12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th English Poem - 6 - Incident of the French Camp Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Prose - 6 - On the Rule of the Road Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Prose - 5 - The Chair Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Supplementary - 4 - The Midnight Visitor Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Poem - 4 - Ulysses Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Prose - 4 - The Summit Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 10/10/2019
காந்தியடிகள் தேசியத் தலைவராக உருவெடுத்து மக்களை ஒன்றிணைத்தல்
12ஆம் வகுப்பு History / வரலாறு தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , History / வரலாறு பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ History Test1.
தண்டியாத்திரை நடைபெற்ற ஆண்டு எப்போது?
1930
1931
1932
1935
2.
சௌரி சௌரா புரட்சி நடைபெற்ற ஆண்டு யாது?
1922
1921
1923
1927
3.
ஜாலியன் வாலாபாக் படுகொலை தொடர்புடைய கவர்னர் ஜெனரல் யார்?
O. டையர்
கானிங் பிரபு
பர்லோ பிரபு
இவற்றில் எவரும் இல்லை
4.
மாண்டேகு - செம்ஸ் ஃபோர்டு சீர்திருத்தங்கள் நடைபெற்ற ஆண்டு யாது ?
1919
1909
1920
1907
5.
கீழே குறிப்பிடப்பட்டுள்ள தலைவர்களில் சுயராஜ்ய கட்சியுடன் தொடர்பில்லாத தலைவர் யார்?
இராஜாஜி
சித்தரஞ்சன் தாஸ்
மோதிலால் நேரு
சத்யமூர்த்தி
6.
கூற்று: பி.ஆர். அம்பேத்கர் மஹத் சத்தியாகிரகத்தைத் தொடங்கினார்.
காரணம்: அவர் இந்துக்கள் மற்றும் முஸ்லீம்களை ஒருங்கிணைக்க முயன்றார்.
கூற்று சரி. காரணம் கூற்றை விளக்குகிறது.
கூற்று சரி. காரணம் கூற்றை விளக்கவில்லை
கூற்று சரி, காரணம் தவறு
கூற்று தவறு, காரணம் சரி
7.
பின்வரும் எந்த ஒன்று சரியாகப் பொருந்தவில்லை?
பஞ்சாப் துணை ஆளுநர் - ரெஜினால்டு டையர்
தலித் - பகுஜன் இயக்கம் - டாக்டர். அம்பேத்கர்
சுயமரியாதை இயக்கம் - ஈ.வெ.ரா. பெரியார்
சத்தியாகிரக சபை - ரௌலட் சட்டம்
8.
1923 இல் மோதிலால் நேரு மற்றும் சி.ஆர்.தாஸ் ஆல் தோற்றுவிக்கப்பட்ட கட்சியின் பெயர் என்ன?
சுயராஜ்ய கட்சி
கதார் கட்சி
சுதந்திரா கட்சி
கம்யூனிஸ்ட் கட்சி
9.
இந்தியாவின் மூவர்ணக் கொடி எப்போது ஏற்றப்பட்டது?
டிசம்பர் 31, 1929
மார்ச் 12, 1930
ஜனவரி 26, 1930
ஜனவரி 26, 1931
10.
காந்தியடிகளின் அரசியல் குரு யார்?
திலகர்
கோகலே
W.C. பானர்ஜி
M.G. ரானடே
11.
காந்தி-இர்வின் ஒப்பந்தத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டது எது?
12.
தேசியவாதிகளால் ரெளலட் சட்டம் ஏன் எதிர்க்கப்பட்டது?
13.
14.
இந்தியப் பணியாளர் சங்கம் ஏன் தோற்றுவிக்கப்பட்டது?
15.
இந்தியா வந்த வேல்ஸ் இளவரசர் எவ்வாறு வரவேற்கப்பட்டார்?
16.
மூன்று வட்டமேசை மாநாடுகளின் முடிவின் தோல்விக்குப் பிறகு ஏன் காங்கிரஸ் தடை செய்யப்பட்டது?
17.
மாற்றத்தை விரும்புபவர்கள் – மாற்றத்தை விரும்பாதவர்கள் - வேறுபடுத்துக.
18.
பிராமணரல்லாதார் இயக்கத் தலைவர்கள் காலனி அரசாங்கத்தைக் கையாள்வதில் தொடக்க கால தேசியவாதிகள் கடைப்பிடித்த அதே யுக்தியினை கையாண்டனர். விவரி.
19.
பூனா ஒப்பந்தத்தின் முக்கியத்துவம் யாது?
20.
ஜாலியன் வாலாபாக் படுகொலை குறித்து குறிப்பு எழுதுக.
21.
டாக்டர். அம்பேத்கரின் கல்விப்பணி குறித்து, குறிப்பாக ஒடுக்கப்பட்ட மக்களின் சமூக நீதிக்காக அவரின் செயலூக்கத்தை முதன்மைப்படுத்தி விளக்குக.
22.
இந்திய விடுதலைப் போரில் மகாத்மா காந்தியடிகளின் பங்கினை மதிப்பிடுக.
23.
ஒத்துழையாமை இயக்கத்தை நடைமுறைப்படுத்தும் சூழலையும் அதன் விளைவுகளையும் விவரி.
1.
(a)
1930
2.
(b)
1921
3.
(a)
O. டையர்
4.
(a)
1919
5.
(a)
இராஜாஜி
6.
(c)
கூற்று சரி, காரணம் தவறு
7.
(d)
சத்தியாகிரக சபை - ரௌலட் சட்டம்
8.
(a)
சுயராஜ்ய கட்சி
9.
(a)
டிசம்பர் 31, 1929
10.
(b)
கோகலே
11.
1. காந்தி - இர்வின் ஒப்பந்தம் 1931 மார்ச் 5-இல் கையெழுத்தானது.
2. சட்டமறுப்பு இயக்கத்தின் முடிவைக் குறிப்பதாக அது அமைந்தது.
3. 1931 ஜனவரியில் காந்தியடிகள் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டார்.
4. இரு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
5. சத்தியாகிரக பிரச்சாரத்தைக் கைவிட காந்தியடிகள் உறுதி ஏற்றார்.
6. இந்த இயக்கத்தின்போது சிறையில் அடைக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான இந்தியர்களை விடுதலை செய்ய இர்வின் ஒப்புக்கொண்டார்.
12.
1. மத்திய சட்டப்பேரவையில் ஒவ்வொரு உறுப்பினரும் இந்த மசோதாவை எதிர்த்த நிலையில் 1919 இல் மார்ச் மாதம் ரௌலட் சட்டத்தை அரசு நிறைவேற்றியது.
2. எந்தவித நீதிமன்ற விசாரணையுமின்றி எவரையும் சிறையில் அடைக்க இச்சட்டம் அதிகாரமளிக்காது.
3. 1919 இல் ரௌலட் சட்டத்திற்கு எதிராக வேலைநிறுத்தத்தில் ஈடுபடவும், எதிர்க்கவும் செய்தனர்.
13.
14.
1. அகமதாபாத் நகர மையத்தில் பணியாளர்களுக்காக மக்களை ஒன்று திரட்டும் பணி காத்திருந்தது துணி ஆலைப் பணியாளர்களுக்கும், ஆலை முதலாளிகளுக்கும் இடையே பிரச்சனை நிலவியது.
2. காந்தி இருதரப்பையும் சந்தித்துப் பேசினார்.
3. 35% ஊதிய உயர்வு வேண்டும் என்று கோரி வேலை நிறுத்தத்தில் ஈடுபடுமாறு காந்தி அறிவுரை வழங்கினார்.
4. தொழிலாளர்களுக்கு ஊக்கம் தரும் வகையில் காந்தியடிகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் இறங்கினார்.
15.
1. இந்தியாவின் பல நகரங்களுக்கு 1921-இல் வேல்ஸ் இளவரசர் மேற்கொண்ட பயணமும் புறக்கணிக்கப்பட்டது.
2. இந்திய மக்களின் விசுவாச உணர்வை வேல்ஸ் இளவரசரின் பயணம் தூண்டும் என்று எதிர்பார்த்த காலனி ஆதிக்க அரசின் கணக்கு தவறாகப் போனது.
3. நாடு முழுவதும் தொழிலாளிகளும் விவசாயிகளும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
16.
1. சட்ட மறுப்பு இயக்கத்தை மீண்டும் கையில் எடுப்பது என்று காங்கிரஸ் தீர்மானித்தது பொருளாதார வீழ்ச்சி காரணமாகக் குறிப்பாக விவசாயிகள் உட்பட பொதுவாகவே நாட்டு மக்களின் பொருளாதார நிலைமை மோசமடைந்தது.
2. தேசியவாதம் தொடர்பான பிரசுரங்கள் அனைத்தும் சட்டத்துக்குப் புறம்பானவை என அறிவிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டன.
3. இந்த இயக்கம் பொதுவாக மந்த நிலையை அடைந்து 1933 மே மாதம் அதிகாரப்பூர்வமாக
நிறுத்தப்பட்டது.
4. பின்னர் மே 1934-இல் முற்றிலும் முடிவுக்கு வந்தது.
17.
1. சட்டப்பேரவையைக் கைப்பற்றி தேசியவாத உணர்வூட்டி அதன் செயல்பாடுகளை முடக்கும் ஆற்றலைத் தேசியவாதிகள் வெளிப்படுத்தினர்.
2. சுயராஜ்யம் வேண்டுவோர் மற்றும் மாற்றம் வேண்டுவோர் (pro - changers) என்று இந்த குழு அழைக்கப்பட்டது.
3. சட்டப்பேரவை நுழைவை உதித்த மற்றொரு குழு காந்தி வழியைப் பின்பற்றி மக்களை ஒன்று திரட்டும் பணிகளில் ஆர்வம் காட்டியது.
4. எந்த மாற்றமும் தேவையில்லை என்று இந்த அணியை மாற்றம் விரும்பாதோர் - No - Changes என்று அழைக்கப்பட்டார்கள்.
18.
1. பல்வேறு அடுக்குகள் கண்ட இந்திய சமூகமும் அதனுள் இருந்த முரண்பாடுகளும் உயர் வகுப்பு ஆளுமையைக் கேள்வி கேட்டும் சாதி அமைப்புகள் மற்றும் இயக்கங்கள் தொடங்கப்பட ஏதுவாக அமைந்தன.
2. பிராமணர் அல்லாத தலைவர்களால் நடத்தப்பட்ட இந்த இயக்கம் பிராமணர்கள் மற்றும் இதர உயர் வகுப்பினரின் மேன்மை குறித்துக் கேள்வி எழுப்பின.
3. காலனி ஆதிக்க நிர்வாகிகள் மற்றும் ஏற்படுத்தப்பட்ட கல்வி நிலையங்கள் ஆகியன மறைமுகமாக அவர்களின் தோற்றத்துக்கு வழிவகுத்தன.
4. காலனி ஆதிக்க காலத்தில் இருந்த உயர் வகுப்பு ஆடவர் அனைவரும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் பூர்வீக மக்களுக்குத் திறந்த மனதுடன் நடந்துகொண்டனர்.
19.
1. தீண்டத்தகாதோருக்குத் தனித் தொகுதிகள் வழங்கப்பட்டுள்ளதைத் தனது வாழ்நாள் முழுவதும் காந்தி அறிவித்தார்.
2. காந்தியின் உயிரைக் காப்பாற்றும் அழுத்தம் அம்பேத்கருக்கு ஏற்பட்டது, ஆலோசனை கூட்டம் பிரார்த்தனை நடந்தது.
3. அம்பேத்கர் மற்றும் காந்தி இடையே ஏற்பட்ட புதிய ஒப்பந்தம் 1932-இல் பூனா ஒப்பந்தம் என்று அழைக்கப்பட்டது.
20.
1. நாடு முழுவதும் நடந்த மக்கள் போராட்டங்கள் மற்றும் மக்களிடம் காணப்பட்ட மகத்தான தன்னெழுச்சி காரணமாக காலனி அரசு ஆத்திரமடைந்தது.
2. 1919 ஏப்ரல் 13 இல் அமிர்தசரஸ் நகரில் ஜாலியன் வாலாபாக் பகுதியில் நிராயுதபாணிகளான மக்கள் திரள் மீது மிகக் கொடுமையான அரசியல் குற்றம் நடத்தப்பட்டது.
3. துப்பாக்கிகளின் குண்டுகள் தீரும் வரை சுட்டுமாறு ஜெனரல் டையர் உத்தரவிட்டார்.
4. அரசு தகவல்படி 379 பேர் இறப்பு என்று கூறப்பட்டது.
5. இதற்கு எதிராக தாகூர் தனது "நைட்ஹுட்" பட்டத்தை துறந்தார்.
21.
1. 1920 களில் ஒடுக்கப்பட்டவர்களின் போராட்டங்களின் மையப்புள்ளியாக அம்பேத்கர் விளங்கினார்.
2. மஹர் சாதியின் ராணுவவீரரின் மகனாகப் பிறந்தார் டாக்டர். அம்பேத்கர்.
3. எல்பின்ஸ்டன் கல்லூரியில் சேர்ந்த அம்பேத்கர் கல்வி உதவித்தொகை பெற்று 1912 -ல் பட்டதாரி ஆனார்.
4. பரோடா அரசின் கல்வி உதவித்தொகை பெற்ற அவர் அமெரிக்கா சென்று பட்டமேற்படிப்பு பட்டத்தையும்.
5. கொலம்பியா பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டத்தையும் பெற்றார்.
6. சட்டம் மற்றும் பொருளாதார படிப்புகளுக்காக லண்டன் சென்றார்.
7. 1916- இல் மானுடவியல் தொடர்பான சர்வதேச மாநாட்டில் கலந்து கொண்டு, இந்தியாவின் சாதிகள் என்ற தலைப்பில் கட்டுரையை சமர்ப்பித்தார்.
8. தீண்டாமை கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட மக்களுக்கு தனித்தொகுதிகள் மற்றும் இடங்களின் ஒதுக்கீடு வேண்டும் என்று வாதிட்டார்.
9. அம்பேத்கர் புதிய பத்திரிகைகள் மற்றும் அமைப்புகளைக் தோற்றுவித்தார்.
22.
1. 1917- இல் சம்பரானில் இருந்த விவசாயிகளின் வேண்டுகோளை ஏற்று இந்திய மக்களை ஒன்றிணைக்கும் முதல் முயற்சியை காந்தியடிகள் மேற்கொண்டார்.
2. கேதா போராட்டம் : 1918 நில வருவாய் வசூலை ரத்து செய்யுமாறு காலனி ஆட்சி நிர்வாகத்திடம் அவர்கள் கோரினர்.
3. ரௌலட் சட்டத்திற்கு எதிராக ஒத்துழையாமை இயக்கத்தை ஆகஸ்ட் 31. 1920 ல் தொடங்கினர்.
4. சௌரி சௌரா சம்பவம் (1922) காரணமாக ஒத்துழையாமை இயக்கத்தை காந்தி திரும்பப் பெற்றார்.
5. 1930 ஆம் ஆண்டு தொடங்கிய சட்டமறுப்பு இயக்கம்.
6. 1930 தண்டி பயணம் தொடங்குதல் உப்பு மீது வரியைக் குறைக்க செய்தல்.
7. 1931 காந்தி இர்வின் உடன்படிக்கை மேற்கொள்ளுதல்.
8. 1942, வெள்ளையனே வெளியேறு இயக்கம். போன்ற பல போராட்டங்கள் மூலம் காந்தி இந்திய விடுதலைக்கு முக்கிய பங்கு ஆற்றியுள்ளார்.
23.
1. கிலாபத் மாநாட்டில் காந்தியடிகள் வற்புறுத்தலின் பேரில் 1920 ஆகஸ்ட் 31 முதல் ஒத்துழையாமை இயக்கத்தை தொடங்க முடிவு செய்யப்பட்டது.
2. அரசு கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசு நீதிமன்றங்களை புறக்கணிக்கும் திட்டத்தை அலகாபாத்தில் கூடிய அனைத்து கட்சி கூட்டம் முடிவு செய்தது.
3. 1920 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் கல்கத்தாவில் நடந்த காங்கிரஸ் சிறப்பு அமர்வில் காலனி ஆதிக்க அரசுடன் ஒத்துழையாமையைக் கடைப்பிடித்தது.
4. காந்தியடிகள் யோசனைகளை ஏற்றுக்கொள்ளும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
5. கிலாபத் மற்றும் பஞ்சாப் குறைகள் சரிசெய்யப்பட்டு தன்னாட்சி அரசு நிறுவப்படும் வரை இந்த ஒத்துழையாமையைக் கடைபிடிக்க உறுதி ஏற்கப்பட்டது.
6. 1920 ஆம் ஆண்டு நாக்பூரில் நிகழ்ந்த காங்கிரஸ் அமர்வில் முந்தைய தீர்மானங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.
7. காங்கிரஸ் கமிட்டிகளை அங்கீகரித்து அமைப்பதற்கு வகை செய்யும் மற்றொரு முக்கிய தீர்மானம் நாக்பூர் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டது.
8. இதனால் பெரும் எண்ணிக்கையிலான பணியாளர்கள் இந்த இயக்கத்தில் சேர்ந்தனர்.
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th English Supplementary - 3 - The Hour of Truth (Play) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Poem - 3 - All the World’s a Stage Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Prose - 3 - In Celebration of Being Alive Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Supplementary - 2 - Life of Pi Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards