12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th English Poem - 6 - Incident of the French Camp Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Prose - 6 - On the Rule of the Road Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Prose - 5 - The Chair Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Supplementary - 4 - The Midnight Visitor Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Poem - 4 - Ulysses Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Prose - 4 - The Summit Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 20/08/2019
தாவரவியல் - உயிரிதொழில்நுட்பவியல் நெறிமுறைகளும் செயல்முறைகளும்
12ஆம் வகுப்பு Biology / உயிரியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Biology / உயிரியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Biology Test1.
உயிரினங்களில் அந்நிய DNA இரட்டிப்படைய __________ தேவை.
ROP
ORI
நிறுத்து கோடான்
TATA பெட்டி
2.
பயோ டெக்னாலஜி என்ற வார்த்தைகளை உருவாக்கியவர்
வெய்ஸ்னர்
கார்ல் பிரான்டில்
சாங்கர்
கார்ல் எரிக்கி
3.
ஒரு தாங்கிக்கடத்தியில் உயிரி எதிர்ப் பொருள் மரபணு எதனை தேர்ந்தெடுக்க உதவுகிறது?
போட்டி செல்கள்
மாற்றப்பட்ட செல்கள்
மறுகூட்டிணைவுச் செல்கள்
மேற்கூறிய எதுவுமில்லை.
4.
எத்திடியம் புரோமைடு எந்த தொழில்நுட்பமுறையில் பயன்படுத்தப்படுகிறது?
சதர்ன் ஒற்றியெடுப்பு தொழில்நுட்பமுறை
வெஸ்டர்ன் ஒற்றியெடுப்பு தொழில்நுட்பமுறை
பாலிமரேஸ் சங்கிலித் தொடர்வினை
அகரோஸ் இழுவை மின்னாற் பிரிப்பு
5.
சில தடைகட்டு (ரெஸ்ட்ரிக்சன்) நொதிகளினால் DNA வின் பின்வரும் எந்த ஒரு முன்பின் ஒத்த (பாலியான்ட்ரோம்) தொடர்வரிசையின் மையத்தில் எளிதாக துண்டிக்கிறது?
5' CGTTCG 3' 3' ATCGTA 5
5' GATATG 3' 3' CTACTA 5'
5' GAATTC 3' 3' CTTAAG 5'
5' CACGTA 3' 3' CTCAGT 5'
6.
மரபணுப் பொறியியல் ______.
செயற்கை மரபணுக்களை உருவாக்குதல்.
ஒரு உயிரினத்தின் DNA மற்றவைகளுடன் கலப்பினம் செய்தல்
நுண்ணுயிரிகளைப் பயன்படுத்தி ஆல்கஹால் உற்பத்தி
ECG, EEG போன்ற கண்டறியும் கருவிகள், செயற்கை உறுப்புகள் உருவாக்குதல்
7.
ரெஸ்ட்ரிக்ஷன் நொதிகள் என்பது ______.
மரபுப் பொறியியலில் எப்போதும் தேவைப்படுவதில்லை.
மரபுப் பொறியியலில் முக்கியமான கருவியாகும்.
நியுக்ளியேஸ் DNA வைக் குறிப்பிட்ட இடத்தில் துண்டித்தல்
ஆ மற்றும் இ
8.
Ori என்பது எதைக் குறிக்கிறது?
9.
PCR என்றால் என்ன?
10.
மரபணு மாற்றத்திற்கு பயன்படுத்தப்படும் வேதிப்பொருட்களின் பெயர்களைக் கூறுக.
11.
உயிரிதொழில்நுட்பவியல் ஆய்வகத்தில் ஈகோலை பாக்டீரியத்தைப் பயன்படுத்தி ஆய்வு செய்கிறாய். நியுக்ளியோடைடு தொடர்வரிசையை நீ எவ்வாறு துண்டிப்பாய்?
12.
தற்காலப் பயிற்சியில் உயிரி தொழில்நுட்பவியலை எவ்வாறு பயன்படுத்துவாய்?
13.
மரபணு மாற்றம் செய்யப்பட்ட உணவுகளால் ஏற்படும் ஆபத்துகளாக நம்பப்படுபவைகள் யாவை?
14.
ஒரு தாங்கிக்கடத்தியை எவ்வாறு அடையாளம் காண்பாய்?
15.
தடைகட்டு (ரெஸ்ட்ரிக்க்ஷன்) நொதி என்றால் என்ன? அவற்றின் வகைகளைக் கூறி, உயிரிதொழில்நுட்பவியலில் அதன் பங்கைக் குறிப்பிடுக?
16.
pBR 322 எனும் வார்த்தையிலிருந்து நீர் அறிந்து கொள்வது என்ன?
17.
18.
Bt பருத்தியின் நன்மை, தீமைகளை எழுதுக.
19.
டிரான்ஸ்போசான் தனிமங்கள்
20.
பிளாஸ்மிட்
21.
T1 பிளாஸ்மிட்
22.
பிளாஸ்மிட்
23.
அயல் மரபணுவைப் பெற்ற உயிரினத்தைப் பொறுத்தவரை பொருத்தமற்றத்தைத் தெரிவு செய்க.
| அ | உயிரி மருந்தாக்கம் | மனித பயன்பாட்டுக்கான மருந்து சார் பொருட்களை உண்டாக்கும். |
| ஆ | பூஞ்சை வழித்திருத்தம் | மரபணு பொறியியல் பாக்டீரியாக்களைக் கொண்டு சூழல் மாசுறுத்திகளை திருத்தம் செய்தல் |
| இ | உயிரி வழி பெருக்குதல் | தேர்ந்தெடுக்கப்பட்ட நுண்ணுயிரிகளைச் சேர்ப்பதன் மூலம் சிதைவடையும் வேகத்தை அதிகரிக்கச் செய்தல் |
| ஈ | உயிரி வழி கரைத்துப் பிரிதல் | மாசுறுத்தப்பட்ட இடங்களில் இருந்து கரைசல் உலோக மாசுறுத்திகளை கரைசல் நிலையில் நுண்ணுயிரிகளை பயன்படுத்தி மீட்டல். |
24.
அ) DMH -II - களைக்கொல்லி எதிர்ப்பு பட்டாணி
ஆ) PLA - உயிரி சிதைக்கக்கூடிய தெர்மோபிளாஸ்டிக்
இ) GFP - ஜெல்லி மீனிலிருந்து தனிமைப்படுத்தப்பட்ட புரதம்
ஈ) PPT - பாஸ்டா - களைக்கொல்லி தாக்கு பிடிக்கும் மரபணு
25.
உறுதிப்படுத்துதல் A: rDNA மூலக்கூறைப் பெற்ற செல்களை அடையாளம் கண்டறியும் முறை சலிக்கை செய்தல் எனப்படும்.
காரணம் R : மறுகூட்டிணைவு அடைந்த செல்களில் உள்ள தாங்கிக் கடத்தி அல்லது அயல் DNA பண்புகளை வெளிப்படுத்துகிறது. மாறாக மறுகூட்டிணைவு அடையாத செல்கள் இந்தப் பண்புகளை வெளிப்படுத்துகிறது.
பின்வருவனவற்றுள் இரண்டு வாக்கியங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
உறுதிப்படுத்துதல் A மற்றும் காரணம் R சரியானதைத் தெரிவு செய்க
அ. உறுதிப்படுத்துதல் 'A' மற்றும் காரணம் 'R' சரியானது கரணம் 'R' உறுதிப்படுத்துதல் 'A' ஐ சரியாக விளக்குகிறது.
ஆ. உறுதிப்படுத்துதல் 'A' மற்றும் காரணம் 'R' சரியானது. காரணம் 'R' உறுதிப்படுத்துதல் 'A' ஐ சரியாக விளக்குகிறது.
இ. உறுதிப்படுத்துதல் 'A' சரி. காரணம் 'R' தவறு
ஈ. உறுதிப்படுத்துதல் 'A' மற்றும் காரணம் 'R' தவறானது
26.
உறுதிப்படுத்துதல் A: EcoRI இல் 'R' என்ற எழுத்து பாக்டீரியாவின் பேரினமாகும். (அ) அவற்றின் நொதிகள் தேவையான பொருட்களை உற்பத்தி செய்வதற்கு வினைபுரியும் உகந்த சூழலைக் கொண்டுள்ளது.
காரணம் R : EcoRI என்பது பாலிண்ட்ரோம் நியூக்ளியோடைடு தொடர்வரிசையின் பெயராகும்.
பின்வருவனவற்றுள் இரண்டு வாக்கியங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
உறுதிப்படுத்துதல் A மற்றும் காரணம் R சரியானதைத் தெரிவு செய்க
அ. உறுதிப்படுத்துதல் 'A' மற்றும் காரணம் 'R' சரியானது கரணம் 'R' உறுதிப்படுத்துதல் 'A' ஐ சரியாக விளக்குகிறது.
ஆ. உறுதிப்படுத்துதல் 'A' மற்றும் காரணம் 'R' சரியானது. காரணம் 'R' உறுதிப்படுத்துதல் 'A' ஐ சரியாக விளக்குகிறது.
இ. உறுதிப்படுத்துதல் 'A' சரி. காரணம் 'R' தவறு
ஈ. உறுதிப்படுத்துதல் 'A' மற்றும் காரணம் 'R' தவறானது
27.
உறுதிப்படுத்துதல் A: உயிரி வினைகளின் இது வினைபடு பொருட்களுடன் நுண்ணுயிரிகள் (அ) அவற்றின் நொதிகள் தேவையான பொருட்களை உற்பத்தி செய்வதற்கு வினைபுரியும் உகந்த சூழலைக் கொண்டுள்ளது.
காரணம் R: இந்த உயிரி வினை கலனில் காற்றோட்டம், கிளர்வூட்டம், வெப்பநிலை போன்றவை கட்டுப்படுத்தப்பட்டு மேற்கால் பதப்படுத்துதல் மற்றும் கீழ்க்கால் பதப்படுத்துதல் என இரு செயல்முறைகளை உள்ளடக்கியது.
பின்வருவனவற்றுள் இரண்டு வாக்கியங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
உறுதிப்படுத்துதல் A மற்றும் காரணம் R சரியானதைத் தெரிவு செய்க
அ. உறுதிப்படுத்துதல் 'A' மற்றும் காரணம் 'R' சரியானது கரணம் 'R' உறுதிப்படுத்துதல் 'A' ஐ சரியாக விளக்குகிறது.
ஆ. உறுதிப்படுத்துதல் 'A' மற்றும் காரணம் 'R' சரியானது. காரணம் 'R' உறுதிப்படுத்துதல் 'A' ஐ சரியாக விளக்குகிறது.
இ. உறுதிப்படுத்துதல் 'A' சரி. காரணம் 'R' தவறு
ஈ. உறுதிப்படுத்துதல் 'A' மற்றும் காரணம் 'R' தவறானது
28.
எலிசா பற்றிய தவறான கூற்றினைக் கண்டறிக.
அ) ELISA - இது நோய் கிருமிகளின் நோய் எதிர்ப்புரதப் பொருள்களையும் மற்றும் கண்டறிய உதவும் காரணிகளை பயன்படுத்திக்கொண்டு நோயினைக் கண்டறியும் முறை
ஆ) அதிகளவு நடவுகளிலிருந்து வைரஸ் தாக்கிய தாவரங்களை களையெடுக்க பயன்படுகிறது.
இ) இது AIDS நோயைக் கண்டறியும் ஒருவகை பரிசோதனையாகும்.
ஈ) இது மைக்கோபாக்டீரியம் டியூபர்குலோசிஸின் நோய் எதிர்ப்புரதம் கண்டறியும் முறையாகும்.
29.
சாதாரண அரிசியில் _________ காணப்படுவதில்லை
30.
குளுட்டெனின் அதிகம் காணப்படும் தானியம் _________.
31.
ELISA-வைக் கண்டறிந்த இந்திய விஞ்ஞான ________
32.
Bt. நச்சுப்புரதம் உருவாக்கும் மரபணுக்கள் _________ எனப்படும்.
33.
உகந்த வளர்ப்பு நிலையில் தன் செல்கள் ஒவ்வொரு 20 நிமிடத்திற்கும் இரண்டாக பகுப்படைவது ________
1.
(b)
ORI
2.
(d)
கார்ல் எரிக்கி
3.
(b)
மாற்றப்பட்ட செல்கள்
4.
(d)
அகரோஸ் இழுவை மின்னாற் பிரிப்பு
5.
(c)
5' GAATTC 3' 3' CTTAAG 5'
6.
(b)
ஒரு உயிரினத்தின் DNA மற்றவைகளுடன் கலப்பினம் செய்தல்
7.
(d)
ஆ மற்றும் இ
8.
1. இந்தத் தொடர் வரிசை பெருக்கமடைதலின் தோற்றம் எனப்படுகிறது.
2. இந்தத் தொடர் வரிசையிலிருந்து தான் இரட்டிப்பாதல் தொடங்கப்படுகிறது.
3. இந்தத் தொடர் வரிசையுடன் ஒரு துண்டு DNA இணைக்கப்பட்டால் ஓம்புயிரி செல்லுக்குள் அதனைப் பெருக்கமடையச் செய்ய முடியும்.
9.
PCR பாலிமெரேஸ் சங்கிலி வினை என்பது மில்லியன் எண்ணிக்கையில் DNA ஒரு பகுதியை நகலெடுக்கும் சாதாரணமான ஆய்வக முறையாகும்.
10.
நேரடி (அ) தாங்கிக் கடத்தி அற்ற மரபணு மாற்ற முறையில் விரும்பத்தகுந்த அயல் மரபணுவை தாங்கிக் கடத்தி உதவி இல்லாமல் ஓம்புயிரி தாவரத்திற்குள்ளாக செலுத்தப்படுகிறது.
வேதியியல் வழி மரபணு மாற்றம்
பாலி எத்திலீன் கிளைக்கால் மற்றும் டெக்ஸ்ட்ரான் சல்ஃபேட் போன்ற சில வேதிப்பொருட்கள் தாவரங்களில் புரோட்டோபிளாஸ்ட்களுக்குள் DNA வை எடுத்துக் கொள்ளத் தூண்டுகின்றன.
11.
ஒரு மரபணு நகலாக்க சோதனையின் வடிவமைப்பில் ஒரு தடைக்கட்டு நொதியினால் உண்டாக்கப்படும் சரியான வகை பிளவு முக்கியமானதாகும். குறிப்பாக இரண்டு வகை காணப்படுகிறது.
| அ) | சமச்சீர் துண்டிப்புகள், | சமச்சீரற்ற துண்டிப்புகள் |
சில தடைகட்டு நொதிகள் இரண்டு DNA இழைகளின் மையப் பகுதியின் ஊடே பிளவு ஏற்படுத்துவதன் விளைவாக மழுங்கிய (அ) பறிக்கப்பட்ட முனை உண்டாகிறது.![]() |
சில நொதிகள் DNA வை வெட்டும் போது நீட்டிக் கொண்டு காணப்படும் முனைகள் உண்டாகின்றன. இவை ஒட்டும் (அ) ஒட்டிணைவான முனைகள் என அழைக்கப்படுகின்றன.![]() |
12.
இன்று உலகெங்கும் ஒரு பில்லியன் டாலர் வர்த்தகம் நடைபெறுகிறது.
தற்கால (அ)நவீன உயிரி தொழில்நுட்பவியல் மரபணு மாற்றம் மட்டுமின்றி, செல்லிணைவுத் தொழில்நுட்பத்தையும் உள்ளடக்கியது.
மருந்து நிறுவனங்கள், மதுபானத் தொழிலகங்கள், வேளாண்தொழிற்சாலைகள் மற்றும் பிற சார்ந்த தொழில்கள். அவற்றின் முன்னேற்றத்திற்காக உயிரி தொழில்நுட்பக்கருவிகள் பயன்படுத்தப்படுகின்றன.
| தொழில் நுட்பம் | பயன்கள் | |
| அ) | நொதித்தல் | அமிலங்கள், நொதிகள், ஆல்கஹால்கள் உயிரி எதிர்ப்பொருட்கள், நுண்வேதியப் பொருட்கள், வைட்டமின்கள் மற்றும் நச்சுப் பொருட்களின் உற்பத்தி |
| ஆ) | பெருமளவு உயர்த்திரள் உற்பத்தி | ஒற்றை செல் புரதம், ஆல்கஹால் மற்றும் உயிரி எதிர்ப்பொருள் |
| இ) | நொதிகள் | பதப்படுத்தும், தொழிற்சாலைகளில் உயிரி உணர்வுகளாக செயல்படுவதால் |
| ஈ) | உயிரி எரிபொருள் உற்பத்தி | ஹைட்ரஜன் எரிபொருள், ஆல்கஹால், மீத்தேன் போன்றவை |
| உ) | நுண்ணுயிரி உப்புக்கட்டல்கள் | உயிரி உரங்கள் மற்றும் நைட்ரஜன் நிலைநிறுத்திகள் |
| ஊ) | தாவர மற்றும் விலங்கு செல் வளர்ப்பு | இரண்டாம் நிலை வளர்ச்சிப் பொருட்கள் மற்றும் மோனோகுளோனல் ஆண்டிபாடி உற்பத்தி |
| எ) | மறுகூட்டிணைவு DNA தொழில் நுட்பம் மூலம் பெறுவது | நொதிகள், தடுப்பூசிகள், வளர்ச்சி ஹார்மோன்கள், உயிரி எதிர்பொருட்கள் மற்றும் இண்டர்ஃபெரான்களின் உற்பத்தி |
| ஏ) | செயல்முறை பொறியியல் | நீர் மறுசுழற்சி மற்றும் கழிவுப் பொருட்களின் சுத்தகரிப்பில் பயன்படும் - உயிரி தொழில் நுட்ப கருவியின் பயன்பாடு. |
13.
1. உறுப்புகள் பாதிப்பு - கல்லீரல், சிறுநீரக செயல்பாட்டை பாதிக்கிறது.
2. புற்றுநோய் பாதிப்பு ஏற்படும்
3. ஹார்மோன் சமமின்மை மற்றும் உடல்நிலை சீர்குலையும்.
4. நோயெதிர்ப்பு தன்மை தொகுதியில் மோசமான விளைவு ஏற்படும்.
5. பிறழ்ச்சியடைந்த அதிர்ச்சி (திடீர் மிகையுணர்வு வினை) மற்றும் ஒவ்வாமை
6. விதைகளின் உயிர்ப்புத்தன்மை இழப்பு -(எ.கா) முடிவுறுத்தி விதை தொழில் நுட்பம்
14.
| பண்புகள் | செயல்/பணி | |
| அ | தன்னிச்சையாகப் பெருக்கமடைய திறன் | ஓம்புயிரி செல்களுக்குள் அவற்றுடைய DNA செருகலுடன் தன்னிச்சையாக பெருக்கமடைந்து பல மடங்கு நகல்களை உற்பத்தி செய்கிறது. |
| ஆ. | சிறிய அளவு -குறைந்த மூலக்கூறு எடை கொண்டிருக்க வேண்டும் (10kb க்கும் குறைவு) | இதனால் ஓம்புயிரி செல்லுக்குள் நுழைத்தால், மாறுதல் எளிதாகிறது. |
| இ. | பெருக்கமடைதல் தோற்றுவிக்க காணப்பட வேண்டும்.(Ori) | காணப்பட்டால் மட்டுமே ஓம்புயிரி செல்லுக்குள் தன்னிச்சையாகப் பெருக்கமடைய இயலும். |
| ஈ. | அடையாளக் குறி (உயிரி எதிர்ப்பொருள் தடுப்பு) கொண்டிருக்க வேண்டும். | இதனால் மரபணு மாற்றமடைந்த ஓம்புயிரி செல்லுக்குள் அதனை அடையாளம் கண்டறிய முடியும். |
| உ. | DNA செருகலோடு ஒருங்கிணைவதற்கு தனிப்பட்ட இலக்குக் கலங்களைப் பெற்றிருக்க வேண்டும் மற்றும் தாங்கியிருக்கும் DNA செருகலுடன் சேர்ந்து ஓம்புயிரி செல்லின் மரபணு தொகுப்புடன் ஒருங்கிணையும் திறனைப் பெற்றிருக்க வேண்டும். | இதனால் ஓம்புயிரியின் மரபணு தொகுப்புக்குள் எடுத்துச் செல்லப்பட இயலும். |
| ஊ. | ஒன்று (அ) ஒன்றுக்கு மேற்பட்ட நகலாக்க களங்கள் (MCS) கொண்டிருப்பது சிறப்பானது. | MCS இருப்பதால் தேவைப்படும் தடைக்கட்டு நொதிகளின் பயன்பாட்டிற்கு வழிவகை செய்கிறது. |
15.
1. இது மூலக்கூறு கத்தரிக்கோல் எனப்படுகிறது.
2. 1963 ஆம் ஆண்டு எ.கோலை பாக்டீரியாவில் இருந்து தனிமைப்படுத்தப்பட்டது.
3. இது DNA மூலக்கூறுக்குள் குறிப்பிட்ட அடையாளம் காணக்கூடிய பகுதிக்கு அருகில் (அ) இடத்தில் DNA ஐ துண்டிக்கின்றன. இது தடைகட்டு களம் எனப்படும்.
4. செயல்படும் விதம் அடிப்படையில் பிரிப்பது
அ. எக்சோ நியூக்ளியேஸ்
DNA மூலக்கூறின் உட்புறம் ஒரு முனையில் இருந்து நியுக்ளியோடைடுகளை நீக்குகிறது.
(எ.கா) Bal 31, எக்சோ நியுக்ளியேஸ் III
ஆ. எண்டோ நியூக்ளியேஸ்
இது நொதி மூலக்கூறின் உட்புறம் உள்ள ஃபாஸ்ஃபோடை - எஸ்டர் பிணைப்பை நீக்குகிறது.
(எ.கா) Hind II, EcoR 1, Pvul, Bam H1, Taq போன்றவை
எண்டோ நியூக்ளியேஸ் 3 வகுப்புகளைக் கொண்டது.
வகை I, II மற்றும் இவை செயல்படும் விதத்தில் சிறிய வேறுபாடுகளைக் கொண்டது.
வகை - II : இது மறுகூட்டிணைவு தொழில் நுட்பத்தில் அதிகம் பயன்படுகிறது. இது 4-8bp கொண்டுள்ள வரிசைக்குள்ளே DNA வை அடையாளம் கண்டறிந்து Hind II
குறிப்பிட்ட வரிசையிலுள்ள 6 கார இணைகளை அடையாளம் கண்டறிந்து அங்கு DNA மூலக்கூறுகளைத் துண்டிக்கிறது (Recognition sequences). இது வரை வேறுபட்ட அடையாள தொடர்வரிசை உடைய ஏறத்தாழ 900 தடைகட்டு நொதிகள் பாக்டீரியங்களிலிருந்து பிரித்து எடுக்கப்பட்டுள்ளன.
16.
1. pBR 322 என்பது மறுகட்டமைக்கப்பட்ட பிளாஸ்மிட் ஆகும்.
2. இதில் 4361 bp கொண்டுள்ளது.
3. p = பிளாஸ்மிட்
4. BR - பிளாஸ்மிட் உருவாக்கி, அறிஞர்களான பொலிவர் மற்றும் ரொட்ரிக்ஸ் ஆகிய இருவரையும் குறிக்கின்றன.
5. 322 = அவர்களுடைய ஆய்வகத்தில் உருவாக்கப்பட்ட பிளாஸ்மிட்டின் எண்ணிக்கையாகும்.
இதில் காணப்படுவன
1. இரு வேறுபட்ட உயிரி எதிர்ப்பொருள் தடுப்பு மரபணுக்கள் (ampR, tetR)
2. பல தடைக்கட்டு நொதிகளுக்கான அடையாளக் களங்கள் (Hind III, EcoRI, Bam H1, SalI, PvuII, Pst1, ClaI)
3. Ori -மரபணு
4. Rop - பிளாஸ்மிட் பெருக்கமடைவதில் ஈடுபடும் புரதங்களையும் Rop குறியீடு செய்கிறது.
17.
18.
நன்மைகள்
1. விளைச்சல் அதிகரிக்கிறது. ஏனெனில் காய்ப்புழுக்களின் தாக்குதல் கட்டுப்படுத்தப்படுகிறது.
2. பூச்சிக்கொல்லிகளின் பயன்பாடு குறைகிறது.
3. பயிர் வளர்ப்பில் உண்டாகும் செலவு குறைகிறது.
தீமைகள்
1. இதன் விதையின் விலை அதிகம்.
2. முதல் 120 நாட்கள் மட்டுமே வீரியமுள்ளதாக இருக்கிறது. பின்னர் இதன் வீரியம் வர வர குறைகிறது.
3. சாறு உறிஞ்சும் தத்துப்பூச்சிகள், அசுவினிப்பூச்சிகள், வெள்ளை ஈக்கள் போன்றவற்றிற்கு எதிராகச் செயல்படுவதில்லை.
4. மகரந்தச்சேர்க்கையில் துணைபுரியும் பூச்சிகளை பாதிக்கிறது. அதனால் விளைச்சல் குறைகிறது.
19.
நடமாடும் மரபணு
20.
பொதுவாக குளோனிங் வெக்டாராக செயல்படுகிறது
21.
ஒரு ori மற்றும் inc மரபணு உடையது
22.
ds -வட்ட மரபணு
23.
| ஆ | பூஞ்சை வழித்திருத்தம் | மரபணு பொறியியல் பாக்டீரியாக்களைக் கொண்டு சூழல் மாசுறுத்திகளை திருத்தம் செய்தல் |
24.
DMH -II - களைக்கொல்லி எதிர்ப்பு பட்டாணி
25.
அ. உறுதிப்படுத்துதல் 'A' மற்றும் காரணம் 'R' சரியானது கரணம் 'R' உறுதிப்படுத்துதல் 'A' ஐ சரியாக விளக்குகிறது.
26.
ஈ. உறுதிப்படுத்துதல் 'A' மற்றும் காரணம் 'R' தவறானது
27.
அ. உறுதிப்படுத்துதல் 'A' மற்றும் காரணம் 'R' சரியானது கரணம் 'R' உறுதிப்படுத்துதல் 'A' ஐ சரியாக விளக்குகிறது.
28.
இது மைக்கோபாக்டீரியம் டியூபர்குலோசிஸின் நோய் எதிர்ப்புரதம் கண்டறியும் முறையாகும்.
29.
( )
பீட்டா கரோட்டின்
30.
( )
நெல்
31.
( )
உஷா M. ஜோஷி
32.
( )
Cry-மரபணுக்கள்
33.
( )
ஈ.கோலை
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th English Supplementary - 3 - The Hour of Truth (Play) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Poem - 3 - All the World’s a Stage Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Prose - 3 - In Celebration of Being Alive Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Supplementary - 2 - Life of Pi Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards