12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 20/08/2019
நிறுமக் கணக்குகள்
12ஆம் வகுப்பு Accountancy / கணக்குப்பதிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Accountancy / கணக்குப்பதிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Accountancy Test

1.
அஞ்சலி மாவு அரைக்கும் வரையறு நிறுமம் பங்கு ஒன்று ரூ.10 வீதம் ரூ.4,00,000 அங்கீகரிக்கப்பட்ட முதல் கொண்டுள்ளது. அதில், 30,000 நேர்மைப் பங்குகளை விண்ணப்பத்துடன் ரூ.2, ஒதுக்கீட்டில் ரூ.5 மற்றும் முதலாவது அழைப்பில் ரூ.3 பெற வெளியிட்டது. அனைத்து பங்குகளும் ஒப்பப்பட்டன. அனைத்து தொகைகளும் பெறப்பட்டன. ஆனால், ஒதுக்கீட்டில், 500 பங்குள்ள ஒரு பங்குதாரர் முழுவதுமான தனது தொகையினை செலுத்திவிட்டார். குறிப்பேட்டுப் பதிவினைத் தரவும்.
2.
முன்னுரிமைப் பங்குகளுக்கும், நேர்மைப் பங்குகளுக்குமுள்ள வேறுபாடுகளை கூறவும்
3.
தங்கம் நிறுமம் பங்கொன்று ரூ.10 வீதம் 50,000 பங்குகளை, பங்கொன்று ரூ.2 வீதம் முனைமத்தில் வெளியிட்டது. தொகை கீழ்க்கண்டவாறு செலுத்தப்பட வேண்டும்
விண்ணப்பத்தின் போது ரூ.5
ஒதுக்கீட்டின் போது ரூ.5 (முனைமம் உட்பட)
முதல் மற்றும் இறுதி அழைப்பின் போது ரூ.2
அனைத்துப் பங்குகளும் ஒப்பப்பட்டன. பிரியா என்பவருக்கு ஒதுக்கப்பட்ட 500 பங்குகள் மீதான ஒதுக்கீட்டுத் தொகை, முதல் மற்றும் இறுதி அழைப்புத் தொகை தவிர அனைத்துத் தொகையும் பெறப்பட்டது. அவருடைய பங்குகள் ஒறுப்பிழப்பு செய்யப்பட்டன. ஒறுப்பிழப்பு செய்த அனைத்து பங்குகளும் தேவி என்பவருக்கு ரூ.8 வீதம் மறுவெளியீடு செய்யப்பட்டன. குறிப்பேட்டுப் பதிவுகளைத் தரவும்.
4.
திவ்யா நிறுமம் 10,000 ரூ.10 மதிப்புள்ள நேர்மைப் பங்குகளை ரூ.2 முனைமத்தில் 14,000 பங்குகள் விண்ணப்பித்தவர்களுக்கு விகித அளவு அடிப்படையில் ஒதுக்கீடு செய்தது. மிகுதியாகப் பெறப்பட்ட விண்ணப்பத் தொகை ஒதுக்கீட்டுத் தொகையில் சரிக்கட்டப்படும். பங்கொன்றுக்கு விண்ணப்பத்தின் போது ரூ.2, ஒதுக்கீட்டின் போது ரூ.5 (முனைமம் ரூ.2 உட்பட) முதல் அழைப்பின்போது ரூ.3 மற்றும் இறுதி அழைப்பின்போது ரூ.2 செலுத்தப்பட வேண்டும். விகாஸ் என்ற பங்குதாரர் தன்னுடைய 300 பங்குகளுக்கு முதல் மற்றும் இறுதி அழைப்புகளை செலுத்தத் தவறினார். அனைத்துப் பங்குகளும் ஒறுப்பிழப்புச் செய்யப்பட்டன. அவற்றில் 200 பங்குகள் பங்கொன்று ரூ.9 வீதம் மறுவெளியீடு செய்யப்பட்டன. தேவையான குறிப்பேட்டுப் பதிவுகளைத் தரவும்.
5.
அருணா ஆலைகள் வரையறு நிறுமத்தின் பதிவு செய்யப்பட்ட பங்கு முதல் ரூ.5,00,000. அதில் 20,000 பங்குகளை ரூ.10 வீதம் பின்வருமாறு செலுத்தத்தக்க வகையில் வெளியிட்டது. விண்ணப்பத்தின் மீது
ரூ.4; ஒதுக்கீட்டின் மீது ரூ.4; முதலாம் மற்றும் இறுதி அழைப்பின் மீது ரூ.2. வெளியிட்ட பங்குகள் அனைத்தும் ஒப்பப்பட்டன. அனைத்து தொகைகளும் பெறப்பட்டன. ஆனால், ஒரு பங்குதாரர் தான் வைத்துள்ள 300 பங்குகளுக்கான அனைத்து தொகைகளையும் ஒதுக்கீட்டின்போதே முழுவதுமாக செலுத்தி விட்டார்.
குறிப்பேட்டுப் பதிவுகளைத் தரவும்.
6.
தாய் நிறுமம் ரூ.10 மதிப்புள்ள 1,00,000 நேர்மைப் பங்குகளை வெளியீடு செய்தது. விண்ணப்பத்தின்போது ரூ.5; ஒதுக்கீட்டின்போது ரூ.2; முதல் அழைப்பின்போது ரூ.2 மற்றும் இறுதி அழைப்பின்போது ரூ.1 செலுத்தவேண்டும். அனைத்து பங்குகளும் ஒப்பப்பட்டு தொகை பெறப்பட்டது. குறிப்பேட்டுப் பதிவுகள் தரவும்.
7.
பாரடைஸ் வரையறு நிறுமம், ரூ.4,40,000 மதிப்புள்ள சொத்துகளை சுகுணா அறைகலன் வரையறு நிறுவனத்திடமிருந்து வாங்கியது. இதற்குப் பதிலாக ரூ.10 மதிப்புள்ள முழுவதும் செலுத்தப்பட்ட பங்குகளை செலுத்தி நிறைவு செய்தனர். பின்வரும் சூழலுக்கான பதிவுகளைத் தரவும்.
அ) பங்குகளை முகமதிப்பில் வெளியிட்டால்
ஆ) பங்குகளை 10% முனைமத்தில் வெளியிட்டால்
8.
ரொக்கம் தவிர இதர மறுபயனுக்கு பங்கு வெளியீடு என்றால் என்ன?
9.
சிறுகுறிப்பு வரைக.
(அ) அங்கீகரிக்கப்பட்ட முதல்
(ஆ) காப்புமுதல்
10.
அழைப்பு முன்பணம் குறித்து சுருக்கமாக எழுதவும்.
11.
அனு நிறுமத்தால் ரூ.10 முகமதிப்பில் வெளியிடப்பட்ட நேர்மைப் பங்குகளில், தியாகு என்பவர் வைத்திருந்த ரூ.200 நேர்மைப் பங்குகளுக்கு இறுதி அழைப்புத் தொகையான ரூ.3 செலுத்தாத காரணத்தால் அவை ஒறுப்பிழப்பு செய்யப்பட்டன. அப்பங்குகள் ரூ.6 வீதம் லக்ஷ்மனுக்கு மறுவெளியீடு செய்யப்பட்டன. ஒறுப்பிழப்பு மற்றும் மறுவெளியீட்டிற்கான குறிப்பேட்டுப் பதிவுகளைத் தரவும்
12.
சுப்ரீம் நிறுமம் பங்கொன்று ரூ.10 மதிப்புடைய 100 பங்குகளை இறுதி அழைப்புத்தொகை ரூ.2 செலுத்தாததால் ஒறுப்பிழப்பு செய்தது. அவை அனைத்தும் பங்கொன்று ரூ.9 வீதம் மறுவெளியீடு செய்யப்பட்டன. முதலினக் காப்புக்கு மாற்றப்பட வேண்டிய தொகை_____.
ரூ.700
ரூ.800
ரூ.900
ரூ.1,000
13.
ரூ.8 செலுத்தப்பட்ட, ரூ.10 மதிப்புள்ள பங்கு ஒறுப்பிழப்பு செய்யப்பட்டது எனில், அதன் குறைந்த அளவு மறுவெளியீட்டு விலை_____.
பங்கொன்று ரூ.10
பங்கொன்று ரூ.8
பங்கொன்று ரூ.5
பங்கொன்று ரூ.2
14.
முகமதிப்பை விட அதிகமாக பெற்ற தொகை வரவு வைக்கப்படும் கணக்கு _____.
பத்திர முனைமக் கணக்கு
அழைப்பு முன்பணக் கணக்கு
பங்குமுதல் கணக்கு
பங்கு ஒறுப்பிழப்புக் கணக்கு
15.
ஒறுப்பிழப்பு செய்யும்போது பங்கு முதல் கணக்கு எதில் பற்று வைக்கப்படுகிறது?
முகமதிப்பு
பெயரளவு மதிப்பு
செலுத்தப்பட்ட தொகை
அழைக்கப்பட்ட தொகை
16.
முன்னுரிமைப் பங்கு என்பது
(i) நிலையான விகிதத்தில் பங்காதாயம் செலுத்துவதற்கான முன்னுரிமையைப் பெற்ற பங்கு
(ii) கலைப்பின்போது பங்கு முதலை திரும்பப்பெறுவதற்கான முன்னுரிமையைப் பெற்ற பங்கு
(i) மட்டும் சரியானது
(ii) மட்டும் சரியானது
(i) மற்றும் (ii) சரியானது
(i) மற்றும் (ii) தவறான
17.
பங்குகள் ஏன் ஒறுப்பிழப்பு செய்யப்படுகின்றன?
18.
அழைப்பு நிலுவை என்பதன் பொருள் என்ன?
19.
பங்கு என்றால் என்ன? அதன் வகைகளை எழுதுக.
1.
| நாள் | விவரம் | பே.ப.எண் | பற்று ரூ. |
வரவு ரூ. |
|
|---|---|---|---|---|---|
| வங்கி க/கு (30,000x2) | ப | 60,000 | |||
| நேர்மைப் பங்கு விண்ணப்பக் க/கு | 60,000 | ||||
| (பங்கு விண்ணப்பத் தொகை பெறப்பட்டது) | |||||
| நேர்மைப் பங்கு விண்ணப்பக் க/கு | ப | 60,000 | |||
| நேர்மைப் பங்கு முதல் க/கு | 60,000 | ||||
| (விண்ணப்ப பணம் பங்கு முதலுக்கு மாற்றப்பட்டது) | |||||
| நேர்மைப் பங்கு ஒதுக்கீட்டு க/கு (30,000x5) | ப | 1,50,000 | |||
| நேர்மைப் பங்கு முதல் க/கு | 1,50,000 | ||||
| (பங்கு ஒதுக்கீடு பணம் பெற வேண்டியது) | |||||
| வங்கி க/கு (30,000x5)+(500x3) | ப | 1,51,500 | |||
| நேர்மைப் பங்கு ஒதுக்கீட்டு க/கு | 1,50,000 | ||||
| அழைப்பு முன்பணம் க/கு (500x3) | 1,500 | ||||
| (பங்கு ஒதுக்கீடு பணம் மற்றும் அழைப்பு முன்பணம் பெற்றது) | |||||
| நேர்மைப் பங்கு முதல் அழைப்பு க/கு (30,000x3) | ப | 90,000 | |||
| நேர்மைப் பங்கு முதல் க/கு | 90,000 | ||||
| (பங்கு முதல் அழைப்புத் தொகை பெற வேண்டியது) | |||||
| வங்கி க/கு (29,500x3) | ப | 88,500 | |||
| அழைப்பு முன்பணம் க/கு | ப | 1,500 | |||
| நேர்மைப் பங்கு முதல் அழைப்பு க/கு | 90,000 | ||||
| (பங்கு முதல் மற்றும் இறுதி அழைப்பு தொகை பெறப்பட்டு, அழைப்பு முன்பணம் சரிக்கட்டப்பட்டது) |
2.
| வ.எண் | முன்னுரிமைப் பங்குகள் | நேர்மைப் பங்குகள் |
| 1 | பிற வகையான பங்குகள் பெற்றிருக்கும் உரிமைகளை விட, சிலவற்றில் பெற்றிருக்கும் பங்குகள் முன்னுரிமை பங்குகள் எனப்படுகின்றன. | முன்னுரிமைப் பங்குகள் அல்லாத பங்குகள் நேர்மைப் பங்குகள் ஆகும். |
| 2 | நிறுமம் செயல்படும் வரை ஒரு குறிப்பிட்ட (நிலையான) பங்காதாயத்தை பெறுவதால், இவ்வகை பங்குநர்கள் முன்னுரிமை பெற்றுள்ளனர். | நேர்மைப் பங்குகளுக்கான பங்காதாய விகிதம் நிலையாக இருப்பதில்லை. |
| 3 | நிறுமம் கலைக்கப்படும் பொழுது பிற புறக்கடன்கள் அனைத்தையும் அடைத்த பின்னர், சொத்துக்கள் மிகுதியிருப்பின் முதலில் முன்னுரிமைப் பங்குநர்களுக்கு முழு முதலையும் திருப்பிக் கொடுத்துவிட வேண்டும். | நிறுமக் கலைப்பின் போதும், முன்னுரிமைப் பங்குதாரர்களுக்கு முதலை திரும்பச் செலுத்திய பிறகே நேர்மைப் பங்குதாரர்களுக்கு செலுத்தப்படும். |
3.
| நாள் | விவரம் | பே. ப.எ |
பற்று ரூ. |
வரவு ரூ. |
|
|---|---|---|---|---|---|
| வங்கி க/கு (50,000 x 5) | ப | 2,50,000 | |||
| நேர்மைப் பங்கு விண்ணப்பக் க/கு | 2,50,000 | ||||
| (விண்ணப்பத் தொகை பெற்றது) | |||||
| நேர்மைப் பங்கு விண்ணப்பக் க/கு | ப | 2,50,000 | |||
| நேர்மைப் பங்குமுதல் க/கு | 2,50,000 | ||||
| (விண்ணப்பத் தொகை பங்கு முதலுக்கு மாற்றப்பட்டது) | |||||
| நேர்மைப் பங்கு ஒதுக்கீட்டுக் க/கு (50,000 x 5) | ப | 2,50,000 | |||
| நேர்மைப் பங்குமுதல் க/கு (50,000 x 3) | 1,50,000 | ||||
| பத்திர முனைமக் க/கு (50,000 x 2) | 1,00,000 | ||||
| (ஒதுக்கீட்டுத் தொகை பெறவேண்டியது) | |||||
| வங்கி க/கு (49,500 x 5) | ப | 2,47,500 | |||
| நேர்மைப் பங்கு ஒதுக்கீட்டு க/கு | 2,47,500 | ||||
| (500 பங்குகள் தவிர ஒதுக்கீட்டுத் தொகை பெற்றது) | |||||
| நேர்மைப் பங்கு முதல் மற்றும் இறுதி அழைப்பு க/கு (50,000 x 2) | ப | 1,00,000 | |||
| நேர்மைப் பங்குமுதல் க/கு | 1,00,000 | ||||
| (முதல் மற்றும் இறுதி அழைப்புத் தொகை பெற வேண்டியது) | |||||
| வங்கி க/கு (49,500 x 2) | ப | 99,000 | |||
| நேர்மைப் பங்கு முதல் மற்றும் இறுதி அழைப்பு க/கு | 99,000 | ||||
| முதல் மற்றும் இறுதி அழைப்புத் தொகை பெற்றது) | |||||
| நேர்மைப் பங்குமுதல் க/கு (500 x 10) | ப | 5,000 | |||
| பத்திர முனைமக் க/கு (500 x 2) | 1,000 | ||||
| நேர்மைப் பங்கு ஒதுக்கீட்டுக் க/கு (500 x 5) | 2,500 | ||||
| நேர்மைப் பங்கு முதல் மற்றும் இறுதி அழைப்பு க/கு (500 x 2) | 1,000 | ||||
| பங்கு ஒறுப்பிழப்பு க/கு (500 x 5) | 2,500 | ||||
| (500 பங்குகள் மீதான ஒதுக்கீட்டுத் தொகை, முதல் மற்றும் இறுதி அழைப்புத் தொகை செலுத்தாததால் ஒறுப்பிழப்பு செய்யப்பட்டது) | |||||
| வங்கி க/கு (500 x 8) | ப | 4,000 | |||
| பங்கு ஒறுப்பிழப்புக் க/கு (500 x 2) | ப | 1,000 | |||
| நேர்மைப் பங்குமுதல் க/கு (500 x 10) | 5,000 | ||||
| (ஒறுப்பிழப்பு செய்யப்பட்ட 500 பங்குகள் மறுவெளியீடு செய்யப்பட்டது) | |||||
| பங்கு ஒறுப்பிழப்பு க/கு (2,500-1,000) | ப | 1,500 | |||
| முதலினக் காப்பு க/கு | 1,500 | ||||
| ஒறுப்பிழப்பு செய்த பங்குகளை மறுவெளியீடு செய்ததில் கிடைத்த இலாபம் முதலினக் காப்பிற்கு மாற்றப்பட்டது) |
4.
| நாள் | விவரம் | பே. ப.எ |
பற்று ரூ |
வரவு ரூ. |
|
|---|---|---|---|---|---|
| வங்கி க/கு (14,000 x 2) | ப | 28,000 | |||
| நேர்மைப் பங்கு விண்ணப்பக் க/கு | 28,000 | ||||
| (14,000 பங்குகளுக்கு விண்ணப்பப் பணம் பெறப்பட்டது) | |||||
| நேர்மைப் பங்கு விண்ணப்பக் க/கு (10,000 x 2) | ப | 20,000 | |||
| நேர்மைப் பங்குமுதல் க/கு | 20,000 | ||||
| (விண்ணப்பத் தொகை பங்குமுதலுக்கு மாற்றப்பட்டது) | |||||
| நேர்மைப் பங்கு விண்ணப்பக் க/கு (4,000 x 2) | ப | 8,000 | |||
| நேர்மைப் பங்கு ஒதுக்கீட்டு க/கு | 8,000 | ||||
| (மிகுதியான விண்ணப்பத் தொகை ஒதுக்கீட்டிற்கு சரிசெய்யப்பட்டது) | |||||
| நேர்மைப் பங்கு ஒதுக்கீட்டுக் க/கு (10,000 x 5) | ப | 50,000 | |||
| நேர்மைப் பங்குமுதல் க/கு (10,000 x 3 | 30,000 | ||||
| பத்திர முனைமக் க/கு (10,000 x 2) | 20,000 | ||||
| (ஒதுக்கீட்டுத் தொகை பெற வேண்டியது) | |||||
| வங்கி க/கு (50,000 – 8,000) | ப | 42,000 | |||
| நேர்மைப் பங்கு ஒதுக்கீட்டுக் க/கு | 42,000 | ||||
| (ஒதுக்கீட்டுத் தொகை பெற்றது) | |||||
| நேர்மைப் பங்கு முதல் அழைப்பு க/கு (10,000 x 3) | ப | 30,000 | |||
| நேர்மைப் பங்குமுதல் க/கு | 30,000 | ||||
| முதல் அழைப்புத் தொகை பெறவேண்டியது) | |||||
| வங்கி க/கு (9,700 x 3) | ப | 29,100 | |||
| நேர்மைப் பங்கு முதல் அழைப்பு க/கு | 29,100 | ||||
| (9,700 பங்குகளுக்குரிய முதல் அழைப்புத் தொகை பெற்றது) | |||||
| நேர்மைப் பங்கு இரண்டாம் மற்றும் இறுதி அழைப்பு க/கு | ப | 20,000 | |||
| நேர்மைப் பங்குமுதல் க/கு | 20,000 | ||||
| (இரண்டாம் மற்றும் இறுதி அழைப்புத்தொகை பெற வேண்டியது) | |||||
| வங்கி க/கு (9,700 x 2) | ப | 19,400 | |||
| நேர்மைப் பங்கு இரண்டாம் மற்றும் இறுதி அழைப்பு க/கு | 19,400 | ||||
| (9,700 பங்குகளுக்குரிய இரண்டாம் மற்றும் இறுதி அழைப்பு தொகை பெற்றது) | |||||
| நேர்மைப் பங்குமுதல் க/கு (300 x 10) | ப | 3,000 | |||
| நேர்மைப் பங்கு முதல் அழைப்பு க/கு (300 x 3) | 900 | ||||
| நேர்மைப் பங்கு இரண்டாம் மற்றும் இறுதி அழைப்பு க/கு (300 x 2) | 600 | ||||
| பங்கு ஒறுப்பிழப்பு க/கு (300 x 5) | 1,500 | ||||
| (முதல் மற்றும் இரண்டாம் அழைப்புத் தொகை செலுத்தாததால் 300 பங்குகள் ஒறுப்பிழப்பு செய்யப்பட்டன) | |||||
| வங்கி க/கு (200 x 9) | ப | 1,800 | |||
| பங்கு ஒறுப்பிழப்பு க/கு | 200 | ||||
| நேர்மைப் பங்குமுதல் க/கு | 2,000 | ||||
| (200 பங்குகள் மறுவெளியீடு செய்யப்பட்டன) | |||||
| பங்கு ஒறுப்பிழப்பு க/கு | ப | 800 | |||
| முதலினக் காப்பு க/கு | 800 | ||||
| (ஒறுப்பிழப்பு செய்த 200 பங்குகளை மறுவெளியீடு செய்ததில் கிடைத்த இலாபம் முதலினக் காப்பிற்கு மாற்றப்பட்டது) |
குறிப்பு:
ஒறுப்பிழப்பு செய்த 300 பங்குகளுக்கான தொகை = ரூ. 1,500
ஒறுப்பிழப்பு செய்த 200 பங்குகளுக்கான தொகை = \(\frac {1,500}{300}\) x 200 = ரூ. 1,000
கழிக்க: மறுவெளியீட்டு நட்டம் 200
____
நிகர ஆதாயம் முதலினக் காப்பிற்கு மாற்றப்பட்டது 800
_____
5.
| நாள் | விவரம் | பே. ப.எ |
பற்று ரூ. |
வரவு ரூ. |
|
|---|---|---|---|---|---|
| வங்கி க/கு (20,000 × 4) | ப | 80,000 | |||
| பங்கு விண்ணப்பக் க/கு | 80,000 | ||||
| (பங்கு விண்ணப்பப் பணம் பெறப்பட்டது) | |||||
| பங்கு விண்ணப்பக் க/கு | ப | 80,000 | |||
| பங்குமுதல் க/கு | 80,000 | ||||
| (விண்ணப்ப பணம் பங்கு முதலுக்கு மாற்றப்பட்டது) | |||||
| பங்கு ஒதுக்கீடு க/கு (20,000 × 4) | ப | 80,000 | |||
| பங்குமுதல் க/கு | 80,000 | ||||
| (பங்கு ஒதுக்கீடு பணம் பெற வேண்டியது) | |||||
| வங்கி க/கு (20,000 × 4) + (300 x 2) | ப | 80,600 | |||
| பங்கு ஒதுக்கீடு க/கு | 80,000 | ||||
| அழைப்பு முன்பணம் க/கு (300 × 2) | 600 | ||||
| (பங்கு ஒதுக்கீடு பணம் மற்றும் அழைப்பு முன்பணம் பெறப்பட்டது) | |||||
| பங்கு முதல் மற்றும் இறுதி அழைப்பு க/கு (20,000 × 2) | ப | 40,000 | |||
| பங்குமுதல் க/கு | 40,000 | ||||
| (பங்கு முதல் மற்றும் இறுதி அழைப்புத் தொகை பெற வேண்டியது | |||||
| வங்கி க/கு (19,700 × 2) | ப | 39,400 | |||
| அழைப்பு முன்பணம் க/கு | 600 | ||||
| பங்கு முதல் மற்றும் இறுதி அழைப்பு க/கு | 40,000 | ||||
| (பங்கு முதல் மற்றும் இறுதி அழைப்புத் தொகை பெறப்பட்டு, அழைப்பு முன்பணம் சரிக்கட்டப்பட்டது). |
6.
| நாள் | விவரம் | பே. ப.எ. |
பற்று ரூ. |
வரவு ரூ. |
|
|---|---|---|---|---|---|
| வங்கி க/கு | ப | 5,00,000 | |||
| நேர்மைப் பங்கு விண்ணப்பக் க/கு | 5,00,000 | ||||
| (விண்ணப்பத் தொகை பெற்றது) | |||||
| நேர்மைப் பங்கு விண்ணப்பக் க/கு | ப | 5,00,000 | |||
| நேர்மைப் பங்குமுதல் க/கு | 5,00,000 | ||||
| (பங்கு விண்ணப்பத் தொகையை பங்கு முதல் கணக்கிற்கு மாற்றியது) | |||||
| நேர்மைப் பங்கு ஒதுக்கீட்டு க/கு | ப | 2,00,000 | |||
| நேர்மைப் பங்குமுதல் க/கு | 2,00,000 | ||||
| (பங்கு ஒதுக்கீட்டுத் தொகை பெற வேண்டியது) | |||||
| வங்கி க/கு | ப | 2,00,000 | |||
| நேர்மைப் பங்கு ஒதுக்கீட்டு க/கு | 2,00,000 | ||||
| (ஒதுக்கீட்டுத் தொகை பெற்றது) | |||||
| நேர்மைப் பங்கு முதல் அழைப்பு க/கு | ப | 2,00,000 | |||
| நேர்மைப் பங்குமுதல் க/கு | 2,00,000 | ||||
| (பங்கு முதல் அழைப்புத் தொகை பெற வேண்டியது) | |||||
| வங்கி க/கு | ப | 2,00,000 | |||
| நேர்மைப் பங்கு முதல் அழைப்பு க/கு | 2,00,000 | ||||
| (பங்கு முதல் அழைப்புத் தொகை பெற்றது) | |||||
| நேர்மைப் பங்கு இரண்டாம் மற்றும் இறுதி அழைப்பு க/கு | ப | 1,00,000 | |||
| நேர்மைப் பங்குமுதல் க/கு | 1,00,000 | ||||
| (பங்கு மீதான இரண்டாம் மற்றும் இறுதி அழைப்புத் தொகை பெற வேண்டியது) | |||||
| வங்கி க/கு | ப | 1,00,000 | |||
| நேர்மைப் பங்கு இரண்டாம் மற்றும் இறுதி அழைப்பு க/கு | 1,00,000 | ||||
| (இரண்டாம் மற்றும் இறுதி அழைப்புத் தொகை பெற்றது) |
7.
அ) பங்குகளை முகமதிப்பில் வெளியிட்டால்
பாரடைஸ் வரையறு நிறுமத்தின் ஏடுகளில் குறிப்பேட்டுப்பதிவுகள்
| நாள் | விவரம் | பே.ப.எண் | பற்று ரூ. |
வரவு ரூ. |
|
|---|---|---|---|---|---|
| அறைகலன் க/கு | ப | 4,40,000 | |||
| சுகுணா நிறுவனக் க/கு | 4,40,000 | ||||
| (அறைகலன் வாங்கியது) | |||||
| சுகுணா நிறுவனக் க/கு | ப | 4,40,000 | |||
| பங்கு முதல் க/கு | 4,40,000 | ||||
| (பங்கொன்று ரூ.10 வீதம் 44,000 முற்றிலும் செலுத்தப்பட்ட பங்குகளை வெளியிட்டது) |
ஆ) பங்குகளை 10% முனைமத்தில் வெளியிட்டால்
| நாள் | விவரம் | பே.ப.எண் | பற்று ரூ. |
வரவு ரூ. |
|
|---|---|---|---|---|---|
| அறைகலன் க/கு | ப | 4,40,000 | |||
| சுகுணா நிறுவனக் க/கு | 4,40,000 | ||||
| (அறைகலன் வாங்கியது) | |||||
| சுகுணா நிறுவனக் க/கு | ப | 4,40,000 | |||
| பங்கு முதல் க/கு (40,000x10) | 4,00,000 | ||||
| பத்திர முனைமம் (40,000x1) | 40,000 | ||||
| (பங்கொன்று ரூ.10 வீதம் 40,000 பங்குகள் முனைமத்தில் வெளியிட்டது) |
குறிப்பு:
வெளியிடப்பட வேண்டிய பங்குகளின் எண்ணிக்கையைக் கணக்கிடுதல்
மொத்தத் தொகை =4,40,000
பங்குகளின் முக மதிப்பு =ரூ.10
முனைமம் =10%: ஆகையால், முனைமத் தொகை =10x 10%=ரூ.1
வெளியீட்டு விலை =முகமதிப்பு +முனைமம் =10+1=ரூ.11
8.
நிறுமம், நிலம் மற்றும் கட்டடம், இயந்திரம் போன்ற நிலைச் சொத்துகளை வாங்கும் போது, பங்குகளை ரொக்கத்திற்கு அல்லாத மறுபயனுக்காக வெளியிடலாம். இத்தருணத்தில் கீழ்க்கண்ட குறிப்பேடுப் பதிவுகளைப் பதிய வேண்டும்.
| நாள் | விவரம் | பே.ப.எண் | பற்று ரூ. |
வரவு ரூ. |
||
|---|---|---|---|---|---|---|
| 1) | சொத்துகளை வாங்கும் போது குறிப்பிட்ட சொத்து க/கு | ப | XXX | |||
| விற்பனையாளர் க/கு | XXX | |||||
| 2) | பங்குகளை வெளியிடும் போது விற்பனையாளர் க/கு | ப | XXX | |||
| நேர்மைப் பங்கு முதல் க/கு | XXX | |||||
| பத்திர முனைமக் க/கு (முனைமத்தில் வெளியிட்டால்) | XXX |
ஒரு நிறுமம் வணிக நிறுவனத்தை வாங்குவதற்காகவும், தோற்றுவிப்பாளர்களுக்கு அவர்களின் பணிக்காகவும், தரகர் மற்றும் ஒப்புறுதியாளர்களுக்கு கழிவு கொடுப்பதற்காகவும் போன்ற ரொக்கத்திற்கு அல்லாத மறுபயனுக்காக பங்குகளை வெளியிடலாம்.
9.
(அ) அங்கீகரிக்கப்பட்ட முதல்
இது அமைப்பு முறையேட்டின் படி அங்கீகரிக்கப்பட்ட முதல் ஆகும். இது அதிகபட்சமாக முதலாக திரட்ட அனுமதிக்கப்பட்ட தொகை. இதனைப் 'பதிவு செய்யப்பட்ட முதல்' அல்லது 'பெயரளவு முதல்' என்றும் கூறலாம்.
(ஆ) காப்புமுதல்
ஒரு நிறுமம் அதன் கலைப்பின் போது மட்டும் அழைப்பு விடுக்கலாம் என ஒதுக்கி வைத்துள்ள அழைக்கப்பட்ட முதலின் ஒரு பகுதியினை 'காப்பு முதல்' என்று அழைக்கலாம்.
10.
1) பங்கின் அழைக்கப்பட்ட மதிப்பை விட அதிகமாகப் பெறப்பட்ட தொகை அழைப்பு முன்பணம் எனப்படும். இது பங்கு விண்ணப்பம் அல்லது பங்கு ஒதுக்கீடு அல்லது பங்கு அழைப்புக் கணக்கில் அதிகமாக பெறப்பட்ட தொகையாகும்.
2) அவ்வாறு அதிகமாகப் பெறப்பட்ட தொகையை திருப்பி அளிக்க வேண்டும் அல்லது எதிர்காலத்தில் செலுத்த வேண்டிய தொகைகளில் சரிக்கட்ட வேண்டும்.
3) அவ்வாறு எதிர்காலத்தில் செலுத்தப்பட வேண்டிய தொகைகளில் சரிக்கட்ட தீர்மானித்தால், அந்த அதிகமாகப் பெறப்பட்ட தொகையை அழைப்பு முன்பணம் என்ற தனிக் கணக்கிற்கு மாற்றலாம்.
4) அழைப்பு முன்பணம் நிறுமத்தின் பங்கு முதலில் ஒரு பகுதி அல்ல மற்றும் அதற்கு பங்காதாயம் ஏதும் செலுத்த வேண்டியதில்லை.
5) இது இருப்புநிலைக் குறிப்பில் இதர நடப்புப்பொறுப்புகளின் கீழ் காட்டப்படும்.
11.
| நாள் | விவரம் | பே. ப.எ |
பற்று ரூ. |
வரவு ரூ. |
|
|---|---|---|---|---|---|
| நேர்மைப் பங்கு முதல் க/கு (200 × 10) | ப | 2,000 | |||
| நேர்மைப் பங்கு இறுதி அழைப்பு க/கு (200 × 3) | 600 | ||||
| பங்கு ஒறுப்பிழப்பு க/கு (200 × 7) | 1,400 | ||||
| (200 பங்குகள் ஒறுப்பிழப்பு செய்யப்பட்டன) | |||||
| வங்கி க/கு (200 × 6) | ப | 1,200 | |||
| பங்கு ஒறுப்பிழப்பு க/கு (200 × 4) | ப | 800 | |||
| நேர்மைப் பங்குமுதல் க/கு (200 × 10) | 2,000 | ||||
| (ஒறுப்பிழப்பு செய்த பங்குகள் மறுவெளியீடு செய்யப்பட்டன) | |||||
| பங்கு ஒறுப்பிழப்பு க/கு (1,400-800) | ப | 600 | |||
| முதலினக் காப்பு க/கு | 600 | ||||
| (பங்கு ஒறுப்பிழப்பு கணக்கு முதலினக் காப்பு கணக்கிற்கு மாற்றப்பட்டது) |
12.
(a)
ரூ.700
13.
(d)
பங்கொன்று ரூ.2
14.
(a)
பத்திர முனைமக் கணக்கு
15.
(d)
அழைக்கப்பட்ட தொகை
16.
(c)
(i) மற்றும் (ii) சரியானது
17.
1. பங்குதாரர் ஒருவர் ஒதுக்கீட்டு பணத்தையோ அல்லது அழைப்புப் பணத்தையோ செலுத்தத் தவறினால் அவருடைய பங்குகள் ஒறுப்பிழப்பு செய்யப்படும்.
2. ஒறுப்பிழப்பு செய்யும் போது, ஒதுக்கீடு ரத்து செய்யப்படுவதால், அந்த அளவிற்கு செலுத்திய முதல் குறைக்கப்படும். ஒறுப்பிழப்பு செய்ததற்கு பிறகு அந்த நபர் பங்குதாரர் என்ற தகுதியை இழக்கிறார்.
18.
1) பங்குதாரர் ஒருவர் தான் செலுத்த வேண்டிய ஒதுக்கீட்டுத் தொகை அல்லது அழைப்புத் தொகையை செலுத்தத் தவறினால், இன்னமும் செலுத்தப்படாமல் உள்ள தொகை 'அழைப்பு நிலுவை' எனப்படும்.
2) பிறிதொரு வகையில் கூற வேண்டுமானால் அழைக்கப்பட்டும், செலுத்தப்படாமல் உள்ள தொகை 'அழைப்பு நிலுவை' எனப்படும்.
19.
1) ஒரு நிறுமத்தின் முதல் குறிப்பிட்ட பண மதிப்பிலான சிறிய அலகுகளாகப் பிரிக்கப்பட்டிருக்கும்.
2) இந்த அலகுகள் 'பங்குகள்' என அழைக்கப்படுகின்றன.
i) முன்னுரிமைப் பங்குகள்
ii) நேர்மைப் பங்குகள்
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards