12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Economics புள்ளியியல் முறைகளும் பொருளாதார அளவையியலும் ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Economics பொருளாதார மேம்பாடும் திட்டமிடலும் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Economics சுற்றுச்சூழல் பொருளியல் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Economics நிதிப் பொருளியல் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Economics பன்னாட்டுப் பொருளாதார அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Economics பன்னாட்டுப் பொருளியல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 27/07/2019
வேலைவாய்ப்பு மற்றும் வருமான கோட்பாடுகள்
12ஆம் வகுப்பு Economics / பொருளியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Economics / பொருளியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Economics Test

1.
ஒரு பொருளாதாரத்தில்________ இயக்கத்தை சே(Say) யின் விதி வலியுறுத்தியது.
தூண்டப்பட்ட விலைக் கருவி
தானியங்கும் விலைக் கருவி
தூண்டப்பட்ட தேவை
தூண்டப்பட்ட முதலீடு
2.
கீன்சின் கோட்பாட்டில், பணத்திற்கான தேவையையும் பணத்தின் அளிப்பையும் நிர்ணயிப்பது_________ ஆகும்.
வட்டி வீதம்
விளைவுத் தேவை
தொகுத் தேவை
தொகு அளிப்பு
3.
தொன்மைக் கோட்பாட்டின்படி, வட்டி வீதம் _______________ க்கான வெகுமதி
முதலீடு
தேவை
மூலதனம்
சேமிப்பு
4.
_________ சமநிலையை கீன்சுடைய கோட்பாடு வலியுறுத்தியது.
மிகக்குறுகிய காலச்
குறுகிய காலச்
மிக நீண்ட காலச்
நீண்ட காலச்
5.
தொன்மைக் கோட்பாடு _______ ஐ ஆதரிக்கிறது.
சமநிலை வரவு செலவு
சமமற்ற வரவு செலவு
உபரி வரவு செலவு
பற்றாக்குறை வரவு செலவு
6.
J.P சே ஒரு ________
புதிய-தொன்மை பொருளியலாளர்
தொன்மை பொருளியலாளர்
நவீன பொருளியலாளர்
புதிய பொருளியலாளர்
7.
தொன்மைப் பொருளியல் கோட்பாட்டின் முதன்மையான இயல்பு _________
குறைந்த அளவு வேலைவாய்ப்பு
பொருளாதாரம் எப்போதும் சம நிலையில் இருக்கும்.
தேவை அதன் அளிப்பை உருவாக்குகின்றது
நிறை குறை போட்டி
8.
மறைமுக வேலையின்மையில் உழைப்பாளியின் இறுதிநிலை உற்பத்தி
சுழியம்
ஒன்று
இரண்டு
நேர்மறை
9.
அமைப்புசார் வேலையின்மையின் இயல்பு________
இயங்கா சமுதாயம்
சமதர்ம சமுதாயம்
இயங்கும் சமுதாயம்
கலப்புப் பொருளாதாரம்
10.
நடப்புக்கூலி விகிதத்தில் வேலைசெய்ய விரும்புகிற ஒவ்வொருவரும் பணியில் இருந்தால் அது ________ எனப்படும்.
முழுவேலை வாய்ப்பு
குறைந்தளவு வேலைவாய்ப்பு
வேலைவாய்ப்பினை
வேலைக்கான வாய்ப்பு
11.
தொகு அளிப்பின் கூறுகள் யாவை?
12.
"விளைவுத் தேவை" என்றால் என்ன?
13.
'சே' விதியின் எடுகோள்களைப் பட்டியலிடுக.
14.
15.
உடன்பாடில்லா (Frictional) வேலையின்மை பற்றி சிறு குறிப்பு வரைக.
16.
தொன்மையியத்தையும் கீன்சியத்தையும் ஒப்பிடுக.(ஏதேனும் ஐந்து)
17.
தொகு அளிப்பை வரைபடம் மூலம் விளக்குக
18.
தொகு தேவை என்றால் என்ன? அதன் கூறுகளைக் கூறுக
19.
கீன்சின் கோட்பாட்டை விளக்குக.
20.
J.B. சே விதியில் விளைவுகளைப் பற்றி குறிப்பு வரைக.
21.
22.
ADF, ASF க்கு இடையிலான சமநிலையை வரைபடம் மூலம் விவரி.
23.
வேலையின்மைகளின் வகைகளை விவரி.
1.
(b)
தானியங்கும் விலைக் கருவி
2.
(a)
வட்டி வீதம்
3.
(d)
சேமிப்பு
4.
(b)
குறுகிய காலச்
5.
(a)
சமநிலை வரவு செலவு
6.
(b)
தொன்மை பொருளியலாளர்
7.
(b)
பொருளாதாரம் எப்போதும் சம நிலையில் இருக்கும்.
8.
(a)
சுழியம்
9.
(c)
இயங்கும் சமுதாயம்
10.
(a)
முழுவேலை வாய்ப்பு
11.
தொகு அளிப்பின் நான்கு கூறுகளாவன :
1. மொத்த (விரும்பப்படுகிற) நுகர்வுச் செலவு (C)
2. மொத்த (விரும்பப்படுகிற) தனியார் சேமிப்பு (S)
3. நிகர வரிவசூல் (T)
4. தனிமனிதர் (விரும்பப்படுகிற) வெளிநாட்டவர்க்கு (உறவினர் மற்றும் நண்பர்கள்) கொடுக்கின்ற மாற்று செலுத்தல்கள், உதவித்தொகை ஆகியவை. இது Rf (வெளிநாட்டிற்கு வழங்கிய நிவாரண தொகை) என குறிக்கப்படுகிறது.
12.
விளைவுத் தேவை என்பது உற்பத்தி செய்யப்பட்ட பொருள்களின் மீது உண்மையிலேயே செலவு செய்கிற பணத்தின் அளவு ஆகும்.
13.
1. ஒரு தனி வாங்குபவரோ, விற்பவரோ அல்லது உள்ளீடு பொருளோ விலையை மாற்ற முடியாது.
2. முழு வேலை நிலை நிலவும்.
3. உழைப்பு, பண்டங்கள் ஆகியவற்றின் அங்காடியில் நிறைவுப் போட்டி நிலவும்.
14.
15.
1. உழைப்பாளர்களின் தேவை மற்றும் அளிப்பில் சமநிலையற்ற தன்மை நிலவுவதால் தற்காலிக அல்லது பிறழ்ச்சி வேலையின்மை ஏற்படுகிறது.
2. உழைப்பாளர்கள் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு இடம்பெயராமை, திறமைப் பற்றாக்குறை, இயந்திரங்களில் பழுது ஏற்படுதல், மூலப்பொருட்கள் பற்றாக்குறை முதலான காரணங்களால் உடன்பாடில்லா (பிறழ்ச்சி) வேலையின்மை ஏற்படுகிறது.
16.
| வ. எண் | கீன்ஸியம் | தொன்மையியம் |
| 1. | குறுகிய காலச் சமநிலை | நீண்ட காலச் சமநிலை |
| 2. | சேமிப்பு கெடுதல் | சேமிப்பு நல்லது |
| 3. | பணத்தின் பணி என்பது பரிமாற்றத்திற்கும், சேமிப்பிற்கும் உதவும் | பரிவர்த்தனைக்கு மட்டுமே பணம் உதவும் |
| 4. |
நாட்டின் சிக்கல்களைத் தீர்க்க பேரியல் அணுகுமுறை தேவை. |
நுண்ணியல் அடிப்படையில் பெரிய சிக்கல்களுக்கு தீர்வு காணுதல். |
| 5. | அரசின் தலையீடு உண்டு | தலையிடாக் கொள்கை வலியுறுத்தப்படுகிறது |
| 6. | வட்டி வீதம் மாறிக் கொண்டே உள்ளது. | வட்டி வீதம் மாறாதது. |
17.
1. ஒரு நாட்டில் ஓர் ஆண்டில் உற்பத்தி செய்யப்பட்ட பண்டங்கள், பணிகளின் தொகு மதிப்பே தொகு அளிப்பு எனப்படும்.
2. தொகு அளிப்புச் சார்பானது வேலைவாய்ப்பு அளவோடு சேர்ந்து அதிகரிக்கும்.
3. தொகு அளிப்பு என்பது தேவையான உற்பத்தியை நாட்டில் அதிகரிப்பதற்கு பயன்படுத்தப்படும் தேவையான உழைப்பாளர்களின் எண்ணிக்கை மற்றும் பிற பண்டங்கள் பயன்படுத்துவதைக் குறிக்கும்.
= C+S+T+Rf
4. வரைபடம் வேலைவாய்ப்புக்கும், எதிர்பார்க்கும் வருமானத்திற்கும் உள்ள தொடர்பை விளக்குகிறது.
5. சுழியத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்ட Z நேர்கோடு என்பது பணக்கூலி மாறாமல் இருக்கும்போது உள்ள நிலையையும் மற்றொரு (Z₁) வேலைவாய்ப்பைப் பொருத்து பணக்கூலி மாறும் போது உள்ள நிலையையும் விளக்குகின்றன.
6. Z கோடு நேர்கோடாகவும், Z1, கோடு குறிப்பிட்ட நிலைக்கு பிறகு வளைகோடாகவும் இருக்கிறது.
7. ONf அளவில் பொருளாதாரம் முழுவேலை நிலையை அடைகிறது. அதற்குப் பின்பு உழைப்பினை அதிகப்படுத்தி உற்பத்தியை அதிகப்படுத்த இயலாது.
8. எனவே, Nf க்குப் பின்னர், தொகு அளிப்புக் கோடு செங்குத்தாக நெகிழ்வற்றதாக உள்ளது.
18.
உழைப்பாளர்களைப் பயன்படுத்தி உற்பத்தி செய்யப்பட்டப் பண்டங்களை விற்பதால் எவ்வளவு வருவாய் கிடைக்கும் என்று தொழில் முனைவோர்கள் எதிர்பார்க்கிறார்களோ அதுவே மொத்த தேவையாகும்.
தொகு தேவையின் நான்கு பகுதிகளைக் (உட்கூறுகளை) கொண்டது :
2. முதலீட்டுத் தேவை
3. அரசுச் செலவு
4. நிகர ஏற்றுமதி - இறக்குமதி (Export - Import)
5. தொகு தேவையின் சூத்திரம் :
AD = C+I+G+(X-M)
19.
1. புதியப் பொருளாதாரக் கோட்பாடுகளின் வளர்ச்சியில், கீன்சு எழுதிய புத்தகமான "வேலைவாய்ப்பு, வட்டி, பணம் பற்றிய பொதுக்கோட்பாடு." ஒரு திருப்புமுனையாக இருக்கிறது.
2. கீன்சின் கோட்பாடு, முழு வேலைவாய்ப்பு கருத்தை மட்டும் விளக்காமல், குறைந்த வேலை நிலைக்கும் வாய்ப்பு இருப்பதை சுட்டுக்காட்டுகிறது.
3. கீன்சின் கோட்பாடு ஒரு பொதுக் கோட்பாடாகவேத் திகழ்ந்தது. இது எல்லா வகைச் சூழ்நிலைகளுக்கும் பொருந்துவதாக இருக்கிறது.
4. கீன்சின் கருத்துகள் குறுகிய காலத்தை அடிப்படையாகக் கொண்டு இருந்தன.
5. அவரது கருத்துப்படி, வேலைவாய்ப்பின் அளவு நிர்ணயிக்கப்படும் போது உற்பத்திக் காரணிகளான மூலதனம், உழைப்பு, திறன், தொழில்நுட்பம் ஆகியவை மாறாமலேயே இருக்கும்.
20.
சே விதியின் விளைவுகள்:
1. அதிக உற்பத்திக்கோ. வேலையின்மைக்கோ வாய்ப்பில்லை.
2. பயன்படுத்தாத வளங்கள் நாட்டில் இருந்தால், முழு வேலை வாய்ப்பு வரை அவற்றைப் பயன்படுத்துவது
3. இலாபகரமாக இருக்கும். உற்பத்திக் காரணிகள் அவற்றின் உற்பத்தித் திறனுக்குச் சமமாக ஊதியங்களையும் ஏற்றுக் கொள்ளும்.
4. விலைக் கருவி தானாக இயங்குவதால் அங்கு அரசின் தலையீடு தேவையிருக்காது.
5. வட்டி வீத நெகிழ்வுத்தன்மை, சேமிப்பிற்கும் முதலீட்டிற்கும் சமநிலையை உருவாக்கும்.
6. பரிவர்த்தனைக்கு மட்டுமே பணம் செயல்படும். பணத்தை மக்கள் கையிருப்பாக வைத்திருக்கமாட்டார்கள்.
21.
22.
கீன்ஸின் வேலைவாய்ப்புக்கோட்பாட்டில் ADF & ASF சமநிலையை விளக்க, குடும்பங்கள் மற்றும் வியாபாரம் ஆகிய இரு துறைகள் எடுத்துக்கொள்ளப்படுகிறது.
1. நுகர்வு செலவு தொடர்பான முடிவுகளை குடும்பங்களும், முதலீடு தொடர்பான முடிவுகளை வியாபார நிறுவனங்களும் எடுக்கின்றன.
2. மேலும் நுகர்வுச் சார்பு நேர்கோடாகவும், முதலீடு தன்னிச்சையானது எனவும் கீன்சின் கோட்பாடு ஊகிக்கிறது.
கீன்சின் கோட்பாட்டில் வருமான சமநிலையை நிர்ணயிக்க இரு அணுகுமுறைகள் பயன்படுத்தப்படுகின்றன.
i. தொகு தேவை, தொகு அளிப்பு அணுகுமுறை.
ii. சேமிப்பு, முதலீடு அணுகுமுறை. மொத்த தேவை, மொத்த அளிப்பு அணுகுமுறை இவ்வரைபடத்தில் விளக்கப்பட்டுள்ளது.
3. தொகு தேவையும், தொகு அளிப்பு 'E' எனும் புள்ளியில் சமநிலை அடைகின்றன.
4. இப்புள்ளியில் வேலைவாய்ப்பு No ஆக இருக்கும். ON1 அளவு வேலைவாய்ப்பில், தொகு அளிப்பு N1 R1 ஆக இருக்கும் ஆனால் M1N2 அளவு உற்பத்தி செய்ய உற்பத்தியாளர்களால் முடியும்.
5. எதிர்பார்க்கும் இலாபத்தை அடைய வேண்டிய உற்பத்தியின் அளவு M1R1 ஆகும்.
6. இந்த இலாப நிலையில் முதலாளி அதிக உழைப்பாளர்களை வேலைக்கு அமர்த்துவார்.
7. சமநிலை 'E' என்ற புள்ளியை அடைந்த பிறகு உழைப்பாளர்களை வேலைக்கு அமர்த்துவதை நிறுத்துவார். ஏனெனில் No நிலைக்குப் பிறகு வேலைவாய்ப்பு அதிகரித்தால் தொகு தேவை, தொகு அளிப்பை விடக் குறைவாக இருக்கும்.
9. ஆகவே வேலைச் சமநிலையை விளக்குவதில் விளைவுத்தேவைக் கருத்து முக்கியப் பங்கு வகுக்கிறது.
23.
வேலையின்மை என்பது நல்ல உடல் நலம் உள்ள தனிமனிதர்கள், நிலவுகின்ற கூலி விகிதத்தில் வேலை செய்யத்தயாராக இருப்பவர்கள் அனைவருக்கும். தகுந்த வேலையில்லாத சூழ்நிலை வேலையின்மை ஆகும்.
வணிகச் சுழல் வேலையின்மை:
கீழ்நோக்கிய பகுதியில் ஒரு பொருளாதாரம் இருக்கும் போது நிகழ்கின்ற வேலையின்மைக்கு சுழல் வேலையின்மை என்று பெயர்.
பருவகால வேலையின்மை:
ஓர் ஆண்டில் சில காலங்களில் மட்டும் நிலவும், வேலையின்மைக்கு பருவகால வேலையின்மை என்று பெயர். வேளாண்மை, வேளாண்மை சார்ந்த தொழில்கள் கரும்பு, பருத்தி முதலானவை குறிப்பிட்ட பருவத்தில் மட்டும் நடைபெறும்.
தற்காலிக அல்லது உடன்பாடில்லா (பிறழ்ச்சி) வேலையின்மை :
உழைப்பாளர்களின் தேவை மற்றும் அளிப்பில் சமநிலையற்ற தன்மை நிலவுவதால் தற்காலிக அல்லது பிறழ்ச்சி வேலையின்மை ஏற்படுகிறது.
கற்றோர் வேலையின்மை :
சில நேரங்களில் படித்துக் கல்வித் தகுதி பெற்றவர்களுக்கு வேலை கிடைப்பது இல்லை. அல்லது பகுதி நேர வேலை செய்கின்றனர். இத்தகைய வேலையின்மைக்கு கற்றோர் வேலையின்மை என்று பெயர்.
தொழில் நுட்ப வேலையின்மை :
புதிய தொழில்நுட்பம், மூலதன செறிவு உடையதாக இருப்பதால், குறைந்த எண்ணிக்கையில் உழைப்பாளர்கள் தேவைப்படுகின்றனர்.
அமைப்புசார் வேலையின்மை :
1. சமூக அமைப்பில் ஏற்படும் பெரிய மாற்றங்களால் அமைப்புசார் வேலையின்மை உருவாகிறது.
2. ஒரு பொருளுக்கான தேவை குறைதல் (eg. Type Machine, Tape recorder, Radio, Camera etc) அல்லது பிற பொருள்களின் தேவை அதிகரித்தல், இடு பொருட்கள் இன்மை, முதலீடு பற்றாக்குறை ஆகியவையும் இவ்வகை வேலையின்மைக்குக் காரணமாகிறது.
மறைமுக வேலையின்மை :
தேவைக்கு அதிகமானவர்கள் ஒரு வேலையில் இருந்தால் அது மறைமுக வேலையின்மையாகும்.
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Economics வங்கியியல் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Economics பணவியல் பொருளியல் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Economics நுகர்வு சார்பும் முதலீடு சார்பும் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Economics வேலைவாய்ப்பும் வருமான கோட்பாடுகளும் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards