12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 26/07/2019
தேசிய வருவாய்
12ஆம் வகுப்பு Economics / பொருளியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Economics / பொருளியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Economics Test

1.
மிக அதிக அளவிலான நாட்டு வருமானம் _______ லிருந்து வருகிறது.
தனியார் துறை
உள்துறை
பொதுத் துறை
எதுவும் இல்லை
2.
PQLI என்பது _________ ன் குறியீடு ஆகும்.
பொருளாதார வளர்ச்சி
பொருளாதார நலன்
பொருளாதார முன்னேற்றம்
பொருளாதார மேம்பாடு
3.
கீழ்வருவனவற்றுள் எது தடைபடா ஓட்டக்(Flow) கருத்துரு?
சட்டைகளின் எண்ணிக்கை
மொத்த சொத்து
மாத வருமானம்
பண அளிப்பு
4.
பணவீக்கத்திற்கு சரிபடுத்தப்பட்ட நாட்டு வருவாயின் மதிப்பு ______ என அழைக்கப்படுகிறது.
பணவீக்க வீதம்
செலவிடக்கூடிய வருமானம்
GNP
உண்மை நாட்டு வருமானம்
5.
ஒரு நாட்டின் சராசரி வருமானம் என்பது ____________
தனிநபர் வருமானம்
தலைவீத வருமானம்
பணவீக்க வீதம்
செலவிடக்கூடிய வருமானம்
6.
கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றில் எது மிகப்பெரிய எண்ணாக இருக்கும்?
செலவிடக்கூடிய வருமானம்
தனிநபர் வருமானம்
NNP
GNP
7.
எவற்றைக் கூட்டி வருமான முறையில் நாட்டு வருமானம் கணக்கிடப்படுகிறது?
வருவாய்
வரி
செலவு
வருமானம்
8.
எத்தனை முறைகளால் நாட்டு வருமானம் கணக்கிடப்படுகிறது?
இரண்டு
மூன்று
ஐந்து
நான்கு
9.
முதன்மைத்துறை என்பது ______________.
தொழில்
வணிகம்
வேளாண்மை
கட்டடம் கட்டுதல்
10.
உற்பத்திக்காரணியின் செலவின் அடிப்படையிலான NNP
நாட்டு வருமானம்
உள்நாட்டு வருமானம்
தலை வீத வருமானம்
சம்பளம்
11.
நாட்டு வருமானம் கணக்கீட்டில் "சொந்த நுகர்வு" எவ்வாறு சிக்கலைத் தருகிறது.
12.
GDP குறைப்பான் இலக்கணம் தருக
13.
தனிமனிதர் வருமானம் என்றால் என்ன?
14.
GNP க்கும் NNPக்கும் உள்ள தொடர்பினை எழுது
15.
NNP க்கும் NDP க்கும் உள்ள வேறுபாடு யாது?
16.
GNP கணக்கிடும் வாய்ப்பாட்டை எழுதுக.
17.
நாட்டு வருமானம், பொதுநலன் ஆகியவற்றைப் பற்றி சுருக்கமாக எழுதுக.
18.
நாட்டு வருமானம் கணக்கிடுதலில் " இருமுறை கணக்கீட்டுச் சிக்கலுக்கு என்ன தீர்வு?
19.
செலவுமுறை பற்றி ஒரு சிறு குறிப்பு தருக.
20.
காரணி செலவில் NNP - குறிப்பு தருக.
21.
தனிமனிதர் வருமானத்திற்கும் செலவிடக்கூடிய வருமானத்திற்கும் உள்ள வேறுபாடு என்ன?
22.
23.
நாட்டு வருமானத்தைக் கணக்கிடும் முறைகளை விளக்குக.
24.
நாட்டு வருமானத்தின் முக்கியத்துவத்தை விவரி.
1.
(a)
தனியார் துறை
2.
(b)
பொருளாதார நலன்
3.
(c)
மாத வருமானம்
4.
(d)
உண்மை நாட்டு வருமானம்
5.
(b)
தலைவீத வருமானம்
6.
(d)
GNP
7.
(d)
வருமானம்
8.
(b)
மூன்று
9.
(c)
வேளாண்மை
10.
(a)
நாட்டு வருமானம்
11.
சொந்த நுகர்வுக்கு உற்பத்தி செய்தல் மற்றும் விலை மாற்றம் :
1. உழவர்கள் தங்களின் சொந்த நுகர்விற்காக உற்பத்தியில் ஒரு பகுதியை ஒதுக்கி வைக்கின்றனர். அங்காடியில் விற்பனை செய்யாமல் ஒதுக்கிய உற்பத்தி நாட்டு வருமானத்தில் சேர்க்கப்பட்டதா
என்பதை கண்டறிவதில் சிக்கல் ஏற்படுகிறது.
2. உற்பத்தி முறையில் நாட்டு வருமானம் கணக்கிடுதல் என்பது நடப்பு அங்காடி விலையில் வினை முடிவடைந்த பண்டங்களின், பணிகளின் மதிப்பை அளவிடுதல் ஆகும்.
3. பொருளியல் அறிஞர்கள் நுகர்வோர் விலை குறியீட்டெண்ணைப் பயன்படுத்தி நிலையான விலையில் உண்மை நாட்டு வருமானத்தை கணக்கிடுகின்றனர்.
12.
GDP குறைப்பான் என்பது GDP யில் காணப்படும் பண்டங்கள் மற்றும் பணிகளின் விலைமாற்ற குறியீட்டெண் ஆகும்.
13.
தனிமனிதர் வருமானம் என்பது ஒரு ஆண்டில் ஒரு நாட்டில் வசிக்கும் ஒவ்வொரு தனிமனிதருக்கும் பல வழிகளில் இருந்து கிடைக்கப்பெறும் மொத்த வருமானம் ஆகும். அவை வட்டியாகவோ, வாரமாகவோ, கூலியாகவோ இருக்கலாம். இவை அனைத்தையும் ஒவ்வொரு தனிமனிதருக்கும் கூட்டினால் அது தனிமனிதர் வருமானம் ஆகும்.
14.
GNP:
1. மொத்த நாட்டு உற்பத்தி (GNP) என்பது ஒரு நாட்டில் ஓர் ஆண்டில் உற்பத்தி செய்யப்பட்ட வினை முடிவடைந்த பண்டங்கள். பணிகளின் அங்காடி மதிப்பில் கணக்கிடப்படுவது ஆகும்.
2. இதில் நிகர வெளிநாட்டு வருமானமும் நிகர ஏற்றுமதி சேர்க்கப்படும்.
NDP:
1. நிகர உள்நாட்டு உற்பத்தி (NDP) என்பது ஓர் ஆண்டில் ஒரு நாட்டில் ஏற்படும் தேய்மானத்தைக் கழித்த பிறகு கிடைக்கும் நிகர உற்பத்தி ஆகும்.
2. தேய்மானத்தின் மதிப்பை GDP யிலிருந்து கழித்து விட்டால் கிடைப்பது NDP ஆகும்.
15.
| NNP நிகர நாட்டு உற்பத்தி | NDP நிகர உள்நாட்டு உற்பத்தி |
| நிகர நாட்டு உற்பத்தி என்பது ஒரு ஆண்டின், பொருளாதாரத்தின் நிகர உற்பத்தியின் மதிப்பு ஆகும். | நிகர உள்நாட்டு உற்பத்தி (NDP) என்பது ஓர் ஆண்டில் ஒரு நாட்டில் ஏற்படும் தேய்மானத்தைக் கழித்த பிறகு கிடைக்கும் நிகர உற்பத்தி ஆகும். |
| NNP = GNP - தேய்மான கழிவு | நிகர உள்நாட்டு உற்பத்தி = GDP - தேய்மானம். |
16.
அங்காடி விலையில் GNP என்பது C+I+G+ (X-M) + (R-P)
அங்காடி விலையில் GNP =அங்காடி விலையில் GDP + வெளிநாட்டிலிருந்து கிடைக்கும் நிகர வருமானம்.
17.
நாட்டு வருமானமும் பொது நலனும்:
1. ஒரு நாட்டின் வளர்ச்சியும் பொருளாதார அந்தஸ்தும் அந்நாட்டின் நாட்டு வருமானத்தைப் பொறுத்தே அமைகிறது.
2. GDP யில் தலைவீத வருமானம். அதன் ஆண்டு 35 வளர்ச்சி வீதம் அடிப்படையில் நாடுகளின் பொருளாதார முன்னேற்றம் அளவிடப்படுகிறது.
3. அதிக தலைவீத வருமானம் உடைய நாடு, நல்ல வாழ்க்கைத்தரத்துடன் அதிக பொருளாதார நலனையும் பெற்றதாக இருக்கும்.
பொது நலன் :
1. நுகர்வுப் பண்டங்களைக் காட்டிலும் மூலதனப் பண்டங்கள் அதிகமாக இருந்தால், பொருளாதார நலனின் முன்னேற்றம் குறைவாக இருக்கும்.
2. இயற்கை வளங்களான காற்று, நீர், மண் ஆகியவற்றை மாசுபடுத்தி அதிகமான GDP-யை பெற்றால் பொருளாதார நலன் குறையும்.
3. இராணுவ தளவாடங்கள் உற்பத்தி அதிகரிப்பதினால் நாட்டு உற்பத்தி அதிகரித்தாலும் பொருளாதார நலன் குறையும்.
4. பெண்களுக்கு வேலைவாய்ப்பைத் தருதல், உழைப்பாளர்களை அதிக நேரம் வேலை செய்ய வைத்தல் முதலானவற்றின் மூலமாக தலைவீத வருமானத்தை அதிகரிக்கலாம்.
18.
1. ஒரே பண்டம் பல இடங்களில் மதிப்பிடப்படும் வாய்ப்பு இம்முறையில் இருக்கிறது.
2. இறுதி உற்பத்திக்கு எந்த ஒரு பண்டம் மூலப் பொருளாகவோ அல்லது இடைநிலைப் பொருளாகவோ இருந்தால் அப்பொருளின் உற்பத்தியை கணக்கில் எடுத்துக் கொள்ளக் கூடாது.
3. சொந்த நுகர்வுக்குப் பயன்படுத்தப்பட்ட பண்டங்களின் மதிப்பையும் நாட்டு வருமானம் கணக்கில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
4. இரண்டாம் முறையாக கைமாற்றப்பட்ட நீடித்த பொருள்களை வாங்குதல், விற்றல் நடவடிக்கைகளின் பணமதிப்பை நாட்டு வருமானத்தில் சேர்க்கக் கூடாது.
19.
செலவுமுறை என்பது நாட்டில் மேற்கொள்ளப்படும் அனைத்து செலவுகளின் கூட்டுத்தொகை ஆகும். ஓர் ஆண்டு காலத்தில் சமுதாயத்தில் மேற்கொள்ளப்படும் மொத்த செலவுகள் அனைத்தையும் கூட்டி தேசிய வருவாய் கணக்கிடப்படுகிறது. இதில் தனிநபர் செலவு, நிகர உள்நாட்டு முதலீடு, அரசின் கொள்முதல் செலவு, முதலீட்டு பொருட்கள் வாங்குவதற்கான செலவு மற்றும் நிகர ஏற்றுமதி செலவு இவை அனைத்தையும் கூட்டினால் கிடைக்கும் மொத்த செலவு தேசிய வருவாயாக கணக்கிடப்படுகிறது.
GNP = C+I+G+(X-M)
C = தனியார் நுகர்வு செலவு
I = தனியார் முதலீட்டு செலவு
G = அரசின் கொள்முதல் செலவு
(X-M) = நிகர ஏற்றுமதி இறக்குமதி
20.
1. நிகர நாட்டு உற்பத்தி என்பது உற்பத்தியின் அங்காடி மதிப்பு ஆகும்.
2. காரணி செலவில் NNP என்பது உற்பத்தி காரணிகளுக்கு வழங்கப்பட்ட மொத்த வருமான செலுத்துதல் ஆகும்.
3. காரணி செலவில் நிகர நாட்டு வருமானத்தை பெறுவதற்கு, அங்காடி விலையில் NNP யின் பணமதிப்பிலிருந்து மறைமுக வரியைக் கழிக்க வேண்டும். மேலும் மானியங்களைக் கூட்ட வேண்டும்.
4. காரணி செலவில் NNP = சந்தை விலையில் NNP - மறைமுக வரி + மானியம்.
21.
| தனிமனிதர் வருமானம் | செலவிடக்கூடிய வருமானம் |
| 1. தனிமனிதர் வருமானம் என்பது ஒரு ஆண்டில் ஒரு நாட்டில் வாழும் ஒவ்வொரு தனிமனிதருக்கும் பல வழிகளில் இருந்து கிடைக்கப் பெறும் மொத்த வருமானம் ஆகும். | செலவிடக்கூடிய வருமானம் என்பது தனிமனிதர் செலவிடக்கூடிய வருமானத்தைக் குறிக்கிறது. |
| 2. வட்டியாகவோ, வாரமாகவோ, கூலியாகவோ இருக்கலாம். இவை அனைத்தையும் ஒவ்வொரு தனிமனிதருக்கும் கூட்டினால் அது தனிமனிதர் வருமானம் ஆகும். | இந்த வருமானம் தான் தனிமனிதர்கள் நுகர்வுக்காக செலவிடக்கூடிய பண அளவு ஆகும். |
| 3. சூத்திரம்: தனிமனிதர் வருமானம் = நாட்டு வருமானம் - (சமூக பாதுகாப்பு பங்களிப்பு மற்றும் பகிரப்படாத கார்ப்பரேட் இலாபம்) மாற்று செலுத்துதல்கள். |
சூத்திரம் : |
22.

23.
நாட்டு வருமானத்தை மூன்று முறைகளைப் பயன்படுத்தி அளவிடலாம். அவை,
1. உற்பத்தி அல்லது மதிப்புக் கூடுதல் முறை.
2. வருமானம் அல்லது காரணிகளின் ஊதிய முறை மற்றும் செலவு முறை.
உற்பத்தி முறை :
1. உற்பத்தி முறை என்பது ஒரு நாட்டின் உற்பத்தியைக் கணக்கிடுவது ஆகும். இம்முறை சரக்கு முறை என்றும் அழைக்கப்படுகிறது.
2. ஒரு துறையின் வெளியிடு பொருள் மற்றொரு துறையின் உள்ளிடுபொருளாகச் செல்ல வாய்ப்பு இருப்பதால் ஒரே பொருள் இருமுறை அல்லது பல முறை கணக்கில் வர வாய்ப்பு உள்ளது.
3. இதற்கு இருமுறைக் கணக்கிடல் எனப் பெயர். இதனைத் தவிர்க்க வினை முடிந்த பண்டங்களின் மதிப்பையோ அல்லது ஒவ்வொரு துறையிலும் ஏற்பட்ட மதிப்புக் கூட்டலையோ கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
வருமான முறை :
1. வருமான முறை என்பது நாட்டு வருமான கணக்கிடலைப் பகிர்வு பகுதியிலிருந்து அணுகுகிறது.
2. உற்பத்தி நிலைகளில் உற்பத்திக் காரணிகள் பெற்ற அனைத்து வித ஊதியங் களையும் கூட்டி நாட்டு வருமானத்தைக் கணக்கிடலாம்.
3. வருமான முறையானது, காரணிகள் ஈட்டும் வருமான முறை எனவும் அழைக்கப்படுகிறது.
செலவு முறை:
1. இம்முறையில் ஓர் ஆண்டில் சமுதாயத்தில் உள்ளவர்களால் மேற்கொள்ளப்படும் மொத்தச் செலவுகள் அனைத்தையும் கூட்டி நாட்டு வருமானம் கணக்கிடப்படுகிறது.
2. தனிமனிதரின் சொந்த நுகர்வுச் செலவுகள், நிகர உள்நாட்டு முதலீடு, அரசின் கொள்முதல் செலவு, முதலீட்டுப் பொருள் வாங்கும் செலவு, நிகர ஏற்றுமதி முதலான அனைத்துச் செலவுகளையும் கூட்டி செலவு முறையில் நாட்டு வருமானம் கணக்கிடப்படுகிறது.
GNP = C+I+G+(X-M)
24.
நாட்டு வருமானத்தின் முக்கியத்துவம் :
1. நாட்டு வருமானம் கணக்கீட்டின் மூலம், பொருளாதாரத்தில் இருக்கும் பல்வேறு துறைகளின் முக்கியத்துவம் பற்றியும் நாட்டு வருமானத்தில் அத்துறைகளின் பங்களிப்பு பற்றியும் அறிய முடிகின்றது.
2. நாட்டளவிலான பணவியல் கொள்கைகள், பொது நிதிக் கொள்கைகள் ஆகியவற்றை உருவாக்கவும், பொருளாதாரத்தைச் சரியான பாதையில் இட்டுச் செல்லவும் கடைப்பிடிக்க வேண்டிய சரியான வழிமுறைகளைக் கையாளவும் நாட்டு வருமானம் ஆய்வு உதவுகிறது.
3. திட்டமிடுதலுக்கும், திட்டங்களின் விளைவுகளை மதிப்பிடுவதற்கும் நாட்டின் மொத்த வருமானம், உற்பத்தி, சேமிப்பு மற்றும் நுகர்ச்சியின் அளவு ஆகிய புள்ளி விவரங்களை நாட்டு வருமானம் கணக்கீடு அளிக்கின்றது.
4. குறுகிய கால, நீண்ட கால பொருளாதார மாதிரிகளை உருவாக்க நாட்டு வருமானம் கணக்கீடு பயன்படுகிறது.
5. துறைவாரியான பொருளாதார விவரங்களையும், ஒரு நாட்டில் வட்டாரங்களின் வருமானத்தை ஒப்பிடவும், மற்ற நாடுகளின் வருமானத்தோடு ஒப்பிடவும், நாட்டு வருமானம் விவரங்கள் பயன்படுகின்றன.
6. நாட்டு வருமானம் மூலம் தலா வருமானம் கணக்கிடப்படுகிறது.
7. ஒரு நாட்டில் இருக்கும் பல்வேறு உற்பத்தி காரணிகளுக்கான வருமானப் பகிர்வை தெரிந்துகொள்ள நாட்டு வருமானம் பயன்படுகிறது.
8. பேரியல் பொருளாதாரக் காரணிகளான வரி - GDP விகிதம், நடப்புக் கணக்கு பற்றாக்குறை GDP விகிதம், நிதிப்பற்றாக்குறை - GDP விகிதம், கடன் - GDP விகிதம் ஆகியவற்றைக் கண்டறிய உதவுகிறது.
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards