12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 06/09/2019
விலங்கியல் - மூலக்கூறு மரபியல்
12ஆம் வகுப்பு Biology / உயிரியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Biology / உயிரியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Biology Test1.
ஒரு ஓபரான் என்பது ______.
மரபணு வெளிப்பாட்டை தடைசெய்யும் புரதம்
மரபணு வெளிப்பாட்டைத் தூண்டும் புரதம்
தொடர்புடைய செயல்களை உடைய அமைப்பு மரபணுக்களின் தொகுப்பு
பிற மரபணுக்களின் வெளிப்பாட்டைத் தூண்டும் அல்லது தடைசெய்யும் மரபணு
2.
புரோகேரியோட்டுகளில் நடைபெறும் டி.என்.ஏ இரட்டிப்பாதல் குறித்த எந்த வாக்கியம் தவறானது?
டி.என்.ஏ இரட்டிப்பாதல் ஒற்றை மூலத்திலிருந்து துவங்கும்.
டி.என்.ஏ இரட்டிப்பாதல் அதன் மூலத்திலிருந்து இரு திசைகளில் நிகழும்
ஒரு நிமிடத்திற்கு 1 மில்லியன் கார இணைகள் என்ற வீதத்தில் இரட்டிப்பாதல் நிகழ்கிறது.
ஏராளமான பாக்டீரியா குரோமோசோம்களில், ஒவ்வொன்றிலும் இரட்டிப்பாதல் ஒரே சமயத்தில் நிகழ்கிறது.
3.
புரதச் சேர்க்கை நிகழ்ச்சி மைய செயல்திட்டத்தின் சரியான வரிசையைக் கண்டறிக.
படியெடுத்தல், மொழிபெயர்த்தல், இரட்டிப்பாதல்
படியெடுத்தல், இரட்டிப்பாதல், மொழிபெயர்த்தல்
நகலாக்கம், மொழிபெயர்த்தல், படியெடுத்தல்
இரட்டிப்பாதல், படியெடுத்தல், மொழிபெயர்த்தல்
4.
5.
வேறுபடுத்துக – வார்ப்புரு இழை மற்றும் குறியீட்டு இழை
6.
முதன்மை இழை மற்றும் பின்தங்கும் இழை – வேறுபடுத்துக.
7.
மரபணு குறியீடு ‘உலகம் முழுவதும் ஏற்றுக்கொள்ளத் தக்கது’. – காரணங்கள் கூறு.
8.
கீழ்க்கண்ட குறியீடுகளை இனங்கண்டறியும் எதிர்குறியீடுகளை எழுதுக.
AAU, CGA, UAU மற்றும் GCA
9.
கடத்து ஆர்.என்.ஏ, ‘இணைப்பு மூலக்கூறு’ என ஏன் அழைக்கப்படுகிறது?
10.
அமைப்பு மரபணுக்கள், நெறிப்படுத்தும் மரபணுக்கள் மற்றும் இயக்கி மரபணுக்களை வேறுபடுத்துக.
11.
DNA அச்சிடல் தொழில்நுட்பம் என்றால் என்ன?
12.
படியெடுத்தல் அலகு விவரி
1.
(c)
தொடர்புடைய செயல்களை உடைய அமைப்பு மரபணுக்களின் தொகுப்பு
2.
(d)
ஏராளமான பாக்டீரியா குரோமோசோம்களில், ஒவ்வொன்றிலும் இரட்டிப்பாதல் ஒரே சமயத்தில் நிகழ்கிறது.
3.
(d)
இரட்டிப்பாதல், படியெடுத்தல், மொழிபெயர்த்தல்
4.
5.
| வார்ப்புரு இழை | குறியீட்டு இழை | |
| 1 | இவ்விழை mRNA உருவாக்கத்திற்கு வார்ப்பாக செயல்படுகிறது. | இது வார்ப்புரு பணியைச் செய்வதில்லை |
| 2 | இதன் நைட்ரஜன் காரங்கள் mRNA இழைக்கு ஈடான இழைகளை உருவாக்குகிறது. | இதன் நைட்ரஜன் காரங்கள் அப்படியே mRNA இழையில் காணப்படுவதேயாகும். |
| 3 | இது 3' ⟶ 5' திசையில் கொண்டது | இது 5' ⟶ 3' திசையில் கொண்டது |
6.
| முதன்மை இழை | பின்தங்கும் இழை | |
| 1 | இது தொடர் இழை (அ) வழிகாட்டு இழை எனப்படும். இது 3' ⟶ 5' திசை கொண்ட வார்ப்புரு இழையில் இரட்டிப்பதால் - தொடர்ச்சியாக நடைபெறும். | மற்றொரு 5' ⟶ 3' திசை கொண்ட இழையின் இரட்டிப்பதால் தொடர்ச்சியற்றதாகும். இது பின்தங்கும் இழை எனப்படும். |
| 2 | DNA லிகேஸ் நொதி தேவைப்படுவதில்லை | தொடர்ச்சியற்ற புதிய துண்டங்களை DNA - லிகேஸ் நொதி ஒன்றிணைக்கின்றது. |
| 3 | உருவாக்கம் 5' ⟶ 3' திசையில் நடைபெறுகிறது. வார்ப்புரு இழையின் திசை 3' ⟶ 5' ஆகும் | இதன் திசை 5' ⟶ 3' ஆயினும் ஒட்டு மொத்த வார்ப்புரு இழையின் திசை 3' ⟶ 5' ஆகும். |
7.
1. மரபணுக்குறியீடுகள் உலகம் முழுவதும் ஏற்றுக் கொள்ளத்தக்கது.
2. இது பொதுவான எல்லா உயிரின மண்டலங்களுக்கு உட்கரு அமிலங்களையும் அதே முக்குரியங்களையும் பயன்படுத்தியே அமினோ அமிலங்களிலிருந்து புரதத்தை உற்பத்தி செய்கின்றன.
3. தூது ஆர்.என்.ஏவில் உள்ள UUU எல்லா உயிரினங்களிலும் பினைல் அலனைன் என்னும் அமினோ அமிலத்திற்கானது.
4. விதிவிலக்குகள் (மிகச் சில)
i. எ.கா. புரோகேரியோட்டுகள், மைட்டோகாண்டிரியா, குளோரோபிளாஸ்ட் ஆகியவற்றின் மரபுத் தொகுதி
ii. பொதுவாக வேறுபாடுகள் மிகக் குறைவு ஒற்றுமைகளே அதிகம் உள்ளன.
iii. இது போன்ற மரபணுக்குறியீடுகளின் எல்லா சிறப்புப் பண்புகள் பொதுவாக எல்லா உயிரினங்களிலும் பொதுவானது.
5. எனவே மரபணு குறியீடு உலகம் முழுவதும் ஏற்றுக் கொள்ளத்தக்கதாகும்.
8.
9.
1. இணைப்பு மூலக்கூறு - என்ற சொற்களை உருவாக்கியவர் ஃபிரான்சிஸ் கிரிக்.
2. கிராம்பு இலை வடிவத்தை ஒத்திருக்கும் இரண்டாம் நிலை கட்டமைப்புடைய கடத்து RNA(tRNA) அமைப்பானது அதன் பணிகளுக்கு ஏற்றதாக உள்ளது.
3. தூது RNA மூலக்கூறிலுள்ள அமினோ அமிலங்களுக்கான குறிப்பிட்ட குறியீடுகளை படிப்பதும் கூடவே செல்லின் சைட்டோபிளாசத்தில் சிதறிக் கிடைக்கும் அமினோ அமிலங்களை புரதம் தயாரிக்கும் இடத்திற்கு எடுத்து வரும் கடத்தியதாக செயல்படுதலும் ஆகிய இரு பணிகளை செய்வதால் கடத்து RNA இணைப்பு மூலக்கூறுகள் என வழங்கப்படுகின்றன.
10.
ஊக்குவிப்பான் மரபணு:
எல்லா மரபணுக்களும் ஊக்குவிப்பான் மரபணுவின் கட்டுப்பாட்டில் உள்ளன.
1. இவை RNA உற்பத்தியைத் தொடங்கி வைக்கின்ற DNA விலுள்ள சமிக்ஞை வரிசைகளாகும்.
2. படியெடுத்தல் தொடங்குவதற்கு முன்பு ஊக்குவிப்பானுடன் RNA பாலிமெரேஸ் இணைகிறது.
இயக்கி மரபணு:
அமைப்பு மரபணுக்களுக்கும், ஊக்குவிப்பான்களுக்கும் இடையே இயக்கிகள் அமைந்துள்ளன.
ஓபரானின் இயக்கிப் பகுதியில் அடக்கி புரதம் பிணைகிறது.
அடக்கி மரபணு:
அடக்கி மரபணு ⟶ அடக்கி புரதத்தை குறியீடு செய்கின்றன இது - ஓபரானின் இயக்கி பகுதியில் அடக்கிப் புரதம் பிணைகிறது - ஊக்குவிப்பானை தடுத்து அமைப்பு மரபணுக்களின் படியெடுத்தலைத் தடை செய்கிறது.
அமைப்பு மரபணுக்கள்:
இவை பாலிசிஸ்ட்ரானிக் பண்பு உடையவை. இதில் லேக் Z, லேக்Y மற்றும் லேக் 'a' லேக் மரபணுக்களாகும்.
இவை Z மரபணு - β லேக்டோசிடோஸ் நொதிக்கான குறியீட்டைக் கொண்டுள்ளது.
இவை Y மரபணு - பெர்மியேஸ் நொதிக்கான குறியீட்டைக் கொண்டுள்ளது.
இவை 'a' மரபணு - டிரான்ஸ் அசிடைலேஸ் நொதிக்கான குறியீட்டைக் கொண்டுள்ளது.
இவ்வாறு ஊக்குவிப்பான் மரபணு மற்றும் அடக்கி மரபணு இவை அமைப்பு மரபணுக்களை நெறிப்படுத்துகின்றன.
11.
1. மனித DNA 1.5 மில்லியன் மரபணுக்கள் உள்ளன.
2. அவற்றுள் 90% DNA பொதுவாக எல்லா மனிதர்களிலும் ஒன்று ஆனால் 10% DNA வில் மட்டும் வேறுபாடு உள்ளது (பாலிமார்பிசம்)
3. AT, C மற்றும் G குறியீடு கொண்ட கார இணைகளில் மில்லியன் கணக்கான வேறுபாடுகள் உள்ளன.
4. ஆதலால் மரபொத்த இரட்டையர்கள் தவிர, நம்மிடையே உள்ள தனித்தன்மைக்கு இந்த வேறுபாடுகளே காரணமாகும்.
5.

6. இந்த மாறி மறுதொடரிகள் (VNTR (Variable number tandem repeats) பகுதி ஒவ்வொரு நபரின் VNTR கள் தனித்தன்மைவாய்ந்தது பிறரிடமிருந்து வேறுபட்டு காணப்படுகிறது. (நமது கைரேகைகள் போல்)
7. பல்லுருவ அமைப்பு காட்டும் இந்த வரிசைகள் DNA ரேகை அச்சிடலுக்குக் காரணமாகிறது. இவை மரபியல் குறிப்பான்களாக பயன்படுகின்றன.
12.
படியெடுத்தல் அலகு மூன்று பகுதிகளை உடையது. அவை
1) ஊக்குவிப்பான்
2) அமைப்பு மரபணு
3) நிறைவி ஆகியன
ஊக்குவிப்பான்
RNA பாலிமெரேஸ்-நொதிக்கான பிணைப்பு இடத்தை அளிக்கும் DNA தொடரே ஊக்குவிப்பான் ஆகும். இது 5' முனையை ஓட்டி அமைந்துள்ளது.
நிறைவி
குறியீட்டு இழையின் 3' முனையில் உள்ளது. (RNA பாலிமெரேஸின் செயல்பாடுகளை நிறுத்தி வைக்கும் வரிசையமைப்பு காணப்படுகிறது)
அமைப்பு மரபணு
இது ஊக்குவிப்பான் மற்றும் நிறைவி மரபணுக்களுக்கிடையே காணப்படுகிறது.
படியெடுத்தல் அலகில் உள்ள DNA வின் இரு இழைகளும் எதிரெதிர் துருவத்துவம் பெற்றவை:
DNA சார்ந்த RNA பாலிமெரேஸ்
ஒரு திசையில் (5'---------3') திசையில் மட்டுமே பாலிமராக்கம் செய்யக்கூடியது.
1. வார்ப்புரு இழை -3' ➝ 5' துருவத்துவம் கொண்டது.
2. குறியீட்டு இழை -5' ➝3' துருவத்துவம் கொண்டது. இதில் தைமினுக்கு பதில் யுரேசில் உள்ள RNA வரிசைக் காணப்படும்.

12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards