12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 03/09/2019
வேலைவாய்ப்பு மற்றும் வருமான கோட்பாடுகள்
12ஆம் வகுப்பு Economics / பொருளியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Economics / பொருளியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Economics Test

1.
_________ சமநிலையை கீன்சுடைய கோட்பாடு வலியுறுத்தியது.
மிகக்குறுகிய காலச்
குறுகிய காலச்
மிக நீண்ட காலச்
நீண்ட காலச்
2.
புதியப் பொருளாதாரக் கோட்பாட்டின் வளர்ச்சியில்_______ கோட்பாடு ஒரு திருப்பு முனையாக அமைந்தது.
கீன்சின்
சே(Say) யின்
தொன்மையது
வேலைவாய்ப்பு
3.
நடப்புக்கூலி விகிதத்தில் வேலைசெய்ய விரும்புகிற ஒவ்வொருவரும் பணியில் இருந்தால் அது ________ எனப்படும்.
முழுவேலை வாய்ப்பு
குறைந்தளவு வேலைவாய்ப்பு
வேலைவாய்ப்பினை
வேலைக்கான வாய்ப்பு
4.
"விளைவுத் தேவை" என்றால் என்ன?
5.
'சே' விதியின் எடுகோள்களைப் பட்டியலிடுக.
6.
உடன்பாடில்லா (Frictional) வேலையின்மை பற்றி சிறு குறிப்பு வரைக.
7.
"முழு வேலைவாய்ப்பு" வரையறு.
8.
தொன்மையியத்தையும் கீன்சியத்தையும் ஒப்பிடுக.(ஏதேனும் ஐந்து)
9.
தொகு தேவை என்றால் என்ன? அதன் கூறுகளைக் கூறுக
10.
J.B. சே விதியில் விளைவுகளைப் பற்றி குறிப்பு வரைக.
11.
12.
வேலையின்மைகளின் வகைகளை விவரி.
1.
(b)
குறுகிய காலச்
2.
(a)
கீன்சின்
3.
(a)
முழுவேலை வாய்ப்பு
4.
விளைவுத் தேவை என்பது உற்பத்தி செய்யப்பட்ட பொருள்களின் மீது உண்மையிலேயே செலவு செய்கிற பணத்தின் அளவு ஆகும்.
5.
1. ஒரு தனி வாங்குபவரோ, விற்பவரோ அல்லது உள்ளீடு பொருளோ விலையை மாற்ற முடியாது.
2. முழு வேலை நிலை நிலவும்.
3. உழைப்பு, பண்டங்கள் ஆகியவற்றின் அங்காடியில் நிறைவுப் போட்டி நிலவும்.
6.
1. உழைப்பாளர்களின் தேவை மற்றும் அளிப்பில் சமநிலையற்ற தன்மை நிலவுவதால் தற்காலிக அல்லது பிறழ்ச்சி வேலையின்மை ஏற்படுகிறது.
2. உழைப்பாளர்கள் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு இடம்பெயராமை, திறமைப் பற்றாக்குறை, இயந்திரங்களில் பழுது ஏற்படுதல், மூலப்பொருட்கள் பற்றாக்குறை முதலான காரணங்களால் உடன்பாடில்லா (பிறழ்ச்சி) வேலையின்மை ஏற்படுகிறது.
7.
லர்னரின் கூற்றுப்படி, முழு வேலை நிலை என்பது "கூலியும் விலையும் எந்த வேலைநிலையில் மாறி மாறி அதிகரிக்கின்றதோ அங்கு முழு வேலைவாய்ப்பு நிலவுகிறது." என்கிறார்.
8.
| வ. எண் | கீன்ஸியம் | தொன்மையியம் |
| 1. | குறுகிய காலச் சமநிலை | நீண்ட காலச் சமநிலை |
| 2. | சேமிப்பு கெடுதல் | சேமிப்பு நல்லது |
| 3. | பணத்தின் பணி என்பது பரிமாற்றத்திற்கும், சேமிப்பிற்கும் உதவும் | பரிவர்த்தனைக்கு மட்டுமே பணம் உதவும் |
| 4. |
நாட்டின் சிக்கல்களைத் தீர்க்க பேரியல் அணுகுமுறை தேவை. |
நுண்ணியல் அடிப்படையில் பெரிய சிக்கல்களுக்கு தீர்வு காணுதல். |
| 5. | அரசின் தலையீடு உண்டு | தலையிடாக் கொள்கை வலியுறுத்தப்படுகிறது |
| 6. | வட்டி வீதம் மாறிக் கொண்டே உள்ளது. | வட்டி வீதம் மாறாதது. |
9.
உழைப்பாளர்களைப் பயன்படுத்தி உற்பத்தி செய்யப்பட்டப் பண்டங்களை விற்பதால் எவ்வளவு வருவாய் கிடைக்கும் என்று தொழில் முனைவோர்கள் எதிர்பார்க்கிறார்களோ அதுவே மொத்த தேவையாகும்.
தொகு தேவையின் நான்கு பகுதிகளைக் (உட்கூறுகளை) கொண்டது :
2. முதலீட்டுத் தேவை
3. அரசுச் செலவு
4. நிகர ஏற்றுமதி - இறக்குமதி (Export - Import)
5. தொகு தேவையின் சூத்திரம் :
AD = C+I+G+(X-M)
10.
சே விதியின் விளைவுகள்:
1. அதிக உற்பத்திக்கோ. வேலையின்மைக்கோ வாய்ப்பில்லை.
2. பயன்படுத்தாத வளங்கள் நாட்டில் இருந்தால், முழு வேலை வாய்ப்பு வரை அவற்றைப் பயன்படுத்துவது
3. இலாபகரமாக இருக்கும். உற்பத்திக் காரணிகள் அவற்றின் உற்பத்தித் திறனுக்குச் சமமாக ஊதியங்களையும் ஏற்றுக் கொள்ளும்.
4. விலைக் கருவி தானாக இயங்குவதால் அங்கு அரசின் தலையீடு தேவையிருக்காது.
5. வட்டி வீத நெகிழ்வுத்தன்மை, சேமிப்பிற்கும் முதலீட்டிற்கும் சமநிலையை உருவாக்கும்.
6. பரிவர்த்தனைக்கு மட்டுமே பணம் செயல்படும். பணத்தை மக்கள் கையிருப்பாக வைத்திருக்கமாட்டார்கள்.
11.
12.
வேலையின்மை என்பது நல்ல உடல் நலம் உள்ள தனிமனிதர்கள், நிலவுகின்ற கூலி விகிதத்தில் வேலை செய்யத்தயாராக இருப்பவர்கள் அனைவருக்கும். தகுந்த வேலையில்லாத சூழ்நிலை வேலையின்மை ஆகும்.
வணிகச் சுழல் வேலையின்மை:
கீழ்நோக்கிய பகுதியில் ஒரு பொருளாதாரம் இருக்கும் போது நிகழ்கின்ற வேலையின்மைக்கு சுழல் வேலையின்மை என்று பெயர்.
பருவகால வேலையின்மை:
ஓர் ஆண்டில் சில காலங்களில் மட்டும் நிலவும், வேலையின்மைக்கு பருவகால வேலையின்மை என்று பெயர். வேளாண்மை, வேளாண்மை சார்ந்த தொழில்கள் கரும்பு, பருத்தி முதலானவை குறிப்பிட்ட பருவத்தில் மட்டும் நடைபெறும்.
தற்காலிக அல்லது உடன்பாடில்லா (பிறழ்ச்சி) வேலையின்மை :
உழைப்பாளர்களின் தேவை மற்றும் அளிப்பில் சமநிலையற்ற தன்மை நிலவுவதால் தற்காலிக அல்லது பிறழ்ச்சி வேலையின்மை ஏற்படுகிறது.
கற்றோர் வேலையின்மை :
சில நேரங்களில் படித்துக் கல்வித் தகுதி பெற்றவர்களுக்கு வேலை கிடைப்பது இல்லை. அல்லது பகுதி நேர வேலை செய்கின்றனர். இத்தகைய வேலையின்மைக்கு கற்றோர் வேலையின்மை என்று பெயர்.
தொழில் நுட்ப வேலையின்மை :
புதிய தொழில்நுட்பம், மூலதன செறிவு உடையதாக இருப்பதால், குறைந்த எண்ணிக்கையில் உழைப்பாளர்கள் தேவைப்படுகின்றனர்.
அமைப்புசார் வேலையின்மை :
1. சமூக அமைப்பில் ஏற்படும் பெரிய மாற்றங்களால் அமைப்புசார் வேலையின்மை உருவாகிறது.
2. ஒரு பொருளுக்கான தேவை குறைதல் (eg. Type Machine, Tape recorder, Radio, Camera etc) அல்லது பிற பொருள்களின் தேவை அதிகரித்தல், இடு பொருட்கள் இன்மை, முதலீடு பற்றாக்குறை ஆகியவையும் இவ்வகை வேலையின்மைக்குக் காரணமாகிறது.
மறைமுக வேலையின்மை :
தேவைக்கு அதிகமானவர்கள் ஒரு வேலையில் இருந்தால் அது மறைமுக வேலையின்மையாகும்.
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards