12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 31/07/2019
நிதிச் சந்தை – ஓர் அறிமுகம்
12ஆம் வகுப்பு Commerce / வணிகவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Commerce / வணிகவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Commerce Test1.
ஒரு இரண்டாம் நிலைச் சந்தையில் ஒரு பத்திரம் எத்தனை முறை விற்கப்படலாம்?
ஒரே ஒரு முறை
இரண்டு முறை
மூன்று முறை
பல முறை
2.
உடனடிச் சந்தை என்பது நிதிக் கருவிகளை விநியோகம் செய்வதும் மற்றும் ரொக்கம் செலுத்துவதும் ______ நடைபெறும் ஒரு சந்தை ஆகும்.
உடனடியாக
எதிர்காலத்தில்
நிலையானது
ஒரு மாதத்திற்குப் பின்னர்
3.
முதல் நிலைச் சந்தை ________ எனவும் அழைக்கப்படுகிறது.
இரண்டாம் நிலைச் சந்தை
பணச் சந்தை
புதிய வெளியீடுகளுக்கான சந்தை
மறைமுக சந்தை
4.
மூலதனச் சந்தை என்பது ________ க்கான ஒரு சந்தை ஆகும்.
குறுகிய கால நிதி
நடுத்தர கால நிதி
நீண்ட கால நிதி
குறுகிய கால நிதி
5.
6.
உடனடிச் சந்தை என்றால் என்ன?
7.
நிதிச்சந்தை - சிறு குறிப்பு வரைக.
8.
நன்கு அமைக்கப்பட்ட துறைகளின் கூறுகள் யாவை?
9.
இந்தியாவில் நிதிச் சந்தையின் வரை எல்லையை விளக்குக.
10.
இரண்டாம் நிலைச் சந்தை- சிறு குறிப்பு வரைக.
11.
உடனடி சந்தை மற்றும் எதிர் நோக்கிய சந்தைகளுக்கும் இடையேயான வேறுபாடுகளை விளக்குக.
12.
பல்வேறுபட்ட நிதிச்சார் சந்தையின் வகைகளை கூறி விளக்குக.
13.
முதல் நிலைச் சந்தை மற்றும் இரண்டாம் நிலைச் சந்தைக்கும் இடையேயான வேறுபாடுகளை விளக்குக. (ஏதேனும் 5)
1.
(d)
பல முறை
2.
(a)
உடனடியாக
3.
(c)
புதிய வெளியீடுகளுக்கான சந்தை
4.
(c)
நீண்ட கால நிதி
5.
(a)
6.
ஆவணங்களை வழங்கலும், ரொக்கம் பெறுதலும் உடனடியாக நடைபெறும் சந்தை உடனடிச் சந்தை ஆகும். அதாவது தீர்வு உடனடியாக நடைபெறுகிறது.
7.
எந்த ஒரு சந்தையில் நிதி கோரல்கள், சொத்துக்கள் மற்றும் பத்திரங்கள் போன்ற நிதிக் கருவிகள் வியாபாரம் செய்யப்படும் சந்தை "நிதிச் சந்தை" எனப்படும்.
8.
1. ஒழுங்காற்று நிறுவனங்கள்
2. நிதி நிறுவனங்கள்
3. நிதிச் சந்தை
4. நிதிச்சார் சேவைகள்
9.
(i) நிதிச் சந்தை தனிநபர்களுக்கு, விவசாயத் துறைகளுக்கு, தொழிற்துறைகளுக்கு, சேவை துறைகள், நிதி நிறுவனங்களான வங்கிகள், காப்பீட்டு துறைகள், சேம நல காப்பு நிதிகள் மற்றும் அரசுக்கு நிதி உதவிகளை வழங்குகிறது.
(ii) மேற்குறிப்பிட்ட அமைப்புகள் தேவையான நிதியை நிதிச் சந்தையின் உதவியுடன் குறித்த நேரத்தில் பெறுகின்றனர்.
(iii) நிதிச் சந்தையின் மூலம் குறுகிய கால மற்றும் நீண்ட கால நிதி உதவியினை நிறுவனங்கள் பெறுகின்றன. ஒட்டுமொத்த பொருளாதார மேம்பாட்டிற்கு வழி வகுக்கிறது.
10.
(i) இரண்டாம் நிலைச் சந்தை ஏற்கனவே வெளியீடு செய்யப்பட்ட பங்குகளுக்கான சந்தை இரண்டாம் நிலைச் சந்தை ஆகும்.
(ii) இரண்டாம் நிலைச் சந்தையில் பங்கு மாற்றகம் ஒரு முக்கியமான நிறுவனம் ஆகும்.
11.
| வ.எண் | ஒப்பீட்டு அடிப்படை | உடனடி சந்தை | எதிர்நோக்கிய சந்தை |
|---|---|---|---|
| 1 | பொருள் | ஆவணங்களை வழங்கலும், ரொக்கம் பெறுதலும் உடனடியாக நடைபெறும் சந்தை உடனடி சந்தை ஆகும். | சொத்து வழங்கலும், ரொக்கம் செலுத்தலும் முன்னரே தீர்மானிக்கப்பட்டு எதிர்காலத்தில் நடைபெறும் சந்தை எதிர்கால சந்தை ஆகும். |
| 2 | விலை நிர்ணயம் / முடிவு | விலைகளை உடனுக்குடன் சந்தை நிலவரத்தைப் பொறுத்து விலை முடிவு செய்வது ஆகும். | எதிர்காலத்தில் பொருட்களை கைமாற்றிக் கொள்வதற்காக இன்றே விலைகளை முடிவு செய்வது ஆகும். |
12.
அ) நிதி கோருதல் வகையின் அடிப்படையில்:
i) கடன் சந்தை:
கடன் கருவிகளை வர்த்தகம் செய்வதற்கான நிதிச் சந்தை கடன் சந்தை ஆகும்.
ii) சமநிலை பங்குச் சந்தை:
நிறுவனம் சமநிலை பங்குகளின் வர்த்தகத்திற்கான நிதிச் சந்தை சமநிலை பங்குச் சந்தை ஆகும்.
ஆ) நிதி கோருதலின் முதிர்வு அடிப்படையில்:
i) பணச் சந்தை:
குறுகிய கால ஓராண்டு அல்லது அதற்கு குறைவாக நிதி கோருதலுக்கான நிதிச் சந்தை பணச் சந்தை ஆகும்.
எ.கா. கருவூலச் சீட்டுகள், வணிகத் தாட்கள், வைப்புச் சான்றிதழ்கள்
ii) மூலதனச் சந்தை:
நீண்ட கால, ஓராண்டுக்கு மேல் நிதி கோருதலுக்கான சந்தை மூலதனச் சந்தை ஆகும்.
இ) நிதி கோருதலின் வெளியீட்டுக் கால அடிப்படையில்:
i) முதல் நிலைச் சந்தை:
(1) நிறுவனங்கள் முதன் முதலில் பத்திரங்களை விற்பனை செய்வது அல்லது வெளியிடுவது முதல் நிலைச் சந்தை ஆகும்.
(2) இதில் பணம் முதலீட்டாளர்களிடமிருந்து நேரடியாக நிறுவனங்களுக்குச் செல்கிறது.
ii) இரண்டாம் நிலைச் சந்தை:
ஏற்கனவே வெளியீடு செய்யப்பட்ட பங்குகளுக்கான சந்தை இரண்டாம் நிலைச் சந்தை ஆகும்.
ஈ) நிதி கோருதலின் வழங்கலின் கால அடிப்படையில்:
i) ரொக்கம் (அ) உடனடிச் சந்தை:
(1) ஆவணங்களை வழங்கலும், ரொக்கம் பெறுதலும் உடனடியாக நடைபெறும் சந்தை உடனடிச் சந்தை ஆகும்.
(2) தீர்வு உடனடியாக நடைபெறுகிறது.
ii) முன்னோக்கிய (அ) எதிர்காலச் சந்தை:
(1) சொத்து வழங்கலும், ரொக்கம் செலுத்தலும் முன்னரே தீர்மானிக்கப்பட்டு எதிர்காலத்தில் நடைபெறும் சந்தை எதிர்கால சந்தை ஆகும்.
(2) பின்னொரு நாட்களில் பொருட்களை மாற்றிக் கொள்வதற்காக இன்றே விலை முடிவு செய்து கொள்ளும் சந்தையாகும்.
உ) நிதிச் சந்தை அமைப்பின் அடிப்படையில்:
i) பரிமாற்ற வர்த்தகச் சந்தை:
ஒரே ஒழுங்கு நடைமுறைகளைக் கொண்ட மைய அமைப்பு (பங்கு மாற்றகம்) ஆகும்.
ii) உடனடி சந்தை:
வழக்கமான நடைமுறைகளைக் கொண்ட பரவலாக்கப்பட்ட சந்தை ஆகும்.
13.
| வ.எண் | ஒப்பீட்டு அடிப்படை (Basis for Comparison) |
புதிய வெளியீடுகள் சந்தை (New Issue Market) |
இரண்டாம் நிலை சந்தை (Secondary Market) |
|---|---|---|---|
| 1 | பொருள் | புதிய பங்குகளுக்கான சந்தை முதல் நிலை சந்தை எனப்படும். | முன்னர் வெளியிட்ட ஈடுகளை வணிகம் செய்யும் இடம் இரண்டாம் நிலை சந்தை எனப்படும். |
| 2 | கொள்முதலின் வகைகள் |
நேரடி | மறைமுகம் |
| 3 | நிதி | புதிய நிறுவனங்கள் மற்றும் இயங்கி கொண்டு இருக்கும் நிறுவனங்களின் விரிவாக்கம் மற்றும் பல்வகைபடுத்துதல் போன்றவற்றிற்கு நிதி வழங்குகிறது. | நிறுவனங்களுக்கு நிதி வழங்குவதில்லை. |
| 4 | ஒரு பத்திரம் எத்தனை முறை விற்க முடியும்? | ஒரே ஒருமுறை | பலமுறை |
| 5 | வாங்குதல் மற்றும் விற்றல் | நிறுவனங்கள் மற்றும் முதலீட்டாளர்களுக்கு இடையே | முதலீட்டாளர்களுக்கு இடையே |
| 6 | பங்குகளை விற்பதன் மீதான ஆதாயம் பெறும் நபர் | நிறுவனம் | முதலீட்டாளர்கள் |
| 7 | இடைநிலையர் | ஒப்புறுதியாளர்கள் | தரகர்கள் |
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards