12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 31/07/2019
மின்காந்தத்தூண்டலும் மாறுதிசை மின்னோட்டமும்
12ஆம் வகுப்பு Physics / இயற்பியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Physics / இயற்பியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Physics Test1.
ஒரு மின்தூண்டி எதற்குப் பயன்படுகிறது? சில உதாரணங்களைத் தருக.
2.
தூண்டப்பட்ட மின்னியக்கு விசையை உருவாக்கும் வழிகளைக் கூறுக.
3.
சுழல் மின்னோட்டம் எவ்வாறு உருவாகிறது? அவை எவ்வாறு ஒரு கடத்தியில் பாய்கிறது?
4.
ஒரு இலட்சிய மின்மாற்றியானது முதன்மைச்சுருள் மற்றும் துணைச்சுருள்களில் முறையே 460 மற்றும் 40,000 சுற்றுகளைக் கொண்டுள்ளது. மின்மாற்றியானது 230 V AC மூலத்துடன் இணைக்கப்பட்டால், துணைச்சுருளின் ஒரு சுற்றில் உருவான மின்னழுத்த வேறுபாட்டைக் காண்க. துணைச்சுருளுடன் 104 Ω மின்தடைப் பளு இணைக்கப்படுகிறது. பளுவிற்கு வழங்கப்பட்ட திறனைக் கணக்கிடுக.
5.
சென்னையில் புவி காந்தப்புலத்தின் கிடைத்தளக்கூறு 4.04 x 10-5 T கொண்ட ஒரு இடத்தில் 7.2 m உயரமுள்ள ஒரு கட்டிடத்தின் மேற்புறத்தில் இருந்து 0.5 m நீளமுள்ள கடத்தும் தண்டு தடையின்றி விழுகிறது. தண்டின் நீளம் புவிகாந்தப்புலத்தின் கிடைத்தளக்கூறுக்கு செங்குத்தாக இருப்பின், தண்டானது தரையை தொடும்போது தண்டில் தூண்டப்பட்ட மின்னியக்கு விசையைக் காண்க (g = 10 m s-2 s–2 என்ற சீரான முடுக்கத்துடன் விழுவதாகக் கொள்க)
6.
ஒரு நேரான கடத்தக்கூடிய கம்பியானது ஒரு குறிப்பிட்ட உயரத்திலிருந்து அதன் நீளம் கிழக்கு – மேற்கு திசையில் உள்ளவாறு கிடைமட்டமாக விழச் செய்யப்படுகிறது. அதில் ஒரு மின்னியக்கு விசை தூண்டப்படுமா? உனது விடையை நியாயப்படுத்துக.
7.
2 T என்ற ஒரு காந்தப்புலத்தில் 40 சுற்றுகள் மற்றும் 200 cm2 பரப்பு கொண்ட மூடிய சுருள் ஒன்று சுழற்றப்படுகிறது. அது 0.2 விநாடி நேரத்தில் அதன் தளம் புலத்திற்கு 30° கோணத்தில் இருக்கும் நிலையில் இருந்து, புலத்திற்கு செங்குத்தாக இருக்கும் நிலைக்கு சுழலுகிறது. அதன் சுழற்சியின் காரணமாக சுருளில் தூண்டப்படும் மின்னியக்கு விசையைக் காண்க.
8.
5 × 10−2 m2 பரப்புள்ள ஒரு வட்ட வடிவச் சுற்று, 0.2 T சீரான காந்தப்புலத்தில் சுழல்கிறது. படத்தில் காட்டியுள்ளவாறு சுற்றானது காந்தப்புலத்திற்கு செங்குத்தாக உள்ள அதன் விட்டத்தைப் பொருத்து சுழன்றால், சுற்றின் தளமானது
(i) புலத்திற்கு செங்குத்தாக
(ii) புலத்திற்கு 60° சாய்வாக மற்றும்
(iii) புலத்திற்கு இணையாக உள்ளபோது சுற்றுடன் தொடர்புடைய காந்தப்பாயத்தைக் கணக்கிடுக.
9.
பரிமாற்று மின்தூண்டல் என்றால் என்ன?
10.
தன் மின்தூண்டல் என்றால் என்ன?
11.
50 Hz அதிர்வெண் மற்றும் பெரும மதிப்பு 20 V கொண்ட ஒரு சைன் வடிவ மின்னழுத்த வேறுபாட்டிற்கான சமன்பாட்டை எழுதுக. தொடர்புடைய மின்னழுத்த வேறுபாடு மற்றும் நேரம் இடையேயான வரைபடத்தை வரைக.
12.
மின்புரட்டி (inverter) என்பது நமது இல்லங்களில் பயன்படுத்தப்படும் மின்கருவி ஆகும். வீட்டில் மின்சாரம் இல்லாதபோது, மின்விசிறி அல்லது மின்விளக்கு போன்ற சில கருவிகளை இயக்கத்தேவையான மாறுதிசை மின்னோட்டத்திறனை மின்புரட்டி வழங்குகிறது. மின்புரட்டியின் உள்ளே ஒரு ஏற்று மின்மாற்றி பொருத்தப்பட்டுள்ளது. அது 12V AC ஐ 240V AC ஆக மாற்றுகிறது. முதன்மைச்சுருள் 100 சுற்றுகளைக் கொண்டுள்ளது. 50 mA மின்னோட்டத்தை புறச்சுற்றுக்கு மின்புரட்டி அளிக்கிறது. துணைச்சுருளில் உள்ள சுற்றுகளின் எண்ணிக்கை மற்றும் முதன்மை மின்னோட்டம் ஆகியவற்றைக் காண்க.
13.
காற்று உள்ளகம் கொண்ட ஒரு வரிச்சுருளின் தன் மின்தூண்டல் எண் 4.8 mH ஆகும். அதன் உள்ளகம், இரும்பு உள்ளகமாக மாற்றப்பட்டால் அதன் தன் மின்தூண்டல் எண் 1.8 H ஆக மாறுகிறது. இரும்பின் ஒப்புமை உட்புகுத்திறனைக் கணக்கிடுக.
14.
\(\frac {20}{ \pi^ 2 }\) H மின்தூண்டியானது மின்தேக்குத்திறன் C கொண்ட மின்தேக்கியுடன் இணைக்கப்பட்டுள்ளது. 50 Hz இல் பெருமத் திறனை செலுத்தத் தேவையான C இன் மதிப்பானது_____ .
50 μF
0.5 μF
500 μF
5 μF
15.
ஒரு சுற்றில் மாறுதிசை மின்னோட்டம் மற்றும் மின்னழுத்த வேறுபாட்டின் கணநேர மதிப்புகள் முறையே i = \(\frac { 1 }{ \sqrt 2 } \) sin(100πt ) A மற்றும் v = \(\frac { 1 }{ \sqrt 2 } \) sin\(\left( 100\pi t +\frac { \pi }{ 3 } \right) \) V ஆகும். சுற்றில் நுகரப்பட்ட சராசரித்திறன் (வாட் அலகில்)_____ .
\(\frac 14\)
\(\frac {\sqrt 3}4\)
\(\frac 12\)
\(\frac 18\)
16.
ஒரு 20 mH மின்தூண்டி, 50 μF மின்தேக்கி மற்றும் 40 Ω மின்தடை ஆகியவை ஒரு மின்னியக்கு விசை υ = 10 sin 340 t கொண்ட மூலத்துடன் தொடராக இணைக்கப்பட்டுள்ளன. AC சுற்றில் திறன் இழப்பு_____ .
0.76 W
0.89 W
0.46 W
0.67 W
17.
ஒரு தொடர் RLC சுற்றில், 100 Ω மின்தடைக்குக் குறுக்கே உள்ள மின்னழுத்த வேறுபாடு 40 V ஆகும். ஒத்ததிர்வு அதிர்வெண் ω ஆனது 250 rad/s. C இன் மதிப்பு 4 μF எனில், L க்கு குறுக்கே உள்ள மின்னழுத்த வேறுபாடு______
600 V
4000 V
400 V
1 V
18.
ஒரு தொடர் RL சுற்றில், மின்தடை மற்றும் மின்தூண்டல் மின்மறுப்பு இரண்டும் சமமாக உள்ளன. சுற்றில் மின்னழுத்த வேறுபாடு மற்றும் மின்னோட்டம் இடையே உள்ள கட்ட வேறுபாடு______.
\(\frac {π}{4}\)
\(\frac {π}{2}\)
\(\frac {π}{6}\)
zero
19.
ஒரு மின்சுற்றில் R, L, C மற்றும் AC மின்னழுத்த மூலம் ஆகிய அனைத்தும் தொடராக இணைக்கப்பட்டுள்ளன. L ஆனது சுற்றிலிருந்து நீக்கப்பட்டால், மின்னழுத்த வேறுபாடு மற்றும் மின்னோட்டம் இடையே உள்ள கட்ட வேறுபாடு π/3 ஆகும். மாறாக, C ஆனது நீக்கப்பட்டால், கட்ட வேறுபாடானது மீண்டும் π/3 என உள்ளது. சுற்றின் திறன் காரணி_______ .
1/2
1/\(\sqrt2\)
1
\(\sqrt3\)/2
20.
ஒரு இறக்கு மின்மாற்றி மின்மூலத்தின் மின்னழுத்த வேறுபாட்டை 220 V இல் இருந்து 11 V ஆகக் குறைக்கிறது மற்றும் மின்னோட்டத்தை 6 A இல் இருந்து 100 A ஆக உயர்த்துகிறது. அதன் பயனுறுதிறன்______.
1.2
0.83
0.12
0.9
21.
22.
மின்னோட்டமானது 0.05 s நேரத்தில் +2A லிருந்து -2A ஆக மாறினால், சுருளில் 8 V மின்னியக்கு விசை தூண்டப்படுகிறது. சுருளின் தன் மின் தூண்டல் எண் _______.
0.2 H
0.4 H
0.8 H
0.1 H
23.
t என்ற கணத்தில், ஒரு சுருளோடு தொடர்புடைய பாயம் ΦB = 10t2 − 50t + 250 என உள்ளது. t = 3 s – இல் தூண்டப்பட்ட மின்னியக்கு விசையானது______.
−190 V
−10 V
10 V
190 V
1.
மின்தூண்டியில் மின்னாற்றல் சேமிக்கப்பட்டு வருகிறது. இது குழல் விளக்குகளில் சோக் ஆக பயன்படுகிறது
உதாரணங்கள்:
கம்பிச்சுருள், வரிச்சுருள் மற்றும் வட்ட வரிச்சுருள்
2.
i) காந்தப்புலத்தை (B) மாற்றுவதன் மூலம்
ii) கம்பிச்சுருளின் பரப்பை (A) மாற்றுவதன் மூலம் மற்றும்
iii) காந்தப்புலத்தை சார்ந்த கம்பிச்சுருளின் திசையமைப்பை (θ) மாற்றுவதன் மூலம்.
3.
கடத்தியானது தகடாகவோ அல்லது தட்டாகவோ இருந்தாலும் அதனுடன் தொடர்புடைய காந்தப்பாயம் மாறும்போது ஒரு மின்னியக்கு விசை தூண்டப்படுகிறது. ஆனால், வேறுபாடு என்னவெனில் தூண்டப்பட்ட மின்னோட்டம் பாய்வதற்கு குறிப்பிட்ட சுற்றோ அல்லது பாதையோ இருப்பதில்லை. அதன் விளைவாக, தூண்டப்பட்ட மின்னோட்டங்கள் ஒரு புள்ளியை மையமாகக் கொண்டு வட்டப்பாதைகளில் செல்கின்றன. இந்த மின்னோட்டங்கள் நீர்ச்சுழலைப் போன்று இருப்பதால் இவை சுழல் மின்னோட்டங்கள் என்று அழைக்கப்படுகின்றன.
4.
NP = 460 சுற்றுகள்; NS = 40,000 சுற்றுகள்
VP = 230 V; RS = 104 Ω
(i) துணைச்சுருள் மின்னழுத்த வேறுபாடு
\({ V }_{ S }=\cfrac { { V }_{ p }{ N }_{ S } }{ { N }_{ p } } =\cfrac { 230\times 40,000 }{ 460 } \)
= 20,000V
துணைச்சுருளில் ஒரு சுற்றுக்கான மின்னழுத்த வேறுபாடு
\(\cfrac { { { V }_{ s } } }{ { N }_{ s } } =\cfrac { 20,000 }{ 40,000 } \)
= 0.5V
(ii) வழங்கப்பட்ட திறன்
= \({ V }_{ S }{ I }_{ S }=\cfrac { { V }_{ S }^{ 2 } }{ { R }_{ S } } =\cfrac { 20,000\times 20,000 }{ { 10 }^{ 4 } } =40kW\)
5.
l = 0.5 m; h = 7.2 m; u = 0 m s-1;
g = 10 m s-2; BH = 4.04 x 10-5 T
தண்டின் இறுதி திசைவேகம்
v2 = u2 + 2gh
= 0 + (2 x 10 x 7.2)
v2 = 144
v = 12 m s-1
தண்டானது தரையைத் தொடும்போது தூண்டப்பட்ட மின்னியக்கு விசை ε = BHlv
= 4.04 x 10-5 x 0.5 x 12
= 242.4 μV
6.
ஆம்! கம்பியில் ஒரு மின்னியக்கு விசை தூண்டப்படும். ஏனெனில் அது புவிகாந்தப்புலத்தின் கிடைத்தளக் கூறுக்கு செங்குத்தாக இயங்குகிறது. அப்பொழுது புவிகாந்தப்புலத்தின் காந்தப்புலக் கோடுகளை வெட்டுகிறது.
7.
N = 40 சுற்றுகள்; B = 2 Wb m–2
A = 200 cm2 = 200 x 10–4 m2;
தொடக்க பாயம், Φi = BA cos θ
= 2 x 200 x 10-4 x cos 600
ஏனெனில் θ = 900 - 300 = 600
Φi = 2 x 10-2 Wb
இறுதி பாயம், Φf = BA cos θ
= 2 x 200 x 10-4 x cos 600
ஏனெனில் θ = 0°
Φf = 4 x 10-2Wb
தூண்டப்பட்ட மின்னியக்கு விசையின் எண்மதிப்பு
ε = N\(\frac {dΦ_B }{dt } \)
\(=\frac{40\times(4\times 10^{-2}-2\times10^{-2})}{0.2}\) = 4V
8.
A = 5\(\times\) 10-2 m2; B = 0.2 T
(i) θ = 0°;
ΦB = BA cosθ = 0.2 \(\times\) 5 \(\times\) 10-2 x cos0°
ΦB = 1 \(\times\) 10-2 Wb
(ii) θ = 90° – 60° = 30°;
ΦB = BA cosθ = 0.2 \(\times\) 5 \(\times\) 10-2 \(\times\) cos30°
ΦB = 10 \(\times\) 10-3 \(\times\) \(\frac { \sqrt { 3 } }{ 2 } \) = 8.66 \(\times\) 10-3 Wb
(iii) θ = 90°;
ΦB = BA cos 90° = 0
9.
(i) ஒரு சுருளின் வழியே பாயும் மின்னோட்டம் நேரத்தைப் பொறுத்து மாறினால் அருகிலுள்ள சுருளில் மின்னியக்குவிசை தூண்டப்படும். இது பரிமாற்று மின்தூண்டல் எனப்படும்.
(ii) தூண்டப்பட்ட மின்னியக்குவிசை பரிமாற்று தூண்டப்பட்ட மின்னியக்கு விசை எனப்படும்.
10.
(i) கம்பிச் சுருளோடு தொடர்புடைய காந்தப்பாயம் மாறினால் அதே சுருளில் மின்னியக்கு விசை தூண்டப்படுகிறது. இது தன்மின்தூண்டல் எனப்படும்.
(ii) தூண்டப்பட்ட மின்னியக்கு விசை தன்மின் தூண்டப்பட்ட மின்னியக்கு விசை எனப்படும்.
11.
f = 50Hz; Vm = 20V
கணநேர மின்னழுத்த வேறுபாடு
\(v={ V }_{ m }\sin\omega t={ V }_{ m }\sin2\pi ft\)
= \(20\sin(2\pi \times 50)t=20\sin\left( 100\times 3.14 \right) t\)
\(v=20\sin314t\)
ஒரு சுற்றுக்கான நேரம், \(T=\frac { 1 }{ f } =\frac { 1 }{ 50 } =0.02s\)
= 20 x 10-3s = 20ms
அலைவடிவமானது கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
12.
VP = 12 V; VS = 240 V
Is = 50 mA; NP = 100 சுற்றுகள்
\(\cfrac { { V }_{ S } }{ { V }_{ P } } =\cfrac { { N }_{ S } }{ { N }_{ P } } =\cfrac { { I }_{ P } }{ { I }_{ S } } =K\)
மின்மாற்று விகிதம் \(K=\cfrac { 240 }{ 12 } =20\)
துணைச்சுருளில் உள்ள சுற்றுகளின் எண்ணிக்கை
NS = NP x K = 100 x 20 = 2000
முதன்மை மின்னோட்டம்,
IP = K x IS = 20 x 50mA = 1A
13.
Lகாற்று = 4.8 x 10-3 H
Lஇரும்பு = 1.8.H
Lகாற்று = μ0n2Al = 4.8 x 10-3 H
Lஇரும்பு = μ0n2Al = μ0μrn2Al = 1.8H
∴μr = = \(\frac{1.8}{4.8\times 10^{-3}}\) = 375
14.
\(L=\frac{20}{\pi^2} \mathrm{H}, \mathrm{f}=50 \mathrm{~Hz} \)
\(f=\frac{1}{2 \pi \sqrt{L C}} \)
\(50=\frac{1}{2 \pi \sqrt{\frac{20}{\pi^2} \times C}} \)
\(50=\frac{1}{2 \times \sqrt{20 C}} \)
\(\therefore(50)^2=\frac{1}{4 \times 20 C} \)
\(\therefore C=\frac{2500}{80}=5 \mu \mathrm{F}\)
15.
Pav = Erms x Irms x cos A/c
\(= \frac{1}{2}\times\frac{1}{{2}}\times \cos \theta
= \frac{1}{2}\times\frac{1}{2}\times\frac{1}{2}=\frac{1}{8}\)
16.
L = 20 x 10-3H. C = 50 x 10-6 F, R= 40Ω
என V = 10 sin 340 t
\(\therefore V_0=10 \mathrm{~V}, \omega=340 \)
\(X_1=1 \omega^{\prime}=20 \times 10^3 \times 340 \)
\(=6800 \times 10^{-1}=6.8 \Omega \)
\(X_C=\frac{1}{C .} \)
\(=\frac{1}{50 \times 10^{-\alpha} \times 340}=\frac{10^{\circ}}{17000}=\frac{10^{\prime}}{17}=58.823 \Omega \)
\(Z=\sqrt{R^2+\left(X_6-X_1\right)^2} \)
\(=\sqrt{(40)^2+(58.82-6.8)^2} \)
\(=\sqrt{(40)^2+(52.02)^2} \)
\(=65.62 \Omega\)
சுற்றில் உச்ச மின்னோட்டம்
\(I_0=\frac{V_0}{Z}=\frac{10}{65.62} \)
\(\cos 0=\frac{R}{Z}=\frac{40}{65.62} \)
A.C சுற்றில் திறன்
\(=V_{r m} 1_{r \rightarrow \infty} \cos \phi \)
\(=\frac{1}{2} V_{\mathrm{o}} I_{\mathrm{c}} \cos \phi \)
\(=\frac{1}{2} \times 10 \times \frac{10}{65.62} \times \frac{40}{65.62}\)
\(\frac{2000}{4305.98}\)
= 0.46 W
17.
\(\omega=250 \mathrm{rad} / \mathrm{s}, C=4 \times 10^{-} \mathrm{F} \)
\(R=100 \Omega, \quad \mathrm{V}_{\mathrm{R}}=40 \mathrm{~V} \)
\(\therefore I_{\mathrm{R}}=\frac{V_R}{100}=\frac{40}{100}=0.4 \mathrm{~A} \)
\(\omega=\frac{1}{\sqrt{L C}} \)
\(\omega^2=\frac{1}{L C} \)
\((250)^2=\frac{1}{L \times 4 \times 10^{-6}} \)
\(L=\frac{1}{4 \times(250)^2 \times 10^{-6}} \)
\(=\frac{1}{4 \times 250 \times 250 \times 10^{-6}} \)
\(=\frac{1}{1000 \times 10^{-6} \times 250} \)
\(=\frac{10^3}{250}=\frac{1000}{250}=4 \mathrm{H}\)
L ன் குறுக்கே மின்னழுத்தம் , Vt = IXL
VL = l x L x ω
= 0.4 x 4 x 250= 0.4 x 1000 = 400 V
18.
RL சுற்றில், tanΦ = \(\frac{X_l}{R}\)
R = X1, எனில் tanΦ = \(\frac{X_l}{X_l}=1\)
∴ Φ = tan-1(1)=\(\frac{\pi}{4}\)
∴ கட்ட வேறுபாடு \(=\frac{\pi}{4}\)
19.
\(\Phi = \frac{\pi}{3}-\frac{\pi}{3}=0 \)
திறன் காரணி = cosФ = cos 0 = 1
20.
\(\mathrm{V}_{\mathrm{P}}=220 \mathrm{~V}, \mathrm{~V}_{\mathrm{s}}=11 \mathrm{~V} \)
\(\mathrm{I}_{\mathrm{P}}=6 \mathrm{~A}, \mathrm{I}_{\mathrm{s}}=100 \mathrm{~A} . \)
பயனுறுதிறன் \(=\frac{\mathrm{V}_{\mathrm{s}} \mathrm{I}_{\mathrm{s}}}{\mathrm{V}_{\mathrm{P}} \mathrm{I}_{\mathrm{P}}} \)
\(=\frac{11 \times 100}{220 \times 6}=\frac{1100}{220 \times 6}=\frac{5}{6}=0.83\)
21.
(a)
22.
\(\text {emf } ε =8 \mathrm{~V} \)
\(d I=I_1-I_0=2-(-2)=4 \mathrm{~A} \)
\(\text {dt }=0.05 \mathrm{~s} \)
\(L=\frac{-ε}{d I / d t}=\frac{-8}{4 / 0.05} \)
\(=\frac{-8 \times 0.05}{4}=\frac{-0.40}{4} \)
=-0.1 H
23.
\(\phi_B =10 t^2-50 t+250 \)
\(e =\frac{-d \phi_B}{d t} \)
\(=\frac{-d}{d t}\left(10 t^2-50 t+250\right) \)
=-(20 t - 50)
=-20 t + 50
t = 3 s, எனில் e =-20(3) + 50 = -60 + 50
e = -10V
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards