12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 24/10/2019
பன்னாட்டு பொருளாதார அமைப்புகள்
12ஆம் வகுப்பு Economics / பொருளியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Economics / பொருளியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Economics Test

1.
பெனிலக்ஸ் (BENELUX) என்பது இதன் வடிவமாகும்.
தடையற்ற வர்த்தகப் பகுதி
பொருளாதார ஒன்றியம்
பொது சந்தை
சுங்கவரி ஒன்றியம்
2.
பத்தாவது பிரிக்ஸ் அமைப்பின் உச்சி மாநாடு ஜூலை 2018 ஆம் ஆண்டில் நடைபெற்ற இடம்
பீஜிங்
மாஸ்கோ
ஜோகன்னஸ்பர்க்
பிரசிலியா
3.
பிரிக் (BRIC) என்ற சுருக்கச் சொல் கோர்க்கப்பட்ட ஆண்டு
2001
2005
2008
2010
4.
ஆசியான் அமைப்பின் தலைமை அலுவலகம் அமைந்துள்ள இடம்
ஜகார்த்தா
புது டெல்லி
கொழும்பு
டோக்கியோ
5.
கீழ்க்காண்பவற்றில் எது SAARC உறுப்பினர் நாடு அல்ல?
பாகிஸ்தான்
ஸ்ரீலங்கா
பூடான்
சீனா
6.
உலக வாணிக அமைப்பின் முதலாவது அமைச்சர்கள் அளவிலான மாநாடு நடைபெற்ற இடம்
சிங்கப்பூர்
ஜெனிவா
சியாட்டில்
டோஹா
7.
பன்னாட்டு மேம்பாட்டு அமைப்பு கீழ்க்காணும் இதன் துணை அமைப்பாகும்
பன்னாட்டுப் பண நிதியம்
உலக வங்கி
சார்க்
ஆசியான்
8.
கீழ்க்காணும் நாடுகள் எது சார்க் அமைப்பின் உறுப்பினர் இல்லை?
இலங்கை
ஜப்பான்
வங்காள தேசம்
ஆப்கானிஸ்தான்
9.
நீண்டகாலக் கடன் வழங்கும் நிதி நிறுவனம்
உலக வங்கி
பன்னாட்டுப் பண நிதியம்
உலக வர்த்தக அமைப்பு
பிரிக்ஸ்
10.
சிறப்பு எடுப்பு உரிமையின் மற்றொரு பெயர்
தாள் தங்கம்
பங்களவுகள்
தன் விருப்ப ஏற்றுமதி தடைகள்
இவை ஏதுவுமில்லை
11.
உலக வங்கிக் குழுமத்தின் கீழ் செயல்படும் இரண்டு துணை நிறுவனங்களின் பெயர்களைக் குறிப்பிடுக.
12.
தடையற்ற வாணிகப் பகுதி என்றால் என்ன?
13.
பொது அங்காடி வரையறு
14.
ஐபிஆர்டி யின் ஏதேனும் இரண்டு கடன் திட்டங்களின் பெயர்களைச் சுட்டிக்காட்டுக.
15.
சிறப்பு எடுப்புரிமைகள் என்பதன் பொருளை எழுதுக.
16.
ஆசியானின் பணிகள் யாவை?
17.
உலக வர்த்தக அமைப்பின் நோக்கங்கள் யாவை?
18.
ஆசியாவின் அமைப்பின் சாதனைகளைப் பட்டியலிடுக.
19.
பல தரப்பு ஒப்பந்தம் என்றால் என்ன ?
20.
வாணிக ஒத்துழைப்புத் தொகுதிகள் என்றால் என்ன ?
21.
22.
உலக வங்கியின் பணிகளை வெளிக் கொணர்க
23.
பொது சந்தை
24.
BRICS
25.
SAARC
26.
பன்னாட்டு பண நிதியம்
27.
பிரெட்டன் வுட்ஸ் மாநாடு
1.
(d)
சுங்கவரி ஒன்றியம்
2.
(c)
ஜோகன்னஸ்பர்க்
3.
(a)
2001
4.
(a)
ஜகார்த்தா
5.
(d)
சீனா
6.
(a)
சிங்கப்பூர்
7.
(b)
உலக வங்கி
8.
(b)
ஜப்பான்
9.
(a)
உலக வங்கி
10.
(a)
தாள் தங்கம்
11.
1.பன்னாட்டு மேம்பாட்டு அமைப்பு (IDA)
2. பன்னாட்டு நிதிக் கழகம் (IFC)
12.
ஒப்பந்தத்தில் கையொப்பமிட்ட உறுப்பினர் நாடுகள் அனைத்தும் ஒரே மண்டலமாகக் கருதி வாணிகத்தடைகளைக் குறைக்க ஒத்துழைக்கும். இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நாடுகளுக்கிடையே ஒப்பந்தம் போடப்படுகிறது.
எ.கா : SAFTA, EFTA
13.
புவியின் ஒரு குறிப்பிட்ட பகுதியில் அமைந்துள்ள நாடுகள் தடையற்ற வாணிகத்துக்காவும் உற்பத்திக் காரணிகள் இடப்பெயர்வுக்காகவும் அமைக்கும் அமைப்பே பொது அங்காடி.
(எ.கா): ஐரோப்பிய பொது அங்காடி
14.
1. வங்கியின் இருப்பில் உள்ள சொந்த நிதியிலிருந்து கடன் வழங்குவது.
2. கடன் நிதியிலிருந்து கடன் வழங்குவது.
15.
1. தாள் தங்கம் என்று அழைக்கப்படும் சிறப்பு எடுப்புரிமைகள் (SDRs) எனும் திட்டத்தை நிறுவியதில் நிதியம் வெற்றி பெற்றுள்ளது.
2. பன்னாட்டு பண நிதியத்துடன் கையிருப்பாக உள்ள உறுப்பினர் நாடுகளின் பணமே சிறப்பு எடுப்புரிமையாகும்.
16.
1. உறுப்பு நாட்டு விற்பனையாளர் மற்ற உறுப்பு நாடுகளில் விற்க தடையற்ற அனுமதி.
2. உறுப்பு நாடுகளின் வணிக நிறுவனங்களின் போட்டித் திறனை மேம்படுத்துவது.
3. ஐரோப்பிய ஒன்றியம் போன்று ஒரே சந்தையாக செயல்படுத்தல்.
4. உறுப்பு நாடுகளுக்கு சந்தை மற்றும் முதலீட்டு வாய்ப்புகளைப் பெற்றுள்ளது.
5. தொழில் மற்றும் வணிகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பு.
17.
1. பன்னாட்டு வாணிபத்தை விரிவுபடுத்துவது, வாணிகத் தடைகளை தாராளமயமாக்குவது, பொருளாதார செழுமையை உருவாக்குவது.
2. சுங்கவரி மற்றும் பிற தடைகளைக் குறைப்பது.
3. வாணிபத்தில் பேதத்தை நீக்குதல்.
4. உயர்ந்த வாழ்க்கைத் தரத்தை உருவாக்குதல்.
5. உலக வளங்களை உத்தம அளவில் பயன்படுத்துவது.
6. பின்தங்கிய நாடுகளுக்கு நியாயமான பங்கு.
18.
1. ஆசியாவின் உறுப்பினர் நாடுகளுக்கிடையே தடையற்ற பொருள், பணிகள், மூலதன போக்குவரத்து உருவாக்கியது.
2. உறுப்பு நாடுகளின் வணிகப் போராட்டத்திறனை மேம்படுத்துவது மற்றும் பொருளாதார மேம்பாட்டு இடைவெளியை குறைப்பது.
3. வாணிக தடைகளற்ற அனுமதி வழங்குவது.
4. உறுப்பு நாடுகளுக்கு சந்தை மற்றும் முதலீடு வாய்ப்புகளை வழங்குவது.
5. தொழில் மற்றும் வணிகம் உள்ளிட்ட பல துறைகளில் ஒத்துழைப்பை வளர்த்தல்.
19.
1. வங்கி, காப்பீடு, போக்குவரத்து, தொலைத்தொடர்பு, ஆகிய பணிகளில் பன்னாட்டு வாணிகம் நடைபெறுவதற்குத் தேவையான சாதகமான விதிகளை முதன்முதலில் தொகுத்துக் கொடுத்த முதலாவது, பல தரப்பு பன்னாட்டு ஒப்பந்தமாகும்.
2. காட் ஒப்பந்தத்தில் உறுப்பினர் நாடுகள் தாங்கள் விரும்பும் நாடுகளுக்கு மிகவும் சாதகமான நாடு (MFN) எனும் சலுகையை வழங்க அனுமதித்தது.
3. பணிகள் வாணிக ஒப்பந்தத்தில் ஒரு நாட்டுக்கு சாதகமான நாடு என சலுகை வழங்கினர்.
4. அந்தச் சலுகைகளை அனைத்து நாடுகளுக்கும் வழங்க வேண்டும் என்று ஒப்பந்த விதி திருத்தியமைக்கப்பட்டது.
20.
1. சில நாடுகள் வாணிகத்தில் போட்டியைத் தவிர்க்க பிற நாட்டுப் பொருளாதாரத்துடன் தங்களுடைய பொருளாதாரத்தை இணைத்து புதிய வாணிக வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்கின்றன.
2. நாடுகளுக்கிடையே சுமூக நன்மை தரும் வாணிகத் தொகுதிகள் பல விதங்களில் அமைகின்றன.
3. சமூக நன்மைக்காக நாடுகள் அமைக்கும் வாணிகத் தொகுதிகள் பரஸ்பர நல்லிணக்கத்திற்கு உதவுகிறது.
21.
22.
உலக வங்கியின் பணிகள் : உறுப்பு நாடுகளின் பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்களுக்கு கடன் வழங்கும் பணியை உலக வங்கி செய்கிறது. இதற்காக நீண்ட கால கடன்களை வழங்குகிறது.
உற்பத்திக்கு ஊக்கமளிக்கும் முதலீட்டுக்கான கடன் உதவி:
உற்பத்திக்குக் கடன் முதலீடு வழங்கும் திட்டத்தின் மூலம் உறுப்பு நாடுகளின் நில எல்லைக்குட்பட்ட பகுதிகளின் மறுகட்டமைப்புக்கும் மேம்பாட்டுக்கும் உதவி செய்யும் பணியை உலக வங்கி செய்கிறது.
பன்னாட்டு வாணிகத்தின் சரிவிகித வளர்ச்சி:
1. பன்னாட்டு கடன் மூலதனம் வழங்கி உறுப்பு நாடுகள் அனைத்தும் சரிவிகித பன்னாட்டு வணிக நீண்டகால வளர்ச்சியடைய உதவும் பணியை வங்கி செய்கிறது.
2. இதன் விளைவாக உறுப்பு நாடுகளின் அயல்நாட்டுச் செலுத்துநிலை சமநிலையை அடையும்.
கடன் மற்றும் ஈட்டுறுதி வழங்குதல் :
முக்கியமான திட்டங்களுக்கு கடன் வழங்குவது, பிற வழிகளில் கடன் பெற ஈட்டுறுதி வழங்குவது ஆகிய பணிகளையும் வங்கி செய்கிறது.
வெளிநாட்டுத் தனியார் முதலீட்டிற்கு ஊக்கமளித்தல்:
1. தனியார் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மூலம் உலக வங்கியின் உறுப்பு நாடுகளுக்கு கடன் வழங்க ஈட்டுறுதிகள் வழங்கும் பணியைச் செய்து வெளிநாட்டு மூலதனத்துக்கு ஊக்கமளிக்கிறது.
2. இந்தப் பணியின் மூலம் தனியார் மூலதனத்துடன் ஒன்று சேர்ந்து சொந்த நிதியிலிருந்து மட்டும் கடன் வழங்காமல் கடன் நிதியிலிருந்தும் கடன் வழங்க முடிகிறது.
தொழில்நுட்ப பணிகள் :
உலக வங்கி வாஷிங்டனில் அமைந்துள்ள பணியாளர் கல்லூரி நிபுணர்களைக் கொண்டு தொழில்நுட்ப ஆலோசனைகளையும் உறுப்பு நாடுகளுக்கு வழங்குகிறது.
23.
ஐரோப்பிய பொது அங்காடி
24.
ஷாங்காய்
25.
காத்மண்டு
26.
1945
27.
1944
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards