12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Standard Biology Zoology - Reproduction in Organisms Creative Questions Study Material - QB365 Set D
NEW12th Standard
TN 12th Standard Biology Zoology - Reproduction in Organisms Creative Questions Study Material - QB365 Set C
NEW12th Standard
TN 12th Standard Biology Zoology - Reproduction in Organisms Creative Questions Study Material - QB365 Set B
NEW12th Standard
TN 12th Standard Biology Zoology - Reproduction in Organisms Creative Questions Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Standard Physics Electronics and Communication Creative Questions Study Material - QB365 Set D
NEW12th Standard
TN 12th Standard Physics Electronics and Communication Creative Questions Study Material - QB365 Set C

Published on: 29/08/2019
மின்னோட்டவியல்
12ஆம் வகுப்பு Physics / இயற்பியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Physics / இயற்பியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Physics Test1.
கடத்தியின் வழியே ஒரு நிமிடத்தில் (minute) 180oC மின்னூட்டம் கடந்து சென்றால் மின்னோட்டத்தைக் கணக்கிடுக.
2.
2.1V மின்கலமானது 10 Ω மின்தடை வழியே 0.2A மின்னோட்டத்தை செலுத்தினால் அதன் அகமின்தடை என்ன?
3.
வெப்பமின் விளைவு என்றால் என்ன?
4.
வெப்ப தடையகம் [Thermistor] என்றால் என்ன?
5.
வீட்டு உபயோக சாதனங்கள் எப்போதும் பக்க இணைப்பில் இணைக்க காரணம் என்ன?
6.
மின்தடையை வரையறு.
7.
மின்னலின் போது மின்னோட்டம் உருவாகுமா? எப்படி?
8.
கடத்திகள் [Conductors] என்றால் என்ன?
9.
ஓம் விதியின் பயன்பாட்டு வடிவத்தை கூறு.
10.
மின்னோட்ட அடர்த்தி வரையறு.
11.
மின்னோட்டம் என்பது ஒரு ஸ்கேலார் ஏன்?
12.
சீபெக் விளைவின் பயன்கள் யாவை?
13.
தாம்ஸன் விளைவு என்றால் என்ன?
14.
சீபெக் விளைவு என்றால் என்ன?
15.
ஜுலின் வெப்ப விதியைக் கூறுக.
16.
கிர்க்காஃப்பின் மின்னோட்ட விதியைக் கூறுக.
17.
மின்திறன் மற்றும் மின் ஆற்றல் என்றால் என்ன?
18.
மீக்கடத்து திறன் என்றால் என்ன?
19.
வெப்பநிலை மின்தடை எண் வரையறு.
20.
மின்தடை எண் வரையறு.
1.
நேரம் = 1நிமிடம் = 60 விநாடி
மின்னூட்டம் = 180C
மின்னோட்டம் I = \(\frac{dQ}{dt }\)
= \(\frac {180}{60}\) = 3A
I = 3A
2.
\(r=\left( \frac { \xi -V }{ V } \right) R=V=IR=0.2\times 10=2V\)
\(r=\left( \frac { 2.1-2 }{ 2 } \right) 10=0.5\Omega \)
\(r=0.5\Omega \)
3.
வெப்பமின் விளைவு என்பது வெப்பநிலை வேறுபாட்டை மின்னழுத்த வேறுபாடாக மாற்றும் நிகழ்வு ஆகும். அதே போல் மின்னழுத்த வேறுபாட்டை வெப்பநிலை வேறுபாடாக மாற்ற முடியும்.
4.
எதிர்க்குறி வெப்பநிலை தொகுப்பானது மின்தடை எண் உடைய குறைக்கடத்தியானது வெப்ப தடையகம் எனப்படும்.
5.
வீட்டு உபயோக சாதனங்கள் எப்போதும் பக்க இணைப்பில் இணைக்கப்பட்டிருக்கும் அப்போது தான் ஏதாவது ஒரு சாதனம் பழுதடைந்தால் அதைத் தவிர்த்து மற்ற சாதனங்கள் வேலை செய்யும்.
6.
கடத்தியின் மின்தடை என்பது கடத்தியின் முனைகளுக்கிடையே உள்ள மின்னழுத்த வேறுபாட்டிற்கு கடத்தியின் வழியே மின்னோட்டத்திற்கும் உள்ள தகவாகும்.
7.
1. இயற்கையில் ஏற்படும் மின்னல் வெட்டு மிகக் குறுகிய காலத்தில் மிக அதிக மின்னோட்டத்தை ஏற்படுத்தும்.
2. மின்னலின் போது, மேகங்களுக்கும் தரைக்கும் மிக அதிக அளவு மின்னழுத்த வேறுபாடு தோன்றுவதால் மேகங்களிலிருந்து தரைக்கோ அல்லது தரையிலிருந்து மேகத்துக்கோ மின்துகள்கள் பாய்கிறது.
8.
1. உலோகங்களில் உள்ள அணுக்களில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கட்டுறா எலக்ட்ரான்கள் உள்ளன.
2. கட்டுறா எலக்ட்ரான்களை அணுவிலிருந்து எளிதில் பிரித்தெடுக்கலாம்.
3. கட்டுறா எலக்ட்ரான்களை அதிகம் கொண்டுள்ள பொருட்களை கடத்திகள் என்கிறோம்.
9.
”வெப்பநிலை மாறாமல் உள்ள போது கடத்திக்குக் குறுக்கேயுள்ள மின்னழுத்த வேறுபாடானது அதில் பாயும் மின்னோட்டத்திற்கு நேர்த்தகவில் இருக்கும்”. இதுவே ஓம் விதியாகும்.
V = IR ஓம் விதியின் பயன்பாட்டு வடிவம் ஆகும்.
இங்கு,
V ⟶ மின்னழுத்த வேறுபாடு
I ⟶ மின்னோட்டம்
R ⟶ மின்தடை
10.
ஓரலகு குறுக்கு வெட்டு பரப்பு உடைய கடத்தியின் வழியே பாயும் மின்னோட்டத்தின் அளவே, மின்னோட்ட அடர்த்தி எனப்படும்.
\(\therefore J=\frac{I}{A}\)
இங்கு I - மின்னோட்டம்
A - குறுக்கு வெட்டு பரப்பு
11.
மின்னோட்டம் என்பது, இரு ஸ்கேலார்களின் தகவு ஆகும். மேலும் மின்னோட்டம் என்பது மின்னோட்ட அடர்த்தி (J) மற்றும் பரப்பு வெக்டர் ஆகியவற்றின் பெருக்கற்பலன் என வரையறுக்கப்படுகின்றது.
\(\begin{aligned} &I=\frac{Q}{t} \\ \end{aligned}\)
\(\begin{aligned} &I=\vec{J} \cdot \vec{A} \end{aligned}\)
12.
1) சீபெக் விளைவானது வெப்ப மின்னியற்றிகளில் பயன்படுகிறது. (சீபெக் மின்னியற்றி) இந்த வெப்ப மின்னியற்றிகள், மின் உற்பத்தி நிலையங்களில் வீணாகும் வெப்ப ஆற்றலை மின்னாற்றலாக மாற்றுகின்றன.
2) தானியங்கி வாகனங்களில் எரிபொருள் பயனுறு திறனை அதிகரிக்க பயன்படும் தானியங்கி வெப்ப மின்னியற்றிகளில் பயன்படுத்தப்படுகிறது.
3) வெப்ப மின்னிரட்டை மற்றும் வெப்ப மின்னிரட்டை அடுக்குகளில் பயன்படுத்தப்படும் பொருட்களுக்கிடையே உள்ள வெப்பநிலை வேறுபாட்டை அளவிட சீபெக் விளைவு பயன்படுகிறது.
13.
ஒரு கடத்தியின் இருபுள்ளிகள் வெவ்வேறு வெப்பநிலைகளில் உள்ளபோது, இந்த புள்ளிகளில் எலக்ட்ரான் அடர்த்தி வேறுபடுவதால் இவ்விரு புள்ளிகளுக்கிடையே மின்னழுத்த வேறுபாடு உருவாக்கப்படும் என்பதை தாம்ஸன் நிரூபித்தார். தாம்ஸன் விளைவும் மீள்விளைவு ஆகும்.
14.
ஒரு மூடிய சுற்றில் இரு வெவ்வேறு உலோகங்களின் இரு சந்திப்புகளை வெவ்வேறு வெப்பநிலைகளில் வைக்கும்போது மின்னழுத்த வேறுபாடு (மின்னியக்கு விசை) தோன்றுவதை சீபெக் கண்டறிந்தார். இம்மின்னியக்கு விசையினால் ஏற்படும் மின்னோட்டத்தை வெப்பமின்னோட்டம் என்றழைக்கலாம்.
15.
ஜூலின் விதிப்படி, ஒரு மின்சுற்றில் மின்னோட்டம் பாய்வதால் உருவாக்கப்படும் வெப்பமானது,
i) மின்னோட்டத்தின் இருமடிக்கு நேர்த்தகவிலும்
ii) மின்சுற்றின் மின்தடைக்கு நேர்த்தகவிலும்
iii) மின்னோட்டம் பாயும் நேரத்திற்கு நேர்த்தகவிலும் அமையும்.
16.
எந்தவொரு சந்திப்பிலும் சந்திக்கின்ற மின்னோட்டங்களின் குறியியல் கூட்டுத் தொகை சுழியாகும்.
17.
மின்னழுத்த ஆற்றல் அளிக்கப்படும் வீதம் மின்திறன் P எனப்படும்.
\(P=V \frac{d Q}{d t}\)
\(\mathrm{I}=\frac{d Q}{d t}\) என்பதிலிருந்து, P = VI
\(P=\frac{V^2}{R}\) \(I=\frac{V}{R}\)
18.
ஒரு சில பொருட்களின் வெப்பநிலையானது, ஒரு குறிப்பிட்ட வெப்பநிலைக்கு கீழே குறையும்போது அதன் மின்தடை எண் சுழியாகும். இந்நிகழ்வினை வெளிப்படுத்தும் பொருட்கள் மீக்கடத்திகள் ஆகும்.
19.
ஒரு பொருளின் ஒரு டிகிரி வெப்பநிலை உயர்வில் ஏற்படும் மின்தடை எண் உயர்விற்கும், To வெப்பநிலையில் உள்ள மின்தடை எண்ணுக்கும் இடையே உள்ள விகிதம் வெப்பநிலை மின்தடை எண் ஆகும்.
\(\alpha=\frac{\rho_T-\rho_0}{\rho_0\left(T-T_0\right)} = \frac{\triangle \rho}{\rho_{0} \triangle T}\)
20.
பொருளின் மின்தடை எண் என்பது ஓரலகு நீளமும் ஓரலகு குறுக்கு வெட்டு பரப்பும் கொண்ட கடத்தியானது, மின்னோட்டத்திற்கு அளிக்கும் மின்தடை ஆகும்.
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Standard Physics Electronics and Communication Creative Questions Study Material - QB365 Set B
NEW12th Standard
TN 12th Standard Physics Electronics and Communication Creative Questions Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Standard Physics Wave Optics Creative Questions Study Material - QB365 Set D
NEW12th Standard
TN 12th Standard Physics Wave Optics Creative Questions Study Material - QB365 Set C
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards