12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 21/09/2019
12ஆம் வகுப்பு Physics / இயற்பியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Physics / இயற்பியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Physics Test1.
2.
பிரான்ஹோபர் வரிகள் என்றால் என்ன? சூரியனிலுள்ள தனிமங்களைக் கண்டறிவதில் அவை எவ்வாறு உதவுகின்றன?
3.
ஜுலின் வெப்ப விதியைக் கூறுக.
4.
டயா, பாரா மற்றும் ஃபெர்ரோ காந்தவியலை ஒப்பிடு?
5.
+q மின்னூட்டம் கொண்ட நேர்மின்துகள் ஆதிப்புள்ளியில் வைக்கப்பட்டுள்ளது. அதிலிருந்து 9 m தொலைவில் இன்னொரு புள்ளி மின்துகள்-2q வைக்கப்பட்டுள்ளது. இம்மின்துகள்களுக்கு இடையில் மின்னழுத்தம் சுழியாக உள்ள புள்ளியைக் கண்டுபிடிக்கவும்.
6.
உராய்வற்ற, மின்காப்பிடப்பட்ட சாய்தளம் ஒன்றின் மீது m நிறையும் q நேர் மின்னூட்ட மதிப்பும் கொண்ட பொருள் ஒன்று வைக்கப்பட்டுள்ளது. அதை நிலையாக வைப்பதற்கு, சாய்தளத்திற்கு இணையான திசையில் மின்புலம் E அளிக்கப்படுகிறது. மின்புலத்தின் (E) எண்மதிப்பைக் காண்க

7.
படத்தில் காட்டப்பட்டுள்ள வளையத்தின் மையத்தில் ஏற்படும் காந்தப்புலத்தைக் காண்க?
8.
மின்னோட்ட அடர்த்தி வரையறு.
9.
மின்புலம் – வரையறு.
10.
P மற்றும் Q ஆகிய இரு மின்தேக்கிகள் ஒரே மாதிரியான குறுக்குவெட்டுப்பரப்பு A மற்றும் இடைவெளி d கொண்டுள்ளன. மின்தேக்கிகளின் இடைவெளியில் படத்தில் கொடுத்துள்ளபடி, εr மின்காப்பு மாறிலி உடைய மின்காப்புகள் செருகப்படுகின்றன எனில், P மற்றும் Q மின்தேக்கிகளின் மின்தேக்குத் திறன்களைக் கணக்கிடுக.

11.
ஓரலகு நீளத்திற்கு n சுற்றுகளைக் கொண்ட வரிச்சுருளின் அச்சில் எந்த ஒரு புள்ளியிலும் உள்ள காந்தப்புலம் \(B=\frac12\)μ0nI(cos θ1 - cos θ2) என நிறுவுக.
12.
கிர்க்காஃப் விதிகளை கூறி விளக்குக.
13.
புள்ளி மின்துகள் ஒன்றினால் ஏற்படும் நிலை மின்னழுத்தத்திற்கான கோவையைத் தருவிக்க.
14.
கோளக்கடத்தி ஒன்றின் மீது உள்ள நேர் மின்னூட்டத்தின் மதிப்பு 10μC எனில் ஆரம் 2m கொண்ட அக்கோளத்தின் மையத்தில் மின்புலம் ____
சுழி
5 μCm-2
20 μCm-2
8 μCm-2
15.
மின்னோட்டமானது 0.05 s நேரத்தில் +2A லிருந்து -2A ஆக மாறினால், சுருளில் 8 V மின்னியக்கு விசை தூண்டப்படுகிறது. சுருளின் தன் மின் தூண்டல் எண் _______.
0.2 H
0.4 H
0.8 H
0.1 H
16.
இணைத்தட்டு மின்தேக்கி ஒன்று V மின்னழுத்த வேறுபாட்டில் Q அளவு மின்னூட்டம் கொண்ட மின்துகள்களை சேமிக்கிறது. தட்டுகளின் பரப்பளவும் தட்டுகளுக்கு இடையேயான தொலைவும் இருமடங்கானால் பின்வருவனவற்றுள் எந்த அளவு மாறுபடும்.
மின் தேக்குத்திறன்
மின்துகள்
மின்னழுத்த வேறுபாடு
ஆற்றல் அடர்த்தி
17.
அலையியற்றி ஒன்றைக் கருதுக. அதில் உள்ள மின்னூட்டப்பட்ட துகளொன்று அதன் சராசரிப்புள்ளியைப் பொறுத்து 300 MHz அதிர்வெண்ணில் அலைவுறுகிறது எனில், அலையியற்றியால் உருவாக்கப்பட மின்காந்த அலையின் அலைநீளத்தின் மதிப்பு _____.
1 m
10 m
100 m
1000 m
18.
பின்வரும் மின்துகள் நிலையமைப்புகளில் எது சீரான மின்புலத்தை உருவாக்கும்?
புள்ளி மின்துகள்
சீரான மின்னூட்டம் பெற்ற முடிவிலாக் கம்பி
சீரான மின்னூட்டம் பெற்ற முடிவிலா சமதளம்
சீரான மின்னூட்டம் பெற்ற கோளகக் கூடு
19.
l நீளமுள்ள கம்பி ஒன்றின் வழியே Y திசையில் I மின்னோட்டம் பாய்கிறது. இக்கம்பியை \(\vec { B } =\frac { \beta }{ \sqrt { 3 } } (\hat { i } +\hat { j } +\hat { k } )T\) என்ற காந்தப்புலத்தில் வைக்கும்போது, அக்கம்பியின் மீது செயல்படும் லாரன்ஸ் விசையின் எண்மதிப்பு_____.
\(\sqrt { \frac { 2 }{ 3 } } \beta Il\)
\(\sqrt { \frac { 1 }{ 3 } } \beta Il\)
\(\sqrt { 2 } \beta Il\)
\(\sqrt { \frac { 1 }{ 2 } } \beta Il\)
20.
2.1 V மின்கலமானது 10 Ω மின்தடை வழியே 0.2 A மின்னோட்டத்தை செலுத்தினால் அதன் அகமின்தடை____ .
0.2 Ω
0.5 Ω
0.8 Ω
1.0 Ω
21.
ஒரு பெரிய கட்டிடத்தில், 40 W மின்விளக்குகள் 15, 100 W மின்விளக்குகள் 5, 80 W மின்விசிறிகள் 5 மற்றும் 1 kW மின் சூடேற்றி 1 ஆகியவை இணைக்கப்பட்டுள்ளன. மின் மூலத்தின் மின்னழுத்தம் 220V எனில் கட்டிடத்தின் மைய மின் உருகியின் அதிகபட்ச மின்னோட்டம் தாங்கும் அளவு______.
14 A
8 A
10 A
12 A
22.
ஒரு கார்பன் மின்தடையாக்கியின் மின்தடை மதிப்பு (47 ± 4.7)k Ω எனில் அதில் இடம்பெறும் நிறவளையங்களின் வரிசை_____ .
மஞ்சள் - பச்சை - ஊதா - தங்கம்
மஞ்சள் - ஊதா - ஆரஞ்சு - வெள்ளி
ஊதா - மஞ்சள் - ஆரஞ்சு - வெள்ளி
பச்சை - ஆரஞ்சு - ஊதா - தங்கம்
23.
லென்ஸ் விதி _____
24.
தொடர் ஒத்ததிர்வில் மின்னழுத்த வேறுபாடுகளின் பெருக்கம் ________ ஆல் குறிக்கப்படும்.
25.
கண்ணுறு ஒளி ஒன்றின் அலைநீளம் ____________ முதல் ____________ வரை
26.
மின்காந்த அலைகளின் தன்மை ____________
27.
x - கதிர்_____
28.
மின்னூட்டம் மாறாத பண்பு________
29.
மின்னோட்டம் என்பது ________ அளவாகும்.
30.
கார்பன் வில் உலைகள் ______
31.
காந்தப்புலத்திலுள்ள மின்னோட்டம் பாயும் கடத்தி ஒன்றின் மீது செயல்படும் விசையின் திசையை _____ மூலம் அறியலாம்.
32.
பாரா காந்தம்______
1.
2.
சூரியனிடமிருந்து கிடைக்கும் நிறமாலையில், அதிக எண்ணிக்கையில் கருங்கோடுகள் (வரி உட்கவர் நிறமாலை) காணப்படும். சூரிய நிறமாலையில் காணப்படும் இக்கருங்கோடுகளுக்கு பிரான்ஹோபர் வரிகள் என்று பெயர்.
பல்வேறு பொருட்களின் உட்கவர் நிறமாலைகளை சூரியன் நிறமாலையில் உள்ள பிரான்ஹோபர் வரிகளுடன் ஒப்பிட்டு சூரிய வளிமண்டலத்தில் காணப்படும் தனிமங்களைக் கண்டறியலாம்.
3.
ஜூலின் விதிப்படி, ஒரு மின்சுற்றில் மின்னோட்டம் பாய்வதால் உருவாக்கப்படும் வெப்பமானது,
i) மின்னோட்டத்தின் இருமடிக்கு நேர்த்தகவிலும்
ii) மின்சுற்றின் மின்தடைக்கு நேர்த்தகவிலும்
iii) மின்னோட்டம் பாயும் நேரத்திற்கு நேர்த்தகவிலும் அமையும்.
4.
| வரிசை எண் | டயாக்காந்தம் | பாராகாந்தம் | ஃபெர்ரோகாந்தம் |
| 1. | ஒவ்வொரு எலக்ட்ரானும் ஒரு குறிப்பிட்ட அளவு சுற்றுப்பாதை காந்த இருமுனை திருப்புத்திறனை பெற்றிருக்கும். | ஒவ்வொரு அணுவும் அல்லது மூலக்கூறும் நிகர காந்த இருமுனை திருப்புத்திறன்களைப் பெற்றுள்ளன. | ஒரு அணு அல்லது மூலக்கூறு நிகர காந்த இருமுனை திருப்புத்திறன்களைப் பெற்றுள்ளன. |
| 2. | சுற்றுப்பாதை தளங்கள் தற்போக்காக ஒழுங்கற்ற முறையில் எல்லா திசைகளிலும் அமைந்துள்ளது. | காந்த இருமுனை திருப்புத்திறன்களின் வெக்டர் ஒழுங்கற்ற முறையில் எல்லா திசைகளிலும் அமைந்துள்ளது. | பெருங்கூறின் உள்ளே உள்ள காந்தத்திருப்புத் திறன்களும் ஒரு குறிப்பிட்ட திசையில் ஒருங்கமைந்துள்ளன. |
| 3. | நிகர காந்த இருமுனை திருப்புத் திறன்களின் வெக்டர் கூடுதல் சுழியாகும். | எந்தவொரு அணுவும் தொகுபயன் காந்த இருமுனை திருப்புத்திறனை பெற்றிருக்காது. | பொருளின் நிகர காந்தமாக்கல் சுழியாகும் |
5.
மேற்பொருந்துதல் தத்துவத்தின்படி, ஒரு புள்ளியில் உருவாகும் மொத்த மின்னழுத்தமானது தனித்தனி மின்துகள்களால் அப்புள்ளியில் ஏற்படும் மின்னழுத்தங்களின் கூடுதலுக்குச் சமம்.
மொத்த மின்னழுத்த மதிப்பு சுழியாகும் புள்ளி, +q மின்துகளிலிருந்து x தொலைவில் உள்ளதாகக் கருதவும்.

புள்ளி P இல் மொத்த மின்னழுத்தம் சுழி. இதைப் பின்வருமாறு எழுதலாம்
\({ V }_{ tot }=\cfrac { 1 }{ 4\pi { \varepsilon }_{ 0 } } \left( \cfrac { q }{ x } -\cfrac { 2q }{ (9-x) } \right) =0\) (அல்லது)
\(\cfrac { q }{ x } =\cfrac { 2q }{ \left( 9-x \right) } \) (அல்லது)
\(\cfrac { 1 }{ x } =\cfrac { 2 }{ \left( 9-x \right) } \)
எனவே, x = 3m
6.
நிறை m ன் மீது செயல்படும் மூன்று விசைகள்:
(i) கீழ்நோக்கிய திசையில் புவியினால் செலுத்தப்படும் ஈர்ப்பு விசை (mg)
(ii) சாய்தளத்தின் பரப்பினால் அளிக்கப்படும் செங்குத்து விசை (N)
(iii) சீரான மின்புலத்தினால் அளிக்கப்படும் கூலூம் விசை (qE)
நிறை m ன் தனித்த பொருள் விசைப்படம் இங்கே தரப்பட்டுள்ளது.

இதற்கான தகுந்த நிலைம ஆய அமைப்பானது (inertial coordinate system) சாய்தளத்தில் இடம் பெற்றுள்ளதைப் படத்தில் காணலாம். x மற்றும் y – அச்சு ஆகிய இரண்டு திசைகளிலும் நிறை m ன் முடுக்கம் சுழி.
x – திசையில் நியூட்டனின் இரண்டாம் விதியைப் பயன்படுத்த
\(mg \sin\theta\hat { i } -qE\hat { i } \) =0
\(mg \sin\theta -qE=0\)
அல்லது \(E=\frac { mg \sin\theta }{ q } \)
மின்புலத்தின் எண்மதிப்பானது, நிறைக்கு (m) நேர்த்தகவிலும் மின்னூட்ட மதிப்பு q விற்கு எதிர்த்தகவிலும் உள்ளதைக் கவனிக்கவும். அதாவது, மின்னூட்டத்தை மாற்றாமல் நிறையை மட்டும் கூட்டினால் அப்பொருள் நகராமல் இருக்க மேலும் வலிமையான மின்புலம் தேவைப்படும். மாறாக, நிறையை மாற்றாமல் மின்னூட்டத்தை மட்டும் கூட்டினால், பொருள் நகர்வதைத் தடுக்க வலிமை குறைந்த மின்புலமே போதுமானது. சாய்தளத்தின் உயரம் (h), நீளம் (L) ஆகியவற்றின் அடிப்படையிலும் மின்புலத்தை எழுதலாம்.
\(E=\frac { mgh }{ qL } \)
7.
வளையத்தின் மேல் அரைவட்டத்தின் மற்றும் கீழ் அரைவட்டத்தின் வழியே மின்னோட்டம் பாய்வதால் ஏற்படும் காந்தப்புலங்கள் எண்மதிப்பில் சமமாகவும் எதிரெதிர் திசைகளில் செயல்படுவதால், வளையத்தின் மையத்தில் (O புள்ளியில்) நிகர காந்தப்புலம் \(\vec { B } \) சுழியாகும் \(\vec { B }= \vec { 0 } \)
8.
ஓரலகு குறுக்கு வெட்டு பரப்பு உடைய கடத்தியின் வழியே பாயும் மின்னோட்டத்தின் அளவே, மின்னோட்ட அடர்த்தி எனப்படும்.
\(\therefore J=\frac{I}{A}\)
இங்கு I - மின்னோட்டம்
A - குறுக்கு வெட்டு பரப்பு
9.
q என்ற புள்ளி மின்துகளிலிருந்து r தொலைவில் உள்ள புள்ளி p யில் வைக்கப்படும் ஓரலகு மின்னூட்டம் கொண்ட மின்துகளினால் உணரப்படும் விசையே அப்புள்ளி p யில் உள்ள மின்புலத்தின் மதிப்பாகும்.
\(\vec{E}=\frac{\vec{F}}{q_0}=\frac{k q}{r^2} \hat{r}=\frac{1}{4 \pi \varepsilon_0} \frac{q}{r^2} \hat{r}\)
இங்கு \( \hat{r}\) என்பது q விலிருந்து நாம் எடுத்துக்கொண்ட புள்ளி p க்கு வரையப்படும் ஓரலகு வெக்டராகும்.
10.

(a) \(C_{1}=\frac{\varepsilon_{0} A}{2d} (\because area=\frac{A}{2})\)
\(C_{2}=\frac{\varepsilon_{r} \varepsilon_{0} A}{d} \)
\(C_{P}=\left(C_{1}+C_{2}\right) \)
\(C_{P}=\frac{1}{2}\left(\frac{\varepsilon_{r} \varepsilon_{0} A}{d}+\frac{\varepsilon_{0} A}{d}\right) \)
\(=\frac{1}{2} \frac{\varepsilon_{0} A}{d}\left(\varepsilon_{r}+1\right) \)
\(C_{P}=\frac{\varepsilon_{0} A}{2 d}\left(\varepsilon_{r}+1\right) \)
.jpg)
(b) \(C_1=\frac{\varepsilon_0 \varepsilon_r A}{d / 2}=\frac{2 \varepsilon_0 \varepsilon_r A}{d}\)
\(C_2=\frac{2 \varepsilon_0 A}{d}\)
\(\frac{1}{C_1} =\frac{1}{C_1}+\frac{1}{C_2} \)
\(=\frac{d}{2 \varepsilon_0 \varepsilon_r A}+\frac{d}{2 \varepsilon_0 A} \)
\(=\frac{d}{2 \varepsilon_0 A}\left(\frac{1}{\varepsilon_r}+1\right) \)
\(\frac{1}{C_1} =\frac{d}{2 \varepsilon_0 A}\left(\frac{1+\varepsilon_r}{\varepsilon_r}\right) \)
\(\therefore C_s =\frac{2 e_0 A}{d}\left(\frac{e_r}{1+e_r}\right)\)
11.
1. வரிச்சுருள் என்பது ஒரு நீளமான உருளையான சுருள் அநேக எண்ணிக்கை கொண்டது.
2. n ➝ ஓரலகு நீளத்திற்கான சுற்றுகளின் எண்ணிக்கை
3. R ➝ வரிச்சுருளின் ஆரம்
4. O புள்ளியிலிருந்து x தொலைவில் உள்ள dl என்னும் சிறு கூறு உள்ளது, மற்றும் P புள்ளியிலிருந்து r தொலைவில் உள்ளது.
\(r=\sqrt { { R }^{ 2 }+{ ({ x }_{ 0 }-x) }^{ 2 } } \)
5. மின்னோட்டம் பாயும் வட்டவடிவக் கம்பிச்சுருளின் அச்சு வழியே ஏற்படும் காந்தப்புலம்.
\(dB=\frac { { \mu }_{ o }{ IR }^{ 2 } }{ 2{ r }^{ 2 } } \times N\)
N=ndx
\(dB=\frac { { \mu }_{ o }n{ IR }^{ 2 }dx }{ 2{ r }^{ 3 } } \)
\(sin\theta =\frac { R }{ r } \)
\(r=Rcosec\theta \)
\(tan\theta =\frac { R }{ { x }_{ 0 }-x } \)
\({ x }_{ 0 }-x=R\quad cot\quad \theta \)
\(\frac { dx }{ d\theta } =Rcos\quad { ec }^{ 2 }\theta \)
\(dx=Rcos\quad { ec }^{ 2 }\theta d\theta \)
\(dB=\frac { { \mu }_{ 0 }nI{ R }^{ 2 }Rcos\quad { ec }^{ 2 }\theta d\theta }{ 2{ R }^{ 3 }cos\quad { ec }^{ 3 }\theta } \)
\(dB=\frac { { \mu }_{ 0 }nI }{ 2 } \int _{ { \theta }_{ 1 } }^{ { \theta }_{ 2 } }{ sin\theta d\theta } \)
\(=\frac { { \mu }_{ 0 }nI }{ 2 } { [-cos\theta ] }_{ { \theta }_{ 1 } }^{ { \theta }_{ 2 } }\)
\(B=\frac { { \mu }_{ 0 }nI }{ 2 } [{ cos\theta }_{ 1 }-{ cos\theta }_{ 2 }]\)
12.
சிக்கலான மின்சுற்றுகளில் மின்னோட்டம் மற்றும் மின்னழுத்த வேறுபாட்டை கணக்கிட கிர்க்காஃப் விதிகள் பயன்படுத்தப்படுகின்றன. அவை,
(i) கிர்க்காஃப் மின்னோட்ட விதி
(ii) கிர்க்காஃப் மின்னழுத்த வேறுபாட்டு விதி ஆகும்.
கிர்க்காஃப் முதல் விதி [மின்னோட்ட விதி அல்லது சந்தி விதி]
எந்த ஒரு சந்தியிலும் சந்திக்கின்ற மின்னோட்டங்களின் குறியியல் கூட்டுத்தொகை (Algebraic Sum) சுழியாகும். இது மின்துகள்களில் உள்ள மின்னூட்டங்களின் அழிவின்மை விதியின் அடிப்படையில் அமைகிறது. சந்திகளில் மின்துகள்கள் உருவாக்கப்படுவதோ அழிவதோ இல்லை. அதாவது சந்தியில் நுழையும் மின்துகள்கள் அனைத்தும் சந்தியை விட்டு வெளியேறும். கிர்க்காஃப் முதல் விதியைப் பயன்படுத்தும் போது சந்தியை நோக்கிச் செல்லும் மின்னோட்டம் நேர்க்குறி எனவும் சந்தியை விட்டு வெளியேறும் மின்னோட்டம் எதிர்க்குறி எனவும் எடுத்துக்கொள்ளப்படும்.
A சந்திக்கு இவ்விதியை பயன்படுத்த,
I1 + I2 - I3 - I4 - I5 = 0 (அல்லது)
I1 + I2 = I3 + I4 + I5
கிர்க்காஃப் இரண்டாவது விதி [மின்னழுத்த வேறுபாட்டு விதி அல்லது சுற்று விதி]
இவ்விதியின்படி எந்தவொரு மூடிய சுற்றின் ஒவ்வொரு பகுதியிலும் உள்ள மின்னோட்டம் மற்றும் மின்தடை ஆகியவற்றின் பெருக்கற்பலன்களின் குறியியல் கூட்டுத் தொகையானது, அந்த மின்சுற்றில் உள்ள மின்னியக்கு விசைகளின் குறியியல் கூட்டுத்தொகைக்குச் சமம். இந்த விதி தனித்த அமைப்பின் ஆற்றல் மாறா விதிப்படி அமைகிறது. அதாவது மின்னியக்கு விசை மூலம் அளிக்கும் ஆற்றலானது எல்லா மின்தடையாக்கிகள் பெறும் ஆற்றல்களின் கூடுதலுக்குச் சமமாகும். மூடிய சுற்றில் (Closed loop) நாம் செல்லும் திசைவழியே மின்னோட்டம் சென்றால், அம்மின்னோட்டம் மற்றும் அப்பாதையில் உள்ள மின்தடை ஆகியவற்றின் பெருக்கற்பலனின் மதிப்பு நேர்க்குறியாகவும், மூடிய சுற்றில் நாம் செல்லும் திசைக்கு எதிர்த்திசையில் மின்னோட்டம் சென்றால், அம்மின்னோட்டம் மற்றும் அப்பாதையில் உள்ள மின்தடை ஆகியவற்றின் பெருக்கற்பலன் மதிப்பு எதிர்க்குறி மதிப்பாகவும் எடுத்துக்கொள்ளப்படும். இது படம் (அ) மற்றும் (ஆ) இல் காட்டப்பட்டுள்ளது. அதேபோல் மூடிய சுற்றில் நாம் செல்லும் திசையின் வழியே மின்கலத்தின் எதிர்மின் முனையிலிருந்து நேர்மின் முனை வழியாக நாம் செல்லும் போது மின்னியக்கு விசை நேர்க்குறியாகவும் அதேபோல் மின்கலத்தின் நேர் மின் முனையிலிருந்து எதிர்மின் முனை வழியாகச் செல்லும் போது மின்னியக்கு விசை எதிர்க்குறியாகவும் எடுத்துக் கொள்ளப்படுகிறது.
கிர்க்காஃப் மின்னழுத்த வேறுபாட்டு விதியை பயன்படுத்தும்போது சுற்றில் உள்ள அனைத்து மின்னோட்டங்களும் நிலையான மதிப்பை பெற வேண்டும் எனும் நிபந்தனை பின்பற்றப்படவேண்டும்.
13.
(i) ஆதிப்புள்ளியில் நிலையாக வைக்கப்பட்டுள்ள q மின்னூட்ட மதிப்பு கொண்ட நேர் மின்துகள் ஒன்றைக் கருதவும். புள்ளி P அதிலிருந்து r தொலைவில் உள்ளது.
\(V=\int _{ \infty }^{ r }{ (\vec { -E) } .\vec { dr } } =-\int _{ \infty }^{ r }{ \vec { E } .\vec { dr } } \)
(ii) புள்ளி நேர் மின்துகள் q வினால் உருவாகும் மின்புலம்
\(\vec { { E } } =-\frac { 1 }{ 4\pi { \varepsilon }_{ o } } \frac { q }{ { r }^{ 2 } } \hat { r } \)
(iii) \(\vec { { E } } =\frac { -1 }{ 4\pi { \varepsilon }_{ o } } \int _{ \infty }^{ r }{ \frac { q }{ { r }^{ 2 } } } \hat { r } .\vec { dr } \)
(iv) மீச்சிறு இடப்பெயர்ச்சி வெக்டர் \(d\vec { r } =dr \hat { r } \) மற்றும் \(\hat { r } .\hat { r } =1\) எனவே
(iv) \(V=\frac { -1 }{ 4\pi { \varepsilon }_{ o } } \int _{ \infty }^{ r }{ \frac { q }{ { r }^{ 2 } } } \hat { r } .dr\hat { r } =-\frac { 1 }{ 4\pi { \varepsilon }_{ o } } \int _{ \infty }^{ r }{ \frac { q }{ { r }^{ 2 } } } dr\)
தொகையிடலுக்குப் பின்
\(V=\frac { 1 }{ 4\pi { \varepsilon }_{ o } } q{ \left\{ -\frac { 1 }{ r } \right\} }_{ \infty }^{ r }=\frac { 1 }{ 4\pi { \varepsilon }_{ o } } \frac { q }{ r } \)
ஆகவே, புள்ளி மின்துகளினால் r தொலைவில் ஏற்படும் மின்னழுத்தம்
V = \(\frac { 1 }{ 4\pi { \varepsilon }_{ o } } \frac { q }{ r } \)
14.
(a)
சுழி
15.
\(\text {emf } ε =8 \mathrm{~V} \)
\(d I=I_1-I_0=2-(-2)=4 \mathrm{~A} \)
\(\text {dt }=0.05 \mathrm{~s} \)
\(L=\frac{-ε}{d I / d t}=\frac{-8}{4 / 0.05} \)
\(=\frac{-8 \times 0.05}{4}=\frac{-0.40}{4} \)
=-0.1 H
16.
ஆற்றல் அடர்த்தி uE = U/பருமன்
A' = 2A d ' = 2d எனில்
பருமன் V ' = 2A x 2d = 4Ad = 4V
பருமன் அதிகரிக்கும், எனவே ஆற்றல் அடர்த்தி மாறும்.
17.
λ = \(\frac{c}{f}=\frac{3 \times10^8}{300 \times 10^6}=1 m\)
18.
சீரான மின்னூட்டம் பெற்ற முடிவிலா சமதளம்
19.
\(\vec { B } =\frac { \beta }{ \sqrt { 3 } } =(\hat { i } +\hat { j } +\hat { k } )T\)
லாரன்ஸ் விசை , \(\vec{F}=q (\hat{v }\times\vec B\)
\(\vec { B } =\frac { \beta }{ \sqrt { 3 } } \hat { j }\)
\(F_ m =\sqrt { \frac { 2 }{ { 3 } } } \beta Il\)
20.
I = 0.2 A, R = 10 Ω, E = 2.1 V
\(I=\frac{ɛ}{R+r}\)
\(0.2=\frac{2.1}{10+r}\)
0.2 x (10 + r) = 2.1
2 + 0.2 r = 2.1
0.2 r = 2.1 - 2 = 0.1
அகமின்தடை, \(r=\frac{0.1}{0.2}=\frac{1}{2}\)
r = 0.5 Ω
21.
மொத்த திறன் = 15 x 40 + 5 x 100 + 5 x 80 + 1000
= 600 + 500 + 400 + 1000
= 2500 W
P = VI, V = 220 V
\(I=\frac{P}{V}=\frac{2500}{220}=11.363 \ A\)
≃ 12 A
22.
மஞ்சள் - 4
ஊதா - 7
ஆரஞ்சு - 103
வெள்ளி - மாறுபடும் அளவு - 10%
23.
( )
ஆற்றல் அழிவின்மை
24.
( )
Q காரணி
25.
( )
4 x 10-7 m முதல் 7 x 10-7 வரை
26.
( )
குறுக்கலைகள்
27.
( )
படிக அமைப்பு
28.
( )
0n1 + 92U235 ⟶ 56Ba144 + 36Kr89 + 30n1
29.
( )
ஸ்கேலர்
30.
( )
3000o C
31.
( )
பிளெமிங்கின் இடது கை விதி
32.
( )
அலுமினியம்
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards