12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 10/10/2019
விலங்கியல் - இனப்பெருக்க நலன்
12ஆம் வகுப்பு Biology / உயிரியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Biology / உயிரியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Biology Test1.
மலட்டுத்தன்மைக்கு எதிரான விட்டமின்
A
D
E
B
2.
கீழ் வருவனவற்றுள் ஹார்மோன் கருத்தடை மாத்திரைகளின் செயல்கள் பற்றிய தவறான கூற்று ஏது?
விந்து செல்லாக்கத்தை தடைசெய்தல்
அண்ட வெளிப்பாட்டை தடைசெய்தல்
கருப்பைவாய் கோழையின் தன்மை மாற்றத்தால் விந்துசெல் நுழையும் பாதை மற்றும் விந்துசெல் நகர்வதை பலவீனப்படுத்துகின்றது.
கருப்பை உட்கோழைப் படலத்தில் ஏற்படும் மாற்றம் கருப்பதிவிற்கு எதிரான சூழலை ஏற்படுத்துகின்றது
3.
ஒரு கருத்தடை மாத்திரை அண்ட செல் வெளியீட்டை எவ்வாறு தடுக்கிறது?
அண்ட நாளத்தில் அடைப்பு ஏற்படுத்துதல் மூலம்
FSH மற்றும் LH ஹார்மோன்கள் சுரத்தலை தடுப்பதன் மூலம்
FSH மற்றும் LH ஹார்மோன்கள் சுரத்தலை தூண்டுவதன் மூலம்
அண்ட செல் விடுபட்டவுடன் அதனை உடனடியாக அழித்துவிடுவதன் மூலம்
4.
5.
கீழ்வருவனவற்றுள் HIV ஹெபாடிடிஸ் (B), வெட்டைநோய் மற்றும் டிரைகோமோனியாஸிஸ் பற்றிய சரியான கூற்று எது?
வெட்டைநோய் மட்டும் பால்வினை நோய், பிற அனைத்தும் பால்வினை நோய்கள் அல்ல.
டிரைகோமோனியாஸிஸ் ஒரு வைரஸ் நோய், பிற அனைத்தும் பாக்டீரிய நோய்கள்
HIV என்பது நோய்க்கிருமி பிற அனைத்தும் நோய்கள்
ஹெபாடிடிஸ் மட்டும் முழுமையாக ஒழிக்கப்பட்டு விட்டது. ஆனால், பிற அப்படியல்ல.
6.
சர்வதேச நோய்கள் யாவை?
7.
GIFT, ZIFT வேறுபடுத்துக.
8.
வளர்கருவின் இதயத்துடிப்பை எவ்வாறு அறியலாம்?
9.
இனப்பெருக்க நலன் என்றால் என்ன?
10.
குழந்தை வேண்டும் தம்பதியரில் ஆண் விந்து நீர்மத்தை உற்பத்தி செய்ய இயலாமல் போனாலோ அல்லது மிகக் குறைந்த விந்துசெல் கொண்ட விந்து நீர்மத்தை உற்பத்தி செய்தாலோ அத்தம்பதியர் குழந்தை பெற எம்முறையை பரிந்துரை செய்வீர்?
11.
பனிக்குடத் துளைப்பு என்பது யாது? இத்தொழில் நுட்பத்திற்கு சட்டப்படியான தடை விதிப்பது ஏன்?
12.
மீயொலி வரியோட்டத்தின் பயன்கள் கூறு.
13.
முக்கிய பால்வினைநோய்களையும் அவற்றின் அறிகுறிகளையும் விளக்குக
14.
15.
GIFT முறையில் பெண் இனச்செல்கள் அண்டநாளத்தினுள் இடமாற்றம் செய்யப்படுகின்றது.இனச்செல்களை கருப்பைக்குள் இடமாற்றம் செய்தால் இதே முடிவு தோன்ற வாய்ப்புள்ளதா? விளக்குக.
16.
பால்வினை நோய்கள் எவ்வாறு பரவுகின்றன?
17.
முக்கிய பால்வினை நோய்களையும் அவற்றின் அறிகுறிகளையும் விளக்குக.
18.
குறைந்த எண்ணிக்கையில் விந்து செல்களை உற்பத்தி செய்யும் ஆண்கள்
19.
8 பிளாஸ்டோமியர் கொண்ட கருமுட்டை அண்ட நாளத்தினுள் செலுத்துதல் ________
20.
கல்லீரல் இறுக்கத்தை உண்டாக்குவது _________
21.
சிறுநீர் வடிகுழல் அழற்சியை உருவாக்குவது _________
22.
விந்தக மேல்சுருள் நாள அழற்சியை உருவாக்குவது ________
23.
1. தலாசீமியா ஒரு உடல் குரோசோம்களின் ஒடுங்கு ஜீன்களினால் ஏற்படும் குறைபாடு
2. பீனைல் கீட்டோன் யூரியா ஒரு உடல் குரோமோசோம்களில் உள்ள ஒடுங்கு மரபணுக்களால் ஏற்படுகிறது.
3. அல்பீனிசம் என்பது மெலானின் இல்லாமையால் வருவது.
4. ஹண்டிங்டன் கோரியா ஒரு பால் குரோமோசோம்களின் ஒடுங்கு மரபணுக்களால் ஏற்படுகிறது.
24.
அ) புரோலாக்டின் அதிகரிப்பு மாதவிடாய்ச் சுழற்சியைத் தடுக்கிறது,
ஆ) புரோலாக்டின் அதிகரிப்பு கொனடோடிராபின் விடுவிக்கும் காரணி உற்பத்தி தடுக்கப்படும்.
இ) GnRH ஹைபோதலாமஸிலிருந்து வரும்.
ஈ) புரோலாக்டின், அண்டக்கட்டையினின்று சுரக்கிறது.
25.
அ) இடுப்புக்குழி வீக்க நோயால் மலட்டுத்தன்மை உருவாகிறது.
ஆ) பெண் உடல் கொழுப்பு குறைவதால் மலட்டுத்தன்மை உண்டாகும்.
இ) வேரிகோசீஸ் நிலையால் ஆண்களில் மலட்டுத்தன்மை உண்டாகும்.
ஈ) ஆண்கள் விந்து செல்களுக்கு எதிராக எதிர்ப்பொருள் உருவாக்குவர்.
1.
(c)
E
2.
(a)
விந்து செல்லாக்கத்தை தடைசெய்தல்
3.
(b)
FSH மற்றும் LH ஹார்மோன்கள் சுரத்தலை தடுப்பதன் மூலம்
4.
(b)
5.
(c)
HIV என்பது நோய்க்கிருமி பிற அனைத்தும் நோய்கள்
6.
கிரந்தி, வெட்டைநோய்.
7.
| GIFT | ZIFT | ||
|---|---|---|---|
| 1. | அண்ட நாளத்தினுள் இனச் செல் இடமாற்றம் | 1. | கருமுட்டையை அண்டநாளத்தினுள் செலுத்தல். |
| 2. | B பிளாஸ்டோமியர் கொண்ட கருமுட்டை, லேப்ராஸ்கோப் முறையில், அண்டநாளத்தில் வைக்கப்படும். | 2. | அண்டக்கலத்திலிருந்து முட்டைகள் விந்து செல்களுடன் சேர்க்கப்பட்டு அண்ட நாளத்தினுள் செலுத்தப்படும். |
| 3. | கருமுட்டை கருப்பையை நோக்கிச் சென்று பதிகிறது. | 3. | கருக்கோளம் கருப்பை நோக்கி நகர்ந்து பதிகின்றது. |
8.
1. கருகண்காணிப்புக் கருவியால்(Foetoscope) வளர்கருவின் இதயத்துடிப்பு வீதத்தை அறியலாம்.
2. கர்ப்பகால இறுதியில் நடைபெறும் செயல்கள், பிரசவ வலி போன்றவற்றை அறியலாம்.
3. கருவின் இயல்புக்கு மாறான இதயத்துடிப்பு, ஆக்சிஜன் பற்றாக்குறை போன்றவற்றை இக்கருவி காட்டுகிறது.
9.
அமைப்பு, செயல்ரீதியாக இயல்பாகச் செயல்படும் இனப்பெருக்க உறுப்புகளைக் கொண்ட சமூகத்தை குறிப்பது இனப்பெருக்க நலன் எனப்படும்.
10.
(i) கருப்பையினுள் விந்து செல்களை உட்செலுத்தும் முறை (IUI) பயன்படுத்தப்படும்.
(ii) கணவர், உடல்நலம் மிக்க விந்து கொடையாளிடம் இருந்து விந்துத்திரவம் சேகரிக்கப்படுகிறது.
(iii) அண்டகத்தைத் தூண்டி, அதிக அண்ட செல்கள் உற்பத்தி செய்யப்படும்.
(iv) சேகரிக்கப்பட்ட விந்து செல்கள், நுண்குழல் மூலம் கல்விக் கலவிக்கால்வாய் வழியாகக் கருப்பையினுள் செலுத்தப்படும்.
(v) விந்து செல்கள் அண்டநாளம் நோக்கி நீந்திச் சென்று, இயல்பான கர்ப்பம் ஏற்படும்.
11.
(i) கர்ப்ப காலத் தொடக்கத்திலேயே கண்டறியும் தொழில்நுட்பம்.
(ii) வளர்க்கருவைச் சூழ்ந்துள்ள, பனிக்குடத் திரவ மாதிரியைக் கொண்டு குரோமோசோம் பிறழ்ச்சிகளைக் கண்டறியலாம்.
(iii) 15 முதல் 20 வாரக் கருவளர்ச்சி கொண்ட பெண்களில் செய்யப்படுகிறது.
(iv) பனிக்குடத் திரவத்தில் உள்ள கருவின் உதிர்ந்த செல்கள் மெல்லிய ஊசி மூலம் சேகரிக்கப்படும்.
ஏன் சட்டப்படி தடை விதிக்கப்பட்டுள்ளது:
(i) வளர்கருவின் பால்தன்மை கண்டறியப்படும்.
(ii) பின்பு பெண்கரு சிசுக்கொலை செய்யப்பட வாய்ப்புள்ளது.
12.
1. மும்மாத கருவளர்ச்சியின் போது பிறப்புத் தேதி.
2. கருவின் எண்ணிக்கை
3. கர்ப்ப தொடக்க காலப் பிரச்சனைகளை அறியலாம்.
13.
அ) கொனோரியா அல்லது வெட்டை நோய்:
நோய்க்காரணி: நீஸ்ஸெரியா கொனோரியே
அறிகுறிகள்: சிறுநீர் வடிகுழாய், மலக்குடல், தொண்டை, பெண்களின் கருப்பைவாய் ஆகிய பகுதிகளில் பாதிப்பு.
பிறப்புப் பாதையில் வலி, சீழ் வடிதல், சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் உணர்வு
நோய் வெளிப்படும் காலம்: 2 - 5 நாட்கள்
ஆ) கிரந்தி அல்லது மேகப்புண்:
நோய்க்காரணி: டிரிபோனிமா பாலிடம்
அறிகுறிகள்:
முதல்நிலை: பாலுறுப்புகள் புறப்பகுதியில் வலியற்ற புண்கள்
இரண்டாம் நிலை: தோல் தடிப்பு, மூட்டுகளில் வீக்கம், காய்ச்சல் மற்றும் முடிஉதிர்வு.
மூன்றாம் நிலை: மூக்கு, கீழ்க்கால் பகுதி மற்றும் அண்ணப் பகுதியில் நாள்பட்ட புண்கள், இயக்கமின்மை, மனநலபாதிப்பு, பார்வைக் கோளாறு, இதயப் பிரச்சனை, மென்மையான பரவும் தன்மையற்ற கட்டிகள் போன்றன.
நோய் வெளிப்படும் காலம்: 10 - 90 நாட்கள்
இ) கல்லீரல் அழற்சி:
நோய்க்காரணி: ஹிபாடிடிஸ்
அறிகுறிகள்: சோர்வு, மஞ்சள்காமாலை, காய்ச்சல், தோல் தடிப்பு, வயிற்று வலி.
கல்லீரல் இறுக்கம், இறுதி நிலையில் கல்லீரல் செயலிழப்பு.
நோய் வெளிப்படும் காலம்: 30 - 80 நாட்கள்
ஈ) எய்ட்ஸ் (AIDS):
நோய்க்காரணி: மனித தடைகாப்பு குறைப்பு வைரஸ்.
அறிகுறிகள்: நிணநீர் முடிச்சுகள் பெரிதாதல், நீண்ட நாள் காய்ச்சல், நீண்ட நாள் வயிற்றுப் போக்கு, உடல் எடை குறைதல், இரவில் வியர்த்தல்.
நோய் வெளிப்படும் காலம்: 2 - 6 வாரங்கள் முதல் 10 ஆண்டுகளுக்கு மேல்.
14.
15.
கருப்பையினுள் விந்து செல்களை உட்செலுத்துதல் :
(i) குறைந்த எண்ணிக்கையில் விந்து செல்களை உற்பத்தி செய்யும் ஆண்களுக்கு உகந்தது.
(ii) கணவர், உடல் நலமிக்க கொடையாளிடம் இருந்து விந்து சேகரித்தல்.
(iii) சேகரிக்கப்பட்ட விந்து செல்கள், கலவிக் கால்வாய் வழி கருப்பையினுள் செலுத்தல்.
(iv) விந்து செல்கள் அண்டநாளம் நோக்கி நீந்திச் சென்று, இயல்பான கர்ப்பம் ஏற்படும்.
16.
பால்வினைத் தொற்றுகள் (STI) என்பது பால்வினை நோய்கள் (STD) அல்லது இனப்பெருக்கப் பாதைத் தொற்று (RTI) என்றும் முன்பு அழைக்கப்பட்டது.
பரவும் முறை:
பால்வினை நோய்த் தொற்று உள்ளவருடன் மிக நெருக்கமான பாதுகாப்பற்ற உடலுறவு கொள்வதன் மூலம் இத்தொற்று பரவுகிறது.
கல்லீரல் அழற்சி - B மற்றும் HIV தொற்றுகள் பாலுறவினால் மட்டுமன்றி நோயாளி பயன்படுத்திய உட்செலுத்து ஊசிகள், அறுவை சிகிச்சை கருவிகள் போன்றவற்றைப் பகிர்வதன் மூலமும் இரத்தம் செலுத்துதல் மற்றும் தொற்று கொண்ட தாயிடம் இருந்து சேய்க்கும் பரவுகின்றன.
15 முதல் 24 வயதினருக்கு இத்தகு தொற்றுகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். வெட்டை நோய் (கொனோரியா), கிரந்தி (சிஃபிலிஸ்) கான்க்ராய்டு (மெதுப்புண்), கிளாமிடியாஸிஸ், லிம்போகுரானுசோமா வெனரியம் என்னும் அரையாப்புக் கட்டி போன்றவை பாக்டீரிய பால்வினைத் தொற்று நோய்கள் ஆகும்.
பிறப்புறுப்பு அக்கி, பிறப்புறுப்பு மருக்கள், கல்லீரல் அழற்சி - B மற்றும் எய்ட்ஸ் போன்ற வைரஸ் பால்வினைத் தொற்று நோய்கள் ஆகும்.
17.
| நோயின் பெயர் | நோய்க்காரணி | அறிகுறிகள் | நோய் வெளிப்படும் காலம் |
| பாக்டீரிய பால்வினைத் தொற்று (Bacterial STI) | |||
| கொனோரியா அல்லது வெட்டை நோய் (Gonorrhoea) |
நைசீரியா கொனோரியா (Neisseria gonorrhoeae) |
(i) சிறுநீர் வடிகுழாய், மலக்குடல், தொண்டை, பெண்களின் கருப்பைவாய் ஆகிய பகுதிகளில் பாதிப்பு (ii) பிறப்புப் பாதையில் வலி, சீழ் வடிதல் சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் உணர்வு |
2-5 நாட்கள் |
| கிரந்தி அல்லது மேகப்புண் (Syphilis) | டிரிபோனிமா பாலிடம் (Treponema pallidum) |
(i) முதல்-நிலை - பாலுறுப்புகளின் புறப்பகுதியில் வலியற்ற புண்கள். (ii) இரண்டாம் நிலை - தோல் புண்கள், சொறி, தோல் தடிப்பு, மூட்டுகளில் வீக்கம் காய்ச்சல் மற்றும் முடி உதிர்வு |
10-90 நாட்கள் |
| (iii)மூன்றாம் நிலை - பாலுறுப்புகளின் மூக்கு, கீழ்க்கால் பகுதி மற்றும் அண்ணப்பகுதியில் நாள்பட்ட புண்கள், இயக்கமின்மை மனநல பாதிப்பு, பார்வைகோளாறு இதயப்பிரச்சனை, மென்மையான பரவும் தன்மையற்ற கட்டிகள் போன்றன. | |||
| கிளாமிடியாசிஸ் (Chalmy diasis) |
கிளாமிடியா ட்ரோகோமேடிஸ் (Chlamydia trachomatis) |
கண் இமை அரிப்பு, சிறுநீரக இனப்பெருக்கப் பாதை, சுவாசப்பாதை மற்றும் கண்ணின் கன்ஜங்க்டிவா ஆகியவற்றில் தூண் எப்பிதீலிய செல்கள் பாதிப்பு | 2-3 வாரங்கள் அல்லது 6 வாரங்கள் வரை |
| லிம்போகிரானுலோமா வெனரியம் (Lymphogranuloma venereum) | கிளாமிடியா ட்ராகோமேடிஸ் | பிறப்புறுப்பின் தோல் அல்லது கோழைப்படல பாதிப்பு, சிறுநீர் வடிகுழாய் அழற்சி, உள்கருப்பை வாய் அழற்சி, வாய் அழற்சி, ஆங்காங்கே கேடு தரும் புண்கள், இனப்பெருக்க உறுப்பு யானைக்கால் நோய். | |
| வைரஸ் பால்வினைத் தொற்று(Viral STI) | |||
| பிறப்புறுப்பு அக்கி (Genital herpes) |
ஹெர்பஸ் சிம்ப்லெக்ஸ்(Herpes simplex virus) | (i) பெண்களின் பெண் கிரிவெளியிதழ், கலவிக்கால்வாய், சிறுநீர் வடிகுழாய் ஆகியனவற்றைச் சுற்றி புண்கள் ஆண்களில் ஆண்குறியைச் சுற்றி புண்கள். (ii) சிறுநீர் கழிக்கும் போது வலி (iii)மாதவிடாய் சுழற்சிகளுக்கிடையே இரத்தப்போக்கு (iv) தொடை இடக்குகளின் நிணநீர் முடிச்சுகளில் வீக்கம். |
2-21 நாட்கள் (சராசரி 6 நாட்கள்) |
| பிறப்புறுப்பு மருக்கள் (Genital warts) |
மனித பாபிலோமோ வைரஸ் (HPV)(Human papilloma virus) | (i) இன உறுப்புகளின் வெளிப்பகுதி, கருப்பைவாய், மலவாயைச் சுற்றிய பகுதிகளில் கடினமான புடைப்புகள் (கட்டிகள்) | 1-8 மாதங்கள் |
| கல்லீரல் அழற்சி (Genital warts) | ஹிபாடிடிஸ் வைரஸ்(HBV) (Hepatitis-B virus) | (i) சோர்வு, மஞ்சள் காமாலை, காய்ச்சல் தோல் தடிப்பு,வயிற்றுவலி. (ii) கல்லீரல் இறுக்கம், இறுதி நிலையில் கல்லீரல் செயலிழப்பு |
30-80 மாதங்கள் |
| எய்ட்ஸ்(AIDS) | மனித நோய் எதிர்ப்பு குறைபாடு வைரஸ்(HIV) | (i) நிணநீர், முடிச்சுகள் பெரிதாதல்,நீண்டநாள், காய்ச்சல்,நீண்டநாள் வயிற்றுப்போக்கு, உடல் எடை குறைதல், இரவில் வியர்த்தல். | 2-6 வாரங்கள் முதல் 10 ஆண்டுகளுக்கு மேலும் |
| பூஞ்சை பால்வினைத் தொற்று(Fungal STI) | |||
| கேன்டிடியாசிஸ் (Candidiasis) |
கேன்டிடா அல்பிகன்ஸ்(Candida albicans) | (i) வாய், தொண்டை, குடற்பாதை மற்றும் கலவிக்கால்வாய் ஆகிய பகுதிகளில் தாக்கம் (ii) கலவிக்கால்வாயில் அரிப்பு (அ) புண்கள் (iii) கலவிக்கால்வாய் திரவம் மிகைப்போக்கு (iv) வலியுடன் சிறுநீர் கழித்தல் |
|
| புரோட்டோசோவா பால்வினைத் தொற்று (Protozoan STI): | |||
| டிரைக்கோமணியாசிஸ் (Trichomoniasis) |
டிரைகோமோனாஸ் வாஜினாலிஸ் (Trichomonas vaginalis) | (i) கலவிக்கால்வாய் அழற்சி, பச்சை மஞ்சள் கலந்த கலவிக் கால்வாய் திரவ வெளிப்பாடு, அரிப்பு மற்றும் எரிச்சல் உணர்வு, சிறுநீர் வடிகுழல் அழற்சி, விந்தக மேல் சுருள் நள அழற்சி, புரோஸ்டேட் சுரப்பி அழற்சி | 4-28 நாட்கள் |
18.
( )
கருப்பையினுள் குறைந்த எண்ணிக்கையில் விந்து செல்களை உட்செலுத்துதல்
19.
( )
உடல் வெளிக்கருவுறல்
20.
( )
ஹெபாடைடிஸ் வைரஸ்
21.
( )
கிளாமிடியா டிராகோமேடிஸ்
22.
( )
டிரைகோமோனோஸ் வாஜிநாலிஸ்
23.
அன்டிங்டன் கோரியா ஒரு பால் குரோமோசோம்களின் ஒடுங்கு மரபணுக்களால் ஏற்படுகிறது.
24.
புரோலாக்டின், அண்டக்கட்டையினின்று சுரக்கிறது.
25.
ஆண்கள் விந்து செல்களுக்கு எதிராக எதிர்ப்பொருள் உருவாக்குவர்
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards