12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th English Poem - 6 - Incident of the French Camp Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Prose - 6 - On the Rule of the Road Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Prose - 5 - The Chair Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Supplementary - 4 - The Midnight Visitor Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Poem - 4 - Ulysses Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Prose - 4 - The Summit Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 24/02/2020
12 ஆம் வகுப்பு உயிரியல் அனைத்து பாட மாதிரி வினாக்கள் II 2020 (12th Standard Tamil Biology Model Questions All Chapter II 2020)
12ஆம் வகுப்பு Biology / உயிரியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Biology / உயிரியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Biology Test1.
ஹைபோபிளாஸ்ட் என்ற அடுக்கு கருவின் _______ அடுக்காகும்.
புற
நடு
அக
பெரிடெர்ம்
2.
மனித பால்நிர்ணய முறையும் ______ முறையும் ஒன்றாகும்.
தேனீ
கரப்பான் பூச்சி
பழப்பூச்சி
எறும்பு
3.
சரியான கூற்று காண்
வேரிகோசீல் பெண்களுக்கு ஏற்படும்.
உடலில் கொழுப்பு அளவு குறைதல் ஆண்களுக்கு ஏற்படும்.
ஆண்கள் விந்து செல்லுக்கு எதிராக எதிர்ப்புப்பொருள் உருவாக்குதல்
ஆண்கள் தங்கள் சொந்த விந்து செல்களுக்கு எதிராக சுயத்தடைகாப்பு விளைவை ஏற்படுத்துதல்.
4.
| பகுதி -I | பகுதி -II | ||
|---|---|---|---|
| அ . | எளிய ஒழுங்கற்ற இரு சமபிளவு | i. | யூக்ளினா |
| ஆ. | கிடைமட்ட இருசமபிளவு | ii. | Dinoflagellates |
| இ) | நீள்மட்ட இருசமபிளவு | iii | அமீபா |
| ஈ) | சாய்வுமட்ட இருசமபிளவு | iv | பாரமீசியம் |
அ-iii,ஆ-iv,இ-ii,ஈ-i
அ-ii,ஆ-i,இ-iv,ஈ-iii
அ-iv,ஆ-ii,இ-iii,ஈ-i
அ-iii,ஆ-iv,இ-i,ஈ-i
5.
கிரிஃபித்தின் முக்கிய கண்டுபிடிப்பானது
மெல்லிய புறப்பரப்புடைய பாக்டீரியா நோயை உண்டாக்கியது
சொரசொரப்பான புறப்பரப்பு உடைய பாக்டீரியா எலியைக் கொல்லவில்லை
DNA மரபணுப்பொருள் என்பதற்கான சான்று
மரபணுப்பொருள் இறந்த பாக்டீரியாவில் இருந்து உயிருள்ள பாக்டீரியாவில் தோற்ற மாற்றம் (transformation) உண்டாக்கியது
6.
கீழ்வருவனவற்றுள் HIV ஹெபாடிடிஸ் (B), வெட்டைநோய் மற்றும் டிரைகோமோனியாஸிஸ் பற்றிய சரியான கூற்று எது?
வெட்டைநோய் மட்டும் பால்வினை நோய், பிற அனைத்தும் பால்வினை நோய்கள் அல்ல.
டிரைகோமோனியாஸிஸ் ஒரு வைரஸ் நோய், பிற அனைத்தும் பாக்டீரிய நோய்கள்
HIV என்பது நோய்க்கிருமி பிற அனைத்தும் நோய்கள்
ஹெபாடிடிஸ் மட்டும் முழுமையாக ஒழிக்கப்பட்டு விட்டது. ஆனால், பிற அப்படியல்ல.
7.
15N ஊடகத்தில் வளர்க்கப்படும் எ.கோலை 14N ஊடகத்திற்கு மாற்றப்பட்டு இரண்டு தலைமுறைகள் பெருக்கமடைய அனுமதிக்கப்படுகிறது. இச்செல்களிலிருந்து பிரித்தெடுக்கப்படும் டி.என்.ஏ. சீசியம் குளோரைடு அடர்வு சாய்வாட்டத்தில் நுண் மைய விலக்கு செய்யப்படுகிறது. இச்சோதனையில் டி.என்.ஏ வின் எவ்வகை அடர்வுப் பரவலை நீ எதிர்பார்க்கலாம்?
ஒரு உயர் மற்றும் ஒரு குறை அடர்வுக் கற்றை
ஒரு நடுத்தர அடர்வுக் கற்றை
ஒரு உயர் மற்றும் நடுத்தர அடர்வுக் கற்றை
ஒரு குறை மற்றும் ஒரு நடுத்தர அடர்வுக் கற்றை.
8.
கீழ்க்கண்ட எந்த மாதவிடாய்க்கோளாறு சரியாகப் பொருத்தப்பட்டுள்ளது?
மெனோரேஜியா – ஒழுங்கற்ற மாதவிடாய்
ஏமெனோரியா – மாதவிடாய் இல்லாதிருத்தல்
டிஸ்மெனோரியா – அதிகப்படியான மாதவிடாய்
ஆலிகோமெனோரியா – வலி மிகுந்த மாதவிடாய்
9.
கிளைன் ஃபெல்டர் சிண்ட்ரோம் குரோமோசோம் தொகுப்பு வரைபடம் எவ்வாறு வகைப்படுத்தப்பட்டுள்ளது?
XYY
XO
XXX
XXY
10.
எவ்வகைக் கன்னி இனப்பெருக்கத்தில் ஆண் உயிரிகள் மட்டுமே உருவாகின்றன?
அர்ரீனோடோக்கி
தெலிடோக்கி
ஆம்ஃபிடோக்கி
'அ' மற்றும் 'இ' இரண்டும்
11.
மாதவிடாயைக் கையாளத் தேவையான பொருட்கள் எவை?
12.
குரோமோசோம் தொகுப்பு வரைபடத்தின் மூலம் கண்டறியப்பட்ட குரோமோசோம் பிறழ்ச்சிகள் யாவை?
13.
பாக்டீரிய பால்வினை நோய்களுக்கு எடுத்துக்காட்டு தருக.
14.
குட்டி ஈனும் உயிரிகள் என்றால் என்ன?
15.
ஜீனோஃபோர் என்றால் என்ன?
16.
கீழ்க்கண்ட படியெடுத்தல் அலகில் A மற்றும் B எனக் குறிக்கப்பட்டுள்ளவற்றை எழுதுக.
17.
பனிக்குடத் துளைப்பு என்பது யாது? இத்தொழில் நுட்பத்திற்கு சட்டப்படியான தடை விதிப்பது ஏன்?
18.
சீம்பால் என்றால் என்ன? அதன் முக்கியத்துவம் யாது?
19.
ஒற்றைமய – இரட்டைமய நிலை என்றால் என்ன?
20.
பெண் இனச்செல் நேரடியாக வளர்ச்சியடைந்து சேயாக மாறும் நிகழ்வின் பெயரையும் அது நிகழும் ஒரு பறவையின் பெயரையும் குறிப்பிடுக.
21.
இயல்பான குழந்தைப் பிறப்பு நடைபெற இயலாதபோது, தீர்வு என்ன?
22.
பிஷர் மற்றும் ரேஸ் கொள்கை எவ்வாறு வெய்னரின் கொள்கையிலிருந்து வேறுபடுகிறது?
23.
நம்நாட்டில் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட பிற நடவடிக்கைகள் எவை?
24.
சுவர்பல்லி தன்னுடைய வாலை ஏன் தன்னிச்சையாக இழக்கின்றது?
25.
தன்னியக்க இரட்டிப்பாதல் பற்றி எழுதுக.
26.
கடத்து ஆர்.என்.ஏ, ‘இணைப்பு மூலக்கூறு’ என ஏன் அழைக்கப்படுகிறது?
27.
முக்கிய பால்வினைநோய்களையும் அவற்றின் அறிகுறிகளையும் விளக்குக
28.
விந்தக அமைவிடத்தின் முக்கியத்துவத்தைக் குறிப்பிடு.
29.
30.
காரணங்கள் கூறுக.
அ) தேனீக்கள் போன்ற உயிரிகள் கன்னி இனப்பெருக்க விலங்குகள் என்று அழைக்கப்படுகின்றன
ஆ) ஆண் தேனீக்களில் 16 குரோமோசோம்களும் பெண் தேனீக்களில் 32 குரோமோசோம்களும் காணப்படுகின்றன.
31.
அக்ரோசம் வினையை விவரி.
32.
யூஜெனிக் பாரம்பரியம் பற்றி குறிப்பு வரைக.
33.
விருப்பதுடனோ, வேண்டுமென்றோ, கருவளர்ச்சியை முடிவுக்குக் கொண்டுவரும் மருத்துவமுறை எது? விளக்குக?
34.
இருசமப்பிளவு முறைகளை பற்றி விரிவாக விடையளி.
35.
DNA திருகுச்சுழலில் சிறு திறப்பு வழி இரட்டிப்பாதல் தொடங்குகிறது (இரட்டிப்பாதல் பிளவு)
36.
37.
“ஆரோக்கியமான இனப்பெருக்கம் சட்டப்படி கட்டுப்படுத்தப்பட்டுள்ள பிறப்புக் கட்டுப்பாட்டு வழிமுறைகள் மற்றும் முறையான குடும்ப நலத்திட்டம் போன்றன மனித வாழ்விற்கு முக்கியமானவை”– கூற்றை நியாயப்படுத்து.
38.
மாதவிடாய் சுழற்சியின் பல்வேறு நிலைகளை விளக்குக.
39.
பழப்பூச்சியை (டிரோசோஃபைலா) உதாரணமாக கொண்டு மரபு சமநிலை அடிப்படையில் பால் நிர்ணயம் நடைபெறுவதை விவாதி?
40.
இளவுயிரி நிலை எவ்வாறு இனப்பெருக்க நிலையிலிருந்து வேறுபட்டுள்ளது?
41.
விந்தக மேல்சுருள் நாள அழற்சியை உருவாக்குவது ________
42.
13 வது குரோமோசோமின் டிரைசோமிக் நிலை ________
43.
தாய் சேய் இணைப்புத்திசு மூலம் உணவூட்டம் பெற்று கருப்பையினுள் வளர்ச்சியடைந்து முழு உயிரி உயிருடன் பிறக்கும் நிகழ்ச்சி ______ எனப்படும்.
44.
தோற்ற மாற்றம் குறித்து ஆய்வுகளை மேற்கொண்டவர் ________ ஆவார்
45.
ரிபோசோம்களில் இரு துணை அலகுகள் உள்ளன. சிறிய துணை அலகு ஒரு ______ இணைவதற்கான இணைப்பிடத்தையும், பெரிய துணை அலகு _____ இணைவதற்கான இரண்டு இணைப்பிடங்களையும் கொண்டுள்ளன
46.
அ.பறவைகள் குட்டி ஈனுபவை ஆகும்.
ஆ.பசு ஒரு தாயுள் முட்டைப் பொரித்துக் குட்டி ஈனும் விலங்காகும்.
இ.சுறா மீன் ஒரு தாயுள் முட்டைப் பொரித்துக் குட்டி ஈனும் விலங்காகும்
ஈ.செம்மறி ஆடு ஒரு முட்டையிடும் விலங்காகும்.
47.
நெறிப்படுத்தும் புரதத்தைப் பொறுத்தவரையில் பின்வருவனவற்றில் இந்தக் கூற்று சரியானது?
வெளிப்பாட்டை அதிகரிக்கிறது
வெளிப்பாட்டைக் குறைக்கிறது
RNA பாலிமரேஸ் உடன் இடைபட்டு ஆனால் வெளிப்பாட்டை பாதிப்பதில்லை
அது ஊக்குவிப்பானாகவும் அடக்கியாகவும் செயல்படுகிறது.
48.
அ) கருத்தடை மாத்திரை நீண்டநாள் பயன்படுத்தினால் கருப்பைவாய் புற்று ஏற்படும்.
ஆ) PET ஸ்கேன் கருப்பை வாய்ப்புற்றைக் காண பயன்படும்.
இ) முதனிலைத் தடுப்பு 14 முதல் 18 வயது வரை காண HPV தடுப்பூசி மூலம் அளிக்கப்படும்.
ஈ) ஓரினை இனப்பெருக்க முறை மூலம் கருப்பைவாய் புற்றுநோய் குறையும்.
49.
1.ZO -ZZ வகை பால் நிர்ணயம் வண்ணத்துப்பூச்சியில் நடைபெறுகிறது.
2. ZW - ZZ வகை பால் நிர்ணயம் பழப்பூச்சியில் நடைபெறுகிறது.
3. லைகேயஸ் வகை ஊர்வனவற்றில் நடைபெறுகிறது.
4. XX -Xo வகை ஜிப்சி அந்தி பூச்சியில் நடைபெறுகிறது.
50.
அ.அமீபா பெயரிட்டவர் ஆகஸ்ட் ஜோகன் ரோசல்
ஆ. ஒபாலினா என்ற உயிரியல் பிளாஸ்மோடோமி எனப்படும்.
இ. நட்சத்திர மீனில் தான் முதன்முதலில் இழப்பு மீட்டல் பற்றி ஆய்வு மேற்கொண்டனர்.
ஈ. ஆம்ஃபிடோகியின் (எ.கா) ஏஃபிஸ்
51.
1. முதல் மரபணுப் பொருள் RNA ஆக இருக்கக்கூடும்.
2. DNA மற்றும் ஹிஸ்டோன் புரதங்களின் ஒட்டு மொத்த மின் ஆற்றல் - ஜீரோ
3. படியெடுத்தலின் துவக்கத்திற்கு வினையூக்கியாக இருப்பது பாலிமரேஸ்
4 ரிபோசோம் தூது RNA வினால் தூண்டப்பட குறிப்பிட்ட அடர்வு Mg ++ தேவை.
52.
a. தலாசீமியா - அசாதாரணமான ஹீமோகுளோபின்
b. பினைல் கீட்டோனூரியா - டைரோசின்
c.அல்பீனிசம் - மெலனின்
d.ஹன்டிங்டன் கோரியா - கூலிஸ் இரத்த சோகை
53.
அ. முட்டையிடுபவை
ஆ. கன்னி இனப்பெருக்கம்
இ.குட்டி ஈனுபவை
ஈ.தாயுள் முட்டை பொரித்துக் குட்டி ஈனும்
54.
அ) ஊக்குவிப்பான் மரபணு
ஆ) அமைப்பு மரபணு
இ) தூண்டும் மரபணு
ஈ) டெர்மினேட்டர்
55.
அ) கருக்குழல் தடை - அண்ட நாள வெட்டு
ஆ) விந்துக்குழல் தடை - விந்து நாள வெட்டு
இ) ஹார்மோன் வெளிவிடும் உள் கருப்பை சாதனம் - LNG 20
ஈ) தாமிரம் வெளிவிடும் உள்கருப்பை சாதனம் - Multiload 475
56.
| பகுதி I | பகுதி II | ||
|---|---|---|---|
| அ | பாலிலி இனப்பெருக்கம் | a. | மரபணு ஒத்த |
| ஆ. | பாலினப்பெருக்கம் | b. | மரபணு ஒத்த |
| இ. | அமீபா | c . | ஒபலினா |
| ஈ. | நாடாப்புழு | d | டீனியா சோலியம் |
57.
அ) ஒரே முழு பாலிபெப்டைடுக்கு குறியீடாகும் DNA - வின் பகுதி - சிஸ்ட்ரான்
ஆ) தொடர்புடைய பணியைச் செய்யும் ஒரு கூட்டமான ஜீன்கள் - ஒபரான்
இ) ஒன்றிற்கு மேற்பட்ட பாலிபெப்டைடுகளுக்கு குறியீடாகும் பாக்டீரியா மற்றும் வைரஸின் ஜென்கள் - பாலிசிஸ்ட்ரானிக் ஜீன்
(ஈ) மிகப்பெரிய மனித ஜீன் - டிஸ்டிராபின்
58.
1. டர்னர் சிண்ட்ரோம் - XXY ஆண்
2. கிளைன் பெல்ட்டர் சிண்ட்ரோம் - XO பெண்
3. டவுண் சிண்ட்ரோம் - டிரைசோமி 23
4. பட்டாவ் சிண்ட்ரோம் - டிரைசோமி 13
59.
| நிகழ்வு | நடைபெறும் இடம் | |
|---|---|---|
| அ | படியெடுத்தல் | நியுக்ளியோலஸில் |
| ஆ | நகலெடுத்தல் | சைட்டோபிளாசம் |
| இ | மொழிபெயர்த்தல் | ரிபோசோம்கள் |
| ஈ | தோற்ற மாற்றமடைதல் | புரதம் |
60.
லிகேஸ்
61.
உறுதிக்கூற்று : மீன் வகைகள் மற்றும் சுறாக்கள் தாயுள் முட்டை பொரித்துக் குட்டி ஈனும் விலங்காகும்.
காரணம்: சுறாவின் குட்டிகள் தாய் சேய் இணைப்பு திசுக்கள் அற்று காணப்படும்.
அ. 'உ' மற்றும் 'கா' இரண்டும் சரி 'கா' என்பது 'உ' வின் சரியான விளக்கம்
ஆ. 'உ' மற்றும் 'கா' சரி ஆனால் 'கா' என்பது 'உ' வின் சரியான விளக்கம் அல்ல.
இ. 'உ' சரி ஆனால் 'கா' தவறு
ஈ .' 'உ' தவறு ஆனால் 'கா' சரி
62.
உறுதிப்படுத்துதல் A: DNA இரட்டிப்படைதல் மற்றும் படியெடுத்தல் நியுக்ளியஸில் நடைபெற மொழிப்பெயர்த்தல் சைட்டோபிளாசத்தில் நடைபெறுகிறது.
காரணம் R: தூது RNA நியுக்ளியஸிலிருந்து சைட்டோபிளாசத்திற்கு கடத்தப்பட்டு சைட்டோபிளாசத்திலுள்ள ரிபோசோமில் அமினோ அமிலங்களைக் கொண்டு புரத சேர்க்கையில் ஈடுபடுகிறது.
அ) 'A' மற்றும் 'R' சரியானது - 'R' 'A' ஐ சரியாக விளக்குகிறது.
ஆ) 'A' மற்றும் 'R' சரியானது - ஆனால் 'R' 'A' ஐ சரியாக விளக்கவில்லை.
இ) 'A' சரியானது 'R' தவறானது
ஈ) 'A' மற்றும் 'R' தவறானது
63.
சர்க்கரையை நைட்ரஜன் காரத்துடன் இணைக்கும் பிணைப்பு - N - குளுக்கோஸிடிக் பிணைப்பு
1.
(c)
அக
2.
(c)
பழப்பூச்சி
3.
(d)
ஆண்கள் தங்கள் சொந்த விந்து செல்களுக்கு எதிராக சுயத்தடைகாப்பு விளைவை ஏற்படுத்துதல்.
4.
(a)
அ-iii,ஆ-iv,இ-ii,ஈ-i
5.
(c)
DNA மரபணுப்பொருள் என்பதற்கான சான்று
6.
(c)
HIV என்பது நோய்க்கிருமி பிற அனைத்தும் நோய்கள்
7.
(d)
ஒரு குறை மற்றும் ஒரு நடுத்தர அடர்வுக் கற்றை.
8.
(b)
ஏமெனோரியா – மாதவிடாய் இல்லாதிருத்தல்
9.
(d)
XXY
10.
(a)
அர்ரீனோடோக்கி
11.
உறிஞ்சும் தன்மையுடைய துணிகள், விடாய்க்கால அணையாடைகள், விடாய்க்கால பஞ்சுப்பட்டை, விடாய்க்கால உறிபஞ்சு, மாதவிடாய்க் கோப்பை.
12.
1. நீக்கம்
2. இரட்டித்தல்
3. இடம் பெயர்தல்
4. குரோமோசோம் பிரியாநிலை
13.
1. கோனேரியா (வெட்டை நோய் )
2. கிரந்தி (மேகப் புண்)
3. கிளாமிடியாசிஸ்
4. லிம்போகிரானுலோமா வெனிரியம்
14.
1. தாய் சேய் இணைப்புத்திசு மூலம் உணவூட்டம் பெற்று கருப்பையினுள் வளர்ச்சியடைந்து முழு உயிரியாக உயிருடன் பிறக்கும்.
2. பெரும்பாலான பாலூட்டிகள்
15.
1. புரோகேரியோட்டுகள் - எ.கா. ஈகோலையில் தெளிவான உட்கரு கிடையாது எனினும் வட்ட வடிவ DNA, குரோமேட்டின் அமைப்பு உட்கரு உறை, நியூக்ளியோஸ் இல்லாததால் மையத்தில் புரதங்களோடு இனைந்து நியூக்ளியாய்டு எனும் பகுதியாக உள்ளது.
2. இதற்கு ஜீனோஃபோர் என்று பெயர்.
16.
A - ஊக்குவிப்பான்
B - குறியிட்டு இழை
17.
(i) கர்ப்ப காலத் தொடக்கத்திலேயே கண்டறியும் தொழில்நுட்பம்.
(ii) வளர்க்கருவைச் சூழ்ந்துள்ள, பனிக்குடத் திரவ மாதிரியைக் கொண்டு குரோமோசோம் பிறழ்ச்சிகளைக் கண்டறியலாம்.
(iii) 15 முதல் 20 வாரக் கருவளர்ச்சி கொண்ட பெண்களில் செய்யப்படுகிறது.
(iv) பனிக்குடத் திரவத்தில் உள்ள கருவின் உதிர்ந்த செல்கள் மெல்லிய ஊசி மூலம் சேகரிக்கப்படும்.
ஏன் சட்டப்படி தடை விதிக்கப்பட்டுள்ளது:
(i) வளர்கருவின் பால்தன்மை கண்டறியப்படும்.
(ii) பின்பு பெண்கரு சிசுக்கொலை செய்யப்பட வாய்ப்புள்ளது.
18.
(i) குழந்தை பிறந்தலிருந்து சில நாட்களுக்கு, பால் சுரப்பிகள், மஞ்சள் நிற சீம்பாலைச் சுரக்கின்றன.
(ii) இதில் லாக்டோஸ் குறைவாயுள்ளது. புரதம், தாது உப்புகள், விட்டமின் A அதிக அளவில் உள்ளன.
(iii) சீம்பாலில் கொழுப்பு கிடையாது.
(iv) IgA வகை எதிர்பொருட்கள் உள்ளன. இவை குழந்தையின் உணவுப்பாதை பாக்டீரியத் தொற்றை தடுக்கின்றன.
(v) எளிதில் செரிக்கக்கூடிய, அனைத்து ஊட்டச்சத்து கொண்ட சரியான உணவு.
(vi) முதல் 6 மாதம் தாய்ப்பால் ஊட்டுவதால் குழந்தை நலமுடன் வளரும்.
19.
ஒற்றை மய -இரட்டைமய நிலை (எ.கா) தேனீ, எறும்பு மற்றும் குளவி
(i) சேய் உயிரிகளின் பாலினம் அவை பெறுகிற குரோமோசோம் தொகுதியின் எண்ணிக்கையை பொறுத்து நிர்ணயிக்கப்படுகிறது.
(ii) கருவுற்ற முட்டைகள் பெண் உயிரிகளால் உருவாகின்றது ராணி,வேலைகாரத்தேனீ.
(iii ) கருவுறாத முட்டைகள் ஆண் தேனீக்களாக கன்னி இனப்பெருக்க முறையில் மூலம் வளர்ச்சியடைகின்றன.
(iv) எனவே ஆண் தேனீக்கள் ஒற்றைமய குரோமோசோம்களைக் கொண்டுள்ளன.
(v) பெண் தேனீக்கள் இரட்டைமய குரோமோசோம்களைக் கொண்டுள்ளன. இம்முறை ஒற்றைமய -இரட்டைமய பால்நிர்ணயம் என அழைக்கப்படுகிறது.
20.
(i) கன்னி இனப்பெருக்கம் என்பது அந்நிகழ்வின் பெயர்
(ii) வான்கோழியில் கன்னி இனப்பெருக்கம் நடைபெறுகிறது.
21.
1. கருப்பையில் குழந்தையின் நிலை, தாய்சேய் இணைப்புத்திசுவின் தன்மை போன்ற காரணங்களால் இயல்பான குழந்தைப் பிறப்பு நடைபெறாது.
2. அப்போது தாயின் வயிற்றுப் பகுதியிலும், கருப்பையிலும் சிறு வெட்டு ஏற்படுத்தி, அறுவைச் சிகிச்சை மூலம் குழந்தை வெளியில் எடுக்கப்படும். இதற்கு '''வயிறுவழி மகப்பேறு'' 'அல்லது' ''அறுவை வழி மகப்பேறு''' என்று பெயர்.
22.
| பிஷர் மற்றும் ரேஸ் கருதுகோள் | வெய்னரின் கொள்கை | |||
| 1. | மூன்று Rh அல்லீல் இணைகள் Rh | 8 அல்லீல் இணைகள் Rh காரணி உருவாக்கத்தில் பங்குகொள்கின்றன. | ||
| 2. | இவ் அல்லீல்கள் மூன்று வெவ்வேறு அமைவிடங்களில் உள்ளன. | இவ் அல்லீல்கள் அமைப்பொத்த வெவ்வேறு அமைவிடங்களில் அமைந்துள்ளன. | ||
| 3. | மரபணுக்கள் CDE/cde CdE /CDe cde /cde /CDஏ/CdE ஆகும். | மரபணு விகிதம் R1R2R0Ry r r1 r11 ry | ||
| 4. | ஓங்கிய D அல்லீல்கள் dd1 Rh(-) | rr rr1 rr11 ஒடுங்கிய பண்பு கொண்ட அனைத்து மரபு வகைகளும் Rh(-)ve புறத்தோற்றத்தை உற்பத்தி செய்கின்றன. | ||
23.
1. கருத்தடை முறைகளால் பிறப்புக் கட்டுப்பாடு.
2. சட்டப்படி திருமண வயது, ஆண்களுக்கு 21, பெண்களுக்கு 18 என உயர்த்தியது.
3. சிறுகுடும்பம் கொண்ட தம்பதிகளுக்கு ஊக்கப் பரிசுகள்.
24.
1. சுவர்பல்லி தன்னைப் பாதுகாத்துக்கொள்ள ஒரு இரையைப் பிடித்துண்ணும் உயிரி விரட்டும் போது தனது வாலை துண்டிக்கிறது.
2. பின்னர் அதன் வால் இழப்பு மீட்டல் மூலம் வளர்கிறது.
25.
26.
1. இணைப்பு மூலக்கூறு - என்ற சொற்களை உருவாக்கியவர் ஃபிரான்சிஸ் கிரிக்.
2. கிராம்பு இலை வடிவத்தை ஒத்திருக்கும் இரண்டாம் நிலை கட்டமைப்புடைய கடத்து RNA(tRNA) அமைப்பானது அதன் பணிகளுக்கு ஏற்றதாக உள்ளது.
3. தூது RNA மூலக்கூறிலுள்ள அமினோ அமிலங்களுக்கான குறிப்பிட்ட குறியீடுகளை படிப்பதும் கூடவே செல்லின் சைட்டோபிளாசத்தில் சிதறிக் கிடைக்கும் அமினோ அமிலங்களை புரதம் தயாரிக்கும் இடத்திற்கு எடுத்து வரும் கடத்தியதாக செயல்படுதலும் ஆகிய இரு பணிகளை செய்வதால் கடத்து RNA இணைப்பு மூலக்கூறுகள் என வழங்கப்படுகின்றன.
27.
அ) கொனோரியா அல்லது வெட்டை நோய்:
நோய்க்காரணி: நீஸ்ஸெரியா கொனோரியே
அறிகுறிகள்: சிறுநீர் வடிகுழாய், மலக்குடல், தொண்டை, பெண்களின் கருப்பைவாய் ஆகிய பகுதிகளில் பாதிப்பு.
பிறப்புப் பாதையில் வலி, சீழ் வடிதல், சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் உணர்வு
நோய் வெளிப்படும் காலம்: 2 - 5 நாட்கள்
ஆ) கிரந்தி அல்லது மேகப்புண்:
நோய்க்காரணி: டிரிபோனிமா பாலிடம்
அறிகுறிகள்:
முதல்நிலை: பாலுறுப்புகள் புறப்பகுதியில் வலியற்ற புண்கள்
இரண்டாம் நிலை: தோல் தடிப்பு, மூட்டுகளில் வீக்கம், காய்ச்சல் மற்றும் முடிஉதிர்வு.
மூன்றாம் நிலை: மூக்கு, கீழ்க்கால் பகுதி மற்றும் அண்ணப் பகுதியில் நாள்பட்ட புண்கள், இயக்கமின்மை, மனநலபாதிப்பு, பார்வைக் கோளாறு, இதயப் பிரச்சனை, மென்மையான பரவும் தன்மையற்ற கட்டிகள் போன்றன.
நோய் வெளிப்படும் காலம்: 10 - 90 நாட்கள்
இ) கல்லீரல் அழற்சி:
நோய்க்காரணி: ஹிபாடிடிஸ்
அறிகுறிகள்: சோர்வு, மஞ்சள்காமாலை, காய்ச்சல், தோல் தடிப்பு, வயிற்று வலி.
கல்லீரல் இறுக்கம், இறுதி நிலையில் கல்லீரல் செயலிழப்பு.
நோய் வெளிப்படும் காலம்: 30 - 80 நாட்கள்
ஈ) எய்ட்ஸ் (AIDS):
நோய்க்காரணி: மனித தடைகாப்பு குறைப்பு வைரஸ்.
அறிகுறிகள்: நிணநீர் முடிச்சுகள் பெரிதாதல், நீண்ட நாள் காய்ச்சல், நீண்ட நாள் வயிற்றுப் போக்கு, உடல் எடை குறைதல், இரவில் வியர்த்தல்.
நோய் வெளிப்படும் காலம்: 2 - 6 வாரங்கள் முதல் 10 ஆண்டுகளுக்கு மேல்.
28.
(i) இயல்பான மனித உடல் வெப்பத்தில், வீரியமான விந்தணுக்களை உற்பத்தி செய்ய முடியாது.
(ii) வயிற்றின் வெளிப்புறமாக அமைந்துள்ள தோலால் ஆன பை போன்ற அமைப்பு விதைப்பை ஆகும்.
(iii) இதனால் இயல்பான உடல் வெப்பநிலையை விட 2 முதல் 3o C குறைவான வெப்பநிலை அடைகிறது.
(iv) இவ்வாறாக, விதைப்பையானது ஒரு வெப்ப நெறிப்படுத்தியாகச் செயல்பட்டு, விந்தணுக்களை உருவாக்கிறது.
29.
30.
காரணம்:
அ) இராணிதேனீ முட்டையிடும்போது சில முட்டைகள் கருவுறாமல் இடப்படுகின்றன அது ஆண் தேனீயாக உருவாகிறது.
ஆ) ஆண் தேனீக்கள் கருவுறாத முட்டையிலிருந்து உருவாகுவதால் விந்தின் 16 குரோமோசோம்களும். அண்டத்தின் 16 குரோமோசோம்களும் இணைந்து 32 குரோமோசோம்கள் காணப்படுகின்றன.
31.
1. விந்து செல், அண்டத்தினுள் நுழைய, கரோனா, ரேடியேட்டாவின், பல அடுக்கு கிரானுலேசா செல்களைத் துளைக்க வேண்டும்.
2. விந்து செல்லின் அக்ரோசம் சவ்வு சிதைவுறுகிறது.
3. இதனால் ஹையாலுரோனிடேஸ் என்ற புரதச் செரிப்பு நொதி வெளிப்படுகின்றது.
4. கரோனோ ரேடியேட்டா, சோனா பெலூசிடா போன்றவை சிதைக்கின்றன. எனவே விந்து செல் அண்டகத்தினுள் நுழைகின்றது.இது 'அக்ரோசம் வினை எனப்படும்.
32.
யூஜெனிக் முறைமை:
1. யூஜெனிக்ஸ்(கிரேக்க மொழி-நல்ல பிறப்பு )என்பது மனித குலத்தின் பாரம்பரிய பண்புகளை வளப்படுத்துவதற்கான முறையாகும்.
2.சிறப்பு தன்மையற்ற பண்புகளை நீக்கி நல்ல சிறப்பான பண்புகளை சந்ததியில் அதிகப்படுத்துவதே இம்முறையின் நோக்கம் ஆகும்.
எதிர்மறை யூஜெனிக்ஸ் முறைமை:
1. மரபு ரீதியான குறைபாடுடைய உயிரிகளை குழந்தை பெறுவதில் தடை செய்தல்.
2. பாலியல் கல்வி
3. குடும்ப கட்டுப்பாட்டு முறைகள்
4. தானாகவே முன்வந்து கருத்தடை செய்தல், கருச்சிதைவு.
5. தானாகவே ஒத்துழைப்பவர்களுக்கு சிறப்பு ஊக்கம் அளித்தல் .
நேர்மறை யூஜெனிக்ஸ் முறைமை :
1. அதிக குழந்தைகள் பெறுவதற்கு ஊக்கப்படுத்துதல்
2. சிறப்பு பண்புகளை வருவித்தல்
யூஜெனிக்ஸின் நவீன முறைகள் :
1. செயற்கை முறை கருத்தரிப்பு - கொடையாளர்
2. கருமுட்டை கொடையாளர்
3. ஜீன் சிகிச்சை
4. குளோனிங்
5. மரபு பொறியியல்
33.
மருத்துவ ரீதியான கருக்கலைப்பு (Medical Termination of Pregnancy)
1. அறுவைச் சிகிச்சையோ, கருவிகள் உள்நுழைத்தாலோ இன்றி செய்யப்படும்.
2. முதல் மும்மாதம் (12 வாரத்திற்குள்) செய்தால் பாதுகாப்பானது.
3. இரண்டாம் மும்மாதம் செய்தால் ஆபத்தானது, வளர்கரு தாயின் உடற்திசுவில் இணைத்துள்ளதால் அதிக ஆபத்தானது.
4. 1971 ல் இம்முறை இந்தியாவில் சட்டபூர்வமானது.
5. கட்டுப்பாடுகளுடன் இச்சட்டம் இயற்றப்பட்டதால், பாலினப்பாகுபாடு, பெண் சிசுக்கொலை தடுக்கப்படும்.
6. போலி மருத்துவரால் செய்யப்பட்டால் பாதுகாப்பற்றது.
7. முதல் கர்ப்பக் கருக்கலைப்பு கடும் உளவியல் விளைவுகளை உண்டாக்கும்.
34.
1. பெற்றோர் உயிரி இரு சமப்பகுதிகளாக பிரித்து ஒவ்வொரு பகுதியும் ஒரு சேய் உயிரியாக மாற்றமடைகிறது.
2. எளிய ஒழுங்கற்ற இருசமப் பிளவு முறை அமீபா போன்ற ஒழுங்கற்ற வடிவமுடைய உயிரிகளில் நடைபெறுகின்றது.
3. கிடைமட்ட இருசமப் பிளவு முறையில் பிளவுமட்டம் உயிரியின் கிடைமட்ட அச்சில் ஏற்படுகின்றது.
(எ.கா) பாரமீசியம்
4. உயிரியின் நீள் அச்சில் பிரிவடைவது, நீள்மட்ட இருசமப் பிளவு முறை எனப்படும்.
(எ.கா) யூக்ளினா
5. சில உயிரிகளில் பிளவுமட்டம் சாய்வாக இருக்கும் அவை சாய்வுமட்ட இருசமப் பிளவு முறையாகும்.
(எ.கா) செராட்டியம்

35.
(i) DNA ஹெலிகேஸ் நொதி - DNA வின் சுருள் நீக்க உதவுகிறது.
(ii) DNA பாலிமெரேஸ் - பாலிமெரைசேஷன் எனப்படும் நிகழ்வு 5' ➝ 3' திசையில் நடைபெறுகிறது.
(iii) வழிகாட்டு இழை எனப்படும் வார்ப்புரு இழை - 3' ➝ 5' திசை கொண்டது இதில் இரட்டிப்பாதல் தொடர்ச்சியாக நடைபெறுகிறது.
(iv) தொடர்ச்சியாக இழை (அ) பின்தங்கு இழை - இது 5' ➝ 3' திசை கொண்டது.
(v) இதில் இரட்டிப்பாதல் சிறு சிறு துண்டங்களை உருவாக்குகிறது (ஓகசாகி - துண்டங்கள்). இவை DNA லிகேஸ் நொதியால் இணைக்கப்படுகின்றன.
(vi) இந்நகர்வு எதிர்திசையில் நடைபெறுகிறது.
(vii) DNA பாலிமெரேஸ் நொதி - இரட்டிப்படைதலைத் துவங்க இயலாது. புதிய இழையின் உருவாக்கம் தொடங்க RNA வின் சிறு பகுதியான பிரைமர் தேவைப்படுகிறது. DNA பாலிமெரேஸ் புதிய நியூக்ளியோடைடுகளை சேர்க்கும் வினைக்கு வினைமாற்றியாக செயல்படுகிறது. அது 3' நிலை கார்பனில் நியூக்ளியோடைடுகளை இணைக்கிறது.
36.
37.
ஆரோக்கியமான மக்கள், உடல்நலம் மிக்க குழந்தைகளைப் பெற்று சமுதாயத்திற்கு பங்களிக்கின்றனர்.
i) பாலியல் கல்வி:
விடலைப் பருவம் சார்ந்த மாற்றங்கள் பற்றிய தகவல்களை பாலியல் கல்வி மூலம் பள்ளிகளில் கொண்டு வருதல்.
ii) கருத்தடை முறைகள் குறித்த விழிப்புணர்வு:
மக்கட்தொகையைக் கட்டுப்படுத்த கருத்தடை முறைகள் பயன்படும். எனவே எளிதில் கிடைக்கும், பயனர் நட்பு கருவிகள், பக்க விளைவு இன்றி, பாலுணர்வைத் தடை செய்யாமல் பயன்படுத்தலாம்.இதில் தற்காலிக,நிரந்தர முறைகள் உள்ளன.
(எ.கா).1) இயற்கைக் கருத்தடை முறை - பாலூட்டும் கால மாதவிடாயின்மை
2) தடுப்பு முறைகள் - வேதிப்பொருட்கள், இயக்கத் தடுப்பு முறை
3) ஹார்மோன் வழித்தடுப்பு
4) உள்கருப்பைச் சாதனங்கள் (Ex,CuT)
38.
மாதவிடாய் சுழற்சி :
பூப்படைதல் முதல் மாதவிடாய் நிறைவு வரை கர்ப்ப காலம் தவிர, சுமார் 28/29 நாட்களுக்கு ஒரு முறை மாதவிடாய் சுழற்சி(அண்டகச் சுழற்சி) நிகழும்.
1. மாதவிடாய் நிலை (3-5 நாட்கள்) (Menstrual Phase) :
(i) புரோஜெஸ்டிரான்,ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன்களின் அளவு குறைகிறது.
(ii) கருப்பைச் சுவர் எண்டோமெட்ரியம், அதன் இரத்தக் குழல்கள் சிதைந்து,மாதவிடாய் ஒழுக்கு வெளியாகும்.
(iii) அண்டம் கருவுறாவிட்டால் மாதவிடாய் ஏற்படும்.
(iv) மாதவிடாய் ஏற்படாமல் இருப்பது,கருவுற்று இருப்பதன் அறிகுறி.
(v) மன அழுத்தம், ஹார்மோன் கோளாறுகள், இரத்த சோகை போன்றவற்றால் மாதவிடாய் ஏற்படாது.
2. நுண்பை நிலை(பெருகு நிலை): (Follicular Phase,Proliferative Phase)
(i) மாதவிடாயின் 5 ஆம் நாளிலிருந்து, அண்டம் விடுபடும் வரை உள்ள காலகட்டம்.
(ii) FSH,LH ஹார்மோன்களின் சுரப்பு சீராக அதிகரிக்கிறது.
(iii) முதல்நிலை நுண்பை செல்கள், முதிர்ந்த கிராபியன் நுண்பை செல்களாக மாறுகின்றன.
(iv) எண்டோமெட்ரியம் தன்னை புதுப்பித்துக் கொள்கிறது.
(v) நுண்பை செல்களின் வளர்ச்சி அதிகரிக்கிறது. அவற்றினிலிருந்து சுரக்கும் ஈஸ்ட்ரோஜனின் அளவு அதிகரிக்கின்றது.
3. அண்ட செல் விடுபடும் நிலை (Ovulatory Phase)
(i) LH,FSH ஹார்மோன்கள் உச்ச நிலையை அடைகின்றன.
(ii) LH எழுச்சியினால் முதிர்ந்த கிராபியன் நுண்பை உடைகிறது.
(iii) இரண்டாம் நிலை அண்ட செல், அண்டகச் சுவர் வழியாக வயிற்றுக்குழியை அடைகிறது. இது அண்டம் விடுபடுதல் எனப்படும்.
4. லூட்டியல் அல்லது சுரப்பு நிலை(Luteal (or) Secretory Phase)
(i) எஞ்சியுள்ள கிராபியன் ஃபாலிக்கிள்,கார்ப்பஸ் லூட்டியம் எனும் இடைக்கால நாளமில்லா சுரப்பியாகும்.
(ii) கார்பஸ் லூட்டியம் புரோஜெஸ்டிரானைச் சுரக்கிறது. இது கருமுட்டை புதிய ஏற்ற சூழலை உருவாக்கும்.
(iii) கருப்பை உட்சுவர் ஊட்டச்சத்து நிறைந்த, திரவத்தை கருவிற்கு உற்பத்தி செய்கிறது. இது சுரப்பு நிலை.
(iv) கருவுறுதல் நிகழாவிடில், கார்பஸ் லூட்டியம் சிதைந்து, கார்பஸ் அல்பிகன்ஸ் எனும் வடுவாகிறது.
39.
(i) C.B. பிரிட்ஜஸ் என்பவர் முதன் முதலில் பழப்பூச்சிகளில் மரபணு சமநிலை மூலம் பால் நிர்ணயிக்கப்படுவதைக் கண்டறிந்தார்.
(ii) பெண் தன்மைக்கான மரபணுக்களும் உடல் குரோமோசோம்களுக்கும் இடையேயான மரபுச் சமநிலையை இப்பூச்சிகளில் பாலினத்தை நிர்ணயிக்கிறது.
(iii) ஒவ்வொரு X குரோமோசோமிலும் பெண் தன்மைக்கான மரபணுக்கள் உள்ளன. அவற்றின் மதிப்பு 1.5.
(iii) ஆண் தன்மைக்கான மரபணுக்கள் உடல் குரோமோசோம்களில் உள்ளன.அவற்றின் மதிப்பு 0.
(iv) இயல்பான ஆண் A A xy ஆகும். எனவே ஆண் பெண் நிர்ணய விகிதம் 2:3 (AA xx =2.3) என்ற விகிதத்தில் உள்ளது. இங்கே மரபணு சமநிலை பெண் உயிரிக்கு சாதகமாக அமைகிறது.
40.
இளவுயிரி நிலை :
(i) இது நிலை உயிரியின் பிறப்பிற்கும் இனப்பெருக்க முதிர்ச்சிக்கும் இடைப்பட்ட வளர்ச்சிக் காலம்.
(ii) சில விலங்குகளின் இளம் உயிரிகள்
பசு - கன்று,
பூச்சி - லார்வா,
மனிதகுரங்கு - குழந்தை,
பூனை - பூனைக்குட்டி,
இனப்பெருக்க நிலை :
(i) ஒரு உயிரியானது இனப்பெருக்கம் செய்து வழித்தோன்றல்களை உருவாக்கும் செயல்களைச் செய்யும் காலம் இனப்பெருக்க நிலை ஆகும்.
(ii) ஒரு ஆண்டின் குறிப்பிட்ட காலத்தில் மட்டும் இனச்சேர்க்கையில் ஈடுபடும் உயிரிகள் தொடர்ச்சியான இனச்சேர்க்கையாளர்கள் எனப்படும்.
(iii) பால் முதிர்ச்சிக் காலம் முழுவதும் இளம் உயிரிகள் ஈடுபடும் உயிரிகள் தொடர்ச்சியான இனச்சேர்க்கையாளர்கள் எனப்படும். எ.கா) முயல், கோழிகள்
41.
( )
டிரைகோமோனோஸ் வாஜிநாலிஸ்
42.
( )
பட்டாவ் சிண்ட்ரோம்
43.
( )
குட்டி ஈனுதல்
44.
( )
கிரிஃபித்
45.
( )
mRNA, tRNA
46.
( )
சுறா மீன் ஒரு தாயுள் முட்டைப் பொரித்துக் குட்டி ஈனும் விலங்காகும்
47.
(d)
அது ஊக்குவிப்பானாகவும் அடக்கியாகவும் செயல்படுகிறது.
48.
முதனிலைத் தடுப்பு 9 முதல் 14 வயது வரை உள்ள சிறுமிகளுக்கு HPV தடுப்பூசி மூலம் அளிக்கப்படும்.
49.
ZO -ZZ வகை பால் நிர்ணயம் வண்ணத்துப்பூச்சியில் நடைபெறுகிறது.
50.
நட்சத்திர மீனில் தான் முதன்முதலில் இழப்பு மீட்டல் பற்றி ஆய்வு மேற்கொண்டனர்.
51.
3. படியெடுத்தலின் துவக்கத்திற்கு வினையூக்கியாக இருப்பது பாலிமரேஸ்
52.
ஹன்டிங்டன் கோரியா - கூலிஸ் இரத்த சோகை
53.
கன்னி இனப்பெருக்கம் -இது இனப்பெருக்கத்தின் வகை
54.
இ) தூண்டும் மரபணு
55.
தாமிரம் வெளிவிடும் உள்கருப்பை சாதனம் - Multiload 375
56.
இராட்சச அமீபா - ஒபலினா
57.
இ) ஒன்றிற்கு மேற்பட்ட பாலிபெப்டைடுகளுக்கு குறியீடாகும் பாக்டீரியா மற்றும் வைரஸின் ஜென்கள் - பாலிசிஸ்ட்ரானிக் ஜீன்
58.
பட்டாவ் சிண்ட்ரோம் - டிரைசோமி 13
59.
இ) மொழி பெயர்த்தல் - ரிபோசோம்கள்
60.
DNA துண்டுகளை ஒட்டுகிறது
61.
'உ' மற்றும் 'கா' இரண்டும் சரி 'கா' என்பது 'உ' வின் சரியான விளக்கம்
62.
அ) 'A' மற்றும் 'R' சரியானது - 'R' 'A' ஐ சரியாக விளக்குகிறது
63.
(b)
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th English Supplementary - 3 - The Hour of Truth (Play) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Poem - 3 - All the World’s a Stage Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Prose - 3 - In Celebration of Being Alive Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Supplementary - 2 - Life of Pi Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards