12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 02/09/2019
மின்னோட்டவியல்
12ஆம் வகுப்பு Physics / இயற்பியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Physics / இயற்பியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Physics Test1.
ஒரு மின்சுற்றில் திறனுக்கான சமன்பாடு P = VI என்பதை வருவி.
2.
மின்னோட்ட அடர்த்தி வரையறு.
3.
24 Ω மின்தடையின் குறுக்கே மின்னழுத்த வேறுபாடு 12 V எனில், மின்தடை வழியே செல்லும் மின்னோட்டத்தின் மதிப்பு என்ன?
4.
20oC ல் ஒரு நிக்ரோம் கம்பியின் மின்தடை 10 Ω. அதன் வெப்பநிலை மின்தடை எண் 0.004/oC எனில் நீரின் கொதி நிலையில் அதன் மின்தடையைக் கணக்கிடுக. உன் முடிவை விவாதி.
5.
பெல்டியர் விளைவு என்றால் என்ன?
6.
ஜுலின் வெப்ப விதியைக் கூறுக.
7.
மின்தடை எண் வரையறு.
8.
பின்வரும் மின்சுற்றில் I ன் மதிப்பை கண்டுபிடி.

9.
2.1 V மின்கலமானது 10 Ω மின்தடை வழியே 0.2 A மின்னோட்டத்தை செலுத்தினால் அதன் அகமின்தடை____ .
0.2 Ω
0.5 Ω
0.8 Ω
1.0 Ω
10.
இந்தியாவில் வீடுகளின் பயன்பாட்டிற்கு 220 V மின்னழுத்த வேறுபாட்டில் மின்சாரம் அளிக்கப்படுகிறது. இது அமெரிக்காவில் 110 V அளவு என அளிக்கப்படுகிறது. இந்தியாவில் பயன்படுத்தப்படும் 60 W மின்விளக்கின் மின்தடை R எனில், அமெரிக்காவில் பயன்படுத்தப்படும் 60 W மின்விளக்கின் மின்தடை_____ .
R
2R
\(\frac{R}{4}\)
\(\frac{R}{2}\)
11.
ஒரு கார்பன் மின்தடையாக்கியின் மின்தடை மதிப்பு (47 ± 4.7)k Ω எனில் அதில் இடம்பெறும் நிறவளையங்களின் வரிசை_____ .
மஞ்சள் - பச்சை - ஊதா - தங்கம்
மஞ்சள் - ஊதா - ஆரஞ்சு - வெள்ளி
ஊதா - மஞ்சள் - ஆரஞ்சு - வெள்ளி
பச்சை - ஆரஞ்சு - ஊதா - தங்கம்
12.
பின்வரும் வரைபடத்தில் ஒரு பெயர் தெரியாத கடத்திக்கு அளிக்கப்பட்ட மின்னழுத்த வேறுபாடு மற்றும் மின்னோட்ட மதிப்புகளின் தொடர்பு காட்டப்பட்டுள்ளது. இந்த கடத்தியின் மின்தடை என்ன?

2Ω
4Ω
8Ω
1Ω
13.
வீட்ஸ்டோன் சமனச் சுற்றில் சமன்செய் நிலைக்கான நிபந்தனையைப் பெறுக.
1.
மின்னழுத்த ஆற்றல் அளிக்கப்படும் வீதம் மின்திறன் எனப்படும்.
\(P=\frac{d W}{d t}\)
\(P=\frac{d}{d t}(\mathrm{~V} d Q)=\mathrm{V} \frac{d Q}{d t}\) ....(1)
\(\frac{d Q}{d t}=I\), என்பதிலிருந்து
சமன்பாடு (1) ஐ பின்வருமாறு மாற்றி எழுதலாம்.
\(\therefore\) P = VI
2.
ஓரலகு குறுக்கு வெட்டு பரப்பு உடைய கடத்தியின் வழியே பாயும் மின்னோட்டத்தின் அளவே, மின்னோட்ட அடர்த்தி எனப்படும்.
\(\therefore J=\frac{I}{A}\)
இங்கு I - மின்னோட்டம்
A - குறுக்கு வெட்டு பரப்பு
3.

V = 12 V மேலும் R = 24 Ω
மின்னோட்டம், I = ?
ஓம் விதியிலிருந்து, I = \(\frac { V }{ R } =\frac { 12 }{ 24 } \)= 0.5A
4.
RT = 14 Ω. வெப்பநிலை அதிகரிக்க கம்பியின் மின்தடையும் அதிகரிக்கும்.
T0 = 0oC, R0 = 10 Ω மற்றும் α = 0.004/oC
T = 100o C, RT = ?
RT = Ro[1+ α (T - To)]
R100 = 10 [1 + (0.004 x (100 - 20))]
= 10 [1 + 0.32] = 10 x 1.32 = 13.2 Ω
RT = 13.2Ω
வெப்பநிலை அதிகரிக்க கம்பியின் மின்தடையும் அதிகரிக்கும்.
5.
வெப்ப மின்னிரட்டையுடன் கூடிய மின் சுற்றில் மின்னோட்டத்தை செலுத்தும்போது, ஒரு சந்தியில் வெப்பம் வெளிப்படுதலும் மற்றொரு சந்தியில் வெப்பம் உட்கவர்தலும் நடைபெறும். இவ்விளைவு பெல்டியர் விளைவு எனப்படும்.
6.
ஜூலின் விதிப்படி, ஒரு மின்சுற்றில் மின்னோட்டம் பாய்வதால் உருவாக்கப்படும் வெப்பமானது,
i) மின்னோட்டத்தின் இருமடிக்கு நேர்த்தகவிலும்
ii) மின்சுற்றின் மின்தடைக்கு நேர்த்தகவிலும்
iii) மின்னோட்டம் பாயும் நேரத்திற்கு நேர்த்தகவிலும் அமையும்.
7.
பொருளின் மின்தடை எண் என்பது ஓரலகு நீளமும் ஓரலகு குறுக்கு வெட்டு பரப்பும் கொண்ட கடத்தியானது, மின்னோட்டத்திற்கு அளிக்கும் மின்தடை ஆகும்.
8.
மின்சுற்றில் P என்ற புள்ளிக்கு கிர்க்காஃப் முதல் விதியை பயன்படுத்த, P-ஐ நோக்கி செல்லும் அம்புக்குறிகளை (மின்னோட்டத்தை) நேர்குறியாகவும், P-ஐ விட்டு விலகிச் செல்லும் அம்புக்குறிகளை (மின்னோட்டங்கள்) எதிர்க்குறியாகவும் எடுத்துக் கொள்ள வேண்டும்.
எனவே, 0.2A – 0.4A + 0.6A – 0.5A + 0.7A – I = 0
1.5A – 0.9A – I = 0
0.6A – I = 0
I = 0.6 A
9.
I = 0.2 A, R = 10 Ω, E = 2.1 V
\(I=\frac{ɛ}{R+r}\)
\(0.2=\frac{2.1}{10+r}\)
0.2 x (10 + r) = 2.1
2 + 0.2 r = 2.1
0.2 r = 2.1 - 2 = 0.1
அகமின்தடை, \(r=\frac{0.1}{0.2}=\frac{1}{2}\)
r = 0.5 Ω
10.
\(\mathrm{V}_1 =220 \mathrm{~V}, \quad \mathrm{P}_1=60 \mathrm{~W} \)
\(\mathrm{~V}_{\mathrm{U}} =110 \mathrm{~V}, \mathrm{P}_{\mathrm{U}}=60 \mathrm{~W} \)
\(P =\frac{V^2}{R} \Rightarrow R=\frac{V^2}{P} \)
\(\therefore R_l =\frac{V_I^2}{P_l} \text { } \ \mathrm{R}_U=\frac{V_U^2}{P_U} \)
\(R_l =\frac{220 \times 220}{60} \quad \mathrm{R}_{\mathrm{U}}=\frac{110 \times 110}{60} \)
\(R_I =\frac{48400}{60} \quad R_U=\frac{12100}{60} \)
\(\frac{R_U}{R_l} =\frac{12100}{60} \times \frac{60}{48400}=\frac{1}{4} \)
\(R_U =\frac{R_l}{4}=\frac{R}{4}\)
11.
மஞ்சள் - 4
ஊதா - 7
ஆரஞ்சு - 103
வெள்ளி - மாறுபடும் அளவு - 10%
12.
மின்தடை \(R=\frac{V}{I}=\frac{4}{2}=2 \ ohm\)
13.
கிர்க்காஃப் விதிகளின் முக்கிய பயன்பாடாக வீட்ஸ்டோன் சமனச் சுற்று அமைகிறது. மின்சுற்று வலை (electrical networks) அமைப்புகளில் வீட்ஸ்டோன் சமனச்சுற்றின் மூலம் தெரியாத மின்தடையாக்கியின் மதிப்பை கண்டறியவும், மின்தடையாக்கிகளை ஒப்பிடவும் முடியும்.
இந்த வலை அமைப்பில் P, Q, R மற்றும் S மின்தடையாக்கிகள் படம் இல் உள்ளவாறு இணைக்கப்பட்டுள்ளன. G என்ற கால்வனா மீட்டரானது B மற்றும் D புள்ளிகளுக்கிடையே இணைக்கப்பட்டுள்ளது. கால்வனா மீட்டர் வழியே பாயும் மின்னோட்டம் IG எனவும் அதன் மின்தடை G எனவும் எடுத்துக் கொள்ளப்படுகிறது.
B சந்திக்கு கிர்க்காஃப் மின்னோட்ட விதியை பயன்படுத்த,
I1 - Ig - I3 = 0 ------(1)
D சந்திக்கு கிர்க்காஃப் மின்னோட்ட விதியை பயன்படுத்த,
I2 - Ig - I4 = 0 -----(2)
ABDA என்ற மூடிய சுற்றுக்கு கிர்க்காஃப் மின்னழுத்த வேறுபாட்டு விதியை பயன்படுத்த,
I1P + IgG - I2R = 0 ----(3)
ABCDA என்ற மூடிய சுற்றுக்கு கிர்க்காஃப் மின்னழுத்த வேறுபாட்டு விதியை பயன்படுத்த,
I1P + I3Q - I4S - I2R = 0 --------(4)
(B மற்றும் D புள்ளிகள் சமமின்னழுத்தத்தில் இருந்தால், வீட்ஸ்டோன் சமனச்சுற்று சமநிலையில் இருக்கும். B மற்றும் D புள்ளிகளுக்கிடையே மின்னழுத்த வேறுபாடு இல்லை என்பதால், கால்வனா மீட்டர் வழியே மின்னோட்டம் பாயாது. (IG = 0). எனவே Ig = 0 என சமன்பாடுகள் (1), (2) மற்றும் (3) இல் பிரதியிட
I1 = I3 ----(5)
I2 = I4 ----(6)
I1P = I2R -----(7)
(xvi) சமன்பாடு (5) மற்றும் (6) ஐ சமன்பாடு (4)ல் பிரதியிட
I1P + I1Q - I2S - I2R = 0
I1 (P + Q) = I2 (R + S) -----(8)
சமன்பாடு (8)ஐ மற்றும் (7) ஆல் வகுக்க,
\(\frac { P+Q }{ P } =\frac { R+S }{ R } \)
\(1+\frac { Q }{ P } =1+\frac { S }{ R } \)
\(\frac { Q }{ P } =\frac { S }{ R } \)
\(\frac { P }{ Q } =\frac { R }{ S } \)
இதுவே வீட்ஸ்டோன் சுற்றின் சமநிலைக்கான நிபந்தனை ஆகும். இந்த நிலையில் மட்டுமே கால்வனா மீட்டர் சுழி விலக்கத்தை காட்டும்
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards