12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 01/08/2019
வேதியியல் முதல் இடைத்தேர்வு மாதிரி வினாத்தாள்
12ஆம் வகுப்பு Chemistry / வேதியியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Chemistry / வேதியியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Chemistry Test

1.
பின்வருவனவற்றுள் எது சல்பேட் வகை தாது ஆகும்?
கலீனா
ஜிங்க் பிளன்ட்
செருசைட்
ஆங்லசைட்
2.
பின்வருவனவற்றுள் பாராகாந்தத்தன்மை உடையது எது?
[Zn(NH3)4]2+
[Co(NH3)6]3+
[Ni(H2O)6]2+
[Ni(CN)4]2-
3.
[M(en)2(Ox)]Cl என்ற அணைவுச் சேர்மத்தில் உள்ள உலோக அணு / அயனி M ன் முதன்மை மற்றும் இரண்டாம் நிலை இணைதிற மதிப்புகளின் கூடுதல் _______
3
6
-3
9
4.
பின்வருவனவற்றுள் எத்தாதுவினை அடர்ப்பிக்க நுரைமிதப்பு முறை ஒரு சிறந்த முறையாகும்?
மேக்னடைட்
ஹேமடைட்
கலீனா
கேசிட்டரைட்
5.
பாக்ஸைட்டின் இயைபு ________.
Al2O3
Al2O3.nH2O
Fe2O3.2H2O
இவை எதுவுமல்ல
6.
தாமிரத்தின் பயன்களை எழுது.
7.
அமில வேதிக் கழுவுதல் என்றால் என்ன?
8.
\([Ag(NH_{ 3 })_{ 2 }]^{ + }\)என்ற அணைவுச் சேர்மத்தின் நிலைப்பு மாறிலி 1.7x 107 எனில் 0.2M NH3 கரைசலில் \(\cfrac { \left[ { Ag }^{ + } \right] }{ \left[ Ag\left( NH_{ 3 } \right) _{ 2 } \right] ^{ + } } \) விகிதத்தினைக் கண்டறிக.
9.
CO ஒரு ஒடுக்கும் காரணி. ஒரு எடுத்துக்காட்டுடன் இக்கூற்றை நிறுவுக.
10.
போராக்ஸின் பயன்களைத் தருக.
11.
பின்வருவனவற்றை தகுந்த உதாரணங்களுடன் விளக்குக.
(அ) மாசு
(ஆ) கசடு
12.
13.
எலிங்கம் வரைபடத்தின் பயன்பாட்டினை விளக்கு.
14.
ஷாட்கி குறைபாட்டினை விளக்குக.
15.
ஏழு வகையான அலகு கூடுகளை சுருக்கமாக விளக்குக.
16.
புலத்தூய்மையாக்கல் முறையினை ஒரு எடுத்துக்காட்டுடன் விவரி.
17.
உருக்குதல் பற்றி விவரி.
18.
புவி ஈர்ப்பு முறை அல்லது ஓடும் நீரில் கழுவுதல் பற்றி எழுது.
19.
ஒரு அணு fcc அமைப்பில் படிகமாகிறது. மேலும் அதன் அடர்த்தி 10 gcm-3 மற்றும் அதன் அலகுக்கூட்டின் விளிம்பு நீளம் 100pm. 1g படிகத்தில் உள்ள அணுக்களின் எண்ணிக்கையினைக் கண்டறிக.
20.
பருமனறி பகுப்பாய்வில் அணைவுச் சேர்மங்களின் பயன்களை சுருக்கமாக விளக்குக.
1.
(d)
ஆங்லசைட்
2.

3.
Men Ox Cl 2 () ()
என்ற அணைவில் மைய உலோக அயனி M³+
முதன்மை இணைதிறன் is = +3
இரண்டாம் நிலை இணைதிறன் = 6
முதன்மை மற்றும் இரண்டாம் நிலை இணை திறனின் கூடுதல் = 3 + 6 = 9
4.
(c)
கலீனா
5.
(b)
Al2O3.nH2O
6.
1. மனிதர்களால் முதன் முதலில் பயன்படுத்தப்பட்ட உலோகம் தாமிரம் ஆகும்.
2. இதன் உலோகக் கலவையான வெண்கலத்தின் பயன்பாட்டினால் வெண்கலக் காலம் என்ற சகாப்தம் உருவானது.
3. தங்கம் மற்றும் பிற உலோகங்களோடு இணைந்து நாணயங்கள், நகை பொருட்கள் தயாரிக்க தாமிரம் பயன்படுகிறது.
4. தாமிரம் மற்றும் அதன் உலோக கலவைகள் ஆகியன மின்கம்பிகள், நீர் செல்லும் குழாய்கள் மற்றும் பல மின் பொருளின் பாகங்கள் தயாரிக்க பயன்படுகிறது.
7.
1. ZnS, PbS போன்ற சல்பைடு தாதுக்கள் சூடான நீர்ம கந்தக அமிலத்துடன் வினைப்படுத்தப்படுகிறது.
2. இச்செயல்முறையில் கரையாத சல்பைடு தாதுவானது கரையும் சல்பேட்டாகவும், உலோக சல்பராகவும் மாற்றமடைகிறது.
2ZnS(s) + 2H2SO4(aq) + O2(g) ➝ 2ZnSO4(aq) + 2S(s) + 2H2O
8.
Ag++ 2NH3 ⇌ [Ag(NH3)2]+
நிலைப்புத் தன்மை மாறிலி β = \(\frac { { \left[ Ag{ \left( { NH }_{ 3 } \right) }_{ 2 } \right] }^{ + } }{ { \left[ { Ag }^{ + } \right] \left[ { NH }_{ 3 } \right] }^{ 2 } } \)
[Ag (NH3)2]+ ⇌ Ag+ + 2NH3
நிலைப்புத் தன்மை மாறிலி \(\alpha =\frac { { \left[ { Ag }^{ + } \right] \left[ { NH }_{ 3 } \right] }^{ 2 } }{ { \left[ Ag{ \left( { NH }_{ 3 } \right) }_{ 2 } \right] }^{ + } } \)
∴ \(\beta =\frac { 1 }{ \alpha } \)
β = 1.7 x 107 α = ?
∴ \(\alpha =\frac { 1 }{ \beta } \)
\(=\frac { 1 }{ 1.7\times { 10 }^{ 7 } } \)
\(\alpha =\frac { 1 }{ 1.7\times { 10 }^{ 7 } } =5.88\times { 10 }^{ -8 }\)
9.
i) CO ஒரு வலிமை மிகு ஒடுக்கும் காரணியாகும்.
ii) உலோக ஆக்ஸைடை உலோகமாக ஒடுக்குகிறது
CO + Fe2O3 ⟶ 2Fe + 3CO2
10.
1. நிறமுள்ள உலோக அயனிகளைக் கண்டறிவதில் போராக்ஸ் பயன்படுகிறது. (போராக்ஸ் மணி சோதனை)
2. இது கண் கண்ணாடி, போரோசிலிகேட் கண்ணாடி, எனாமல் மற்றும் பளபளப்பான மண் பாண்டங்கள் தயாரிக்க பயன்படுகிறது.
3. இது உலோகவியலில் இலக்கியாக பயன்படுகிறது.
4. உணவு பதப்படுத்தியாக செயலாற்றும் தன்மையுடையது.
11.
(அ) மாசு அல்லது கனிமக் கழிவு:
பொதுவாக, தாதுக்களுடன் உலோகத் தன்மையற்ற மாசுகள் பாறைப் பொருட்கள் மற்றும் மண் மாசுகள் போன்றவை இரண்டறக் கலந்துக் காணப்படும். இத்தகைய மாசுகள் அனைத்தும் சேர்த்துக் கனிமக் கழிவு (gangue) என அழைக்கப்படுகிறது.
(ஆ) கசடு:
உருக்கி பிரித்தலில், சிலிக்காவுடன் இளக்கி சேர்த்து கனிமக்கசடை தருகிறது.
CaO(S) + SiO2(S) ⟶ CaSiO3(S)
இளக்கி + கனிமக்கழிவு ⟶ கசடு
கனிமக்கசடு எளிதில் உருகக் கூடியதாகும்.
12.
13.
1. எலிங்கம் வரைபடம் ஒடுக்க வினைகள் நிகழும் வெப்பநிலை எல்லைகளை தீர்மானிப்பதற்கும், தகுந்த ஒடுக்கும் காரணிகளைத் தெரிவு செய்யவும் பயன்படுகிறது.
2. உலோக ஆக்சைடு, உலோகமாக ஒடுக்கப்படும் வினையை ஒடுக்கத்திற்கு பயன்படும் தனிமம் மற்றும் பிரிக்கப்படவேண்டிய உலோகம் இரண்டிற்கும் இடையே ஆக்சிஜனுடன் இணைந்து ஆக்சைடை உருவாக்குவதற்கான போட்டி வினையாக கருதலாம்.
3. உலோக ஆக்சைடு அதிக நிலைப்புத்தன்மையுடையது எனில் ஆக்சிஜன் உலோகத்தோடு இணைந்தே இருக்கும்.
4. ஒடுக்கத்திற்கு பயன்படும் தனிமத்தின் ஆக்சைடு அதிக நிலைப்புத் தன்மையுடையது எனில் உலோக ஆக்சைடில் உள்ள ஆக்சிஜன் ஒடுக்கத்திற்கு பயன்படும் தனிமத்துடன் இணைகிறது.
5. எலிங்கம் வரைபடத்திலிருந்து, கொடுக்கப்பட்ட வெப்பநிலையில் வெவ்வேறு உலோக ஆக்சைடுகளின் ஒப்பீட்டு நிலைப்புத் தன்மையினை அறிந்து கொள்ளலாம்.
6. Ag2O மற்றும் HgO ஆகியவை உருவாதலுக்கான வரைகோடுகள் எலிங்கம் வரைபடத்தின் மேற்பகுதியில் அமைந்துள்ளது. அவைகளின் சிதைவுறு வெப்பநிலைகள் முறையே 600 மற்றும் 700K ஆகும். எனவே இவை மிதமான வெப்பநிலைகளில் நிலைப்புத் தன்மையற்றவை. மேலும் எவ்வித ஒடுக்க காரணிகளையும் பயன்படுத்தாமல் வெப்பத்தின் மூலம் இவைகளைச் சிதைவடையச் செய்ய இயலும்.
7. எலிங்கம் வரைபடத்தை பயன்படுத்தி ஒரு உலோகத்தின் ஆக்சைடை மற்றொரு உலோகத்தால் ஒடுக்கம் செய்வதற்கான வெப்ப இயக்கவியல் சாத்தியத் தன்மையினை தீர்மானிக்க இயலும்.
8. எந்த ஒரு உலோகமும், எலிங்கம் வரைபடத்தில் அதற்கு மேற்புறம் வரைகோடுகளைப் பெற்றுள்ள உலோக ஆக்சைடுகளை ஒடுக்க இயலும்.
9. எடுத்துக்காட்டாக, எலிங்கம் வரைபடத்தில் குரோமியம் ஆக்சைடு உருவாதலுக்கான வரைகோடு அலுமினியத்திற்கு மேல் இடம் பெற்றுள்ளது. Al2O3 ஆனது Cr2O3 ஐ விட அதிக நிலைப்புத் தன்மையுடையது. எனவே குரோமிக் ஆக்சைடை ஒடுக்குவதற்கு அலுமினியத்தை பயன்படுத்த இயலும்.
10. எனினும் அலுமினியம் ஆக்சைடிற்கு கீழ்ப்புறத்தில் வரைக்கோட்டினை பெற்றுள்ள மெக்னீசியம் மற்றும் கால்சியம் போன்றவற்றின் ஆக்சைடுகளை ஒடுக்க அலுமினியத்தை பயன்படுத்த இயலாது.
11. கார்பனின் நேர்கோடானது பெரும்பாலான உலோக ஆக்சைடுகளின் நேர்கோடுகளை வெட்டுகிறது. எனவே அத்தகைய அனைத்து ஆக்சைடுகளையும் போதுமான அதிக வெப்பநிலையில் கார்பனால் ஒடுக்க இயலும்.
14.
அயனிப் படிகங்களின் அணிக்கோவை புள்ளிகளில் சம எண்ணிக்கையில் நேர் மற்றும் எதிர் அயனிகள் இல்லாமல் வெற்றிடம் காணப்படுவதால் ஏற்படும் படிகக் குறைபாடு ஷாட்கி குறைபாடு எனப்படும்.
(i) இக்குறைபாடு படிகத்தின் வேதிவினைக்கூறு விகிதத்தினை மாற்றியமைப்பதில்லை,
(ii) நேரயனியின் உருவளவு, எதிரயனியின் உருவளவுடன் ஏறத்தாழ ஒத்திருக்கும் அயனிகளைக் கொண்ட படிகங்களில் இக்குறைபாடு காணப்படுகிறது.
(iii) படிகங்களில் அதிக அளவு ஷாட்கி குறைபாடு காணப்பட்டால் அவைகளின் அடர்த்தி குறையும்.
(iv) ஷாட்கி குறைபாடானது, படிகங்களில் அணுக்கள் அல்லது அயனிகள் படிக அணிக்கோவைத் தளம் முழுமைக்கும் நகர்வதற்கு ஒரு எளிய வழியினை ஏற்படுத்துகிறது.
(v) எ.கா. சோடியம் குளோரைடு
15.
முதல்நிலை எளிய அலகுக் கூட்டில் ஏழு படிக அமைப்புகள் காணப்படுகின்றன.
அவையாவன, கனசதுரம், சாய்சதுரம், அறுமுக வடிவம், நான்முக வடிவம், ஆர்த்தோ சாய்சதுரம், ஒற்றைச் சரிவு வடிவம், முச்சரிவு வடிவம், இவ்வமைப்புகள் அவைகளின் படிக அச்சுகள் மற்றும் கோணங்களில் வேறுபடுகின்றன.
16.
1. புலத்தூய்மையாக்கல் முறையானது பின் படிகமாக்கல் தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டது.
2. தூய்மையற்ற நிலையில் உள்ள உலோகத்தை உருக்கி பின் திண்மமாக்கும் போது, மாசுக்கள் உருகுநிலையில் உள்ள பகுதியில் தங்குகின்றன. அதாவது மாசுக்கள் திண்ம நிலை உலோகத்தில் கரைவதைக் காட்டிலும் உருகிய நிலையில் உள்ள உலோகத்தில் அதிக அளவில் கரைகின்றன.
3. இம்முறையில் தூய்மையற்ற உலோகம் ஒரு தண்டு வடிவில் எடுத்துக்கொள்ளப்படுகிறது.
4. தண்டின் ஒரு முனையானது நகர்ந்து செல்லும் தூண்டு வெப்பப்படுத்தியைப் பயன்படுத்தி வெப்பப்படுத்தப்படுகிறது. இதன் விளைவாக தண்டின் அப்பகுதியில் உள்ள உலோகம் உருகுகிறது.
5. வெப்பப்படுத்தியினை மெதுவாக மறுமுனையினை நோக்கி நகர்த்திச் செல்லும் போது தூய உலோகம் படிகமாகிறது அதே நேரத்தில் வெப்பப்படுத்தி நகர்த்தப்பட்டதால் புதிதாக உருவான உருகிய நிலை புலத்திற்கு (பகுதிக்கு) மாசுக்கள் இடம்பெயர்கின்றன.
6. வெப்பப்படுத்தியை மேலும் நகர்த்தும் போது, மாசுக்களைக் கொண்டுள்ள உருகிய நிலைப்பகுதியானது அதனுடன் சேர்ந்து நகர்கிறது.
7. இச்செயல்முறையானது பலமுறை மீண்டும் ஒரே திசையில் நிகழ்த்தப்பட்டு, தேவையான தூய்மைத் தன்மையுடைய உலோகம் பெறப்படுகிறது. உலோகம் ஆக்சிஜனேற்றம் அடைவதை தடுக்க இச்செயல்முறையானது, மந்த வாயு சூழலில் நிகழ்த்தப்படுகிறது.
8. ஜெர்மானியம் (Ge), சிலிக்கான் (Si), மற்றும் காலியம் (Ga) போன்ற குறைகடத்திகளாகப் பயன்படும் தனிமங்கள் இம்முறையில் தூய்மைப்படுத்தப்படுகின்றன.
17.
1. ஒரு உருக்கு உலையில் அடர்ப்பிக்கப்பட்ட தாது ஒரு இளக்கி மற்றும் தகுந்த ஒடுக்கும் காரணியுடன், உலோகத்தின் உருகு நிலையை விட அதிக வெப்பநிலையில் உருக்கப்படுகிறது.
2. கனிமக் கழிவுடன் சேர்ந்து எளிதில் உருகும் கசடினை உருவாக்கும் வேதிப்பொருள் இளக்கி எனப்படும்.
3. (எ.கா.) சுட்ட சுண்ணாம்பு CaO.
4. கார்பன், கார்பன் மோனாக்சைடு, அலுமினியம் ஆகியன தகுந்த ஒடுக்கும் காரணிகள் ஆகும்.
5. இரும்பு ஆக்சைடு, கார்பன் மோனாக்சைடால் பின்வருமாறு ஒடுக்கப்படுகிறது.
Fe2O3(S) + 3CO(g) ⟶ 2Fe(S) + 3CO2(g) ↑
6. இத்தாதுவில் உள்ள அமிலத்தன்மையுடைய சிலிக்கா கனிமக் கழிவு, காரத்தன்மையுடைய இளக்கி சுட்ட சுண்ணாம்பினால் கால்சியம் சிலிக்கேட் எனும் கனிமக் கசடாக நீக்கப்படுகிறது.
CaO(S) + SiO2(S) ⟶ CaSiO3(S)
இளக்கி கனிமக்கழிவு கனிமக் கசடு
18.
1. அதிக புவி ஈர்ப்புத் தன்மையுடைய தாதுவானது, குறைந்த புவி ஈர்ப்புத் தன்மையுடைய கனிமக் கழிவுகளிலிருந்து ஓடும் நீரில் கழுவுதல் மூலம் நீக்கப்படுகிறது.
2. நன்கு தூளாக்கப்பட்ட தாது ஓடும் நீரில் கழுவப்படுகிறது.
3. லேசான கனிமக் கழிவுகள் ஓடும் நீரினால் அடித்துச் செல்லப்படுகின்றன.
4. தங்கம் போன்ற தனிம நிலை தாதுக்களையும் ஹேமடைட், மற்றும் வெள்ளீயக்கல் போன்ற ஆக்சைடு தாதுக்களையும் அடர்ப்பிக்க இம்முறை பயன்படுகிறது.
19.
\( (\rho)=\frac{\mathrm{nM}}{\mathrm{a}^3 \mathrm{~N}_1}
\rho =10 \mathrm{gcm}^{-3} ; \\
\mathrm{a} =100 \rho \mathrm{m}=1 \times 10^{-8} \mathrm{~cm} ; \\
\mathrm{N}_{\mathrm{A}} =6.023 \times 10^{23} ; \\
\mathrm{n} =4 ; \mathrm{M}=? \\
\mathrm{M} =\frac{\rho \mathrm{a}^3 \mathrm{~N}_{\mathrm{A}}}{\mathrm{n}}=\frac{10 \times\left(1 \times 10^{-8}\right)^3 \times 6.023 \times 10^{23}}{4} \\
=\frac{6.023}{4}=1.505 \mathrm{~g} / \mathrm{mole}
\)
மோல்களின் எண்ணிக்கை \(n=\frac { W }{ M } =\frac { 1 }{ 1.505 } \) = 0.664 மோல்கள்
n மோல்களில் உள்ள அணுக்களின் எண்ணிக்கை = n x NA
அணுக்களின் எண்ணிக்கை = 0.6623 x 6.023 x 1023
= 3.99 x 1023 அணுக்கள்
20.
(i) சில உலோக அயனிகளை அணைவுச் சேர்மமாக்குவதன் மூலம் துல்லியமாக அளந்தறியலாம்.
(ii) (எ.கா) நிக்கல் குளோரைடில் உள்ள Ni2+ அயனியானது, ஆல்கஹாலில் கரைக்கப்பட்ட டைமீத்தைல் கிளையாக்ஸைம் உடன் வினைப்படுத்தப்பட்டு [Ni(DMG)2] என்ற கரையாத அணைவுச் சேர்மமாக மாற்றப்பட்டு துல்லியமாக அளந்தறியப்படுகிறது.
(iii) EDTA என்பது ஒரு கொடுக்கினைப்பு ஈனி. இது பருமனறி பகுப்பாய்வின் மூலம் அநேக உலோக அயனிகளை அளந்தறிய பயன்படுகிறது. (எ.கா): Zn2+, Pb2+, Ca2+, Co2+, Ni2+, Cu2+
(iv) ஒன்றுக்கு மேற்பட்ட உலோக அயனிகள் உள்ள கரைசலில் ஒரு உலோகத்தை அளந்தறியும் போது, மற்றொரு உலோக அயனி குறுக்கிடாமல் தடுக்கும் மறைப்புக் காரணியாக EDTA பயன்படுகிறது.
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards