12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 10/10/2019
கூட்டாண்மை நிறுவனக் கணக்குகள் - அடிப்படைகள்
12ஆம் வகுப்பு Accountancy / கணக்குப்பதிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Accountancy / கணக்குப்பதிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Accountancy Test

1.
பின்வரும் தகவல்களிலிருந்து ரூபன் மற்றும் டெரி அவர்களின் முதல், நிலை முதல் எனக்கொண்டு, அவர்களின் முதல் கணக்குகளைத் தயாரிக்கவும்.
| விவரம் | ரூபன் ரூ. | டெரி ரூ. |
|---|---|---|
| 2018, ஏப்ரல் 1 அன்று முதல் | 70,000 | 50,000 |
| 2018, ஏப்ரல் 1 அன்று நடப்புக் கணக்கு (வ) | 25,000 | 15,000 |
| கூடுதல் முதல் கொண்டு வந்தது | 18,000 | 16,000 |
| 2018 – 2019 – ல் எடுப்புகள் | 10,000 | 6,000 |
| எடுப்புகள் மீது வட்டி | 500 | 300 |
| இலாபப் பங்கு (2018 – 2019) | 35,000 | 25,800 |
| முதல் மீது வட்டி | 3,500 | 2,500 |
| சம்பளம் | - | 18,000 |
| கழிவு | 12,000 | - |
2.
நிலைமுதல் முறைக்கும் மாறுபடும் முதல் முறைக்கும் இடையேயான வேறுபாடுகளைத் தரவும்.
3.
பின்வரும் தகவல்களிலிருந்து சாந்தி மற்றும் சுமதி என்ற கூட்டாளிகளின் முதல் கணக்குகளை அவர்களின் முதல், நிலை முதலாக இருக்கும் போது தயாரிக்கவும்.
| விவரம் | சாந்தி ரூ. | சுமதி ரூ. |
|---|---|---|
| 2018, ஜனவரி 1 அன்று முதல் | 1,00,000 | 80,000 |
| 2018, ஜனவரி 1 அன்று நடப்புக் கணக்கு (வ) | 5,000 | 3,000 |
| 2018, ஜூன் 1 கூடுதல் முதல் கொண்டு வந்தது | 10,000 | 20,000 |
| 2018 ஆம் ஆண்டில் எடுப்புகள் | 20,000 | 13,000 |
| எடுப்புகள் மீது வட்டி | 500 | 300 |
| 2018 – ல் இலாபப் பங்கு | 10,000 | 8,000 |
| முதல் மீது வட்டி | 6,300 | 5,400 |
| ஊதியம் | 9,000 | - |
| கழிவு | - | 1,200 |
4.
கெவின் மற்றும் பிரான்சிஸ் இருவரும் கூட்டாளிகள். கெவின் ஒவ்வொரு காலாண்டின் இறுதியிலும் ரூ.5,000 எடுத்துக் கொண்டார். எடுப்புகள் மீதான வட்டி ஆண்டுக்கு 6%. 2019, மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய எடுப்புகள் மீது வட்டி சராசரி கால முறையைப் பயன்படுத்தி கணக்கிடவும்.
5.
மணி என்ற கூட்டாளி 2018, செப்டம்பர் 1 அன்று ரூ.30,000 எடுத்துக்கொண்டார். எடுப்புகள் மீது வட்டி ஆண்டுக்கு 6% என கணக்கிடப்பட வேண்டும். 2018, டிசம்பர் 31 அன்று எடுப்புகள் மீது வட்டி கணக்கிட்டு அதற்குரிய குறிப்பேட்டுப் பதிவுகளைத் தரவும்.
6.
ஜெயராமன் என்ற கூட்டாளி ஒவ்வொரு மாத நடுவிலும் ரூ.10,000 எடுத்துக் கொண்டார். எடுப்புகள் மீது வட்டி ஆண்டுக்கு 6% அனுமதிக்க வேண்டும். 2018, டிசம்பர் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய எடுப்புகள் மீது வட்டி கணக்கிடவும்.
7.
நிலைமுதல் முறை என்றால் என்ன?
8.
கூட்டாண்மை வரைவிலக்கணம் தரவும்.
9.
2017, ஜனவரி 1 அன்று அறிவழகன் மற்றும் சீனிவாசன் என்ற கூட்டாளிகளின் முதல் கணக்குகள் முறையே ரூ.15,000 மற்றும் ரூ.10,000 இருப்பினைக் காட்டியது. 2017, ஜூலை 1 அன்று அறிவழகன் கூடுதல் முதலாக ரூ.5,000 கொண்டு வந்தார் மற்றும் 2017, செப்டம்பர் 1 அன்று சீனிவாசன் கொண்டு வந்த கூடுதல் முதல் ரூ.10,000.
2017, டிசம்பர் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய முதல் மீது வட்டி ஆண்டுக்கு 6% கணக்கிடவும்.
10.
மன்னன் மற்றும் இரமேஷ் எனும் கூட்டாளிகள் 3:1 எனும் விகிதத்தில் இலாபம் மற்றும் நட்டங்களை பகிர்ந்து வந்தனர். 2017, ஏப்ரல் 1 அன்று அவர்களுடைய முதல்: மன்னன் ரூ.80,000, இரமேஷ் ரூ.60,000 மற்றும் அவர்கள் நடப்புக் கணக்குகள் முறையே ரூ.10,000 மற்றும் ரூ.5,000 என வரவிருப்பைக் காட்டியது. 2018, மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய முதல் மீது வட்டி ஆண்டுக்கு 5% கணக்கிடவும் மற்றும் அதற்கான குறிப்பேட்டுப் பதிவுகளையும் தரவும்.
11.
கூட்டாண்மையின் சிறப்பியல்புகளைத் தரவும்.
12.
அருள் என்பவர் ஒரு கூட்டாண்மை நிறுவனத்தின் கூட்டாளி. கூட்டாண்மை ஒப்பாவணத்தின்படி எடுப்புகள் மீது வட்டி ஆண்டுக்கு 12% கணக்கிடப்பட வேண்டும். டிசம்பர் 31 ஆம் நாளோடு முடிவடையும் 2018 ஆம் ஆண்டில் அவருடைய எடுப்புகள் பின்வருமாறு:
| நாள் | ரூ. |
|---|---|
| மார்ச் 1 | 3,000 |
| ஜுன் 1 | 3,000 |
| செப்டம்பர் 1 | 3,000 |
| டிசம்பர் 1 | 3,000 |
எடுப்புகள் மீது வட்டி கணக்கிடவும்
13.
A மற்றும் B வழங்கிய முதல் முறையே ரூ.4,00,000 மற்றும் ரூ.2,00,000. அவர்களின் இலாபப் பகிர்வு விகிதம் 3:2. அவ்வாண்டின் முதல் மீது வட்டி கணக்கிடுவதற்கு முன்னர் இலாபம் ரூ.27,000. பின்வரும் நிலைகளில் முதல் மீதான வட்டித் தொகையைக் கணக்கிடவும்.
(i) முதல் மீது வட்டி குறித்து கூட்டாண்மை ஒப்பாவணத்தில் ஏதும் குறிப்பிடாத போது
(ii) கூட்டாண்மை ஒப்பாவணத்தின் படி முதல் மீது வட்டி ஆண்டுக்கு 3 % அனுமதிக்கப்படும் போது
(iii) கூட்டாண்மை ஒப்பாவணத்தின் படி முதல் மீது வட்டி ஆண்டுக்கு 5 % அனுமதிக்கும் போது
14.
தங்கள் இலாப நட்டங்களை சமமாகப் பகிர்ந்து வரும் சுபா மற்றும் சுதா என்ற கூட்டாளிகளின் பின்வரும் இருப்புநிலைக் குறிப்பிலிருந்து 2017, டிசம்பர் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய முதல் மீது வட்டி ஆண்டுக்கு 6% கணக்கிடவும்.
| பொறுப்புகள் | ரூ. | சொத்துகள் | ரூ. |
|---|---|---|---|
| முதல் கணக்குகள்: | நிலைச் சொத்துகள் | 30,000 | |
| சுபா | 15,000 | நடப்புச் சொத்துகள் | 20,000 |
| சுதா | 20,000 | ||
| நடப்புப் பொறுப்புகள் | 15,000 | ||
| 50,000 | 50,000 |
அவ்வாண்டில் சுபா மற்றும் சுதாவின் எடுப்புகள் முறையே ரூ.2,500 மற்றும் ரூ.3,500. அவ்வாண்டில் ஈட்டிய இலாபம் ரூ.15,000.
15.
கூட்டாண்மையின் அதிகபட்ச உறுப்பினர்களின் எண்ணிக்கை
25
50
10
20
16.
எடுப்பு மீது வட்டி, முதல் மீது வட்டி மற்றும் ஊதியம் கழித்தபின் உள்ள இலாபம் ரூ.10,500. கீதா என்ற கூட்டாளி கழிவுக்குப்பின் உள்ள நிகர இலாபத்தில் 5% கழிவு பெற உரியவராயின் கழிவுத்தொகையை கண்டறியவும்.
ரூ.50
ரூ.150
ரூ.550
ரூ.500
17.
பின்வருவனவற்றில் எது சரியற்ற இணை?
எடுப்புகள் மீது வட்டி – முதல் கணக்கில் பற்று வைக்கப்பட வேண்டும்
முதல் மீது வட்டி – முதல் கணக்கில் வரவு வைக்கப்பட வேண்டும்
கடன் மீது வட்டி – முதல் கணக்கில் பற்று வைக்கப்பட வேண்டும்
இலாபப் பகிர்வு – முதல் கணக்கில் வரவு வைக்கப்பட வேண்டும்
18.
19.
கூட்டாண்மை ஒப்பாவணம் இல்லாத நிலையில் நிறுவனத்தின் இலாபம் கூட்டாளிகளுக்கிடையே பகிர்ந்தளிக்கப்படுவது______.
சமமான விகிதத்தில்
முதல் விகிதத்தில்
இரண்டும் (அ) மற்றும் (ஆ)
மேற்கூறிய எதுவுமில்லை
20.
கடன் மீதான வட்டி
21.
முதல் மீது வட்டி
22.
கூட்டாளிகளின் ஊதியம்
23.
இந்திய நிறுமச்சட்டம்
24.
இந்திய கூட்டாண்மைச் சட்டம்
1.
| நாள் | விவரம் | ரூபன் ரூ. |
டெரி ரூ. |
நாள் | விவரம் | ரூபன் ரூ. |
டெரி ரூ |
|---|---|---|---|---|---|---|---|
| 2018, மார்ச் 31 |
இருப்பு கீ/இ | 88,000 | 66,000 | 2018 ஏப்ரல் 1 |
இருப்பு கீ/கொ | 70,000 | 50,000 |
| ஏப்ரல் 1 | வங்கி (கூடுதல் முதல்) | 18,000 | 16,000 | ||||
| 88,000 | 66,000 | 88,000 | 66,000 | ||||
| 2019 ஏப்ரல் 1 |
இருப்பு கீ/கொ | 88,000 | 66,000 |
| நாள் | விவரம் | ரூபன் ரூ. |
டெரி ரூ. |
நாள் | விவரம் | ரூபன் ரூ. |
டெரி ரூ |
|---|---|---|---|---|---|---|---|
| எடுப்புகள் | 10,000 | 6,000 | இருப்பு கீ/கொ | 25,000 | 15,000 | ||
| எடுப்புகள் மீது வட்டி | 5000 | 3000 |
இலாப நட்ட பகிர்வு கணக்கு |
35,000 | 25,800 | ||
| இருப்பு கீ/இ | 65,000 | 55,000 | முதல் மீது வட்டி | 3,500 | 2,500 | ||
| சம்பளம் | - | 18,000 | |||||
| கழிவு | 12,000 | - | |||||
| 75,500 | 61,300 | 75,500 | 61,300 | ||||
| இருப்பு கீ/கொ | 65,000 | 55,000 |
2.
| வ.எண்: | வேறுபாட்டின் அடிப்படை | நிலைமுதல் முறை | மாறுபடும் முதல் முறை |
|---|---|---|---|
| 1. | கணக்குகளின் எண்ணிக்கை | ஒவ்வொரு கூட்டாளிக்கும் இரண்டு கணக்குகள் அதாவது, முதல் கணக்கு மற்றும் நடப்புக் கணக்கு பராமரிக்கப்படுகின்றன | ஒவ்வொரு கூட்டாளிக்கு ஒரே ஒரு கணக்கு அதாவது, முதல் கணக்கு பராமரிக்கப்படுகிறது |
| 2. | முதல் தொகையில் மாற்றம் | கூடுதல் முதல் கொண்டு வரும்போது அல்லது முதல் தொகையை நிரந்தரமாக திரும்ப எடுக்கும் போது, தவிர மற்ற நேரங்களில் முதல் தொகை வழக்கமாக மாறாமல் நிலையாக இருக்கும் | முதல் தொகை பருவந்தோறும் மாறிக்கொண்டே இருக்கும் |
| 3. | இறுதி இருப்பு | முதல் கணக்கு எப்பொழுதும் வரவிருப்பையே காட்டும். ஆனால், நடப்புக் கணக்கு பற்றிருப்பையோ அல்லது வரவிருப்பையோ காட்டும் | முதல் கணக்கு பொதுவாக வரவிருப்பையே காட்டும். இது பற்றிருப்பையும் கூட காட்டலாம் |
| 4. | சரிக்கட்டுதல்கள் | முதல் மீது வட்டி, எடுப்புகள் மீது வட்டி, ஊதியம் மற்றும் கழிவு, இலாபம் அல்லது நட்டப் பங்கு தொடர்பான அனைத்துச் சரிக்கட்டுதல்களும் நடப்புக் கணக்கில் செய்யப்படும். | முதல் மீது வட்டி, எடுப்புகள் மீது வட்டி, ஊதியம் மற்றும் கழிவு, இலாபம் அல்லது நட்டப்பங்கு தொடர்பான அனைத்துச் சரிக்கட்டுதல்களும் முதல் கணக்கில் செய்யப்படும் |
3.
| நாள் | விவரம் | சாந்தி ரூ. | சுமதி ரூ. | நாள் | விவரம் | சாந்தி ரூ. | சுமதி ரூ. |
|---|---|---|---|---|---|---|---|
| 2018 | |||||||
| 2018 | ஜன 1 | இருப்பு கீ/கொ | 1,00,000 | 80,000 | |||
| டிச 31 | இருப்பு கீ/இ | 1,10,000 | 1,00,000 | ஜூன் 1 | வங்கி | 10,000 | 20,000 |
| 1,10,000 | 1,00,000 | 1,10,000 | 1,00,000 | ||||
| 2019 | |||||||
| ஜன 1 | இருப்பு கீ/கொ | 1,10,000 | 1,00,000 |
| நாள் | விவரம் | சாந்தி ரூ. | சுமதி ரூ. | நாள் | விவரம் | சாந்தி ரூ. | சுமதி ரூ. |
|---|---|---|---|---|---|---|---|
| எடுப்புகள் | 20,000 | 13,000 | இருப்பு கீ/கொ | 5,000 | 3,000 | ||
| எடுப்புகள் மீது வட்டி | 500 | 300 | இலாபநட்டப் பகிர்வு கணக்கு |
10,000 | 8,000 | ||
| இருப்பு கீ/இ | 9,800 | 4,300 | (இலாபப் பங்கு) | ||||
| முதல் மீது வட்டி | 6,300 | 5,400 | |||||
| சம்பளம் | 9,000 | -` | |||||
| கழிவு | - | 1,200 | |||||
| 30,300 | 17,600 | 30,300 | 17,600 | ||||
| இருப்பு கீ/கொ | 9,800 | 4,300 |
4.
கெவின் எடுப்புகள் மீதான வட்டி கணக்கிடுதல்
(சராசரி கால முறையை பயன்படுத்தி)
மொத்த எடுப்புத் தொகை = ரூ.5,000 x 4
எடுப்புகள் ஒவ்வொரு காலாண்டு இறுதியிலும் எடுத்திருந்தால்:
சராசரி காலம் = 4.5
= ரூ.20,000 x \(\frac { 6 }{ 100 } \times \frac { 4.5 }{ 12 } \)
= ரூ.450
5.
எடுப்புகள் மீதான வட்டி = எடுப்புத்தொகை x வட்டி விகிதம் x வட்டிக்குரிய காலம்
= ரூ.30,000 x \(\frac {6}{100}\times\frac {4}{12}\)
= ரூ.600
| நாள் | விவரம் | பே.ப எண் |
பற்று ரூ. |
வரவு ரூ. |
|
|---|---|---|---|---|---|
| 2018 டிசம்பர் 31 |
மணி முதல் க/கு | ப | 600 | ||
| எடுப்புகள் மீது வட்டி க/கு (எடுப்புகள் மீது வட்டி விதித்தது) |
600 | ||||
| ' | எடுப்புகள் மீது வட்டி க/கு | ப | 600 | ||
| இலாப நட்டப் பகிர்வு க/கு (எடுப்புகள் மீது வட்டி கணக்கை |
600 |
6.
எடுப்புகள் ஒவ்வொரு மாத நடுவிலும் எடுத்திருந்தால்:
மொத்த எடுப்பு தொகை = 10,000 x 12 = 1,20,000
சராசரி காலம் = 6
= ரூ. 12,000 x \(\frac{6}{100}\times\frac{6}{12}\)
எடுப்புகள் மீது வட்டி = ரூ.3,600
7.
(i) நிலைமுதல் முறையில் கூட்டாளிகளின் முதல் மாறாமல் இருக்கும் மற்றும் பொதுவாக அதே தொகையாக நிலையானதாக இருக்கும்
(ii) ஒவ்வொரு கூட்டாளிக்கும் இரண்டு கணக்குகள் பராமரிக்கப்படவேண்டும் அதாவது (அ) முதல் கணக்கு மற்றும் (ஆ) நடப்புக் கணக்கு.
(iii) தொடக்க முதல் கொண்டு வந்தது, கூடுதல் முதல் கொண்டு வந்தது மற்றும் முதல் நிரந்தரமாக திரும்ப எடுத்தது போன்றவை தொடர்பான நடவடிக்கைகள் முதல் கணக்கில் பதிவு செய்யப்படுகின்றன மற்ற அனைத்து நடவடிக்கைகளும் நடப்புக் கணக்கில் பதிவு செய்யப்படுகின்றன.
8.
இந்திய கூட்டாண்மைச் சட்டம், 1932 பிரிவு 4 - ன் படி கூட்டாண்மை என்பது, "எல்லோரும் சேர்ந்தோ அல்லது எல்லாருக்குமாக ஒருவரோ, நடத்தும் தொழிலின் இலாபத்தைப் பகிர்ந்துகொள்ள ஒப்புக் கொண்டவர்களிடையே நிலவும் உறவு" ஆகும்
9.
முதல் மீதான வட்டி கணக்கிடுதல்
அறிவழகன்:

10.
முதல் மீதான வட்டி கணக்கிடுதல்:
முதல் மீது வட்டி = முதல் தொகை x வட்டி வீதம் x வட்டிக்குரிய காலம்
மன்னன் முதல் மீது வட்டி = 80,000 x 5/100 = ரூ.4,000
இரமேஷ் முதல் மீது வட்டி = 60,000 x 5/100 = ரூ.3,000
குறிப்பு: முதல் மீது வட்டி கணக்கிடும்போது நடப்புக் கணக்கின் இருப்புகளை எடுத்துக் கொள்ளக் கூடாது.
| நாள் | விவரம் | பே.ப.எ. | பற்று ரூ. | வரவு ரூ. |
|---|---|---|---|---|
| 2018 | முதல் மீது வட்டி க/கு ப | 7,000 | ||
| மார்ச் 31 | மன்னன் நடப்பு க/கு | 4,000 | ||
| இரமேஷ் நடப்பு க/கு | 3,000 | |||
| (முதல் மீது வட்டி வழங்கியது | ||||
| " | இலாப நட்டப் பகிர்வு க/கு ப | 7,000 | ||
| முதல் மீதான வட்டி க/கு | 7,000 | |||
| (முதல் மீது வட்டி கணக்கை முடித்தது |
11.
கூட்டாண்மையின் சிறப்பியல்புகள் பின்வருமாறு:
(i) கூட்டாண்மை என்பது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்டவர்களால் உருவாக்கப்படும் ஒரு அமைப்பு ஆகும். அதிகபட்ச உறுப்பினர்களின் எண்ணிக்கை 50 என வரையறை செய்யப்பட்டுள்ளது.
(ii) தொழில் நிறுவனத்தின் இலாபம் அல்லது நட்டத்தைப் பகிர்ந்துகொள்ள கூட்டாளிகளுக்கிடையே உடன்பாடு இருக்க வேண்டும். உடன்பாடு எழுத்து வடிவிலோ அல்லது பேச்சு வடிவிலோ அல்லது உட்கிடையாகவோ இருக்கலாம்
(iii) கூட்டாண்மை உடன்பாடு ஒரு தொழில் நிறுவனத்தை நடத்தி அதிலிருந்து கிடைக்கும் இலாபத்தைப் பகிர்வதாக இருக்க வேண்டும்.
(iv) கூட்டாண்மை நிறுவனத்தை கூட்டாளிகள் அனைவருமோ அல்லது அனைவரின் சார்பில் அவர்களில் ஒருவரோ நடத்தலாம்.
12.

13.
i) கூட்டாண்மை ஒப்பாவணத்தில் முதல் மீது வட்டி குறித்து ஏதும் குறிப்பிடப்படவில்லை. எனவே, முதல் மீது வட்டி அனுமதிக்கப்படுவதில்லை.
(ii) முதல் மீது வட்டி வழங்குவதற்கு முன் இலாபம் ரூ.27,000.
முதல் மீது வட்டி கணக்கிடுதல்:
A: 4,00,000 x \(\frac { 3 }{ 100 } \) =ரூ.12,000
B: 2,00,000 x \(\frac { 3 }{ 100 } \) =ரூ.6,000
போதிய இலாபம் இருப்பதால் முதல் மீது வட்டி வழங்கப்படும்.
(iii) முதல் மீது வட்டி வழங்குவதற்கு முன் இலாபம் ரூ.27,000.
முதல் மீது வட்டி கணக்கிடுதல்:
A: 4,00,000 x \(\frac { 5 }{ 100 } \) =ரூ.20,000
B: 2,00,000 x \(\frac { 5 }{ 100 } \) =ரூ.10,000
போதிய இலாபம் இல்லாததால், முதல் மீது வட்டி வழங்கப்பட இயலாது. இலாபம் ரூ.27,000 கூட்டாளிகளின் முதல் விகிதமாகிய 2:1 என்ற விகிதத்தில் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்.
14.
| விவரம் | சுபா ரூ. | சுதா ரூ. |
|---|---|---|
| 2017, டிசம்பர் 31 அன்று முதல் | 15,000 | 20,000 |
| கூட்டுக: எடுப்புகள் | 2,500 | 3,500 |
| 17,500 | 23,500 | |
| கழிக்க: இலாபம் ஏற்கனவே வரவு வைத்தது | 7,500 | 7,500 |
| 2017, ஜனவரி 1 அன்று முதல் | 10,000 | 16,000 |
முதல் மீது வட்டி கணக்கிடுதல்:
சுபா: தொடக்க முதல்=10,000 x \(\frac { 6 }{ 100 } \) =ரூ.600
சுதா: தொடக்க முதல் =16,000 x \(\frac { 6 }{ 100 } \)=ரூ.960
15.
(b)
50
16.
(d)
ரூ.500
17.
(c)
கடன் மீது வட்டி – முதல் கணக்கில் பற்று வைக்கப்பட வேண்டும்
18.
(d)
19.
(a)
சமமான விகிதத்தில்
20.
பிரிவு 13(ஈ)
21.
பிரிவு 13 (இ)
22.
பிரிவு 13 (அ)
23.
2013
24.
1932
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards