12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th English Poem - 6 - Incident of the French Camp Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Prose - 6 - On the Rule of the Road Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Prose - 5 - The Chair Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Supplementary - 4 - The Midnight Visitor Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Poem - 4 - Ulysses Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Prose - 4 - The Summit Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 31/07/2019
இடைநிலை மற்றும் உள் இடைநிலைத் தனிமங்கள்
12ஆம் வகுப்பு Chemistry / வேதியியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Chemistry / வேதியியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Chemistry Test

1.
பின்வருவனவற்றுள் சரியில்லாதது எது?
La(OH)3 ஆனது Lu(OH)3 ஐக்காட்டிலும் குறைவான காரத்தன்மை உடையது.
லாந்தனாய்டு வரிசையில் Ln3+ அயனிகளின் அயனி ஆர மதிப்பு குறைகிறது.
La ஆனது லாந்தனாய்டு தொடரில் உள்ள தனிமம் என்பதை விட ஒரு இடைநிலை தனிமம் என்பதே சரி
லாந்தனாய்டு குறுக்கத்தின் விளைவாக Zr மற்றும் Hf ஒத்த அணு ஆர மதிப்பினைப் பெற்றுள்ளன.
2.
+7 என்ற அதிகபட்ச ஆக்சிஜனேற்ற நிலையினைப் பெற்பெற்றுள்ள ஆக்டினாய்டு தனிமம் _____________
Np, Pu, Am
U, Fm, Th
U, Th, Md
Es, No, Lr
3.
ஆக்டினைடுகளின் பொதுவான ஆக்சிஜனேற்ற நிலை ___________
+2
+3
+4
+6
4.
கூற்று: Ce4+ ஆனது பருமனறி பகுப்பாய்வில் ஆக்சிஜனேற்றியாக பயன்படுகிறது,
காரணம் : Ce4+ ஆனது +3 ஆக்சிஜனேற்ற நிலையை அடையும் தன்மையினைக் கொண்டுள்ளது
கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, மேலும் காரணமானது கூற்றிற்கு சரியான விளக்கமாகும்
கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, ஆனால் காரணமானது கூற்றிற்கு சரியான விளக்கமல்ல
கூற்று சரி ஆனால் காரணம் தவறு
கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு.
5.
பின்வரும் ஆக்சிஜனேற்ற நிலைகளுள், லாந்தனாய்டுகளின் பொதுவான ஆக்சிஜனேற்ற நிலை யாது?
+4
+2
+5
+3
6.
7.
கார pH மதிப்புடைய கரைசலில் MnO4- ஆனது Br- உடன் வினைபுரிந்து தருவது ____________
BrO3- MnO2
Br2,MnO42-
Br2,MnO2
BrO-MnO42-
8.
பின்வருவனவற்றுள் வெப்பப்படுத்தும் போது ஆக்சிஜனை வெளியிடாத சேர்மம் எது?
K2Cr2O7
(NH4)2Cr2O7
KClO3
Zn(ClO3)2
9.
பின்வருவனவற்றுள் எதனுடைய சேர்மம் நிறமற்றது?
Fe3+
Ti4+
Co2+
Ni2+
10.
Sc(Z = 21) ஒரு இடைநிலைத் தனிமம் ஆனால் Zn(Z = 30) இடைநிலைத் தனிமம் அல்ல ஏனெனில் _________
Sc3+ மற்றும் Zn2+ ஆகிய இரு அயனிகளும் நிறமற்றவை மேலும் வெண்மை நிற சேர்மங்களை உருவாக்குகின்றன
d-ஆர்பிட்டால் ஆனது Sc-ல் பகுதியளவு நிரப்பப்பட்டுள்ளது. ஆனால் Zn-ல் முழுவதும் நிரப்பப்பட்டுள்ளது.
Zn-ல் கடைசி எலக்ட்ரான் 4s ஆர்பிட்டாலில் நிரம்புவதாக கருதப்படுகிறது
Sc மற்றும் Zn ஆகிய இரண்டும் மாறுபடும் ஆக்சிஜனேற்ற நிலைகளைப் பெற்றிருப்பதில்லை.
11.
3d வரிசையில் எத்தனிமம் +1 ஆக்சிஜனேற்ற நிலையைக் கொண்டுள்ளது. ஏன்?
12.
முதல் இடைநிலை வரிசை தனிமங்களின் அயனியாக்கும் ஆற்றல் மதிப்புகளை ஒப்பிடுக.
13.
Fe3+ மற்றும் Fe2+ல் எது அதிக நிலைப்புத் தன்மை உடையது. ஏன்?
14.
ஆக்டினாய்டுகள் என்றால் என்ன? மூன்று உதாரணங்கள் தருக.
15.
லாந்தனாய்டுகள் மற்றும் ஆக்டினாய்டுகள் தனிம வரிசை அட்டவணையில் பெற்றுள்ள இடத்தினை நிறுவுக.
16.
உள்இடைநிலை தனிமங்கள் என்றால் என்ன?
17.
4d வரிசை தனிமங்களின் ஆக்சிஜனேற்ற நிலைகளை விளக்குக.
18.
இடைநிலைத் தனிமங்கள் என்பன எவை? உதாரணம் தருக
19.
தாமிரத்தின் E0M2+/M மதிப்பு நேர்க்குறி மதிப்புடையது. இதற்கான தகுந்த சாத்தியமான காரணத்தை கூறுக.
20.
Cr2+ அல்லது Fe2+ இவற்றுள் எது வலிமையான ஆக்சிஜனொடுக்கி?
21.
Cr2+ ஆனது வலிமையான ஆக்சிஜனொடுக்கி ஆனால் Mn3+ ஆனது வலிமையான ஆக்சிஜனேற்றி விளக்குக.
22.
3d வரிசையில் E0M3+/M2+ மதிப்பில் ஏற்படும் மாற்றங்களை விவரி
23.
லாந்தனாய்டுகளையும், ஆக்டினாய்டுகளையும் ஒப்பிடுக.
1.
(a)
La(OH)3 ஆனது Lu(OH)3 ஐக்காட்டிலும் குறைவான காரத்தன்மை உடையது.
2.
(a)
Np, Pu, Am
3.
(b)
+3
4.
(a)
கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, மேலும் காரணமானது கூற்றிற்கு சரியான விளக்கமாகும்
5.
(d)
+3
6.
(c)
7.
(a)
BrO3- MnO2
8.
(b)
(NH4)2Cr2O7
9.
(b)
Ti4+
10.
(b)
d-ஆர்பிட்டால் ஆனது Sc-ல் பகுதியளவு நிரப்பப்பட்டுள்ளது. ஆனால் Zn-ல் முழுவதும் நிரப்பப்பட்டுள்ளது.
11.
தாமிரம் +1 ஆக்ஸிஜனேற்ற நிலையைக் கொண்டுள்ளது. Cu(29) ன் எலக்ட்ரான் அமைப்பு 3d104s0 தாமிரம் வெளிக்கூட்டிலுள்ள ஒரு எலக்ட்ரானை இழந்து நிலைப்புத்தன்மையைப் பெறுகிறது. இதனால் தாமிரத்தின் ஆக்ஸிஜனேற்ற எண் +1 ஆகும்.
12.
இடைநிலைத்தனிம வரிசையில் இடமிருந்து வலமாகச் செல்லும் போது எதிர்பார்த்தபடியே அயனியாக்கும் ஆற்றல் அதிகரிக்கின்றது. d ஆர்பிட்டாலில் எலக்ட்ரான்கள் நிரப்பப்படும் போது, அணுக்கருவின் மின்சுமையும் அதிகரிக்கிறது. இதன் காரணமாக அயனியாக்கும் ஆற்றலின் மதிப்பும் அதிகரிக்கின்றது. ஒரு குறிப்பிட்ட வரிசையில் அணு எண் அதிகரிக்கும் போது முதல் அயனியாக்கும் ஆற்றலில் ஏற்படும் அதிகரிப்பானது சீராக அமைவதில்லை. d- தொகுதி தனிமங்களில் கூடுதல் எலக்ட்ரான்கள் (n-1)d ஆர்பிட்டாலில் சேர்கின்றன. மேலும் இந்த உட்கூட்டு எலக்ட்ரான்கள் ஒரு திரை போல செயல்பட்டு இணைதிற ns எலக்ட்ரான்களின் மீது அணுக்கரு செலுத்தும் கவர்ச்சி விசையினைக் குறைக்கின்றன. எனவே இதன் விளையாக அயனியாக்கும் ஆற்றலில் மாறுபாடுகள் ஏற்படுகின்றன.
13.
1. Fe3+ ன் எலக்ட்ரான் அமைப்பு - [Ar]3d5
2. சரிபாதி நிரம்பிய எலக்ட்ரான் அமைப்பை பெற்றுள்ளது
3. Fe2+ ன் எலக்ட்ரான் அமைப்பு - [Ar]3d6
4. இவற்றில் ஒரு பகுதியளவு நிரப்பப்பட்ட d- ஆர்பிட்டாலைப் பெற்றுள்ளது.
5. இதனால் Fe3+ ஆனது Fe2+ விட அதிக நிலைப்பு தன்மையை பெற்றுள்ளது.
14.
ஆக்டினியத்தினைத் தொடர்ந்து வரும் 14 தனிமங்கள். அதாவது தோரியம் (Th) முதல் லாரன்சீயம் (GoLr) வரையிலான தனிமங்கள் ஆக்டினாய்டுகள் என அழைக்கப்படுகின்றன.
உதாரணம்: ஆக்டினியம், யூரேனியம், லாரன்சியம்.
15.
1. நவீன தனிம வரிசை அட்டவணையில் தொகுதி 3 வரிசை 6 யில் லாந்தனைடுகள் இடம் பெற்றிருக்க வேண்டும். எனினும் ஆறாவது தொடரில் லாந்தனத்திற்கு பிறகு எலக்ட்ரான்கள் 4f உட்கூட்டில் சேர்கின்றன. மேலும், லாந்தனத்தைத் தொடர்ந்து வரும் 14 தனிமங்களும் ஒத்த வேதிப் பண்புகளைக் கொண்டுள்ளன. எனவே இத்தனிமங்கள் அனைத்தும் ஒருங்கே ஒரே தொகுதியாக தனிம வரிசை அட்டவணையில் கீழ்புறம் தனியே இடம் பெற்றுள்ளன.
2. இதைப் போலவே ஆக்டினியத்தை தொடர்ந்து வரும் 14 தனிமங்களும் அவைகளில் இயற் மற்றும் வேதிப் பண்புகளில் ஒத்துக் காணப்படுகின்றன. இதனால் தனிமவரிசை அட்டவணையில் கீழே தனியிடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
16.
(n-2) f ஆர்பிட்டால்களின் கூடுதல் எலக்ட்ரான்கள் நுழையும் தனிமங்களை f தொகுதி தனிமங்கள் என்கிறோம்.
இவை இடைநிலை தனிமங்களுக்கு உள்ளேயே இடைநிலை வரிசையை உண்டாக்குகின்றன. எனவே இவை உள்இடைநிலை தனிமங்கள் எனவும் அழைக்கப்படுகின்றன.
f தொகுதி தனிமங்கள் அருமண்தனிமங்கள் என்றும் அழைக்கப்படுகிறது.
உள் இடைநிலைத் தனிமங்கள் இரண்டு வரிசைத் தொடர்களைக் கொண்டுள்ளன. அவை
1. லாந்தனாய்டு வரிசை (4f தொகுதி தனிமங்கள்) மற்றும்
2. ஆக்டினைடு வரிசை (5f தொகுதி தனிமங்கள்)
17.
1. 4d உலோகங்களின் ஆக்ஸினேற்ற நிலையானது இட்ரியம் மற்றும் லாந்தனத்தின் +3 முதல் ருத்தினியம் மற்றும் ஆஸ்மியத்தின் +8 வரை மாறுபடுகிறது.
2. 4d மற்றும் 5d தனிமங்கள் O, F மற்றும் CI ஆகிய அதிக எலக்ட்ரான் கவர் தன்மையுடைய தனிமங்களுடன் உருவாக்கும் சோமங்களில் அவைகளின் அதிகபட்ச ஆக்ஜனேற்ற நிலை காணப்படுகிறது. ஒரு வரிசையில் மேலிருந்து கீழாக வரும் போது உயர் ஆக்ஸிஜனேற்ற நிலைகளில் நிலைப்புத் தன்மை பொதுவாக அதிகரிக்கிறது. அதே நேரத்தில் குறைந்த ஆக்ஸிஜனேற்ற நிலைகளின் நிலைப்புத் தன்மை குறைகிறது.
(எ. கா) RuO4, மற்றும் OsO4
ருத்தினியம் மற்றும் ஆஸ்மியத்தின் ஆக்ஸிஜனேற்ற எண் +8.
18.
IUPAC வரையறையின் படி ஒரு தனிமத்தின் அணுவானது முழுவதும் நிரப்படாத d உட்கூட்டினை பெற்றிருந்தாலோ அல்லது அத்தனிமம் உருவாக்கும் நேரயனியானது முழுவதும் நிரப்பப்படாத d உட்கூட்டினை பெற்றிருந்தாலோ அத்தனிமம் ஒரு இடைநிலை உலோகமாகும். இவைகள் தனிம வரிசை அட்டவணையில் மையப் பகுதியில் s மற்றும் p-தொகுதி தனிமங்களுக்கு இடையில் இடம் பெற்றுள்ளன.
எடுத்துக்காட்டு: Fc, Cu, Ag, Au
19.
1. தாமிரம் தனிமமானது Cu2+ விட அதிக நிலைப்புத் தன்மையுடையது. தாமிரத்தின் எலக்ட்ரான் அமைப்பு 3d104s1 முழுவதும் நிரம்பிய 3d ஆர்பிட்டால்களை பெற்று நிலைத்த அமைப்புடன் உள்ளது.
2. ஆனால் Cu2+ எலக்ட்ரானின் அமைப்பில் 3d9 ஆகும். Cu2+ ஆனது \(\mathrm{E}_{\mathrm{M}^{20} / \mathrm{M}}^{\mathrm{o}}\)ன் மதிப்பு நேர்குறியாகும்.
20.
1. Cr2+ ஆனது Fe2+ விட வலிமையான ஆக்ஸிஜனோடுக்கியாகும். Cr2+ திட்ட மின்முனை மின்னழுத்த (E°) மதிப்பானது - 0.91 V ஆகும். ஆனால் Fe2+ ன் மதிப்பு - 0.44 V ஆகும்.
2. ஒரு உலோகத்தின் திட்ட மின்முனை மின்னழுத்த மதிப்பானது அதிக எதிர்க்குறி மதிப்பைப் பெற்றிருப்பின் அந்த உலோகமானது ஒரு வலிமையான ஒடுக்கும் காரணியாகும். ஏனெனில் இவைகள் எளிதில் எலக்ட்ரான்களை இழக்கின்றன. எனவே Cr²+ ஒரு வலிமையான ஆக்ஸிஜனோடுக்கியாகும்.
21.
Mn3+ னின் திட்ட மின்முனை மின்னழுத்த மதிப்பானது(E°) -1.18V அதிக எதிர்குறி மதிப்பை பெற்றுள்ளது. Cr2+ விற்கு -0.91 V மதிப்பை மட்டும் கொண்டுள்ளது. ஒரு உலோகத்தின் திட்ட மின்முனை மின்னழுத்த மதிப்பானது அதிக எதிர்குறி மதிப்பைப் பெற்றிருப்பதால் அந்த உலோகமானது ஒரு வலிமையான ஒடுக்கும் காரணியாகும். ஏனெனில் இவைகள் எலக்ட்ரான்களை எளிதில் இழக்கின்றன. இதனால் Cr2+ ஆனது வலிமையான ஆக்ஸிஜன் ஒடுக்கியாகவும், ஆனால் Mn3+ ஆனது வலிமையான ஆக்ஸிஜனேற்றியாகவும் விளங்குகிறது.
22.
1. 3d வரிசையில் Ti to Zn நோக்கிச் செல்லும் போது, திட்ட ஒடுக்க மின்னழுத்த மதிப்புகள் \(\mathrm{E}^{\circ} \frac{\mathrm{M}^{2+}}{\mathrm{M}^2}\) குறைவான எதிர்குறி மதிப்பினை M நோக்கிச் செல்கின்றன. மேலும், தாமிரமானது நேர்குறி ஒடுக்க மின்னழுத்த மதிப்பை பெற்றுள்ளது. அதாவது Cu2+ அயனியைக் காட்டிலும் தனிமநிலை தாமிரமானது அதிக நிலைப்புத் தன்மையுடையது.
2. 3d வரிசை தனிமங்களின் திட்ட ஒடுக்க மின்னழுத்தத்தின் பொதுவான போக்கில் இருவிலகல்கள் காணப்படுகின்றன. அதாவது Mn மற்றும் Zn ஆகியவற்றின் \(
\mathrm{E}^{\circ} \frac{\mathrm{M}^{2+}}{\mathrm{M}}
\) மதிப்பானது வழக்கமான போக்கிலிருந்து அதிக எதிர்குறி உடையதாக உள்ளது.
3. Mn2+ ன் சரிபாதியளவு நிரப்பப்பட்ட d5 எலக்ட்ரான் அமைப்பும் Zn2+ ன் முழுமையாக நிரப்பப்பட்ட நிலையில் காணப்படும் இடைநிலை உலோகங்கள் ஆக்ஸிஜனேற்றியாக செயல்பட முனைகின்றது.
23.
| வ.எண்: | லாந்தனைடுகள் | ஆக்டினாய்டுகள் |
| 1. | வேறுபடுத்தும் எலக்ட்ரான் 4f ஆர்பிட்டாலில் சேர்க்கிறது | வேறுபடுத்தும் எலக்ட்ரான் 5f ஆர்பிட்டாலில் சேர்க்கிறது. |
| 2. | 4f ஆர்பிட்டாலில் பிணைப்பு ஆற்றல் அதிகம் | 5f ஆர்பிட்டாலில் பிணைப்பு ஆற்றல் குறைவு |
| 3. | இவைகளில் அணைவுச் சேர்மங்களை உருவாக்கும் தன்மை குறைவு. | இவற்றின் அணைவுச் சேர்மங்களை உருவாக்கும் தன்மை அதிகம். |
| 4. | பெரும்பாலான லாந்தனாய்டுகள் நிறமற்றவை | பெரும்பாலான ஆக்டினாய்டுகள் நிறமுடையவை (U3+ சிவப்பு, U4+ பச்சை, UO22+ மஞ்சள்) |
| 5. | இவைகள் ஆக்சோ நேரயனிகளை உருவாக்குவதில்லை. | இவைகளின் ஆக்சோ நேரயனிகளை உருவாக்குகின்றன. UO22+, NpO22+ |
| 6. | லாந்தனாய்டுகள் சில நேர்வுகளில் +3 ஆக்சிஜனேற்ற நிலையுடன், +2 ஆக்சிஜனேற்ற நிலைகளையும் பெற்றுள்ளன. | ஆக்டினாய்டுகள் +3 ஆக்சிஜனேற்ற நிலையுடன் +4, +5, +6 மற்றும் +7 போன்ற உயர் ஆக்சிஜனேற்ற நிலைகளை பெற்றுள்ளன. |
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th English Supplementary - 3 - The Hour of Truth (Play) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Poem - 3 - All the World’s a Stage Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Prose - 3 - In Celebration of Being Alive Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Supplementary - 2 - Life of Pi Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards