12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 27/09/2019
அடோப் இன்டிசைன் CC 2019
12ஆம் வகுப்பு Computer Technology / கணினி தொழில்நுட்பம் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Computer Technology / கணினி தொழில்நுட்பம் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Computer Technology Test

1.
ஒரு பொருளின் வெளிப்புறக் கோட்டில் இடப்படும் வண்ணம் ………
எல்லை (stroke)
நிரப்பு (fill)
out – color
paint
2.
ஒரு பொருளின் உள்ளே இடப்படும் வண்ணம் ………
நிரப்பு (fill)
எல்லை (stroke)
paint
In – color
3.
ஒரு பக்கத்தில் இடம்பெரும் உரைப்பகுதி அல்லது உறுப்பு ………
வரைகலை (Graphics)
திசையன் (vector)
scalar
ஒவ்வொன்றும் வரையாக இருக்கும்
4.
………என்பது InDesign னுள்ள அனைத்து கருவிகளையும் கொண்டுள்ள பெட்டியாகும்.
கருவி பலகம்
காட்டுப்பாட்டுப் பலகம்
கொள்கலன்
இல்லை
5.
ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட சட்டங்களை ஆக்கிரமித்திடுக்கும் தொடர்ச்சியான உரை……….
கதை (story)
பத்தி (paragraph)
பொருள் (object)
தட்டு (plate)
6.
Fit spread in window
7.
Fit page in window
8.
Actual size
9.
Zoom out
10.
Zoom in
11.
பத்தியில் எண் வரிசை மற்றும் புல்லட் குறியீடு உருவாக்க உதவும் படிநிலையை எழுதுக
12.
Zooming என்பது என்ன?
13.
Tooltip எப்போது தோன்றும்?
14.
InDesign ஆவண சன்னல் திரையில் எது அவசியமானது?
15.
Adobe InDesign என்ன மென்பொருள்?
16.
கருவி பலகத்திலுள்ள வரைபட சட்டங்கள் எத்தனை? அவை யாவை?
17.
எழுத்துக்களை மேலொட்டு அல்லது கீழோட்டு என எவ்வாறு மாற்றுவாய்?
18.
InDesign -ல் உள்ள View கட்டளைகள் யாவை?
19.
கருவி பலகத்தில் (Tools panel) உள்ள ஏதேனும் 3 கருவிகளை பற்றி எழுதுக
20.
கருவி பலகத்தை ( Tools panel ) பற்றி விரிவாக விளக்கவும்
21.
ஆவணத்தில் உரையினை வைக்க படிநிலைகளை எழுதுக
22.
பாதையில் ஒரு வகையினை உருவாக்க படிநிலைகளை எழுதுக
23.
InDesign-ல் புதிய ஆவணத்தை உருவாக்குவதற்கான படிநிலைகளை எழுதுக
1.
(a)
எல்லை (stroke)
2.
(a)
நிரப்பு (fill)
3.
(a)
வரைகலை (Graphics)
4.
(a)
கருவி பலகம்
5.
(a)
கதை (story)
6.
சன்னல் திரையில் இலக்கு பரவலை காண்பிக்க
7.
சாளரத்தின் அளவை, திரையின் அளவிற்கு பொருத்துவதற்காக அளவிடுதல்.
8.
ஆவணத்தை 100% சதவிதம் காண்பிக்க
9.
முந்தைய முன் வடிவமைக்கப்பட்ட சதவிதத்தை குறைத்தல் மற்றும் திரும்பப்பெறல்
10.
அடுத்த முன்வடிவமைக்கப்பட்ட சதவிதத்திற்கு உருப்பெருக்க செய்ய
11.
i) புல்லட்டுகள் ( அ ) எண்கள் சேர்க்க விரும்பும் பத்தியை தேர்ந்தெடுக்கவும் .
ii) Type --->Bulleted & Numbered lists யைத் தேர்ந்தெடுக்கவும் .பிறகு Apply bullets (அ )Apply Numbers ஐ கிளிக் செய்யவும்.
Bullets and Numbering உரையாடல் பெட்டியில் இறுதியாக பயன்படுத்திய அமைப்பை உரைக்கு செயல்படுத்தப்படும்.
12.
பெரிதாக்கல் (Zooming ) :
InDesign-ல் உள்ள சில பணிகளுக்கு, ஒரு பொருளை அல்லது பொருளின் ஒரு பகுதியை உயர் உருப்பெருக்கம் அல்லது பெரிதாக்குதல் மூலம் பார்வையிடுதல் தேவைப்படுகிறது.
ஒரு ஆவணத்தில் உள்ள ஒரு பொருளை பெரிதாக்கி (Zoom in) உற்று நோக்க பெரிதாக்குதல் அனுமதிக்கிறது. அந்தப் பொருளை (Zoom out) சிறியதாக்கி விலகிச் சென்று பார்க்க சிறிதாக்குதல் பயன்படுகிறது.
ஆவணத்திலுள்ள எந்த பொருளையும் விரைவாக பெரிதாக்கல் ( அ ) பொருளை மிக அருகில் கொண்டு வருதல்.
13.
கருவிப்பலகத்தில் கிளிக் செய்யாமல் ஏதேனும் ஒரு கருவியின் மீது செருகும் புள்ளியை வைக்கும் பொழுது Tooltip தோன்றும்.
14.
(i) முதல் முறையாக InDesign ஐ - தொடங்கும் போது தானமைவாக இடம் பெறும் பணித்தளம் " Essentials " எனப்படும்
(ii) இது மேலே கட்டுப்பாட்டுப் பலகம் , இடப்புறம் கருவிப்பலகம் ஆகியவற்றுடன் InDesign சன்னல் திரையில் தோன்றும் .
15.
(i) InDesign என்பது பக்க வடிவ அமைவு மென்பொருள் நிரலாகும்.
(ii) ஆவணப் பக்கங்களில் உரை மற்றும் வரைகலையின் நிலைப்பாட்டை எளியதாக்க அனுமதிக்கும் கருவிகளை பக்க அமைவு மென்பொருள் கொண்டுள்ளது. எடுத்துக்காட்டாக, InDesign-ஐப் பயன்படுத்தி, ஒவ்வொரு பக்கத்திலும் கட்டுரைகள் (articles) மற்றும் படங்களை உள்ளடக்கிய செய்திமடலை (Newsletter) நீ உருவாக்கலாம்.
(iii) வடிவமைப்பிற்கும் மற்றும் வலையில் அச்சிடுவதற்கு ( அ ) பயன்படுத்துவதற்கான ஆவணங்களை உருவாக்குவதற்கும் பயன்படுகிறது.
16.
வரைகலை சட்டங்களை வரைவதற்கு கருவிகள் பலகம் மூன்று கருவிகளை கொண்டுள்ளது .
1.Ellipse சட்டகம் - நீள்வட்ட மற்றும் வட்ட சட்டங்களை உருவாக்கலாம்.
2.Rectangle சட்டகம் - செவ்வக மற்றும் சதுர சட்டங்களை உருவாக்கலாம் .
3.Polygon சட்டகம் - சமபக்க பலகோண சட்டங்களை உருவாக்கலாம் .
17.
1. கீழொட்டு அல்லது மேலோட்டாக மாற்றப்படவேண்டிய எழுத்தை தேர்ந்தெடுக்கவும் .
2.கட்டுப்பாட்டுத் தட்டில் உள்ள ஏதேனும் ஒரு பொத்தானை கிளிக் செய்யவும்
மேலோட்டு
கீழொட்டு
3. தேர்வு செய்யப்பட்ட எழுத்து தேவைப்படும் படி மாறும்.
18.
1. பெரிதாக்குதல் (Zoom in)
2. சிறிதாக்குதல் (Zoom Out)
3. Actual Size
4. Fill page in window
5. Fit spread in window
6. Entire pasteboard
19.
1. தேர்ந்தெடுப்புக் கருவி :
இது பொருட்களை அல்லது பொருட்களின் தொகுதியை தேர்ந்தெடுக்க பயன்படுகிறது. V என்ற பொத்தானை அழுத்தி இந்தக் கருவியை தேர்ந்தெடுக்கலாம்.
2. நேரடி தேர்வு கருவி( Direct selection tool ) :
இது ஒரு குழுவில் இருந்து ஒரே ஒரு பொருளை தேர்ந்தெடுக்க உதவுகிறது . (A வை அழுத்தவும்) உதவுகிறது.
(Group கட்டளை மூலம் பல்வேறு தனித்தனி பொருள்கள் குழுவாக சேர்ந்துள்ளன). அல்லது ஒரு பொருளின் பாதையில் ஒன்று அல்லது பல புள்ளிகளைத் தேர்ந்தெடுக்கிறது
3. இடைவெளி கருவி (Gap tool ) :
இந்த இடைவெளிக்கருவி (Gap tool) பொருள்களுக்கு இடையே உள்ள இடைவெளியை சரிசெய்யப் பயன்படுகிறது. இந்தக் கருவியைத் தேர்ந்தெடுக்க U என்ற பொத்தானை அழுத்தவும்.
20.
InDesign-ல் இருக்கும் அனைத்து கருவிகளும் இந்த கருவிகள் பலகத்தில் இருக்கின்றன. பொருளை உருவாக்கும் கருவிகள் (Rectangle கருவி) பொருளை உருமாற்றும் (Transforming) கருவிகள் (Rotate கருவி), பக்க காட்சியை மாற்றுதல் மற்றும் பணித்தளத்திற்கு செல்லுதல் கருவிகள் (Zoom கருவி மற்றும் Hand கருவி) ஆகிய கருவிகள் உள்ளன. சில கருவிகளின் கீழ் வலது மூலையில் ஒரு சிறிய முக்கோணம் இருக்கும். மேலும் கூடுதலான கருவிகள் அந்த கருவியின் கீழ் உள்ளன. என்பதை இந்த முக்கோணம் குறிக்கும். கிளிக் செய்து அழுத்தி பிடிப்பதன் மூலம் மறைந்திருக்கும் கருவிகளைக் காணலாம்.
கருவிப்பலகமானது.
1. தேர்ந்தெடுப்புக் கருவிகள்
2. அடிப்படை வடிவங்களை வரைவதற்கான கருவிகள்
3. வரைதல் மற்றும் புதுப்பித்தல் கருவிகள்
4. பரிமாற்றம் கருவிகள்
5. உரை பதிப்பித்தல் கருவிகள்
6. நகர்தல் கருவிகள்
7. பொருள் வடிவமைப்பு கருவிகள் , போன்றவற்றை கொண்டுள்ளது தானமைவாகக் கருவிப்பலகம் , கட்டுப்பாடுப் பலகத்திற்கு கீழே உள்ளது .ஆவண சன்னலின் இடது புறம் உள்ள கருவி பலகத்தில் அனைத்து கருவிகளும் காணப்படும் .
21.
1. பட்டிப்பட்டையில் இருந்து File → Place ஐ தேர்வு செய்யவும்.
2. Place உரையாடல் பெட்டி தோன்றும்.
3. இருத்தப்பட வேண்டிய உரைக் கோப்பை தேர்வு செய்து Place உரையாடல் பெட்டியின் வலது பக்கத்தில் உள்ள Open பொத்தானைக் கிளிக் செய்யவும்.
4. செருகும் புள்ளி செறிவூட்டப்பட்ட உரை செருகும் புள்ளியாக மாறுகிறது. ஆவணத்தில் உரை செருகுவதற்குத் தயாராக உள்ளது என்பதைத் தெரிவிக்கிறது.
5. உரையை இருத்துவதற்கு கிளிக் செய்யவும் (அ) புதிய உரைச் சட்டகத்தை உருவாக்குவதற்கு கிளிக் செய்து இழுக்கவும்.
6. உரையை உரைச்சட்டகத்தில் இருத்த முடியவில்லை எனில், ஒரு சிவப்பு + குறியானது. உரைசட்டகத்தின் கீழ் வலது எல்லையில் Overflow குறியீடாகத் தோன்றும்.
7. இந்த Overflow குறியீட்டை கிளிக் செய்தால் மீதமுள்ள உரை செருகும் புள்ளியில், கூடுதல் உரைச் சட்டகத்தில் உரையைச் சேர்ப்பதற்காக ஏற்றப்படுகிறது. உரையானது கிளிக் செய்யும் பொழுது இருத்தப்படும்.
22.
1. கருவிப் பலகத்தில் பாதைக் கருவியில் உள்ள தட்டச்சை தேர்வு செய்யவும்.
2. தட்டச்சை சேர்க்க பாதையின் விளிம்பில் கிளிக் செய்யவும். (திறந்து அல்லது மூடி) உரைச் சட்டகத்தில் ஒரு ஒளிரும் செருகும் புள்ளி தோன்றும். பொருளில் எல்லை நீக்கப்படும்.
3. ஏதேனும் ஒரு உரையைத் தட்டச்சு செய்யவும். உரை தானாகவே மடிந்து உரைச் சட்டகத்திற்கு ஏற்றவாறு அமையும்.
4. பொருளின் விளிம்பில் தட்டச்சு தோன்றும். எல்லைகளை நீக்கிவிட்டு அதன் வடிவத்தில் உறுதியாக அமைகிறது.
5. Overflow குறியீடு தோன்றினால் உரைச் சட்டகத்தின் தேர்வை நீக்கி, தேர்வுக் கருவியை கருவிப் பலகத்தில் இருந்து தேர்வு செய்து உரைச் சட்டகத்தில் ஒரு மூலையில் இழுக்கவும்.
6. தேர்வுக்கருவியை தேர்வு செய்யவும் (அ) தட்டச்சு கருவியை மீண்டும் தேர்வு செய்யவும்.
23.
1.Start - > All programs - > Adobe InDesign CC 2019 என்பதை தேர்வு செய்யவும் . ( அ ) InDesign திரைமுகப்பில் உள்ள குறுக்கு வழியைத் தேர்வு செய்யவும் .
2."Welcome to InDesign " என்ற சன்னல் திரை திறக்கப்படும் .இப்பொழுது Create New பொத்தானைக் கிளிக் செய்யவும் .
3.இப்பொழுது New Document window புதிய ஆவண சன்னல் திறக்கப்படும் .
4.புதிய ஆவணத்தில் அடிப்படை தேர்வுகளை பொருத்துவதற்கு New Document உரையாடல் பெட்டியில்
Category தத்தலில் உள்ள Print , Web (அ) Mobile - ஐ தேர்வு செய்யவும் .
5.Width and Height , orientation , Pages , Start , Columns போன்ற தேர்வுகளை ஏற்கனவே தேர்வுசெய்யப்பட்ட தொகுதியில் குறிப்பிடவும்.
6.முன்பே இருத்தப்பட்ட அமைப்புகளோடு ஆவணத்தை திறக்க Create பொத்தானைக் கிளிக் செய்யவும்.
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards