12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Standard Biology Zoology - Reproduction in Organisms Creative Questions Study Material - QB365 Set D
NEW12th Standard
TN 12th Standard Biology Zoology - Reproduction in Organisms Creative Questions Study Material - QB365 Set C
NEW12th Standard
TN 12th Standard Biology Zoology - Reproduction in Organisms Creative Questions Study Material - QB365 Set B
NEW12th Standard
TN 12th Standard Biology Zoology - Reproduction in Organisms Creative Questions Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Standard Physics Electronics and Communication Creative Questions Study Material - QB365 Set D
NEW12th Standard
TN 12th Standard Physics Electronics and Communication Creative Questions Study Material - QB365 Set C

Published on: 10/10/2019
குறியிலக்கு மேலாண்மை மற்றும் விதிவிலக்கு மேலாண்மை
12ஆம் வகுப்பு Commerce / வணிகவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Commerce / வணிகவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Commerce Test1.
விதிவிலக்கு மேலாண்மை முடிவுகளை நிர்ணயிக்கும் சிறந்த _________ விளங்குகிறது.
குறிக்கோளாக
இலக்குகளாக
திறவுகோலாக
அளவுகோலாக
2.
குறிக்கோள்களை அடைவதற்கு நிர்ணயிக்கப்பட்ட கால முடிவில், _________ மற்றும் _________ இடையே கலந்துரையாடல் நடைபெற வேண்டும்.
உயர்நிலை ஊழியர்கள்
கீழ்நிலை ஊழியர்கள்
இரண்டும்
பணியாளர்கள்
3.
4.
_________ உதவியால் அதிகாரப் பகிர்வு எளிதாகச் செய்யப்படுகிறது.
முதுகலை வணிக மேலாண்மை (MBM)
விதிவிலக்கு மேலாண்மை (MBE)
குறியிலக்கு மேலாண்மை (MBO)
முதுகலை வணிக நிர்வாகம் (MBA)
5.
________ முறை தனிப்பட்ட வலிமை மற்றும் பொறுப்பிற்கு முழு வடிவம் கொடுக்கிறது.
குறியிலக்கு மேலாண்மை
விதிவிலக்கு மேலாண்மை
முதுகலை வணிக மேலாண்மை
முதுகலை வணிக நிர்வாகம்
6.
ஏன் ஒரு அமைப்பின் குறிக்கோள்களை மறு ஆய்வு செய்ய வேண்டும்?
7.
முக்கிய முடிவு பகுதிகளுக்கு எடுத்துக்காட்டு தருக.
8.
முக்கிய முடிவுப் பகுதிகள் (KRA) என்பது என்ன?
9.
குறியிலக்கு மேலாண்மை என்றால் என்ன?
10.
குறியிலக்கு மேலாண்மையின் ஏதேனும் இரண்டு நன்மைகளைக் குறிப்பிடுக.
11.
விதிவிலக்கு மேலாண்மையின் பொருளை எடுத்துக்கூறுக.
12.
குறியிலக்கு மேலாண்மைக்கு வரைவிலக்கணம் தருக.
13.
ஜார்ஜ் ஓடியோர்ன் என்பவரின் குறியிலக்கு மேலாண்மை - வரைவிலக்கணம் தருக.
14.
குறியிலக்கு மேலாண்மையின் ஏதேனும் மூன்று செயல்முறைகளைப் பட்டியலிடுக.
15.
குறியிலக்கு மேலாண்மையில் ஈடுபட்டுள்ள செயல்முறைகள் யாவை?
16.
குறியிலக்கு மேலாண்மையின் இயல்புகளை எழுதுக.
17.
குறியிலக்கு மேலாண்மையின் இயல்புகள் யாவை?
18.
குறியிலக்கு மேலாண்மையின் பல்வேறு குறைபாடுகளை விளக்குக.
19.
விதிவிலக்கு மேலாண்மையின் நன்மைகள் என்ன? (ஏதேனும் 5)
20.
_________ என்பது மாறும் உலகத்தின் ஒரு பகுதியாகும்.
21.
_________ மேலாளர்களின் நேரத்தை சேமிக்கிறது.
22.
குறியிலக்கு மேலாண்மை அனுபவத்தின் அடிப்படையில் அணுகுமுறைகளை மாற்றி _________ அடையச் செய்கிறது.
23.
_________ என்பது ஒரு நிர்வாக முறையாகும்.
1.
(d)
அளவுகோலாக
2.
(c)
இரண்டும்
3.
(a)
4.
(c)
குறியிலக்கு மேலாண்மை (MBO)
5.
(a)
குறியிலக்கு மேலாண்மை
6.
1. அமைப்பு என்பது மாறும் உலகத்தின் ஒரு பகுதியாகும்.
2. நவீன வியாபார அமைப்பின் வாழ்வு மற்றும் வளர்ச்சியானது மாறிவரும் நிலைமைகளைப் பொறுத்தது. ஆகவே சூழ்நிலைக்கு ஏற்ப குறிக்கோள்கள் கட்டமைப்பு மறு ஆய்வு செய்யப்பட வேண்டும்.
7.
1. இலாபம்
2. சந்தை நிலவரம்
3. புதிய கண்டுபிடிப்புகள்
8.
முக்கிய முடிவு பகுதிகள்:
(i) அமைப்பின் குறிக்கோள்களின் அடிப்படையில் முக்கிய முடிவுப் பகுதிகள் நிர்ணயிக்கப்படுகின்றன.
(ii) முக்கிய முடிவுகள் பகுதிகள் (Key Result Area - KRA) முன்னுரிமை அடிப்படையில் அமைக்கப்படுகிறது.
(iii) முக்கிய முடிவுப் பகுதிகள் ஒரு அமைப்பின் வலிமையை குறிக்கிறது. இலாபம். சந்தை நிலவரம், புதிய கண்டுபிடிப்புகள் போன்றவை முக்கிய முடிவுப் பகுதிகளுக்கு உதாரணங்களாகும்.
9.
1. ஒரு அமைப்பில் உள்ள ஒவ்வொரு உறுப்பினரும் திறம்பட மற்றும் சுய ஈடுபாட்டுடன் பங்கு வகிக்கும் ஒரு நிர்வாக முறையே குறியிலக்கு மேலாண்மை ஆகும்.
2. குறியிலக்கு மேலாண்மையானது, நிறுவனத்தின் குறிக்கோள்களுடன் ஒரு தனி நபரின் குறிக்கோள்களை ஒன்றிணைத்துச் செல்கிறது.
10.
(i) குறியிலக்கு மேலாண்மையின் செயல்முறை மேலாளர்களுக்கு, ஒட்டு மொத்த அமைப்பில் தங்களது பங்கைப் புரிந்து கொள்ள உதவுகிறது.
(ii) திட்டமிடலுக்கான தேவையையும் மற்றும் திட்டமிடலுக்கான பாராட்டுதலையும் மேலாளர் அங்கீகரிக்கச் செய்கிறது.
11.
விதிவிலக்கு மேலாண்மை என்பது நெறிமுறையிலிருந்து விலகிப் போகும் நிகழ்வுகளை அடையாளம் காண்பதற்கும், கையாளுவதற்கும் கவனம் செலுத்துகின்ற வணிக நிர்வாகத்தின் ஒரு பாணியாகும்.
12.
பேராசிரியர் ரெட்டின் என்பவர் குறியிலக்கு மேலாண்மையை "மேலாண்மையின் நிலைப்பாடுகளுக்கு ஏற்ற தரநிலைகள் நிறுவுதல் மற்றும் அளவிடக்கூடிய காலக்கோடு இலக்குகள் கொண்ட கால இடைவெளியை செங்குத்தாகவும், கிடைமட்டமாகவும், எதிர்கால திட்டமிடலுடன் இணைத்துக்கொள்ளும் கால இடைவெளியைக் குறிக்கிறது" என வரையறுக்கிறார்.
13.
"குறியிலக்கு மேலாண்மை என்பது ஒரு நிர்வாக முறையாகும். ஒரு நிறுவனத்தின் உயர்நிலையில் மற்றும் கீழ்நிலையில் உள்ள மேலாளர்கள் கூட்டாக இணைந்து, அதன் பொதுவான குறிக்கோள்களை அடையாளம் கண்டு, எதிர்பார்க்கும் முடிவின் அடிப்படையில், ஒவ்வொரு நபரின் முக்கிய செயல் பகுதியின் பொறுப்புணர்வையும் அளவிட்டு, செயல் பகுதியின் உறுப்பினர்கள் ஒவ்வொருவரின் பங்களிப்பையும் மதிப்பிடுவது ஆகும்."
14.
1. அமைப்பின் குறிக்கோள்களை வரையறுத்தல்
2. ஒவ்வொரு பிரிவின் இலக்குகள்
3. முக்கிய முடிவு பகுதிகள்
4. கீழ்நிலை ஊழியர்களின் குறிக்கோள்களை அல்லது இலக்குகளை நிர்ணயித்தல்.
15.
1. அமைப்பின் குறிக்கோள்களை வரையறுத்தல்
2. ஒவ்வொரு பிரிவின் இலக்குகள்
3. முக்கிய முடிவுப் பகுதிகள்
4. கீழ்நிலை ஊழியர்களின் குறிக்கோள்களை நிர்ணயித்தல்
5. குறிக்கோள்களுடன் வளங்களை ஒப்புநோக்குதல்
6. காலவாரியான மறு ஆய்வுக் கூட்டம் கூட்டுதல்
7. செயல்பாடுகளை மறு ஆய்வுக் கூட்டம் கூட்டுதல்
16.
(i) குறுகிய கால இலக்குகளுடன் நிறுவனத்தின் நீண்டகால இலக்குகளை இணைக்க குறியிலக்கு மேலாண்மை முயற்சி செய்கிறது.
(ii) சமுதாய குறிக்கோள்களுடன் அமைப்பின் குறிக்கோள்களை தொடர்புபடுத்த முயற்சி செய்கிறது.
(iii) குறியிலக்கு மேலாண்மை இலக்குகளை மட்டும் அடையச் செய்வதல்ல, திறமையான செயல்திறனையும் அடையச் செய்கிறது.
(iv) இது அனைத்து நிலைகளிலும் இலக்குகளை அடைவதற்கான அமைப்பின் திறனை அதிகரிக்கச் செய்கிறது.
(v) குறியிலக்கு மேலாண்மை மூலம் ஊழியர்களுக்கு அதிகபட்ச ஊக்கம் மற்றும் திருப்தி கிடைக்கச் செய்கிறது.
17.
1. அமைப்பு மற்றும் தனி நபர்களின் குறிக்கோள்களை ஒருங்கிணைக்க நிர்வாகத்தால் ஒரு முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.
2. குறுகிய கால இலக்குகளுடன் நிறுவனத்தின் நீண்ட கால இலக்குகளை இணைக்க முயற்சி செய்கிறது.
3. சமுதாய குறிக்கோள்களுடன் அமைப்பின் குறிக்கோள்களை தொடர்புபடுத்த முயற்சி செய்கிறது.
4. குறியிலக்கு மேலாண்மை இலக்குகளை மட்டும் அடையச் செய்வதல்ல, திறமையான செயல்திறனையும் அடையச் செய்கிறது.
5. இது இலக்குகளை சீர்படுத்துவதற்கும், மாற்றுவதற்கும் மற்றும் மேம்படுத்துவதற்கும் நிலையான கவனத்தினை செலுத்துகிறது.
6. இது அனைத்து நிலைகளிலும் இலக்குகளை அடைவதற்கான அமைப்பின் திறனை அதிகரிக்கச் செய்கிறது.
7. குறியிலக்கு மேலாண்மை மூலம் ஊழியர்களுக்கு அதிகபட்ச ஊக்கம் மற்றும் திருப்தி கிடைக்கச் செய்கிறது.
8. இலக்கு அமைக்கும் செயல்பாட்டில் ஊழியர்களின் பங்களிப்பை அங்கீகரிக்கிறது.
9. நோக்கத்தை மாற்ற, அதிகாரத்துடன் இருப்பவர்களுடன் ஆலோசனைகள் செய்கின்றது.
10. நம்பிக்கை, நல்லெண்ணம் மற்றும் விருப்பத்திற்கு ஏற்ப செயல்படுவதற்குரிய ஒரு சூழலை ஊக்குவிக்கிறது.
18.
1. பெரும்பாலான செயல் நிர்வாகிகள் குறியிலக்கு மேலாண்மை என்பது என்ன? அது எவ்வாறு செயல்படுகிறது? அதன் தேவை? நன்மை? போன்ற கருத்துக்களில் குறியிலக்கு மேலாண்மை தனது தத்துவத்தை விளக்குவதில் தோல்வி அடைந்துள்ளது.
2. குறியிலக்கு மேலாண்மை என்பது அதிக நேரத்தை எடுத்துக்கொள்ளும் ஒரு முறையாகும். மேலும் அதிக செலவு மற்றும் அதிகமான காகித வேலை தேவைப்படுகிறது.
3. குறியிலக்கு மேலாண்மை குறுகிய கால குறிக்கோள்களை மட்டுமே வலியுறுத்துகிறது. நீண்ட கால குறிக்கோள்களை கருத்தில் கொள்வதில்லை.
4. கீழ்நிலை ஊழியர்களின் நிலை தகுந்த குறிக்கோள் அமைப்பிற்கு அவசியமாகிறது. ஆனால், குறியிலக்கு மேலாண்மையின் செயல்முறையில் இது சாத்தியம் இல்லை.
5. குறியிலக்கு மேலாண்மை திடமான ஒன்றாகும். சூழ்நிலைக்கு ஏற்றவாறு மாற்றப்பட வேண்டிய குறிக்கோள்கள் மாற்றியமைக்கப்பட வேண்டும். அவ்வாறு செய்யவில்லை என்றால், திட்டமிட்ட முடிவுகளைப் பெற முடியாது.
19.
விதிவிலக்கு மேலாண்மை பின்வரும் நன்மைகளை வழங்குகிறது.
(i) இது மேலாளர்களின் நேரத்தை சேமிக்கிறது. ஏனெனில் அவர்கள் விதிவிலக்கான செயல்களை மட்டுமே கையாளுவார்கள். வழக்கமான பிரச்சினைகள், கீழ்நிலை ஊழியர்களின் வசம் விடப்படுகின்றன.
(ii) இது முக்கிய பிரச்சினைகளை நிர்வகிப்பதில் கவனங்களைச் செலுத்துகிறது.
(iii) இது அதிகாரப் பகிர்வினை எளிமையாக்குகிறது. மேல் நிர்வாகம் பெருந் திட்ட முடிவுகளில் கவனம் செலுத்துகிறது மற்றும் செயல்திறன் முடிவுகள் கீழ்நிலை நிர்வாகத்திற்கு விடப்படுகின்றன.
(iv) இது முக்கியமல்லாத தகவலில் இருந்து முக்கியமான தகவலைப் பிரிக்கும் ஒரு தொழில் நுட்பமாகும்.
(v) முக்கியமான சிக்கல்களைக் கண்டறிவதன் மூலம் வாய்ப்புகளையும் அச்சுறுத்தல்களையும் மேலாண்மை எச்சரிக்கையாக வைத்திருக்க விதிவிலக்கு மேலாண்மை உதவுகிறது.
(vi) விதிவிலக்கு மேலாண்மை முடிவுகளை நிர்ணயிக்கும் சிறந்த அளவுகோலாக விளங்குகிறது. இது குறிக்கோள் செயல்திறன் மதிப்பீட்டில் பயனுள்ளதாக உள்ளது.
20.
( )
அமைப்பு
21.
( )
விதிவிலக்கு மேலாண்மை
22.
( )
இலக்கை
23.
( )
குறியிலக்கு மேலாண்மை
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Standard Physics Electronics and Communication Creative Questions Study Material - QB365 Set B
NEW12th Standard
TN 12th Standard Physics Electronics and Communication Creative Questions Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Standard Physics Wave Optics Creative Questions Study Material - QB365 Set D
NEW12th Standard
TN 12th Standard Physics Wave Optics Creative Questions Study Material - QB365 Set C
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards