12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 03/10/2019
காந்தவியல் மற்றும் மின்னோட்டத்தின் காந்த விளைவுகள்
12ஆம் வகுப்பு Physics / இயற்பியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Physics / இயற்பியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Physics Test1.
வரிச்சுருளின் வெளிப்பகுதியில் காந்தப்புலம் சுழியாகும் ஏன்?
2.
கால்வனோ மீட்டரின் மின்னோட்ட உணர்திறனை எவ்வாறு அதிகரிக்கலாம்?
3.
கால்வனோ மீட்டரின் மின்னோட்ட உணர்திறன் பற்றி வரையறு.
4.
கூலும் விதி மற்றும் பயோட் - சவர்ட் விதிகளுக்கிடையே வேறுபாடுகள்
5.
மேக்ஸ் வெல்லின் வலதுகை திருகு விதி தருக?
6.
தயக்க இழப்பு விவரி.
7.
புறகாந்தப்புலம் ஒன்றில் உள்ள காந்த இருமுனையைக்கருதுக. புறகாந்தப்புலம் செயல்படும்போது காந்த இருமுனை இரண்டு வழிகளில் மட்டுமே ஒருங்கமையும். அதாவது ஒன்று புறகாந்தப்புலத்தின் திசையில் (புறகாந்தப்புலத்திற்கு இணையாக) மற்றொன்று புறகாந்தப்புலத்தின் திசைக்கு எதிர்த்திசையில். இவ்விரண்டு நிகழ்வுகளிலும் தோன்றும் ஆற்றலைக் கணக்கிட்டு அதற்கான வரைபடங்களை வரைக.
8.
\(\vec { B } ={ \mu }_{ 0 }(\vec { H } +\vec { M } )\) என்ற தொடர்பை பயன்படுத்தி \({ x }_{ m }={ \mu }_{ r }-1\) எனக் காட்டுக.
9.
நிறை, காந்தத்திருப்புத்திறன் மற்றும் அடர்த்தி முறையே 200 g, 2 A m2, 8 g cm-3 கொண்ட சட்டகாந்தமொன்றின் காந்தமாகும் செறிவினைக் காண்க.
10.
சட்ட காந்தமொன்றின் அச்சுக்கோட்டில் ஏதேனும் ஒரு புள்ளியில் ஏற்படும் காந்தப்புலத்துக்கான கோவையைப் பெறுக
1.
1. வரிச்சுருளின் ஒவ்வொரு சுருளிலும் ஏற்படும் காந்தப்புலம் ஒருமைய வட்டங்களாக அமைந்து, சுருள்களுக்கிடைப்பட்ட பகுதியில் ஒன்றையொன்று இல்லாமல் செய்து விடும்.
2. சுருள் மையத்தில் வரிச்சுருளின் அச்சின் வழியே வலிமையான காந்தப்புலம் ஏற்படும்.
3. காந்தப்புலம் கீழ்ப்பகுதியில் உள்ள சுற்றுகளால் ஏற்படும் காந்தப்புலத்திற்கு எதிராக செயல்பட்டு அழியும். எனவே வரிச்சுருளின் வெளிப்பகுதியில் காந்தப்புலம் சுழியாகும்.
2.
i) பின்வருவனவற்றை அதிகரிப்பதன் மூலம் மின்னோட்ட உணர்திறனை அதிகரிக்கலாம்.
1. சுற்றுகளின் எண்ணிக்கை
2. காந்தப்புலம்
3. கம்பிச்சுருளின் பரப்பு
ii) கம்பிச் சுருளைத் தொங்கவிடப் பயன்படும் கம்பியின் ஓரலகு முறுக்கத்திற்கான இரட்டையைக் குறைப்பதன் மூலம் மின்னோட்ட உணர்திறனை அதிகரிக்கலாம்.
NiAB = kθ
⇒ θ/i = NAB/k
3.
1. கால்வனோ மீட்டர் வழியே பாயும் ஓரலகு மின்னோட்டத்திற்கு ஏற்படும் விலகலே அதன் மின்னோட்ட உணர்திறன் எனப்படும்.
2. கால்வனோ மீட்டர் குறைந்த மின்னோட்டத்தில் அதிக விலகலடையும்.
3. மின்னோட்ட உணர்திறன்
\(\frac { \theta }{ I } =\frac { NBA }{ K } \)
4.
| கூலும் விதி | பயோட் - சவர்ட் விதி |
| 1. ஸ்கேலார் மூலத்தினால் உருவாக்கப்படுகிறது. அதாவது q மின்னூட்டம் கொண்ட மின்துகள்களினால் ஏற்படுகிறது. | வெக்டர் மூலத்தினால் உருவாக்கப்படுகிறது. I \(\overrightarrow { dl } \) ஆல் ஏற்படுகிறது. |
| மூலத்தையும் மின்புலத்தைக் கணக்கிடும். புள்ளியையும் இணைக்கும் நிலை வெக்டரின் வழியே மின்புலத்தின் திசை அமையும். | நிலை வெக்டர் \(\overrightarrow { r } \) மற்றும் மின்னோட்டக் கூறு I \(\overrightarrow { dl } \)இவற்றுக்கு செங்குத்தாக காந்தப்புலத்தின் திசை அமையும். |
| கோணத்தைச் சார்ந்ததல்ல | நிலை வெக்டர் \(\overrightarrow { r } \) மற்றும் மின்னோட்டக் கூறு I \(\overrightarrow { dl } \)இவற்றுக்கு இடையே உள்ள கோணத்தைச் சார்ந்துள்ளது. |
5.
1. மின்னோட்டம் பாயும் திசையில் வலதுகை திருகு ஒன்றினை, திருகு இயக்கினால் முன்னோக்கி முடுக்கும் போது, திருகு சுழலும் திசை காந்தப்புலத்தின் திசையைக் கொடுக்கும்.
2. காந்தப்புலத்தின் திசையை அறிவதற்கு இவ்விதி பயன்படுகிறது.
6.
1. பொருளொன்றை காந்தமாக்கும் சுற்றின் போது வெப்ப வடிவில் ஆற்றல் இழக்கப்படும்.
2. இவ்வாற்றல் இழப்பிற்கு காரணம் பல்வேறு திசையில் மூலக்கூறுகளின் சுழற்சி மற்றும் ஒருங்கமைவாகும்.
3. ஒரு முழு சுற்றில் காந்தமாக்கப்படும் பொருளின் ஓரலகு பருமனுக்கான ஆற்றல் இழப்பு, தயக்கக் கண்ணியின் பரப்புக்குச் சமம். \(\Delta E=\oint { \overrightarrow { H } .\overrightarrow { dB } } \)
7.
சட்டகாந்தத்தின் இருமுனை திருப்புத்திறன் \(\vec { { p }_{ m } } \) என்க. புறகாந்தப்புலம் செயல்படாத நிலையில் எவ்வித ஒருங்கமைவும் ஏற்படாது. எனவே ஆற்றல் U = 0.
புறகாந்தப்புலம் செயல்பட்ட உடன், காந்த இருமுனை புறகாந்தப்புலத்தின் திசையில் (θ = 0˚) ஒருங்கமையும்போது அதன் ஆற்றல்
Uஇனை = Uசிறுமம் = -pm B cos 00
Uஇனை = -pm B
ஏனெனில் cos 00 = 1.அவ்வாறு இல்லையெனில், காந்த இருமுனை புறகாந்தப்புலத்தின் திசைக்கு எதிர்த்திசையில் (θ = 180°) ஒருங்கமையும்போது அதன் ஆற்றல்
Uஎதிர் -இனை = Uபெருமம் = -pm B cos 1800
⇒ Uஎதிர்-இனை = pm B
ஏனெனில் cos 180° = -1
8.
\(\vec { B } ={ \mu }_{ 0 }(\vec { H } +\vec { M } )\)
ஆனால் சமன்பாடு இன் வெக்டர் வடிவம்
\(\vec { M } = \varkappa _m \vec { H } \)
எனவே, \(\vec { B } ={ \mu }_{ 0 }({ \varkappa }_{ m }+1)\vec { H } \Rightarrow \vec { B } =\mu \vec { H } \)
இங்கு, \(\mu ={ \mu }_{ 0 }({ \varkappa }_{ m }+1){ \Rightarrow \varkappa }_{ m }+1\)\(=\frac { \mu }{ { \mu }_{ 0 } } { \mu }_{ r }\)
\({ x }_{ m }={ \mu }_{ r }-1\)
9.
சட்டகாந்தத்தின் அடர்த்தி பின்வருமாறு
பருமன் = \(\frac { 200\times { 10 }^{ -3 }kg }{ (8\times { 10 }^{ -3 }kg)\times { 10 }^{ 6 }{ m }^{ -3 } } \) = 25 x 10-6m2
காந்தத்திருப்புத்திறனின் எண்மதிப்பு pm = 2 Am2
காந்தமாகும் செறிவு, M = \(\frac { 2 }{ 25\times { 10 }^{ -6 } } \)
M = 0.8 x 105 Am-1
10.
NS என்ற சட்டகாந்தம் ஒன்றைக் கருதுக. இங்கு N மற்றும் S என்பவை சட்டகாந்தத்தின் வட மற்றும் தென் முனைகளைக் குறிக்கின்றன. அவற்றின் முனைவலிமை qm எனவும் அவற்றிற்கு இடையே உள்ள தொலைவு 2l எனவும் கொள்க. சட்டகாந்தத்தின் வடிவியல் மையம் O விலிருந்து r தொலைவில் அதன் அச்சுக்கோட்டில் அமைந்த C என்ற புள்ளியில் காந்தப்புலத்தைக் காண்பதற்கு, அப்புள்ளியில் ஓரலகு வடமுனையை (q\(m_{c}\) = 1 Am) வைக்க வேண்டும்.C புள்ளியில் உள்ள qm முனைவலிமை கொண்ட ஓரலகு வடமுனை உணரும் விசையை, காந்தவியலின் கூலூம் விதியைப் பயன்படுத்திக் கணக்கிடலாம்.
சட்டகாந்தத்தின் வடமுனைக்கும், C புள்ளியில் உள்ள ஓரலகு வடமுனைக்கும் இடையேயான விலக்கு விசை (வெற்றிடத்தில்)
\(\vec{F}_N=\frac{\mu_o}{4 \pi} \frac{q_m}{(r-l)^2} \hat{i}\) ....(1)
இங்கு r - l என்பது சட்டகாந்தத்தின் வடமுனை மற்றும் C புள்ளியில் உள்ள ஓரலகு வடமுனைக்கும் இடையே உள்ள தொலைவாகும்.
சட்டகாந்தத்தின் தென் முனைக்கும், C புள்ளியில் உள்ள ஓரலகு வடமுனைக்கும் இடையேயான ஈர்ப்பு விசை (வெற்றிடத்தில்)
\(\vec{F}_s=\frac{\mu_o}{4 \pi} \frac{q_m}{(r+l)^2} \hat{i}\) ....(2)
இங்கு r + l என்பது சட்டகாந்தத்தின் தென்முனை மற்றும் C புள்ளியில் உள்ள ஓரலகு வடமுனைக்கும் இடையே உள்ள தொலைவாகும்.
சமன்பாடுகள் (1) மற்றும் (2) லிருந்து, C புள்ளியில் தொகுபயன்விசை \(\vec{F}=\vec{F}_N+\vec{F}_s\). இத்தொகுபயன் விசை C புள்ளியில், காந்த இருமுனையால் ஏற்படும் காந்தப்புலத்திற்குச் சமமாகும் \(\overrightarrow{F}=\overrightarrow{B}\)
\(\begin{aligned} \vec{B} &=\frac{\mu_o}{4 \pi} \frac{q_m}{(r-l)^2} \hat{i}+\left(-\frac{\mu_o}{4 \pi} \frac{q_m}{(r+l)^2} \hat{i}\right) \\ \end{aligned}\)
\(\begin{aligned} \vec{B} &=\frac{\mu_o \cdot q_m}{4 \pi}\left(\frac{1}{(r-l)^2}-\frac{1}{(r+l)^2}\right) \hat{i} \\ \end{aligned}\)
\(\begin{aligned} \vec{B} &=\frac{\mu_o 2 r}{4 \pi}\left(\frac{q_m(2 l)}{\left(r^2-l^2\right)^2}\right) \hat{i} \end{aligned}\) ....(3)
காந்த இருமுனை திருப்புத்திறனின் எண்மதிப்பு |\(\overrightarrow{p_{m}}\)| = pm = qm 2l. எனவே C புள்ளியில் உள்ள காந்தப்புலத்தை (3) பின்வருமாறு எழுதலாம்.
\(\vec{B}_{\text {ria }}=\frac{\mu_o}{4 \pi}\left(\frac{2 r p_m}{\left(\mathrm{r}^2-l^2\right)^2}\right) \hat{i}\) ....(4)
சட்டகாந்தத்தின் வடிவ மையம் O மற்றும் C புள்ளிக்கு இடையே உள்ள தொலைவுடன் ஒப்பிடும்போது, காந்தமுனைகளுக்கு இடையே உள்ள தொலைவு சிறியது எனில் (சிறிய காந்தங்களுக்கு) அதாவது r >> l எனில்,
(rr l2)2 \(\approx \) r4 ....(5)
எனவே சமன்பாடு 5ஐ 4ல் பயன்படுத்தும்போது
\(\vec{B}_{\text {शं́ }}=\frac{\mu_o}{4 \pi}\left(\frac{2 p_m}{r^3}\right) \hat{i}=\frac{\mu_o}{4 \pi} \frac{2}{r^3} \vec{p}_m\)
இங்கு \(\vec{p}_m=p_m \hat{i}\)
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards