12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 29/10/2019
12ஆம் வகுப்பு Maths / கணிதவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Maths / கணிதவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Maths Test1.
\(p \rightarrow q \equiv \neg p \vee q\) -க்கு சமானமானவை பண்பை நிறுவுக.
2.
தீர்க்க: \(\frac { dy }{ dx } =\sqrt { 4x+2y-1 } .\)
3.
f (x)= x - sin x என்ற சார்பு மெய் எண் கோட்டில் ஏறும் என நிறுவுக. மேலும் அதன் இடம் சார்ந்த அறுதி மதிப்புகளை ஆராய்க.
4.
மதிப்பு காண்க
\(\cos\left( { \sin }^{ -1 }\left( \frac { 4 }{ 5 } \right) -{ \tan }^{ -1 }\left( \frac { 3 }{ 4 } \right) \right) \)
5.
9x9 + 2x5 − x4 − 7x2 + 2 = 0 எனும் பல்லுறுப்புக்கோவை சமன்பாட்டிற்கு குறைந்தபட்சம் ஆறு மெய்யற்ற கலப்பெண் மூலங்கள் இருக்கும் எனக் காட்டுக.
6.
k என்பது மெய்யெண் எனில், 2x2+kx+k =0 எனும் பல்லுறுப்புக் கோவைச் சமன்பாட்டின் மூலங்களின் இயல்பை, k வழியாக ஆராய்க.
7.
k-ன் எம்மதிப்புகளுக்கு பின்வரும் சமன்பாட்டுத் தொகுப்பு kx − 2y + z =1, x − 2ky + z = −2, x − 2y + kz =1
(i) யாதொரு தீர்வும் பெற்றிராது
(ii) ஒரே ஒரு தீர்வைப் பெற்றிருக்கும்
(iii) எண்ணிக்கையற்ற தீர்வுகளைப் பெற்றிருக்கும் என்பதனை ஆராய்க.
8.
adj A = \(\left[ \begin{matrix} -1 & 2 & 2 \\ 1 & 1 & 2 \\ 2 & 2 & 1 \end{matrix} \right] \) எனில் A-1 -ஐக் காண்க.
9.
A = \(\left[ \begin{matrix} 8 & -6 & 2 \\ -6 & 7 & -4 \\ 2 & -4 & 2 \end{matrix} \right] \) எனில் A(adj A) = (adj A)A = |A| I3 என்பதைச் சரிபார்க்க.
10.
பின்வரும் சமன்பாடுகளின் கூம்பு வளைவின் வகையைக் கண்டறிந்து அவற்றின் மையம், குவியங்கள், முனைகள் மற்றும் இயக்குவரைகளைக் காண்க :
\(\frac { (y-{ 2) }^{ 2 } }{ 25 } -\frac { (x+1)^{ 2 } }{ 16 } =1\)
11.
\(\vec { r } =(\hat { i } +3\hat { j } -\hat { k } )+t(2\hat { i } +3\hat { j } +2\hat { k } )\) மற்றும் \(\frac { x-2 }{ 1 } =\frac { y-4 }{ 2 } =\frac { z+3 }{ 4 } \) என்ற கோடுகள் வெட்டிக்கொள்ளும் புள்ளி வழியாகச் செல்வதும், மற்றும் இவ்விருகோடுகளுக்கும் செங்குத்தானதுமான நேர்க்கோட்டின் துணையலகு வெக்டர் சமன்பாட்டைக் காண்க.
12.
ஒரு தொங்கு பாலத்தின் 60மீ சாலைப்பகுதிக்கு பரவளைய கம்பி வடம் படத்தில் உள்ளவாறு பொறுத்தப்பட்டுள்ளது. செங்குத்துக் கம்பி வடங்கள் சாலைப்பகுதியில் ஒவ்வொன்றுக்கும் 6மீ இடைவெளி இருக்குமாறு அமைக்கப்பட்டுள்ளது. முனையிலிருந்து முதல் இரண்டு செங்குத்து கம்பி வடங்களுக்கான நீளத்தைக் காண்க.

13.
A =\(\left[ \begin{matrix} 0 & -3 \\ 1 & 4 \end{matrix} \right] ,B=\left[ \begin{matrix} -2 & -3 \\ 0 & -1 \end{matrix} \right] \) எனக்கொண்டு (AB)-1 = B-1A-1 என்பதைச் சரிபார்க்க.
14.
பின்வருவனவற்றின் காலம் மற்றும் வீச்சு காண்க.
y = -sin\((\frac{1}{3}x)\)
15.
\(\vec { r } =(2\hat { i } -\hat { j } +\hat { k } )+t(\hat { i } +2\hat { j } -2\hat { k } )\) என்ற கோட்டிற்கு \(\vec { r } .(6\hat { i } +3\hat { j } +2\hat { k } )=8\) என்ற தளத்திற்கும் இடைப்பட்ட கோணம் காண்க.
16.
பின்வரும் பல்லுறுப்புக்கோவைச் சமன்பாடுகளின் மூலங்களின் தன்மை பற்றி ஆராய்க:
x2018+ 1947x1950+ 15x8 + 26x6 + 2019 = 0
17.
\(2+\sqrt { 3 } \)i ஐ மூலமாகக் கொண்ட குறைந்தபட்ச படியுடன் விகிதமுறு கெழுக்களுடைய ஓர் பல்லுறுப்புக்கோவைச் சமன்பாட்டைக் காண்க.
18.
பரவளையம் y2 = 4ax-ன் செவ்வகல நீளம் காண்க.
19.
\(\left| z \right| \) = 3 எனில் \(7\le \left|z +6-8i \right| \le 13\) எனக் காட்டுக.
20.
A=\(\left[ \begin{matrix} 0 & 5 \\ -1 & 6 \end{matrix} \right] \) என்ற பூச்சியமற்றக் கோவை அணிக்கு காஸ்-ஜோர்டன் நீக்கல் முறை மூலம் நேர்மாறு காண்க.
21.
பின்வருவனவற்றை சுருக்குக.
\(\sum _{ n=1 }^{ 10 }{ { i }^{ n+50 } } \)
22.
y = ax4 + bx2 , ab > 0 என்ற வளைவரை _______.
கிடைமட்டத் தொடுகோடு பெறவில்லை
மேற்புறமாக குழிவு
கீழ்புறமாக குழிவு
வளைவு மாற்றப் புள்ளியை பெறவில்லை
23.
f(x) = 2cos 4x என்ற வளைவரைக்கு x =\(\frac { \pi }{ 12 } \)-ல் செங்கோட்டின் சாய்வு _______.
-4\(\sqrt { 3 } \)
−4
\(\frac { \sqrt { 3 } }{ 12 } \)
4\(\sqrt { 3 } \)
24.
ஒரு கோளத்தின் கன அளவு வினாடிக்கு 3\(\pi\)செமீ3 வீதத்தில் அதிகரிக்கிறது. ஆரம் \(\frac { 1 }{ 2 } \) செ.மீ ஆக இருக்கும்போது ஆரத்தின் மாறுபாட்டு வீதம்_______.
3 செ.மீ/வி
2 செ.மீ/வி
1 செ.மீ/வி
\(\frac { 1 }{ 2 } \)செ.மீ/வி
25.
If \(\frac { \Gamma (n+2) }{ \Gamma (n) } =90\) எனில் n இன் மதிப்பு _______.
10
5
8
9
26.
\(\frac { { d }y }{ { dx } } +p(x)y=0\) -ன் தீர்வு _______.
\(y={ ce }^{ \int { pdx } }\)
\(y={ ce }^{ -\int { pdx } }\)
\(x={ ce }^{- \int { pdy } }\)
\(x={ ce }^{ \int { pdy } }\)
27.
v (x,y) = log(ex + ey), எனில் \(\frac { \partial v }{ \partial x } +\frac { \partial v }{ \partial y } \) -ன் மதிப்பு _______.
ex + ey
\(\frac { 1 }{ { e }^{ x }+{ e }^{ y } } \)
2
1
28.
சராசரி 0.4 கொண்ட ஒரு பெர்னோலி பரவல் X எனில் (2X −3)-ன் பரவல் _______.
0.24
0.48
0.6
0.96
29.
\(\vec { a } \) மற்றும் \(\vec { b } \) என்பன இணை வெக்டர்கள் எனில் \(\left[ \vec { a } ,\vec { c } ,\vec { b } \right] \) ன் மதிப்பு _______.
2
-1
1
0
30.
|z1| = 1, |z2| = 2, |z3| = 3 மற்றும் |9z1z2 + 4z1z3 + z2z3| = 12 எனில், |z1 + z2 + z3| –ன் மதிப்பு _______.
1
2
3
4
31.
விகிதமுறு மூலத் தேற்றத்தின்படி பின்வருவனவற்றுள் எந்த எண் 4x7+2x4-103-5 என்பதற்கு சாத்தியமற்ற விகிதமுறு பூச்சியமாகும்?
-1
\(\frac{5}{4}\)
\(\frac{4}{5}\)
5
32.
(1, -2) என்ற புள்ளி வழியாகவும் (3, 0) என்ற புள்ளியில் x -அச்சைத் தொட்டுச் செல்வதுமான வட்டம் பின்வரும் புள்ளிகளில் எந்தப் புள்ளி வழியாகச் செல்லும்?
(-5, 2)
(2, -5)
(5, -2)
(-2, 5)
33.
34.
நேர்க்கோடு 2x + 4y = 3-க்கு இணையாக x2 + y2 − 2x − 2y + 1 = 0 என்ற வட்டத்தின் செங்கோட்டுச் சமன்பாடு _______.
x + 2y = 3
x + 2y + 3 = 0
2x + 4y + 3 = 0
x − 2y + 3 = 0
35.
x-அச்சை (1, 0) என்ற புள்ளியில் தொட்டுச் செல்வதும் (2, 3) என்ற புள்ளிவழிச் செல்வதுமான வட்டத்தின் விட்டம் _______.
\(\frac { 6 }{ 5 } \)
\(\frac { 5 }{ 3 } \)
\(\frac { 10 }{ 3 } \)
\(\frac { 3 }{ 5 } \)
36.
\(\sum _{ i=1 }^{ 13 }{ ({ i }^{ n }+{ i }^{ n-1 }) } \) –ன் மதிப்பு _______.
1 + i
i
1
0
37.
A=\(\left[ \begin{matrix} 2 & 3 \\ 5 & -2 \end{matrix} \right] \) மற்றும் λA-1 = A எனில், λ -ன் மதிப்பு ______.
17
14
19
21
38.
ATA-1 ஆனது சமச்சீர் எனில் A2= ______.
A-1
(AT)2
AT
(A-1)2
39.
|adj (adj A)| = |A|9 எனில், சதுர அணி A-யின் வரிசையானது ______.
3
4
2
5
40.
tan-1 x-cot-1 x = tan-1\(\left( \frac { 1 }{ \sqrt { 3 } } \right) \) என்ற சமன்பாட்டிற்கு _______.
தீர்வு இல்லை
ஒரேயொரு தீர்வு
இரு தீர்வுகள்
எண்ணற்றத் தீர்வுகள்
41.
sin-1(cosx), 0\(\le x \le \pi \) -ன் மதிப்பு _______.
\(\pi -x\)
\(x-\frac { \pi }{ 2 } \)
\(\frac { \pi }{ 2 } -x\)
\(x-\pi \)
1.
| p | q | ㄱp | p ➝ q | ㄱp ν q |
| T | T | F | T | T |
| T | F | F | F | F |
| F | T | T | T | T |
| F | F | T | T | T |
மெய்மை அட்டவணையில் p → q மற்றும் ㄱp ν q ஆகியவற்றிற்கான நிரல்கள் முழுவதும் ஒரே மாதிரியாக உள்ளது. எனவே அவை சமானமானவை ஆகும்.
2.
கொடுக்கப்பட்ட சமன்பாடு \(\frac { dy }{ dx } =\sqrt { 4x+2y-1 } .\)
z = 4x + 2y - 1 எனப் பிரதியிடக் கிடைப்பது
\(\frac { dy }{ dx } =4+2\frac { dy }{ dx } =4+2\sqrt { z } \)
எனவே, \(\frac { dz }{ 4+2\sqrt { z } } =dx\).
தொகையிட, \(\int { \frac { dz }{ 4+2\sqrt { z } } } =x+C.\)
z = u2 எனப்பிரதியிட
\(\int { \frac { dz }{ 4+2\sqrt { z } } } =\quad \int { \frac { udu }{ u+2 } } =u-2log\left| u+2 \right| +C,\)
அல்லது \(\sqrt { z } -2log\left| \sqrt { z } +2 \right| =x+C\)
z = 4x + 2y -1 எனப் பிரதியிட, நாம் பெறும் பொதுத் தீர்வு
\(\sqrt { 4x+2y-1 } +2\log\left| \sqrt { 4x+2y-1 } +2 \right| =x+C.\)
3.
\(f'(x)=1-\cos x\ge0\) மேலும் \(x=2n\pi, n\in Z\) -ல் f ′(x) பூச்சியம் என்பவைகளில் இருந்து f (x) என்ற சார்பு மெய் எண் கோட்டில் ஏறுகிறது.
\(x=2n\pi, n\in Z\) -ஐ கடக்கும் போது f ′(x) -ன் குறியில் மாற்றம் இல்லாத காரணத்தால் முதலாம் வகைக்கெழு சோதனையின்படி இங்கு இடஞ்சார்ந்த அறுதி மதிப்புகள் இல்லை.
4.
\(\cos\left( { \sin }^{ -1 }\left( \frac { 4 }{ 5 } \right) -{ \tan }^{ -1 }\left( \frac { 3 }{ 4 } \right) \right) \)
sin-1 \(\left( \frac { 4 }{ 5 } \right) \) = x என்க.
\( \frac { 4 }{ 5 } \) = sin x
∴ cos x = \(\frac { adj }{ hyp } =\frac { 3 }{ 5 } \)
tan-1 \(\left( \frac { 3 }{ 4 } \right) \) = y என்க.
⇒ tan y = \(\frac { 3 }{ 4 } \)
⇒ sin y = \(\frac { opp }{ hyp } =\frac { 3 }{ 5 } \) மற்றும் cos y = \(\frac { adj }{ hyp } =\frac { 4 }{ 5 } \)
∴ cos \(\left( { \sin }^{ -1 }\left( \frac { 4 }{ 5 } \right) -{ \tan }^{ -1 }\left( \frac { 3 }{ 4 } \right) \right) \)
= cos (x - y) = cos x cos y + sin x sin y
= \(\frac { 3 }{ 5 } .\frac { 4 }{ 5 } +\frac { 4 }{ 5 } .\frac { 3 }{ 5 } =\frac { 12 }{ 25 } +\frac { 12 }{ 25 } =\frac { 24 }{ 25 } =\frac { 24 }{ 25 } \)
5.
கொடுக்கப்பட்ட p(x) எனும் பல்லுறுப்புக்கோவை சமன்பாட்டிற்கு தெளிவாகவே 2 முறை குறிமாற்றங்கள் இருப்பதால் p(x) -மிகையெண் மூலங்களின் எண்ணிக்கை இரண்டிற்கு மேலிராது. மேலும் p(-x) = 9x9 + 2x5 − x4 − 7x2 + 2-ல் p(-x) -க்கு ஒரே ஒரு முறை குறிமாற்றம் இருப்பதால் குறையெண் மூலங்களின் எண்ணிக்கை ஒன்றுக்கு மேற்பட்டு இல்லை. தெளிவாகவே 0 ஒரு மூலம் இல்லை. எனவே மெய்யெண் மூலங்களின் எண்ணிக்கை அதிகபட்சம் 3 ஆகும். எனவே குறைந்தபட்சம் ஆறு மெய்யற்ற கலப்பெண் மூலங்கள் உண்டு.
6.
கொடுக்கப்பட்ட சமன்பாடு 2x2+kx+k=0
இங்கு a=2, b=k, c=k
பண்புகாட்டி
Δ=b2-4ac=k2-4(2)(k)
=k2-8k=k(k-8)
k மெய் ஆகையால் k-க்கு சாத்தியமான மதிப்புகள்
k<0, k=0 அல்லது 8, 0
⇒ அது மெய் மூலங்களை கொண்டிருக்கும்.
(∵ k என்பது மெய்)
நிலை (ii) k=0 அல்லது 8 எனில், Δ=0,
∴ மூலங்கள் மெய் மற்றும் சமம்
நிலை (iii) 0
⇒ மூலங்கள் மெய் மற்றும் வெவ்வேறானவை.
7.
சமன்பாட்டு தொகுப்பின் அணி வடிவம் AX=B
இங்கு
\(A=\left[ \begin{matrix} k & -2 & 1 \\ 1 & -2k & 1 \\ 1 & -2 & k \end{matrix} \right] ,X=\left[ \begin{matrix} x \\ y \\ z \end{matrix} \right] ,B=\left[ \begin{matrix} 1 \\ -2 \\ 1 \end{matrix} \right] \)
[A|B] என்ற விரிவுபடுத்தப்பட்ட அணியில் தொடக்கநிலை நிரை செயலிகள் பயன்படுத்தக் கிடைப்பது,
\(A=\left[ \begin{matrix} k & -2 & 1 \\ 1 & -2k & 1 \\ 1 & -2 & k \end{matrix} \right] ,X=\left[ \begin{matrix} x \\ y \\ z \end{matrix} \right] ,B=\left[ \begin{matrix} 1 \\ -2 \\ 1 \end{matrix} \right] \)
\([A/B]=\left[ \begin{matrix} k & -2 & 1 \\ 1 & -2k & 1 \\ 1 & -2 & k \end{matrix}|\begin{matrix} 1 \\ -2 \\ 1 \end{matrix} \right] \overset { { R }_{ 1 }\leftrightarrow { R }_{ 3 } }{ \longrightarrow } \left[ \begin{matrix} 1 & -2 & k \\ 1 & -2k & 1 \\ k & -2 & 1 \end{matrix}|\begin{matrix} 1 \\ -2 \\ 1 \end{matrix} \right] \)
\(\overset { { R }_{ 2 }\rightarrow { R }_{ 2 }-{ R }_{ 1 }\\ { R }_{ 3 }\rightarrow { R }_{ 3 }-{ kR }_{ 1 } }{ \longrightarrow } \left[ \begin{matrix} 1 & -2 & k \\ 1 & -2k+2 & k \\ 0 & -2+2k & 1-{ k }^{ 2 } \end{matrix}|\begin{matrix} 1 \\ -3 \\ 1-k \end{matrix} \right] \)
\(\overset { { R }_{ 3 }\rightarrow { R }_{ 3 }+{ R }_{ 2 } }{ \longrightarrow } \left[ \begin{matrix} 1 \\ 0 \\ 0 \end{matrix}\begin{matrix} -2 \\ -2k+2 \\ 0 \end{matrix}\begin{matrix} k \\ 1-k \\ 1-{ k }^{ 2 }+1-k \end{matrix}\begin{matrix} 1 \\ -3 \\ -k-2 \end{matrix} \right] \)
\(\rightarrow \left[ \begin{matrix} 1 \\ 0 \\ 0 \end{matrix}\begin{matrix} -2 \\ -2k+2 \\ 0 \end{matrix}\begin{matrix} k \\ 1-k \\ (k+2)(1-k) \end{matrix}\begin{matrix} 1 \\ -3 \\ -k-2 \end{matrix} \right] \quad .....(1)\)
நிலை (i) k=1 எனில்
\([A|B]\rightarrow \left[ \begin{matrix} 1 \\ 0 \\ 0 \end{matrix}\begin{matrix} -2 \\ 0 \\ 0 \end{matrix}\begin{matrix} 1 \\ 0 \\ 0 \end{matrix}\begin{matrix} 1 \\ -3 \\ -3 \end{matrix} \right] \overset { { R }_{ 3 }\rightarrow { R }_{ 3 }-{ R }_{ 2 } }{ \longrightarrow } \left[ \begin{matrix} 1 \\ 0 \\ 0 \end{matrix}\begin{matrix} -2 \\ 0 \\ 0 \end{matrix}\begin{matrix} 1 \\ 0 \\ 0 \end{matrix}\begin{matrix} 1 \\ -3 \\ 0 \end{matrix} \right] \)
[2 - k - k² = - (k² +k-2)
=-(k+2) (k-1)
= (k + 2) (1-k)]
நிலை (i) k = 1 எனில்
ρ(A)=1, ρ([A } B]) = 3.
ρ(A) ≠ ρ([A | B])
சமன்பாட்டுத் தொகுப்பு ஒருங்கமைவற்றது மற்றும் தீர்வுகள் கிடையாது.
நிலை (ii): k ≠ 1, k ≠ -2 எனில் ρ(A)=3, ρ([A | B]) = 3 = n
சமன்பாட்டுத் தொகுப்பு ஒருங்கமைவுடையது மற்றும் ஒரே ஒரு தீர்வைக் கொண்டது.
நிலை (iii): k=-2 எனில்
ρ(A) = 2, ρ([A | B]) = 2
சமன்பாட்டுத் தொகுப்பு ஒருங்கமைவுடையது மற்றும் எண்ணற்ற தீர்வுகளைக் கொண்டது.
8.
|adj A| = \(\left| \begin{matrix} -1 & 2 & 2 \\ 1 & 1 & 2 \\ 2 & 2 & 1 \end{matrix} \right| \) = 9
எனவே A-1 = \(\pm \frac { 1 }{ \sqrt { |adj(A)| } } adj(A)=\pm \frac { 1 }{ \sqrt { 9 } } \left[ \begin{matrix} -1 & 2 & 2 \\ 1 & 1 & 2 \\ 2 & 2 & 1 \end{matrix} \right] =\pm \frac { 1 }{ 3 } \left[ \begin{matrix} -1 & 2 & 2 \\ 1 & 1 & 2 \\ 2 & 2 & 1 \end{matrix} \right] \).
9.
|A| = \(\left[ \begin{matrix} 8 & -6 & 2 \\ -6 & 7 & -4 \\ 2 & -4 & 3 \end{matrix} \right] \)= 8(21-16)+6(-18+8)+2(24-14) = 40 - 60 + 20 = 0
சேர்ப்பு அணியின் வரையறைப்படி கிடைப்பது
adj A = \(\left| \begin{matrix} (21-16) & -(18+8) & (24-14) \\ -(-18+8) & (24-4) & -(32+12) \\ (24-14) & -(32+12) & (56-36) \end{matrix} \right| ^{ T }=\left| \begin{matrix} 5 & 10 & 10 \\ 10 & 20 & 20 \\ 10 & 20 & 20 \end{matrix} \right| \)
எனவே,
A(adj A) =\(\left[ \begin{matrix} 8 & -6 & 2 \\ -6 & 7 & -4 \\ 2 & -4 & 3 \end{matrix} \right] \left[ \begin{matrix} 5 & 10 & 10 \\ 10 & 20 & 20 \\ 10 & 20 & 20 \end{matrix} \right] \)
= \(\left[ \begin{matrix} 40-60+20 & 80-120+40 & 80-120+40 \\ -30+70-40 & -60+140-80 & -60+140-80 \\ 10-40+30 & 20-80+60 & 20-80+60 \end{matrix} \right] =\left[ \begin{matrix} 0 & 0 & 0 \\ 0 & 0 & 0 \\ 0 & 0 & 0 \end{matrix} \right] \) = 0I3 = |A|I3.
இதேபோல், நமக்குக் கிடைப்பது
(adj A)A =\(\left[ \begin{matrix} 5 & 10 & 10 \\ 10 & 20 & 20 \\ 10 & 20 & 20 \end{matrix} \right] \left[ \begin{matrix} 8 & -6 & 2 \\ -6 & 7 & -4 \\ 2 & -4 & 3 \end{matrix} \right] \)
=\(\left[ \begin{matrix} 40-60+20 & -30+70-40 & 10-40+30 \\ 80-120+40 & -60+140-80 & 20-80+60 \\ 80-120+40 & -60+140-80 & 20-80+60 \end{matrix} \right] =\left[ \begin{matrix} 0 & 0 & 0 \\ 0 & 0 & 0 \\ 0 & 0 & 0 \end{matrix} \right] \) = 0I3 = |A|I3.
எனவே, A(adj A) = (adj A)A = |A| I3 என்பது சரிபார்க்கப்பட்டது.
10.
கொடுக்கப்பட்ட சமன்பாடு \(\frac { (y-{ 2) }^{ 2 } }{ 25 } -\frac { (x+1)^{ 2 } }{ 16 } =1\)
துணையச்சு y-அச்சுக்கு இணையான அதிபரவளையத்தின் சமன்பாடு
\(\therefore\) a2 = 25, b2 = 16
\(\Rightarrow\) c2 = a2 + b2 = 25 + 16 = 41
\(\Rightarrow\) \(c=\sqrt { 41 } \)
\(e=\sqrt { 1+\cfrac { { b }^{ 2 } }{ { a }^{ 2 } } } =\sqrt { 1+\cfrac { 16 }{ 25 } } =\sqrt { \cfrac { 41 }{ 25 } } =\cfrac { \sqrt { 41 } }{ 5 } \)
(a) மையம் \((-1,2)\Rightarrow h=-1,k=2\)
(b) குவியங்கள் (h, k+c), (h, k-c)
\(\Rightarrow \left( -1,2+\sqrt { 41 } \right) ,\left( -1,2-\sqrt { 41 } \right) \)
(c) முனைகள் (h, k+a), (h, k-a)
\(\Rightarrow \left( -1,2+5 \right) ,\left( -1,2-5 \right) \)
= (1, 7), (-1, -3)
(d) இயக்குவரைகளின் சமன்பாடுகள்
\(-2=\pm \cfrac { 5 }{ \frac { \sqrt { 41 } }{ 5 } } \)
\(\Rightarrow y-2=\pm \frac { 25 }{ \sqrt { 41 } } \)
\(\Rightarrow y=2+\cfrac { 25 }{ \sqrt { 41 } } \) மற்றும் \(y=2-\cfrac { 25 }{ \sqrt { 41 } } \)
11.
\(\vec { r } =(\hat { i } +3\hat { j } -\hat { k } )+t(2\hat { i } +3\hat { j } +2\hat { k } )\) என்ற கோட்டின் கார்டீசியன் சமன்பாடு
\(\frac { x-1 }{ 2 } =\frac { y-3 }{ 3 } =\frac { z+1 }{ 2 } \) = s(என்க)
இக்கோட்டின் மீதுள்ள ஏதேனுமொரு புள்ளியின் அமைப்பு (2s + 1, 3s + 3, 2s - 1) ....... (1)
இரண்டாவது கோட்டின் கார்டீசியன் சமன்பாடு \(\frac { x-2 }{ 1 } =\frac { y-4 }{ 2 } =\frac { z+3 }{ 4 } \) = t (என்க)
இக்கோட்டின் மீதுள்ள ஏதேனுமொரு புள்ளியின் அமைப்பு (t + 2, 2t + 4, 4t - 3) ..... (2)
கொடுக்கப்பட்ட கோடுகள் வெட்டிக் கொள்ளுமானால், ஒரு பொதுவான புள்ளி இருக்க வேண்டும். எனவே, ஒரு சில s, t ∊ R களுக்கு,
(2s + 1, 3s + 3, 2s - 1) = (t + 2, 2t + 4, 4t - 3)
x, y மற்றும் z -ன் அச்சுத்தூரங்களை சமப்படுத்த, நாம் பெறுவது
2s - 1 = 1, 3s - 2t = 1 மற்றும் s - 2t = -1.
இம்மூன்று சமன்பாடுகளில் முதல் இரண்டு சமன்பாடுகளின் தீர்வு காண்பதால் s = 1 மற்றும் t = 1 எனக் கிடைக்கிறது. s மற்றும் t -ன் இம்மதிப்புகள் மூன்றாவது சமன்பாட்டை நிறைவு செய்கின்றன. எனவே, கொடுக்கப்பட்ட கோடுகள் வெட்டும் கோடுகளாகும். இப்பொழுது, s -ன் மதிப்பை சமன்பாடு (1)-ல் அல்லது t -ன் மதிப்பை சமன்பாடு (2)-ல் பிரதியிட, இவ்விரு கோடுகளின் வெட்டும் புள்ளி (3, 6, 1) எனக் கிடைக்கிறது.
\(\vec { b } =2\hat { i } +3\hat { j } +2\hat { k } \) மற்றும் \(\vec { d } =\hat { i } +2\hat { j } +4\hat { k } \) என எடுத்துக் கொண்டால்,
\(\vec { b } \times \vec { d } =\left| \begin{matrix} \hat { i } & \hat { j } & \hat { k } \\ 2 & 3 & 2 \\ 1 & 2 & 4 \end{matrix} \right| =8\hat { i } -6\hat { j } +\hat { k } \) எனக் கிடைக்கிறது.
இவ்வெக்டர் கொடுக்கப்பட்ட இரு கோடுகளுக்கும் செங்குத்தான வெக்டராகும்.
எனவே, தேவையான நேர்க்கோடு (3, 6, 1) என்ற புள்ளி வழியாகச் செல்வதுடன் இரு நேர்க்கோடுகளுக்கும் செங்குத்தானதும் ஆகும். ஆகவே, தேவையான நேர்க்கோடு (3, 6, 1) என்ற புள்ளி வழியாகச் செல்வதுடன் \(8\hat { i } -6\hat { j } +\hat { k } \) என்ற வெக்டருக்கு இணையாகவும் இருக்கும். எனவே, தேவையான நேர்க்கோட்டின் வெக்டர் சமன்பாடு
\(\vec { r } =(3\hat { i } +6\hat { j } +\hat { k } )+m(8\hat { i } -6\hat { j } +\hat { k }) \), m ∊ R
12.
பரவளையத்தின் சமன்பாடு x2 = 4ay என்க

படத்திலிருந்து சமன்பாடு x2 = 4ay என்றும் அது C(30, 13) வழிச் செல்கிறது எனவும் அறியலாம்.
\( \therefore 30^2 =4 a \times 13 \\ 4 a =\frac{30^2}{13} \)
ஃ பரவளையத்தின் சமன்பாடு \(x^2=\frac{30^2}{13} y\)
(i) VG = 6 மற்றும் GE = y என்க.
ஃ E(6, y) பரவளையத்தின் மீதுள்ளது.
\(36=\frac{30^2}{13} y \Rightarrow y=0.52\)
சாலையிலிருந்து கம்பி வடத்தின் நீளம் 3 + 0.52 = 3.52 மீ
(ii) VH = 12 மற்றும் HF = y
ஃ F(12, y) பரவளையத்தின் மீதுள்ளது.
\(12^2=\frac{30^2}{13} y \Rightarrow y=\frac{144 \times 13}{900}=\frac{208}{100}=2.08\)
சாலையிலிருந்து கம்பி தம்பி வடத்தின் நீளம் = 3 + 2.08 = 5.08 மீ
முனையிலிருந்து முதலில் உள்ள இரு கம்பி வடங்களின் உயரங்கள் 3.52 மீ மற்றும் 5.08 மீ
13.
AB =\(\left[ \begin{matrix} 0 & -3 \\ 1 & 4 \end{matrix} \right] \left[ \begin{matrix} -2 & -3 \\ 0 & -1 \end{matrix} \right] =\left[ \begin{matrix} 0+0 & 0+3 \\ -2+0 & -3-4 \end{matrix} \right] =\left[ \begin{matrix} 0 & 3 \\ -2 & -7 \end{matrix} \right] \)
(AB)-1 =\(\frac { 1 }{ (0+6) } \left[ \begin{matrix} -7 & -3 \\ 2 & 0 \end{matrix} \right] =\frac { 1 }{ 6 } \left[ \begin{matrix} -7 & -3 \\ 2 & 0 \end{matrix} \right] \) ...(1)
A-1 =\(\frac { 1 }{ (0+3) } \left[ \begin{matrix} 4 & 3 \\ -1 & 0 \end{matrix} \right] =\frac { 1 }{ 3 } \left[ \begin{matrix} 4 & 3 \\ -1 & 0 \end{matrix} \right] \)
B-1 =\(\frac { 1 }{ (2-0) } \left[ \begin{matrix} -1 & 3 \\ 0 & -2 \end{matrix} \right] =\frac { 1 }{ 2 } \left[ \begin{matrix} -1 & 3 \\ 0 & -2 \end{matrix} \right] \)
B-1A-1 =\(\frac { 1 }{ 2 } \left[ \begin{matrix} -1 & 3 \\ 0 & -2 \end{matrix} \right] \frac { 1 }{ 3 } \left[ \begin{matrix} 4 & 3 \\ -1 & 0 \end{matrix} \right] =\frac { 1 }{ 6 } \left[ \begin{matrix} -7 & -3 \\ 2 & 0 \end{matrix} \right] \) ....(2)
அணிகள் (1) மற்றும் (2) சமம். எனவே (AB)-1 = B-1A-1 என்பது சரிபார்க்கப்பட்டது.
14.
y = -sin \((\frac{1}{3}x)\) sin x-ன் வீச்சு 1
⇒ -sin \((\frac{1}{3}x)\) ன் வீச்சும் மேலும் 1.
-sin \((\frac{1}{3}x)\) ன் காலம் \(\frac { 1 }{ 3 } \)x = 2π ⇒ x = 6π
15.
கொடுக்கப்பட்ட தளத்தின் சமன்பாடு
\(\vec { r } .\left( 6\hat { i } +3\hat { j } +2\hat { k } \right) =8\)
\(\therefore { \vec { n } }_{ 1 }=6\hat { i } +3\hat { j } +2\hat { k } \)
\(\vec { r } =\left( 2\hat { i } -\hat { j } +\hat { k } \right) +t\left( \hat { i } +2\hat { j } -2\hat { k } \right) \) மற்றும் அந்த கோடு
\(\therefore \vec { b } =\hat { i } +2\hat { j } -2\hat { k } \)
தளம் மற்றும் கோட்டிற்கும் இடையேயான கோணம்
\(sin\theta =\cfrac { \left| \vec { b } .\vec { n } \right| }{ \left| \vec { b } \right| \left| \vec { n } \right| } =\cfrac { \left| 6(1)+3(2)+2(-2) \right| }{ \sqrt { { 1 }^{ 2 }+{ 2 }^{ 2 }+(-2)^{ 2 }.\sqrt { { 6 }^{ 2 }+{ 3 }^{ 2 }+{ 2 }^{ 2 } } } } \)
= \(\cfrac { 6+6-4 }{ \sqrt { 9 } .\sqrt { 36+9+4 } } =\cfrac { 8 }{ \sqrt { 9 } .\sqrt { 49 } } =\cfrac { 8 }{ 3(7) } =\cfrac { 8 }{ 21 } \)
\(\therefore \theta { \sin }^{ -1 }\left( \cfrac { 8 }{ 21 } \right) \)
16.
கருதப்படும் பல்லுறுப்புக்கோவையை p(x) என்க.
p(x) மற்றும் P(-x)-ல் குறிமாற்றங்களின் எண்ணிக்கை பூச்சியம் என்பதால் மிகை எண் மூலங்களோ குறையெண் மூலங்களோ இல்லை. தெளிவாகவே பூச்சியம் மூலம் இல்லை. எனவே பல்லுறுப்புக்கோவைக்கு மெய்யெண் மூலங்கள் இல்லை. ஆகையால் பல்லுறுப்புக்கோவையின் அனைத்து மூலங்களும் மெய்யற்ற கலப்பெண் மூலங்களாகும்.
17.
\(2+i\sqrt { 3 } \) பல்லுறுப்புக்கோவையின் ஒரு மூலம் ஆதலால் அதனுடைய இணை மேலும் 2-i \(\sqrt { 3 } \) யும் சமன்பாட்டிற்கும் ஒரு மூலமாகும்.
\(\sqrt { 3 } \) யும் அந்த சமன்பாட்டிற்கு ஒரு மூலமாகும்.
∴ மூலங்களின் கூடுதல் =2+i\(\sqrt { 3 } \)+2-i\(\sqrt { 3 } \)=4
மூலங்களின் பெருக்கல் பலன் =(2+i\(\sqrt { 3 } \))(2-i\(\sqrt { 3 } \))
=22+(\(\sqrt { 3 } \))2
[∵ (a+ib)(a-ib)=a2+b2
=4+3=7
எனவே குறைந்தபட்ச படியுடன் விகிதமுறு கெழுக்களையுடைய பல்லுறுப்புக்கோவைச் சமன்பாடு
x2-x (மூலங்களின் கூடுதல்)+மூலங்களின் பெருக்கல் பலன் =0
⇒ x2-x(4)+7=0
⇒ x2-4x+7=0
18.
பரவளையத்தின் சமன்பாடு y2 = 4ax
செவ்வகலம் LL' குவியம் (a, 0) வழிச் செல்கின்றது.
எனவே L என்பது (a, y1)ஆகும்.
அதனால் y12 = 4a2.
எனவே y1 = ±2a
செவ்வகலத்தின் முனைப்புள்ளிகள் (a, 2a) மற்றும் (a, -2a) ஆகும்.
எனவே செவ்வகலத்தின் நீளம் LL' = 4a.
19.
\(7\le \left|z +6-8i \right| \le 13\) எனக் கொடுக்கப்பட்டது
\(\left| z+6-8i \right| \le \left| z \right| +\left| 6-8i \right| \) [முக்கோணச் சமனிலி]
\(\le 3\sqrt { { 6 }^{ 2 }+{ (-8) }^{ 2 } } \le 3+\sqrt { 36+64 } \le 3\sqrt { 1w } \)
\(\left| z+6-8i \right| \le 3+10\le 13\) ...(1)
மேலும் \(\left| z+6-8i \right| \ge \left| z \right| -\left| 6-8i \right| \ge \left| 3\sqrt { { 6 }^{ 2 }+{ (-8) }^{ 2 } } \right| \)
\(\ge \left| 3-\sqrt { 36+84 } \right| \ge \left| 3-10 \right| \ge \left| -7 \right| \ge 7\) ...(2)
(1) மற்றும் (2) லிருந்து கிடைப்பது,
\(7\le \left| z+6-8i \right| \le 13\) எனவே நிரூபிக்கப்பட்டது.
20.
விரிவுபடுத்தப்பட்ட அணியின் மீது காஸ்-ஜோர்டான் முறையினைப் பயன்படுத்த,
[A|I2] =\(\left[ \begin{matrix} 0 & 5 \\ -1 & 6 \end{matrix}|\begin{matrix} 1 & 0 \\ 0 & 1 \end{matrix} \right] \overset { { R }_{ 1 }\leftrightarrow { R }_{ 2 } }{ \longrightarrow } \left[ \begin{matrix} -1 & 6 \\ 0 & 5 \end{matrix}|\begin{matrix} 0 & 1 \\ 1 & 0 \end{matrix} \right] \overset { { R }_{ 1 }\rightarrow (-1){ R }_{ 1 } }{ \longrightarrow } \left[ \begin{matrix} 1 & -6 \\ 0 & 5 \end{matrix}|\begin{matrix} 0 & -1 \\ 1 & 0 \end{matrix} \right] \overset { { R }_{ 2 }\rightarrow \frac { 1 }{ 5 } { R }_{ 2 } }{ \longrightarrow } \left[ \begin{matrix} 1 & -6 \\ 0 & 1 \end{matrix}|\begin{matrix} 0 & -1 \\ (1/5) & 0 \end{matrix} \right] \overset { { R }_{ 1 }\rightarrow { R }_{ 1 }+6{ R }_{ 2 } }{ \longrightarrow } \left[ \begin{matrix} 1 & 0 \\ 0 & 1 \end{matrix}|\begin{matrix} (6/5) & -1 \\ (1/5) & 0 \end{matrix} \right] \)
எனவே A-1=\(\left[ \begin{matrix} (6/5) & -1 \\ (1/5) & 0 \end{matrix} \right] =\frac { 1 }{ 5 } \left[ \begin{matrix} 6 & -5 \\ 1 & 0 \end{matrix} \right] \).
21.
i1+50 + i2+50 + ... + i10+50
= i51 + i52 + ..... + i60
i50 ஐ பொதுவாக எடுக்க கிடைப்பது.
i50[(i + i2 + i3 + i4) + (i5 + i6 + i + i8) + i9 + i10]
= i50 [0 + (i4+1 + i4+2 + i4+3 + i4+4) + (i8+1 + i8+2)]
= i50 [0 + 0 + i + i2] [∵ i + i2 + i3 + i4 = 0]
= i50 [i - 1] = i48+2(i-1)
= i2(i-1) [∵ i48 = 1]
= -1 (i-1) = -i + 1 = 1 - i
22.
\(y=a x^4+b x^2, a b>0\)
ab >0 \(\Rightarrow \mathrm{a}>0\) மற்றும் b >0 (அல்லது) a < 0 மற்றும் b < 0 ...(1)
(i) கிடைமட்டத் தொடுகோட்டிற்கு, \(\frac{\mathrm{dy}}{\mathrm{d} x}=0\)
\(\frac{\mathrm{dy}}{\mathrm{d} x}=4 \mathrm{a} x^3+2 \mathrm{~b} x=2 x\left(2 \mathrm{a} x^2+\mathrm{b}\right) \)
\( \frac{\mathrm{dy}}{\mathrm{d} x}=0 \Rightarrow x=0, \pm \sqrt{\frac{-\mathrm{b}}{2 \mathrm{a}}}\)
(1) லிருந்து, \(\frac{b}{a}>0\). எனவே \(\sqrt{\frac{-b}{2 a}}\) ஆனது மெய்மதிப்பாக இருக்க முடியாது.
x = 0 ல், \(\frac{\mathrm{dy}}{\mathrm{d} x}=0\)
x = 0 ல், கிடைமட்டத் தொடுகோடு உண்டு.
(ii) வளைவு மாற்றப் புள்ளிக்கு, f''(x) ஆனது குறி மாற்றம் அடையும்.
\( f^{\prime \prime}(x)=12 a x^2+2 b=2\left(6 a x^2+b\right) \)
\( f^{\prime \prime}(x)=0 \Rightarrow 6 a x^2+b=0 \Rightarrow x= \pm \sqrt{\frac{-b}{6 a}}\)
(1) லிருந்து, \(\frac{b}{a}>0\) எனவே \(\sqrt{\frac{-b}{2 a}}\) ஆனது மெய்மதிப்பாக இருக்க முடியாது.
\(\therefore\) f''(x) ஆனது குறிமாற்றம் அடையவில்லை. எனவே f(x) ஆனது வளைவு மாற்றப் புள்ளியை பெறவில்லை.
23.
\(f(x) =2 \cos 4 x \)
\(f^{\prime}(x) =-8 \sin 4 x\)
\(x=\frac{\pi}{12}\) ல் செங்கோட்டின் சாய்வு
\(=-\frac{1}{-8 \sin 4\left(\frac{\pi}{12}\right)}\)
\(=\frac{1}{8 \sin \frac{\pi}{3}}=\frac{1}{8\left(\frac{\sqrt{3}}{2}\right)}=\frac{\sqrt{3}}{12}\)
24.
கொடுக்கப்பட்டது \(\frac{d V}{d t}=3 \pi\) செ.மீ/வி ;
\(\mathrm{r}=\frac{1}{2}\) செ.மீ
கன அளவு \(\mathrm{V}=\frac{4}{3} \pi r^3\)
' 't' ஐப் பொறுத்து வகைப்படுத்து,
\(\frac{d V}{d t} =\frac{4}{3} 3 \pi r^2 \frac{d r}{d t} \)
\(3 \pi =\frac{4}{3} 3 \pi\left(\frac{1}{4}\right) \frac{d r}{d t} \)
\(\frac{d r}{d t} =3\)
ஆரத்தின் மாறுபாட்டு வீதம் 3 செ.மீ/வினாடி.
25.
(d)
9
26.
(b)
\(y={ ce }^{ -\int { pdx } }\)
27.
\(\mathrm{v}(x, \mathrm{y}) =\log \left(\mathrm{e}^x+\mathrm{e}^y\right) \)
\(\frac{\partial \mathrm{v}}{\partial x} =\frac{e^x}{e^x+e^y}, \frac{\partial \mathrm{v}}{\partial y}=\frac{e^y}{e^x+e^y} \)
\(\frac{\partial \mathrm{v}}{\partial x}+\frac{\partial \mathrm{v}}{\partial y} =\frac{e^x+e^y}{e^x+e^y}=1\)
28.
(d)
0.96
29.
\( \vec {a}\) மற்றும் \(\vec{b}\) என்பன இணையாதலால், \(\vec{a}=\lambda \vec{b}\)
\([\vec{a}, \vec{c}, \vec{b}]=[\lambda \vec{b}, \vec{c}, \vec{b}]=\lambda[\vec{b}, \vec{c}, \vec{b}]=\lambda(0)=0\)
30.
கொடுக்கப்பட்டது : \(\left|z_1\right|=1,\left|z_2\right|=2,\left|z_3\right| =3 \)
மற்றும் \(\left|9 z_1 z_2+4 z_1 z_3+z_2 z_3\right| =12 \)
\(\left|z_1\right|\left|z_2\right|\left|z_3\right|\left|\frac{9}{z_3}+\frac{4}{z_2}+\frac{1}{z_1}\right| =12 \)
\(\text { (1) (2) (3) }\left|\frac{9 \bar{z}_3}{\left|z_3\right|^2}+\frac{4 \bar{z}_2}{\left|z_2\right|^2}+\frac{\overline{z_1}}{\left|z_1\right|^2}\right| =12\left[\because|z|^2=z \bar{z}\right] \)
\(6\left|\frac{9 \bar{z}_3}{(3)^2}+\frac{4 \bar{z}_2}{(2)^2}+\frac{\overline{z_1}}{(1)^2}\right| =12 \)
\(\left|\bar{z}_3+\bar{z}_2+\bar{z}_1\right| =\frac{12}{6}=2 \)
\(\left|\overline{z_3+z_2+z_1 \mid}\right| =2 \)
\(\therefore\left|z_1+z_2+z_3\right| =2\)
31.
விகிதமுறு மூலத் தேற்றத்தின்படி, p/q என்பது பல்லுறுப்புக் கோவைச் சமன்பாட்டின் மூலம். இங்கு a0 = -5, an = 4 மற்றும் (4, -5) = 1. எனவே p என்பது 5 ஐயும், q என்பது 4 ஐயும் வகுக்க வேண்டும்.
p ன் சாத்தியமுறு மதிப்புகள் +1, -1, +5,-5
q ன் சாத்தியமுறு மதிப்புகள் +1, - 1, 4, -4
4/5 என்பது சாத்தியமற்ற விகிதமுறு பூச்சியமாகும்.
32.
வட்டத்தின் சமன்பாடு\((x - 3) ^ 2 + (y + r) ^ 2 = r ^ 2 \) ....(1)
இது (1, -2) என்ற புள்ளி வழிச் செல்கிறது
\( (1-3)^2+(-2+r)^2 =r^2 \\ 4+4-4 r+r^2 =r^2 \Rightarrow r=2 \\ (x-3)^2+(y+2)^2 =4 \)
\((5-3)^2+(-2+2)^2=4 \Rightarrow 4=4\)
33.
(a)
34.
\(x ^ 2 + y ^ 2 - 2x - 2y + 1 = 0
\)
2g = - 2
g = - 1
2f = - 2
f = - 1
இணையான கோடு 2x + 4y + \(\lambda\) = 0 என்க. மையம் (-g, -f) = (1, 1) என்பது இக்கோட்டின் மேல் அமைவதால்,
2 + 4 + 2 = 0 ⇒\(\lambda\) = -6
2x + 4y - 6 = 0
x + 2y = 3
35.

\( C A =C B \Rightarrow C A^2=C B^2 \\ (1-1)^2+(0-h)^2 =(2-1)^2+(3-h)^2 \\ h^2 =1+h^2+9-6 h \\ 6 h =10 \Rightarrow h=\frac{10}{6}=\frac{5}{3} \\ =2 h =2\left(\frac{5}{3}\right)=\frac{10}{3} \)
36.
\(\sum_{n=1}^{13}\left(i^n+i^{n-1}\right)= \left(\mathrm{i}^1+\mathrm{i}^2+\mathrm{i}^3+\ldots+\mathrm{i}^{13}\right)+ \left(\mathrm{i}^0+\mathrm{i}^1+\mathrm{i}^2+\ldots+\mathrm{i}^{12}\right) \)
\(= \mathrm{i}^0+2\left(\mathrm{i}^1+\mathrm{i}^2+\mathrm{i}^3+\ldots+\mathrm{i}^{12}\right)+\mathrm{i}^{13} \)
\(= 1+2(\mathrm{i}-1-\mathrm{i}+1+\ldots+1)+\mathrm{i} \)
\(= 1+2(0)+\mathrm{i}=1+\mathrm{i}\)
37.
\(\lambda A^{-1} =A \)
\(\lambda I=A^2 =\left[\begin{array}{cc} 2 & 3 \\ 5 & -2 \end{array}\right]\left[\begin{array}{cc} 2 & 3 \\ 5 & -2 \end{array}\right]=\left[\begin{array}{cc} 4+15 & 6-6 \\ 10-10 & 15+4 \end{array}\right] \)
\(\lambda\left[\begin{array}{ll} 1 & 0 \\ 0 & 1 \end{array}\right] =\left[\begin{array}{cc} 19 & 0 \\ 0 & 19 \end{array}\right] \Rightarrow \lambda=19 \)
38.
(ATA-1)T = ATA-1
(A-1)T (AT)T = ATA-1
(AT)-1 A = ATA-1
AT(AT)-1AA = (AT) AT A-1 A
(AT மற்றும் A ஆல் முறையே முன்பெருக்கம் மற்றும் பின்பெருக்கம் செய்ய) A2 = (AT)2
39.
|adj(adj A)| = |A|9
\(|A|^{(n-1)^2}=|\mathrm{A}|^9\)
(n - 1)2 = 9 = 32
n - 1 = 3 \(\Rightarrow\) n = 4
40.
\(\tan ^{-1} x-\cot ^{-1} x=\tan ^{-1}\left(\frac{1}{\sqrt{3}}\right)=\frac{\pi}{6} \\
\tan ^{-1} x+\cot ^{-1} x=\frac{\pi}{2}\)
(2) மற்றும் (1) ஐக் கூட்ட,
\(2 \tan ^{-1} x =\frac{\pi}{6}+\frac{\pi}{2}=\frac{2 \pi}{3} \\
\tan ^{-1} x =\frac{\pi}{3} \Rightarrow x=\tan \left(\frac{\pi}{3}\right)\)
\(x=\sqrt{3} \) என்பது ஒரேயொரு தீர்வாகும்.
41.
\(\sin ^{-1}(\cos x)=\sin ^{-1}\left(\sin \left(\frac{\pi}{2}-x\right)\right)=\frac{\pi}{2}-x\)
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards