12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 03/09/2019
சமன்பாட்டியல்
12ஆம் வகுப்பு Maths / கணிதவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Maths / கணிதவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Maths Test1.
விகிதமுறு மூலங்கள் உள்ளதா என ஆராய்க.
x8 − 3x +1 = 0 .
2.
தீர்க்க: \(2\sqrt { \frac { x }{ a } } +3\sqrt { \frac { a }{ x } } =\frac { b }{ a } +\frac { 6a }{ b } \).
3.
2cos2 x − 9cos x + 4 = 0 எனும் சமன்பாட்டிற்குத் தீர்வு இருப்பின் காண்க.
4.
x4 - 9x2 + 20 = 0 எனும் சமன்பாட்டைத் தீர்க்க.
5.
ஒரு கனச் சதுரப் பெட்டியின் பக்கங்களை 1, 2, 3 அலகுகள் அதிகரிப்பதால் கனச்சதுரப் பெட்டியின் கொள்ளளவைவிட 52 கன அலகுகள் அதிகமுள்ள கனச் செவ்வகம் கிடைக்கிறது எனில், கன செவ்வகத்தின் கொள்ளளவைக் காண்க.
6.
17x2 + 43x - 73 = 0 எனும் இருபடிச் சமன்பாட்டின் மூலங்கள், α மற்றும் β எனில் α+2 மற்றும் β+2 என்பவற்றை மூலங்களாகக் கொண்ட ஒரு இருபடிச்சமன்பாட்டை உருவாக்கவும்.
7.
6x4 − 5x3 − 38x2 − 5x + 6 = 0 எனும் சமன்பாட்டின் ஒரு தீர்வு \(\frac{1}{3}\) எனில், சமன்பாட்டின் தீர்வு காண்க.
8.
x3-9x2+14x+24=0 எனும் சமன்பாட்டின் இரு மூலங்கள் 3:2 என்ற விகிதத்தில் அமைந்தால், சமன்பாட்டை தீர்க்க.
9.
x3 − 6x2 − 4x + 24 = 0 என்ற சமன்பாட்டின் மூலங்கள் கூட்டுத் தொடர் முறையாக உள்ளது என அறியப்படுகிறது. சமன்பாட்டின் மூலங்களைக் காண்க.
10.
2-\(\sqrt { 3 } \)i-ஐ மூலமாகக் கொண்ட குறைந்தபட்ச படியுடன் மெய்யெண் கெழுக்களுடைய தலைஒற்றைப் பல்லுறுப்புக்கோவைச் சமன்பாட்டை காண்க.
11.
\(\overset { n }{ \underset { r=0 }{ \Sigma } } \)nCr(-1)rxr எனும் பல்லுறுப்புக்கோவையின் மிகையெண் பூச்சியமாக்கிகளின் எண்ணிக்கை _______.
0
n
< n
r
12.
x3+2x+3 எனும் பல்லுறுப்புக்கோவைக்கு _______.
ஒரு குறை மற்றும் இரு மெய்யெண் பூச்சியமாக்கிகள் இருக்கும்
ஒரு மிகை மற்றும் இரு மெய்யற்ற கலப்பெண் பூச்சியமாக்கிகள் இருக்கும்
மூன்று மெய்யெண் பூச்சியமாக்கிகள் இருக்கும்
பூச்சியமாக்கிகள் இல்லை
13.
x-ல் n படியுள்ள ஒரு பல்லுறுப்புக்கோவைச் சமன்பாடு பெற்றுள்ள மூலங்கள் _______.
n வெவ்வேறு மூலங்கள்
n மெய்யெண் மூலங்கள்
n கலப்பெண் மூலங்கள்
அதிகபட்சம் ஒரு மூலம்
14.
x3+64 -ன் ஒரு பூச்சியமாக்கி _______.
0
4
4i
-4
1.
இங்கு an=1, a0=1
\(\frac{p}{q}\) பல்லுறுப்பு கோவையின் ஒரு மூலம் இங்கு (p,q) =1, a0=1 -ன் காரணி p மற்றும் an =1 -ன் காரணி q .
1 க்கு காரணி இல்லை ஆதலால் கொடுக்கப்பட்ட சமன்பாட்டுக்கு விகிதமுறு மூலங்கள் இல்லை.
2.
பிரதியிடு \(\sqrt { \frac { x }{ a } } =y\Rightarrow 2y+\frac { 3 }{ y } =\frac { b }{ a } +\frac { 6a }{ b } \)
⇒ \(\frac { 2y^{ 2 }+3 }{ y } =\frac { { b }^{ 2 }+6a^{ 2 } }{ ab } \)
⇒ ab(2y2 + 3) = (b2 + 6a2)y
⇒ 2aby2 + 3ab - y(b2 + 6a2)=0
⇒ 2aby2 - y(b2 + 6a2) + 3ab = 0
⇒ 2aby2 - b2y - 6a2y + 3ab = 0
⇒ by(2ay - b) - 3a {2ay - b)= 0
⇒ (2ay- b)(by- 3a) = 0
⇒ 2ay = b, by = 3a
⇒ y=\(\frac { b }{ 2a } \), y=\(\frac { 3a }{ b } \)
நிலை (i) y =\(\frac { b }{ 2a } \) எனில்,
⇒ \(\sqrt { \frac { x }{ a } } =\frac { b }{ 2a } \Rightarrow \frac { 9a^{ 2 } }{ { b }^{ 2 } } \Rightarrow x=\frac { b^{ 2 } }{ 4a } \)
நிலை (ii) y =\(\frac { 3a }{ b } \) எனில்,
\(\sqrt { \frac { x }{ a } } =\frac { 3a }{ b } \Rightarrow \frac { x }{ a } =\frac { 9a^{ 2 } }{ { b }^{ 2 } } \Rightarrow x=\frac { 9a^{ 2 } }{ { b }^{ 2 } } \)
∴ மூலங்கள் \(\frac { { b }^{ 2 } }{ 4a } ,\frac { 9a^{ 3 } }{ { b }^{ 2 } } \).
3.
சமன்பாட்டின் இடப்பக்கம் இருப்பது பல்லுறுப்புக்கோவை அல்ல. ஆனால் பல்லுறுப்புக்கோவை போல் தோற்றமளிக்கிறது. உண்மையில், இதனை cosx -ல் இருக்கும் ஒரு பல்லுறுப்புக்கோவை எனலாம். எனினும் (1) –ல் உள்ள சமன்பாட்டைத் தீர்க்க பல்லுறுப்புக்கோவைச் சமன்பாடுகளைப் பற்றி நாம் அறிந்தவற்றைப் பயன்படுத்தலாம். cosx-ஐ y எனப் பிரதியிட 2y2 -9y+4=0 எனும் பல்லுறுப்புக்கோவைச் சமன்பாடு கிடைக்கிறது. 4 மற்றும் \(\frac{1}{2}\) ஆகியவை இதன் தீர்வுகளாகும்.
இதிலிருந்து cosx=4 அல்லது cosx=\(\frac{1}{2}\) -க்கு ஏற்றதாக x அமையவேண்டும். ஆனால் cosx=4 என்பது சாத்தியமில்லாதது cosx=\(\frac{1}{2}\)- எனும்போது எண்ணற்ற பல மெய்யெண் மதிப்புள்ள x அமைகின்றது. உண்மையில் அனைத்து n ∈ Z-க்கும் x=\(2n\pi \pm \frac { \pi }{ 3 } \)என்பது கொடுக்கப்பட்ட சமன்பாடு (1) க்கு தீர்வாகும்.
cos2x-9cosx+20=0 என்ற சமன்பாட்டிற்கு இதே வழிமுறைகளை கடைபிடித்தால் சமன்பாட்டிற்கு தீர்வே இல்லை என்பது புலனாகிறது.
4.
கொடுக்கப்பட்டுள்ள சமன்பாடு x4-9x2+20=0 ஆகும்.
இது ஒரு நாற்படிச் சமன்பாடாகும். x2=y எனப் பிரதியிட y2-9y+20=0 எனும் இருபடி சமன்பாடு கிடைக்கிறது. இதன் தீர்வு 4 மற்றும் 5ஆகும். இனி x2=4 மற்றும் x2=5 என எடுத்துக் கொண்டால், கொடுக்கப்பட்ட சமன்பாட்டிற்கு 2,-2,\(\sqrt { 5 } \), -\(\sqrt { 5 } \) என்பது தீர்வுகளாகும்.
மேற்கண்ட வழிமுறையை x6 −17x3 + 30 = 0, ax2k + bxk + c = 0 மற்றும் பல்லுறுப்புக் கோவைச் சமன்பாடுகளுக்கும் மற்றும் anxkn + an-1kn−1 + .....+ a1xk + a0 (இங்கு k என்பது ஏதேனும் ஒரு முழு எண்) என்ற முறையில் அமையும் பொதுவான பல்லுறுப்புக்கோவை சமன்பாட்டிற்கும் பயன்படுத்தலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
5.
கனச் செவ்வகத்தின் நீளம் மற்றும் அகலம்
x+1, x+2, மற்றும் x+3
[∴ 1,2,3 அலகுகள் அதிகரிப்பதால்]
மேலும் கொள்ளளவு =V+52
[V என்பது அதிகரிப்பதால் 52]
∴ V+52 =(x+1)(x+2)(x+3) .....(1)
⇒ V=(x+1)(x+2)(x+3)-52
இங்கு α=-1, β=-2, \(\gamma \)=-3
⇒ V=x3-x2(α+β+\(\gamma \))+x(αβ+β\(\gamma \)+\(\gamma \)α)-αβ\(\gamma \)-52
⇒ V=x3-x2(-1-2-3)+x(2+6+3)-(-1)(-2)(-3)-52
⇒ V=x3-x2(-6)+x(11)+6-52
⇒ x3=x3+6x2+11x+6-52
⇒ 6x2+11x-46=0
⇒ (6x+23)(x-2)=0
⇒ x=2
∴ கனச்சதுரத்தின் கொள்ளளவு =x3=23=8 கன அலகுகள்
கனசெவ்வகத்தின் கன அளவு = 52 + 8 = 60 கன அலகுகள்
[∵ x=\(\frac{-23}{6}\) என்பது சாத்தியமில்லை x ஆனது கனத்தின் பக்கத்தை குறிக்கிறது.
6.
17x2+43x-73=0 எனும் இருபடிச் சமன்பாட்டின் மூலங்கள், α மற்றும் β என்பதால், α+β=-\(\frac { 43 }{ 17 } \) மற்றும் αβ=-\(\frac { 73 }{ 17 } \) ஆகும்.
தேவையான இருபடிச் சமன்பாட்டின் மூலங்கள் α+2 மற்றும் β+2 ஆகும். எனவே
மூலங்களின் கூடுதல் =α+β+4=\(\frac { -43 }{ 17 } +4=\frac { 25 }{ 17 } \)
மூலங்களின் பெருக்கல் =αβ+2(α+β)+4=\(\frac { -73 }{ 17 } +2\left( \frac { -43 }{ 17 } \right) +4=\frac { -91 }{ 17 } \)
எனவே, தேவையான இருபடிச் சமன்பாடு \({ x }^{ 2 }-\frac { 25 }{ 17 } x-\frac { 91 }{ 17 } \)=0 ஆகும். இச்சமன்பாட்டை 17-ஆல் பெருக்க, α+2 மற்றும் β+2 ஆகியவற்றை மூலங்களாகக் கொண்ட 17x2 - 25x - 91 = 0 எனும் இருபடிச் சமன்பாடு கிடைக்கிறது
7.
இது இரட்டைப்படை இரண்டாம் வகை தலைகீழ் சமன்பாடாகும். எனவே இதனை பின்வருமாறு மாற்றி எழுதலாம்.
\(6\left( { x }^{ 2 }+\frac { 1 }{ { x }^{ 2 } } \right) -5\left( { x }+\frac { 1 }{ x } \right) -38\) ......(1)
பிரதியிடு \({ x }+\frac { 1 }{ x } =y\Rightarrow \left( { x }+\frac { 1 }{ x } \right) ^{ 2 }\)=y2
⇒ \({ x^{ 2 } }+\frac { 1 }{ x } +2={ y }^{ 2 }\Rightarrow { x^{ 2 } }+\frac { 1 }{ x } \)=y2-2
∴ (1)லிருந்து,
6(y2-2)-5y-38 =0
⇒ 6y2-12-5y-38 =0
⇒ 6y2-5y-50 =0
⇒ (3y-10)(2y+5)=0
⇒ y=\(\frac { 10 }{ 3 } ,\frac { -5 }{ 2 } \)
நிலை (i)
y=\(\frac { +10 }{ 3 } \) எனில்,
\({ x }+\frac { 1 }{ x } =\frac { +10 }{ 3 } \)
\(\frac { x^{ 2 }+1 }{ x } =\frac { +10 }{ 3 } \)
⇒ 3x2-10x+3 =0
\((x-3)(x-\frac { 1 }{ 3 } )=0\Rightarrow x=3,\frac { 1 }{ 3 } \)
நிலை (ii)
y=-\(\frac { 5 }{ 2 } \) எனில்,
⇒ \(x+\frac { 1 }{ x } =-\frac { 5 }{ 2 } \Rightarrow \frac { { x }^{ 2 }+1 }{ x } =\frac { -5 }{ 2 } \)
⇒ 2x2+2+5x=0 ⇒ 2x2+5x+2=0
⇒ (x+2)(2x+1) =0 ⇒ x=-2, \(\frac { -1 }{ 2 } \)
∴ மூலங்கள் \(3,\frac { 1 }{ 3 } ,-2,\frac { -1 }{ 2 } \).
8.
α,β,\(\gamma \) என்பது சமன்பாட்டின் மூலங்கள் என்க.
கொடுக்கப்பட்ட \(\frac { \alpha }{ \beta } =\frac { 3 }{ 2 } \Rightarrow 2\alpha =3\beta \Rightarrow \alpha =\frac { 3 }{ 2 } \beta \)
∴ \(\frac { 3 }{ 2 } \beta ,\beta ,\gamma \) என்பது கொடுக்கப்பட்ட சமன்பாட்டின் மூலங்கள் வியட்டாவின் சூத்திரப்படி,
\(\frac { 3 }{ 2 } \beta +\beta +\gamma =\frac { -b }{ a } =\frac { -(-9) }{ 1 } \)
\(\frac { 5 }{ 2 } \beta +\gamma =9\Rightarrow \gamma =9-\frac { 5 }{ 2 } \beta \)
⇒ \(\gamma \)=\(\frac { 18-5\beta }{ 2 } \) .........(2)
மேலும் \(\frac { 3 }{ 2 } \beta (\beta )+\beta \gamma +\left( \frac { 3 }{ 2 } \beta \right) \gamma =\frac { c }{ a } =\frac { 14 }{ 1 } \)=14
⇒ \(\frac { 3 }{ 2 } \beta ^{ 2 }+\frac { 5 }{ 2 } \gamma \)=14
⇒ \(\frac { 3 }{ 2 } \beta ^{ 2 }+\frac { 5 }{ 2 } \beta \left( \frac { 18-5\beta }{ 2 } \right) \)=14 [(2) ஐ பயன்படுத்தி]
⇒ \(\frac { 3 }{ 2 } { \beta }^{ 2 }+\frac { 90\beta }{ 4 } -\frac { 25\beta ^{ 2 } }{ 4 } \)=14
4 ஆல் பெருக்க 6β2+90β-25β2=56
19β2-90β+56=0
⇒ (β-4)(19β-14)=0
⇒ β=4
β=\(\frac { 14 }{ 19 } \)
β =4 எனில் மற்ற மூலங்கள்
\(\frac { 3 }{ 2 } (4),4,\frac { 18-5 }{ 2 } (4)\)
⇒ 6,4,-1
β =\(\frac { 14 }{ 19 } \) எனில் மற்ற மூலங்கள் \(\frac { 3 }{ 2 } \beta ,\beta ,\frac { 18-5\beta }{ 2 } \) [(2)-ன் படி]
⇒ \(\frac { 3 }{ 2 } \left( \frac { 14 }{ 19 } \right) ,\frac { 14 }{ 19 } ,\frac { 18-5\left( \frac { 14 }{ 19 } \right) }{ 2 } \Rightarrow \frac { 21 }{ 19 } ,\frac { 14 }{ 19 } ,\frac { 136 }{ 19 } \).
9.
மூலங்கள் a-d, a, a+d என்க. எனவே மூலங்களின் கூடுதல் 3a என்பது கொடுக்கப்பட்ட சமன்பாட்டின்படி 6-க்கு சமம். எனவே 3a=6 ஆகும். ஆகையால் a=2 ஆகும். மூலங்களின் பெருக்கல் a3-ad2 என்பது சமன்பாட்டின்படி -24 க்கு சமம். a-ன் மதிப்பைப் பிரதியிட 8-2d2=-24 என ஆகும். எனவே d=±4 ஆகும். d=4 எனில் −2,2,6 என மூலங்கள் கிடைக்கும். மேலும் d=-4 எனில், 6,2,-2 (அதே மூலங்கள் பின்னோக்கு வரிசையில்) என மூலங்கள் கிடைக்கும்.
10.
மெய்யெண் கெழுக்களுடைய தேவையான பல்லுறுப்புக்கோவைச் சமன்பாட்டின் ஒரு மூலம் 2-\(\sqrt { 3 } \)i என்பதால், 2+\(\sqrt { 3 } \) i என்பதும் ஒரு மூலமாகும். எனவே, மூலங்களின் கூடுதல் 4 மற்றும் மூலங்களின் பெருக்கல்தொகை 7 ஆகும். ஆகையால் x2-4x+7=0 என்பது ஒரு மெய்யெண் கெழுக்களுடைய தேவைப்படும் தலைஒற்றைப் பல்லுறுப்புக்கோவைச் சமன்பாடாகும்.
11.
\(\sum_{r=0}^n{ }^n C_r(-1)^r \dot{x}^r=1-{ }^n C_1 x+{ }^n C_2 x^2-{ }^n C_3 x^3+\ldots(-1)^n x^n\)
P(x) என்பது 'n' மாற்றங்களைக் கொண்டுள்ளது.எனவே, இது 'n' மிகை மூலங்களைக் கொண்டிருக்கும்.
P(-x)ல் குறிமாற்றங்கள் இல்லை, எனவே குறையெண் மூலங்கள் கிடையாது.
12.
P(x) = x3 + 2x + 3, குறிமாற்றங்கள் இல்லை
மிகை மெய்யெண் மூலங்கள் இல்லை.
P(-x) = - x3 - 2x + 3, ஒரேயொரு குறிமாற்றம்
ஒரு குறையெண் மூலம்
இதற்கு ஒரு குறையெண் மற்றும் இரண்டு கற்பனை மூலங்கள் உள்ளது.
13.
(c)
n கலப்பெண் மூலங்கள்
14.
\(x^3 =-64 \)
\(x^3 =-4 \times-4 \times-4=(-4)^3 \)
\(x =-4\)
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards