12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 05/08/2019
வேதிவினை வேகவியல்
12ஆம் வகுப்பு Chemistry / வேதியியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Chemistry / வேதியியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Chemistry Test

1.
மூலக்கூறு எண் - வரையறு.
2.
வினை வகை -வரையறு.
3.
வினை வேகம் -வரையறு.
4.
ஆர்ஹீனியஸ் சமன்பாட்டினை எழுதி அதில் இடம் பெற்றுள்ளவற்றை விளக்குக.
5.
x+2y\(\rightarrow \) விளைபொருள் [x] = [y] = 0.2M என்ற வினையின் வினைவேகமானது 4 \(\times\) 10-3mol L-1s-1 எனும் போது, 400 Kல் வினைவேகம் மாறிலி 2x10-2S-1, இவ்வினையின் ஒட்டுமொத்த வினைவகையைக் கண்டறிக.
6.
ஒரு அடிப்படை வினையானது அதன் ________ அடிப்படையில் அறியப்படுகிறது.
வினை வகை
மூலக்கூறு எண்
வினை வேகம்
வினை வேக மாறிலி
7.
ஒரு வினையின் மூலக்கூறு எண் மதிப்பானது __________ ஆக இருக்கலாம்.
பூஜ்யம்
பின்னம்
முழு எண்
மேற்கண்ட அனைத்தும்
8.
ஒரு வினையின் வினை வகை மதிப்பானது ________ ஆக இருக்கலாம்.
பூஜ்யம்
பின்னம்
முழு எண்
மேற்கண்ட அனைத்தும்
9.
வேக விதியில் காணப்படும் செறிவு உறுப்புகளின் அடுக்குகளின் கூட்டுத்தொகை _________ எனப்படும்.
மூலக்கூறு எண்
வினைவேக மாறிலி
வினை வகை
வினை வேகம்
10.
நேரம் செல்லச் செல்ல ஒரு வேதி வினையின் வினைவேகம் ____________
அதிகரிக்கும்
குறையும்
மாறாது
அதிகபட்சம் உயரும்
11.
A \(\rightarrow \)B+C+D என்ற ஒரு படுத்தான வினையில், துவக்க அழுத்தம் P0. 't' நேரத்திற்குப் பின் 'P'. P0, P மற்றும் t ஆகியவற்றைப் பொருத்து வினைவேக மாறிலி _____________
\(K=\left( \frac { 2.303 }{ t } \right) log\left( \frac { 2{ P }_{ 0 } }{ 3{ P }_{ 0 }-P } \right) \)
\(K=\left( \frac { 2.303 }{ t } \right) log\left( \frac { 2{ P }_{ 0 } }{{ P }_{ 0 }-P } \right) \)
\(K=\left( \frac { 2.303 }{ t } \right) log\left( \frac {3{ P }_{ 0 }-P }{2{ P }_{ 0 } } \right) \)
\(K=\left( \frac { 2.303 }{ t } \right) log\left( \frac { 2{ P }_{ 0 } }{3{ P }_{ 0 }-P } \right) \)
12.
x\(\rightarrow\)y என்ற முதல் வகை வினையில் K என்பது வினைவேக மாறிலி மேலும் x ன் துவக்கச் செறிவு 0.1M எனில், அரை வாழ் காலம்.
\(\left( \frac { log2 }{ K } \right) \)
\(\left( \frac { 0.693 }{ (0.1)k } \right) \)
\(\left( \frac { In2 }{ K } \right) \)
இவை எதுவுமல்ல
13.
ஒரு மீள் வினையில், முன்னோக்கிய வினையின் என்தால்பி மாற்றம் மற்றும் கிளர்வு ஆற்றல்கள் முறையே -x KJ mol-1 மற்றும் y KJ mol-1 ஆகும். எனவே, பின்னோக்கிய வினையின் கிளர்வு ஆற்றல் ______________
(y-x) KJ mol-1
(x+y) J mol-1
(x-y) KJ mol-1
(x+y)x103 J mol-1
14.
குறைந்த அழுத்தத்தில் டங்ஸ்டன் புறப்பரப்பில் பாஸ்பைனின் (PH3) சிதைவு வினை ஒரு முதல் வகை வினையாகும் ஏனெனில் _____________
வினைவேகமானது கவரப்பட்ட புறப்பரப்பிற்கு நேர் விகிதத்தில் உள்ளது.
வினைவேகமானது கவரப்பட்ட புறப்பரப்பிற்கு எதிர் விகிதத்தில் உள்ளது.
வினைவேகமானது, கவரப்பட்ட புறப்பரப்பினைச் சார்ந்து அமைவதில்லை.
சிதைவடைதல் வேகம் பொதுவானதாகும்.
15.
A\(\rightarrow \)B என்ற முதல் வகை வினையின் வினை வேக மாறிலி x min−1. A ன் துவக்கச் செறிவு 0.01M எனில் ஒரு மணி நேரத்திற்குப் பிறகு A ன் செறிவு ____________
0.01 e−x
1x 10-2(1-e-60x)
(1x10-2)e-60x
இவை எதுவுமல்ல
16.
ஒரு முதல் வகை வினை 100 நிமிடங்களில் 25% நிறைவடைந்தால் அதன் வினைவேக மாறிலி மற்றும் அரை வாழ் கால மதிப்புகளைக் கண்டறிக.
17.
A ⟶ வினைபொருள் என்ற முதல் வகை வினையில் A ஆனது 60% சிதைவடைய 40 நிமிடங்கள் தேவைப்படுகிறது. இவ்வினையின் அரைவாழ் காலம் என்ன?
18.
பூஜ்ய வகை வினைக்கு மூன்று எடுத்துக்காட்டுகள் தருக.
19.
ஒரு வேதிவினையின் வேகத்தினை, வினைபடு பொருட்களின் செறிவு எவ்வாறு பாதிக்கின்றது என்பதை விளக்குக.
20.
21.
முதல் வகை வினையின் வரைபட விளக்கத்தினைத் தருக.
22.
298 K ல் ஒரு முதல் வகை வினையின் ஆரம்ப வினை வேகம் 5.2x10-6 mol L-1 s-1 மற்றும் வினைபடு பொருளின் ஆரம்பச் செறிவு 2.6x10-3 mol L-1 எனில் அதே வெப்பநிலையில் அவ்வினையின் வினைவேக மாறிலி மதிப்பு யாது?
23.
ஒரு முதல் வகை வினைக்கான வினைவேக மாறிலியின் தொகைப்படுத்தப்பட்ட சமன்பாட்டினை வருவி.
1.
ஒரு அடிப்படை வினையில், இடம்பெறும் வினைபடு மூலக்கூறுகளின் மொத்த எண்ணிக்கை மூலக்கூறு எண் எனப்படும்.
2.
சோதனை மூலம் கண்டறியப்பட்ட வேக விதியில் இடம் பெற்றுள்ள செறிவு உறுப்புகளின் அடுக்குகளின் கூடுதல் வினை வகை எனப்படும்.
3.
ஓரலகு காலத்தில் ஒரு வேதி வினையில் இடம்பெற்றுள்ள பொருட்களின் செறிவில் ஏற்படும் மாற்றம் அவ்வினையின் வினை வேகம் எனப்படுகிறது.
4.
K = \(A{ e }^{ \frac { -Ea }{ RT } }\)
K = வினைவேக மாறிலி
A = அதிர்வெண் காரணி
Ea = கிளர்வு ஆற்றல்
R = வாயு மாறிலி
T = தனி வெப்பநிலை Kல்
5.
வினைவேகம் = K[x]n[y]m
4 x 10-3 mol L-1s-1 = 2 x 10-2 s-1(0.2mol L-1)n(0.2mol L-1)m
\(\frac { 4\times { 10 }^{ -3 }mol\quad { L }^{ -1 }{ s }^{ -1 } }{ 2\times { 10 }^{ -2 }{ s }^{ -1 } } ={ (0.2) }^{ n+m }({ mol\quad L }^{ -1 })^{ n+m\quad }\)
\(\quad 0.2(mol\quad { L }^{ -1 })={ (0.2) }^{ n+m }{ (mol\quad { L }^{ -1 }) }^{ n+m }\)
இருபுறமும் அடுக்குகளை ஒப்பிடுக, வினையின் ஒட்டுமொத்த வினைவகை n + m = 1
6.
(b)
மூலக்கூறு எண்
7.
(c)
முழு எண்
8.
(d)
மேற்கண்ட அனைத்தும்
9.
(c)
வினை வகை
10.
(b)
குறையும்
11.
\( \mathrm{a} \alpha \mathrm{P}_0 \\ (a+2 x) \alpha \mathrm{P} \\ \frac{\mathrm{a}}{(a+2 x)}=\frac{\mathrm{P}_0}{\mathrm{P}} \\ x=\frac{\left(\mathrm{P}-\mathrm{P}_0\right) \mathrm{a}}{2 \mathrm{P}_0} \\ (a-x)=a-\left(\frac{\left(\mathrm{P}-\mathrm{P}_0\right) \mathrm{a}}{2 \mathrm{P}_0}\right) \\ (a-x)=a\left\{\frac{3 \mathrm{P}_0-\mathrm{P}}{2 \mathrm{P}_0}\right\} \\ \mathrm{k}=\left(\frac{2.303}{\mathrm{t}}\right) \log \frac{\left[\mathrm{A}_0\right]}{[\mathrm{A}]} \\ \mathrm{k}=\left(\frac{2.303}{\mathrm{t}}\right) \log \left(\frac{\mathrm{a}}{\mathrm{a}-x}\right) \)
12.
\( \left(\frac{\ln 2}{k}\right) \\ k=\left(\frac{1}{t}\right) \ln \left(\frac{\left[A_0\right]}{[A]}\right) \\ {\left[A_0\right]=0.1 ;[A]=0.05} \\ k=\left(\frac{1}{t_{1 / 2}}\right) \ln \left(\frac{0.1}{0.05}\right) \\ k=\left(\frac{1}{t_{1 / 2}}\right) \ln (2) \\ t_{1 / 2}=\frac{\ln (2)}{k} \)
13.
\( (x+y) \mathrm{kJmol}^{-1} \\ (x \neq y) \times 10^3 \mathrm{Jmol}^{-1} \)
14.
வினைவேகமானது. கவரப்பட்ட புறப்பரப்பினைச் சார்ந்து அமைவதில்லை. கொடுக்கப்பட்டவை :
குறைவான அழுத்த மதிப்பில் வினைவேகம் \(\alpha\) [வினைபடுபொருள்]1 முதல்வகை வினை. எனவே, வினைவேகம் \(\alpha\) (புறப்பரப்பு) வினைவேகம் அதிக அழுத்தத்தில் புறப்பரப்பு முழுவதும் கவரப்படுவதால் வினை பூஜ்ய வரை வினையாகும். வினைவேக \(\alpha\) [வினைபடுபொருள்] எனவே, வினைவேகம் புறப்பரப்பைப் பொருத்து அமைவதில்லை.
15.
\( k=\left(\frac{2.303}{t}\right) \log \left(\frac{\left[A_0\right]}{[A]}\right) \\ k=\left(\frac{1}{t}\right) \ln \left(\frac{\left[A_0\right]}{[A]}\right) \\ e^{\mathrm{ta}}=\left(\frac{\left[A_0\right]}{[\mathrm{A}]}\right) \\ {[\mathrm{A}]=[\mathrm{A}] \mathrm{e}^{-\mathrm{ta}}} k=x \min ^{-1} \text { and }\left[\mathrm{A}_0\right]=0.01 \mathrm{M}=1 \times 10^{-4} \mathrm{M} \\ \mathrm{t}=1 \text { hour }=60 \mathrm{~min} \\ {[\mathrm{~A}]=1 \times 10^{-2}\left(\mathrm{e}^{-00 .}\right)} \)
16.
t = 100 நிமிடங்கள்; [Ao] = 100%; [A] = 100-25 = 75%
k = ?; t1/2 = ?
K=\(\frac { 2.303 }{ t } log\frac { [{ A }_{ o }] }{ [A] } \)
\(=\frac { 2.303 }{ 100 } log\frac { 100 }{ 75 } \)
\(=\frac { 2.303 }{ 100 } \times 0.1249\)
\(k=2.8773\times { 10 }^{ -3 }\)நிமி-1
\({ t }_{ 1/2 }=\frac { 06932 }{ K } \)
\(=\frac { 0.6932 }{ 2.8773{ \times 10 }^{ -3 } } \)
t1/2 = 240.92 நிமிடங்கள்
17.
A ⟶ வினைபொருள் என்பது ஒரு முதல் வகை வினை ஆகும்.
t = 40 நிமிடங்கள்; [Ao] = 100%;
[A] = 100 - 60 = 40%
t1/2 = ?
\(K=\frac { 2.303 }{ t } log\frac { [{ A }_{ o }] }{ [A] } \)
\(K=\frac { 2.303 }{ 40 } log\frac { 100 }{ 40 } \)
\(K=\frac { 2.303 }{ 40 } log2.5\)
\(K=\frac { 2.303 }{ 40 } \times 0.3970\)
K = 0.0229 நிமி-1
\({ t }_{ 1/2 }=K=\frac { 0.6932 }{ K } =\frac { 0.6932 }{ 0.0229 } =30.27\) நிமிடங்கள்
18.
i) H2 மற்றும் Cl2 ஆகியவற்றிற்கு இடையேயான ஒளி வேதி வினை
H2(g)+Cl(g) ⟶ HCl(g)
ii) சூடான பிளாட்டினம் புறப்பரப்பில் N2O சிதைவடைதல்
N2O(g) ⇌ N2(g) +\(\frac{1}{2}\)O2(g)
iii) அசிட்டோன் அயோடினேற்றமடையும் வினை. அயோடினைப் பொறுத்து பூஜ்ய வகை வினை
CH2COCH3+I2 \(\overset { { H }^{ + } }{ \longrightarrow } \) I CH2COCH3+HI
19.
வினைபடு பொருட்களின் செறிவு அதிகரிக்கும் போது வினையின் வேகமும் அதிகரிக்கின்றது. வினை வேகத்தின் மீதான வினைபடு பொருட்களினுடைய செறிவின் விளைவினை, மோதல் கொள்கையைப் பயன்படுத்தி நாம் விளக்க இயலும். மோதல் கொள்கையின் படி, வினைவேகமானது, வினைபடும் மூலக்கூறுகளுக்கிடையேயான மோதல்களின் எண்ணிக்கையினைப் பொருத்து அமைகிறது. செறிவு அதிகரிக்கும் போது, மோதல் நிகழ அதிக வாய்ப்பு ஏற்படுகிறது. எனவே வினைவேகமும் அதிகரிக்கின்றது.
20.
21.

1. ஒரு முதல் வகை வினை A ⟶ விளைபொருள்
\(K=\frac { 2.303 }{ t } log\frac { \left[ { A }_{ o } \right] }{ [A] } \)
2. மேற்கண்ட சமன்பாட்டினை நேர்கோடு சமன்பாடு y = mx +c என்ற வடிவில் பின்வருமாறு எழுதலாம்.
\(K=\frac { 1 }{ t } In\frac { [{ A }_{ o }] }{ [A] } \)
\(kt=In[{ A }_{ o }]-In[A]\)
\(\therefore In[{ A }_{ o }]-kt\)
\(In[A]=-kt+In\left[ { A }_{ o } \right] \)
y = mx +c
3. y அச்சில் y = In [A ]
x அச்சில் x = t
அச்சு m = -k
y அச்சு வெட்டுத்துண்டு c = In [Ao]
துவக்கச் செறிவு [Ao] =1.00 m மற்றும் k = 2.5 x 10-2 min-1 ஆக உள்ள
A ⟶ product என்ற வினைக்கு In[A] Vs t வரைபடம்
4. சீரான நேர இடைவெளிகளில், வினைபடு பொருட்களின் செறிவினைக் கண்டறிவதன் மூலம் வினை நிகழ்வதைக் கண்காணித்தால் அம்முடிவுகளின் அடிப்படையில் வரையப்படும்,
In[A] Vs t வரைபடமானது எதிர்க்குறி சாய்வுடன் கூடிய நேர்கோட்டினைத் தரும்.
22.
வினைவேகம் = 5.2x10-6 mol L-1 s-1; T = 298K
[A] = 2.6x10-3mol L-1; n-1; K = ?
A ⟶ விளைபொருள்
முதல் வகை வினைக்கு n = 1
வினைவேகம் = k[A]n (n = வினை வகை)
\(=\frac { 5.2\times { 10 }^{ -6 } }{ { ({ 2.6\times 10 }^{ -3 }) }^{ 1 } } \)
\(={ 2.0\times 10 }^{ -3 }{ s }^{ -1 }\)
23.
1. ஒரு வினையின் வினைவேகம், அவ்வினையில் ஈடுபடும் வினைபடு பொருட்களின் செறிவுகளின் முதல் படியினைப் பொறுத்து அமையுமானால், அவ்வினைகள் முதல் வகை வினைகள் எனப்படும்.
2. பின்வரும் முதல் வகை வினையைக் கருதுக.
A ⟶ விளை பொருள்
வினைவேகம் = K[A]1
K = முதல் வகை வினைவேக மாறிலி
\(-\frac { d[A] }{ dt } =K{ \left[ A \right] }^{ 1 }\)
\(-\frac { d[A] }{ dt } =k\quad dt\)
t = 0 முதல் t = t மற்றும் செறிவு எல்லை [Ao] முதல் [A] வரை மேற்கண்ட சமன்பாட்டினை தொகைப்படுத்த
\(\int _{ { A }_{ o } }^{ [A] }{ \frac { -d[A] }{ [A] } } =\int _{ o }^{ t }{ kdt } \)
\({ (-ln[A]) }_{ [{ A }_{ o }] }^{ [A] }={ K(t) }_{ o }^{ t }\)
\(-ln[A]-(-ln[{ A }_{ o }])=K(t-0)\)
\(-ln[A]+ln[{ A }_{ o }]=kt\)
\(ln[{ A }_{ o }]-ln[A]=kt\)
\(ln\frac { [{ A }_{ o }] }{ [A] } =kt\)
\(\therefore K=\frac { 1 }{ t } ln\frac { [{ A }_{ o }] }{ [A] } \)
இயற்கை மடக்கையில் உள்ள இச்சமன்பாட்டினை வழக்கமான 10 ஐ அடிமனமாகக் கொண்ட மடக்கைக்கு மாற்ற சமன்பாட்டினை 2.303 ஆல் பெருக்க வேண்டும்.
\(\therefore K=\frac { 2.303 }{ t } log\frac { [{ A }_{ o }] }{ [A] } \)
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards