ரான்கள் மற்றும் n-பகுதிக்குச் சென்ற துளைகள்) இந்த அதிகப்படியான சிறுபான்மை ஊர்திகள் அவற்றிற்கு எதிரான மின்னூட்டமுள்ள அப்பகுதிகளுக்குரிய பெரும்பான்மை ஊர்திகளுடனான மறு இணைப்பில் ஈடுபடுகின்றன. அதாவது, கடத்து பட்டை எலக்ட்ரான்கள் இணைதிறன் பட்டையின் துளைகளுடன் மறு இணைப்பில் ஈடுபடுகின்றன. இது படத்தில் காட்டப்பட்டுள்ளது.
மறு இணைப்பு நிகழ்வின் போது, ஆற்றலானது, ஒளி (கதிர்வீச்சு) அல்லது வெப்ப (கதிர்வீச்சற்ற) வடிவில் வெளியிடப்படுகிறது. கதிர்வீச்சு மறு இணைப்பில் hv ஆற்றலுள்ள ஃபோட்டான் வெளியிடப்படுகிறது. கதிர்வீச்சற்ற மறு இணைப்பில் ஆற்றலானது வெப்ப வடிவில் வெளியிடப்படும்.
வெளியிடப்படும் ஒளியின் நிறமானது பொருளின் ஆற்றல் பட்டை இடைவெளியைப் பொருத்து அமையும். எனவே, LED க்கள் பல்வேறு நிறங்களில் அதாவது நீலம் (SiC), பச்சை (AlGaP) மற்றும் சிவப்பு (GaAsP) ஆகிய நிறங்களில் கிடைக்கின்றன. தற்போது ஒளி உமிழ்வு டையோடுகள், வெள்ளை நிறத்தில் (GaInN) கூடக் கிடைக்கின்றன.
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards