12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 01/08/2019
இயற்பியல் முதல் இடைத்தேர்வு
12ஆம் வகுப்பு Physics / இயற்பியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Physics / இயற்பியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Physics Test1.
20 W – 220V மற்றும் 100W – 220V என குறிப்பிடப்பட்டுள்ள இரு மின்பல்புகள் தொடரிணைப்பில் 440 V மின்னழுத்த வேறுபாட்டு (Power supply) மூலத்துடன் இணைக்கப்பட்டுள்ளன. எந்த மின்பல்பின் மின் இழை துண்டிக்கப்படும் (Fused)?
2.
பயட் –சாவர்ட் விதியைக் கூறு
3.
காந்த ஏற்புத்திறன் என்றால் என்ன?
4.
புள்ளி மின் துகளின் தொகுப்பிற்கான மின் இருமுனை திருப்புத்திறனின் பொதுவான வரையறை தருக.
5.
மின்புலக் கோடுகள் ஒன்றையொன்று வெட்டிக் கொள்ளாது நிறுவுக.
6.
படத்தில் காட்டியுள்ளவாறு பக்கம் a கொண்ட சதுரம் PQRS ன் மூலைகளில் நான்கு மின்துகள்கள் வைக்கப்பட்டுள்ளன.
(அ) இந்த நிலையமைப்பில் அம்மின்துகள்களை வைப்பதற்கு தேவைப்படும் வேலையைக் கணக்கிடு.
(ஆ) இந்நான்கு மின்துகள்களும் அதே மூலைகளில் இருக்கும் போது, இன்னொரு மின்துகளை (qʹ) சதுரத்தின் மையத்திற்குக் கொண்டு செல்ல எவ்வளவு அதிகப்படியான வேலை செய்யப்பட வேண்டும்?

7.
பின்வரும் மின்சுற்றில் தொகுபயன் மின்தடையைக் காண்க. மேலும் I, I1 மற்றும் I2 ஆகிய மின்னோட்டங்களையும் கண்டுபிடி.

8.
பல்வேறு மின்துகள் அமைப்புகளுக்கான மின்புலக் கோடுகள் பின்வரும் படங்களில் கொடுக்கப்பட்டுள்ளன.


(i) படம் (அ) வில் உள்ள q1 மற்றும் q2 ஆகிய இரு மின்துகள்களின் குறியீடுகளை அடையாளம் கண்டு,\(\left| \frac { { q }_{ 1 } }{ { q }_{ 2 } } \right| \) ன் விகிதத்தைக் காண்க.
(ii) படம் (ஆ) வில் உள்ள இரு நேர் மின்துகள்களின் மின்னூட்ட விகிதத்தைக் கணக்கிடுக. மேலும் A, B, C ஆகிய புள்ளிகளில் மின்புலத்தின் வலிமையைக் கணக்கிடுக.
(iii) படம் (இ) ல் மூன்று மின்துகள்களின் மின்புலக் கோடுகள் கொடுக்கப்பட்டுள்ளன. q2 = - 20 nC எனில், q1 மற்றும் q3 ன் மின்னூட்ட மதிப்புகளைக் கணக்கிடுக.
9.
ஒவ்வொன்றும் 1g நிறையுடைய சிறிய உருவளவு கொண்ட, இரு ஒரே மாதிரியான கோளங்கள் சமநிலையில் உள்ளவாறு, படத்தில் காட்டப்பட்டுள்ளன. நூலின் நீளம் 10 cm மற்றும் செங்குத்துத் திசையுடன் நூல் உருவாக்கும் கோணம் 30o எனில் கோளம் ஒவ்வொன்றிலும் உள்ள மின்னூட்டத்தைக் கணக்கிடுக.(g = 10ms-2 என எடுத்துக் கொள்க)

10.
மின்னழுத்தமானியின் தத்துவத்தை கூறு.
11.
100 சுற்றுகள் கொண்ட டேஞ்சன்ட் கால்வனோ மீட்டர் ஒன்றின் கம்பிச்சுருளின் விட்டம் 0.24m. புவிகாந்தப்புலத்தின் கிடைத்தள கூறின் மதிப்பு 25 × 10-6 T என்ற நிலையில், 60˚ விலக்கத்தை ஏற்படுத்தும் மின்னோட்டதைக் கணக்கிடுக.
12.
q1 மற்றும் q2 ஆகிய நேர் மின்னூட்ட அளவு கொண்ட இரு ஒரே மாதிரியான மின்கடத்துப் பந்துகளின் மையங்கள் r இடைவெளியில் பிரிக்கப்பட்டு உள்ளன. அவற்றை ஒன்றோடொன்று தொடச் செய்துவிட்டு பின்னர் அதே இடைவெளியில் பிரித்து வைக்கப்படுகின்றன, எனில் அவற்றிற்கு இடையேயான விசை ______.
முன்பை விடக் குறைவாக இருக்கும்
அதேயளவு இருக்கும்
முன்பை விட அதிகமாக இருக்கும்
சுழி
13.
ஒரு மின்தேக்கிக்கு அளிக்கப்படும் மின்னழுத்த வேறுபாடு V லிருந்து 2V ஆக அதிகரிக்கப்படுகிறது எனில், பின்வருவனவற்றுள் சரியான முடிவினைத் தேர்ந்தெடுக்க.
Q மாறாமலிருக்கும், C இரு மடங்காகும்
Q இரு மடங்காகும், C இரு மடங்காகும்
C மாறாமலிருக்கும், Q இரு மடங்காகும்
Q மற்றும் C இரண்டுமே மாறாமலிருக்கும்
14.
–q மின்னூட்ட மதிப்புள்ள இரு புள்ளி மின்துகள்கள் படத்தில் உள்ளவாறு வைக்கப்பட்டுள்ளன. இவற்றுக்கு நடுவில் P என்ற புள்ளியில் +q மதிப்புள்ள மூன்றாவது மின்துகள் வைக்கப்படுகிறது. P லிருந்து அம்புக்குறியிட்டு காட்டப்பட்டுள்ள திசைகளில் சிறிய தொலைவுகளுக்கு +q மின்துகள் நகர்த்தப்பட்டால் எந்தத் திசை அல்லது திசைகளில், இடம்பெயர்ச்சியைப் பொருத்து, +q ஆனது சமநிலையில் இருக்கும்?

A1 மற்றும் A2
B1 மற்றும் B2
இரு திசைகளிலும்
சமநிலையில் இருக்காது
15.
சமநீளமுடைய மூன்று கம்பிகள் வளைக்கப்பட்டு சுற்றுகளாக மாற்றப்பட்டுள்ளன. ஒன்று வட்ட வடிவிலும் மற்றொன்று அரை வட்ட வடிவிலும் மூன்றாவது சதுர வடிவிலும் உள்ளன. மூன்று சுற்றுகளின் வழியாகவும் ஒரே அளவு மின்னோட்டம் செலுத்தப்பட்டு சீரான காந்தப்புலம் ஒன்றில் வைக்கப்பட்டுள்ளன. மூன்று சுற்றுகளின் எந்த வடிவமைப்பில் உள்ள சுற்று பெரும திருப்பு விசையை உணரும் ?.
வட்ட வடிவம்
அரைவட்ட வடிவம்
சதுர வடிவம்
இவை அனைத்தும்
16.
பின்வரும் மின்சுற்றில் உள்ள மின்னோட்டம் 1 A எனில் மின்தடையின் மதிப்பு என்ன?

1.5 Ω
2.5 Ω
3.5 Ω
4.5 Ω
17.
ஓரலகு நீளத்திற்கு n சுற்றுகளைக் கொண்ட வரிச்சுருளின் அச்சில் எந்த ஒரு புள்ளியிலும் உள்ள காந்தப்புலம் \(B=\frac12\)μ0nI(cos θ1 - cos θ2) என நிறுவுக.
18.
0.8 T வலிமை கொண்ட சீரான காந்தப்புலம் ஒன்றினுள் சட்ட காந்தமானது வைக்கப்பட்டுள்ளது. சட்ட காந்தம் காந்தப்புலத்துடன் 30˚ கோணத்தை ஏற்படுத்தும்படி ஒருங்கமைந்து, 0.2 Nm திருப்புவிசையை உணர்கிறதெனில் பின்வருவனவற்றைக் கணக்கிடுக.
(i) சட்ட காந்தத்தின் காந்தத்திருப்புத்திறன்
(ii) மிகவும் உறுதியான ஒருங்கமைப்பில் (Most stable configuration) இருந்து மிகவும் உறுதியற்ற (Most unstable configuration) ஒருங்கமைப்பிற்கு சட்ட காந்தத்தை நகர்த்துவதற்கு அளிக்கப்படும் விசையினால் செய்யப்பட்ட வேலை மற்றும் செலுத்தப்படும் காந்தப்புலத்தால் செய்யப்படும் வேலை ஆகியவற்றைக் கணக்கிடுக
19.
கால்வனோமீட்டர் ஒன்றை அம்மீட்டர் மற்றும் வோல்ட்மீட்டராக எவ்வாறு மாற்றுவது என்பதை விவரிக்கவும்.
1.
எந்த மின்பல்பின் மின் இழை துண்டிக்கப்படும் என்பதைக் கண்டறிய, இரு மின்பல்புகளின் குறுக்கே உள்ள மின்னழுத்த வேறுபாட்டை கணக்கிட வேண்டும்.
மின்பல்பின் மின்தடை, R = \(\frac { { V }^{ 2 } }{ P } \)

20W – 220 V மின்பல்பின் மின்தடை
R1 = \(\frac { (220)^{ 2 } }{ 20 } \)Ω = 2420Ω
100W – 220 V மின்பல்பின் மின்தடை,
R2 = \(\frac { (220)^{ 2 } }{ 20 } \)Ω = 484Ω
இரு மின்பல்புகளும் தொடரிணைப்பில் இணைக்கப்பட்டுள்ளன. எனவே இவற்றில் பாயும் மின்னோட்டம் சமமாக அமையும். இம்மின்சுற்றில் பாயும் மின்னோட்டம், I = \(\frac { V }{ { R }_{ tot } } \).
Rtot = (R1 + R2)
Rtot = (484 + 2420)Ω = 2904Ω
I = \(\frac { 440V }{ 2904Ω } \) ≈ 0.151 A
20W மின்பல்பின் குறுக்கே மின்னழுத்த வேறுபாடு
V1 = IR1 = \(\frac { 440 }{ 2904 } \) x 2420 ≈ 366.6V
100 W மின் பல்பின் குறுக்கே மின்னழுத்த வேறுபாடு
V2 = IR2 = \(\frac { 440 }{ 2904 } \) x 484 ≈ 73.3V
20 W மின்பல்பின் மின் இழை துண்டிக்கப்படும் (Fused). ஏனெனில் அதன் குறிப்பிடப்பட்ட மின்னழுத்த வேறுபாடு 220 V மட்டுமே. ஆனால் அதன் குறுக்கே 366.6 V மின்னழுத்த வேறுபாடு ஏற்பட்டுள்ளது.
2.
மின்னோட்டம் பாயும் கடத்தியின் நீளத்தின் சிறு கூறிலிருந்து r தொலைவில் உள்ள P புள்ளியில் உருவாகும் காந்தப்புலம் \(\overset { \rightarrow }{ dB } \) இன் எண்மதிப்பை பயோட் மற்றும் சாவர்ட் சோதனையின் அடிப்படையில் கண்டறிந்தனர். இதன் அடிப்படையில் காந்தப்புலம் \(\overrightarrow{dB}\) இன் எண்மதிப்பு.
1. மின்னோட்டத்தின் (I) வலிமைக்கு நேர்த்தகவிலும்
2. நீளக் கூறின் \(\overset { \rightarrow }{ dl } \) எண்மதிப்புக்கு நேர்த்தகவிலும்
3. \(\overset { \rightarrow }{ dl } \) மற்றும் \(\hat { r } \) க்கு இடையே உள்ள கோணத்தின் θ சைன் மதிப்புக்கு நேர்த்தகவிலும்
4. புள்ளி P மற்றும் நீளக்கூறு \(\overset { \rightarrow }{ dl } \) இவற்றுக்கு இடையே உள்ள தொலைவின் இருமடிக்கு எதிர்த்தகவிலும் இருக்கும். இதனை பின்வருமாறு எழுதலாம்.
\(d B \propto \frac{I d l}{r^2} \sin \theta\)
\(\mathrm{dB}=k \frac{I d l}{r^2} \sin \theta\)
இங்கு \(\mathrm{k}=\frac{\mu_o}{4 \pi}\) (SI அலகில்) மேலும் k = 1 (CGS அலகில்)
வெக்டர் குறியீட்டின்படி,
\(d \vec{B}=\frac{\mu_o}{4 \pi} \frac{I \overrightarrow{d l} \times \hat{r}}{r^2}\)
3.
காந்தமாக்கும் புலத்தினால் பொருளில் தூண்டப்பட்ட காந்தமாகும் செறிவிற்கும் (\(\overset { \rightarrow }{ M } \)), பொருளுக்கு அளிக்கப்பட்ட காந்தமாக்குப் புலத்திற்கும் |\(\overset { \rightarrow }{ H } \)| உள்ள விகிதமே காந்த ஏற்புத்திறனாகும்.
\({ x }_{ m }=\frac { |\overset { \rightarrow }{ M } | }{ |\overset { \rightarrow }{ H } | } ;\overset { \rightarrow }{ P_m }= q_m \overset { \rightarrow }{ d } \)
4.
(i) மின் இருமுனை திருப்புத்திறன் எண் மதிப்பானது அம்மின்துகள்களுள் ஏதேனும் ஒன்றின் மின்னூட்ட மதிப்பினை அவற்றிற்கிடையே உள்ள தொலைவினால் பெருக்க கிடைப்பதாகும்.
(ii) வெக்டர் அளவு.
(iii) அலகு: Cm.
(iv) திசை: -q விலிருந்து +q நோக்கி அமையும்.
n புள்ளி மின்துகள்கள் அடங்கிய தொகுப்பிற்கு, மின் இருமுனை திருப்புத்திறன், \(\vec{p}=\stackrel{i=n} \sum _{i=1}q_i\vec{r}_i\)
இங்கு \(\vec{r}_i\) என்பது ஆதிப்புள்ளியிலிருந்து மின்துகள் qi க்கு வரையப்படும் நிலை வெக்டர்.
5.
மின்புலக் கோடுகள் ஒன்றையொன்று வெட்டாது. அவை வெட்டினால் ஒரே புள்ளியில் இரு மின்புல வெக்டர்கள் அமையும். எனவே அவை வெட்டும் புள்ளியில் ஒரே நேரத்தில், வேறுபட்ட திசைகளில் செல்லும். இந்நிகழ்வு நிகழ வாய்ப்பில்லை. எனவே, மின்புலக் கோடுகள் ஒன்றையொன்று வெட்டாது.
6.
(அ) சதுரத்தின் மூலைகளில் மின் துகள்களை வைக்கத் தேவைப்படும் வேலையானது அவை எந்த வரிசையில் வைக்கப்படுகின்றன என்பதைச் சார்ந்ததல்ல. எனவே, நாம் எந்த வரிசையையும் பயன்படுத்தலாம்.
(i) முதலில் +q மின்னூட்டம் கொண்ட மின்துகளை ஒரு மூலைக்கு (P) கொண்டு வருவோம். பிற மின்துகள்கள் ஏதும் அங்கு இல்லாததால், இதற்கு தேவைப்படும் வேலை சுழி, WP = 0
(ii) -q மதிப்புடைய மின்துகளை மூலை Q க்கு கொண்டு வர செய்யப்படும் வேலை = (-q) × (புள்ளி P ல் வைக்கப்பட்டுள்ள +q மதிப்புடைய மின்துகளினால் புள்ளி Q வில் ஏற்படும் மின்னழுத்தம்).
\({ W }_{ Q }=-q\times \cfrac { 1 }{ 4\pi { \varepsilon }_{ 0 } } \cfrac { q }{ a } =-\cfrac { 1 }{ 4\pi { \varepsilon }_{ 0 } } \cfrac { { q }^{ 2 } }{ a } \)
(iii) +q மதிப்புடைய மின்துகளை மூலை R க்கு கொண்டு வர செய்யப்படும் வேலை = q × (புள்ளி P மற்றும் Q வில் வைக்கப்பட்டுள்ள மின்துகள்களால் புள்ளி R ல் ஏற்படும் மின்னழுத்தம்).
\({ W }_{ R }=q\times \cfrac { 1 }{ 4\pi { \varepsilon }_{ 0 } } \left( -\cfrac { q }{ a } +\cfrac { q }{ \sqrt { 2 } } \right) \)
= \(\cfrac { 1 }{ 4\pi { \varepsilon }_{ 0 } } \cfrac { { q }^{ 2 } }{ a } \left( -1+\cfrac { 1 }{ \sqrt { 2 } } \right) \)
(iv) நான்காவது மின்துகள் -q ஐ மூலை S க்கு கொண்டு வர செய்யப்படும் வேலை = -q × (புள்ளிகள் P, Q மற்றும் R ல் வைக்கப்பட்டுள்ள மூன்று மின்துகள்களாலும் புள்ளி S ல் ஏற்படும் மின்னழுத்தம்)
\({ W }_{ S }=-q\times \cfrac { 1 }{ 4\pi { \varepsilon }_{ 0 } } \left( \cfrac { q }{ a } +\cfrac { q }{ a } -\cfrac { a }{ \sqrt { 2a } } \right) \)
\({ W }_{ S }=-q\times \cfrac { 1 }{ 4\pi { \varepsilon }_{ 0 } } \left( 2-\cfrac { 1 }{ \sqrt { 2 } } \right) \)
(ஆ) சதுரத்தின் மையத்திற்கு qʹ மின்துகளைக் கொண்டு வர செய்யப்படும் வேலை = qʹ × (நான்கு மூலைகளில் உள்ள மின்துகள்களாலும் மையப்புள்ளி O வில் உருவாகும் மின்னழுத்தம்)
+q மின்னூட்டம் பெற்ற இரு மின்துகள்களால் ஏற்படும் மின்னழுத்தமானது –q மின்னூட்டம் பெற்ற மற்ற இரு மின்துகள்களால் ஏற்படும் மின்னழுத்தத்தால் சமன் செய்யப்படும். எனவே, அனைத்து மூலைகளிலும் உள்ள மின்துகள்களால் மையப்புள்ளி O யில் ஏற்படும் மொத்த மின்னழுத்தம் சுழியாகும். எனவே, எந்த மின்துகள்களையும் புள்ளி O விற்குக் கொண்டு வர செய்யப்படும் வேலை சுழி. அதாவது, ஏதேனும் ஒரு மின்துகளை (qʹ) புள்ளி O க்கு அருகில் கொண்டு வந்த பின்னர், புற விசை ஏதுமின்றி, தானாகவே அது புள்ளி O க்கு நகரும் என்பதையே இது உணர்த்துகிறது.
7.
மின்தடையாக்கிகள் பக்க இணைப்பில் இணைக்கப்பட்டுள்ளதால், தொகுபயன் மின்தடை
\(\frac { 1 }{ { R }_{ p } } =\frac { 1 }{ { R }_{ 1 } } +\frac { 1 }{ { R }_{ 2 } } =\frac { 1 }{ 4 } +\frac { 1 }{ 6 } \)
\(\frac { 1 }{ { R }_{ p } } =\frac { 5 }{ 12 } \) அல்லது \({ R }_{ p } = \frac { 12 }{ 5 } \)Ω
மின்தடையாக்கிகள் பக்க இணைப்பில் உள்ளதால், எல்லா மின்தடையாக்கிகளின் குறுக்கேயும் மின்னழுத்த வேறுபாடு சமமாக இருக்கும்.
I1 = \(\frac { V }{ { R }_{ 1 } } =\frac { 24V }{ 6\Omega } \) = 6A
I2 = \(\frac { V }{ R_{ 2 } } =\frac { 24 }{ 6 } \) = 4A
மின்சுற்றில் பாயும் மொத்த மின்னோட்டம்
I = I1 + I2= 6 A + 4 A = 10 A
8.
(i) மின்புலக் கோடுகள் q2 ல் தொடங்கி q1 ல் முடிவடைகின்றன. எனவே , படம் (அ) வில் q2 நேர்க்குறி (+) கொண்டது, q1 எதிர்குறி (-) கொண்டது. q2 விலிருந்து வெளியேறும் கோடுகளின் எண்ணிக்கை 18, மற்றும் q1 இல் முடிவடையும் கோடுகளின் எண்ணிக்கை 6.
எனவே, q2 ன் எண்மதிப்பு அதிகம். விகிதம்
\(\left| \cfrac { { q }_{ 1 } }{ { q }_{ 2 } } \right| =\cfrac { { N }_{ 1 } }{ { N }_{ 2 } } =\cfrac { 6 }{ 18 } =\cfrac { 1 }{ 3 } \) ஆகவே |q2| = 3 |q1|
(ii) படம் (ஆ) வில் இரு நேர் மின்துகள்களில் இருந்து வெளியேறும் கோடுகளின் எண்ணிக்கையும் சமம். (N = 18). எனவே , அவற்றின் மின்னூட்ட மதிப்புகளும் சமமாக இருக்க வேண்டும். புள்ளி B ல் உள்ளதை விட புள்ளி A – வில் மின்புலக் கோடுகள் நெருக்கமாக உள்ளன. எனவே, புள்ளி B ல் காணப்படும் மின்புலத்தின் எண்மதிப்பை விட புள்ளி A ல் அதிகம். மேலும் C ன் வழியே எந்த மின்புலக் கோடும் செல்ல வில்லை. ஆகவே இவ்விரு மின்துகள்களால் C ல் ஏற்படும் தொகுபயன் மின்புலம் சுழியாகும்.
(iii) படம் (இ) ல் q1 மற்றும் q3 யிலிருந்து மின்புலக் கோடுகள் தொடங்கி q2 ல் முடிவடைகின்றன. q1 மற்றும் q3 ஆகியவை நேர்மின்துகள் என இதிலிருந்து தெரிகிறது. மேலும் கோடுகளின் எண்ணிக்கையின் விகிதம்
\(\left| \cfrac { { q }_{ 1 } }{ { q }_{ 2 } } \right| =\cfrac { 8 }{ 16 } =\left| \cfrac { { q }_{ 3 } }{ { q }_{ 2 } } \right| =\cfrac { 1 }{ 2 } \) ஆகவே, q2 ன் மதிப்பில் பாதியளவு உடையவை q1 மற்றும் q3
q1= q3 = +10nC.
9.
கோளங்கள் இரண்டும், மின்னூட்டம் அற்றவையாக இருந்தால், அவை தொங்கவிடப்படும் போது அவற்றுக்கு இடையே உருவாகும் கோணம் 0o ஆக இருக்கும். ஆனால் அவை நேர்மின்னூட்டம் பெற்ற கோளங்கள் ஆதலால், அவற்றுக்கிடையே விலக்கு விசை செயல்பட்டு, செங்குத்து திசைக்கு 30˚ கோணத்தில் அவை சமநிலைக்கு வருகின்றன. சமநிலையில் ஒவ்வொரு கோளமும் உணரும் நிகர விசை சுழியாகும். அவற்றுள் ஏதேனும் ஒரு கோளத்திற்கான தனித்த பொருள் விசைப்படத்தை நாம் வரைந்து, செங்குத்து மற்றும் கிடைமட்டத் திசைகளில் நியூட்டனின் இரண்டாம் விதியைப் பயன்படுத்துவோம்.

நேர்க்குறி x – திசையில் கோளத்தின் நிகர முடுக்கம் சுழி.
நியூட்டனின் இரண்டாம் விதிப்படி \(({ \vec { F } }_{ tot }=m\vec { a } ),\)
\(T \sin\theta \hat { i } -{ F }_{ e }\hat { i } =0\)
\(T \sin\theta ={ F }_{ e }\) (1)
இங்கு T என்பது நூலினால் கோளத்தின் மீது செலுத்தப்படும் இழுவிசை மற்றும் Fe என்பது இரு கோளங்களுக்கு இடையிலான நிலைமின் விசை
y – திசையிலும் கூட, கோளத்தின் நிகர முடுக்கம் சுழி. எனவே
\(T \cos\theta \hat { j } -mg\hat { j } =0\)
எனவே, \(T \cos\theta =mg\) (2)
சமன்பாடு (1) ஐ (2) ஆல் வகுக்க.
\(\tan\theta =\frac { { F }_{ e } }{ mg } \) (3)
இரு கோளங்களும் சம மின்னூட்டம் பெற்றுள்ளதால், நிலைமின் விசையின் எண்மதிப்பு
\({ F }_{ e }=k\frac { { q }^{ 2 } }{ { r }^{ 2 } } \quad k=\frac { 1 }{ 4\pi { \varepsilon }_{ 0 } } \)
மேலும் r = 2a = 2L sin \(\theta \) , சமன்பாடு (3) ல் பிரதியிட
\(\tan\theta =k\frac { { q }^{ 2 } }{ mg\left( 2L\sin\theta \right) ^{ 2 } } \) (4)
சமன்பாடு (4) ஐ மாற்றியமைக்க.
\(q=2L \sin\theta \sqrt { \frac { mg \tan\theta }{ k } } \)
\(=2\times 0.1\times { \sin 30 }^{ o }\times \sqrt { \frac { { 10 }^{ -3 }\times 10\times {\tan30 }^{ o } }{ 9\times { 10 }^{ 9 } } } \)
q = 8.01 x 10-8C = 80.1 nC
10.
மின்கலத்தின் மின்னியக்குவிசை, சமன் செய்யும் நீளத்திற்கு நேர்த்தகவில் இருக்கும்.
11.
கம்பிச்சுருளின் விட்டம் 0.24 m எனவே அதன் ஆரம் 0.12 m ஆகும். சுற்றுகளின் எண்ணிக்கை 100 புவிகாந்தப்புலத்தின் மதிப்பு = 25 x 10-6 T
விலக்கம்
θ = 600 ⇒ tan 600 = \(\sqrt {3}\) = 1.732
I = \(\frac { { 2RB }_{ H } }{ { \mu }_{ 0 } } \tan\theta \)
= \(\frac { 2\times 0.12\times 25\times { 10 }^{ -6 } }{ 4\times { 10 }^{ -7 }\times 3.14\times 100 } \times 1.732=0.82\times { 10 }^{ -1 }\)A
I = 0.08 2A
12.
விசை μ மின்னூட்டம்
பிரிக்கப்பட்ட பின், மின்னூட்டம் அதிகரிக்கும் எனவே விசையும் அதிகரிக்கும்
13.
V லிருந்து 2 V க்கு மின்னழுத்தம் அதிகரித்தால்
பிறகு Q1 = CV
Q2 = C(2 V) = 2 CV
∴ Q ம் இருமடங்காகும் C மாறாமலிருக்கும்
14.
B1 மற்றும் B2 களுக்கு இடையில் இடப்பெயர்ச்சியைச் சார்ந்து சமநிலையில் இருக்கும்.
15.
(a)
வட்ட வடிவம்
16.
Rs = 3 + 2.5 + P = 5.5 + P
V = 9 V, I = 1.0 A
Rs = \(\frac{V}{I}=\frac{9}{1}= 9 \Omega\)
∴ 9 = 5.5 + P
∴ P = 9 - 5.5 = 3.5 Ω
17.
1. வரிச்சுருள் என்பது ஒரு நீளமான உருளையான சுருள் அநேக எண்ணிக்கை கொண்டது.
2. n ➝ ஓரலகு நீளத்திற்கான சுற்றுகளின் எண்ணிக்கை
3. R ➝ வரிச்சுருளின் ஆரம்
4. O புள்ளியிலிருந்து x தொலைவில் உள்ள dl என்னும் சிறு கூறு உள்ளது, மற்றும் P புள்ளியிலிருந்து r தொலைவில் உள்ளது.
\(r=\sqrt { { R }^{ 2 }+{ ({ x }_{ 0 }-x) }^{ 2 } } \)
5. மின்னோட்டம் பாயும் வட்டவடிவக் கம்பிச்சுருளின் அச்சு வழியே ஏற்படும் காந்தப்புலம்.
\(dB=\frac { { \mu }_{ o }{ IR }^{ 2 } }{ 2{ r }^{ 2 } } \times N\)
N=ndx
\(dB=\frac { { \mu }_{ o }n{ IR }^{ 2 }dx }{ 2{ r }^{ 3 } } \)
\(sin\theta =\frac { R }{ r } \)
\(r=Rcosec\theta \)
\(tan\theta =\frac { R }{ { x }_{ 0 }-x } \)
\({ x }_{ 0 }-x=R\quad cot\quad \theta \)
\(\frac { dx }{ d\theta } =Rcos\quad { ec }^{ 2 }\theta \)
\(dx=Rcos\quad { ec }^{ 2 }\theta d\theta \)
\(dB=\frac { { \mu }_{ 0 }nI{ R }^{ 2 }Rcos\quad { ec }^{ 2 }\theta d\theta }{ 2{ R }^{ 3 }cos\quad { ec }^{ 3 }\theta } \)
\(dB=\frac { { \mu }_{ 0 }nI }{ 2 } \int _{ { \theta }_{ 1 } }^{ { \theta }_{ 2 } }{ sin\theta d\theta } \)
\(=\frac { { \mu }_{ 0 }nI }{ 2 } { [-cos\theta ] }_{ { \theta }_{ 1 } }^{ { \theta }_{ 2 } }\)
\(B=\frac { { \mu }_{ 0 }nI }{ 2 } [{ cos\theta }_{ 1 }-{ cos\theta }_{ 2 }]\)
18.
சீரான காந்தப்புலம் B = 0.8 T
கோணம் θ = 30°
திருப்புவிசை, ፒ = 0.2 Nm.
(i) திருப்புவிசை ፒ = PmB sinθ
\(0.2=p_\mathrm{m} \times 0.8 \times \sin 30^{\circ} \)
\(0.2=p_\mathrm{m} \times 0.8 \times \frac{1}{2} \)
0.2 = 0.4 pm
\(p_m=\frac{0.2}{0.4}=0.5 \mathrm{Am}^{2}\)
(ii) விசையால் செய்யப்பட்ட வேலை
\(\mathrm{W} =-p_\mathrm{m}B\left[\cos \theta_{2}-\cos \theta_{1}\right] \)
\(\mathrm{W} =-p_\mathrm{m}B\left(\cos 180^{\circ}-\cos 0^{\circ}\right) \)
\(\mathrm{W} =-p_\mathrm{m}B(-1-1)=2 \mathrm{p_mB} \)
\(\mathrm{W} =2 \times 0.5 \times 0.8=\mathbf{0 . 8} \mathbf{J} \)
காந்தப்புலத்தால் செய்யப்பட்ட வேலை
\(\mathbf{W}_{\text {mag }}=-0.8 \mathrm{J}\)
19.
கால்வனோ மீட்டரை அம்மீட்டராக மாற்றுதல்:
மின்சுற்றில் பாயும் மின்னோட்டத்தை அளக்கப்பயன்படும் கருவியே அம்மீட்டராகும். அம்மீட்டர் மின்சுற்றில் பாயும் மின்னோட்டத்திற்கு மிகக் குறைந்த மின்தடையையே கொடுப்பதால் இது மின்சுற்றில் பாயும் மின்னோட்டத்தை தடுக்காது. எனவே மின்சுற்றில் பாயும் மின்னோட்டத்தை அளக்க, அம்மீட்டரை மின்சுற்றில் தொடரிணைப்பில் இணைக்க வேண்டும்.
இணைதட மின்தடையை சரிசெய்து முழு அளவுகோல் விலக்கத்தைக் காட்டும் வகையில் கால்வனோமீட்டர் வழியே பாயும் மின்னோட்டத்தைச் Ig சரி செய்ய வேண்டும். கால்வனோமீட்டருக்குக் குறுக்கே உள்ள மின்னழுத்த வேறுபாடும், இணைதட மின்தடைக்குக் குறுக்கே உள்ள மின்னழுத்த வேறுபாடும் ஒன்றுக்கொன்று சமமாகும்.
Vகால்வனோ மீட்டர் = Vஇணைதடம்
IgRg= (I-Ig)S
\(S=\frac { { I }_{ g }{ R }_{ g } }{ I-{ I }_{ g } } ....(1)\)
\({ I }_{ g }=\frac { S }{ S+{ R }_{ g } } I\)
அல்லது \(\mathrm{I}_{\mathrm{g}}=\frac{S}{S+R_{g}} I \Rightarrow I_{g} \propto I\)
எனவே கால்வனோமீட்டரில் ஏற்படும் விலக்கம், அதன் வழியே பாயும் மின்னோட்டத்திற்கு நேர்த்தகவில் இருக்கும்.
\(\theta=\frac{1}{G} I_{g} \Rightarrow \theta \propto I_{g} \Rightarrow \theta \propto I\)
எனவே கால்வனோமீட்டரில் ஏற்படும் விலக்கம், மின்சுற்றின் வழியே பாயும் மின்னோட்டத்தை அளக்கும் (அம்மீட்டர்) கருவியாக செயல்படும். இணைதட மின்தடை கால்வனோமீட்டருக்கு பக்க இணைப்பாக இணைக்கப்பட்டுள்ளது. எனவே, தொகுபயன் மின்தடையை கணக்கிடுவதன் மூலம் அம்மீட்டரின் மின்தடையைக் கணக்கிடலாம்.


கால்வனோமீட்டரை வோல்ட் மீட்டராக மாற்றுதல்
கால்வனோமீட்டரை வோல்ட்மீட்டராக மாற்றுதல் மின்சுற்றில் ஏதேனும் இரண்டு புள்ளிகளுக்கு இடையே உள்ள மின்னழுத்த வேறுபாட்டை அளவீடு செய்யப் பயன்படும் கருவியே வோல்ட்மீட்டராகும். வோல்ட்மீட்டர் மின்சுற்றிலிருந்து எவ்விதமான மின்னோட்டத்தையும் பெறாது. அவ்வாறு மின்னோட்டத்தைப் பெற்றால் வோல்ட்மீட்டர் அளவிடும் மின்னழுத்தத்தில் மாற்றம் ஏற்பட்டு விடும். வோல்ட்மீட்டர் உயர்ந்த மின்தடையைப் பெற்றிருக்கும். இதனை மின்சுற்றில் பக்க இணைப்பில் இணைக்கும்போது, குறிப்பிடத்தக்க மின்னோட்டம் எதையும் மின்சுற்றிலிருந்து பெறாது. எனவே இது உண்மையான மின்னழுத்த வேறுபாட்டையே காட்டும்.
I = Ig
கால்வனோமீட்டரும், உயர் மின்தடையும் தொடராக இணைக்கப்பட்டுள்ளதால், மொத்த மின்தடை அல்லது தொகுபயன் மின்தடை வோல்ட்மீட்டரின் மின்தடையைக் கொடுக்கும். வோல்ட்மீட்டரின் மின்தடை
Rv = Rg+ Rh ஆகும்
எனவே
\({ I }_{ g }=\frac { V }{ { R }_{ g }+{ R }_{ h } } \)
\({ R }_{ h }=\frac { V }{ { I }_{ g } } -{ R }_{ g }\)
\(\\ \\ { I }_{ g }\alpha v\)
கால்வனோமீட்டரில் ஏற்படும் விலக்கம் மின்னோட்டம் Ig க்கு நேர்விகிதத்திலிருக்கும். ஆனால் மின்னோட்டம் Ig மின்னழுத்த வேறுபாட்டிற்கு நேர்த்தகவில் உள்ளதால் கால்வனோமீட்டரில் ஏற்படும் விலக்கம் மின்னழுத்த வேறுபாட்டிற்கு நேர்த்தகவில் இருக்கும். வோல்ட்மீட்டரின் மின்தடை மிக அதிகம். எனவே மிகக்குறைந்த மின்னோட்டத்தையே மின்சுற்றிலிருந்து வோல்ட்மீட்டர் பெறும். ஒரு நல்லியல்பு வோல்ட்மீட்டர் முடிவிலா மின்தடையைப் (Infinite resistance) பெற்றிருக்கும்.
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards