12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 27/09/2019
பேரியல் பொருளாதாரம்
12ஆம் வகுப்பு Economics / பொருளியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Economics / பொருளியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Economics Test

1.
கலப்பு பொருளாதாரத்தில் முன்னேறிய நாடுகள்
இந்தியா, ரஷ்யா, இங்கிலாந்து, பிரான்சு
இங்கிலாந்து, சீனா, ரஷ்யா, பிரேசில்
இந்தியா, சீனா, ரஷ்யா, பிரேசில்
இந்தியா, இங்கிலாந்து, பிரான்ஸ், பிரேசில்
2.
திறந்துவிடப்பட்ட பொருளாதாரத்தின் சுழல் ஓட்ட மாதிரி என்பது ________ ஆகும்
இரு துறை மாதிரி
முத்துறை மாதிரி
நான்கு துறை மாதிரி
மேல் சொல்லப்பட்ட அனைத்தும்
3.
முதலாளித்துவத்தின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்?
ஆடம்ஸ்மித்
காரல் மார்க்ஸ்
தக்கேரி
ஜே.எம்.கீன்ஸ்
4.
பொருளாதாரக் கொள்கைகளின் அவசியத்தைக் குறிப்பிடுக.
அடிப்படைப் பிரச்னைகளைத் தீர்ப்பது
தடைகளை முறியடிப்பது
வளர்ச்சியை அடைவது
மேலே கூறப்பட்ட அனைத்தும்
5.
"புதிய பேரியல் பொருளியலின் தந்தை" என அழைக்கப்படுபவர் யார்?
ஆடம்ஸ்மித்
ஜே.எம். கீன்சு
ஜே.எம்.கீன்ஸ்
காரல் மார்க்ஸ்
6.
பொருளியல் பாடத்தின் கிளைகள் என்பவை
சொத்தும் நலமும்
உற்பத்தியும் நுகர்வும்
தேவையும் அளிப்பும்
நுண்ணியலும் பேரியலும்
7.
"வருமான சுழல் ஓட்டம்" - வரையறு.
8.
வளர்ச்சி நிலை அடிப்படையில் பொருளாதாரங்களை வகைப்படுத்துக.
9.
10.
இரு துறை சுழல் ஓட்ட மாதிரியினை விளக்குக.
11.
சமதரும குறைகளைக் கூறுக
12.
பேரியல் பொருளாதாரத்தின் முக்கியத்துவத்தைக் குறிப்பிடுக.
13.
முதலாளித்துவத்தின் நன்மை தீமைகளை விவரி
14.
முதலாளித்துவம், சமத்துவம் ஆகியவற்றின் இயல்புகளை ஒப்பிடுக.
15.
பேரினப் பொருளியலின் பரப்பெல்லையை விவரி.
16.
முதலாளித்துவம்
17.
வாணிப சுழற்சி
18.
பேரியல் பொருளியல்
19.
நாட்டு வருமானம்
20.
நுண்ணியல்
21.
அ) Y - அரசு
ஆ) C - நுகர்வு
இ) I - வருமானம்
ஈ) G - முதலீடு
22.
அ) முதலாளித்துவ பொருளாதார - வெளிநாட்டு மாற்று இருப்பு
ஆ) சமத்துவப் பொருளாதாரம் - சந்தைப் பொருளாதாரம்
இ) இருப்பு மாறிலி - கட்டளைப் பொருளாதாரம்
ஈ) ஒட்ட மாறிலி - நுகர்வு
23.
அ) சிவப்பு நாடா முறை - தலையிடாக் கொள்கை பொருளாதாரம்
ஆ) சமத்துவப் பொருளாதாரம் - சமத்துவப் பொருளாதாரம்
இ) கலப்பு பொருளாதாரம் - முதலாளித்துவம்
ஈ) உலகத்துவம் - பழமை பொருளாதாரம்
24.
அ) முதலாளித்துவ பொருளாதாரம் - U.S.A, மேற்கு ஜெர்மனி
ஆ) சமத்துவப் பொருளாதாரம் - ஆஸ்திரேலியா, ஜப்பான்
இ) கலப்பு பொருளாதாரம் - பிரான்சு, பிரேசில்
ஈ) உலகத்துவம் - பன்னாட்டு வணிகம்
25.
அ) செழிப்பு
ஆ) நீட்சி
இ) பின்னிறக்கம்
ஈ) மந்த நிலை
26.
அ) இல்லங்கள்
ஆ) நிறுவனங்கள்
இ) அரசு
ஈ) உள் துறை
27.
கூற்று (A): மாதிரி என்பது உண்மை சூழலை எளிமையாக பிரதிபலிப்பது ஆகும்.
காரணம் (R): பொருளாதார வல்லுநர்கள், பொருளாதார நடவடிக்கைகள், அவைகளுக்கு இடையேயான உறவுகள், நடத்தைகள் பற்றி விவரிப்பதற்கு மாதிரிகளை பயன்படுத்துகின்றனர்
அ) கூற்று (A) மற்றும் காரணம் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கான சரியான விளக்கமாகும்
ஆ) கூற்று (A) மற்றும் காரணம் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கான சரியான விளக்கமல்ல
இ) கூற்று (A) சரி, காரணம் (R) தவறு
ஈ) கூற்று (A), காரணம் (R) இரண்டும் தவறு
28.
கூற்று (A): சமத்துவப் பொருளாதாரத்தில் அனைத்து வளங்களையும் அரசே உரிமையாக்கிப் பயன்படுத்தும்.
காரணம் (R): சமத்துவப் பொருளாதார அமைப்பில் பொது நலமே அனைத்து பொருளாதார நடவடிக்கைகளின் பின்புல முக்கிய நோக்கமாகும்
அ) கூற்று (A) மற்றும் காரணம் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கான சரியான விளக்கமாகும்
ஆ) கூற்று (A) மற்றும் காரணம் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கான சரியான விளக்கமல்ல
இ) கூற்று (A) சரி, காரணம் (R) தவறு
ஈ) கூற்று (A), காரணம் (R) இரண்டும் தவறு
29.
வருவாய் வட்ட ஓட்டம் என்பதன் பொருள் யாது?
30.
கலப்பு பொருளாதாரம் என்றால் என்ன?
31.
உலகத்துவம் என்பதன் பொருள் யாது?
32.
வேலையின்மை என்றால் என்ன?
33.
பொருளியலின் இரண்டு பிரிவுகள் யாவை?
1.
(d)
இந்தியா, இங்கிலாந்து, பிரான்ஸ், பிரேசில்
2.
(c)
நான்கு துறை மாதிரி
3.
(a)
ஆடம்ஸ்மித்
4.
(d)
மேலே கூறப்பட்ட அனைத்தும்
5.
(b)
ஜே.எம். கீன்சு
6.
(d)
நுண்ணியலும் பேரியலும்
7.
1. ஒரு பொருளாதாரத்தின் வருமான சுழல் ஓட்ட மாதிரியானது, அந்தப் பொருளாதாரத்தின் பல்வேறு துறைகளுக்கிடையே உள்ள தொடர்பினை விளக்குவதாகும்.
2. இது பொருளாதார முகவர்களாகிய நிறுவனம், குடியிருப்பு, அரசாங்கம் மற்றும் நாடுகளிடையே வருமானம், பண்டங்கள், பணிகள், உற்பத்திக் காரணிகளின் ஓட்டத்தை காண்பிப்பதாகும்.
8.
வளர்ச்சி நிலை 4 வகையாக பிரிக்கப்பட்டுள்ளது.
1. வளர்ந்த பொருளாதாரம்
2. வளர்ச்சி குன்றிய பொருளாதாரம்
3. வளராத பொருளாதாரம்
4. வளரும் பொருளாதாரம்
9.
10.
இல்லத்துறை :
இல்லத்துறை தான் பண்டங்கள், பணிகளை வாங்கும் ஒரே துறையும், நிலம், உழைப்பு, மூலதனம், தொழில் அமைப்பு ஆகிய உற்பத்திக் காரணிகளை அளிக்கும் ஒரே துறையும் ஆகும். இல்லத்துறையானது அதற்குச் சொந்தமான உற்பத்திக் காரணிகளை அளிப்பதன் மூலம் வருமானம் பெறுகிறது.
நிறுவனத் துறை:
1. நிறுவனத்துறையானது பண்டங்கள் மற்றும் பணிகளை இல்லத்துறைக்கு விற்பனை செய்வதன் மூலம் வருவாயை ஈட்டுகின்றது.

இருதுறைப் பொருளாதாரத்தில், உற்பத்தி மற்றும் விற்பனை சமமாகவும் வருமானமும், பண்டங்களும் சுழல் ஓட்டமாகவும் காணப்படும்.
2. வெளிவட்டமானது உற்பத்தி காரணிகளையும் பண்டங்களையும் எடுத்துரைக்கும் உண்மை ஓட்டமாகவும், உள் வட்டமானது காரணி விலை, பண்டங்களின் விலையைக் குறிக்கும் பண ஓட்டமாகவும் காணப்படும். இங்கு Y = C + I
Y என்பது வருவாய்: C என்பது நுகர்வு; I என்பது முதலீடு
11.
சிவப்பு நாடா முறையும் அரசு அலுவலர்களும் (அதிகார வர்க்கம்) :
அனைத்து முடிவுகளையும் அரசு அமைப்புகளே எடுப்பதால், அரசு அலுவலர்கள் பலரின் அனுமதி பெற வேண்டி, கோப்புகள் ஒரு மேசையிலிருந்து மற்றொன்றுக்கு செல்லும் கால அளவு அதிகமாகிறது. இதனால் சிவப்பு நாடா முறை ஏற்படுகிறது.
ஊக்கமில்லாமை :
சமதருமத்தின் மிகப்பெரிய குறை என்பது, இந்த முறையில் திறமைக்கு எந்த ஊக்கமும் அளிப்பதில்லை எனவே, உற்பத்தித் திறனும் பாதிக்கப்படும்.
தெரிவு செய்வதில் சுதந்திரம் குறைவு:
பண்டங்கள். பணிகள் நுகர்வதில் தெரிவு செய்யும் சுதந்திரம் நுகர்வோரால் அனுபவிக்க முடியாது.
அதிகாரம் குவிதல் :
அரசே அனைத்து முடிவுகளையும் எடுக்கிறது. பொருளாதார தீர்மானங்களில் தனியார் எந்த முயற்சியும் எடுப்பது இல்லை. எனவே, அரசே மிகவும் சக்தி வாய்ந்ததாக கருதப்படுகிறது. அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்த வாய்ப்பாகவும் அமைகிறது
12.
பேரியல் பொருளாதாரத்தின் முக்கியத்துவங்கள்:
1. ஒரு பொருளாதார அமைப்பின் ஒட்டு மொத்த செயல்பாடுகளைப் புரிந்து கொள்ளவும், அதற்குத் தேவையான சரியான யுத்திகளை மாற்றவும், அடிப்படை சிக்கல்களுக்குத் தீர்வு காணவும் பேரியல் பொருளாதாரம் உதவுகிறது.
2. எதிர்கால சிக்கல்களைப் புரிந்து கொள்ளவும், வருங்காலத் தேவைகளையும், அறைகூவல்களையும் எதிர்கொள்வதற்கும், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பதற்கும் பேரியல் பொருளாதாரம் பயன்படுகிறது.
3. நடப்புப் பிரச்சனைகளை அறிவியல் பூர்வ விசாரணை மூலம் அறிய பேரியல் பொருளாதாரம் வாய்ப்பளிக்கிறது.
பொருளாதாரக் குறியீடுகளை பகுத்தாயவும் அவற்றை ஒப்பிடவும் இது உதவுகிறது.
4. பொருளாதார நெருக்கடிகளுக்குத் தீர்வு காணவும். சரியான கொள்கைகளை உருவாக்கவும். எதிர்காலத்தில் நடக்கவிருப்பனவற்றை முன்கணிக்கவும் இது உதவுகிறது.
13.
முதலாளித்துவத்தின் நன்மைகள்:
1. தானாக இயங்குதல்: அரசாங்கத்தின் எந்த தலையீடும் இல்லாமல் பொருளாதாரம் தானாகவே செயல்படும்
2. வளங்களை திறமையாகப் பயன்படுத்துதல்: அனைத்து வளங்களுக்கும் திறமையாகவும், உத்தம அளவிலும் பயன்படுத்தப்படுகிறது
3. கடின உழைப்பிற்கு வெகுமதி: கடின உழைப்பை ஊக்குவிப்பதும், திறமையால் அதிக லாபம் பெறுவதற்கும் பயன்படுத்தப்படுகிறது
4. பொருளாதார முன்னேற்றம்: முதலாளித்துவ பொருளாதாரத்தில் உற்பத்தி மற்றும் உற்பத்தித் திறன் மிக அதிகமாகும்
5. நுகர்வோர் இறையாண்மை: அனைத்து உற்பத்தி நடவடிக்கைகளும் நுகர்வோர்களை திருப்தி செய்வதை முக்கிய நோக்கமாக கொண்டிருக்கும்
6. மூலதன ஆக்க வீதம் அதிகரித்தல்: சேமிப்பு முதலீடு அதிகரித்து மூலதன ஆக்க வீதம் உயர வழிவகுக்கும்
7. புதிய தொழில்நுட்ப முன்னேற்றம்: இலாபம் பெறுவது நோக்கமாக இருப்பதால் புதிய முறையைக் கையாண்டு உற்பத்தி உயர முயற்சிகள் மேற்கொள்ளப்படும்
முதலாளித்துவத்தின் குறைபாடுகள்:
1. வருமானம் மற்றும் செல்வச் செறிவு: வருமானம் மற்றும் செல்வம் சிலரது கையில் மட்டும் குவிந்து வருமான ஏற்றத்தாழ்வு அதிகமாகும்
2. வளங்கள் வீணாக்கப்படுதல்: போட்டி விளம்பரங்களினாலும், பொருட்களின் பிரதிகளினாலும் வளங்கள் வீணாக்கப்படும்
3. வகுப்புப் போராட்டம்: சமுதாயத்தை முதலாளிகள், வேலைக்காரர்கள் என பிரித்து வகுப்பு போராட்டத்திற்கு வழிவகுக்கும்
4. வாணிபச் சுழல்: தடையில்லா சந்தை முறையால் அதிக அளவு பொருளாதார ஏற்றத்தாழ்வு ஏற்பட்டு நெருக்கடி நிலை ஏற்படும்
5. அத்தியாவசியமில்லா பொருட்களை உற்பத்தி: இலாபத்தைப் பெறுவதற்காக தீங்கு விளைவிக்கும் பொருட்கள் கூட உற்பத்தி செய்ய வாய்ப்பு உள்ளது.
14.
| வ.எண் | தன்மைகள் | முதலாளித்துவம் | சமத்துவம் | |
| 1 | உற்பத்தி மூலங்களின் உரிமை | தனியார் உரிமை | பொது (அரசு) உரிமை | |
| 2 | பொருளாதார நோக்கம் | இலாபம் | சமூக நலன் | |
| 3 | மைய பிரச்சனைகளின் தீர்வு | தடையில்லா சந்தை முறை | ஒன்றிய அரசின் திட்டமுறை | |
| 4 | அரசின் பங்கு | மூலப் பொருள்கள் கட்டுப்பாடு மட்டும் | முழு ஈடுபாடு | |
| 5 | வருமானப் பங்கீடு | சமனற்ற நிலை | சமநிலை | |
| 6 | நிறுவன தன்மை | தனியார் நிறுவனம் | அரசு நிறுவனம் | |
| 7 | பொருளாதார சுதந்திரம் | முழுமையான சுதந்திரம் | சுதந்திரமின்மை | |
| 8 | முக்கியமான சிக்கல் | சமமின்மை | திறனின்மை | |
15.
நாட்டு வருமானம் :
நாட்டு வருமானம் கணக்கிடுதல், நாட்டு வருமானத்தில் பல துறைகளின் பங்கு முதலானவை பேரியல் பொருளாதாரப் பகுத்தாய்வின் அடிப்படை கூறுகளாகும்.
பண வீக்கம்:
பண வீக்கம் என்பது பொதுவான விலை அளவு தொடர்ந்து அதிகரிப்பதைக் குறிப்பதாகும். மொத்த விலைக் குறியீட்டெண். நுகர்வோர் விலைக் குறியீட்டெண், ஆகியவற்றைப் பயன்படுத்தி மொத்த விலை அளவை மதிப்பிடுவது அவசியமாக இருக்கிறது.
வணிகச் சுழற்சி :
பொதுவாக எல்லா நாடுகளும் வணிக ஏற்றத்தாழ்வாலும், வணிக சுழற்சியாலும் ஏற்படும் சிக்கல்களைச் சந்திக்கின்றன. மொத்த பொருளாதாரக் காரணிகளை அடிப்படையாகக் கொண்டு ஒரு நாட்டின் வணிகச் சுழற்சி மாற்றங்களைத் தெரிந்து கொள்ள முடிகிறது.
வறுமையும் வேலையின்மையும்:
வளங்கள் நிறைந்த நாடுகளிலும் வறுமையும். வேலையின்மையும் மிகப் பெரிய சிக்கலாக உள்ளது. இது ஒரு பொருளாதார முரண்பாடுகளில் ஒன்றாகும்.
பொருளாதார வளர்ச்சி :
பேரியல் பகுத்தாய்வின் மூலம் தான் ஒரு பொருளாதார அமைப்பின் வளர்ச்சி, முன்னேற்றம், அவற்றைத் தீர்மானிக்கும் காரணிகள் ஆகியவற்றைப் புரிந்து கொள்ள முடியும்.
பொருளாதாரக் கொள்கைகள்:
பொருளாதாரக் கொள்கைகளை உருவாக்குவதற்குப் பேரியல் பொருளாதாரம் உதவுகிறது. அடிப்படை சிக்கல்களுக்குத் தீர்வு காணவும், தடைகளைத் தகர்த்தெறியவும், வளர்ச்சியை அடைவதற்கும் பொருளாதாரக் கொள்கைகள் தேவைப்படுகின்றன.
16.
அமெரிக்கா
17.
மந்த நிலை
18.
வருவாய் கோட்பாடு
19.
பேரியல் பொருளியல்
20.
ராக்னர் ஃப்ரிஷ்
21.
ஆ) C - நுகர்வு
22.
ஈ) ஒட்ட மாறிலி - நுகர்வு
23.
அ) சிவப்பு நாடா முறை - தலையிடாக் கொள்கை பொருளாதாரம்
24.
இ) கலப்பு பொருளாதாரம் - பிரான்சு, பிரேசில்
25.
ஆ) நீட்சி
26.
ஈ) உள் துறை
27.
ஆ) கூற்று (A) மற்றும் காரணம் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கான சரியான விளக்கமல்ல
28.
அ) கூற்று (A) மற்றும் காரணம் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கான சரியான விளக்கமாகும்
29.
பொருளாதாரத்தின் பல்வேறு துறைகளுக்கிடையே உள்ள தொடர்பினை விளக்குவது ஆகும். இந்நிறுவனம், குடியிருப்பு அரசாங்கம், மற்றும் நாடுகளுக்கிடையே வருவாய் பொருட்கள் மற்றும் பணிகள் மற்றும் காரணிகளின் ஓட்டத்தைக் குறிப்பதாகும்
30.
கலப்பு பொருளாதாரம் என்பது தனியார் துறை மற்றும் பொதுத்துறை இணைந்து பொருளாதார மேம்பாட்டிற்கு பணியாற்றுவது. இதில் முதலாளித்துவம் மற்றும் சமத்துவம் இணைந்த கலவையாகும்
31.
பன்னாட்டு வாணிபத்தில் நாடுகளை உலக முன்னேற்றத்தை எதிர்நோக்கும் உலகமயமாக்குதல் என்பதாகும்
32.
வேலை செய்ய தகுதியும் விருப்பமும் இருந்தும் வேலை கிடைக்காமல் இருப்பது வேலையின்மை என்று பெயர்
33.
1. நுண்ணியல் பொருளாதாரம்
2. பேரியல் பொருளாதாரம் என இரு பிரிவுகள் உள்ளன
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards