12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 04/09/2019
நுகர்வு மற்றும் முதலீடு சார்புகள்
12ஆம் வகுப்பு Economics / பொருளியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Economics / பொருளியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Economics Test

1.
முடுக்கி - வரையறு.
2.
சராசரி சேமிப்பு நாட்டம் (APS) - வரையறு.
3.
இறுதி நிலை நுகர்வு நாட்டம் (MPC) - வரையறு
4.
சராசரி நுகர்வு நாட்டம் (APC) - வரையறு
5.
நுகர்வுச் சார்பு என்றால் என்ன?
6.
மிகைப் பெருக்கி - விளக்குக.
7.
தன்னிச்சையான முதலீடு, தூண்டப்படுகிற முதலீடு ஆகியவற்றை வேறுபடுத்துக.
8.
முடுக்கி இயங்கும் விதத்தினை விவரி.
9.
நுகர்வுச் சார்பின் அக மற்றும் புறக் காரணிகளை விளக்குக.
10.
MEC என்ற கருத்துருவை அறிமுகப்படுத்தியவர் யார்?
ஆடம் ஸ்மித்
J.M. கீன்ஸ்
ரிகார்டோ
மால்தஸ்
11.
_______ இடம்பெயர்ந்த பின்னர் _______ எவ்வளவு மாறுகிறது என்பதை பெருக்கி கூறுகிறது.
வருவாய், நுகர்வு
வெளியீடு, முதலீடு
முதலீடு, சேமிப்பு
மொத்த தேவை, உற்பத்தி
12.
இறுதி நிலை நுகர்வு விருப்பு =
மொத்த செலவு /மொத்த நுகர்வு
மொத்த நுகர்வு /மொத்த வருவாய்
நுகர்வு மாற்றம் /வருமானம் மாற்றம்
மேற்கண்ட ஏதுமில்லை
13.
கீன்சின் நுகர்வுச் சார்பு C = 10 + 0.8Y ஆக இருந்து, செலவிடக்கூடிய வருவாய் 100 ஆக இருந்தால், சராசரி நுகர்வு நாட்டம் எவ்வளவு?
ரூ.0.8
ரூ.800
ரூ.810
0.9
1.
கே.கே. குரிஹாரா என்பவரின் கூற்றுப்படி முடுக்கி என்பது, "தூண்டப்பெற்ற முதலீட்டிற்கும் தொடக்கத்தில் நுகர்வுச் செலவில் ஏற்படும் மாற்றத்திற்கும் இடையேயுள்ள விகிதம்" என வரையறுத்துள்ளார்.
2.
சராசரி சேமிப்பு நாட்டம் என்பது மொத்தச் சேமிப்பை மொத்த வருமானத்தால் வகுத்தால் கிடைக்கக்கூடிய ஈவுத்தொகையாகும்.
APS = \(\frac{S}{Y}\)
இதில், \(\frac{S}{Y}\) = Average Propensity to Save
S = சேமிப்பு
Y = வருமானம்
3.
வருமான மாற்றத்திற்கும், நுகர்வு மாற்றத்திற்கும் இடையிலான விகிதம் இறுதிநிலை நுகர்வு நாட்டம் எனப்படும்.
\(MPC=\frac { \Delta C }{ \Delta Y } \)
இதில், \(\frac { \Delta C }{ \Delta Y } \)MPC = Marginal Propensity to Consume
∆C = நுகர்வு மாற்றம்
∆Y = வருமான மாற்றம்
4.
வருமானத்திற்கும் நுகர்ச்சிக்குமான வீதமே சராசரி நுகர்வு நாட்டமாகும்.
கணித ரீதியாக, APC = \(\frac{C}{Y}\)
இதில் APC = Average Propensity to Consume
C = நுகர்வு
Y = வருமானம்
5.
வருவாய்க்கும் நுகர்வுக்கும் உள்ள தொடர்பையே "நுகர்வுச் சார்பு" அல்லது "நுகர்வு நாட்டம்" என்கிறோம். இது "மொத்த நுகர்வு, மொத்த நாட்டு வருமானம் ஆகிய இரு ஒட்டுமொத்தத்திற்கிடையேயான சார்புத் தொடர்பாகும்."
இதனை = C = f (Y) எனலாம்.
இதில் C = நுகர்வு
Y = வருமானம்
f = சார்பு
6.
1. மிகைப் பெருக்கி எளிய பெருக்கியை விட சிறந்ததாகும். ஏனெனில் எளிய பெருக்கி தன்னிச்சை முதலீட்டை மட்டும் உள்ளடக்கி இருக்கும். ஆனால் மிகைப் பெருக்கி தன்னிச்சை முதலீடு மற்றும் தூண்டப்பட்ட முதலீடு ஆகிய இரண்டையும் கொண்டிருக்கும்.
2. ஆரம்ப முதலீட்டினால் வருமானத்தில் ஏற்படும் மொத்த விளைவை அறிய ஹிக்ஸ் K மற்றும் B ஐ இணைத்து மிகைப் பெருக்கி என்பதை கணித ரீதியில் உருவாக்கினார்.
3. மிகைப் பெருக்கியானது தூண்டப்பட்ட நுகர்வு, தூண்டப்பட்ட முதலீடு ஆகியவை இணைந்து செயல்படுவதாகும்.
7.
| தன்னிச்சையான முதலீடு | தூண்டப்படுகிற முதலீடு | |
| 1 | தன்னிச்சையானது | திட்டமிடப்பட்டது. |
| 2 | வருவாயைப் பொறுத்து நெகிழாது. | வருவாயைப் பொறுத்து நெகிழ்வது. |
| 3 | நல நோக்கமுடையது | இலாப நோக்கமுடையது |
8.
முடுக்கிக் கோட்பாடு செயல்படும் விதம் : ஒரு எளிமையான எடுத்துக்காட்டின் மூலம் முடுக்கியின் செயல்பாட்டை அறியலாம்.
1. 1000 நுகர்வு பண்டங்களைத் தயாரிப்பதற்கு 100 இயந்திரங்கள் தேவைப்படுவதாக எடுத்துக்கொள்வோம். 10 ஆண்டுகள் அந்த இயந்திரங்களின் வாழ்நாள் எனக் கொள்வோம். அதாவது ஒவ்வொரு ஆண்டும் 10 இயந்திரங்களை மாற்றியமைக்கப்படுகிறது. காரணம் நிலையான 1000 நுகர்வுப் பண்டங்களைத் தயாரிப்பதற்காக இதனை மாற்றியமைக்கும் தேவை ஏற்படுகிறது.
2. 10 விழுக்காடு அளவிற்கு (அதாவது 1000 லிருந்து 1100 ஆக) நுகர்வுப் பொருட்களின் தேவை அதிகரிக்கிறது என வைத்துக் கொள்வோம். இதன் விளைவாக மேலும் 10 இயந்திரங்களின் தேவை அதிகரிக்கும். எனவே மொத்த இயந்திர தேவை 20 ஆகும். (10 மாற்றியமைப்பதற்காக மற்றும் 10 அதிகரித்த தேவையை சந்திப்பதற்காக) இங்கே 10 விழுக்காடு நுகர்வுப் பண்டங்கள் தேவையானது 100 விழுக்காடு இயந்திரத் தேவையை அதிகரிக்கின்றது என்பது குறிக்கின்றது. (10 லிருந்து 20 வரை).
3. ஆதலால் இறுதியாக நுகர்வுப் பண்டங்களின் தேவையில் ஏற்படும் ஒரு சிறிய மாற்றம் அதிகப்படியான முதலீட்டு மாற்றத்திற்கு வழிவகுக்கிறது.
வரைபட விளக்கம்:
1. SS என்பது சேமிப்பு கோடு. II என்பது முதலீட்டு கோடு. E1 என்ற புள்ளியில் பொருளாதாரம் Oy1 வருமானத்துடன் சமநிலையில் இருக்கிறது.
2. சேமிப்பும் முதலீடும் OI2 ல் சமநிலையாக உள்ளது.
3. முதலீடு OI2 லிருந்து OI4 ஆக அதிகரிக்கும் போது வருமானம் Oy1 லிருந்து Oy3 ஆக அதிகரிக்கிறது.
4. அதிகரிக்கிற வருமானம் Y1Y2 ஆனது பெருக்கியின் விளைவாலும் மற்றும் அதிகரிக்கிற வருமானம் y2y3 ஆனது முடுக்கியின் விளைவாலும் ஏற்படுகின்றது.
9.
நுகர்வுச் சார்பைத் தூண்டுகின்ற காரணிகளை ஜே.எம்.கீன்சு இரண்டாகப் பிரிக்கின்றார். அவை அகவயக் காரணிகள் மற்றும் புறவயக் காரணிகள் ஆகும்.
அகவயக் காரணிகள் :
முன்னெச்சரிக்கை நோக்கம்: எதிர்பாராமல்
ஏற்படும் நிகழ்விற்காக, கையில் ரொக்கமாக வைப்பது. (எ.கா) விபத்து, உடல் நலனின்மை.
எதிர்பார்க்கும் நோக்கம் :
எதிர்கால தேவைக்கான விருப்பம்
(எ.கா.) வயதான காலம்.
கணிக்கும் நோக்கம் :
விருப்பம் மற்றும் பாராட்டை அனுபவிப்பதற்கான விருப்பம்.
முன்னேறும் நோக்கம் :
வாழ்க்கைத் தரத்தை முன்னேற்ற விரும்புதல் சார்ந்த விருப்பம்.
பணவியல் சுதந்திர நோக்கம்
வணிக நோக்கம்:
வணிகத்தை முன்னேற்றுவதற்கான நோக்கம்.
பெருமித நோக்கம் :
சொத்தை தனது சந்ததியினருக்கு விட்டுச்செல்லும் விருப்பம்.
பேராசை நோக்கம் : :
முற்றிலும் கஞ்சத்தனமான உள்ளுணர்வு
புறவயக் காரணிகள் :
புறவயக் காரணிகள் உண்மையானவை, அளவிடக்கூடியவை. நீண்ட காலங்களில் இந்தக் காரணிகள் எளிதாக மாற்றமடையும்.
வருமானப் பகிர்வு :
சமநிலை வருமானப் பகிர்வுடைய சமூகத்தில் அதிகமான நுகர்வு விருப்பம் இருக்கும்.
விலை அளவு:
விலை வீழ்ச்சியடையும் போது, உண்மை வருமானம் அதிகரிக்கும், மக்கள் அதிகமாக நுகர்வார்கள் மற்றும் சமூகத்தில் நுகர்வு விருப்பம் அதிகரிக்கும்.
கூலி அளவு :
கூலி அதிகரிக்கும்போது நுகர்வுச் செலவும் அதிகரிக்கும்.
வட்டி வீதம்: அதிக வட்டி விகிதம் மக்களை அதிக அளவில் பணத்தைச் சேமிக்க ஊக்கமளிக்கும், நுகர்வைக் குறைக்கும்.
நுகர்வோர் கடன் :
எளிய தவணைகளாக நுகர்வுக் கடன் அளிக்கும் போது அவர்கள் நுகர்வோர் பண்டங்களான குளிர்பதனப் பெட்டி, ஊர்திகள், கணினி முதலானவற்றினை வாங்குவார்கள். இது நுகர்வை அதிகப்படுத்தும்.
மக்கள் தொகை காரணிகள் :
மற்றவை மாறாமல் இருக்கும் போது குடும்ப அளவு அதிகமாக இருந்தால், நுகர்வு அதிகமாக இருக்கும்.
10.
(b)
J.M. கீன்ஸ்
11.
(d)
மொத்த தேவை, உற்பத்தி
12.
(c)
நுகர்வு மாற்றம் /வருமானம் மாற்றம்
13.
(d)
0.9
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards