12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 03/10/2019
நிலைமின்னியல்
12ஆம் வகுப்பு Physics / இயற்பியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Physics / இயற்பியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Physics Test1.
பக்க இணைப்பில் மின்தேக்கிகள் பற்றி விவரி
2.
மின்தேக்கியின் பயன்களை விவரி
3.
மின்காப்பு பெற்ற மின்தேக்கியின் உள்ளே தூண்டப்படும் நிகழ்வை விவரி
4.
பாரடே கூண்டு ஆய்வு விவரி
5.
கடத்தியின் உட்புறத்திலிருக்கும் அனைத்து புள்ளிகளிலும் மின்புலம் சுழியாகும். இக்கூற்று திண்மக் கடத்தி மற்றும் உள்ளீடற்ற கூடு வகைக் கடத்தி இரண்டிற்கும் பொருந்தும். மெய்ப்பிக்கவும்
6.
3 x 104 NC-1 வலிமை கொண்ட சீரான மின்புலத்தில் HCl வாயு மூலக்கூறுகள் வைக்கப்படுகிறது. HCl மூலக்கூறின் மின் இருமுனை திருப்புத்திறன் 3.4 x 10-30 Cm எனில் ஒரு HCl மூலக்கூறின் மீது செயல்படும் பெரும திருப்பு விசையைக் கணக்கிடுக.
7.
ஆரம் 1m கொண்ட வட்டத்திலுள்ள நான்கு புள்ளிகளில் நான்கு சமமான மின்னூட்டம் கொண்ட மின்துகள்கள் q1, q2 ,q3 மற்றும் q4 = q = +1 μC வைக்கப்பட்டுள்ளன. மின்துகள் q1 ன் மீது மற்ற அனைத்து மின்துகள்களாலும் செலுத்தப்படும் மொத்த விசையைக் கணக்கிடுக.

8.
வான்டி கிராப் இயற்றியின் அமைப்பு மற்றும் வேலை செய்யும் விதத்தை விரிவாக விளக்கவும்.
9.
தொடரிணைப்பு மற்றும் பக்க இணைப்பில் மின்தேக்கிகள் இணைக்கப்படும்போது விளையும் தொகுபயன் மின்தேக்குத் திறனுக்கான சமன்பாடுகளைப் பெறுக.
10.
புள்ளி மின்துகள் ஒன்றினால் ஏற்படும் நிலை மின்னழுத்தத்திற்கான கோவையைத் தருவிக்க.
1.
(i) மூன்று மின்தேக்கிகள் பக்க இணைப்பில் உள்ளன
(ii) C1, C2, C3 அவற்றின் மின்தேக்குத்திறன்
(iii) q1, q2, q3 அவற்றின் மின்னழுத்த வேறுபாடு
q=q1 + q2 + q3
CpV = C1V + C2V + C3V
Cp = C1 +C2 +C3
பல மின்தேக்கிகள் பக்க இணைப்பில் உள்ளபோது, அவற்றின் மொத்த மதிப்பு தனிப்பெற்ற மின்தேக்கியின் தேக்குத்திறன் மதிப்பின் கூடுதலுக்குச் சமம்
Cp = nc
2.
(i) புகைப்படம் எடுக்கும்போது அதிலிருந்து தெறிப்பொளி (flash) வெளிப்படுவதற்கு தெறிப்பு மின்தேக்கி எனப்படும். ஒரு வகை மின்தேக்கியிலிருந்து வெளிவிடப்படும் ஆற்றலே காரணமாகும்
(ii) இதய நிறுத்தம் (cardiac arrest) ஏற்படும் போது, இதய உதறல் நீக்கி (heart defibrillator) என்ற ஒரு கருவியைப் பயன்படுத்தி திடீரென அதிகளவிலான மின்னாற்றலை நோயாளியின் நெஞ்சுப்பகுதியில் செலுத்துவதன் மூலம் இதயத்துடிப்பை இயல்புக்குக் கொண்டு வருவார்கள்.
(iii) தானியங்கி எந்திரங்களின், எரிபொருள் உருவாவதை அமைப்புகளில், தீப்பொறி உருவாவதை தவிர்க்க மின்தேக்கிகள் பயன்படுகின்றன
(iv) மின் வழங்கிகளில் (Power supplies) மின்திறன் ஏற்ற இறக்கத்தைக் குறைப்பதற்கும் மின்திறன் அனுப்பீட்டில் அதன் பயனுறு திறனை அதிகரிக்கச் செய்யவும் மின்தேக்கிகள் பயன்படுகின்றன
3.
(i) கடத்தியொன்றைப் புற மின்புலத்தில் வைக்கும்போது, அதிலுள்ள மின்துகள்கள் ஒருங்கமைக்கப்பட்டு அதனால் உருவாகும் அகமின்புலமானது புற மின்புலத்தை சமன் செய்யும்.
(ii) ஆனால் மின்காப்பைப் பொறுத்தவரை, அதில் கட்டுறா எலக்ட்ரான்கள் இல்லாததால், புற மின்புலமானது அதிலுள்ள மின்துகளை ஒருங்கமைக்கச் செய்தாலும் அதனாலுருவாகும் அக மின்புலம் புறமின்புலத்தை விடக் குறைவாக இருக்கும்
(iii) எனவே, மின்காப்பின் உட்புறம் நிகர மின்புலம் சுழியாவதில்லை. மேலும் புற மின்புலத்தின் திசையிலேயே நிகர மின்புலம் இருக்கிறது
(iv) எதிரெதிர் மின்னூட்ட பெற்ற இரு தட்டுகளுக்கிடையே செவ்வக வடிவ மின்காப்பு பாளம் வைக்கப்படுகிறது
(v) தட்டுகளுக்கிடையே நிலவும் சீரான மின்புலம் மின்காப்பிற்கு ஒரு புறமின்புலமாக செயல்பட்டு அதனை முனைவாக்கம் செய்கிறது
(vi) அதன் ஒரு பக்கத்தில் நேர் மின்துகள்களும் மற்றொரு பக்கம் எதிர்மின்துகள்களும் தூண்டப்படுகின்றன.
(vii) ஆனால் மின்காப்பின் உட்புறத்திலோ ஒரு சிறு பருமனில் கூட நிகர மின்னூட்டம் சுழியாக இருக்கிறது. +σb மற்றும் -σb கொண்ட எதிரெதிர் மின்னூட்டம் பெற்ற இரு தட்டுகளுக்கு ஒப்பாகும்
(viii) இம்மின்துகள்கள் கட்டுண்ட மின்துகள்கள் எனப்படும்.
(x) இவை கடத்திகளிலுள்ள கட்டுறா எலக்ட்ரான்களைப் போல இவை தடையற்ற இயக்கத்தைப் பெற முடியாது
4.
உலோகத்தண்டுகளால் செய்யப்பட்ட கூண்டு அமைக்கப்பட்டுள்ளது
(i) வெளியே உருவாக்கப்படும் செயற்கை மின்னலால் தாக்கப்படும் போதும் கூண்டிற்குள் உள்ள மனிதர் எந்த பாதிப்புக்கும் உள்ளாவதில்லை
(ii) கடத்தி ஒன்றின் உட்புறமுள்ள குழிவுப்பகுதி (cavity) ஒன்றைக் கருதுவோம்
(iii) கடத்தியின் புறப்பரப்பிலுள்ள மின்துகள்கள் எதுவாக இருந்தாலும் கடத்திக்கு வெளியே ஏற்படும் மின்னியல் மாறுபாடுகள் எதுவாயினும் அக்குழிவுப் பகுதியின் உட்புறம் மின்புலம் சுழியாகவே இருக்கும்
(iv) புறத்தே ஏற்படும் மின்னியல் மாறுபாடுகளிலிருந்து நுட்பமான மின் கருவி ஒன்றைப் பாதுகாக்க வேண்டுமெனில் இத்தகைய குழிவுப் பகுதிக்குள் வைக்க வேண்டும். இதையே நிலைமின் தடுப்புரை என்பர்
(v) உலோகத்தண்டு நிலைமின் தடுப்புரையாக செயல்படுகிறது
(vi) உட்புறத்தில் மின்புல மதிப்பு சுழியாகும்
(vii) மின்துகள் தண்டு வழியே தரைக்கு சென்று கூண்டின் உள்ளே மனிதரை பாதிக்காத வண்ணம் செயல்படும்
5.
(i) இது ஆய்வின் அடிப்படையில் நாம் கண்டறிந்த உண்மை. ஒரு வேளை கடத்தியின் உட்புறத்தில் மின்புலம் சுழியல்ல என்றால் அங்கேயுள்ள கட்டுறா எலக்ட்ரான்கள் மீது விசை செயல்பட வேண்டும்
(ii) இதன் விளைவாக, அவை (கட்டுறா எலக்ட்ரான்கள் அல்லது இயங்கு மின்துகள்) ஒரு குறிப்பிட்ட திசையை நோக்கி நகர இயக்கத்தைப் பெறும்
(iii) இது நிலைமின் சமநிலையிலுள்ள கடத்திகள் தன்மைக்கு மாறானதொரு நிலையாகும். எனவே, கடத்தியின் உட்புறத்தில் அனைத்து புள்ளிகளிலும் மின்புலம் சுழியாகவே இருக்க வேண்டும். புற மின்புலத்தை செயல்படுத்தும் முன் கடத்தியிலுள்ள கட்டுறா எலக்ட்ரான்கள், கடத்தி முழுவதிலும் சீராகப் பரவியிருக்கும்.
(iv) மின்புலத்தை செயல்படுத்தும் போது, இடக்கைப் பக்கம் அவை முடுக்கப்படுவதால் இடது பக்கத் தகடு எதிர் மின்னூட்டமும் வலது பக்கத் தகடு நேர் மின்னூட்டமும் பெறுகின்றன. கட்டுறா எலக்ட்ரான்கள் இவ்வாறு மீளமைவதால் (realign) கடத்தியின் உட்புறம் அக மின்புலம் உருவாகின்றது.
(v) புற மின்புலத்தை சமன்செய்யும் வரை இது அதிகரிக்கின்றது. புற மின்புலம் சமன்செய்யப்பட்ட பின்பு கடத்தி நிலைமின் சமநிலையிலுள்ளதாகக் கருதப்படுகிறது
(vi) இச்சமநிலையை அடைய ஒரு கடத்தி எடுத்துக்கொள்ளும் நேரம் ஏறக்குறைய 10-16 S. எனவே இதை ஓர் உடனடி நிகழ்வாகவே கருதலாம்.
6.
புற மின்புலத்திற்குக் செங்குத்தாக உள்ள நிலையில் இருமுனையின் மீது பெரும திருப்பு விசை செயல்படும்.
\(\tau _{ max }=pE \sin 90^{ o}=3.4\times { 10 }^{ -30 }\times 3\times { 10 }^{ 4 }\)
\(\tau _{ max }=10.2\times { 10 }^{ -26 }Nm\)
7.
மேற்பொருந்துதல் தத்துவத்தின்படி q1 ன் மீது செலுத்தப்படும் மொத்த நிலைமின் விசையானது மற்ற மின்துகள்களால் அதன்மீது செலுத்தப்படும் தனித்தனி விசைகளின் வெக்டர் கூடுதலுக்குச் சமம்.
\({ \vec { F } }_{ 1 }^{ tot }={ \vec { F } }_{ 12 }+{ \vec { F } }_{ 13 }+{ \vec { F } }_{ 14 }\)
q1 ன் மீது செயல்படும் விசை ஒவ்வொன்றின் திசையும் பின்வரும் படத்தில் காட்டப்பட்டுள்ளது.
q2 மற்றும் q4 ஆகிய மின்துகள் q1 லிருந்து சம தொலைவில் உள்ளன. எனவே, திசையினால் வேறுபட்டாலும் \({ \vec { F } }_{ 12 }\) மற்றும் \({ \vec { F } }_{ 14 }\) விசைகளின் எண்மதிப்பு சமமாகும். இதனால் தான் அவற்றைக் குறிப்பிடப் பயன்படுத்திய வெக்டர்கள் சமநீளமுடன் வரையப்பட்டுள்ளன. ஆனால் q2 மற்றும் q4 ஆகியவற்றைக் காட்டிலும் அதிக தொலைவில் மின்துகள் q3 உள்ளது. தொலைவு கூடினால் நிலைமின் விசையின் வலிமை குறையும். ஆதலால். விசைகள் \({ \vec { F } }_{ 12 }\) மற்றும் \({ \vec { F } }_{ 14 }\) ஆகியவற்றை விட \({ \vec { F } }_{ 13 }\) ன் எண்மதிப்பு குறைவு. இதனால் தான் விசைகள் \({ \vec { F } }_{ 12 }\) மற்றும் \({ \vec { F } }_{ 14 }\) ஆகியவற்றின் நீளத்தை விட விசை \({ \vec { F } }_{ 13 }\) ன் நீளம் குறைவாக வரையப்பட்டுள்ளது.
படத்திலிருந்து \({ r }_{ 21 }=\sqrt { 2 } m={ { r }_{ 41 } }\) மற்றும் \({ r }_{ 31 }=2m\)
விசைகளின் எண்மதிப்பு
\({ F }_{ 13 }=\cfrac { { kq }^{ 2 } }{ { r }_{ 31 }^{ 2 } } =\cfrac { 9\times { 10 }^{ 9 }\times { 10 }^{ -12 } }{ 4 } \)
F13 = 2.25 x 10-3 N
\({ F }_{ 13 }=\cfrac { { kq }^{ 2 } }{ { r }_{ 31 }^{ 2 } } ={ F }_{ 14 }=\cfrac { 9\times { 10 }^{ 9 }\times { 10 }^{ -12 } }{ 4 } \)
= 4.5 x 10-3 N
படத்திலிருந்து,\(\theta ={ 45 }^{ 0 }\) இந்த விசைகள் அவற்றின் வெக்டர் கூறுகளைக் கொண்டு பின்வருமாறு எழுதப்படுகிறது.
\({ \vec { F } }_{ 12 }={ F }_{ 12 }\cos\theta \hat { i } -{ F }_{ 12 }\sin\theta \hat { j } \)
= \(4.5\times 10^{ -3 }\times \cfrac { 1 }{ \sqrt { 2 } } \hat { i } -4.5\times { 10 }^{ -3 }\times \cfrac { 1 }{ \sqrt { 2 } } \hat { j } \)
\({ \vec { F } }_{ 13 }= { \vec { F } }_{ 13 } \hat { i } = 2.25×10^{−3} N \hat { i } \)
\({ \vec { F } }_{ 14 }={ F }_{ 14 }\cos\theta \hat { i } +{ F }_{ 14 }\sin\theta \hat { j } \)
\(=4.5\times 10^{ -3 }\times \cfrac { 1 }{ \sqrt { 2 } } \hat { i } -4.5\times { 10 }^{ -3 }\times \cfrac { 1 }{ \sqrt { 2 } } \hat { j } \)
எனவே q1 ன் மீது செயல்படும் மொத்தவிசை
\({ \vec { F } }_{ 1 }^{ tot }=\left( { F }_{ 12 }\cos\theta -{ F }_{ 12 }\sin\theta \hat { j } \right) +{ F }_{ 13 }\hat { i } +\left( { { F }_{ 14 }\cos\theta \hat { i } +{ F }_{ 14 }\sin\theta \hat { j } } \right)\)
\({ \vec { F } }_{ 1 }^{ tot }=\left( { F }_{ 12 }\cos\theta +{ F }_{ 13 }+{ F }_{ 14 }\cos\theta \right) \hat { i } +\left( -{ F }_{ 12 }\sin\theta +{ F }_{ 14 }\sin \theta \right) \hat { j } \)
F12 = F14, ஆதலால், \(\hat { j } \) திசைக்கூறு சுழியாகும் எனவே,
\({ \vec { F } }_{ 1 }^{ tot }=\left( { F }_{ 12 }\cos\theta +{ F }_{ 13 }+{ F }_{ 14 }\cos\theta \right) \hat { i } \)
இச்சமன்பாட்டில் மதிப்புகளைப் பிரதியிட,
= \(\left( \cfrac { 45 }{ \sqrt { 2 } } +2.25+\cfrac { 4.5 }{ \sqrt { 2 } } \right)\times { 10 }^{ -3 } \hat { i } =\left( 4.5\sqrt { 2 } +2.25 \right)\times { 10 }^{ -3 } \hat { i } \)
\({ \vec { F } }_{ 1 }^{ tot }=8.61\times { 10 }^{ -3 }N\hat { i } \)
தொகுபயன் விசையானது நேரக்குறி x-அச்சு திசையில் அமைகிறது.
8.
(i) 1929 ஆம் ஆண்டில் ராபர்ட் வான் டி கிராப் என்பவர் பல மில்லியன் வோல்ட் (107v) அளவிலான மின்னழுத்த வேறுபாட்டை உருவாக்கும் எந்திரம் ஒன்றை வடிவமைத்தார்.
தத்துவம்: நிலைமின் தூண்டல் மற்றும் கூர்முனை.
அமைப்பு:
(i) மின்காப்பு பெற்ற தாங்கியின் மீது ஒரு பெரிய உள்ளீடற்ற மின்கடத்து கோளம் பொருத்தப்பட்டுள்ளது.
(ii) கோளத்தின் நடுவில் 'B' என்ற கம்பியும் தாங்கியின் அடிப்பகுதியில் C என்ற கம்பியும் பொருத்தப்பட்டுள்ளது.
(iii) பட்டுத் துணியால் ஆன பட்டை கம்பியின் வழியே செல்கிறது.
(iv) கம்பி C மின்மோட்டார் மூலம் தொடர்ந்து இயக்கப்படுகிறது.
(v) கம்பிகளுக்கு அருகில் D மற்றும் E ஆகிய இரு சீப்பு வடிவ கடத்தி இணைக்கப்பட்டுள்ளன.
செயல்பாடு:
(i) சீப்பு D அருகில் உள்ள காற்று உயர் மின்னழுத்தம் காரணமாக அயனியாக்கப்படுகிறது.
(ii) நேர் மின்துகள்கள் சீப்பு D ஐ நோக்கியும் நகர்கின்றன.
(iii) நிலைமின் தூண்டலை சீப்பு E எதிர்மின்னூட்டத்தையும், கோளம் நேர் மின்னூட்டத்தையும் பெறுகின்றன.
(iv) அதே சமயம், கூர்முனை செயல்பாட்டால் பட்டையிலுள்ள எதிர்மின்னூட்டம் காற்றிலுள்ள எதிர் துகள்களால் சமன் செய்யப்படுகின்றன.
(v) பட்டை கீழிறங்கும் போது மின்னூட்டமற்ற தன்மையை அடைகிறது.
(vi) மின்துகள்கள் ஏற்கப்படாத நிலை வரை கோளம் முழுவதும் மின்துகள் பரவும்.
(vii) மின்துகள் கசியாமலிருக்க உயர் அழுத்தத்தில் வாயு நிரப்பப்பட்ட எஃகு கலத்தில் கோளத்தினை மூட வேண்டும்.
பயன்கள்:
(i) உயர் மின்னழுத்த வேறுபாடு அணுக்கரு பிளவை ஏற்படுத்த நேர்மின் அயனியை முடுக்கிவிக்க பயன்படுகிறது.
9.
(i) மின்னழுத்த வேறுபாடு V கொண்ட மின்கலனுடன் மூன்று மின்தேக்கிகள் தொடரிணைப்பில் உள்ளன. அவற்றின் மின்தேக்குத்திறன்கள் C1, C2 மற்றும் C3 மின்கலனின் மின்னிணைப்பு கொடுக்கப்பட்டவுடன் C3 மின்தேக்கியின் வலதுபக்கத் தட்டை நோக்கி -Q மின்னூட்ட அளவுடைய எலக்ட்ரான்கள் எதிர்மின் வாயிலிருந்து இடம்பெயர்கின்றன.
(ii) இந்நிகழ்வுகளால் ஒவ்வொரு மின்தேக்கியிலும் சம அளவு மின்னூட்டம் Q கொண்ட மின்துகள்கள் சேமிக்கப்படுகிறது. மின்தேக்கிகளின் மின்தேக்குத்திறன் வெவ்வேறாக இருப்பதால் அவை ஒவ்வொன்றின் குறுக்கே நிலவும் மின்னழுத்த வேறுபாடும் வெவ்வேறாக இருக்கும். அவை முறையே V1, V2 மற்றும் V3 ஆகும்.
மின்தேக்கிகளின் குறுக்கே காணப்படும் மொத்த மின்னழுத்த வேறுபாடு மின்கலனின் மின்னழுத்த வேறுபாட்டுக்குச் சமமாக இருக்க வேண்டும்.
V = V1 + V2 + V3
Q = CV, ஆதலால் \(V=\frac { Q }{ { C }_{ 1 } } +\frac { Q }{ { C }_{ 2 } } +\frac { Q }{ { C }_{ 3 } } \)
\(V=Q\left( \frac { 1 }{ { C }_{ 1 } } +\frac { 1 }{ { C }_{ 2 } } +\frac { 1 }{ { C }_{ 3 } } \right) \) ...(1)
(iii) தொடரிணைப்பிலுள்ள மூன்று மின்தேக்கிகளும் ஒரு தனித்த மின்தேக்கியை உருவாக்குவதற்காக கொண்டால்
\(V=\frac { Q }{ { C }_{ s } } \) சமன்பாடு (1) இல் பிரதியிட
\(\frac { Q }{ { C }_{ s } } =Q\left( \frac { 1 }{ { C }_{ 1 } } +\frac { 1 }{ { C }_{ 2 } } +\frac { 1 }{ { C }_{ 3 } } \right) \) \(\frac { 1 }{ { C }_{ s } } =\frac { 1 }{ { C }_{ 1 } } +\frac { 1 }{ { C }_{ 2 } } +\frac { 1 }{ { C }_{ 3 } } \)
(iv) எனவே, மின்தேக்கிகள் தொடரிணைப்பில் உள்ளபோது தொகுபயன் மின்தேக்குத்திறன் Cs ன் தலைகீழ் மதிப்பானது ஒவ்வொரு மின்தேக்குத்திறனின் தலைகீழ் மதிப்புகளின் கூடுதலுக்குச் சமமாகும். தொகுபயன் மின்தேக்குத் திறனின் மதிப்பு Cs ஆனது தொடரிணைப்பிலுள்ள மின்தேக்குத் திறனை விட எப்போதும் குறைவாகவே இருக்கும்.
பக்க இணைப்பில் மின்தேக்கிகள்:
(i) மின்னழுத்த வேறுபாடு V கொண்ட மின்கலனுடன் மூன்று மின்தேக்கிகள் பக்க இணைப்பில் உள்ளன. அவற்றின் மின்தேக்குத்திறன்கள் C1, C2, C3
(ii) மின்தேக்கிகளின் ஒத்த பக்கங்கள் மின்கலனில் ஒரே நேர்முனை மற்றும் எதிர்மின் முனையுடன் இணைக்கப்பட்டு இருப்பதால், ஒவ்வொரு மின்தேக்கிக்கு குறுக்கே தோன்றும் மின்னழுத்த வேறுபாடு சமமாகவும் அது மின்கலனின் வேறுபாட்டிற்குச் சமமாகவும் இருக்கும்.
(iii) ஒவ்வொரு மின்தேக்கியின் மின்தேக்குத்திறனும் வெவ்வேறாக இருப்பதால் அவற்றில் சேமிக்கப்படும் மின்துகளின் அளவுகளும் வெவ்வேறாக இருக்கும். மின்தேக்கிகளின் சேமிக்கப்படும் மின்துகள் அளவுகள் முறையே Q1, Q2 மற்றும் Q3 என்க. மொத்த மின்னூட்ட மாறா விதியின் படி இம்மூன்று மின்துகள்களின் மின்னூட்டங்களின் கூடுதலானது மின்கலனிலிருந்து பெறப்பட்ட மின்துகளின் மின்னோட்டம் Q க்கு சமம் எனலாம்.
Q = Q1+ Q2 + Q3
Q = CV, என்பதால் Q = C1V+C2V+C3V
(iv) இம்மூன்று மின்தேக்கிகளும் ஒரு தனித்த மின்தேக்கியை உருவாக்குவதாகக் கொண்டால், அதில் தேக்கப்படும் மின்னூட்டம் Q = CpV எனலாம்.
CpV = C1V+C2V+C3V
Cp = C1+C2+C3
(v) மின்தேக்கிகள் பக்க இணைப்பில் உள்ளபோது அவற்றின் தொகுபயன் மின்தேக்குத்திறன் Cp யானது தனித்தனி மின்தேக்கிகளின் மின்தேக்குத்திறன்களின் கூடுதலுக்குச் சமம்.
(vi) தொகுபயன் மின்தேக்குத் திறனின் மதிப்பு பக்க இணைப்பிலுள்ள அதிகபட்ச தனித்த மின்தேக்குத்திறனை விட எப்போதும் அதிகமாகவே இருக்கும். பக்க இணைப்பிலுள்ள மின்தேக்கி ஒவ்வொன்றின் பரப்பளவையும் கூட்டும் போது கிடைக்கும் தொகுபயன் பரப்பளவு அதிகமாக உள்ளதால் அதன் தொகுபயன் மின்தேக்குத் திறனும் அதிகமாக உள்ளது.
10.
(i) ஆதிப்புள்ளியில் நிலையாக வைக்கப்பட்டுள்ள q மின்னூட்ட மதிப்பு கொண்ட நேர் மின்துகள் ஒன்றைக் கருதவும். புள்ளி P அதிலிருந்து r தொலைவில் உள்ளது.
\(V=\int _{ \infty }^{ r }{ (\vec { -E) } .\vec { dr } } =-\int _{ \infty }^{ r }{ \vec { E } .\vec { dr } } \)
(ii) புள்ளி நேர் மின்துகள் q வினால் உருவாகும் மின்புலம்
\(\vec { { E } } =-\frac { 1 }{ 4\pi { \varepsilon }_{ o } } \frac { q }{ { r }^{ 2 } } \hat { r } \)
(iii) \(\vec { { E } } =\frac { -1 }{ 4\pi { \varepsilon }_{ o } } \int _{ \infty }^{ r }{ \frac { q }{ { r }^{ 2 } } } \hat { r } .\vec { dr } \)
(iv) மீச்சிறு இடப்பெயர்ச்சி வெக்டர் \(d\vec { r } =dr \hat { r } \) மற்றும் \(\hat { r } .\hat { r } =1\) எனவே
(iv) \(V=\frac { -1 }{ 4\pi { \varepsilon }_{ o } } \int _{ \infty }^{ r }{ \frac { q }{ { r }^{ 2 } } } \hat { r } .dr\hat { r } =-\frac { 1 }{ 4\pi { \varepsilon }_{ o } } \int _{ \infty }^{ r }{ \frac { q }{ { r }^{ 2 } } } dr\)
தொகையிடலுக்குப் பின்
\(V=\frac { 1 }{ 4\pi { \varepsilon }_{ o } } q{ \left\{ -\frac { 1 }{ r } \right\} }_{ \infty }^{ r }=\frac { 1 }{ 4\pi { \varepsilon }_{ o } } \frac { q }{ r } \)
ஆகவே, புள்ளி மின்துகளினால் r தொலைவில் ஏற்படும் மின்னழுத்தம்
V = \(\frac { 1 }{ 4\pi { \varepsilon }_{ o } } \frac { q }{ r } \)
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards