12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 10/10/2019
p-தொகுதி தனிமங்கள் - II
12ஆம் வகுப்பு Chemistry / வேதியியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Chemistry / வேதியியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Chemistry Test

1.
அறை வெப்பநிலையில் நைட்ரஜனுடன் வினைபுரியும் தனிமம் _____________
Li
Na
Ca
B
2.
இந்திய வெடியுப்பு என்பது _______.
சோடியம் நைட்ரேட்
சோடியம் நைட்ரைட்
பொட்டாசியம் நைட்ரேட்
பொட்டாசியம் நைட்ரைட்
3.
அமிலத்தன்மையைப் பொறுத்து, பின்வருவனவற்றுள் சரியான வரிசை எது?
HClO2 < HClO < HClO3 < HClO4
HClO4 < HClO2 < HClO < HClO3
HClO3 < HClO4 < HClO2 < HClO
HClO < HClO2 < HClO3 < HClO4
4.
பின்வரும் சேர்மங்களில் உருவாக வாய்ப்பில்லாத சேர்மம் எது?
XeOF4
XeO3
XeF2
NeF2
5.
ஒரு ஆர்த்தோ பாஸ்பாரிக் அமிலக் கரைசலின் மோலாரிட்டி 2M. அக்கரைசலின் நார்மாலிட்டி ______.
6N
4N
2N
இவை எதுவுமல்ல
6.
P4O6 ஆனது குளிர்ந்த நீருடன் வினைபுரிந்து தருவது _______.
H3PO3
H4P2O7
HPO3
H3PO4
7.
பழுப்பு வளையச் சோதனையில் உருவாகும் வளையத்தில் பழுப்பு நிறத்திற்கு காரணமாக அமைவது _______.
NO மற்றும் NO2 கலவை
நைட்ரசோஃபெர்ரஸ் சல்பேட்
பெர்ரஸ் நைட்ரேட்
பெர்ரிக் நைட்ரேட்
8.
பின்வருவனவற்றுள், NH3 எதில் பயன்படுத்தப்படவில்லை?
நெஸ்லர் காரணி
IVம் தொகுதி காரமூலங்களை கண்டறியும் பகுப்பாய்வு
IIIம் தொகுதி காரமூலங்களை கண்டறியும் பகுப்பாய்வு
டாலன்ஸ் வினைப்பொருள்
9.
நைட்ரஜனின் பயன்களை எழுது.
10.
பின்வரும் சேர்மங்களில் காணப்படும் இனக்கலப்பாதலைக் கண்டறிக.
அ) BrF5
ஆ) BrF3
11.
பாஸ்பைனின் வேதிப் பண்புகளை விளக்கும் இரு சமன்பாடுகளைத் தருக.
12.
ஆர்கானின் பயன்களைத் தருக.
13.
கந்தக அமிலத்தின் பயன்களைத் தருக.
14.
ஏன் ஃபுளுரின் எப்போதும் -1 ஆக்சிஜனேற்ற நிலையினைப் பெற்றுள்ளது? விளக்குக.
15.
மந்த இணை விளைவு என்றால் என்ன?
16.
நைட்ரஜனின் முரண்பட்ட பண்பிற்கு காரணம் தருக.
17.
குளோரின், குளிர்ந்த NaOH மற்றும் சூடான NaOH உடன் புரியும், வினைகளுக்கான சமன்படுத்தப்பட்ட சமன்பாடுகளைத் தருக.
18.
ஹீலியத்தின் பயன்களைத் தருக.
19.
பிற ஹாலஜன்களைக் காட்டிலும் ஃபுளுரின் அதிக வினைத் திறனுடையது ஏன்?
20.
XeF6
21.
IF7
22.
பைரோ சல்பியூரிக் அமிலம்
23.
N2O
24.
NH3
25.
i) H2SO4 அமிலமும் இருகாரத்துவ அமிலமாகும்
ii) H3PO3 அமிலம் முக்காரத்துவ அமிலமாகும்
iii) H3PO4 அமிலம் இருகாரத்துவ அமிலமாகும்
iv) H3PO2 அமிலம் ஒருகாரத்துவ அமிலமாகும்
அ) (i) & (ii)
ஆ) (ii) & (iii)
இ) (iii) & (iv)
ஈ) (i) & (iv)
26.
i) ஆக்சிஜன் டையா காந்தத் தன்மை கொண்டது.
ii) ஆக்சிஜன் ஹைட்ரஜன் பிணைப்பினை உருவாக்க வல்லது
iii) ஆக்சிஜன் இரு புறவேற்றுமை வடிவங்களில் காணப்படுகிறது
iv) ஆக்சிஜன் ஒரு மூவணு மூலக்கூறு வாயுவாக காணப்படுகிறது.
அ) (i) & (ii)
ஆ) (ii) & (iii)
இ) (iii) & (iv)
ஈ) (i) & (iv)
1.
(a)
Li
2.
(d)
பொட்டாசியம் நைட்ரைட்
3.
(d)
HClO < HClO2 < HClO3 < HClO4
4.
(d)
NeF2
5.
(a)
6N
6.
(a)
H3PO3
7.
(b)
நைட்ரசோஃபெர்ரஸ் சல்பேட்
8.
(a)
நெஸ்லர் காரணி
9.
நைட்ரஜனின் பயன்கள்:
(i) அம்மோனியா, நைட்ரிக் அமிலம் மற்றும் கால்சியம் சயனமைடு ஆகியவற்றை தயாரிக்க நைட்ரஜன் பயன்படுகிறது.
(ii) திரவ நைட்ரஜன் அதிகுளிர்நிலை அறுவை சிகிச்சைக்கு தேவையான குறைந்த வெப்பநிலையை உருவாக்கவும், உயிரியல் பதப்படுத்தியாகவும் பயன்படுகிறது.
10.
அ) BrF5

புரோமின் அணுவில் உள்ள பிணைப்பு எலக்ட்ரான் 7 + ஃபுளுரின் அணுவின் எண்ணிக்கை (5) = 12
x = \(\frac{12}{2}\) = 6
இனக்கலப்பு: sp3d2
வடிவமைப்பு: சதுரபிரமீடு
ஆ) BrF3

புரோமின் அணுவில் உள்ள பிணைப்பு எலக்ட்ரான் 7 + ஃபுளுரின் அணுவின் எண்ணிக்கை (5) = 12
x = \(\frac{10}{2}\) = 5
இனக்கலப்பு: sp3d2
வடிவமைப்பு: முக்கோண இருபிரமீடு; (T-வடிவம்)
11.
வெப்பநிலைப்புத்தன்மை: 4PH3 \(\underrightarrow { 317k} \) P4 + 6H2
எரித்தல் வினை:
4PH3 + 8O2 \(\underrightarrow { \Delta } \) P4O10 + 6H2O
P4O10 + 6H2O \(\underrightarrow { \Delta } \)4HPO3 + 4H2O
மெட்டா பாஸ்பாரிக் அமிலம்
12.
சூடான மின்னிழைகளில் ஆக்சிஜனேற்றம் ஏற்படுவதை ஆர்கான் தடுக்கிறது. இதனால் பல்புகளில் காணப்படும் மின்னிழைகளில் ஆயுள் நீடிக்கப்படுகிறது.
13.
கந்தக அமிலம் :
1. அம்மோனியம் சல்பேட் மற்றும் சூப்பர் பாஸ்பேட் போன்ற உரங்களை பெருமளவில் தயாரிக்கவும் மேலும் HCl, HNO3 போன்ற வேதிப் பொருள்கள் தயாரிப்பிலும் பயன்படுகிறது
2. இது உலர்த்தும் காரணியாக பயன்படுகிறது மேலும், நிறமிப்பொருட்கள் வேதிப்பொருட்கள் போன்ற தயாரிப்பிலும் பயன்படுகிறது.
14.
1. ஃபுளுரின் அதிக எலக்ட்ரான் கவர்திறன் கொண்ட தனிமமாகும். எனவே இது நேர் ஆக்ஸிஜனேற்ற நிலையை பெற்றிருப்பதில்லை.
2. ஃபுளுரினில் ஒரு தனித்த இணையுறாத எலக்ட்ரான் உள்ளதால் இது 1 ஆக்ஸிஜனேற்ற நிலையைப் பெற்றுள்ளது.
15.
இடைநிலைத் தனிமங்களைத் தொடர்ந்து வரும் கனமான தனிமங்களில் உள்ள வெளிக்கூட்டு ns2 எலக்ட்ரான்கள் மந்தத்தன்மை கொண்டவைகளாக உள்ளன மேலும் பிணைப்பில் பங்கெடுக்க இயல்பாக முனைவதில்லை. இந்த விளைவு மந்த இணை விளைவு என அறியப்படுகிறது. 14,15,16 ஆம் தொகுதிகளிலும் இந்த விளைவு காணப்படுகிறது.
16.
(i) சிறிய உருவளவு
(ii) அதிக எலக்ட்ரான் கவர்திறன்
(iii) அதிக அயனியாக்கும் ஆற்றல்
(iv) இணைதிறன் கூட்டில் d - ஆர்பிட்டால்கள் இல்லை
(v) சற்று மந்தத்தன்மை.
(vi) பிணைப்பு ஆற்றல் அதிகம்.
17.
(i) குளோரின் குளிர்ந்த NaOH உடன் வினைபட்டு சோடியம் ஹைப்போ குளோரைட்டைத் தருகிறது.
HCl + NaOH → NaCl + H2O
H2O + Cl2 → HCl + HOCl
HOCl + NaOH → NaOCl + H2O
(ii) குளோரின் சூடான NaOH உடன் வினைபட்டு சோடியம் குளோரேட்டைத் தருகிறது.
18.
1. மின்வில் முறையில் உலோகங்களை ஓட்டும் செயல்முறையில் மந்த வினைபுரியா சூழலை ஏற்படுத்துகிறது
2. குறைவான கொதிநிலையைக் கொண்டிருப்பதால் கிரையோஜெனிக் நுட்பங்களில் பயன்படுகிறது.
3. காற்றை விட லேசானது என்பதால் காற்றில் மிதக்கும் பலூன்களில் நிரப்பப் பயன்படுகிறது.
19.
1. ஃபுளுரின் மற்ற ஹாலஜனை விட அதிக எலக்ட்ரான் கவர் தன்மையைப் பெற்றுள்ளது.
2. ஃபுளுரினைத் தவிர மற்ற ஹாலஜன்கள் நேர் ஆக்ஸிஜனேற்றம் உடையது.
3. இது அதிக எலக்ட்ரான் நாட்ட பண்பு உடையது.
உதாரணம் :
Cl2 O → +1
OF2 → -1
20.
ஒழுங்கற்ற எண்முகி
21.
sp3d3
22.
H2S2O7
23.
+1
24.
-3
25.
( )
ஈ) (i) & (iv)
சரியான கூற்று: ii) H3PO3 அமிலம் இருகாரத்துவ அமிலமாகும்
iii) H3PO4 அமிலம் முக்காரத்துவ அமிலமாகும்
26.
( )
ஆ) (ii) & (iii)
சரியான கூற்று: (i) ஆக்சிஜன் பாரா காந்தத் தன்மை கொண்டது
(iv) ஆக்சிஜன் ஒரு ஈரணு மூலக்கூறு வாயுவாக காணப்படுகிறது.
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards