12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th English Poem - 6 - Incident of the French Camp Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Prose - 6 - On the Rule of the Road Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Prose - 5 - The Chair Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Supplementary - 4 - The Midnight Visitor Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Poem - 4 - Ulysses Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Prose - 4 - The Summit Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 27/09/2019
இந்தியாவில் தேசியத்தின் எழுச்சி
12ஆம் வகுப்பு History / வரலாறு தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , History / வரலாறு பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ History Test1.
ஒப்பந்தக் கூலித் தொழிலாளர் முறை முதலில் எந்த நாட்டின் இருந்து தொடங்கப்பட்டது?
இங்கிலாந்து
இந்தியா
இலங்கை
ஜப்பான்
2.
கிழக்கு இந்திய கம்பெனி எப்போது தொடங்கப்பட்டது?
1600
1605
1615
1639
3.
காந்தியின் அரசியல் குரு என்று அழைக்கப்படுபவர் யார்?
ஜின்னா
நேரு
கோகலே
சுபாஷ்
4.
கூற்று: தாதாபாய் நெளரோஜி இந்திய தேசிய காங்கிரஸின் தலைவராக மூன்று முறை தேர்வு செய்யப்பட்டார்.
காரணம்: 1905ஆம் ஆண்டு வரையில் இந்திய விடுதலை இயக்கம் அரசமைப்புவாதிகளின் கட்டுப்பாட்டிலிருந்தது.
கூற்று, காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது
கூற்று, காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை
கூற்று சரி ஆனால் காரணம் தவறு
கூற்று தவறு ஆனால் காரணம் சரி
5.
“வறுமையும் பிரிட்டனுக்கொவ்வாத இந்திய ஆட்சியும்” (Poverty and Un-British Rule in India) என்ற நூலை எழுதியவர் யார்?
பாலகங்காதர திலகர்
கோபால கிருஷ்ண கோகலே
தாதாபாய் நெளரோஜி
எம்.ஜி. ரானடே
6.
இந்திய தேசிய காங்கிரஸின் முதல் தலைவர் _______.
சுரேந்திரநாத் பானர்ஜி
பத்ருதீன் தியாப்ஜி
A.O. ஹியூம்
W.C. பானர்ஜி
7.
இந்திய தேசியக் காங்கிரஸை நிறுவியவர் _______.
சுபாஷ் சந்திர போஸ்
காந்தியடிகள்
A.O. ஹியூம்
பாலகங்காதர திலகர்
8.
பின்வருவனவற்றுள் எது சரியாகப் பொருந்தியுள்ளது?
ஆங்கிலக் கல்விச் சட்டம் - 1843
அடிமைமுறை ஒழிப்பு - 1859
சென்னைவாசிகள் சங்கம் - 1852
இண்டிகோ கலகம் - 1835
9.
மாறுபட்ட ஒன்றைத் தேர்வு செய்க.
வில்லியம் ஜோன்ஸ்
சார்லஸ் வில்கின்ஸ்
மாக்ஸ் முல்லர்
அரவிந்தோ கோஷ்
10.
காந்தியடிகள் தென்னாப்பிரிக்காவிலிருந்து எந்த ஆண்டு இந்தியா திரும்பினார்?
1915
1916
1917
1918
11.
தொடக்க கால முக்கிய தேசியவாதிகளைக் கண்டறிக.
12.
ஆங்கிலப் பாராளுமன்றத்திற்குச் சென்னைவாசிகள் சங்கத்தினர் அளித்த கோரிக்கைகள் என்ன?
13.
இல்பர்ட் மசோதாவின் முக்கியத்துவத்தை விவாதி.
14.
அவுரி கலகம் குறித்து குறிப்பு வரைக.
15.
தேசியம் என்றால் என்ன?
16.
17.
தொடக்க காலத்தில் இலங்கைக்குத் தொழிலாளர்களை அனுப்பி வைக்கப்பட்டது குறித்து எழுதுக.
18.
மே 1884இல் நடைபெற்ற சென்னை மகாஜன சங்கத்தின் தொடக்கவிழாவில் பங்கேற்ற முக்கியத் தலைவர்களின் பெயர்களை எழுதுக.
19.
பிரிட்டிஷ் இந்தியாவில் தேசிய உணர்வினை உருவாக்கியதில் பத்திரிகைகளின் பங்கினை எழுதுக.
20.
மெக்காலேயின் ‘இந்தியக் கல்வி குறித்த குறிப்புகளை’ ஆய்க.
21.
இந்திய தேசிய காங்கிரசின் நோக்கங்களையும் பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து விடுதலை பெறுவதற்கு ஆரம்ப கால தேசியவாதிகள் அளித்த பங்கினையும் விளக்குக.
22.
23.
இந்திய நடுத்தர வர்க்கத்தில் மேற்கத்தியக் கல்வியின் தாக்கத்தையும் பின்னர் அது இந்தியச் சமூகத்தைச் சீர்த்திருத்தவும் மற்றும் மீட்டுருவாக்கம் செய்திட ஆற்றிய பங்கினை விவாதிக்கவும்.
24.
இந்திய தேசிய காங்கிரஸ் மாநாடுகள் நடைபெற்ற பின்வரும் இடங்களை இந்திய வரைபடத்தில் குறிக்கவும்.
1. பம்பாய்
2. கல்கத்தா
3. சென்னை
4. அகமதாபாத்
5. லக்னோ
6. கான்பூர்
7. சூரத்
8. லாகூர்
9. பூனா
10. அலகாபாத்
1.
(c)
இலங்கை
2.
(a)
1600
3.
(c)
கோகலே
4.
(c)
கூற்று சரி ஆனால் காரணம் தவறு
5.
(c)
தாதாபாய் நெளரோஜி
6.
(d)
W.C. பானர்ஜி
7.
(c)
A.O. ஹியூம்
8.
(c)
சென்னைவாசிகள் சங்கம் - 1852
9.
(d)
அரவிந்தோ கோஷ்
10.
(a)
1915
11.
பிபின் சந்திரபால், பாலகங்காதர திலகர், லாலா லஜபதிராய், சுரேந்திரநாத் பானர்ஜி, தாதாபாய் நௌரோஜி, ஜி. சுப்பிரமணியம், விஜயராகவாச்சாரி, அனந்தா சார்லு, ரங்கையா, பாலாஜிராவ், சேலம் ராமசாமி ஆகியவர்கள் தொடக்ககால முக்கிய தேசியவாதிகள் ஆவார்கள்.
12.
1. சென்னைவாசிகள் சங்கம் 1852 டிசம்பரில் சமர்ப்பித்த மனுவில் ரயத்துவாரி, ஜமீன்தாரி முறைகள் வேளாண்மை வர்க்கத்தினரைக் கடும் துன்பங்களுக்கு உள்ளாக்கியதைச் சுட்டிக்காட்டியது
2. ஜமீன்தார்கள், கம்பெனியின் அதிகாரிகள் ஆகியோரின் அடக்குமுறை சார்ந்த தலையீட்டிலிருந்து விவசாயிகளை விடுவிக்கப் பண்டைய கிராமமுறையை மீட்டெடுக்க வலியுறுத்தியது.
13.
1. ரிப்பன் வைஸ்ராயாக இருந்தபோது இல்பர்ட் மசோதா கொண்டுவரப்பட்டது.
2. இந்திய நீதிபதிகள் ஐரோப்பியர்களை விசாரிக்க அதிகாரம் பெற்றனர்.
3. இதை ஐரோப்பியர்கள் கடுமையாக எதிர்த்தார்கள்.
4. பின்னர் இது திருத்தம் செய்யப்பட்டது.
14.
1. 1859-60 இல் நடைபெற்ற "இண்டிகோ" புரட்சி கம்பெனியின் அடக்குமுறைக் கொள்கைக்கு எதிரான இந்திய விவசாயிகளின் ஒரு எதிர் வினையாகும்.
2. ஐரோப்பியர்களுக்குச் சொந்தமாயிருந்த நிலங்களில் இந்தியக் குத்தகை விவசாயிகள் அவுரியைப் பயிரிடக் கட்டாயப்படுத்தப்பட்டனர்.
3. சாயம் தயாரிக்க இச்செடிகள் அதிகம் தேவைப்பட்டது.
15.
தேசியம்: விரிவான தளத்தில் தேசியமென்பது ஒரு நாட்டிற்கு விசுவாசமாகவும் பக்தியோடும் இருத்தல் எனப் பொருள் கொள்ளப்படுகிறது. அது தனது நாட்டை ஏனைய நாடுகளைக் காட்டிலும் உயர்வான இடத்தில் வைத்துப் பார்த்து அல்லது ஏனைய நாடுகளுக்குப் போட்டியாக தனது நாட்டின் பண்பாடும் மற்றும் விருப்பங்களின் வளர்ச்சியில் சிறப்புக் கவனம் செலுத்தும் ஒரு தேசிய உணர்வு அல்லது மனப்போக்காகும்.
16.
17.
1. ஆங்கில பேரரசின் காலனி பகுதியான இலங்கையின் ஆளுநர் 1815-இல் சென்னை மாகாண ஆளுநருக்கு கடிதம் எழுதினார். அதில் பெருந்தோட்டங்களில் வேலை செய்யக் கூலிகளை அனுப்பிவைக்க கேட்டுக்கொண்டார்.
2. 1833, 1843 ஆகிய ஆண்டுகளில் ஏற்பட்ட பஞ்சங்கள், அரசின் தூண்டுதல் இல்லாமலேயே மக்கள் புலம் பெயர்ந்து செல்லக் கட்டாயப்படுத்தின.
3. 1837 இல் தமிழ்நாட்டிலிருந்து குடிபெயர்ந்து இலங்கையில் காபித்தோட்டங்களில் சுமார் 10,000 தொழிலாளிகள் வேலை செய்தனர்.
18.
1. ஓர் அரசியல் சார்ந்த அமைப்பின் தேவை உணரப்பட்டது. அதன் விளைவாக மே 16,1884-இல் சென்னை மகாஜன சங்கம் நிறுவப்பட்டது.
2. தொடக்கவிழாவில் பங்குபெற்ற முக்கிய தலைவர்கள் ஜி. சுப்பிரமணியம், விஜயராகவாச்சாரி, அனந்தா சார்லு, ரங்கையா, பாலாஜிராவ், சேலம் ராமசாமி ஆகியவர்கள் ஆவார்கள்.
19.
1. இந்தியாவில் அச்சு இயந்திரம் அறிமுகம் செய்யப்பட்டமை மிக முக்கிய நிகழ்வாகும்.
2. நவீன சிந்தனைகளைப் பரப்ப மக்களுக்கு பத்திரிக்கைகள் உதவின.
3. பத்திரிகைகள் அரசியலை விமர்சனம் செய்யத் தொடங்கின. நாட்டினைப் பாதிக்கும் பல்வேறு பிரச்சனைகள் குறித்து மக்களிடம் பேசின.
4. தன்னாட்சி, மக்களாட்சி, குடிமை உரிமைகள், தொழில்மயமாக்குதல் போன்ற நவீன சிந்தனைகளை மக்களுக்குப் பரப்ப பத்திரிகைகள் உதவின.
5. தி இந்தியன் மிரர், தி இந்து, சுதேசமித்திரன் ஆகியன முக்கியத்துவம் வாய்ந்த பத்திரிகைகள் ஆகும்.
20.
1. T.B. மெக்காலே 1834 - 1838 வரை கவர்னர் ஜெனரலின் குழுவின் முதல் சட்ட உறுப்பினராக அங்கம் வகித்தவர்.
2. 1823-இல் பொதுக் கல்விக்கான பொதுக்குழு உருவாக்கப்பட்டது.
3. 1835- இல் தனது புகழ்பெற்ற இந்திய கல்வி குறித்த குறிப்புகள் எனும் குறிப்புகளை வெளியிட்டார்.
4. இக்குறிப்புகளில் ஆங்கிலக்கல்வி முறையில் மேற்கத்தியக்கல்வி கற்பதற்கு ஆதரவாக வாதிட்டார்.
5. இந்தியாவில் ஆங்கிலம் வளர்வதற்கு முக்கிய காரணமாகியது, மேலும் கல்லூரிகளையும், பல்கலைக்கழகங்களையும் இந்தியாவில் தொடங்கியது.
6. 1857 இல் பம்பாய், சென்னை, கல்கத்தா ஆகிய இடங்களில் பல்கலைக்கழகங்கள் நிறுவப்பட்டன.
21.
1. 1875 க்கும் 1885 க்கும் இடைப்பட்ட காலத்தில் இந்தியாவில் ஆங்கிலேயரின் கொள்கைக்கு எதிராக பல போராட்டங்கள் நடைபெற்றன.
2. 1877 இல் அரசுப் பணிகள் இந்திய மயமாக்கப்பட வேண்டுமென்ற கோரிக்கை ஓங்கி ஒலித்தது.
3. இந்திய தேசிய காங்கிரஸ் "இந்தியா ஒரே நாடு" எனும் கருத்து அவ்வமைப்பின் பெயரில் பிரதிபலித்தது.
4. இந்திய தேசியக் காங்கிரஸ் 1885 டிசம்பர் 28-இல் பம்பாயில் உருவாக்கப்பட்டது.
5. W.C. பானர்ஜி இவ்வமைப்பின் முதல் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார்.
6. இவ்வமைப்பு தேசியவாதம் எனும் கருத்தையும் அறிமுகம் செய்தது.
7. இந்தியரை ஒரே நாடாக ஒருங்கிணைப்பதே இந்திய தேசிய காங்கிரசின் இன்றியமையா நோக்கங்களில் ஒன்றாக இருந்தது.
8. இந்தியர்கள் தாங்கள் அனைவரும் ஒரே நாட்டின் குடிமக்கள் என உணர்ந்தால் மட்டுமே காலனியாட்சிக்கு எதிரான போராட்டங்கள் வெற்றி பெறுமென்பதை இந்திய தேசிய காங்கிரஸ் நிர்வாகிகள் நன்குணர்ந்தனர்.
9. பிபின் சந்திரபால், பாலகங்காதர திலகர், லாலா லஜபதிராய் போன்ற ஆரம்பகால தேசியவாதிகள் மனுக்கள் எழுதுவது, மன்றாடிக் கேட்டுக்கொள்வது போன்றவற்றிற்கு மாறாக தீவிரமான அணுகுமுறைகளை பரிந்துரைத்தனர்.
22.
23.
1. ஆங்கிலேயர்கள் தங்களின் நலனுக்காக கற்றறிந்த இந்திய நடுத்தர வர்க்கத்தை உருவாக்கினார்கள்.
2. அதை "பாபு வர்க்கமென" ஏளனப்படுத்தினார்கள்.
3. பின்னர் அந்த வர்க்கத்தினரே இந்தியாவின் புரட்சிகர முற்போக்கான படித்த வர்க்கமாக மாறி விடுதலைக்கு மக்களைத் திரட்டினர்.
4. ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்ட இந்நவீன சமூக வர்க்கம் இந்தியாவில் வணிக வர்த்தகச் சமூகங்கள், நிலப்பிரபுக்கள், லேவாதேவி செய்வோர் ஆங்கிலம் பயின்ற ஏகாதிபத்திய அரசின் துணை நிர்வாகப் பிரிவுகளில் பணியமர்த்தப்பட்டோர், மருத்துவர்கள், வழக்கறிஞர்கள் ஆகியோரை உள்ளடக்கியதாய் இருந்தது.
5. மேற்சொல்லப்பட்ட வர்க்கங்களை சேர்ந்த மக்கள் ஏனைய மக்களிடையே நாட்டுப்பற்றை வளர்த்தெடுப்பதில் சிறப்பான பங்காற்றினர்.
6. நவீன இந்தியக் கற்றறிந்தோர் பிரிவைச் சேர்ந்த ராஜாராம் மோகன்ராய், ஈஸ்வர சந்திர வித்யாசாகர், சுவாமி விவேகானந்தர் போன்றவர்கள் இந்திய அரசியல், சமுதாய, மத, இயக்கங்களுக்குத் தலைமையேற்றனர்.
7. மேலை நாட்டு அறிஞர்களான ரூஸோ, கரிபால்டி, மார்க்ஸ் ஆகியோர்களால் சோசலிசம் போன்ற தத்துவக் கருத்துக்களைக் கற்றறிந்த இந்தியர்கள் அறிந்து கொண்டனர்.
24.
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th English Supplementary - 3 - The Hour of Truth (Play) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Poem - 3 - All the World’s a Stage Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Prose - 3 - In Celebration of Being Alive Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Supplementary - 2 - Life of Pi Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards