12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 29/10/2019
12ஆம் வகுப்பு Chemistry / வேதியியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Chemistry / வேதியியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Chemistry Test

1.
எத்தனால்
என்ற வினையில் 'Z' என்பது
ஈத்தேன்
ஈத்தாக்ஸி ஈத்தேன்
எத்தில்பைசல்பைட்
எத்தனால்
2.
ஒரு வாயுவானது, ஒரு திண்ம உலோக பரப்பின்மீது பரப்பு கவரப்படுதல் என்பது தன்னிச்சையான மற்றும் வெப்பம் உமிழ் நிகழ்வாகும், ஏனெனில் ____________
ΔH அதிகரிக்கிறது
ΔS அதிகரிக்கிறது
ΔG அதிகரிக்கிறது
ΔS குறைகிறது
3.
தலைமுடி கிரீம் என்பது ஒரு _____________
களி
பால்மம்
திண்மக் கூழ்மம்
கூழ்மக் கரைசல்.
4.
இரும்பின்மீது ஜிங்க் உலோகத்தை பூசி முலாம்பூசப்பட்ட இரும்பு தயாரிக்கப்படுகிறது, இதன் மறுதலை சாத்தியமற்றது, ஏனெனில் ___________
இரும்பை விட ஜிங்க் லேசானது
இரும்பை விட ஜிங்க் குறைந்த உருகுநிலையை பெற்றுள்ளது.
இரும்பை விட ஜிங்க் குறைந்த எதிர்குறி மின்முனை மின்னழுத்த மதிப்பை பெற்றுள்ளது
இரும்பை விட ஜிங்க் அதிக எதிர்குறி மின்முனை மின்னழுத்த மதிப்பை பெற்றுள்ளது
5.
ஃ பாரடே மாறிலி _________ என வரையறுக்கப்படுகிறது
1 எலக்ட்ரானால் சுமந்து செல்லப்படும் மின்னூட்டம்
1 மோல் எலக்ட்ரான்களால் சுமந்து செல்லப்படும் மின்னூட்டம்
ஒரு மோல் பொருளை விடுவிக்க தேவைப்படும் மின்னூட்டம்
\(6.22\times10^{10}\) எலக்ட்ரான்களால் சுமந்து செல்லப்படும் மின்னூட்டம்
6.
பின்வருவனவற்றுள் எது லெளரி– ப்ரான்ஸ்டட் அமிலமாகவும், காரமாகவும் செயல்பட முடியும்?
HCl
SO42−
HPO42−
Br-
7.
வினைபடு பொருளின் துவக்கச் செறிவு இரு மடங்கானால், வினை பாதியளவு நிறைவு பெற தேவையான காலமும் இருமடங்காகிறது எனில் அவ்வினையின் வகை _______________
பூஜ்ஜியம்
ஒன்று
பின்னம்
எதுவுமல்ல
8.
2NH3\(\rightarrow\)N2 + 3H2 என்ற வினைக்கு \(\frac { -d\left[ { NH }_{ 3 } \right] }{ dt } ={ K }_{ 1 }\left[ { NH }_{ 3 } \right] ,\frac { d\left[ { N }_{ 2 } \right] }{ dt } ={ k }_{ 2 }[{ NH }_{ 3 }],\frac { d\left[ { H }_{ 2 } \right] }{ dt } ={ K }_{ 3 }\left[ { NH }_{ 3 } \right] \) எனில், K1, K2 மற்றும் K3 ஆகியவைகளுக்கிடையானத் தொடர்பு ____________
k1 = k2 = k3
k1 = 3k2 = 2k3
1.5k1= 3k2 = k3
2k1 = k2 = 3k3
9.
NaCl படிகத்தின் மஞ்சள் நிறத்திற்கு காரணம் ______________
F மையத்தில் உள்ள எலக்ட்ரான்கள் கிளர்வுறுதல்
புறப்பரப்பில் உள்ள Cl- அயனிகளால் ஒளி எதிரொளிக்கப்படுதல்.
Na+ அயனிகளால் ஒளி விலகலடைதல்.
மேற்கண்ட அனைத்தும்.
10.
கனசதுரம் நெருங்கிப் பொதிந்த அமைப்பில், நெருங்கிப் பொதிந்த அணுக்களுக்கும், நான்முகி துளைகளுக்கும் இடையேயான விகிதம் ____________
1:1
1:2
2:11
1:4
11.
பின்வருவனவற்றுள் அதிகபட்ச Δ0 எண் மதிப்பை பெற்றுள்ள அணைவு அயனி எது?
[Co(CN)6]3-
[Co(C2O4)]3-
[Co(H2O)6]3+
[Co(NH3)6]3+
12.
பின்வருவனவற்றுள் எதனுடைய சேர்மம் நிறமற்றது?
Fe3+
Ti4+
Co2+
Ni2+
13.
பைரோபாஸ்போரஸ் அமிலத்தின் (H4P2O5) காரத்துவம் _________.
4
2
3
5
14.
போராக்ஸின் நீர்க் கரைசலானது _______.
நடுநிலைத் தன்மை உடையது
அமிலத் தன்மை உடையது
காரத் தன்மை உடையது
ஈரியல்புத் தன்மை கொண்டது
15.
பாக்ஸைட்டின் இயைபு ________.
Al2O3
Al2O3.nH2O
Fe2O3.2H2O
இவை எதுவுமல்ல
16.
நொதிகள் வரையறு
17.
pH வரையறு.
18.
19.
பூஜ்ய வகை வினைக்கு இரு எடுத்துக்காட்டுகள் தருக.
20.
வேக விதி மற்றும் வினைவேக மாறிலியை வரையறு.
21.
புள்ளி குறைபாடுகள் என்றால் என்ன?
22.
சிலிக்கோன்களின் பயன்களைத் தருக.
23.
CO மற்றும் CO2 ன் வடிவங்களைத் தருக.
24.
துத்தநாகத்தின் பயன்களைக் கூறுக.
25.
26.
லாந்தனாய்டுகளையும், ஆக்டினாய்டுகளையும் ஒப்பிடுக.
27.
மின்னாற் தூய்மையாக்கலின் தத்துவத்தினை ஒரு உதாரணத்துடன் விளக்குக.
28.
கோல்ப் வினையை விளக்குக.
29.
வைட்டமின்கள் எவ்வாறு வகைப்படுத்தப்படுகின்றன?
30.
படிகப்புல நிலைப்படுத்தல் ஆற்றல் (CFSE) என்றால் என்ன?
31.
Cr2+ அல்லது Fe2+ இவற்றுள் எது வலிமையான ஆக்சிஜனொடுக்கி?
32.
ஹீலியத்தின் பயன்களைத் தருக.
1.
\(\mathrm{CH}_3-\mathrm{CH}_2 \mathrm{OH} \xrightarrow{\mathrm{PC}_3} \mathrm{CH}_3-\mathrm{CH}_2 \mathrm{Cl} \xrightarrow{\mathrm{ak.} \mathrm{KOH}} \mathrm{CH}_2=\mathrm{CH}_2 \xrightarrow{\mathrm{H}_2 \mathrm{SO}_4 / \mathrm{H}^{+}} \mathrm{CH}_3-\mathrm{CH}_2 \mathrm{OH}\)
2.
(d)
ΔS குறைகிறது
3.
பால்மம் (பிரிகை நிலை மற்றும் ஊடகம் திரவம்)
4.
இரும்பை விட ஜிங்க் அதிக எதிர்குறி மின்முனை மின்னழுத்த மதிப்பை பெற்றுள்ளது
EoZn+|Zn = -0.76V மற்றும்
EoFe2+|Fe = -0.44V ஜிங்கின்
எதிர்மின்முனை மின்முனை மின்னழுத்தமானது இரும்பினை விட அதிகம். எனவே இரும்பினால் பூசப்படுதல் இயலாது.
5.
1 மோல் எலக்ட்ரான்களால் சுமந்து செல்லப்படும் மின்னூட்டம்
1 மோல் பொருளை விடுவிக்க தேவைப்படும் மின்னூட்டம்
1F = 96500 C = 1 மோல் எலக்ட்ரான்களின் மின்சுமை
e- = 6.022 \(\times\) 1023 е-
6.
HPO42- ஆனது ஒரு புரோட்டானை ஏற்று H2PO4- ஐ உருவாக்கும்.
அது ஒரு புரோட்டானை இழக்கும் போது PO4-3 உருவாகும்.
7.
பூஜ்ஜியம்
ஒரு முதல் வகை வினைக்கு \(\mathrm{t}_{\frac{1}{2}}\)
ஆனது துவக்கச் செறிவைப் பொறுத்து அமைவதில்லை ஃ #1
\((2)/(1)
\left.t_{1 / 2} \propto \frac{1}{\left[A_0\right]^{n-1}} \cdots A_0\right]=2\left[A_0\right] ; \text { எซில } t_{1 / 2}=2 t_{1 / 2} \\
2 t_{1 / 2} \propto \frac{1}{\left[2 A_0\right]^{n-1}}
2=\frac{1}{\left[2 A_0\right]^{n-1}} \times \frac{\left[A_0\right]^{-1}}{1} \\
2=\frac{\left[A_0\right]^{-1}}{\left[2 A_0\right]^{--1}} \\
2=\left(\frac{1}{2}\right)^{n-1} \\
2=\left(2^{-1}\right)^{n-1} \\
2^1=\left(2^{-n+1}\right) \\
n=0
\)
8.
\( \text { Rate }=\left(\frac{-1}{2}\right) \frac{\mathrm{d}\left[\mathrm{NH}_3\right]}{\mathrm{dt}}=\frac{\mathrm{d}\left[\mathrm{N}_2\right]}{\mathrm{dt}}=\left(\frac{1}{3}\right) \frac{\mathrm{d}\left[\mathrm{H}_2\right]}{\mathrm{dt}} \\ \left(\frac{1}{2}\right) \mathrm{k}_1\left[\mathrm{NH}_3\right]=\mathrm{k}_2\left[\mathrm{NH}_3\right]=\left(\frac{1}{3}\right) \mathrm{k}_3\left[\mathrm{NH}_3\right] \\ \left(\frac{3}{2}\right) \mathrm{k}_1=3 \mathrm{k}_2=\mathrm{k}_3 \\ 1.5 \mathrm{k}_1=3 \mathrm{k}_2=\mathrm{k}_3 \)
9.
(a)
F மையத்தில் உள்ள எலக்ட்ரான்கள் கிளர்வுறுதல்
10.
நெருங்கிப் பொதிந்த அணுக்களின் 'N' எண்ணிக்கை என்க.
நான்முகி வெற்றிடங்கள் = 2N
எண்முகி வெற்றிடங்கள் = N
N : 2N = 1 : 2
11.
அனைத்து அணைவுச் சேர்மங்களிலும், மைய உலோக அயனி Co3+ ஆகும். கொடுக்கப்பட்டுள்ள ஈனிகளில் CN- ஆனது வலிமையான ஈனி, இது அதிக படிக புலப்பிளவை ஏற்படுத்துகிறது.
Δ0
12.
(b)
Ti4+
13.
(b)
2
14.
Na2 B2 O2 + 7H2O ⇌ 2NaOH + 4H3BO3
Strong base Weak acid
15.
(b)
Al2O3.nH2O
16.
நொதிகள் எனப்படுபவை எளிய அல்லது இணைப்பு புரதங்களாகும்; இவை உயிரின அமைப்புகளின் உயிரியல் வினைவேக மாற்றிகளாகும்.
எ.கா: கார்போனிக் அன்ஹைட்ரேஸ், லாக்டேஸ், இன்வர்டேஸ்
17.
pH = - log10[H3O +]
ஒரு கரைசலின் pH என்பது அக்கரைசலில் உள்ள ஹைட்ரோனியம் அயனிகளின் மோலார் செறிவின், 10ஐ அடிப்படையாக கொண்ட எதிர்குறி மடக்கை மதிப்புகள் என வரையறுக்கப்படுகிறது.
18.
19.
பூஜ்ய வகை வினைக்கு இரு எடுத்துக்காட்டுகள்:
1. H2 மற்றும் Cl2 ஆகியவற்றிற்கு இடையேயான ஒளி வேதிவினை
\({ H }_{ 2(g) }+{ Cl }_{ 2(g) }\overset { hv }{ \longrightarrow } 2HC{ l }_{ (g) }\)
2. சூடான பிளாட்டினம் புறப்பரப்பில் N2O சிதைவடைதல்.
\({ N }_{ 2 }{ O }_{ (g) }\leftrightharpoons { N }_{ 2(g) }+\frac { 1 }{ 2 } { O }_{ 2(g) }\)
20.
வேகவிதி:
ஒரு வினையின் வேகத்தை, வேக மாறிலி மற்றும் வினைபடு பொருட்களின் செறிவு ஆகியவற்றுடன் தொடர்புபடுத்தும் சமன்பாடு வேகவிதி அல்லது வேகச்சமன்பாடு எனப்படும்.
xA + yB →விளைபொருட்கள் என்ற வினைக்கு, r = k [A] [B]n
வேக மாறிலி
வினைபடுபொருட்களின் செறிவு ஓரலகாக உள்ளபோது வினையின் வேகம் வேக மாறிலி எனப்படும்.
வேக விதி [A] = [B] = 1 வினைவேக மாறிலி k = வேகம்
21.
குறைபாடானது இல்லாத அணுக்களால் ஏற்படும் வெற்றிடம் அல்லது இடம்பெயர்ந்த அணுக்கள் அல்லது கூடுதல் அணுக்கள் ஆகியவற்றால் ஏற்படின் அது புள்ளி குறைபாடு எனப்படும். முதலாவது படிகமாதலின் போது ஏற்படும் ஒழுங்கற்ற பொதிவு காரணமாக இது ஏற்படுகிறது அல்லது உயர் வெப்பநிலைகளில் அணுக்களின் வெப்ப அதிர்வுகளினால் இக்குறைபாடு ஏற்படுகிறது.
22.
1. சிலிகோன்கள் குறைந்த வெப்பநிலை உயர்வுப் பொருளாகவும் வெற்றிட பம்புகள், உயர் வெப்பநிலை எண்ணெய்த் தொட்டியில் பயன்படுகின்றன.
2. இவை நீர் வெறுக்கும் ஆடைகள் தயாரித்தலில் பயன்படுகின்றன.
3. இவை, மின் மோட்டார்கள் மற்றும் வீட்டு உபயோக பொருள்களில் மின்காப்பு பொருளாக பயன்படுகின்றன.
4. சிலிகோன்கள் சேகரிக்கப்பட்ட பெயிண்ட் மற்றும் எனாமல் அதிக வெப்பநிலை, சூரிய ஒளி, ஈரப்பதம் மற்றும் வேதிப் பொருள்கள் தாக்குதல் ஆகியவற்றை தாக்குபிடிக்கின்றன.
23.
| வ.எண் | ஆக்ஸைடுகள் | வடிவமைப்பு | அளவீடுகள் |
| 1 | CO | கார்பனுக்கும், ஆக்ஸிஜனுக்கும் இடையே மூன்று எலக்ட்ரான் இரட்டைகள் பங்கிடப்பட்டுள்ளன C-O பிணைப்பின் நீளம் 1.128Å. | |
| 2 | CO2 | இரண்டு C-O பிணைப்புகளும் ஒரே நீளத்தைக் கொண்டுள்ளன. மூலக்கூறில் இரண்டு C-O சிக்மா பிணைப்பு உள்ளது. கூடுதலாக ஒரு மூன்று அணுக்களையும் பிணைக்கும் வகையில் ஒரு 3c-4e பிணைப்பும் காணப்படுகிறது. |
24.
1. எஃகு மற்றும் இரும்பு அமைப்புகள் அரிமானம் மற்றும் துருப்பிடிக்காமல் பாதுகாக்கும் துத்தநாகப்பூச்சில் (கால்வனைசேஷன்) பயன்படுகிறது.
2. மோட்டார் வாகன அச்சு வார்ப்பு, மின்சாதனப் பொருட்களில் பயன்படுகிறது.
3. துத்தநாகத்தின் உலோகக் கலவையான பித்தளை (brass) அரிமானம் அடையாத தன்மையை பெற்றிருப்பதால் குழாய் வால்வுகள் மற்றும் தகவல் தொடர்பு சாதனங்கள் தயாரிக்க பயன்படுகிறது.
25.
26.
| வ.எண்: | லாந்தனைடுகள் | ஆக்டினாய்டுகள் |
| 1. | வேறுபடுத்தும் எலக்ட்ரான் 4f ஆர்பிட்டாலில் சேர்க்கிறது | வேறுபடுத்தும் எலக்ட்ரான் 5f ஆர்பிட்டாலில் சேர்க்கிறது. |
| 2. | 4f ஆர்பிட்டாலில் பிணைப்பு ஆற்றல் அதிகம் | 5f ஆர்பிட்டாலில் பிணைப்பு ஆற்றல் குறைவு |
| 3. | இவைகளில் அணைவுச் சேர்மங்களை உருவாக்கும் தன்மை குறைவு. | இவற்றின் அணைவுச் சேர்மங்களை உருவாக்கும் தன்மை அதிகம். |
| 4. | பெரும்பாலான லாந்தனாய்டுகள் நிறமற்றவை | பெரும்பாலான ஆக்டினாய்டுகள் நிறமுடையவை (U3+ சிவப்பு, U4+ பச்சை, UO22+ மஞ்சள்) |
| 5. | இவைகள் ஆக்சோ நேரயனிகளை உருவாக்குவதில்லை. | இவைகளின் ஆக்சோ நேரயனிகளை உருவாக்குகின்றன. UO22+, NpO22+ |
| 6. | லாந்தனாய்டுகள் சில நேர்வுகளில் +3 ஆக்சிஜனேற்ற நிலையுடன், +2 ஆக்சிஜனேற்ற நிலைகளையும் பெற்றுள்ளன. | ஆக்டினாய்டுகள் +3 ஆக்சிஜனேற்ற நிலையுடன் +4, +5, +6 மற்றும் +7 போன்ற உயர் ஆக்சிஜனேற்ற நிலைகளை பெற்றுள்ளன. |
27.
பண்படா உலோகமானது மின்னாற்பகுத்தல் மூலம் தூய்மை செய்யப்படுகிறது.
நேர்மின்வாய் : தூய்மையற்ற உலோகத் தண்டு.
எதிர்மின்வாய்: தூய உலோகத் தகடு
மின்பகுளி : மின்னாற் பகுத்தலானது
பிரித்தெடுக்கப்பட வேண்டிய உலோகத்தின் உப்புகளைக் கொண்ட நீர்க்கரைசலைக் கொண்டுள்ள மின்பகு கலத்தில் நிகழ்த்தப்படுகிறது.
மின்னாற் பகுத்தல் நிகழ்த்தும் போது, பிரித்தெடுக்கப்பட வேண்டிய உலோகம் நேர்மின் வாயிலிருந்து கரைந்து கரைசலில் சென்று எதிர்மின்வாயில் வீழ்படிவாகிறது.
1. மின்னாற்பகுத்தலின் போது குறைவான எலக்ட்ரோ நேர்மின் தன்மை உடைய மாசுக்கள் நேர்மின் வாயின் அடியில் தங்குகின்றன. அவை ஆனோடு மாசு என அழைக்கப்படுகிறது.
2. சில்வரை மின்னாற்பகுத்தல் முறையில் தூய்மையாக்கலை உதாரணமாகக் கொண்டு இச்செயல்முறையினைப் புரிந்து கொள்ளலாம்.
எதிர் மின்வாய் : தூய சில்வர்
நேர்மின்வாய் : தூய்மையற்ற சில்வர்
மின்பகுளி : அமிலத்தன்மையுள்ள சில்வர் நைட்ரேட்கரைசல்
3. மின்வாய்களின் வழியே மின்சாரத்தைச் செலுத்தும் போது சில்வர் அனு எலக்ட்ரான்களை இழந்து கரைசலுக்குள் செல்கின்றது. நேர்மின் தன்மையுடைய சில்வர் அயனிகள் எதிர்மின்வாயில் சென்று மின்னிறக்கம் அடைந்து மின்வாயில் படிகிறது.
4. காப்பர், ஜிங்க் போன்ற பிற உலோகங்களுக்கு இதே முறையை பின்பற்றித் தூய்மையாக்கப்படுகின்றன.
28.
கோல்ப் வினையில் பீனால் முதலில் சோடியம் பீனாக்ஸைடாக மாற்றப்படுகிறது. இது பீனாலை விட CO2 உடன் எலக்ட்ரான் கவர் பதிலீட்டு வினையில் வேகமாக வினைபடுகிறது. 400K வெப்பநிலை மற்றும் 4-7 வளிமண்டல அழுத்தத்தில் சோடியம் பீனாக்ஸைடை அமில நீராற்பகுப்பிற்கு உட்படுத்தும்போது சாலிசிலிக் அமிலம் கிடைக்கிறது.

29.
நீர் அல்லது கொழுப்பில் கரையும் தன்மையின் அடிப்படையில் வைட்டமின்கள் வகைகளாக வகைப்படுத்தப்படுகின்றன. இரண்டு
அ) கொழுப்பில் கரையும் வைட்டமின்கள்:
இந்த வைட்டமின்கள், கொழுப்பு உணவுடன் எடுத்துக்கொள்ளும்போது சிறப்பாக உறிஞ்சப்பட்டு கொழுப்பு திசுக்கள் மற்றும் கல்லீரலில் சேமிக்கப்படுகின்றன. இந்த வைட்டமின்கள் நீரில் கரைவதில்லை, எனவே இவை கொழுப்பில் கரையும் வைட்டமின்கள் என்றழைக்கப்படுகின்றன. வைட்டமின் A,D,E & K ஆகியன கொழுப்பில் கரையும் வைட்டமின்களாகும்.
ஆ) நீரில் கரையும் வைட்டமின்கள்:
வைட்டமின்கள் B(B1, B2, B3, B5, B6, B7, B9 & B₁₂) மற்றும் C ஆகியன நீரில் எளிதாக கரைகின்றன. கொழுப்பில் கரையும் வைட்டமின்கள் போலல்லாமல் இவற்றை சேமிக்க இயலாது. அதிகப்படியாக உள்ள வைட்டமின்கள் உடலில் சேமிக்கப்படாமல் சிறுநீரின் வழியாக வெளியேற்றப்படுகின்றன. எனவே, இவ்வகை வைட்டமின்கள் தொடர்ந்து உணவின் வழியாக நம் உடலுக்குள் செலுத்தப்பட வேண்டும்.
30.
ஈனிப்புலம் (ELF) மற்றும் சமச்சீர்புலம் (Eiso) ஆகியவற்றில் காணப்படும் எலக்ட்ரான் அமைப்பினைப் பொறுத்து அவ்வாற்றல்களுக்கு இடையேயான வேறுபாடே படிக புல நிலைப்படுத்தும் ஆற்றல் எனப்படுகிறது.
CFSE(∆Eo) = {ELF} - {Eiso}
31.
1. Cr2+ ஆனது Fe2+ விட வலிமையான ஆக்ஸிஜனோடுக்கியாகும். Cr2+ திட்ட மின்முனை மின்னழுத்த (E°) மதிப்பானது - 0.91 V ஆகும். ஆனால் Fe2+ ன் மதிப்பு - 0.44 V ஆகும்.
2. ஒரு உலோகத்தின் திட்ட மின்முனை மின்னழுத்த மதிப்பானது அதிக எதிர்க்குறி மதிப்பைப் பெற்றிருப்பின் அந்த உலோகமானது ஒரு வலிமையான ஒடுக்கும் காரணியாகும். ஏனெனில் இவைகள் எளிதில் எலக்ட்ரான்களை இழக்கின்றன. எனவே Cr²+ ஒரு வலிமையான ஆக்ஸிஜனோடுக்கியாகும்.
32.
1. மின்வில் முறையில் உலோகங்களை ஓட்டும் செயல்முறையில் மந்த வினைபுரியா சூழலை ஏற்படுத்துகிறது
2. குறைவான கொதிநிலையைக் கொண்டிருப்பதால் கிரையோஜெனிக் நுட்பங்களில் பயன்படுகிறது.
3. காற்றை விட லேசானது என்பதால் காற்றில் மிதக்கும் பலூன்களில் நிரப்பப் பயன்படுகிறது.
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards