12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 28/08/2019
நிலைமின்னியல்
12ஆம் வகுப்பு Physics / இயற்பியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Physics / இயற்பியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Physics Test1.
மின்தேக்கிகளின் பயன்பாடுகளை எழுதுக
2.
புள்ளி மின்னூட்டம் வரையறு
3.
காஸ் விதியைக் கூறுக.
4.
மின்னூட்டங்களின் மேற்பொருந்துதல் தத்துவம் யாது?
5.
நிலை மின்னியல் கூலும் விதியைக் கூறு.
6.
நிலை மின்னியல் என்றால் என்ன?
7.
மின்முனைவாக்கல் என்றால் என்ன?
8.
மின்பாயம் – வரையறு.
9.
நிலை மின்னழுத்த ஆற்றல் – வரையறு
10.
சம மின்னழுத்தப்பரப்பு என்றால் என்ன?
11.
மின்புலம் – வரையறு.
12.
மின்னூட்டத்தின் குவாண்டமாக்கல் என்றால் என்ன?
13.
ஒளிவட்ட மின்னிறக்கம் என்றால் என்ன?
14.
மின்தேக்குத்திறன் – வரையறு. அதன் அலகைத் தருக.
15.
மின் இருமுனை – வரையறு. அதன் மின் இருமுனை திருப்புத்திறனின் எண் மதிப்பிற்கான சமன்பாடு மற்றும் திசை ஆகியவற்றைக் குறிப்பிடவும். -q லிருந்து +q உள்ள திசையிலேயே
16.
17.
கூற்று: மின்காப்பு முனைவாக்கல் என்பது மின்காப்பு பொருளை நேர் மற்றும் எதிர் மின்னூட்டங்களாக அவற்றின் உள்ளேயே உருவாக்குவது.
காரணம்: கட்டுறா எலக்ட்ரான்கள் இச்செயலில் உருவாகும்.
a) கூற்றும் சரி, காரணமும் சரி, விளக்கமும் முற்றிலும் சரி
b) கூற்றும் சரி, காரணமும் சரி, ஆனால் அவற்றின் விளக்கம் சரியில்லை
c) கூற்று சரி, ஆனால் காரணம் தவறு
d) கூற்று தவறு, ஆனால் காரணம் சரி
18.
கூற்று: மின்துகள் ஒன்றை இருவேறு புள்ளிகளுக்கும் நகர்த்தச் செய்யும் வேலை அவை நகரும் பாதையை பொறுந்திராது
காரணம்: நிலைமின்னியல் விசை மாற்றம் அடையும் விசை (non conservative)
a) கூற்றும் சரி, காரணமும் சரி, விளக்கமும் முற்றிலும் சரி
b) கூற்றும் சரி, காரணமும் சரி, ஆனால் அவற்றின் விளக்கம் சரியில்லை
c) கூற்று சரி, ஆனால் காரணம் தவறு
d) கூற்று தவறு, ஆனால் காரணம் சரி
19.
கூற்று: மின்புலத்தில் சமநிலையில் உள்ள மின்இருமுனை ஒன்றை நகர்த்தினால் அது பழைய சமநிலைக்கு திரும்பிவிடும்
காரணம்: மீள் திருப்புவிசை அவற்றை சமநிலைக்கு எடுத்து வரும்
a) கூற்றும் சரி, காரணமும் சரி, விளக்கமும் முற்றிலும் சரி
b) கூற்றும் சரி, காரணமும் சரி, ஆனால் அவற்றின் விளக்கம் சரியில்லை
c) கூற்று சரி, ஆனால் காரணம் தவறு
d) கூற்று தவறு, ஆனால் காரணம் சரி
20.
(a) மின்புலம்
(b) மின்னூட்ட விசை
(c) மின்னழுத்தம்
(d) இருமுனை திருப்புத்திறன்
21.
(a) தங்கம்
(b) வெள்ளி
(c) அலுமினியம்
(d) எபோனைட்
22.
(a) மின்னல் கடத்தி
(b) வான் - டி - கிராப்
(c) ஜெராக்ஸ்
(d) AC மின்னியற்றி
23.
| வரிசை I | வரிசை II | ||
| A | புறமின்புலத்தில் கடத்தி ஒன்றின் உள்ளே | 1 | மின்புலம் = 0 |
| B | மின் இருமுனையின் மையத்தில் | 2 | திருப்பு விசை = 0 |
| C | சமநிலை ஒன்றில் மின் இருமுனை | 3 | நிலையாற்றல் = 0 |
| D | மின்புலத்தில் செங்குத்தாக வைக்கப்படும் மின்இருமுனை | 4 | மின்னழுத்தம் = 0 |
24.
| வரிசை I | வரிசை II | ||
| A | நேர்மின்னூட்டம் அருகில் மின்னழுத்தம் | 1 | எதிர்க்குறி |
| B | எதிர்மின்னூட்டம் அருகில் மின்னழுத்தம் | 2 | முடிவிலி |
| C | தான் இருக்கும் புள்ளியில் மின்னூட்டம் ஒன்றின் மின்னழுத்தம் | 3 | நேர்க்குறி |
| D | மின்னூட்டம் பெற்ற சீரான கோளம் ஒன்றின் மின்னழுத்தம் | 4 | அவற்றின் ஆர மதிப்பில் எதிர்த் தகவில் மாறும் |
25.
| வரிசை I | வரிசை II | ||
| A | மின் இருமுனை திருப்புத்திறன் | 1 | நேர்மின்னூட்டம் நோக்கி |
| B | மின்புலம் | 2 | ஸ்கேலார் பெருக்கல் |
| C | மின்பாயம் | 3 | வெக்டார் பெருக்கல் |
| D | திருப்பு விசை | 4 | Nm |
1.
(i) தானியங்கு எந்திரங்களின் எரிபொருள் எரியூட்டும் அமைப்புகளில் தீப்பொறி ஏற்படுவதைத் தவிர்க்க பயன்படுகிறது
(ii) மின்திறன் வழங்கிகளில் மின்னழுத்த ஏற்ற இறக்கத்தைக் குறைப்பதற்கும், மின்திறன் அனுப்பீட்டில் அதன் பயனுறு திறனை அதிகரிக்கச் செய்யவும், மின்தேக்கிகள் பயன்படுகின்றன
(iii) மின்தேக்கிகள் மின்காந்த அலைவுகளைத் தோற்றுவிக்கவும், ரேடியோ சுற்றுகளை ஒத்திசைவு செய்யவும் பயன்படுகின்றன.
2.
வெளியில் மின்னோட்டம் ஒன்றின் பரிணாமம் அவற்றுக்கிடையேயான நோக்குபுள்ளி தொலைவை விட குறைவாக இருப்பின் அது புள்ளி மின்னூட்டம் எனப்படும்
3.
காஸ் விதியின்படி, எந்தவொரு மூடிய பரப்பில் செயல்படும் மின்புலத்தின் மொத்த பாய மதிப்பு. அப்பரப்பில் உள்ள மொத்த மின்னூட்டத்தின் \(\frac { 1 }{ { \varepsilon }_{ o } } \) மடங்குக்குச் சமம். அதாவது, \({ \phi }=\frac { q }{ { \varepsilon }_{ o } } \)
4.
ஒரு மின்னூட்டத்தின் மீதான மொத்த விசை என்பது மற்ற மின்னூட்டங்கள் அம்மின்னூட்டத்தின் மீது தோற்றுவிக்கும் விசைகளின் வெக்டர் கூடுதலாகும். q1, q2, q3 ...... q மின்னூட்டங்களினால் q1 மீது உருவாகும் மொத்தவிசை \(\vec { { F }_{ 1 } } =\vec { { F }_{ 12 } } +\vec { { F }_{ 13 } } +\vec { { F }_{ 14 } } +...\vec { { F }_{ 1n } } \)
\(\vec { { F }_{ 1 } } =\frac { 1 }{ 4\pi { \varepsilon }_{ o } } \left( \frac { { q }_{ 1 }{ q }_{ 2 } }{ { { r }^{ 2 } }_{ 21 } } \hat { { r }_{ 21 } } +\frac { { { q }_{ 1 }{ q }_{ 3 } } }{ { { r }^{ 2 } }_{ 31 } } \hat { { r }_{ 31 } } +......\frac { { { q }_{ 1 }{ q }_{ 2 } } }{ { { r }^{ 2 } }_{ n1 } } { { \hat { { r }_{ n1 } } } } \right) \)
5.
(i) இரு புள்ளி மின்னூட்டங்களுக்கு இடையேயான கவர்ச்சி விசை அல்லது விரட்டு விசையானது மின்னூட்டங்களின் பெருக்குத் தொகைக்கு நேர்த்தகவிலும், அவற்றிற்கு இடையே உள்ள தொலைவின் இருமடிக்கு எதிர்த்தகவிலும் அமையும்
(ii) மின்னூட்டங்களை இணைக்கும் கோட்டின் வழியே விசையின் திசை அமையும்.
6.
நிலையாக உள்ள மின்துகளை பற்றி அறிய உதவும் பிரிவு
7.
அளிக்கப்படும் மின்புலத்தின் திசையில் தூண்டப்பட்ட மற்றும் நிலையான மின் இருமுனைகள் ஒருங்கமைவதே மின் முனைவாக்கல் எனப்படும்.
8.
மின்புலக் கோடுகளுக்குக் குறுக்கே அமைந்த குறிப்பிட்ட பரப்பின் வழியே பாயும் மின்புலக் கோடுகளின் எண்ணிக்கை மின்பாயம் ஆகும்.
9.
நிலைமின்னழுத்த ஆற்றலானது, மின்துகள்களை அவ்வடிவமைப்பில், நிலை நிறுத்துவதற்குச் செய்யப்படும் வேலையாகும்.
நிலைமின்னழுத்த ஆற்றல் \(U=\frac{1}{4\piε_o}\frac{q_1q_2}{r}\)
10.
பரப்பிலுள்ள அனைத்து புள்ளிகளும் ஒரே மின்னழுத்தம் பெற்றிருந்தால், அது சம மின்னழுத்த பரப்பு எனப்படும்.
11.
q என்ற புள்ளி மின்துகளிலிருந்து r தொலைவில் உள்ள புள்ளி p யில் வைக்கப்படும் ஓரலகு மின்னூட்டம் கொண்ட மின்துகளினால் உணரப்படும் விசையே அப்புள்ளி p யில் உள்ள மின்புலத்தின் மதிப்பாகும்.
\(\vec{E}=\frac{\vec{F}}{q_0}=\frac{k q}{r^2} \hat{r}=\frac{1}{4 \pi \varepsilon_0} \frac{q}{r^2} \hat{r}\)
இங்கு \( \hat{r}\) என்பது q விலிருந்து நாம் எடுத்துக்கொண்ட புள்ளி p க்கு வரையப்படும் ஓரலகு வெக்டராகும்.
12.
எந்தவொரு பொருளில் உள்ள மின்னூட்டத்தின் மதிப்பும், அடிப்படை மதிப்பு e ன் முழு மடங்காகவே இருக்கும். இதுவே மின்னூட்டத்தின் குவாண்டமாக்கல் எனப்படும்.
q = ne இங்கு n என்பது ஒரு முழு எண்
n = 0, \(\pm\)1, \(\pm\)2, \(\pm\)3, \(\pm\)4, ...
இதுவே மின்னூட்டத்தின் குவாண்டமாக்கல் எனப்படும்.
13.
வளைவு ஆரம் குறைவான பகுதிகளில் மின்னூட்டப் பரப்படர்த்தி அதிகமாக இருக்கும். கடத்தியில் வளைவுத்தன்மை அதிகமுள்ள முனைகளில் மின்துகள்கள் அதிகமாகக் குவிகின்றன. இதனால் அம்முனைக்கு அருகில் மின்புலம் மிகுந்த வலிமையுடன் உள்ளது. இது அப்பகுதியிலுள்ள காற்றை அயனியாக்கம் செய்கிறது. இப்போது, கூர்முனைக்கு அருகிலுள்ள நேர் மின்துகள்கள் விரட்டப்படுகின்றன. எதிர் மின்துகள்கள் கூர்முனையை நோக்கி கவரப்படுகின்றன. இதனால் கடத்தியின் கூர்முனைப் பகுதியிலுள்ள மின்துகள்களின் மொத்த மின்னூட்ட மதிப்பு குறைகிறது இதையே கூர்முனைச் செயல்பாடு அல்லது ஒளிவட்ட மின்னிறக்கம் என்பர்.
14.
மின்தேக்கியின் மின்தேக்குத்திறன் C என்பது அதன் ஏதேனும் ஒரு மின் கடத்து தட்டில் உள்ள மின்துகள்களின் மின்னூட்ட மதிப்பிற்கும் கடத்திகளுக்கு (தட்டுகளுக்கு) இடையே நிலவும் மின்னழுத்த வேறுபாட்டிற்கும் இடையேவுள்ள விகிதம் என வரையறுக்கப்படுகிறது.
அலகு : பாரட்
நடைமுறை அலகு: மைக்ரோ பாரட், மைக்ரோபாரட்
15.
சிறிய இடைவெளியில் பிரித்து வைக்கப்பட்ட இரு சமமான, வேறின மின்துகள்கள் மின் இருமுனையை உருவாக்கும்.
-q லிருந்து +q உள்ள திசையிலேயே \(q ⃗\) அமைந்திருக்கும். மின் இருமுனை திருப்புத்திறனின் எண் மதிப்பானது அம்மின்துகள்களுள் ஏதேனும் ஒன்றின் மின்னூட்ட மதிப்பினை அவற்றிற்கிடையே உள்ள தொலைவினால் பெருக்க கிடைப்பதாகும்.
16.
17.
c) கூற்று சரி, ஆனால் காரணம் தவறு
18.
c) கூற்று சரி, ஆனால் காரணம் தவறு
19.
a) கூற்றும் சரி, காரணமும் சரி, விளக்கமும் முற்றிலும் சரி
மீள் திருப்புவிசை திரும்பவும் சமநிலைக்கு எடுத்து வரும்
20.
(c) மின்னழுத்தம்
21.
(d) எபோனைட்
22.
(d) AC மின்னியற்றி
23.
a) புறமின்புலத்தில் கடத்தி ஒன்றின் உள்ளே - மின்புலம் = 0
24.
d) மின்னூட்டம் பெற்ற சீரான கோளம் ஒன்றின் மின்னழுத்தம் - அவற்றின் ஆர மதிப்பில் எதிர்த் தகவில் மாறும்
25.
c) மின்பாயம் - வெக்டார் பெருக்கல்
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards