12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 23/10/2019
விலங்கியல் - மனித நலன் மற்றும் நோய்கள்
12ஆம் வகுப்பு Biology / உயிரியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Biology / உயிரியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Biology Test1.
டாடுரா (Datura) தாவரத்திலிருந்து உருவாக்கப்படும் போதை மருந்து
மன மருட்சியை ஏற்படுத்துபவை
சோர்வூட்டி
கிளர்வூட்டி
வலி நீக்கி
2.
_______ அதிகமாக எடுத்துக்கொள்வது கல்லீரல் அழற்சி நோயை ஏற்படுத்துகிறது.
அபின்
மது
புகையிலை
கோகெய்ன்
3.
மனிதனில் சேற்றுப்புண்ணை ஏற்படுத்துவது ______.
பாக்டீரியா
பூஞ்சை
வைரஸ்
புரோட்டோசோவா
4.
மரிஜுவானா ______ லிருந்து பிரித்தெடுக்கப்படுகிறது.
சணல் செடியின் சருகுகள் மற்றும் பூக்கள்
ஏர்காட் பூஞ்சை
சணல் தாவர வேர்கள்
கோகா தாவரம்
5.
குழந்தைப்பருவ பக்கவாதத்தை ஏற்படுத்தும் இளம்பிள்ளைவாதம் _____ வழியாக நுழைகிறது.
தோல்
வாய் மற்றும் மூக்கு
காதுகள்
கண்கள்
6.
பிளாஸ்மோடியத்தால் ஏற்படும் மலேரியா ______ மூலம் பரவுகின்றது.
காற்று
தொடர்பு
உணவின் மீதுள்ள துள்ளுப்பூச்சிகள்
கொசு கடித்தல்
7.
எதிர்ப்பொருள் தூண்டியின் திறன் என்ன?
8.
நோய்த்தடைகாப்பு என்றால் என்ன?
9.
சுகாதாரம் என்பது என்ன?
10.
சில நோயூக்கிகளை பட்டியலிடுக.
11.
WHO வின் வரையறையின்படி உடல்நலம் என்பது என்ன?
12.
கீழ்க்காணும் அட்டவணையை நிறைவு செய்.
| நோய்கள் | நோய்க்காரணி | நோய்த்தொற்று இடம் |
| புட்டாளம்மை | ||
| சின்னம்மை | ||
| டெங்கு காய்ச்சல் |
13.
மண்ணீரல் என்றால் என்ன?
14.
முதல்நிலை நிணநீரிய உறுப்புகள் என பெயர் வர காரணம் என்ன?
15.
நோய் என்றால் என்ன?
16.
கீழ்க்கண்ட அட்டவணையை நிரப்புக.
| நோய்கள் | நோய்க்காரணி | அறிகுறிகள் |
| அஸ்காரியாசிஸ் | அஸ்காரிஸ் | |
| டிரைகோஃபைட்டான் | உடலின் பல்வேறு உறுப்புகளில் வறண்ட, செதில் புண்கள் காணப்படுதல். |
|
| டைபாய்டு | அதிக காய்ச்சல், வலுவிழத்தல், தலைவலி, வயிறுவலி மற்றும் மலச்சிக்கல். | |
| நிமோனியா |
17.
எச்.ஐ.வியின் அமைப்பை பற்றி விவரி.
18.
தொண்டை அடைப்பான் மற்றும் டைஃபாய்டு ஆகியவற்றின் நோய்க்காரணிகள், பரவும் முறை மற்றும் அறிகுறிகளைக் குறிப்பிடுக.
19.
காலா-அசார் என்றால் என்ன?
20.
மலேரியாவின் அடைப்புக்காலம் ________ ஆகும்.
21.
ஏறத்தாழ _________ புரோட்டோசோவா இனங்கள் ஒட்டுண்ணிகளாக வாழ்கின்றன.
22.
________ திசு இடைவெளியில் நுழைகின்ற எதிர்பொருள் தூண்டியை அழிக்கின்ற முதல் அமைப்பாகும்.
23.
டி.ரோடீசியன்ஸ் _______ என்ற செட்சி ஈக்களால் பரவுகிறது.
24.
எண்டமீபா ஹிஸ்டோலைடிகாவின் நோயுண்டாகும் நிலை ________
1.
(a)
மன மருட்சியை ஏற்படுத்துபவை
2.
(b)
மது
3.
(b)
பூஞ்சை
4.
(a)
சணல் செடியின் சருகுகள் மற்றும் பூக்கள்
5.
(d)
கண்கள்
6.
(d)
கொசு கடித்தல்
7.
1. எதிர்ப்பொருள் உருவாக்குவது ஒரு திறன்.
2. மேலும் ஒரு குறிப்பிட்ட தடைக்காப்புத் துலங்கல்களால் உருவான எதிர்ப்பொருளுடன் வினைபுரிய அனுமதிப்பது.
8.
நோயை உண்டாக்கும் நோயூக்கிகளுக்கு எதிரான உடலின் ஒட்டுமொத்த செயல்திறனே நோய்த்தடைகாப்பாகும்.
9.
WHO வின் படி சுகாதாரம் என்பது "உடல்நலத்தைப் பராமரிக்கவும் நோய்கள் பரவுவதை தடுக்கவும் உதவும் சூழ்நிலைகள் மற்றும் நடவடிக்கைகள் ஆகும்.
10.
வைரஸ், பாக்டீரியா, பூஞ்சை, புரோட்டோசோவா ஒட்டுண்ணிகள் மற்றும் புழுவின் ஒட்டுண்ணிகள் போன்றவை நோயூக்கிகள் ஆகும்.
11.
உடல்நலம் என்பது வெறுமனே நோய்கள் இல்லா நிலையன்று உடல், மனம் மற்றும் சமூக அளவிலான முழுமையான நலவாழ்வுக்கான நிலையே உடல்நலம் என்பதாகும்.
12.
| நோய்கள் | நோய்க்காரணி | நோய்த்தொற்று இடம் |
| புட்டாளம்மை | மம்பஸ் வைரஸ் (ஆர்.என்.ஏ வைரஸ்) பாராமிக்ஸோ வைரஸ் (Paramyxo virus) | உமிழ்நீர்ச் சுரப்பி |
| சின்னம்மை | வேரிசெல்லா ஸோஸ்டர் வைரஸ் (vericella - zoster virus) (டி.என்.ஏ வைரஸ்) | சுவாசப் பாதை தோல் மற்றும் நரம்பு மண்டலம் |
| டெங்கு காய்ச்சல் | டெங்கு வைரஸ் (அ) ஃபிளேவி வைரஸ் DENV அல்லது 1-4 வைரஸ் | தோல் மற்றும் இரத்தம் |
13.
1. இது உடனடியாக ஏற்படும் மிகை உணர்வாக்க வினையாகும்.
2. இது திடீர் என முறையாக தீவிரமாக மற்றும் உடனடியாக தோன்றும் அதிதீவிர ஒவ்வாமை வினையாகும்.
14.
1. இது லிம்போசைட்டுகளின் முதிர்ச்சிக்கு தேவையான சூழலை வழங்குகிறது.
2. முதல்நிலை நிணநீர் உறுப்புகளில் முதிர்ச்சியடைந்த லிம்போசைட் செல்கள் மட்டுமே நோய்த்தடைக்காப்பு திறன் பெற்ற செல்களாகின்றன.
3. பாலூட்டிகளில் டி-செல்கள் எலும்பு மஜ்ஜைகளிலும் செல்கள் முதிர்ச்சி தைமஸிலும் நடைபெறுகிறது.
15.
1. நோய் என்பது உடல் அல்லது மனதில் ஏற்படும் குறைகள் ஆகும்.
2. இதில் சுற்றுச் சூழல் காரணிகள் நோயூக்கிகள், மரபிய முரண்பாடுகள் மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்களால் ஏற்படும்.
3. அந்த மாற்றங்களால் ஏற்படும் புறத்தோற்ற உடற்செயலியல் மற்றும் உளவியல் ரீதியான முரண்பாடுகளும் அடங்கும்.
16.
| நோய்கள் | நோய்க்காரணி | அறிகுறிகள் |
| அஸ்காரியாசிஸ் | அஸ்காரிஸ் | |
| டிரைகோஃபைட்டான் | உடலின் பல்வேறு உறுப்புகளில் வறண்ட, செதில் புண்கள் காணப்படுதல். |
|
| டைபாய்டு | சால்மோனெல்லா | அதிக காய்ச்சல், வலுவிழத்தல், தலைவலி, வயிறுவலி மற்றும் மலச்சிக்கல். |
| நிமோனியா | ஸ்ட்ரெப்டோகாக்கஸ் | காய்ச்சல், இருமல் வலியுடன் கூடிய சுவாசம் மற்றும் பழுப்பு நிற சளி. |
17.
1. இது லென்டிவைரஸ் வகையைச் சார்ந்தது.
2. இது உருளை வடிவம் கொண்டுள்ளது.
3. 100-120 nm விட்டம் கொண்டது.
4. இது உறை கொண்ட வைரஸ்
5. மேல் உறையில் gp41 மற்றும் gp120 என்ற கிளைக்கோபுரத நுண்முட்கள் காணப்படுகின்றன.
6. 2 பெரிய ஒற்றை ஆர்.என்.ஏ ரிவர்ஸ் டிரான்ஸ்கிரிப்டேஸ் நொதிகள் இணைந்துள்ளன.
7. மேலும் இதனுடன் புரோட்டியேஸ் மற்றும் ரிபோ நியூக்ளியேஸ் நொதிகளும் காணப்படுகின்றன.
8. இதன் மைய கேப்சிட் புரத உறையால் சூழப்பட்டுள்ளது.

18.
தொண்டை அடைப்பான்:
1. நோய்க்காரணி: சையனோ பாக்டீரியம் டிப்தீரியா
2. பரவும் முறை: கேழைத்துளிகள் மூலம்.
3. அறிகுறி: காய்ச்சல், தொண்டையில் புண் மூச்சுவிட சிரமபடல்
டைஃபாய்டு:
1. நோய்க்காரணி - சால்மோனெல்லா டைஃபி
2. பரவும் முறை - மலக்கழிவு கலந்த உணவு மற்றும் நீர் வழியாக
3. அறிகுறி - அசௌகாரியமான வயிறு, காய்ச்சல் மற்றும் வயிற்றுப்போக்கு.
19.
காலா – அசார் அல்லது வயிற்றறை லீஷ்மேனியாசிஸ்
லீஷ்மேனியா டோனோவானி என்ற ஒட்டுண்ணியின் காரணமாக காலா - அசார் அல்லது வயிற்றறை லீஷ்மேனியாசிஸ் என்ற நோய் ஏற்படுகிறது.
காலா - அசார் அல்லது வயிற்றறை லீஷ்மேனியாசிஸ் நோயினை பரப்பும் நோய்க் கடத்தியாக மணல் பூச்சி உள்ளது.
எண்டோதீலியல் செல்கள், எலும்பு மஜ்ஜை, கல்லீரல், நிணநீர் சுரப்பிகள் மற்றும் மண்ணீரலின் இரத்தக் குழாய்கள் முதலிய உடல் பாகங்களில் காலா - அசார் நோயின் தொற்று ஏற்படுகிறது.
காலா - அசார் அல்லது வயிற்றறை லீஷ்மேனியாசிஸ் நோயின் அறிகுறிகள் எடை குறைதல், இரத்த சோகை, காய்ச்சல், கல்லீரல் மற்றும் மண்ணீரல் வீக்கம் முதலியன ஆகும்.
20.
( )
12 நாட்கள்
21.
( )
15
22.
( )
நிணநீர் முடிச்சு
23.
( )
கிளாசினா மோர்சிட்டன்ஸ்
24.
( )
டிரோபோசோய்ட்கள்
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards